நண்டு ( Crab)

நண்டு கறி

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்து உடைத்த நண்டு - 1 கிலோ
எண்ணெய் -5 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு.
இனி வறுத்து,வதக்கி அரைக்க வேண்டியது:-
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு -1 தேக்கரண்டி
சோம்பு -1 தேக்கரண்டி
முழு மல்லி-2 தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு- 6 பற்கள்
பச்சை மிளகாய் -4 அல்லது 5
நறுக்கிய சின்ன வெங்காயம் -200 கிராம்
தக்காளி - 250 கிராம்
நறுக்கிய மல்லி இலை - கொஞ்சம்.

செய்முறை

முதலில் முழு மல்லி,சீரகம்,மிளகு,சோம்பு சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.அத்துடன் இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம்,தக்காளியையும் சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு மையாக அரைக்கவும்.சுவைத்தால் அருமையான சட்னி போல் இருக்கும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.அரைத்த விழுதைச் சேர்க்கவும்.
சுத்தம் செய்து அலசிய நண்டு துண்டுகளைச் சேர்க்கவும்.
பிரட்டி விட்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
10 நிமிடத்தில் தயாராகிவிடும்.நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
இதற்கு தேங்காய் சேர்க்கத் தேவையில்லை.
சுவையான நண்டு கறி தயார்.கல் தோசை,ஆப்பம்,சப்பாத்தி சாதத்துடன் பரிமாறலாம்.



நண்டு மசாலா

தேவையான பொருட்கள்

நண்டு -1 கிலோ(உடைத்து சுத்தம் செய்தது)
எண்ணெய் ,-100 மில்லி
தாளிக்க முழு பெருஞ்சீரகம்/சோம்பு - 1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 200 கிராம்
நறுக்கிய தக்காளி -200 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
மல்லி கறிவேப்பிலை -சிறிது.
பச்சை மிளகாய் -2
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்னரை டீஸ்பூன்
மல்லித்தூள் -3 டீஸ்பூன்
மிளகுத்தூள் -1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
அரைக்க வேண்டியது:-
தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு -6-8
சீரகம் 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் -1 டீஸ்பூன்

செய்முறை

நண்டை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

தேங்காய் முந்திரி சீரகம் சோம்பு அரைத்துக் கொள்ளவும்.

நறுக்க வேண்டியவைகளை நறுக்கி தயாராக வைக்கவும்.

நண்டை ஒரு கப் தண்ணீர் மஞ்சள் தூள் சேர்த்து தனியாக ஒரு பாத்திரத்தில் வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.வெங்காயம் சேர்த்து வதக்கவும் இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
தக்காளி,பச்சை மிளகாய் ,சிறிது உப்பு சேர்த்து வதங்க விடவும். மிளகாய்த்தூள்,மல்லித்தூள் சேர்க்கவும்.
வெந்த நண்டைச் சேர்க்கவும்.

நன்கு பிரட்டி ஒன்று சேர்ந்து கொதிக்கட்டும்.நண்டு வெந்த தண்ணீரோடு சேர்க்கவும்.

அரைத்த மசால் சேர்த்து நன்கு மூடி போட்டு 5 நிமிடம் கொதிக்கட்டும்.

நன்கு கொதித்து தேங்காய் ,மசாலா வாடை அடங்க வேண்டும்.

கடைசியாக பொடித்த மிளகுத்தூள் தூவி,நறுக்கிய மல்லியிலைச் சேர்க்கவும்.

பிரட்டி விடவும்.சூடான சுவையான நண்டு மசாலா தயார்.

சோறு,சப்பாத்தி,தோசை,ஆப்பத்துடன் பரிமாறலாம். இப்படி செய்யும் பொழுது கூட்டு நிறைய இருக்கும். ருசி செமையாக இருக்கும்.காரம் அவரவர் விருப்பம்

அசத்தலான விருந்தாக இருக்கும்.



நண்டு க்ரேவி 

தேவையான பொருட்கள்

நண்டு
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சைமிளகாய் -4
மல்லி இழை
கறிவேப்பிலை
தேங்காய் - 1/2 கப்
பெருஞ்சீரகம் - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு ஏலக்காய்
எண்ணெய்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 1 1/2 ஸ்பூன்
கரம் மசலா - 1/2 ஸ்பூன்
மிளகு, சீரக தூள் - 1 ஸ்பூன்

செய்முறை

நண்டை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்

வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் மல்லி கறிவேப்பிலை யை அறிந்து வைத்துக்கொள்ளவும்

சட்டியில் பட்டை கிராம்பு ஏலக்காய் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து கிளறவும் பின் வெங்காயாம் போட்டு கிளறவும் வெங்காயம் வதங்கியதும் தக்காளி பச்சை மிளகாய் கறிவேப்பிலை மல்லி இலைகலை போட்டு கிளறவும்

பின் அதில் மசலா பொருட்களை சேர்த்து நன்றாக கிண்டியதும் நண்டை அதில் போட்டு 1/2 கப் தண்ணீர் விட்டு உப்பூ சேர்த்து நன்றாக கிளறி மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும்
மிக்ஸியில் தேங்காய் பெருஞ்சீரகம் சேர்த்து தேங்காவும் பாலுமாக அறைத்துக்கொள்ளவும்

நண்டில் தண்ணீர் வற்றியதும் அறைத்த விழுதை அதில் போட்டு நன்றாக எல்லா நண்டுகளிலும் படுமாறு கிண்டவும், 2 நிமிடம் கொதித்ததும் மல்லி இழைகளை மேலே தூவி இறக்கவும்.

கம கம நண்டு க்ரேவி ரெடி



நண்டு வறுவல்

தேவையான பொருட்கள்

நண்டு-1 கிலோ
வெங்காயம் -1,பொடியாக நறுக்கியது
தக்காளி-1,பொடியாக நறுக்கியது
சோம்பு-1 டீஸ்பூன்
கறிவேப்பிலை-2 ஈர்க்கு
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
எண்ணெய் -2டேபிள்ஸ்பூன்
தேங்காய்துறுவல் -1/4 கப்
உப்பு-தேவைக்கு
வரமிளகாய்தூள் -1&1/2 டேபிள்ஸ்பூன்
மிளகு -1 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
பச்சைமிளகாய்-2
சோம்பு -1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் -4
இஞ்சி-1 டீஸ்பூன்

செய்முறை

நண்டினை சுத்தம் செய்து வைக்கவும்.
ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு,சீரகம்,1/2 ஸ்பூன் சோம்பு,பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு இவற்றை வதக்கவும்.பின் ஆறியதும் மஞ்சள் தூள்,தேங்காய் சேர்த்து மைய அரைக்கவும்.

கடாயில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சோம்பு ,1ஈர்க்கு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்,பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் நண்டு,உப்பு,மிளகாய்தூள்,அரைத்த மசாலா சேர்த்து கலக்கவும்.

3/4 கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.

நன்றாக நீர் சுண்டி வரும்போது சுருள கிளறி கறிவேப்பில்லை சேர்த்து இறக்கவும்.

நண்டு சீக்கிரம் வெந்துவிடும்,குறைவாக நீர் சேர்த்து வேகவைத்தால் போதும்.


நண்டு பிரட்டல் 

தேவையான பொருட்கள்

நண்டு முக்கால் கிலோ
பெரிய வெங்காயம் 2
தக்காளி-2
மிளகாய்த்தூள் ஒன்றரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை சிறிதளவு
மல்லித்தூள் சீரகத்தூள் தலா அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் உப்பு தேவையான அளவு
சமையல் எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
பட்டை சிறிய துண்டு கிராம்பு ஒன்று
தேங்காய்ப் பால் ஒரு கப்

செய்முறை

முதலில் எண்ணெய் காய்ந்தவுடன் பட்டை கிராம்பு வெங்காயம் கருவேப்பிலை சேர்க்கவும்
வெங்காயம் வதங்கியவுடன் உப்பு இஞ்சி பூண்டு தக்காளி சேர்க்கவும்

பச்சை வாசனை போனவுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் சேர்க்கவும்

நண்டு சேர்த்து வதக்கிய பின் தேங்காய்ப்பால் ஊற்றி மூடி வைக்கவும்

15 நிமிடங்கள் கழித்து நன்கு வெந்தவுடன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்
சுவையான நண்டு மசாலா ரெடி



கேரளா நண்டு மசாலா

தேவையான பொருட்கள்

நண்டு 1/4
சின்ன வெங்காயம் 4
தக்காளி 2
பச்சை மிளகாய் 2
இஞ்சி பூண்டு விழுது 3 ஸ்பூன்
சோம்பு 3 ஸ்பூன்
கசகசா 2 ஸ்பூன்
மிளகாய் பொடி
சீரக தூள் 2 ஸ்பூன்
மிளகு 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 5 ஸ்பூன்

செய்முறை

முதலில் சீரகம் சோம்பு மிளகு,கசகசா இவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் வதக்க வேண்டும்
வதங்கியதும் தக்காளி அரைத்த பச்சை மிளகாய் நண்டு இவற்றை சேர்க்க வேண்டும்
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும்
எல்லாவற்றையும் எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும்
வதங்கியதும் மிளகாய் பொடி,வருது அரைத்த பொடி உப்பு இவற்றை சேர்க்க வேண்டும்
இந்த கலவை எல்லாம் வெந்ததும் நெருப்பை அணைக்கவும்


நண்டு மிளகு வறுவல்

தேவையான பொருட்கள்

நண்டு 10
சின்ன வெங்காயம் 100Gm
பூண்டு பல் 20
மிளகு தூள் 50Gm
சீரகம் தூள்3ஸ்பூன்
சோம்பு தூள்1ஸ்பூன்
உப்பு
நல்லெண்ணைய் 100Ml
கருவேப்பிலை
மிளகாய் தூள் 1ஸ்பூன்
மஞ்சள் தூ ள் 1ஸ்பூன்

செய்முறை

நண்டை சுத்தம் செய்து வைக்கவும்
வெங்காயம் பூண்டு அரைத்து வைக்கவும்
குக்கரில் நல்லெண்ணைவிட்டு கருவேப்பிலை போட்டு அதில் நண்டைபோட்டு வதக்கி
அதில் மிளகாய் மஞ்சள் சீரகம் சோம்பு மிளகு தூள் உப்புபோட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு மசாலாக்கள் நன்கு சேருவரை கிளறி மூடிபோட்டு 5விசில் வைத்து இறக்கவும்
மூடி திறந்ததும் மசாலா தண்ணியாக இருந்தால் சுருளகின்டி பரிமாறவும்



நண்டு குழம்பு & தோசை

தேவையான பொருட்கள்

நண்டு அரை கிலோ
சின்ன வெங்காயம் 15 பல்
தக்காளிப்பழம் 3
மிளகாய்த்தூள்-2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
குழம்பு பொடி இரண்டு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு போட்டு தாளிக்கவும்
பிறகு வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
வதங்கியவுடன் உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் குழம்பு தூள் சேர்த்து நன்கு கிளறவும்
பிறகு நண்டை எடுத்து அதில் போட்டு கிளறவும்
சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்
இறுதியில் மல்லி இலை தூவி இறக்கவும்
சுவையான நண்டு குழம்பு ரெடி



ஸ்பைசி நண்டு வறுவல் 

தேவையான பொருட்கள்

நண்டு தேவையான அளவு
அரைப்பதற்கு தேவையான பொருள்கள்
வெங்காயம்-2
இஞ்சி பூண்டு
மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
பட்டை ஒரு துண்டு
சோம்பு சீரகம் தலா ஒரு டீஸ்பூன்

செய்முறை

அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்கு மைய அரைத்துக் கொள்ள வேண்டும்
கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்
என்னை பிரிந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள நண்டு மற்றும் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு வேகவிட வேண்டும்
நண்டு நன்கு வெந்ததும் சூடான சாதத்துடன் பரிமாறவும்



செட்டிநாடு நண்டு மசாலா

தேவையான பொருட்கள்

நண்டு
சின்ன வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது )
தக்காளி (பொடியாக நறுக்கியது )
கடுகு
வரமிளகாய்
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
மல்லி தூள்
சோம்பு
அரைக்க மசாலா :
பட்டை-1
ஏலக்காய் -3
கிராம்பு -1
சோம்பு
மிளகு
தேங்காய் துருவல்
மல்லி
வரமிளகாய்

செய்முறை

முதலில் நண்டை சுத்தம் செய்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து பட்டை,ஏலக்காய், கிராம்பு, சோம்பு,சீரகம், மிளகு, மல்லி சேர்த்து வறுத்து கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
பின் ஆரவைத்து அரைத்து கொள்ளவும்.
பின் வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை ,வரமிளகாய், வெங்காயம் ,பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் நண்டு சேர்த்து கொள்ளவும்.
அதில் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு ,சேர்த்து கிளறவும்.
பிறகு அரைத்து வைத்திருந்த மசாலாவை சேர்த்து கிளறி விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
நண்டை 15நிமிடம் வேகவைக்க வேண்டும்.
பிறகு மல்லி இழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.



செட்டிநாடு நண்டு கிரேவி

தேவையான பொருட்கள்

நண்டு அரை கிலோ
வெங்காயம் ஒன்று
தக்காளி-2
இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
தனியா தூள் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
கொத்தமல்லி தழை அரை கைப்பிடி அளவு
கல் உப்பு 1 1/4 ஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு:
தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்
சீரகம் ஒரு ஸ்பூன்
மிளகு அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் இரண்டு
சோம்பு முக்கால் ஸ்பூன்
எண்ணெய் 5 ஸ்பூன்

செய்முறை

நண்டை நன்றாக கழுவி ஒரு பக்கமாக வைக்கவும்
வெங்காயம் தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும்
வறுத்த மசாலாக்களை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்
எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும்
இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்
மிளகாய்த்தூள் தனியாத்தூள் வறுத்து அரைத்த பொடி எல்லாவற்றையும் போட்டு வதக்கவும்

கறிவேப்பிலை சேர்க்கவும்
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போடவும்
தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் நண்டுகளை அதில் சேர்க்கவும்

மூடி வைத்து நன்றாக வேக வைக்கவும்
குழம்பு கெட்டி பதம் வந்தவுடன் ஆப் செய்யவும்
பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லி தழை தூவவும்




இண்ஸ்டன்ட் நண்டு குழம்பு

தேவையான பொருட்கள்

நண்டு-1 கி
மிளகாய்-3
வெங்காயம்-1கப்
தக்காளி-1/2கப்
எண்ணெய்-தேவைக்கு
உப்பு-தேவைக்கு
மிளகாய்த்தூள்-3ஸ்பூன்
மிளகு தூள்-1/2ஸ்பூன்

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்
நண்டு சேர்த்து வதக்கவும்
நன்கு வெந்ததும் பரிமாறவும்




இட்லியும் நண்டு மசாலாவும்

தேவையான பொருட்கள்

நண்டு அரை கிலோ
வெங்காயம் 2
இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2
தக்காளி ஒன்று
தேங்காய் அரை மூடி
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
தனியாத் தூள் 2 டீஸ்பூன்
கரம் மசாலா அரை டீஸ்பூன்
சோம்பு அரை டீஸ்பூன்
சீரகம் அரை டீஸ்பூன்
மிளகு அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
நல்ல எண்ணெய் உப்பு கருவேப்பிலை கொத்தமல்லி தேவையான அளவு

செய்முறை

நண்டை சுத்தம் செய்து வைக்கவும்
தேங்காய் சீரகம் சோம்பு மிளகு பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து அரைக்கவும்
நல்லெண்ணை ஊற்றி கறிவேப்பிலை சோம்பு தாளிக்கவும்
வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்
அரைத்த தேங்காய் விழுது சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
நண்டு சேர்த்து மூடி வைத்து சமைக்கவும்
நண்டு வெந்தவுடன் மிளகுத்தூள் கொத்தமல்லி தழை சேர்த்துக் கிளறி எடுத்து பரிமாறவும்



நண்டு கோலா உருண்டை/நண்டுக்கறி உருண்டை

தேவையான பொருட்கள்

150 கிராம் நண்டுக் கறி
80 கிராம் வேகவைத்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு
3 முத்து வெங்காயம் - நறுக்கப்பட்டது
2 தேக்கரண்டி தேங்காய்த் துருவல்
1/2 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது
1 தேக்கரண்டி வறுத்தக் கடலைப்பருப்பு
1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
1/4 தேக்கரண்டி மிளகுத்தூள்
சுவைக்கேற்ற உப்பு
1/4 கப் புதினா இலைகள்
1 குச்சி கரிவேப்பிலை
1 தேக்கரண்டி அடித்துவைத்துள்ள முட்டை

செய்முறை

வறுத்த நண்டுக்கறியை 1 தேக்கரண்டி எண்ணெயுடன் கலக்கவும், உலர் புர்ஜி கலவைபோல் வரும்வரை. எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தை எடுத்து,அடித்து வைத்துள்ள முட்டையைத் தவிர மேலே குறிப்பிட்ட அனைத்து சேர்வைப்பொருள்களையும் கலந்துகொள்ளவும். நன்றாகக் கலந்து ஒரு பிளண்டரில் கரடுமுரடான சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
இப்போது, ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அடித்து வைத்துள்ள முட்டையைச் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து எடுதது வைத்துக்கொள்ளவும். சாந்தை சிறுசிறு உருண்டைகளாகச் செய்து, எடுத்து வைத்துக்கொள்ளவும். பனியாரப் பாத்திரத்தைச் சூடுபடுத்திக்கொள்க, கொஞ்சம் எண்ணெய் சேர்த்து. பாத்திரத்தின் ஒவ்வொரு குழியிலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு உருண்டைகளை அதில் போடவும்.
தீயைக் குறைத்து சமைக்கவும், இல்லையேல் மேல் பகுதி சீக்கிரம் வெந்து உள் பகுதி வேகாமல் இருக்கும். ஒவ்வொரு ஈடுக்கும் 10-15 நிமிடங்கள் ஆகும், சமைப்பதற்கு.
சூடாக தேங்காய் சட்டினி அல்லது புதினா சட்டினியோடு பரிமாறவும்.


Comments