தட்டை
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1 கப்
உளுந்து மாவு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
வறுத்த பருப்பு- 2 தேக்கரண்டி
எள் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பொரிப்பதற்கு எண்ணெய்
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
கடலைப்பருப்பை 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து, தண்ணீர் வடிகட்டி, எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அரிசி மாவையும் உளுத்தம்பருப்பு மாவையும் ஒரு சூடான கடாயில் ஒரு நிமிடத்திற்கு கொஞ்சமாக வதக்கி இவற்றோடு உப்பு, ஊறவைத்த கடலைப்பருப்பு, எள், வறுத்த கடலைமாவு, சிவப்பு மிளகாய்த் தூள், சேர்த்து வெண்ணெய்யை உறுக்கி கலவையில் ஊற்றவும்.
தண்ணீர் விட்டு எல்லாவற்றையும் கலந்துகொள்ளவும். மாவு சில நிமிடங்கள் ஆறட்டும்.
மாவிலிருந்து உருண்டை செய்து, கைகளில் எண்ணெய் தடவி, ஒரு பிளாஸ்டிக் கவரின் மீது கைகளால் மொத்தமான ஒரு வட்டவடிவில் உருண்டையை பரவச் செய்யவும். தட்டையை முள் கரண்டியால் ஓட்டைபோடவும், பூரியாக உப்பாமல் இருப்பதற்கு.
எண்ணெயில் நன்றாகப் பொரிக்கவும். ஆறியதும், காற்றுப்புகாத பெட்டியில் சேமித்துக்கொள்ளவும்.
காரச்சேவு
தேவையான பொருட்கள்
கடலை மாவு அரை கப்
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
மிளகு அரை ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
செய்முறை
கடலை மாவு மஞ்சள் தூள் மற்றும் மிளகு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்
இடியாப்பக் குழலில் சேவகன் அச்சில் போட்டு பிழிந்து எடுக்கவும்
எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
காரபொரி
தேவையான பொருட்கள்
பொரி - 200கிராம்
வெங்காயம்- 1
கேரட்- 1
பீட்ரூட்- 1
எலுமிச்சை- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
கொத்த மல்லி சட்னி
தேங்காய் எண்ணெய்
செய்முறை
கேரட், பீட்ரூட் துருவி வைத்து கொள்ளவும். வெங்காயம் நைசாக கட் செய்து வைக்கவும்
மேற்கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து உப்பு,எலுமிச்சை சாறு கலந்து வைக்கவும் .
பின்னர் பொரி,மேற்கூறிய கலவை சேர்த்து பரிமாறலாம்.
சுண்டல் மசாலா
தேவையான பொருட்கள்
வெள்ளை சுண்டல் 100 கிராம்
வெங்காயம் 3
தக்காளி-2
இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
மசாலா அரைஸ்பூன்
சிக்கன் 65 பவுடர் 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு
செய்முறை
சுண்டல் பயறை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும்
ஊற வைத்த பயறை குக்கரில் மூன்று விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
வெங்காயம் தக்காளி நைஸாக அரைத்துக் கொள்ளவும்
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் தக்காளி விழுது இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 விசில் வேகவிடவும்
பயறு நன்கு வெந்தவுடன் கடைசியாக சிக்கன் மசாலா தூவி சுருள கிளறி சாப்பிட சுவையாக இருக்கும்
சுவையான வெள்ளை சுண்டல் மசாலா தயார்
பாணி பூரி
தேவையான பொருட்கள்
ரெடிமேட் பூரி-12
உருளைக்கிழங்கு(வேகவைத்து)-1/4கி
மிளகாய் தூள்-1tsp
சாட் மசாலா-1tsp
ஓம் போடி-தேவையான அளவு
வெங்காயம்-தேவையான அளவு
கொத்தமல்லி இலை-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
பச்சை சட்னி அரைக்க:
புதினா-1/2கட்டு
பச்சை மிளகாய்-5
புளி-ஒரு எலுமிச்சை அளவு
மாங்காய் போடி(காய்ந்த)-1 பெரிய ஸ்பூன்
காய்ந்த மிளகாய்-4-5
சீரகம் போடி-1tsp
உப்பு-தேவையான அளவு
பேரிச்சை பழம் சட்னி:
பேரிச்சை பழம்-5
புளி-50கி
சீராக போடி-1tbsp
மாங்காய் தூள்(காய்ந்த)-1tsp
செய்முறை
புதினா சட்னிக்கு தேவையான பொருட்கள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்..நன்கு தண்ணீர்(1லிட்டர்)கலந்து நீர்த்து கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்து
பேரிட்சை பழம் சட்னிக்கு தேவையான பொருட்களை சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும்
உருளைக்கிழங்கு வேகவைத்து நன்கு மசித்து உப்பு,மிளகாய் போடி,சாட் மசாலா சேர்த்து பிசைந்து கொள்ளவும்
வெங்காயம் மட்டும் கொத்தமல்லி பொடியாக நறுக்கவும்
சேவ் வீட்லேயே அல்லது கடையில் வங்கி கொள்ளவும்..
ஒரு பூரி எடுத்து நடுவில் சிறிது துளை போட்டு அதில் வேகவைத்த உருளைக்கிழங்கு அடைத்து அதில் நறுக்கிய வெங்காயம் மட்டும் கொத்தமல்லி சேர்த்து சிறிது அளவு(1/4 ஸ்பூன்)பேரிட்சை பழம் சட்னி சேர்த்து
வேறு ஒரு பாத்திரத்தில் இந்த புதினா நீர்(பாணி)வைத்து..தயாரித்து வைத்த பூரியை இந்த தண்ணீரில் இட்டு எடுத்து சாப்பிடவும்
காலிஃப்ளவர் பக்கோடா
தேவையான பொருட்கள்
காலிபிளவர் -ஒன்று
கடலை மாவு அரை கப்
கார்ன்ஃப்ளார் கால் கப்
அரிசி மாவு 2 மேசைக் கரண்டி
மிளகாய் தூள் 3 ஸ்பூன்
சிக்கன் 65 தூள் 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
சமையல் சோடா -1/4 ஸ்பூன்
உப்பு தேவைக்கு
எண்ணெய் பொரிக்க
செய்முறை
முதலில் காலிபிளவரை பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்
பின்பு தண்ணீருடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து காலிஃப்ளவருடன் கொதிக்க வைக்கவும்
10 நிமிடம் கொதித்த பின்பு தண்ணீரை வடிகட்டி காலிஃப்ளவரை தனியாக வைக்கவும்
பின்பு காலிஃப்ளவருடன் எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து பிரட்டி விடவும்
பின்பு சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து வைக்கவும்
பின்பு எண்ணையை காய வைக்கவும்
எண்ணெய் காய்ந்ததும் காலிஃப்ளவரை சேர்த்து பொரித்து எடுக்கவும்
சுவையான காலிஃப்ளவர் பக்கோடா தயார்

Comments
Post a Comment