கார சட்னி
தேவையான பொருட்கள்
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
நறுக்கிய தக்காளி -3
காய்ந்த மிளகாய் -5 அல்லது 6
புளி -அரை நெல்லிக்காயளவு
உளுத்தம் பருப்பு- 1டீஸ்பூன்
கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன
உப்பு -தேவைக்கு
தாளிக்க- எண்ணெய்- 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
கடுகு+ உளுத்தம் பருப்பு -தலா 1/2 டீஸ்பூன
கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
வெறும் கடாயில் உளுத்தம்பருப்பு+கடலைப்பருப்பு இவற்றை தனித்தனியாக வறுக்கவும்.
பின் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்கயம்+தக்காளி+காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
மிக்ஸியில் முதலில் பருப்புகளை பொடிக்கவும்,பின் வதக்கிய வெங்காய கலவை மற்றும் புளி+உப்பு சேர்த்து நீர் விடாமல் அரைக்கவும்.
பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
...................................................................................................................................................................
எள் சட்னி
தேவையான பொருட்கள்
வெள்ளை எள் 50 கிராம் பாக்கெட் ஒன்று
L சின்ன உள்ளி உரித்தது 10
வரமிளகாய் ஒன்று
உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க ஆயில் ஒரு அரை ஸ்பூன் கடுகு உளுந்து கருவேப்பிலை
செய்முறை
எள்ளை லேசாக வறுக்கவும்
உப்பு எள் மிளகாய் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
கடைசியில் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து அரைத்து கிண்ணத்தில் வழித்து எடுக்கவும்
கடுகு உளுந்து தாளிக்கவும்
எள் சட்னி ரெடி
...................................................................................................................................................................
புளி சட்னி
தேவையான பொருட்கள்
புளி பெரிய நெல்லிக்காய் அளவு
வர மிளகாய் 4
பூண்டு 6 பல்
கொத்தமல்லி தழை கைப்பிடி அளவு
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தாளிக்க
கடுகு உளுந்து சிறிது
செய்முறை
புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்
பிறகு அதனுடன் மிளகாய் மல்லி இழை பூண்டு உப்பு சேர்த்து அரைக்கவும்
கடுகு உளுந்து தாளித்து கொட்டி பரிமாறவும்.
...................................................................................................................................................................
ரெட் சட்னி
தேவையான பொருட்கள்
தக்காளி 3
சீரகம் 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
பெருங்காயதூள் 1 பின்ச்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் 2 ஸ்பூன்
இஞ்சி 1 சிறிய துண்டு
வரமிளகாய் 3
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் சீரகம் மஞ்சள்தூள் இஞ்சி சேர்த்து வதக்கவும்
பிறகு தக்காளி சேர்த்து வதக்கி கொத்தமல்லி தூள் உப்பு பெருங்காயதூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் மூடி வைக்கவும்
பிறகு அதனை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்
...................................................................................................................................................................
கடலை சட்னி
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை 2 மேஜை கரண்டி
தேங்காய் துருவல் ஒரு கப்
மிளகாய்வற்றல் 4
பூண்டு 4 பல்
புளி சிறிதளவு
உப்பு தேவையான அளவு
கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை எண்ணெய் தாளிக்க
செய்முறை
மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை தேங்காய்த் துருவல் புளி
பூண்டு உப்பு மிளகாய் வற்றல்
மட்டும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்
...................................................................................................................................................................
பூண்டு பொடி
தேவையான பொருட்கள்
தோல் உரித்த பூண்டு 12
கொப்பரை தேங்காய் 10 சிறிய துண்டுகள் /துருவிய தேங்காய் 1/2 கப்
வெள்ளை எள்ளு 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 1 தேக்கரண்டி
செய்முறை
ஒரு கடாயில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் தோல் உரித்த பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்
அது நன்கு நிறம் மாறிய உடன் ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்
அதே கடாயில் மீதம் உள்ள எண்ணெய் ஊற்றி கொப்பரை தேங்காய் அல்லது துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்
அதையும் அந்த தட்டில் கொட்டி கொள்ளவும்
அதே கடாயில் வெள்ளை எள்ளு சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்
மூன்று பொருள்களையும் நன்கு ஆற விடவும்
ஒரு ஈரம் இல்லாத மிக்ஸி ஜாரில் அந்த பொருள்களை சேர்த்து நன்கு கொர கொர வென்று அரைக்கவும்
அரைத்த பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்
அதனுடன் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
இப்பொழுது சுவையான பூண்டு பொடி தயார்
இது இட்லி, தோசை, உத்தப்பம் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்
...................................................................................................................................................................
கம்பு சட்னி
தேவையான பொருட்கள்
கம்பு 100 கி
சின்ன வெங்காயம் 10
கருவேப்பிலை சிறிது
எண்ணை சிறிது
மல்லி இலை சிறிதளவு
உப்பு
சீரகம் 1/4 ஸ்பூன்
கடலைபருப்பு 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன்
எண்ணெய் 2 ஸ்பூன்
புளி சிறிது
வரமிளகாய் 3
செய்முறை
எண்ணெய் விட்டு கம்பை வறுத்து தனியே வைக்கவும்..
அதே எண்ணெயில் புளி, வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்... பின்னர் காம்புடன் சேர்க்க....
உளுந்து ,கடலைப்பருப்பு ,சீரகம் வறுத்து காம்புடன் வைக்கவும்.
சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து சேர்க்கவும்...
இறுதியில் கருவேப்பிலை, மல்லி இலை சேர்த்து நன்கு வறுத்து ஆறவிடவும்...
ஆறியதும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்...
தாளிப்பு தேவை இல்லை.....
...................................................................................................................................................................
எள்ளு சட்னி
தேவையான பொருட்கள்
எள்ளு 50 g
நிலக்கடலை 1 பிடி
எண்ணெய் 50 ml
பூண்டு 5 பல்
வத்தல் 10
கருவேப்பிலை
தேங்காய் 10பல்
செய்முறை
வாணலியில் எண்ணெய் இட்டு எள்ளு, நிலக்கடலை, வத்தல், தேங்காய், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து 5நிமிடம் வரை வதக்கவும்
பின் அதை உப்பு சேர்த்து அரைக்கவும்
கடுகு தாளித்து சேர்க்கவும்
எள்ளு சட்னி தயார்
...................................................................................................................................................................
இஞ்சி சட்னி
தேவையான பொருட்கள்
இஞ்சி - 1 பெரிய துண்டு
புளி கரைசல் - 1 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
வெல்லம்-1 சிறிய துண்டு
எண்ணெய்-1/2 தேக்கரண்டி
வறுக்க
உளுத்தம் பருப்பு-1 தேக்கரண்டி
மிளகாய் வத்தல் - 1
எண்ணெய்-1டிராப்ஸ்
தாளிக்க
எண்ணெய்-1/2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
செய்முறை
இஞ்சியை தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும்
வறுக்க கொடுத்தவற்றை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்
இஞ்சியை எண்ணெய் விட்டு வதக்கிக்கொள்ளவும்
எல்லாம் சேர்த்து உப்பு புளி வெல்லம் போட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும்
...................................................................................................................................................................
மல்லி சட்னி
தேவையான பொருட்கள்
மல்லி தழை 1 கப்
புளி
காய்ந்த மிளகாய் 3
செய்முறை
இலையை கழுவி வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்
அனைத்தயும் வதக்கவும். ஆறியதும் அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து சட்னி சேர்த்து வதக்கவும்
...................................................................................................................................................................
கேரட் சட்னி
தேவையான பொருட்கள்
கேரட் - 4
மிளகாய் வத்தல் - 4
சீரகம்-1/4தேக்கரண்டி
உப்பு
எண்ணெய்
செய்முறை
வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கேரட்டை வதக்கி தணியாக வைத்துக் கொள்ளவும்
வானலியில் சிறிது எண்ணெய் சீரகம் மிளகாய் வத்தல் வருத்து அதனுடன் கேரட் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
...................................................................................................................................................................
கதம்ப சட்னி
தேவையான பொருட்கள்
மல்லி இலை 1 கைப்பிடி
புதினா இலை 1 கைப்பிடி
தக்காளி 2
இஞ்சி 1 துண்டு
மிளகாய் 6
பூண்டு 6 பல்
புளி 1 சிறிதளவு
பொடிவெங்காயம் 10
தேங்காய்
உப்பு
நல்லெண்ணை 2 ஸ்பூன்
கடுகு, குத்துபருப்பு 2 ஸ்பூன்
வத்தல் தாளிக்க 2
கருவப்பிலை
செய்முறை
எல்லா பொருட்களையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய், கடுகு, குத்துபருப்பு, கருவப்பிலை வத்தல்போட்டு வெடித்ததும் அதில் அரைத்த விழுதை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
கதம்ப சட்னி ரெடி.
...................................................................................................................................................................
தயிர் சட்னி
தேவையான பொருட்கள்
தயிர் 2 கப்
உப்பு தேவையான அளவு
நறுக்கிய சின்ன வெங்காயம் 2 தேக்கரண்டி
தேங்காய் துருக 1 கப்
பச்சை மிளகாய் 3
செய்முறை
தேங்காய் பச்சை மிளகாய் அரைத்து கொள்ளவும்
பாத்திரத்தில் தயிர் எடுத்து கொள்ள வேண்டும்
இதனுடன் உப்பு அரைத்த விழுது சேர்த்து நன்கு கலக்கவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
இதை தயிருடன் கலந்து பறிமாரவும்
...................................................................................................................................................................
பச்சை சட்னி
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி 2 கட்டூ
பெரிய வெங்காயம் 2
பச்சை மிளகாய் 4
இஞ்சி 1 துண்டு
பொட்டு கடலை 4 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
வெங்காயம் தோல் உரித்து நறுக்கவும்
கொத்தமல்லி தழை சுத்தம் செய்து கொள்ளவும்
பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாயை உப்பு சேர்த்து அரைக்கவும்
வெங்காயம், கொத்தமல்லி தழை, பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து எடுக்கவும்
சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்
...................................................................................................................................................................
மிளகு சட்னி
தேவையான பொருட்கள்
மிளகு ஒரு ஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப
தேங்காய்த்துருவல் சிறிய கப் ஒன்னு
வரமிளகாய் ஒன்று உளுந்தம் பருப்பு அரை ஸ்பூன்
ஆயில் அரை ஸ்பூன் உளுந்தம் பருப்பு
புளி சிறிய நெல்லிக்காய் அளவு
செய்முறை
வாணலியில் ஆயில் ஊற்றி மிளகை போட்டு பொரிக்கவும்
தேங்காய் துருவல் வரமிளகாய் உப்பு சேர்க்கவும்
புளியை சேர்த்து நன்றாக வதக்கவும்
மிக்ஸியில் வழுவழுப்பாக அரைக்கவும்
மிளகு சட்னி ரெடி
...................................................................................................................................................................
புதினா சட்னி
தேவையான பொருட்கள்
புதினா - 1 கட்
வெங்காயம் - 1
மிளகாய் வத்தல் - 5
புளி
உளுத்தம் பருப்பு-1தேக்கரண்டி
பூண்டு-4பல்
உப்பு
எண்ணெய்
செய்முறை
வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கவும்
பிறகு புதினா, புளி, மிளகாய் வத்தல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
பிறகு அதை மிக்ஸியில் உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும். புதினா சட்னி தயார்
...................................................................................................................................................................
பாம்பே சட்னி
தேவையான பொருட்கள்
வெங்காயம் 1
தக்காளி 2
கருவேப்பிலை
உப்பு
மிளகாய் வற்றல் 3
செய்முறை
வெங்காயம் மற்றும் தக்காளி வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
இதனுடன் தக்காளி, கருவேப்பிலை, வற்றல் சேர்க்கவும்
ஆறியதும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து இறக்கவும்
...................................................................................................................................................................
கொள்ளு சட்னி
தேவையான பொருட்கள்
கொள்ளு 5ஸ்பூன்
சீரகம் 1/2ஸ்பூன்
பூண்டு 5பல்
புளி 1துண்டு
வத்தல் 7
உப்பு
தேங்காய் பல் 10
எண்ணெய் 3ஸ்பூன்
கடுகு 1ஸ்பூன்
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி கொள்ளு, சீரகம், வத்தல் சேர்த்து வறுக்கவும்.
தேங்காய், உப்பு சேர்த்து வறுக்கவும்.
அனைத்தையும் மிக்ஸியில் இட்டு அரைக்கவும்.
கடுகு தாளித்து சேர்க்கவும்.
கொள்ளு சட்னி தயார்.
...................................................................................................................................................................
ஆனியன் சட்னி
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் 4 மெலிதாக அரிநதது
வரமிளகாய் 4
முந்திரி 5 அல்லது 6
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தாளிக்க
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் மெலிதாக அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்
பிறகு முந்திரி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்
ஆறிய பிறகு அரைத்து கடுகு தாளித்து கொட்டி பரிமாறவும்
வெங்காயம் அதிக பொன்னிறமாக வதக்கினால் இனிப்பு தன்மையாகும் அதனால் பாதியளவு வதக்கவும்
...................................................................................................................................................................
பருப்பு சட்னி
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 100 கிராம்
சிவப்பு மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 1
துருவிய தேங்காய் - 1 தேக்கரண்டி
பூண்டு - 2 அல்லது 3 பற்கள்
செய்முறை
வறுத்த உலர் பருப்பு மிதமானச் சூட்டில் பொன்னிறமாகச் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
வறுத்த மிளகாயோடு பூண்டையும் தேங்காயையும் சேர்க்கவும்.
அனைத்துச் சேர்வைப்பொருள்களையும் ஆறவிட்டு, ஒரு பிளண்டரில் அடர்த்தியான பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
சாதத்தோடு சட்னியை ருசிக்கவும்
...................................................................................................................................................................
...................................................................................................................................................................
Comments
Post a Comment