போடிநாயக்கனூர்
போடிநாயக்கனூர் வட்டம் , தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும்.
இந்த வட்டத்தின் தலைமையகமாக போடிநாயக்கனூர் நகரம் உள்ளது. இவ்வட்டத்தில் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் போடிநாயக்கனூர், கோடாங்கிப்பட்டி, ராசிங்காபுரம் என 3 என உள்வட்டங்களும், 15 வருவாய் கிராமங்களும் உள்ளது.
அகமலை
பி.அம்மாபட்டி
பி.மீனாட்சிபுரம்
போடி மேற்கு மலைகள்
போடிநாயக்கனூர் நகரம்
போடி வடக்கு மலைகள்
பூதிப்புரம்
டொம்புச்சேரி
கோடாங்கிபட்டி
கூளையனூர்
கொட்டகுடி
மேலச்சொக்கநாதபுரம்
ராசிங்காபுரம்
சிலமலை
உப்புக்கோட்டை
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 49,589 வீடுகளும், 180,789 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் 90,426 ஆண்களும்; 90,363 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில் 60.9% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 76.96% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16,930 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 946 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 29,974 மற்றும் 695 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.48%, இசுலாமியர்கள் 2.52%, கிறித்தவர்கள் 0.91 & பிறர் 0.08% ஆகவுள்ளனர்
போடி அரண்மனை
கல்வெட்டுகள்தான் வரலாற்றை உணர்த்தும் அடையாளச் சின்னங்கள். அதற்கடுத்தபடியாக வரலாற்றுச் சின்னங்களாக நிற்பவை பழமை வாய்ந்த கோயில்களும், அரண்மனை கட்டடங்களும்தான்.
அத்தகைய வரலாற்றுச் சிறப்போடு, மூலிகைகளால் வரையப் பெற்ற ஓவியங்களை உள்ளடக்கிய பழங்கால அரண்மனைதான் போடி நாயக்கனூர் அரண்மனை. இன்றைக்கும் அரண்மனை வாரிசுகள் அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம், அந்த அரண்மனை முழுதும் வரையப்பட்டுள்ள மூலிகை ஓவியங்கள்தான். ஆமாம் இன்றைக்கும் நேற்று வரையப்பட்ட அழகோடு அவை அரண்மனையை அழகாக்கிக் கொண்டு இருக்கின்றன.
உள்ளூரக் காரர்களுக்கே தெரியாத உன்னத ஓவியம் நிறைந்த மூன்றுமாடி அமைப்பு கொண்ட அரண்மனை அது. அதற்குள் விசிட் செய்தோம்.
72 பாளையப்பட்டுகளில் ஒன்று போடிநாயக்கனூர் ஜமீன். பெரிய சுற்றுச்சுவருக்குள் அமைந்த மூன்று மாடி கொண்டுள்ளது. அரண்மனை உள்ளேயே “கோதா’ எனும் விளையாட்டரங்கம், “உக்கிராணம்’ எனும் பொருள் வைப்பறை, நெற்களஞ்சியம், பார்வையாளர் மண்டபம், குதிரை, யானை கொட்டம், மூலிகை ஓவியம் நிறைந்த “லட்சுமி விலாசம்’ என தேக்குமரத்தூண்கள் எழில்மிகு மரச்சிற்பங்களோடு “ஆசாரவாசல்’ என திரும்பும் திசை எங்கும் பழமை மாறா சின்னங்கள்.
ராஜஸ்தான் ஜோத்பூர் அரண்மனை மாடலில் கட்டப்பட்ட மூன்றடுக்கு மாளிகை என்கிறார்கள் இந்த அரண்மனையை.
அரண்மனையின் கீழ்த்தளத்தில் மராட்டிய பாணி வளைவுகள், தூண்கள் தாங்கிய மூலிகை ஓவியங்கள் நிறைந்த கூடம் தான் “லட்சுமி விலாசம்’ பொன்னும் பொருளும் குவிந்து கிடந்த பொக்கிஷ அறையும் அந்தக் காலத்தில் இதுதானாம். அரண்மனைக்குப் பெருமை சேர்ப்பதே இங்குள்ள சுவர் ஓவியங்கள்தான். இராமாயணக் காப்பியம் இங்கு கவின்மிகு கண்கொள்ளாக் காட்சியாக, பேசும் சித்திரங்களாக உள்ளன.
காப்பியக் காட்சிகளை ஓவியங்களாக சுவர்களில் வரையும் மரபு பல்லவர் காலத்தில் தொடங்கியது என்கிறார்கள்.
அரண்மனை மேற்சுவர்களில் பக்கவாட்டில் தொடர் ஓவியங்களாக இராமகாதை, பள்ளிகொண்ட பெருமாளிடம் தேவர்கள் முறையிடுதல், இராமருக்கு முடிசூட்டு விழா.
பெண்களின் திருவிழாக்கால கொண்டாட்டங்கள், சீர்வரிசை, போர்முறைகள், அரச சபைகள், நீராடி மகிழும் பெண்கள் என கண்கொள்ளாக் காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன.
மூலிகைச் சாறு, வண்ணக்கற்களின் பொடி, வஜ்ஜிரம் போன்றவற்றால் உருவாக்கிய வண்ணக் கலவையால் வரையப்பட்ட ஓவியங்கள் இவை என்கிறார்கள்.
போடி அரண்மனை பாளையக்காரர்கள் கலைக்கோட்டு முனிவரின் வழிவந்தவர்கள். ஓவியங்களில் அவர்களது திருமண முறைகள் ராமன்-சீதை காதல் காட்சிகள் என வரையப்பட்டுள்ளன.
(1849-1862-ல்) போடியை ஆண்ட பங்காரு திருமலை போடைய நாயக்கர்தான் அரண்மனையைக் கட்டியவர்.
பழமை வாய்ந்த இந்த அரண்மனையை, மூலிகை ஓவியங்கள் நிறைந்த அரிய பொக்கிஷ தளத்தை இன்ளைக்கும் அழியாமல் பாதுகாத்து வருகிறார்கள், அரண்மனை வாரிசுகள். இந்த “லட்சுமி விலாசம்’ அவர்கள் வணங்கும் பூஜை அறையாகவும் புனிதமாகவும் உள்ளது.
இன்றைய தலைமுறைக்கு காணக் கிடைக்காத அரிய, அதிசய பொக்கிஷம் என்றால் அது போடி அரண்மனைதான்.
தொழில்
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில், மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட, 'ஏலக்காய் நகரம்' எனவும் அழைக்கப்படும் ஒரு நகராகும். இந்த நகரம் ஏலக்காய், காப்பி "குளம்பி", தேயிலை, பருத்தி விற்பனை செய்வதற்கான, விலை நிர்ணயிக்கக்கூடிய நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் ஏலக்காய் கடைகளுக்கும், காப்பி கடைகளுக்கும் (ஏலக்காய்/ காப்பி ) வேலைக்குச் செல்கின்றனர்.குறிப்பிட்ட அளவு மாங்காய் விவசாயம் நடைபெறுகிறது
குடிநீர்
போடிநாயக்கனூர் பகுதிக்குத் தேவையான குடிநீர் குரங்கணியில் உள்ள கொட்டகுடி ஆற்றிலிருந்து நீர், குழாய்களில் கொண்டு வரப்பட்டு, பரமசிவன் கோவில் மலையடிவாரத்தில் குடிநீராகப் பிரித்தெடுத்து/சுத்திகரிக்கப்பட்டு ஊருக்குள் வழங்கப்படுகிறது.நீர் பிடிப்புப் பகுதியில் இருந்து வீட்டிற்கு தண்ணீர் வரும் வரை மின்சாரம் செலவளிக்கப்படுவதில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். இப்பணியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.




Comments
Post a Comment