தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில், திருநள்ளாறு
சிவஸ்தலம் பெயர் திருநள்ளாறு
இறைவன் பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர்
இறைவி பெயர் பிராணம்பிகை, போகமார்த்த பூன்முலையாள்
பதிகம் திருநாவுக்கரசர் - 2
திருஞானசம்பந்தர் - 4 (இவற்றில் ஒரு பதிகம் திருநள்ளாறு, திருஆலவாய் இரண்டிற்கும் பொதுவானது)
சுந்தரர் - 1
எப்படிப் போவது
காரைக்காலில் இருந்து மேற்கே 6 கி.மி. தொலைவில் திருநள்ளாறு ஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பேரளம், காரைக்கால், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் முதலிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன.
திருநள்ளாறு நவக்ரஹ ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலம் ஆகும். பாடல் பெற்ற சிவஸ்தலம் திருதருமபுரம் அருகிலுள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருநள்ளாறு
திருநள்ளாறு அஞ்சல்
காரைக்கால் வட்டம்
புதுச்சேரி மாநிலம்
PIN - 609607
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஏழு நிலை ராஜகோபுரம்
தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் ஏழு நிலை ராஜகோபுரம் கொண்டு எழிலுடன் விளங்குகிறது. இத்தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள தியாகராஜர் தகவிடங்கர் எனப்படுகிறார். அவர் ஆடும் நடனம் உன்மத்த நடனம் எனப்படும். இத்தலத்தின் மூலவராக சிவபெருமான் தர்ப்பாரண்யேஸ்வரர் என்ற பெயருடன் அருள் பாலித்து வந்தாலும், இத்தலத்தின் பெருமைக்கு மூலகாரணமாக இருப்பவர் இத்தலத்தில் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் ஆவார். நவக்கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலமாக திருநள்ளாறு விளங்குகிறது. சனீஸ்வரன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிப்பதால் இக் கோயிலில் நவகிரகங்கள் கிடையாது. மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சந்நிதிக்கும், இறைவி பிராணம்பிகை சந்நிதிக்கும் இடையில் சனீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. சனிக்கழமைகளில் சனீஸ்வரரை வழிபடுவதற்காக பக்தர்கள் பெருமளவில் இங்கு கூடுகிறார்கள். இக் கோயிலில் சனி பகவானுக்கு உகந்த காக்கை வாகனம் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசேஷ காலங்களில் சனீஸ்வர பகவான் தங்கக் காகம் வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வருவார். இந்த தலத்திற்கு வந்து சனீஸ்வரரையும், தர்ப்பாரண்யேஸ்வரரரையும் வணங்குபவர்களுக்கு சனி பாதிப்பைத் தாங்கிக்கொள்ளும் மன திடமும், பிரச்னைகளிலிருந்து மீளும் வழியும் கிட்டும். நல்வாழ்வுக்கும் வழி பிறக்கும்.
நள தீர்த்தம்:
இக்கோவிலுக்கு அருகில் நள தீர்த்தம் என்ற பெயரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. சனியின் ஆதிக்கத்திற்கு உள்ளான நளச் சக்கரவர்த்தி பல துன்பங்களை அனுபவித்தான். கடைசியில் இத்தலம் வந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபட்டு துன்பம் நீங்கப் பெற்றான். நளன் நீராடிய தீர்த்தம் அவன் பெயரால் நள தீர்த்தம் என்று பெயர் பெற்றது. நள தீர்த்தம் தவிர, பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் உள்ளிட்டவையும் இத்தலத்தில் உள்ளன. சனீஸ்வரன் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனிப் பெயர்ச்சியின் போது அவர் அவர்கள் ஜாதகத்தின் தன்மைக்குத் தக்கவாறு நன்மை தீமைகள் நடைபெறகூடும் என்பதால் இந்நாளில் சனிபகவானுக்கு தீபமேற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும் என்பது மக்கள் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் லக்ஷக்கணக்கில் மக்கள் இங்கு வந்து நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபாடு செய்கின்றனர்.
பச்சைப் பதிகம்:
திருஞானசம்பந்தரின் இத்தலத்திற்கான "போகமார்த்த பூன்முலையாள்" என்று தொடங்கும் பதிகம் "பச்சைப் பதிகம்" என்ற சிறப்புடையது. சம்பந்தரை மதுரையில் சமணர்கள் வாதிற்கு அழைத்தனர். அனல் வாதம் மற்றும் புணல் வாதம் செய்வது என்றும் அதில் வெல்பவர் சமயமே உயர்ந்தது என்று மதுரை மன்னர் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சமணர்கள் தங்கள் சமயக் கருத்துக்களை ஒரு ஏட்டில் எழுதி அதை தீயில் இட்டனர். ஏடு தீயில் எரிந்து சாம்பலாயிற்று. அதன் பின் சம்பந்தர் முறை வரும் போது அவர் திருமுறை ஏட்டில் கயிறு சார்த்தி பார்த்த போது திருநள்ளாறு தலத்திற்கான "போகமார்த்த பூன்முலையாள்" என்ற பதிகம் வந்தது. சம்பந்தர் அதை தீயில் இட்டார். ஏடு தீயில் கருகாமல் பச்சை ஏடாகவே இருந்தது. சமணர்கள் வாதில் தோற்றனர். மதுரை மன்னனும் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினான். இவ்வாறு பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க காரணமாக இருந்த பதிகம் பெற்ற பெருமையை உடையது திருநள்ளாறு தலம்.
கோவில் அமைப்பு:
நான்கு வீதிகளுக்கு நடுவில் கோயில் அமைந்துள்ளது. உயர்ந்த ராஜகோபுரம். அதற்கு முன்புள்ள முற்றம் மண்டபமாக்கப்பட்டுள்ளது. இங்கு வடபுறம் அலுவலகமும் தென்புறம் இடையனார் கோயிலும் உள்ளது. விசாலமான பிராகாரத்துடனும், உயர்ந்த சுற்றுமதில்களுடனும் ஆலயம் அரைந்துள்ளது. சுவரில் நளன் வரலாறு வண்ண ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வசந்த மண்டபம் உள்ளது. சனி பகவான் சந்நிதி முன்னால் மகர, கும்பராசிகளின் உருவங்கள் உள்ளன. மகர, கும்பராசிகளுக்குச் சனி அதிபதியாவார். அதையடுத்து அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். உற்சுற்றில் சுந்தரர், அறுபத்துமூவர் மூல உருவங்கள் உள்ளன. வரிசை முடிவில் நளன் வழிபட்ட நளேஸ்வரர் சிவலிங்கம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், விநாயகரும், பிரமனும் துர்க்கையும் உள்ளனர். சொர்ண கணபதி சந்நிதி தலவிநாயகர் சந்நிதியாகும். சப்தவிடங்கத் தலசிவலிங்கத் திருமேனிகளும், சுப்பிரமணியர் சந்நிதியும், ஆதிசேஷன், நளநாராயணப் பெருமாள், மகாலட்சுமி, பைரவர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. படிகளேறிச் செல்லும்போது பலிபீடம் சற்று விலகியிருப்பதைக் காணலாம். தினந்தோறும் ஆறுகால வழிபாடுகளும் செம்மையாக நடைபெறும் இத்திருக்கோயில் தருமையாதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. வைகாசியில் பெருவிழா நடைபெறுகிறது.
மகாவிஷ்ணு, பிரம்மா, தேவேந்திரன், திசைப் பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன், நளன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் என்ற பெருமை உடையது திருநள்ளாறு திருத்தலம்.
நவகிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் சனீஸ்வர பகவான்தான். சனி பகவானுக்கு மந்தன், ரவிபுத்ரன், ஜடாதரன், ஆயுள்காரகன் என்று பல பெயர்கள் உண்டு. சனீஸ்வரர் நீதிதேவன் ஆவார். தர்மவானும்கூட. ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல், அவரவர்களுடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களைத் தருபவர்.
சனியின் தசாபுக்தி காலத்திலும், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி போன்ற கோசார காலங்களிலும் சனிபகவான் அவரவருடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களைத் தருவார்.
இந்திரனே ஆனாலும் சனியின் பிடியில் இருந்து தப்பமுடியாது. ஒருமுறை இந்திரனை பிடிக்கவேண்டி இருந்தது. தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்பதால், முன்கூட்டியே தான் இந்திரனைப் பிடிக்கப்போவதாகக் கூறினார்.
இதனால் கடும் கோபம் கொண்ட இந்திரன் சனிபகவானிடம்,
" உலகமே போற்றிப் புகழும் தேவர்களின் அரசன் நான், என்னைப் பிடிக்கும் உரிமையை உனக்கு யார் கொடுத்தது" என்றார். சனிபகவானோ " மனிதரோ, தேவரோ எனக்கு அனைவரும் சமமே, இதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றெல்லாம் யாரும் இல்லை. என் பார்வையில் இருந்து விலக யாருக்கும் விலக்கு இல்லை'' என்றார்.
''சரி அத்தனை வல்லமை பொருந்திய நீ, என்னைப் பிடிக்கும் நேரத்தையாவது சொல்'' என்றார் இந்திரன். சனிபகவானும் அந்த நேரத்தைச் சொல்லி அனுப்பினார்.
சரியாக அந்த நேரத்தில் பெருச்சாளியாக மாறி, ஒரு சாக்கடையில் போய் ஒளிந்து கொண்டார் தேவேந்திரன். அந்த நேரத்தைக் கடந்து சாக்கடையில் இருந்து வெளிவந்த இந்திரன் மகிழ்ச்சியோடு சனிபகவானிடம் சென்று " உன் பார்வையில் இருந்து எப்படி தப்பினேன் பார்த்தாயா " என்று கர்வத்தோடு சொன்னார்.
அதற்கு சனிபகவான், " தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக புகழுடன் விளங்கும் நீங்கள், வீற்றிருக்கும் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் உழன்றது கூட என்னுடைய பார்வையால்தான்" என்றார்.
அப்போதுதான் சனியின் வல்லமையை உணர்ந்தார் தேவேந்திரர்.
சனீஸ்வர பகவான் தர்மவான் என்பதால், எப்போதுமே நன்மையே அருள்வார். ஆனால், நாம் பாவங்கள் செய்திருந்தால் சனிபகவான் தரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.
தன்னலம் இல்லாமல் மக்கள் நலனுக்காக வாழ்பவர்கள் கேட்கும் வரங்களை எல்லாம் தப்பாமல் தருவார் சனீஸ்வர பகவான்.
அப்படி ஒருமுறை தசரத மன்னருக்கு சனீஸ்வர பகவான் வரம் தந்த சம்பவம்...
ரகுவம்ச மன்னரான தசரத மன்னர் அயோத்தியை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தார். அப்போது சனி கிரகமானது ரோகிணி நட்சத்திரத்தைப் பிளந்து செல்ல இருந்தது.
அப்படி சனி பகவான் ரோகிணி நட்சத்திரத்தைப் பிளந்துகொண்டு சென்றால், அதன் விளைவாக நாட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் மழை இல்லாமல், கடுமையான வறட்சி ஏற்பட்டு மக்கள் துன்பப்படுவார்கள் என்று அரண்மனை ஜோதிடர்கள் கூறினார்கள்.
தன் மக்களுக்கு சனியினால் எந்தத் துன்பமும் வரக்கூடாது என்ற எண்ணத்தில், தசரதர் தன்னுடைய பறக்கும் தேரில் ஏறி, சனீஸ்வர பகவானுடன் போருக்குச் சென்றார்.
அதைக் கண்டு, 'ஈஸ்வரப் பட்டம் பெற்ற தன்னையே எதிர்த்துப் போருக்கு வரத் துணிந்தானே தசரதன்' என்று திகைத்தார். நேரில் வந்த தசரதனின் துணிச்சலைப் பாராட்டிய சனீஸ்வரர், தான் ரோகிணியை பிளந்து செல்வது தவிர்க்கமுடியாது என்று கூறியதுடன், வேறு ஏதேனும் வரம் கேட்டால் தருவதாகக் கூறினார்.
தசரதரும், ''அப்படியானால், நீங்கள் ரோகிணி நட்சத்திரத்தைப் பிளந்துகொண்டு செல்வதால், நாட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் ஏற்பட இருக்கும் பஞ்சத்தை வராமல் தடுக்கவேண்டும். எப்போதும் என் நாட்டு மக்கள் செழிப்புடன் வாழவேண்டும்'' என்று வரம் கேட்டார். அப்படியே சனீஸ்வர பகவானும் வரம் தந்தார். வரம் தந்த சனீஸ்வர பகவானைப் போற்றி தசரத மன்னர் ஸ்லோகங்கள் இயற்றி வழிபட்டார்.
நாம் மற்றவர்களின் நலனுக்காகப் பாடுபட்டால், சனீஸ்வர பகவான் எப்போதும் நமக்குத் துணையாக இருந்து அருள் புரிவார் என்பது உறுதி.
சனீஸ்வர தோஷம் நீங்க செய்யவேண்டிய பரிகாரங்கள்:
சனிபகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமை அன்று விரதம் கடைப்பிடித்தால், நீண்ட ஆயுளுடன் வாழலாம்.
அந்த நாள்களில் சனிபகவானின் அதிபதியான மகாவிஷ்ணுவைப் பாராயணம் செய்தால், எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.
மேலும், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ புண்ணிய தினத்தில் , சிவாலயங்களில் வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடுவது சாலச்சிறந்தது.
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் சனியின் பாதிப்புகள் குறையும்.
சங்கடஹர சதுர்த்தி தினத்தில், விநாயகப் பெருமானுக்கு எட்டு சிதறு தேங்காய்களை உடைத்து வழிபட்டால், சனியின் பாதிப்புகள் குறையும்.
சனிபகவானின் தானியம் எள். அந்த எள் எண்ணெயில் (நல்லெண்ணெய்) அவருக்கு விளக்குப் போடுவது நன்மைகள் பலவற்றைத் தரும்.
எள்ளுச் சாதத்தை நைவேத்யமாக சனீஸ்வரருக்குச் செய்துவிட்டு, அதைக் காகத்துக்கு வைத்துவிட்டுச் சாப்பிட்டால் நன்மைகள் பெருகும்.
திருநள்ளாறு சென்று, சனீஸ்வரரை வழிபடத் தோஷங்கள் நீங்கும்.
நல்லெண்ணெய், உளுந்து, இரும்புச்சட்டி ஆகியவற்றை ஏழை, எளியோருக்கு தானம் செய்யலாம்.
சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி வரும் நாள்களில் அன்னதானம் செய்வது சிறப்பு.
உழைப்பாளிகளுக்கு உதவி செய்தால், சனீஸ்வரனின் அனுகூலம் கிட்டும். அதேபோல ஏழை மாணவர்களின் கல்விக்காக உதவினாலும் சனிபகவான் மகிழ்ச்சி அடைவார்; நம் சங்கடங்களைப் போக்குவார்.
'நீலாஞ்ஜன ஸமா பாஸம்
ரவிபுத்ரம் யமாக் ரஜம்'
'சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்சரம் '
என்னும் சனிபகவானைப் போற்றும் மந்திரத்தை தினமும் உச்சரித்து சனிபகவானின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடலாம்.

Comments
Post a Comment