கோழி (chicken)

கோழி சூப்

தேவையான பொருட்கள்

கோழித்துண்டுகள் 500கிராம்
உருளைக்கிழங்கு பெரியது 1
இஞ்சி 1 துண்டு
பூண்டு 5 பற்கள்
பெரிய வெங்காயம் 1
கொத்தமள்ளி 2 கொத்து
தாளிக்க பட்டை, கிராம்பு, லவங்கம், ஏலக்காய்
மஞ்சள் தூள் 1 மே. கரண்டி
மல்லித்தூள் 1 மே. கரண்டி
சீரகத்தூள் 1 மே. கரண்டி
சோம்புத்தூள் 1 மே. கரண்டி
மிளகுத்தூள் 1 மே. கரண்டி
மேகி சிக்கன் க்யூப் விருப்பப்பட்டால்
உப்பு தே. அளவு

செய்முறை

பானையில் அனைத்து பொருட்களையும் போட்டு தாளிக்கவும்
கோழி, உருளை, மசாலா தூள்கள், கொத்தமள்ளி, உப்பு, தேவையான நீர் ஊற்றி வேக வைக்கவும்


கோழி குருமா

தேவையான பொருட்கள்

கோழி கறி 1/2 கிலோ
நல்லெண்ணெய் 50 மில்லி
சின்ன வெங்காயம் 100 கி
தக்காளி 100 கி
மல்லி பொடி 2 மேசை கரண்டி
மிளகாய் பொடி 1 மே.க
சீரகம் ½ ஸ்பூன்
மிளகு ½ ஸ்பூன்
சோம்பு ½ ஸ்பூன்
கசகசா 1 ½ ஸ்பூன்
முந்திரி 10
பட்டை 1 இன்ச்
கிராம்பு 3
ஏலக்காய் 3
கருவேப்பிலை சிறிது
மல்லி இலை சிறிது
மஞ்சள்தூள் சிறிது
தாளிக்க
பட்டை 1
கிராம்பு 2
ஏலக்காய் 2

செய்முறை

கசகசா, முந்திரி,பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், மிளகு இவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து வைக்கவும்.....

சின்ன வெங்காயம் /பூண்டு /இஞ்சி இவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும்...
மல்லி தூள்.மிளகாய்தூள் இவற்றை வறுத்து சேர்க்கவும்.....

தக்காளி வறுக்கவும்...

இவைகளை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.....
வானொளியில் எண்ணெய் விட்டு சோம்பு, பட்டை ,கிராம்பு ,ஏலக்காய், கருவேப்பிலை பொரிய விடவும்.

சிக்கன் துண்டுகளை சேர்த்து உடன் உப்பு ,மஞ்சள் தூள் ,சேர்த்து நன்கு வதக்கவும்.....

அரைத்த விழுது சேர்த்து, தேவைக்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு......

இடையில் கலந்து 10 நிமிடங்கள் வரை சிறிய தீயில் வைத்து.....

எண்ணெய் பிரிந்து வரும் போது மல்லி இலை தூவி

இறக்கவும்... இப்போது சுவையான கோழி குருமா தயார்......

டிப்பன் வகை உணவுகளுக்கு ஏற்ற துணை உணவு.......



கோழி சால்னா

தேவையான பொருட்கள்

கோழிக்கறி - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
மிளகாய்த்தூள் -  2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிது
அரைக்க:
தேங்காய் சில் - 2
மல்லி விதை - 1/2 தேக்கரண்டி
கசகசா - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி 
மிளகு - 10
முந்திரி பருப்பு - 6 அல்லது 7

செய்முறை

கறியை சுத்தம் செய்து வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மை போல் மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
குக்கரில் தேவையான அளவு எண்ணெய் விட்டு அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பின் கறியை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
அதனுடன் அரைத்த விழுது, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
ஐந்து நிமிடம் வதக்கிய பின் 2- 3 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
குக்கரை மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
இரண்டு விசில் வந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
சூடான சுவையான கோழி சால்னா தயார்..



கோழி வறுவல்

தேவையான பொருட்கள்

1/2 கிலோ கோழி
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
4 டீஸ்பூன் மிளகாய் தூள்
கருவேப்பிலை
தயிர் 2 டீஸ்பூன்
உப்பு
வெங்காயம் 1 நீளமாக அறிந்துகொள்ளவும்
எண்ணெய்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோழி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு,தயிர் சேர்த்து கலந்து குளிர் சாதன பெட்டியில்1 மணி நேரம் ஊற வைக்கவும்
பின்னர் குக்கரி்ல் அதை போட்டு2 சத்தம் வெய்த்து எடுக்கவும்
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து3 நிமிடம் வதக்கி, அதில் வேக வைத்த கோழி சேர்த்து சுருள வதக்கி கொள்ளவும். சுவையான கோழி வறுவல் தயார்'



கல்யாண கோழி

தேவையான பொருட்கள்

பூண்டு துண்டாக வெட்டியது 10
பச்சைமிளகாய் 4
இஞ்சி 2 தூண்டுகள்
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் 1 குவளை
சோயா சாஸ் 1/4 குவளை
ஆப்பிள் சிடார் வினிகர் 1/4 குவளை
மீன் சாஸ் 3 தேக்கரண்டி
சர்கரை 1/4 குவளை
கல் உப்பு 1/4 குவளை
எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
8 தோல் உள்ள கோழி கால்
கொத்தமல்லி இலை 1/2 குவளை

செய்முறை

கோழியை மஞ்சள்தூள் போட்டு நன்றாக கழுவ வேண்டும்.
பின் பூண்டு, மிளகாய், எண்ணெய், வினிகர், சோயா மற்றும் மீன் சாஸ், சர்க்கரை, உப்பு, மற்றும் எலுமிச்சை சாறு அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை கரையும் வரை கிளற வேண்டும்.
பின் கோழி இறச்சியை போட்டு 12 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் மைக்ரோ ஓவனை 450 டிகிறி சூடாக்கி 165 டிகிறி வெப்பதில் அதாவது 15-20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பறிமாறும் முன் எலுமிச்சை சாறு பிளிந்து பறிமாறலாம்.



கோழி குழம்பு

தேவையான பொருட்கள்

கோழி
பெரிய வெங்காயம் -2
தக்காளி -2
பச்சைமிளகாய்- தேவைகேற்ப
மல்லி கீரை
தேங்காய் -3 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது- 1 ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு- தாளிக்க
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கறிமசலா -3 ஸ்பூன்
உப்பூ
எண்ணெய்

செய்முறை

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் மல்லி இழைகளை மெல்லியதாக அரிந்து வைத்துக்கொள்ளவும்

குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு போட்டு கிண்டவும்

பின் இஞ்சி பூண்டு விழுது போட்டு கிண்டவும்

இஞ்சிபூண்டு பச்சை வாசனை போனதும் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் போட்டு கிளறி மிளகாய் தூள் போட்டு அடுப்பப் குறைத்து வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிண்டவும்

பின் கோழியை அதில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு லேசாக கிளறி விட்டு கறி மசலா வை போட்டு அறை டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2 விசில் விடவும்
பின் அரைத்த தேங்காய் விழுதை அதில் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிட்டு

மல்லி இழையை மேலே தூவி இறக்கினால் கம கம கோழி குழம்பு ரெடி



கோழி பொரியல்

தேவையான பொருட்கள்

கோழி-1கி
இஞ்சி பூண்டு பேஸ்ட்-4 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
மிளகு தூள்-1 ஸ்பூன்
சீரகம் தூள்-1 ஸ்பூன்
முட்டை-1
உப்பு-தேவைக்கு
எண்ணெய் -பொரிப்பற்கு

செய்முறை

கோழி துண்டுகளுடன் இஞ்சி பூண்டு மற்ற மசாலாக்கள் முட்டை உப்பு சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கோழி துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்



கோழி பார்ச்சா

தேவையான பொருட்கள்

கோழி- 8-10 துண்டுகள்
இறைச்சிக்கு- இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
புதியதாக இடித்த கருப்பு மிளகுதூள்- 1/2 டீக்கரண்டி
சிகப்பு மிளகாய்த்தூள்-1/2 டீக்கரண்டி
கரம் மசாலா- 1 1/2 டீக்கரண்டி
புதிதான எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
சுவைக்கேற்ப உப்பு
மேற்பூசுவதற்கு - 2 முட்டை
ரொட்டி துகள்கள்
ஆழமாக வறுப்பதற்கு எண்ணெய்
உப்பு மற்றும் மிளகுத்தூள் சுவைக்காக

செய்முறை

கோழிக்கறியை ஓடும் தண்ணீரில் நன்றாக கழுவி உலர்த்திக் கொள்ளவும். பெரிய கிண்ணம் ஒன்றில் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, சிகப்பு மிளகாய்த்தூள், கரம் மசாலா, கழுவிய கோழிக்கறியை சேர்த்து அதேபோல் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும். கோழிக்கறி துண்டுகளை அதில் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
இதை குறைந்தது அரை மணி நேரம் தனியே வைத்து விடவேண்டும் அல்லது இரவு முழுவது தனியே வைப்பது சிறந்ததாக இருக்கும்.
நீங்கள் பார்ச்சா செய்ய தயாரான பின் கிண்ணத்தை வெளியே எடுத்து, அதை நன்றாக கலக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் ஆழமாக வறுப்பதற்கு ஏற்ற அளவிற்கு எண்ணெய் ஊற்றி நடுத்தரமாக சூடுசெய்துக் கொள்ளவும்.
பெரிய கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சுவைக்காக உப்பு மற்றும் மிளகுத்தூள் கலந்து வைத்துக் கொள்ளவும்.
பெரிய தட்டு ஒன்றில் ரொட்டி துகள்களை பரப்பிக் கொள்ளவும்.
எண்ணெய் நடுத்தர வெப்பத்தில்தன் உள்ளதா என்பதை பார்த்துகொள்ளவும் அதன் பின் கோழிக்கறி துண்டுகள் ஒவ்வொன்றையும் ரொட்டி துகள்களின் மேல் உருட்டி அதில் ஓட்டும்படி செய்துக் கொள்ளவும்.
முட்டைக் கலவையில் கோழிக்கறியை மூழ்கடித்து பின் அதனை எண்ணெயில் விடவும்.
கோழியின் உட்புறமும் வேக வேண்டும் என்பதால், எண்ணெய் மிகவும் சூடாக இருக்கக்கூடாது.
கோழியை ஒவ்வொரு புறமும் பொன்னிறமாக வறுக்கவேண்டும்.
பின்னர் எண்ணையை உறிஞ்சும் காகித துணியில் கோழி துண்டுகளைப போடவும், எனவே அதிகப்படியான என்னியஅது உறிஞ்சிவிடும்.
உங்களுக்கு பிடித்த டிப் சாஸ், சில பிரஞ்சு பொரியல்கள், எலுமிச்சை துண்டுகளுடனோ அல்லது சாதத்துடன் கோழிக்கறியை பார்சாஸை பரிமாறவும்.



கோழி பிரட்டல் 

தேவையான பொருட்கள்

கோழி முக்கால் கிலோ
பல்லாரி 4
தக்காளி-3
பச்சை மிளகாய் 2
இஞ்சி பூண்டு ஒரு மேஜைக்கரண்டி
பட்டை கிராம்பு ஏலக்காய்
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் ஒன்றரை தேக்கரண்டி
மல்லி தூள் 2 மேஜை கரண்டி
சீரகம் சோம்பு கசகசா சேர்த்து அரைத்து தூள் ஒரு டீஸ்பூன்
சமையல் எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு

செய்முறை

குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்
வெங்காயம் சேர்த்து வதக்கவும்
வெங்காயம் பொன்னிறமாக உடன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
தக்காளி பச்சை மிளகாய் உப்பு சேர்த்து வதக்கவும்
மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்

இப்பொழுது கோழி சேர்த்து நன்றாக வதக்கவும்
சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விடவும்
விசில் அடங்கியவுடன் சிறிது நேரம் கொதிக்க வைத்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்
புரோட்டீன் ரிச் சிக்கன் கிரேவி ரெடி




கோழி ரென்டாங்

தேவையான பொருட்கள்

கோழி 1 கிலோ
Gelugor புளி துண்டுகள் 2 / புளி சிறிய கோலி அளவு
மஞ்சள் இலை 1
நார்த்தங்காய் இலை 3
கெட்டியான தேங்காய் பால் 1 கப்
தேங்காய் துறுவல் 1 கப்
வெங்காயம் 3
அரைக்க :-
ஊசி மிளகாய் 10
காய்ந்த மிளகாய் 10
Galangal 1/2 அங்குலம்
இஞ்சி 2 அங்குலம்
பூண்டு 6
பச்சை மஞ்சள் 1 அங்குலம்
வெங்காயம் 3
Candle nuts 5
Lemon grass 3

செய்முறை

தேங்காய் துறுவலை எண்ணெய் இல்லாமல் பொன்னிறமாக வறுத்து ஆற விடவும்

மிக்ஸியில் போட்டு எண்ணெய் வரும்வறை அரைக்கவும்

அரைக்க கொடுத்த பொருட்களை ஒன்றாக அதிகம் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்

மற்ற பொருட்களை சுத்தம் செய்து வெட்டிக்கொள்ளவும். மஞ்சள் இலையை பொடியாக வெட்டவும்

கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்

வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்

கோழி கறி, தக்காளி, புளி சேர்த்து கிளறவும்

நன்றாக கலந்ததும் உப்பு, சக்கரை, தேங்காய் பால் சேர்த்து வேக வைக்கவும்

நன்றாக வெந்தவுடன் மஞ்சள் இலை, வறுத்த தேங்காய் சேர்த்து கொஞ்சம் காய்ந்ததும் இறக்கவும்





கோழி பிரியாணி 

தேவையான பொருட்கள்

கோழ கறி 1 கிலோ
பாசுமதி அரிசி 1கிலோ
வெங்காயம் 1\2 கிலோ
தக்காளி 1\4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது 100 கிராம்
புதினா சிறிய கட்டு
கொத்தமல்லி சிறிய கட்டு
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் 3 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
லவங்கம் பட்டை ஏலக்காய் சிறிது
கேசரி பவுடர் சிறிது
நெய் சிறிது
தயிர் 100 கிராம்
எலுமிச்சை பழம் 2

செய்முறை

கோழியை நன்றாக அலசி வைக்க வேண்டும்
பாசுமதி அரிசியை ஒரே முறை கழுவி உறவைக்கவும்
ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்க்கவும்
நீலமான நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
பின்னர் கோழி இறைச்சி சேர்த்து வதக்கவும்
பின்னர் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
நறுக்கிய புதினா கொத்தமல்லி இலை போட்டு நன்றாக வதக்கவும்
தயிர் சேர்த்து வதக்கவும்
பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
உப்பு சேர்க்காவும்
தண்ணீர் நன்றாக கொதித்து கொண்டிருந்ததால் அரிசி சேர்க்கவும்
ஜந்து நிமிடம் கழித்து பார்த்தால் அரிசி விறயாக இருக்கும் போது கேசரி பவுடர் மேலே துவும் சறிது கொத்தமல்லி தழை தூவி நெய் சேர்த்து நன்றாக முடி அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ள வேண்டும்
பாத்திரத்தின் மேல் ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து தம் விடவும் 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்
சுடான பிரியாணி தயார்



கோழி பொடிமாஸ்

தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் துண்டுகள்( சக்கை பீஸ்) - 200 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள்த்தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
தனி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
முட்டை - 1
மல்லிதழை சிறிதளவு

செய்முறை

முதலில் சிக்கன் துண்டுகளை மஞ்சள்த்தூள் போட்டு வேக வைத்து படத்தில் உள்ளது போன்று பிய்த்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு அகன்ற பானில், எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
மிகவும் வதக்க வேண்டிய அவசியம் இல்லை. ஓரளவு வதங்கியதும், கறிவேப்பிலை போட்டு விட்டு, இஞ்சி, பூண்டும் சேர்த்து நன்கு வாசம் வர வதக்கவும்.

பிறகு மாசாலாத்தூள்களை சேர்த்து விட்டு, பின்னர் முட்டை அதில் ஊற்றி நன்கு கிளறி விடவும்.

அதன் பின் கோழி துண்டுகளை சேர்த்து இன்னும் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு சிக்கனை கொத்தி விட்டு ஒன்று சேர கிளறி விட்டு குறைந்த தீயிலேயே பரவலாக வைத்து விடவும்.

எல்லாம் ஒன்று சேர்ந்து சிக்கன் பீஸ்கள் மொறுவலாகவும், உதிரியாகவும் வரை வைக்கவும். முட்டை சேர்த்திருப்பதால் சட்டியால் ஒட்டாது. எனவே ரொம்ப கிளறி கொண்டே இருக்க தேவையில்லை. ஓரிருமுறை கிளறி விட்டால் போதும்.படத்தில் உள்ளது போன்று ரெடியானதும் மல்லிதழை பொடியாக நறுக்கி தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

சுவையான சூப்பரான கோழி பொடிமாஸ் ரெடி. இது எல்லா வகை சாதத்திற்கும் தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும். சப்பாத்தி, ப்ரெட்களிலெல்லாம் ஸ்டஃப்பிங் போன்று வைத்து பிள்ளைகளுக்கு ஸ்கூலிற்கு கொடுத்து அனுப்பலாம்.




கோழி மிளகு கறி

தேவையான பொருட்கள்

சிக்கன் - 300gm
வெங்காயம் - 1
தக்காளி - 1
சீரகம்- 1 அ 11/2தேக்கரண்டி
மிளகு- 11/2 அ 2தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் - 1துண்டு
பச்சை மிளகாய் - 1
மல்லி இலை - கொஞ்சம்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி அளவு

செய்முறை

குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அடி பிடிக்கத்தவாறு சற்று வதக்கவும்.
வதக்கிய பின் தக்காளி உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் கறியை சேர்க்கவும்
மிளகு,சீரகம் தேங்காயை சற்று வறுத்து தண்ணீர் ஊற்றி மையாக அரைக்கவும்.
அரைத்த விழுதை கறியுடன் சேர்த்து நன்கு பிரட்டி கொதி வந்தவுடன் தேவை என்றால் தண்ணீர் கொஞ்சம் ஊற்றி 2 விசில் வைக்கவும்
மல்லி இலை தூவி பரிமாறவும்.



காரசார கோழி 65

தேவையான பொருட்கள்

சிக்கன் அரை கிலோ
கோழி வறுவல் பொடி 3 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
மைதா 2 ஸ்பூன்
சோள மாவு ஒரு ஸ்பூன்
அரிசி மாவு ஒரு ஸ்பூன்
கரம் மசாலா ஒரு ஸ்பூன்
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
எலுமிச்சை பழம் ஒன்று
மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
மல்லிதூள் 3 ஸ்பூன்
சீரகம் தூள் ஒரு ஸ்பூன்
தயிர் ஒரு ஸ்பூன்
மிளகுத் தூள் ஒரு ஸ்பூன்
தேவைப்பட்டால் கலர் பவுடர் ஒரு பின்ச்
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை

சிக்கனுடன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் சேர்க்கவும்
சோள மாவு மைதா மாவு அரிசி மாவு சேர்க்கவும்
இஞ்சி பூண்டு விழுது எலுமிச்சை சாறு சேர்க்கவும்
கரம் மசாலா தூள் சீரகத்தூள் சேர்க்கவும்
சிக்கன் 65 மசாலா ஒரு ஸ்பூன் தயிர் சேர்க்கவும்
தேவையான அளவு உப்பு 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்

கடாயில் எண்ணெய் ஊற்ற வேண்டும்

அரை மணி நேரம் கழிந்த பிறகு சிக்கனை ஒன்று ஒன்றாக பொரித்து எடுக்கவும்

சிக்கன் சிவந்து வரும் வரை வறுக்கவும்

சுவையான காரசார கோழி 65 ரெடி
கோழி 65 பிரியாணியுடன் பரிமாறவும்




கோழி நிறைச்சது

தேவையான பொருட்கள்

முழு கோழி ஒன்று
முட்டை-2
மஞ்சள் பொடி
மிளகாய் பொடி 2 முதல் 3 ஸ்பூன் வரை
பெருஞ்சீரகப் பொடி முக்கால் டீஸ்பூன்
கரம் மசாலா 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்
தந்தூரி மசாலா
எலுமிச்சை பழம் ஒன்று
தயிர் 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் 2
முந்திரிப் பருப்பு 8
கிஸ்மிஸ் பழம்
தைப்பதற்கு நூல் மற்றும் ஊசி
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

முதலில் ஒரு முழு கோழி எடுத்து உள்பகுதி அனைத்தையும் சுத்தம் செய்து நன்றாக கழுவி கொள்ளவும்
பின்பு மேற்கூறப்பட்ட மசாலாக்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மசாலா தயாரிக்க வேண்டும்
மஞ்சள் பொடி மிளகு பொடி பெசீரகப் பொடி உப்பு கரம் மசாலா தந்தூரி மசாலா எலுமிச்சைபழம் மற்றும் தயிர் இஞ்சி பூண்டு விழுது
அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி மசாலா தயாரித்துக் கொள்ளவும்
பின்பு அத்துடன் தயிர் ஆட் பண்ணி அதை நன்றாக கிளறிக் கொள்ளவும்
இதை கோழியின் மேல் முழுதாக பரப்பி தடவி வைத்துக் கொள்ள வேண்டும்
மசாலா தடவுவதற்கு முன்பு கோழி மேல் சிறு கீறல்கள் போட வேண்டும் இதனால் மசாலாக்கள் நன்றாக உறிஞ்ச ஏதுவாக இருக்கும்
மசாலா அப்ளை செய்யப்பட்ட கோழியை 3 முதல் 4 மணி நேரம் வரை நன்றாக ஊற வைக்கவும்
அதை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்
இப்போது 2 முட்டையை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்
முட்டையின் மேல் உள்ள தோல் உரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
வெங்காயத்தை தோல் உரித்து ஸ்லைஸ் ஸ்லைசாக நறுக்கி அதை எண்ணெயில் போட்டு நன்றாக பொரிக்க வேண்டும்
பிறகு அதே எண்ணெயில் சிறிதளவு முந்திரிப் பருப்பு மற்றும் கிஸ்மிஸ் பழம் ஆகியவற்றை வைத்து நன்றாக வறுத்து எடுக்க வேண்டும்
இப்போது கோழி செய்வதற்கு உள்ள அனைத்து பொருட்களும் தயார் நிலையில் இருக்கிறது
ஊசி நூல் எடுத்து வைத்துக் கொள்ளவும்
இப்போது ஊறிப்போன அந்தக் கோழியை எடுத்து அதனுள்
அதனுள் முட்டை வெங்காயம் முந்திரிப்பருப்பு கிஸ்மிஸ் போன்றவற்றை வைத்து வெளிப்பகுதியில் ஊசி நூல் வைத்து நன்றாக தைத்துக் கொள்ளவும்
இப்போது கோழி பொரிப்பதற்கு தயாராக இருக்கிறது முழு கோழி போன்று
ஒரு பெரிய சட்டியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி முழுசாக போட்டு பொரிக்க வேண்டும்
மிதமான சூட்டில் வைத்து பொரிக்க வேண்டும்
இப்போது சுவையான கோழி நிறைத்தது தயார்
இது மிகவும் முக்கியமான ஒரு பார்ட்டி டிஷ் ஆகும்



கோழி மிளகு கறி

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்த கோழி அரை கிலோ
சின்ன வெங்காயம் ஐந்து
பச்சை மிளகாய் ஒன்று
பட்டை ஒரு இன்ச் கிராம்பு-2
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
தக்காளி ஒன்று
இஞ்சி பூண்டு ஒரு டீஸ்பூன்
மிளகு ஒரு ஸ்பூன்
சீரகம் அரை டீஸ்பூன்
எண்ணை தேவையான அளவு

செய்முறை

சட்டியில் எண்ணெய் காய்ந்தவுடன் பட்டை மற்றும் கிராம்பு சேர்க்கவும்

பட்டை வெடித்தவுடன் வெங்காயம் தக்காளி சேர்க்கவும்

வெங்காயம் தக்காளி வதங்கியவுடன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
மஞ்சள் தூள் சேர்க்கவும்

இப்பொழுது கோழி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்

கோழி வெந்தவுடன் மிளகு சீரகம் அரைத்த கலவையை சேர்த்து 2 நிமிடம் மூடி வேக விடவும்
இரண்டு நிமிடம் கழித்து இறக்கி சூடாக சப்பாத்தியுடன் பரிமாறவும்




கோழி மிளகு சூப்

தேவையான பொருட்கள்

1/4 கிலோ கோழி எழும்பு பகுதி
சின்ன வெங்காயம் 10
இஞ்சி பூண்டு விழுது சிறிது
கருவேப்பிலை
மல்லி இலை
மிளகு 10 கிராம்
கரம் மசாலா தூள் சிறிது
சீரகம் 10 கிராம்
தக்காளி 1
உப்பு தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் 5 மில்லி
மிளகாய்த்தூள் 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் சிறிது

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து நன்கு பொறிய விடவும்
கருவேப்பிலை,சின்ன வெங்காயம் நறுக்கிய சேர்த்து நன்கு வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள்,சீரக பொடி சேர்த்து நன்கு வதக்கவும்
தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
கோழி இறைச்சி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
தண்ணீர் 6 டம்ளர் சேர்த்து நன்கு மிதமான தீயில் கொதிக்க வைத்து
15 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து இரக்கி அதில் மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.......




நெய் கோழி ரோஸ்ட்

தேவையான பொருட்கள்

சிக்கன் 1/2 கி
வெங்காயம் 1 கப்
தக்காளி 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது 1 மே.க
மஞ்சள் தூள் 1
மிளகாய் தூள் 1 மே.க
தனியா தூள் 1 மே.க
உப்பு தே.அளவு
நெய் 3 மே.கரண்டி
பட்டை 3
கிராம்பு 3
ஏலக்காய் 3
சோம்பு 1 மே . கரண்டி

செய்முறை

ஒரு கடாயில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சேர்த்து தாளிக்கவும்
சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்
வதங்கிய பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
அடுத்தது இஞ்சி பூண்டு விழுது தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
நன்கு வதங்கியதும் ம.தூள் மி.தூள் த.தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
தே.அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்
வெந்ததும் தோசை கல்லில் கோழியை போட்டு நன்கு ரோஸ்ட் ஆகும் வரை வறுக்கவும்
சுவையான நெய் கோழி ரோஸ்ட் தயார்


கோழி ஈரல் வறுவல்

தேவையான பொருட்கள்

கோழி ஈரல் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 1(பொடியாக நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - தேவைக்கேற்ப

செய்முறை

கோழியின் ஈரலை நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்க்கவும்.
பிறகு ஈரலுடன் சிறிதளவு உப்பைச் சேர்த்து சிறிது நிமிடங்கள் வேகவிட்டு, அதில் இறுதியாக மிளகுத்தூள் சேர்க்கவும். 
நன்கு வெந்ததும் கொத்தமல்லி இலையை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
சூடான ருசியான ஈரல் வறுவல் ரெடி!!!



கோழி நெய் வறுவல்

தேவையான பொருட்கள்

கோழி இறைச்சி - 1/2 கிலோ
நெய் - 1 குழிகரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி -1 கையளவு
கறிவேப்பிலை - 7 இலைகள்
காய்ந்த மிளகாய் - 10
தனியா - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 6 பல்
எலுமிச்சை சாறு - 1/2 பழத்தில் பிழிந்தது
கெட்டி தயிர் - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு

செய்முறை

காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம் ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வெறும் வாணலியில் மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து கொள்ளவும்.
வறுத்து ஆரவைத்த பொருட்களுடன், எலுமிச்சை சாறு, இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
இறைச்சியை கழுவி சுத்தம் செய்து, அரைத்த மசாலா, தயிர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
அரை மணி நேரம் ஊறிய பிறகு, கடாயில் நெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும், ஊறிய இறைச்சியை சேர்த்து வதக்கவும்.
மூடி போட்டு சமைக்கவும், அவ்வப்போது கிளறி அடிப்பிடிக்காமல் குறைந்த தீயில் சமைக்கவும்.
உப்பு காரம் உங்கள் வீட்டிற்கு ஏற்றவாறு சரி செய்து கொள்ளவும்.
இறைச்சி நன்கு வெந்து, நெய் பிரிந்து வரும்போது நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.



கோழி கால் வறுவல்

தேவையான பொருட்கள்

கோழியின் கால்கள் மூன்று
உப்பு தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா அல்லது பிரியாணி மசாலா (விருப்பப்பட்டால்)
தயிர் ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை

கோழியை மஞ்சள் தூள் போட்டு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்
பின்பு அதில் உப்பு ,மிளகாய் தூள் ,கரம் மசாலா அல்லது பிரியாணி மசாலா, தயிர் போட்டு பிசைந்து குளிர்சாதனப் பெட்டியில் இரண்டு மணி நேரம் வைக்க வேண்டும்
அது நன்கு ஊறிய பிறகு எண்ணெயில் மிதமான வெப்பத்தில் பொரித்து
பரிமாறும் போது சிறிது எலுமிச்சை சாறு மற்றும் சாட் மசாலா சேர்த்து பரிமாறலாம்



பருப்பு கோழி சூப் 

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு கால் கப்
மசூர் பருப்பு கால் கப்
கேரட் நறுக்கியது ஒரு கப்
உருளைக்கிழங்கு நறுக்கியது ஒரு கப்
முட்டைக்கோஸ் நறுக்கியது ஒரு கப்
கோழி இறைச்சி நெஞ்சுப்பகுதி நறுக்கியது 1 கப்
வெங்காயம் நறுக்கியது 1 கப்
பூண்டு 5 பல்
வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
தக்காளி நறுக்கியது அரை கப்
நல்ல மிளகாய் தூள் தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
எலுமிச்சை 1

செய்முறை

முதலில் 2 பருப்புகளையும் 3 மணி நேரம் ஊற வைத்து பிறகு வேக வைக்கவும்.
குக்கரில் வெண்ணெய் ஊற்றி அதில் பூண்டு,வெங்காயம்,தக்காளி,இறைச்சி மற்றும் காய்கறிகள் இட்டு நன்றாக வதக்கவும்.
இதில் வேக வைத்த பருப்புக்களை ஊற்றவும்.
4 விசில் வந்ததும் குக்கரை அணைக்கவும்
ஆறியதும் மிக்ஸியில் இட்டு நன்றாக அடிக்கவும்.
சுவைக்கேற்ப நல்ல மிளகாய் தூள் மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்.



கோழி தம் பிரியாணி

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி 2 கப்
கோழி இறைச்சி கால் கிலோ
வெங்காயம் 2
பச்சை மிளகாய் 2
தக்காளி-2
மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
பிரியாணி மசாலா ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
முழு நல்ல மிளகு 5
முழு சுரகம் 1/4 தே.க
உப்பு தேவைக்கு
பட்டை1
ஏலம் 2
இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
தயிர் கால் கப்
மல்லி இலை அரை கப்

செய்முறை

வாணலியில் எண்ணெய் நெய் ஊற்றி பட்டை ,ஏலம், ந.மிளகு, சீரகம் போட்டு தாளிக்கவும்.
பிறகு வெங்காயம் ,தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு மல்லி இலை, மசாலா தூள், தயிர் போட்டு நன்றாக வதக்கவும்
பொரித்த கோழி இறைச்சி போடவும்.1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
தேவைக்கு உப்பு சேர்க்கவும்
20 நிமிடம் ஊற வைத்த பாசுமதி அரிசி அரை வேக்காடு வேக வைக்கவும்.வடி கட்டவும்
இந்த மசாலாவில் மீது அரை வேக்காடு அரிசியை போட்டு மல்லி இலை தூவி 15 நிமிடம் தம்மில் போடவும்.


கோழி மலாய் பீட்சா

தேவையான பொருட்கள்

கோழி இறைச்சி நெஞ்சுப்பகுதி
துருவிய பன்னீர் ஒரு கப்
திக்கா மயோனைஸ் 1/2 கப்
தக்காளி சாஸ்
நறுக்கிய குடை மிளகாய் அரை கப்
மொஸரலா சீஸ் ஒரு கப்
இத்தாலியன் ஹெர்ப்ஸ்-தேவைக்கு
உப்பு தேவைக்கு
வத்தல் பொடித்தது(சில்லி ப்ளேக்ஸ்) - தேவைக்கு
மைதா மாவு 2 கப்
ஈஸ்ட் ஒரு தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் கால் தேக்கரண்டி
சர்க்கரை 2 தேக்கரண்டி
எண்ணெய் மூன்று தேக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப
சிறு சூடு தண்ணீர் மாவு குழைக்க

செய்முறை

பீட்சா மாவு குழைக்க:
மைதா மாவு ஈஸ்ட் சர்க்கரை உப்பு பேக்கிங் பவுடர் எண்ணை தண்ணீர் ஊற்றி நன்றாக குழைத்து 3 மணி நேரம் மூடி வைக்கவும்.
கோழி இறைச்சியை நன்றாக சுத்தம் செய்து உப்பு மிளகு சேர்த்து வேகவைக்கவும்.
அதை சிறு துண்டுகளாக நறுக்கி மயோனைஸில் கலக்கி வைக்கவும்
1 மணி நேரம் கழித்து மைதா மாவை எடுத்து நன்றாக பிசைந்து சப்பாத்தி போல் பரத்தவும்.
உணவின் மீது தக்காளி சாஸ்,அதன் மீது மயோநைஸ் கோழி கலவை,துருவிய பன்னீர் சேர்க்கவும்.
அதன் மேலே துருவிய மொசரல்லா சீஸை போடவும்.
அதன் மேலே இட்டாலியன் ஹெர்ப்ஸ் சில்லி பிளேக்ஸ் தூவவும் . நறுக்கிய குடைமிளகாய் போடவும்.
10 நிமிடம் சூடாக்கிய ஒவணில் 170 டிக்ரி வெப்பத்தில் 12-15 நிமிடம் பேக் செய்யவும்.




பிச்சு போட்ட கோழி

தேவையான பொருட்கள்

கோழி 1/2 கிலோ
பெரிய வெங்காயம் 1 நீளமாக நறுக்கியது
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
தக்காளி 2 நறுக்கியது
பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
கரம் மசாலா 1தேக்கரண்டி
மல்லித்தூள் 1 தேக்கரண்டி
மிளகுத் தூள் 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை கொஞ்சம்

செய்முறை

கோழியை இரண்டு முறை சுத்தம் செய்து குக்கரில் போட்டு கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் கொஞ்சம் உப்பு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 3 விசில் விடவும்
கோழி வேக வைத்த தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
வேக வைத்த கோழியை ஆறவைத்து சின்னச்சின்னதாக பிச்சி போட்டு எடுத்துக் கொள்ளவும்
அடுப்பை பற்ற வைத்து கடாயில் 4 தேக்கரண்டி எண்ணை விடவும்
எண்ணை காய்ந்ததும் நீளமாக நறுக்கி வைத்த வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்
வெங்காயம் வதங்கிய பிறகு ஒரு கைப்பிடி கறிவேப்பிலை நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும் பச்சை வாடை போகும் வரை
நறுக்கி வைத்த தக்காளியுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
தக்காளி நன்றாக வதங்கிய பிறகு கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்
இப்போது பிச்சை போட்டு வைத்த கோழியை சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும்
பிறகு மல்லித்தூள் மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கவும்
இப்போது கோழி வேகவைத்த தண்ணீரை விட்டு மிதமான சூட்டில் ரெண்டு நிமிடம் விடவும்
தண்ணீர் நன்றாக வற்றி கோழியுடன் சேர்ந்து வந்த பிறகு மல்லித்தழை தூவவும்
இப்போது ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து நன்றாக பிரட்டி இறக்கவும் சுவையான பிச்சை போட்ட கோழி வறுவல் ரெடி



வெண்ணெய் பால் கோழி

தேவையான பொருட்கள்

சிறியதாக வெட்டிய கோழித்துண்டுகள் 300 கிராம்
முட்டை 1
மைதா மாவு 2 மே. கரண்டி
குழம்பு மசாலா தூள் 1 மே. கரண்டி
வெண்ணெய் 2 மே. கரண்டி
பால் 1/2 கப்
பூண்டு 3 பற்கள்
பெ. வெங்காயம் 1
மிளகாய் தே. அளவு
கறிவேப்பிலை 2 இணுக்கு
உப்பு தே. அளவு

செய்முறை

கோழியில் மைதா, மசாலாத்தூள், முட்டை, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து 30 நிமிடங்கள் வைக்கவும்

தேவையான அளவு எண்ணெயில் போட்டு நன்றாக பொரித்து எடுக்கவும்

வெண்ணெயில் பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு லேசாக வதக்கவும்

பால், வெங்காயம், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

கொதித்தவுடன் கோழித்துண்டுகளை சேர்க்கவும்

கோழித்துண்டுகள் பால், வெண்ணெயில் நன்றாக ஊறி சுண்டி வரும்போது இரக்கவும்.



நாட்டு கோழி வறுவல்

தேவையான பொருட்கள்

நாட்டுக் கோழி - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2
குழம்பு மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
பட்டை - 2
கிராம்பு - 2
சோம்பு பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் நாட்டுக் கோழியை நன்கு சுத்தமாக கழுவி, குக்கரில் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து, சோம்பு பொடி சேர்த்து வதக்க வேண்டும்.
அதில் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி, அத்துடன் வேக வைத்துள்ள சிக்கனை மட்டும் சேர்த்து, குழம்பு மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்கு மசாலா கோழியுடன் ஒன்று சேர பிரட்டி விட வேண்டும்.
ஒருவேளை அடிப்பிடிப்பது போல் இருந்தால், அதோடு சிறிது சிக்கன் வேக வைத்த நீரை ஊற்றி, நன்கு பிரட்டி, கொத்தமல்லி தூவி கிளறி இறக்கினால், நாட்டுக்கோழி வறுவல் ரெடி.



கோழி வெள்ளை குருமா

தேவையான பொருட்கள்

கோழி-1/2 கி
வெங்காயம் -1/4 கி
தக்காளி -1
ப.மிளகாய் -2
இஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய்-தலா 1
சீரக தூள்-1 ஸ்பூன்
வெள்ளை மிளகு தூள்-1 ஸ்பூன்
தயிர்-1 கப்
தேங்காய் அரவை-4 ஸ்பூன்
பாதாம் பவுடர் -1 ஸ்பூன்
எண்ணை- 3 ஸ்பூன்
கொத்தமல்லி இலை-சிறிது
உப்பு-தேவைக்கு

செய்முறை

கோழியை கழுவி வைக்கவும்
வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும்
பின்பு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்

பின்பு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்

இஞ்சி பூண்டு வதங்கியதும் கோழி துண்டுகளை சேர்க்கவும்

இதோடு தயிர் கீறிய பச்சை மிளகாய் மிளகுத்தூள் சீரகத்தூள் சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்

குக்கரை மூடி ஒரு விசில் விடவும்
முக்கால்வாசி வெந்ததும் தக்காளி தேங்காய் விழுது பாதாம் பவுடர் சேர்க்கவும்

நன்கு கிளறி விட்டு அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொ.மல்லி இலை தூவி பரிமாறவும்



நாட்டு கோழி குருமா

தேவையான பொருட்கள்

கோழி-1/2 கி
நாட்டுக்கோழி ஒரு கிலோ
சின்ன வெங்காயம் 10
தக்காளி-2
இஞ்சி பூண்டு விழுது
கரம் மசாலா பவுடர் ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் 3 spoon
தனியா தூள் ஒரு ஸ்பூன்
தேங்காய் அரை மூடி
கசகசா ஒரு ஸ்பூன்
முந்திரி 6
நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை

குக்கரில் நல்லெண்ணெய் விட்டு வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது வதக்கவும்
தக்காளி பழம் சேர்க்கவும்
மசாலா பொருட்களை சேர்க்கவும்
மசாலாவின் பச்சை வாசனை போக வதக்கவும்
நாட்டுக்கோழியை சேர்க்கவும்
தேங்காய் கசகசா முந்திரி அரைத்த விழுதை சேர்க்கவும்
உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வேக விட்டு எடுக்கவும்
நாட்டு கோழி குருமா தயார்



கோழி கறி சப்பாத்தி

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு 1+1/2கப்
எலும்பில்லாத சிக்கன் 250கி
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் 1
நறுக்கிய பச்சை மிளகாய் 1
சீரகம் 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1/4தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
மல்லி தூள் 1 தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி தழை 2மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
நீர் தேவையான அளவு

செய்முறை

கோதுமை மாவில் 1 மேசைக்கரண்டி எண்ணெய், தேவையான உப்பு சேர்த்து நீர் விட்டு மிருதுவாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பிசைந்த மாவை மூடி வைத்துவிடுங்கள்.
இப்போது, ஒரு கடாயை (நான்ஸ்டிக்) சூடாக்கி, 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, சீரகம் சேர்க்கவும்.
சீரகம் பொரிந்ததும், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
இத்துடன் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.
சிக்கன் வெந்து, அதன் நிறம் வெள்ளையாக மாறியதும், மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
கொத்துமல்லி தழை சேர்த்து இறக்கி ஆரவைக்கவும்.
ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு , தூளாக அரைத்துக்கொள்ளவும்.
இப்போது பிசைந்த மாவையும், சிக்கென ஸ்டப்பிங்ஸ் இரண்டையும் பக்கமாவ வைத்து கொள்ளுங்கள்.
மாவில் ஒரு சிறு உருண்டை எடுத்து, தட்டி கொழுக்கட்டை மாவில் பூரணம் வைப்பது போல வைத்து, மூடி வைக்கவும்.
இதனை பூரி கட்டை கொண்டு சப்பாத்தி போல தேய்த்து, தவாவில் சுட்டு எடுக்கவும்.

சுவையான சிக்கன் சப்பாத்தி தயார்.





கிராமத்து கோழி சூப் 

தேவையான பொருட்கள்

கோழி(எலும்புடன்) - 1/2  கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1  துண்டு
தக்காளி - 1
பட்டை, லவங்கம் - தலா 1
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
மஞ்சள்தூள் - 1 /2  தேக்கரண்டி
உப்புதேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - தேவைக்கு
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். இஞ்சி, கொத்தமல்லி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளி, ப.மிளகாய், சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். 
அடுத்து அதில் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும்.
பின்பு இநத் சிக்கன் சூப்பில் கொத்தமல்லி, எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும். சூப்பரான கிராமத்து ஸ்டைல் சிக்கன் சூப் ரெடி.




நாட்டு கோழி குழம்பு

தேவையான பொருட்கள்

நாட்டு கோழி -1
வெங்காயம் -1/2 கப்
தக்காளி -3
வெள்ளைப்பூடு -6
பச்சைமிளகாய் -3
மிளகாய் பொடி
சீரக பொடி
இஞ்சி
கருவேப்பிலை, கொத்தமல்லி
மஞ்சள் தூள்
சோம்பு
உப்பு
எண்ணெய்

செய்முறை

வெங்காயம், சீரகம், sompu, மஞ்சள் தூள், மசாலா, இஞ்சி, வெள்ளைப்பூடு சேர்த்து அரைக்கவும்
ஒரு வாணலில் கோழியை போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். ஒரு 30 நிமிடம் வேக வைக்கவும்
பின்பு ஒரு வாணலியில் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை சேர்த்து நல்லா வதக்கவும்.
பின்பு அரைத்த மசாலா சேர்க்கவும்.
நன்றாக வதங்கியதும் கோழியை சேர்க்கவும்.
ரெசிபி ரெடி



முந்திரி கோழி குருமா

தேவையான பொருட்கள்

கோழி 250 கிராம்
நறுக்கப்பட்ட வெங்காயம் 2
நறுக்கப்பட்ட தக்காளி 2
பச்சை மிளகாய் 2 பிளந்தது
இஞ்சி பூண்டு விழுது 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி
மல்லித் தூள் 2 தேக்கரண்டி
கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
ஏலக்காய், இலவங்கப்பட்டை கிராம்பு ஒவ்வொன்றிலும் 1
தேங்காய் பால் 1/2 கப்
முந்திரி பருப்பு 6-7
கசகசா 1 தேக்கரண்டி
சுவைக்கேற்ற உப்பு
அலங்காரத்திற்காக நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகள்

செய்முறை

கசகசா, முந்திரிபருப்புடன் சற்றே சூடாக உள்ள பாலைச் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு சேர்க்கவும். அதன்பிறகு நறுக்கப்பட்ட வெங்காயம், பிளந்த பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும், பச்சை வாடை போனதும் நறுக்கப்பட்ட தக்காளி, கோழி மற்றும அனைத்து மசாலாத் தூளையும் சேர்க்கவும்.
நன்றாகக் கலந்து 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். போதுமான உப்பு சேர்த்து மூடி 4 விசில்களுக்கு வேகவைத்து தீயை அணைக்கவும்.
விசில் வந்ததும் அரைத்த சாந்து, தேங்காய் பால் சேர்த்து கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.
நறுக்கப்பட்ட கொத்துமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.



முட்டை கோழி பணியாறம்

தேவையான பொருட்கள்

முட்டை - 5 எண்ணிக்கை
கடலை மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சுவைக்கேற்ற உப்பு
சீரகப்பொடி - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3 எண்ணிக்கை, நன்றாக நறுக்கப்பட்டது
வெங்காயம் - 1 எண்ணிக்கை, பொடியாக நறுக்கப்பட்டது
கறிவேப்பிலை - 5 இலைகள், பொடியாக நறுக்கப்பட்டது
கொத்துமல்லி - கொஞ்சம், பொடியாக நறுக்கப்பட்டது
எண்ணெய் - 1தேக்கரண்டி ஒவ்வெரு பணியாறமாக வேகவைப்பதற்கு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் முட்டைையை உடைத்து ஒரு முள் கரண்டியால் அடித்துக்கொள்ளவும். உப்பும் மிளகையும் இதனோடு சேர்த்து நன்றாகக் கலக்கவும். எடுத்து வைக்கவும்.
வேறொரு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு, மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும். போதுமான தண்ணீர் சேர்க்கவும், மாவுக்காக. மாவு மிகவும் கட்டியாகவோ தண்ணீர் போன்றோ இருக்கக்கூடாது.
இப்போது முட்டைக் கலவையை இந்த மாவுடன் சேர்த்து கொஞ்சம் உப்பும் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளவும். நன்றாக நறுக்கப்பட்ட வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும். மாவை நன்றாக கலக்கிக்கொள்ளவும்.
ஒரு நான்-ஸ்டிக் ஆப்ப/பணியாற பாத்திரத்தை எடுத்து மிதமானச் சூட்டில் சூடுபடுத்தவும். 1 தேக்கரண்டி எண்ணெய் ஆப்பச்சட்டியின் ஒவ்வொரு குழியிலும் உற்றவும்.
எண்ணெய் போதுமான அளவு சூடானது, ஆப்பச் சட்டிக் குழியில் மாவை ஊற்றவும். குழியில் 3/4 அளவுக்கு மட்டும் நிரப்பவும், சமைக்கும் போது அது உப்பும். மூடியைப் போட்டு 3ல் இருந்து 4 நிமிடங்கள் வேகவைக்கவும்
அடுத்தப் பக்கத்தைத் திருப்பிப்போட்டு மேலும் 2 நிமிடங்களுக்கு வேகவைக்கவும் அல்லது அதன் இரண்டு பக்கங்களும் பொன்னிறமாகும்வரை.
எல்லாம் தயார்! டீ அல்லது காபியுடன் பரிமாறத் தயார். எந்த சலாதுடனும் சூடாகப் பரிமாறவும்



தயிர் கலந்த கார கோழி

தேவையான பொருட்கள்

கோழி 1 கிலோ
கெட்டி தயிர் 1 கப்
உப்பு தே. அளவு
சக்கரை 1 மே. கரண்டி
எளுமிச்சை சாறு 1 மே. கரண்டி
அரைக்க :- மிளகாய் தூள் 1 1/2 மே. கரண்டி
சீரகம் 1 தே. கரண்டி
சோம்பு 1 தே. கரண்டி
மல்லி 1 தே. கரண்டி
மிளகு 1 தே. கரண்டி
பட்டை 1/2 அங்குலம் / 1/2 தே. கரண்டி
ஏலக்காய் 4
லவங்கப்பூ 1
கிராம்பு 4
பூண்டு 5 பற்கள்
பெ. வெங்காயம் 1
இஞ்சி சிறிய துண்டு
மஞ்சள் தூள் 1 தே. கரண்டி
கொத்தமல்லி தே. அளவு

செய்முறை

அரைக்க கொடுத்த பொருட்களை தயிர் கலந்து கொஞ்சம் நீர் சேர்த்து மைய அரைக்கவும்

ஒரு வாணலியில் கோழி துண்டுகளில் அரைத்த விழுதை சேர்த்து, கொஞ்சம் நீர் ஊற்றி வேக வைக்கவும்

கோழி நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும்போது உப்பு, சக்கரை, எளுமிச்சை சாறு சேர்த்து கிளறி கொத்தமல்லியை தூவி இரக்கவும்




நாட்டுக் கோழி பிரியானி

தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி-1 1/2கி
பாஸ்மதி அரிசி-1 கி
நெய்-150
எண்ணெய்-150
இஞ்சி பூண்டு விழுது- 3 கரண்டி (குழி கரண்டி)
கிராம்பு-5 ஏலம்-7 கருவா-2 நீள துண்டு
பெரிய வெங்காயம் -1/2கி
தக்காளி - 400கி
ப.மிளகாய்-8
தயிர்-400
மிளகாய் தூள்-3 டேபிள் ஸ்பூன் + (காரத்திற்கேற்ப)
மல்லி இலை-1/2 கட்டு
புதினா -1 கட்டு
எலுமிச்சை பழம்-1
உப்பு- தேவைக்கு

செய்முறை

முதலில் கோழியை சுத்தம் செய்து, கொஞ்சம் இஞ்சி புண்டு விழுது, உப்பு, 1 டேபிள் ஸ்புன் மிளகாய் தூள், 100 கிராம் தயிர் சேர்த்து 30 முதல் 1மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றவும். பின்பு நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து ஏலம் , கருவா, கிராம்பு இம்மூன்றையும் கொஞ்சம் இடித்து சேர்க்கவும்.
பின்பு வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாசனை அடங்கியதும் தக்காளி மிளகாய் சேர்க்கவும். பாதி அளவு மல்லி, புதினா சேர்க்கவும்.
பின்பு தயிர் சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் ஊற வைத்த கோழியை சேர்க்கவும். பின்பு மிளகாய் பொடி சேர்க்கவும். உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். கோழியை நன்கு வேக விடவும். 3/4 பதம் வெந்ததும் 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அரிசியை கலைந்து வடிகட்டி சேர்க்கவும்
அரிசி 3/4 பதம் வெந்ததும் மிகக் குறைந்த தணலில் வைத்து மீதியுள்ள மல்லி, புதினா சேர்த்து, எலுமிச்சை சாறு சேர்த்து மூடி போட்டு மேலே வெயிட் ஏற்றி வைக்கவும். 15 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து விடவும் . சூடாக பரிமாறவும். இதனுடன் சிக்கன் 65, தயிர் சம்பல், முட்டைசேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.



கருவேப்பிலை கோழி மசாலா

தேவையான பொருட்கள்

1/2 கிலோ கோழி கறி
1 கப் வெங்காயம், நறுக்கியது
1 கப் கருவேப்பிலை
10 பூண்டு
1/2 தே கரண்டி மஞ்சள் தூள்
50ml தயிர்
1 மேஜை கரண்டி சோம்பு
2 ஏலக்காய்
2 கிராம்பு
1 துண்டு பட்டை
1 பிரிஞ்சி இலை
2 தே கரண்டி மல்லி விதை
1 தே கரண்டி சீரகம்
உப்பு
எண்ணெய்
மல்லி இலை, அலங்கரிக்க

செய்முறை

ஒரு கடாயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், மல்லி விதை, மிளகு, சோம்பு சேர்த்து எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடியாக அரைக்கவும்

பின்பு கருவேப்பிலையை வறுக்கவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்

பின் கோழி, மஞ்சள் தூள், தயிர் சேர்த்து வதக்கவும்

பின் அரைத்த பொடி, உப்பு சேர்த்து கிளறி 20 நிமிடம், குறைந்த தீயில் சமைத்து பரிமாறவும்




பாட்டியின் கோழி குழம்பு

தேவையான பொருட்கள்

கோழி (எலும்புடன்) - 3/4 கிலோ
வெங்காயம், பொடியாக நறுக்கியது - 1
தக்காளி, பொடியாக நறுக்கியது - 1
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்துமல்லி- சிறிதளவு
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 10
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தனியா - 1 மேஜைக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
பட்டை -5
லவங்கம் -5
கசகசா - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 1
சோம்பு - 1/2 தேக்கரண்டி
தேங்காய், பொடியாக நறுக்கியது - 1/4 கப்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், தனியா, மிளகு தனி தனியாக வறுத்து வைக்கவும்.
இதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
பாத்திரத்தில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளிக்கவும்.
இதில் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதங்கியதும், கோழி துண்டுகள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும்.
தண்ணீர் இல்லாமல் மூடி வேக விடவும். (கோழி விடும் நீரில் வெந்தால் குழம்பு ருசியாக இருக்கும்)
இதில் அரைத்த விழுது, தண்ணீர், உப்பு சேர்த்து எண்ணெய் திரண்டு வரும்வரை கொதிக்க விடவும்.
கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.



கோழி கறி முட்டை சுருக்கா

தேவையான பொருட்கள்

அரிசி மாவு 1 கப்
முட்டை 1
வெங்காயம் 1/2
கறிவேப்பிலை 1 கொத்து
பச்சை மிளகாய் 2
தேங்காய் துருவல் 1/2 கப்
சிக்கன் துண்டுகளுடன் குழம்பு 1/2 கப்
உப்பு தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை உப்பு, தேங்காய் துருவல், முட்டை, சிறிதாக பிய்த்து சிக்கன் துண்டுகள் (சிறிது குழம்புடன்) ஆகியவற்றை போட்டு நன்கு கிளறவும்.

பின்னர் சிறிது சிறிதாக வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி கிளறவும்.

அது கையில் இருந்து விழும் அளவே கெட்டியாக இருக்க வேண்டும்.

பின்னர் குழிப்பணியார சட்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை விட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.

தேநீர் கூட சாப்பிட சுவையான சிக்கன் பொரிப்பு தயார்.




கோவை நாட்டு கோழி குழம்பு

தேவையான பொருட்கள்

கோழி தோலுடன் - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 1 படி
தேங்காய் - 1/2 மூடி
மசாலா - 4 மேஜை கரண்டி
மசாலா :
கொத்துமல்லி - 1 படி
சீரகம் - 50 gm
மிளகு - 50 gm
மிளகாய் - 100
கறிவேப்பிலை

செய்முறை

மசாலாவில் குடுத்த பொருட்களை வாசம் வரும் வரை வறுத்து மில்லில் அரைத்து கொள்ளவும்
வடசட்டியில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு பிங்க் நிறம் வரும் வரை வணக்கவும்
குழம்பு பொடியை சேர்த்து வணக்கவும்
பின்பு தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு வெங்காயம் கறிவேப்பில்லை தாளித்து சிக்கன் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி அரைத்த மசாலா தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
சாதத்துடன் பரிமாறவும்..



துவரம் பருப்பு கோழி கஞ்சி

தேவையான பொருட்கள்

ஊறவைத்த தோலுள்ள துவரம்பருப்பு 1 கப்
அவித்து பிய்த்த கோழி துண்டுகள் 1 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு 1 மீடியம் அளவு
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
இஞ்சி பூண்டு விழுது 2 தே க
மஞ்சள் தூள் 2 தே க
ஏலக்காய் 4
எலுமிச்சை சாறு 1 மே க
வடித்த சாதம் 1 கப்
மல்லி தழை 2 மே க
நெய் 1 மே க
குக்கிங் கிரீம் அலங்கரிக்க
உப்பு தேவையான அளவு
பொடிப்பதற்பகு :
பட்டை 1 இன்ச் துண்டு
கிராம்பு 3
மல்லி 2 தே க
சீரகம் 1 1/2 தே க

செய்முறை

தோலுள்ள துவரம்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்

வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசிக்கவும்
வேகவைத்த கோழி யை சிறுதுண்டுகளாக பிய்த்துக்கொள்ளவும். வேகவைத்த தண்ணீரை களைய வேண்டாம். கஞ்சியில் சேர்க்க எடுத்து வைக்கவும்.

கஞ்சி செய்யும் பாத்திரத்தில் நெய் விடவும்
காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது,உப்பு, பொடி செய்த கிராம்பு, பட்டை, சீரகம், மல்லி சேர்த்து வெங்காயம் பொன் நிறமாகும் வரை வதக்கவும்.
பின்னர் மஞ்சள் தூள் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறவும்
அதன் பின் மசித்த உருளைக்கிழங்கு, கோழி வேகவைத்த தண்ணீர் மற்றும் தோலுள்ள துவரம்பருப்பு சேர்த்து 15_20 நிமிடங்கள் வேக வைக்கவும். இடையிடையே கிளறி விடவும்.

பின்னர் ஆற வைத்து மிக்ஸியில் கொர கொரவென அரைத்து மீண்டும் அதே பாத்திரத்தில் மாற்றி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பின்னர் எலுமிச்சை சாறு,வடித்த சாதம் மற்றும் பிய்த்த கோழி சேர்த்து நன்கு கிளறவும். தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
5_10 நிமிடங்கள் வேகவைத்து நன்கு வெந்ததும் மல்லி தழை மற்றும் குக்கிங் கிரீம் சேர்த்து இறக்கவும்.

சுவையான, சத்தான கஞ்சி ரெடி.


கொங்குநாட்டு கோழி குழம்பு

தேவையான பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு:
சின்ன வெங்காயம் - 5-6
வரமிளகாய் - 6-7
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு:
கிராம்பு - 3-4
பட்டை - 1
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்

செய்முறை

சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து, பின் அதில் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் மல்லித் தூளைத் தவிர அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.
இறுதியில் மல்லித் தூளை சேர்த்து பிரட்டி இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்
அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்
அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து, மிதமான தீயில் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
சிக்கன் நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கொங்கு நாட்டு கோழிக் குழம்பு ரெடி




தேன் எலுமிச்சை கோழி வறுவல்

தேவையான பொருட்கள்

கோழியின் தொடை கறி (எலும்பு இல்லாதது) - 5 அல்லது 6 பெரிய துண்டுகள்
பூண்டு பற்கள் - 5(துருவிக்கொள்ளவும்)
தேன் - 1 மேசைக்கரண்டி
சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணெய் - 100 மி.லி
கொத்தமல்லி தழை (சிறிதாக நறுக்கியது)

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் தேன், மிளகாய் தூள், சோயா சாஸ், துருவிய பூண்டு பற்கள், தேவையானன அளவு உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.
2. இந்த மசாலா கலவையில் சுத்தம் செய்த கோழி இறைச்சி துண்டுகளை நன்கு பிரட்டி, அனைத்து இடங்களிலும் படுமாறு கலந்து, ஒரு மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் மூடி போட்டு ஊற வைக்கவும்.
3. ஒரு மணிநேரம் கழித்து , ஊறவைத்த கோழி இறைச்சியை ஒரு நுண்ணலை தாங்கும் தட்டில் எண்ணெய் தடவி வரிசையில் அடுக்கவும். மீதமுள்ள மசாலா கலவையை இறைச்சியில் மீது ஊற்றவும்.
4. இறைச்சியின் மேல் அனைத்து பக்கமும் படுமாறு சிறிது எண்ணெய் தெளிக்கவும்.
5. மேற்கூறிய தட்டினை நுண்ணலை அடுப்பில் (மைக்ரோவேவ அவன்) 220°சி அளவில் 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.
6. இடையிடையே நுண்ணலை அடுப்பில் இருந்து வெளியே எடுத்து இறைச்சியை திருப்பிவிட்டு மீண்டும் பேக் செய்யவும்.
7. இறைச்சி நன்கு வெந்தவுடன் நுண்ணலை அடுப்பை அணைத்து விட்டு, இறைச்சியில் மேல் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
(நுண்ணலை அடுப்பு இல்லாதவர்கள், காஸ் அடுப்பில் ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுக்கவும். பொறிக்கக்கூடாது வறுக்க வேண்டும்.)


தேன் எலுமிச்சை கோழி வறுவல்

தேவையான பொருட்கள்

கோழியின் தொடை கறி (எலும்பு இல்லாதது) - 5 அல்லது 6 பெரிய துண்டுகள்
பூண்டு பற்கள் - 5(துருவிக்கொள்ளவும்)
தேன் - 1 மேசைக்கரண்டி
சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணெய் - 100 மி.லி
கொத்தமல்லி தழை (சிறிதாக நறுக்கியது)

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் தேன், மிளகாய் தூள், சோயா சாஸ், துருவிய பூண்டு பற்கள், தேவையானன அளவு உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.
2. இந்த மசாலா கலவையில் சுத்தம் செய்த கோழி இறைச்சி துண்டுகளை நன்கு பிரட்டி, அனைத்து இடங்களிலும் படுமாறு கலந்து, ஒரு மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் மூடி போட்டு ஊற வைக்கவும்.
3. ஒரு மணிநேரம் கழித்து , ஊறவைத்த கோழி இறைச்சியை ஒரு நுண்ணலை தாங்கும் தட்டில் எண்ணெய் தடவி வரிசையில் அடுக்கவும். மீதமுள்ள மசாலா கலவையை இறைச்சியில் மீது ஊற்றவும்.
4. இறைச்சியின் மேல் அனைத்து பக்கமும் படுமாறு சிறிது எண்ணெய் தெளிக்கவும்.
5. மேற்கூறிய தட்டினை நுண்ணலை அடுப்பில் (மைக்ரோவேவ அவன்) 220°சி அளவில் 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.
6. இடையிடையே நுண்ணலை அடுப்பில் இருந்து வெளியே எடுத்து இறைச்சியை திருப்பிவிட்டு மீண்டும் பேக் செய்யவும்.
7. இறைச்சி நன்கு வெந்தவுடன் நுண்ணலை அடுப்பை அணைத்து விட்டு, இறைச்சியில் மேல் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி அலங்கரித்து பரிமாறவும்.



உணவக முறையில் பொரிச்ச கோழி

தேவையான பொருட்கள்

கோழி இறைச்சி - 1/4 கிலோ
முட்டை -1
சோள மாவு - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கெட்டி தயிர் - 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
கறிவேப்பிலை - 1 கீற்று
மிளகாய் வற்றல் விழுது - 1 + 1/2தேக்கரண்டி
பீட்ரூட் விழுது - கலருக்காக

செய்முறை

இறைச்சியை கழுவி சுத்தம் செய்து, முட்டை, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, தயிர், எலுமிச்சை, பீட்ரூட் விழுது சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

நன்கு ஊறிய இறைச்சியை, எண்ணையை சூடு செய்து மிதமான தீயில் வைத்து பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதில் 50மிலி தண்ணீர் , சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் அதில் பொரித்த இறைச்சியை சேர்த்து நீர் வற்றும் வரை அடிப்பிடிக்காமல் கிளறி இறக்கவும்.
உணவகங்களில் கிடைக்கும் பொரிச்ச இறைச்சி இப்போது வீட்டிலே ரெடி.




மிளகு தூளில் பிரட்டிய கோழி

தேவையான பொருட்கள்

சிக்கன்-1/2கிலோ
பன்னீர் கட்டிகள்
சின்ன வெங்காயம்
இஞ்சி பூண்டு விழுது
பச்சைமிளகாய்-2
பட்டை ஏலக்காய் தூள்
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 மேசைக்கரண்டி
மிளகு
மல்லித்தூள் அரை மேஜைக்கரண்டி
கொத்தமல்லி தழை
புதினா இலை
கிராம்பு
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய்- தேவைக்கேற்ப
வெண்ணெய் -1 ஸ்பூன்
தக்காளி -2
பெரிய வெங்காயம் ஒன்று

செய்முறை

முதலில் கோழியை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
சின்ன வெங்காயம் ,இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், இவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
மிளகையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய், ஒரு ஸ்பூன் வெண்ணெய் இவை இரண்டும் சேர்த்து கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும் ஒரு பச்சை மிளகாய் பட்டை ஏலக்காய் இலவங்கம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பின்பு அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
கொத்தமல்லி, புதினா இலைகளை சேர்த்து நன்றாக வதக்கவும்
பட்டை ஏலக்காய் தூள் ,மற்றும் மஞ்சள் தூள் ,மல்லி தூள், மிளகாய் தூள் ,சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
மசாலா நன்றாக வதங்கியதும் பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
பின்பு சிக்கனை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
சிக்கன் நன்றாக வெந்ததும் பனீர் கட்டிகளை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
ஒரு பெரிய வெங்காயம் நீளமாக நறுக்கி கொள்ளவும்.
அவற்றை தனியாக ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
அவற்றை சிக்கனில் கடைசியாக தூவி விட்டு இறக்கவும்.
மிளகு தூளை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
சூடான சுவையான பன்னீர் பெப்பர் சிக்கன் தயார்.



காய்கறி கோழி பன் போக்கட்ஸ்

தேவையான பொருட்கள்

ஸான்ட்விச் பன் 3
ப.மிளகாய் 1
நறுக்கிய வெங்காயம் 1/4 கப்
நறுக்கிய கேரட் 1/4 கப்
நறுக்கிய பீன்ஸ் 1/4 கப்
நறுக்கிய கேப்சிகம் 1/4 கப்
நறுக்கிய உ.கிழங்கு 1/4 கப்
நறுக்கிய கோழி இறைச்சி 1 துண்டு
கரம் மஸாலா 1 தே.க
மிளகாய் தூள் 1 தே.க
உப்பு தேவைக்கு

செய்முறை

காய் கறிகள் அதைத்தயும் வேகவைக்க வேண்டும்
கடாயில் எண்ணை ஊற்றி சூடானதும் வெங்காயம் ,ப.மிளகாய் ,கேப்சிகம் இட்டு வதக்கவும்

பிறகு வேகவைத்த காய்கறிகளும் இறைச்சியும் போடவும்.

பிறகு மஸாலா தூள் இட்டு நன்றாக வசக்கவும்
ஸான்ட்விச் பன்னை மேலே நேராக கீறவும்

அதனுள் கலவையை வைத்து தோசை கல்லில் இட்டு சூடாக்கி எடுக்கவும்




கோழி மற்றும் நிலக்கடலை சாஸ்

தேவையான பொருட்கள்

300 கிராம் எலும்பில்லாத சிறுத் துண்டுகளாக வெட்டிய கோழி
1 தேக்கரண்டி இனிப்பு சோயா சாஸ்
3 கூர்முனை மூங்கில் குச்சிகள்
2 மேசைக்கரண்டி சமையல் எண்ணெய்
சாஸுக்குதேவையானவை
1/4 கப் நிலக்கடலை
1 தேக்கரண்டி புளி பேஸ்ட்
4 சின்ன வெங்காயம்
1 மேசைக்கரண்டி தேங்காய் க்ரீம்
1/2 இன்ச் அளவு இஞ்சி துண்டு
3 பூண்டு பல்
4 சிவப்பு மிளகாய்
2 மேசைக்கரண்டி பனைவெல்லம்
1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
1/4 உப்பு

செய்முறை

நிலக்கடலையை எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டும். வறுத்தவுடன் ஆறவிட்டுத் தோல் நீக்கவும். பின்னு உரலில் இடிக்கவும். கொரகொரப்பாக இருக்க வேண்டும் .

ஒரு மிக்ஸில் ஜாரில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள், சிகப்பு மிளகாய் ஒன்றாகச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய்யை சூடாக்கி அதில் அரைத்து வைத்துள்ள விழுதை மற்றும் உப்பைச் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வறுக்கவும்.

பின்பு புளி பேஸ்ட், தேங்காய் கிரீம், பொடித்த நிலக்கடலை, பனை வெல்லத்தைச் சேர்த்து 4 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடவும். சற்று கட்டியாக இருக்க வேண்டும். அடுப்பிலிருந்து தனியே எடுத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு கோழி துண்டுகளை 4 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வறுக்கவும். பின்பு சாயா சாஸ் விட்டு நன்றாகக் கிளறி இறக்கி விடவும்.

கோழி துண்டுகளை மூங்கில் குச்சிகளில் சொருகிவிடவும். கோழி குழிகளை 



பண்டை கால கோழி மிளகு வறுவல்

தேவையான பொருட்கள்

நாட்டுகோழி / சாதாரண கோழி -1/2 கிலோ
நல்லெண்ணெய் -2 ஸ்பூன்
பட்டை -1 துண்டு
கிராம்பு -2
சின்ன வெங்காயம் -5
இஞ்சி -சிறு துண்டு
பூண்டு -5 பற்கள்
தேங்காய் -1 கீற்று
கருவேப்பிலை -5 இலை
மல்லித்தளை -1 கொத்து
பச்சை மிளகாய் (சிறியது)-1
குறுமிளகு (முழுதாய்)-1 கைப்பிடி
உப்பு -தேவையான அளவு
மஞ்சள்தூள் -1 சிட்டிகை

செய்முறை

பட்டை,கிராம்பு,சின்ன வெங்காயம்,இஞ்சி,பூண்டு,கருவேப்பிலை,மல்லித்தளை,மிளகு,தேங்காய்,பச்சைமிளகாய் இவை அனைத்தையும் ஒன்றாக மைய அரைக்கவும்

சிக்கன் துண்டுகளை மஞ்சள் தேய்த்து நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய விடவும் (நான் பயன் படுத்துவது இரும்பு வாணலி)
அதில் அரைத்த கலவையை சேர்த்து பச்சை வாசணை போகும் வரை வதக்கவும்
அதில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும்
சிறிது வதக்கிய பிறகு தேவையான அளவு கல் உப்பு /பொடி உப்பு சேர்க்கவும்
நன்கு வதக்க நீர் விடும்
அதை நன்றாக கிளறி மூடி போட்டு மிதமான தீயில் நன்கு வேக விடவும்
தேவை எனில் சிக்கன் வேக சிறிது நீர் சேர்க்கலாம்
நன்கு வெந்த பின்பு நீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்
எண்ணெய் நன்கு பிரிந்து கோழி நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து கருவேப்பிலை தூவி பறிமாறலாம்.



கோழி கலந்த காய்கறி கறி பஃப்

தேவையான பொருட்கள்

மாவு பிசைய :- கோதுமை மாவு 2 கப்
எண்ணெய் 1/4 கப்
உப்பு 1/4 தே. கரண்டி
ஐஸ் நீர் 1/2 கப்
பூரணத்திற்கு :- வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு 1 கப்
காரட் 1
பொடியாக நறுக்கிய கோழி இறைச்சி 1/2 கப்
பச்சை பட்டாணி 1/2 கப்
பார்ஸ்லி இலை கொஞ்சம்
இஞ்சி பூண்டு விழுது 2 மே. கரண்டி
சி. வெங்காயம் 3
உளுந்து 1 தே.கரண்டி
மள்ளி 1 தே. கரண்டி
மிளகாய் தூள் 2 தே. கரண்டி
மஞ்சள் தூள் 1 தே. கரண்டி
காரம் மசாலா 1 தே. கரண்டி
உப்பு சுவைக்கு

செய்முறை

பூரணத்திற்கு எல்லா பொருட்களையும் சின்னதாக வெப்டிக்கொள்ளுங்கள்

கொஞ்சம் எண்ணெயில் மல்லி, உழுந்து போட்டு சிவந்ததும் வெங்காயம் போட்டு கிளறவும்.
கோழி இறைச்சி, இஞ்சி பூண்டு விழுது, காரட், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு கொஞ்சம் நீர் விட்டு வேக வைக்கவும்
பட்டாணி, மசித்த கிழங்கு, பார்ஸ்லி, காரம் மசாலா போட்டு கிளறி ஈர பசை இல்லாமல் வறுத்து ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும்

மாவு, உப்பு ஒரு அகலமான பாத்திரத்தில் போடவும்
எண்ணெயை சூடாக்கி,நல்ல கொதிக்கும் சூட்டில் எண்ணெயை மாவில் ஊற்றி கரண்டியால் கிளறி கொஞ்சம் ஆறியதும் ஐஸ் நீரை தெளித்து பூரி பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்
சிறிய உருண்டைகளாக உருட்டி 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்
மாவு உருண்டைகளை பூரிக்கு தேய்ப்பது போல் லேசாக தேய்த்து ஒரு கப்பால் வட்டமாக வெட்டவும்

வெட்டிய மாவின் நடுவில் பூரணத்தை வைத்து ஓரத்தில் நீர் தடவிக்கொள்ளவும்

அதன்மேல் வட்டமாக வெட்டிய இன்னொறு மாவை வைத்து மூடி முள் கரண்டியால் அழுத்தி கொள்ளவும்

மீதமிருக்கும் மாவை இதே போல செய்து கொள்ளவும்

மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்



பள்ளிப்பாளையம் கோழி பிரட்டல்

தேவையான பொருட்கள்

500கிராம் கோழி
1 கப் சின்ன வெங்காயம்
10 பூண்டு பல்
10 முந்திரி
8 காய்ந்த மிளகாய்
4 இடுக்கு கருவேப்பிலை
1/2 தே கரண்டி மஞ்சள் தூள்
1/2 தே கரண்டி கரம் மசாலா
3 மேஜை கரண்டி துருவிய தேங்காய்
உப்பு
எண்ணெய்

செய்முறை

வெங்காயம், பூண்டு சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, முந்திரி சேர்த்து வறுக்கவும்
பின் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்

பின் கோழி, மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து கிளறி மூடி, 40 நிமிடம் வரை குறைந்த தீயில் வதக்கவும்
தண்ணீர் வற்றி மசாலா சுறுங்கியதும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி பரிமாறவும்



நெய்ச்சோறும் கோழி பொரித்தும்

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி 2 கப்
பட்டை கிராம்பு தலா 2
வெங்காயம் ஒன்று
பச்சை மிளகாய் ஒன்று
நெய் 2 மேசைக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப
கோழி இறைச்சி 1/4கிலோ
மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் இரண்டு தேக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப
இஞ்சி பூண்டு விழுது இரண்டு தேக்கரண்டி
பெருஞ்சீரகத்தூள் 2 தேக்கரண்டி
தயிர் 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்

செய்முறை

கோழி இறைச்சியில் மசாலா தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி கோழி இறைச்சிகளை பொரித்தெடுக்கவும்.
பாத்திரத்தில் நெய் ஊற்றி பட்டை ஏலம் போட்டு தாளிக்கவும்
பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது போட்டு தாளிக்கவும்
தேவைக்கு உப்பு சேர்க்கவும்
நாலு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்
அதில் அரிசியை போட வேண்டும்
நன்றாக வந்ததும் வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்


கோழி இறைச்சி நிரப்பிய ரோஸ் பன்

தேவையான பொருட்கள்

மைதா 2 கப்
ஈஸ்ட் 2 தேக்கரண்டி
சர்க்கரை இரண்டு மேசை கரண்டி
உப்பு அரை தேக்கரண்டி
எண்ணெய் ஒரு தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை
பால் பொடி ஒரு தேக்கரண்டி
வெண்ணீர்
கோழி இறைச்சி வேகவைத்தது உதிர்த்தது 1 கப்
வெங்காயம் பொடியாக நறுக்கியது 1
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது 1
கரம் மசாலா தூள் ஒரு தேக்கரண்டி
வெல்லம் மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
மல்லி இலை
பட்டர் 2 தேக்கரண்டி
வெள்ளை எள் சிறிது
முட்டை அடித்தது ஒன்று

செய்முறை

முதலில் வந்து செய்வதற்கான மாவை தயார் செய்யவும்
மைதா மாவு, சர்க்கரை ,ஈஸ்ட், எண்ணை ,உப்பு, பேக்கிங் தூள் , எல்லாவற்றையும் சிறு சுடு தண்ணீர் விட்டு பிசைந்து வைக்கவும்.
வாணலில் வெண்ணை ஊற்றி வெங்காயம் ,ப.மிளகாய் இ.பூணடு வதக்கி மசாலா தூள்களை போடவும்
வேக வைத்த சிக்கனை போட்டு நன்றாக பிரட்டி எடுக்கவும்
மல்லி இலை போட்டு இறக்கவும்
இரண்டு மணி நேரம் கழித்து பிசைந்த மாவை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
பூரி போல் சிறியதாக பரத்தவும்
இதன் நடுவில் கொஞ்சம் ஸ்டப்பிங் வைக்கவும்
நான்கு பகுதியிலும் கீறல் போடவும்
ரோஜா இதழ்கள் போல அடுக்கி வைக்கவும்
இதன் மேல் முட்டை கலவையால் பிரஷ் செய்யவும்
வெள்ளை எள்ளை மேலே தூவவும்
சூடுபடுத்திய ஓவனில் 12 நிமிடம் சுட்டு எடுக்கவும்


கிராமத்து ஸ்டைல் கோழி காள் வருவல்

தேவையான பொருட்கள்

ஊற வைக்க
கோழி கால் 2
முட்டை 1
இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் விழூது 1 மே.கரண்டி
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் 1
கரம் மசாலா 1/2
எலுமிச்சை சாறு 1
உப்பு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

1. முதலில் ஒரு பாத்திரத்தில் கோழிகாள் சோ்த்து அதில் ஊற வைக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு ஊற வைக்க வேண்டும்.( மினிமம் 1 மணி நேரம்)
2. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி (பொாிப்பதற்கு அள்ள வருவதற்கு)கோழி காளை நன்கு வேக விட்டு பொன்னிறமாக பொாிக்க வேண்டும்.
3. பின்பு அதில் சிறிது கறிவேப்பிலை வெங்காயம் பொாித்து பாிமாரலாம்.


நாட்டுக் கோழி தேங்காய் பால் தொக்கு 

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் 100 கிராம்
நாட்டு கோழி 1/2 கிலோ
பச்சை மிளகாய் 2
கருவப்பிலை 1 கொத்து
மிளகாய் தூள் 1 /2 தே. கரண்டி
மல்லித்தூள் 1/2 தே. கரண்டி
சீரகதூள் 1/4 தே. கரண்டி
மஞ்சள்தூள் 1/4 தே.கரண்டி
உப்பு தேவையான அளவு
மல்லி இலை அலங்கரிக்க..
தேங்கா பால் 1 மற்றும் 2 இம் பால்
இஞ்சி பூண்டு விழுது 1/2 தே.கரண்டி

செய்முறை

நாட்டு கோழியை வேகவிடவும்

எண்ணெய், சின்னவென்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை வதக்கவும்

பொடி வகைகள் சேர்க்க

நன்கு வதக்கிய பின் கோழி சேர்க்க , இதை 2 ம் பாலில் வேகவிட்டூ உப்பு சேர்த்து பின்

முதல் பால் மற்றும் மல்லி இலை தூவி 5 நிமிடம் மூடி இரக்கவும்



சப்பாத்தி with கோழி குழம்பு

தேவையான பொருட்கள்

சிக்கன்
வெங்காயம் ஒன்று
தக்காளி-3
இஞ்சி பூண்டு விழுது
என்னை உப்பு தேவைக்கேற்ப
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் தேவைக்கேற்ப
தனியாத் தூள் 2 டீஸ்பூன்
சோம்புத்தூள் அரைடீஸ்பூன்
மிளகு சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி
தேங்காய்
கறி மசாலா

செய்முறை

குக்கரில் எண்ணையை ஊற்றி வெங்காயம் சேர்க்கவும் சிறிது உப்பு போட்டு நன்கு வதக்கவும்
பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் இஞ்சி பூண்டு அரைக்கும்போது ஏலக்காய் கிராம்பு பட்டை சேர்த்து அரைக்கவும்
தக்காளியை அரைத்துக் கொள்ளவும் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்
பின்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் சோம்புத் தூள் மிளகு சீரகத் தூள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்
விருப்பமுள்ளவர் கறி மசாலா தூள் சேர்க்கலாம்
பின்பு கோழிக்கறியை சேர்த்தவுடன் உப்ப,ு தண்ணீர் ஊற்றவும்
உருளைக்கிழங்கு விருப்பமுள்ளவர் சேர்க்கவும் இங்கு நான் உருளைக்கிழங்கு சேர்த்து உள்ளேன்
கொத்தமல்லி போட்டு பிரஷர் குக்கரை மூடி 2 விசில் விடவும்
குக்கரைத் திறந்து அரைத்த தேங்காயை சேர்க்கவும் விருப்பமுள்ளவர் தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம் இல்லை தேங்காய்ப் பாலும் சேர்த்துக் கொள்ளலாம் ஒரு கொதி விட்டு இறக்கவும்



காயல் ஸ்பெஷல் கோழி அப்பம்&கோழி கறி

தேவையான பொருட்கள்

மைதா-1கப்
மஞ்சள் தூள்-2டீஸ்பூன்
முட்டை-1
தேங்காய் பால்-3கப்
சர்க்கரை-1/2 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
நெய்-சுட்டு எடுப்பதற்கு
கோழி கறி தேவையான பொருகள்
கோழி-1/2கிலோ
வெங்காயம்-1
தக்காளி-1
பட்டை-2
ஏலம்-3
லவங்கம்-3
பச்சை மிளகாய்-2
இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன்
தயிர்-2டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
தேங்காய் பால்-2கப்
சிவப்பு மிளகாய் தூள்-2டீஸ்பூன்
காயல் மிளகாய் தூள்-2டீஸ்பூன்
நெய்-50மில்லி

செய்முறை

முதலில் கோழியை தயிர்,உப்பு,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து விரவி கொள்ளவும்
பின் ஒரு குக்கரில் நெய் ஊற்றி அதில் பட்டை,ஏலம்,லவங்கம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின்பு அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சிவப்பு மிளகாய் தூள், கோழி சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பின் அதில் தேங்காய் பால் சேர்த்து 2 whistle போடவும்.பிறகு தேவைப்பட்டால் முருங்கைகாய் போட்டு 2 whistle போடலாம்.

கோழி ஆபத்திற்கு மைதா,தேங்காய் பால்,முட்டை, உப்பு,சர்க்கரை, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.தோசை மாவு பதத்திற்கு தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

பின் ஒரு nonstick தவாவில் நெய் ஊற்றி அதில் ஒரு கரண்டி மாவு ஊற்றி சுத்தி விட வேண்டும்.

இதை போல எல்லாவற்றையும் சுட்டு எடுக்கவும். அதை கோழி கறியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.



கோவை அங்கண்ணன் கடை பாணி கோழி பிரியாணி

தேவையான பொருட்கள்

சீரக சம்ப அரிசி 1/2 கிலோ
கோழி 1/2 கிலோ
சின்ன வெங்காயம் 100 கிராம்
பெரிய வெங்காயம் 100 கிராம்
பச்சை மிளகாய் 10
இஞ்சி , பூண்டு தலா 50 கிராம்
புதினா சிறிது
தக்காளி ( விரும்பினால்)
மல்லி சிறிது
பிரியாணி சாமான்
எண்ணெய் 100 மில்லி
நெய் சிறிதளவு
தயிர் 2 கோப்பை
உப்பு
மஞ்சள் பொடி

செய்முறை

சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி சிறிது கரம் மசாலா, எழுமிச்சை சாறு அனைத்தையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த விழுதில் உப்பு மஞ்சள் கலந்து கோழியில் சேர்த்து ஊறவைத்துவிடவும்.

எண்ணெய் + பிரியாணி சாமான் சேர்க்க...

வெங்காயம் + பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்

பின்னர் தக்காளி ,புதினா ,மல்லி இலை சேர்க்கவும்...

வதங்கியதும் ஊறவைத்த கோழி கறி சேர்த்து வதக்கவும்..உடனே தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.....

கறி நன்கு வெந்தும் , சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்கு கொதித்த பின்னர் அரிசி சேர்த்து கலந்து வைக்கவும்....

தண்ணீர்​ வற்றி வரும் போது நெய் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் சிறிய தீயில் விடவும்....

பின்னர் இறக்கி 10 நிமிடங்கள் கழித்து திறந்தால் பிரியாணி விருந்துக்கு தயார்.....

நான் சிக்கன் 65 உடன் பரிமாறினேன்....... நீங்கள் விரும்பினால் கிரேவிகளுடனும் பரிமாறலாம்....




ரெஸ்டாரண்ட் முறையில் கோழி தம் பிரியாணி 

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி 2 கப்
சிக்கன் 1/2கி
தயிர் 1/4 கப்
மிளகாய் தூள் 2 + 2 மேசைக்கரண்டி
மல்லித்தூள் 2 + 1 மேசைக்கரண்டி
கரம் மசாலா 1 + 1 மேசைக்கரண்டி
மிளகு தூள் 1/2 தேக்கரண்டி
சீரக தூள் 1/2 தேக்கரண்டி
சோம்பு தூள் 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 3 அல்லது 4
இஞ்சி பூண்டு விழுது 2 + 2 மேசைக்கரண்டி
பட்டை 2 + 2 இன்ச் துண்டு
கிராம்பு 4 + 4
ஏலக்காய் 2
பிரிஞ்சி இலை 1 + 1
அன்னாசி பூ 1 + 1
ஜாதி பத்திரி 1/2 + 1/2
சீரகம் 1/2 தேக்கரண்டி
சோம்பு 1/2 தேக்கரண்டி
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் 3
நீளவாக்கில் நறுக்கிய தக்காளி 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி 1 + 1/2 கப்
பொடியாக நறுக்கிய புதினா 1 + 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1/4 கப்
குங்குமப்பூ கலந்த பால் 1/2 கப்
உப்பு தேவையான அளவு
தண்ணீர் சமைக்க தேவையான அளவு

செய்முறை

முதலில் சிக்கனை கழுவி சுத்தம் செய்து நீரை வடித்துக்கொள்ளுங்கள்.
சிக்கெனோடு தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், சீரக தூள், சோம்பு தூள், கரம் மசாலா, சிறிது கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்றாக பிசைந்து ஊற விடவும்.
அரிசியை கழுவி, நீர் விட்டு ஊற வையுங்கள்.
சிக்கன், அரிசி ஊறும் நேரத்தில், வெங்காயம், தக்காளி நறுக்கி கொள்ளுங்கள்.
தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
இரண்டு பர்னரில், ஒரு பக்கம் குக்கர், இன்னொரு பக்கம் ஒரு பாத்திரத்தில் நீர் முக்கால் பாகம் நிரப்பி கொதிகவிடுங்கள்.
அரிசி சமைக்கும் அளவு பாத்திரம், நீர் அளவு சற்று கூடுதலாக இருக்க வேண்டும்.
இப்போது, நீரில் பட்டை, லவங்கம், கிராம்பு, ஜாதி பத்திரி,அன்னாசி பூ, ஏலக்காய், சீரகம், சோம்பு, பிரிஞ்சி இலை, மிளகாய் தூள், மல்லி தூள், கொத்துமல்லி, புதினா, உப்பு , பச்சை மிளகாயை உடைத்து போடுங்கள். நீர் நன்றாக கொதிகட்டும்.
இப்போது குக்கரில், எண்ணெய் ஊற்றி, உப்பு, சீரகம், சோம்பு தவிர மேலே நீரில் போட்ட அனைத்திலும் மீதம் உள்ளதை சேர்த்து நன்றாக பொரிய விடுங்கள்.
பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்குங்கள்.
வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அடிப்பிடிக்காமல், பச்சை வாசனை போக வதக்குங்கள்.
அரிசிக்காக கொதிக்கும் நீரிலும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கொள்ளுங்கள்.
இப்போது குக்கரில் நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்குங்கள்.
தக்காளி குழைந்ததும், ஊறவைத்த சிக்கனை சேர்த்து, வெங்காயம் தக்காளி மசாலா சேர கிளறி மிதமான தீயில் மூடி வையுங்கள்.
சிக்கன் நீர் விடும் வரை அவ்வப்போது கிளறி விடுங்கள்.
இப்போது அடுத்த பர்னரில் நீர் நன்றாக கொதித்து, நாம் போட்ட பொருட்களின் சாறு நீரில் இறங்கியிருக்கும்.
இப்போது நீரில் போட்டு அனைத்தையும் கவனமாக ஒரு சாரணி அல்லது ஓட்டை உள்ள கரண்டி, அல்லது பெரிய வடிகட்டியின் உதவியோடு எடுத்து விடுங்கள்.
கவனம் தேவை ஏனெனில் நீர் கொதித்து கொண்டிருக்கும், சிம்மரில் வைத்துவிட்டு எடுங்கள்.
மீண்டும் தீயை உயர்த்தி, ஊறவைத்த அரிசியை போட்டு கொதிக்க விடுங்கள். மூடி போட வேண்டாம்.
சிக்கன் நீர் விட்டதும் 1 அல்லது 2 விசில் வரை வேகவைத்து, ஆவி இறங்கியதும், குக்கரை திறந்து மீண்டும் தீயை குறைத்து ஒரு டம்ப்ளேர் நீர் சேர்த்து கொதிக்கவிடுங்கள்.
அரிசி அறைவேக்காடு வெந்ததும், எலுமிச்சை சாறு ஊற்றி கிளறி விடுங்கள்.
நீர் நிறைய இருக்க வேண்டும், 1 கப் அரிசிக்கு குறைந்தது 4 அல்லது 5 கப் நீர் விடுங்கள்.
அரிசி முக்கால் பதம் வெந்ததும், சிக்கன் கலவை உள்ள குக்கரில் லேயர் லேயேறாக வடிக்கட்டி கரண்டி அல்லது சாரணியில் நீரை வடித்து அரிசியை அழுத்தம் தராமல் பரப்பி விடுங்கள்.
மேலே நறுக்கிய புதினா கொத்துமல்லி தூவுங்கள். குங்குமப்பூ பால் அல்லது கலர் நீரை வட்டமாக ஊற்றிவிடுங்கள்.
1/2 குழிகரண்டி எண்ணெய் அல்லது நெய் பரவலாக ஊற்றிவிடுங்கள்.
விசிலுடன் குக்கரை மூடி, ஒரு தவா மீது வைத்து, முழு தீயில் 10நிமிடமும், குறைவான தீயில் 15 நிமிடமும் வைத்து சமைத்து இறக்குங்கள்.
இதனை 10 அல்லது 15 நிமிடம் செட் ஆக விட்டு, மூடியை திறந்து, சாதம் உடையாமல் கிளறி பரிமாறுங்கள்.
பெட்டர் பட்டர் தமிழ் குழுமத்தின் ஆண்டு விழா கொண்டாட்டத்தை, சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் தம் பிரியாணி, பச்சடி, பொரித்த கோழியுடன் கலக்கலாக கொண்டாடுங்கள்.
இதே முறையில் மட்டன் பிரியாணி செய்யலாம்.


வறுத்த மஞ்சள் கோழி

தேவையான பொருட்கள்

எழும்பு, தோல் நீக்கிய கோழி இறைச்சி 200 கிராம்
பீன்ஸ் 5
காரட் 1/2
காலிப்ளாவர் சிறிய துண்டு
மிளகாய் 1 / தேவையான அளவு
பூண்டு 1 பல்
பெ. வெங்காயம் 1
மஞ்சள் தூள் 1 தே. கரண்டி
கறி மசாலை 1 தே. கரண்டி
மிளகுத் தூள் 1/2 தே. கரண்டி
சோள மாவு 1 தே. கரண்டி
தாய் மீன் சாஸ் 1 1/2 தே. கரண்டி/ உப்பு சுவைக்கு

செய்முறை

கோழி இறைச்சியை சிறிய துண்டுகளாக வெட்டி அனைத்து மசாலைகளையும், உப்பு, சோள மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்

காய்கறிகள், வெங்காயம், பூண்டு, மிளகாய் உங்கள் விருப்பப்படி வெட்டிக்கொள்ளவும்

கடாயில் 1/2 கப் எண்ணெய் விட்டு கோழி இறைச்சியை பொன்னிறமாக வரும் வறை வறுக்கவும்

காரட், காலிப்ளாவர், பூண்டு சேர்த்து வாடும்வரை கிளறவும்

பீன்ஸ், வெங்காயம், மிளகாய் சேர்த்து கிளறவும்

வெந்தவுடன் எண்ணெயை வடிகட்டிக்கொள்ளவும்.




குஸ்கா நெய் சாதம் மற்றும் (வதக்கி அரைத்த)கோழி சாப்ஸ்

தேவையான பொருட்கள்

குஸ்கா சாதம்::
அரிசி-2கப்
பச்சை மிளகாய் -1
பட்டை -2
ஏலம்-2
புதினா
கொத்தமல்லிதழை
தண்ணீர் -4கப்
பட்டைஏலம் பொடி-1/3டீஸபூன்
உப்பு-தேவைக்கேற்ப
நெய்-3ஸ்பூன்
எண்ணெய்-2ஸபூன்
தக்காளி-1
சிக்கன் சாப்ஸ்:::
சிக்கன்-1கிலோ
இஞ்சி-25கிராம்
பூண்டு
தக்காளி -1
பட்டைஏலம் பொடி
மஞ்சள்தூள்
பச்சை மிளகாய் -1
கொத்தமல்லி
புதினா
உப்பு-தேவைக்கேற்ப
எண்ணெய்
தண்ணீர்
வதக்கி அரைக்க::
பட்டை-2
ஏலம்-2
வரமிளகாய்-4
சீரகம்
மிளகு
தக்காளி-2
வெங்காயம்-3
மல்லித்தூள்-1ஸ்பூன்
மிளகாய் தூள் -1ஸ்பூன்
உப்பு

செய்முறை

குஸ்கா சாதம்::::
அரிசியை சுத்தம் செய்து ஊற வைத்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரம் வைத்து நெய் மற்றும் ஏற்றி காய்ந்ததும் பட்டை,ஏலம் ,சீரகம் ,பச்சைமிளகாய்,சேர்த்து தாலிக்கவும்.
பின் கொத்தமல்லிஇலை,புதினா,அரைத்த வெங்காயம்,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
உப்பு மற்றும் சிறிது பட்டைஏலம் பொடி சேர்த்து வதக்கவும்.
நன்றாக பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு 4கப் தண்ணீர் அளந்து ஊற்றவும்.
தண்ணீர் கொதித்ததும் அரிசியை போட்டு கிண்டி விடவும்.
உப்பு பார்த்து சேர்த்து கொள்ளவும்.
நன்றாக வெந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து தம்மில் விடவும்.
பிறகு சாப்பாட்டின் மேல் தண்ணீர் பாத்திரம் வைத்து தம்மில் விட்டு இறக்கவும்.
சூடான குஸ்கா சாதம் தயார்.
சிக்கன் சாப்ஸ்::::
சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம்,மிளகு,வரமிளகாய் ,பட்டை ,ஏலம் ,நறுக்கிய வெங்காயம் ,தக்காளி, மல்லித்தூள்,மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

உப்பு சேர்த்து கொள்ளவும்.
வதக்கியதை ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

இஞ்சிபூண்டினை அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சைமிளகாய் கொத்தமல்லி,புதினா,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

உப்பு சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள் ,பட்டைஏலம் பொடி சேர்க்கவும்.
நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலாவை சேர்க்கவும்.

நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு கோழியை சேர்த்து கிளறி விட்டு வேகவைக்கவும்.

நன்றாக கொதித்து வெந்ததும் இறக்கவும்.

கடைசியாக மிளகுதூள் ,கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

சுவையான சிக்கன் சாப்ஸ் மற்றும் குஸ்கா சாதம் தயார்.


சிக்கன் மீட்பால் க்ரேவி

தேவையான பொருட்கள்

மீட் பால் செய்ய :
எலும்பில்லாத கோழி 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய மல்லித்தழை
எண்ணெய் - பொறிக்க
கிரேவி செய்ய :
வெங்காயம் - 2
தக்காளி - 2
எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் 3, பட்டை 1, கிராம்பு 5, பிரியாணி இலை 2
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் -2
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 2
மல்லி தூள் - 2
கரம் மசாலா -1 தேக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தண்ணீர்
பொடியாக நறுக்கிய மல்லி தழை

செய்முறை

முதலில் கோழியை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும் .அத்துடன் இஞ்சி பூண்டு விழுது , மிளகாய் தூள் ,மிளகு தூள், உப்பு ,மல்லி தழை சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டைகளாக செய்து எண்ணெய் இல் பொரித்து எடுக்க வேண்டும் .
அடுத்து, வெங்காயம் தக்காளி இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும் .
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். இதில் அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி விழுதை சேர்த்து 15 நிமிடம் வேக விடவும் (பச்சை வாசம் போய் எண்ணெய் கக்க ஆரம்பிக்கும்)
இப்பொழுது மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, தயிர் சேர்த்து நன்றாக கிளறி தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
இந்த கிரேவியில் பொன்னிறமாக பொரித்து வைத்துள்ள சிக்கன் உருண்டைகளை சேர்த்து 5-6 நிமிடம் வேக விடவும்.
இறுதியாக மல்லி தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.










மெட்ராஸ் ஸ்டலை கருவேப்பிலை மிளகு கோழி

தேவையான பொருட்கள்

கோழி 250கிராம்
மிளகு 1 மேஜை கரண்டி
கொத்த மல்லி 1 மேஜை கரண்டி
நீல வத்தல் 2
பெரு ஜிரகம் 2மேஜை கரண்டி
கருவேப்பிலை கொஞ்சம்
உப்பு தேவைக்கு ஏற்ப
நல்எண்ணேய் 2மேஜை கரண்ட அல்லது வெண்ணெய்
தக்காளி 1
வெங்காயம் 1
இஞ்சி புண்டு விழுது 1 டிஸ்புண்
மஞ்சள் 1 மேஜை கரண்டி

செய்முறை

கோழியை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் வத்தல், கொத்தமல்லி, மிளகு, பெருஞ்சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்
நன்கு வதங்கிய பின் ஆற வைத்து அவற்றை பொடியாக அரைத்துக் கொள்ளவும்
அரைத்து வைத்த பொடியுடன் உப்பு மஞ்சள் சேர்த்து வைத்துக் கொள்ளவும்
சுத்தம் செய்த கோழியுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரைத்த பொடியையும் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்
பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு காய விடவும்
பிறகு வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்
மசாலா கோழியுடன் கருவேப்பிலை சேர்த்து குக்கரில் இட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்

சிறிதளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடவும்
மிதமான சூட்டில் 5 விசில் வரை வைக்கவும்
மெட்ராஸ் style கருவேப்பிலை மிளகு சிக்கன் தயார்









Comments