முட்டை ( Egg)

முட்டை 65

தேவையான பொருட்கள்

முட்டை 4
சின்ன வெங்காயம் 5
பூண்டு 5 பல்
சீரகம் 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
கருவேப்பிலை
மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய்

செய்முறை

முட்டையை வேக வைத்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
கொடுக்கப்பட்ட பொருட்களை மிக்ஸியில் அரைக்கவும்
அரைத்த விழுதில் மிளகாய் தூள் உப்பு சேர்த்து கலந்து முட்டையில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்
அரை மணி நேரம் கழித்து எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்


முட்டை கறி

தேவையான பொருட்கள்

முட்டை -5
பல்லாரி -2
தக்காளி - 3
முந்திரிப் பருப்பு - ஒரு கையளவு
இரால்- 10
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
மஞ்சத்தூள் 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 2 மேசைக்கரண்டி
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
மல்லித்தூள் 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் 1/2 தேக்கரண்டி
மல்லி இலை 1/2 கப்
கடுகு சிறிதளவு
கருவேப்பிலை ஒரு இணுக்கு

செய்முறை

முட்டையை நன்றாக அவித்து தோல் உரித்து வெள்ளை கருவை அறிந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கருவேப்பிலை, வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
மீதமுள்ள வெங்காயம், தக்காளி, மசாலா பொடிகள், உப்பு போட்டு எண்ணெயில் நன்றாக வதக்கவும்.
இதனுடன் முந்திரி பருப்பு, இறால் போட்டு நன்றாக வதக்கவும்.
இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
வெங்காயம், தக்காளி நன்றாக வெந்ததும் அறிந்து வைத்திருக்கும் வெள்ளைக்கருவை போட்டு கிளறவும்.
அடுப்பை அனைத்து விட்டு இதில் மஞ்சள் கருவையும், மல்லி இலையை போட்டு பரிமாறவும்.


முட்டை அடை

தேவையான பொருட்கள்

முட்டை 3
வெங்காயம் ரெண்டு
கொத்தமல்லி இலை
பெப்பர் தூள் 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் கால் சிட்டிகை
உப்பு தேவையான அளவு
பச்சரிசி மாவு 2 ஸ்பூன்
தேங்காய் விழுது 3ஸ்பூன்
தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

வெங்காயம் கொத்தமல்லி இலை இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்

முட்டை ஊற்றிய பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி இலை பெப்பர் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும்

முட்டை கலவையில் அரைத்த தேங்காய் விழுது பச்சை அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஒவ்வொரு அடையாக எடுத்து ஊற்றவும்

இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
சுவையான முட்டை அடை தயார்


முட்டை ரைஸ்

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி 2 கப்
முட்டை 2
கேரட் 1 கப்
குடை மிளகாய் 1 கப்
பின்ஸ் 1 கப்
பட்டானி 1 கப்
கோஸ் 1 கப்
வினிகர் 3 tsp
சோய சாஸ் 2 tsp
மிளகு தூள் 2 tsp
உப்பு 1 tsp
பூண்டு 5 பல்
வெங்காய தாள் 1 கப்

செய்முறை

முதலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்க்கவும்.
பிறகு நறுக்கிய பூண்டு, காய்கறிகள் சேர்க்கவும்
காய்கறிகள் வெந்ததும் வடித்த சாதம் சேர்க்கவும்..
பிறகு சோய சாஸ், வினிகர் மற்றும் முட்டை சேர்க்கவும்.
இற்கும் போது மிளகு தூள் மற்றும் வெங்காய தாள், உப்பு சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்..
சுவையான முட்டை ரைஸ் ரெடி..
கேட்சாப் உடன் சாப்பிடலாம்



முட்டை தோசை

தேவையான பொருட்கள்

தோசை மாவு
உப்பு
மிளகு தூள் : ½ ஸ்பூன்
முட்டை : 1

செய்முறை

முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
தோசை கல்லினை சூடாக்கி பின் தோசை மாவினை ஊற்றி பின் முட்டை கலவையை ஊற்றவும்
பின் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்



முட்டை மசாலா

தேவையான பொருட்கள்

முட்டை 4 வேகவைத்து பாதியாக நறுக்கியது
கடுகு 1 தேக்கரண்டி
பூண்டு 1 பல்
கருவேப்பிலை சிறிது
மிளகு தூள் 1 தேக்கரண்டி
தனியா தூள் 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
சீரக தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் 2 மேசைக்கரண்டி

செய்முறை

மிகவும் மிதமான தீயில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை ,பொடியாக நறுக்கிய பூண்டு பின் அனைத்து மசாலாக்களையும் போட்டு 1 நிமிடம் வறுக்கவும்
பின் முட்டை யை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்


முட்டை மபின்

தேவையான பொருட்கள்

முட்டை -3
வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது
கேரட்- சிறியது 1
குடைமிளகாய் -1/2 பொடியாக நறுக்கியது
காளான் -3 பொடியாக நறுக்கியது
பாலக்கீரை - 3 இலைகள்
சீஸ் - சிறிதளவு
வெண்ணெய் -சிறிதளவு
மிளகு தூள் - தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

அடுப்பில் பாத்திரத்தை வைத்து சிறிதளவு வெண்ணெய் சேர்க்கவும்.

வெண்ணெய் சூடானதும் நறுக்கிய வெங்காயம் ,கேரட்,குடைமிளகாய் சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும்.

பின்பு நறுக்கிய காளான் ,பாலக்கீரை ,சிறிதளவு மிளகு தூள்,உப்பு சேர்த்து வதக்கவும் .

3 முட்டைகளை தேவையான அளவு மிளகு தூள்,உப்பு சேர்த்து அடித்து வைத்துக்கொள்ளவும்.

இஇப்பொழுது அடித்து வைத்த முட்டையுடன் வதக்கிய காய்கறிகள் ,சீஸ் சேர்க்கவும்.

நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.

ஓவனை ( oven ) 300் க்கு ப்ரி கீட் செய்யவும் .பின்பு முட்டை கலவை மபின் ட்ரேயில் ஊற்ற்றவும்.

ஓவனில் 20 நிமிடங்கள் பேக் செய்யவும் .

ஆரோக்கியமான முட்டை மபின் தயார்.குழந்தைகளுக்கு காலை உணவாக கொடுக்கலாம் .



மிளகு முட்டை

தேவையான பொருட்கள்

முட்டை 4
மிளகு தூள் 2 ஸ்பூன்
மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்
உப்பு தேவை யான அளவு
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை சிறிதளவு
எண்ணெய் 2 ஸ்பூன்

செய்முறை

முட்டையை 15 நிமிடம் வேக வைத்து உரித்து உரித்து எடுத்து கொள்ள வேண்டும்
முட்டையை இரண்டாக வெட்டவேண்டும்
ஒரு தட்டில் மிளகு தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலக்க வேண்டும்
வெட்டிய முட்டையை எடுத்து மிளகு தூள் உடன் சேர்த்து ஒரு பக்கமாக புரட்ட வேண்டும்
புரட்டிய முட்டைகளை பிரீஸிர் ல் 5 நிமிடம் வைக்க வேண்டும்
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் கருவேப்பிலை சேர்த்து பொறிந்தவுடன்முட்டைகளை கடாயில் இரண்டு நிமிடம் பொறியக விட வேண்டும்
மெதுவாக முட்டைகளை எடுத்து அடுக்கவும்



முட்டை மசால்

தேவையான பொருட்கள்

முட்டை இரண்டு
பெரிய வெங்காயம் இரண்டு
தக்காளி ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு
கரம்மசாலா சிறிதளவு
மல்லித்தூள் 3ஸ்பூன்
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் சிறிதளவு
மிளகுத்தூள் சிறிதளவு
உப்பு தேவைக்கேற்ப
கொத்தமல்லித்தழை சிறிதளவு
எண்ணெய் 100 மில்லி

செய்முறை

முட்டையை வேக வைத்துக் கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் உப்பு மஞ்சள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின்பு தக்காளி சேர்க்கவும்
தக்காளி வதங்கியதும் மல்லி மிளகாய் தூள் சேர்க்கவும்
சுருள வதக்கிய பின் சிறிது நீர் சேர்த்து கொதிக்க விடவும்
எண்ணெய் தெளிந்ததும் முட்டைகளை வெட்டி சேர்க்கவும்
நன்கு பிரட்டி விட்டு மிளகுத் தூள் மல்லித் தழை தூவி இறக்கவும்


பாலக் முட்டை

தேவையான பொருட்கள்

பாலக் கீரை - 1 கட்டு
முட்டை - 3
பூண்டு - 4 பல்
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

வேகவைத்த முட்டைகளை பாதியாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்.
(2)பாலக்கீரையை(1 கட்டு) சுத்தம் செய்து,வேகவைத்து ஆறவைத்து மிக்ஸியில் கீரையுடன்,பூண்டு-4 பல்,உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
(3)ஒரு வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்த கீரையை சேர்த்து சுருள வதக்கி அதில் நறுக்கிய முட்டைகளை போட்டு உடையாமல் கிளறி இறக்கவும்.


முட்டை ஃப்ரை

தேவையான பொருட்கள்

முட்டை : 3
வெங்காயம் : 1
உப்பு
மிளகாய் : 1
கடுகு
கருவேப்பிலை
எண்ணெய் : 2 ஸ்பூன்
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
கரம் மசாலா : ½ ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்து கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்  சேர்த்து வதக்கவும்
பின் உப்பு மிளகாய் தூள் , கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
பின் முட்டைகளை உடைத்து ஊற்றி 2 நிமிடம் மிதமான தீயில் கிளறவும்



முட்டை கபாப்

தேவையான பொருட்கள்

முட்டை 2
உருளைக்கிழங்கு 2
மஞ்சள் தூள் 1 பின்ச்
மிளகாய் தூள் 1ஸ்பூன்
கொத்தமல்லி இலை
உப்பு தேவையான அளவு
முட்டை 1
பிரட் க்ரம்ஸ்
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

முட்டையை வேகவைத்து குறுக்காக வெட்டி கொள்ளவும்
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து அதில் உப்பு மிளகாய் தூள் கொத்தமல்லி இலை மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
வேகவைத்த முட்டையின் மேலே பிசறி வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவால் ரோல் செய்யவும்
மற்றொரு முட்டையில் உப்பு சேர்த்து பீட் செய்து கொள்ளவும்
ரோல் செய்த உருளைக்கிழங்கை முட்டையில் டிப்ஸ் செய்வது ப்ரட் க்ரம்ஸில் பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
டேஸ்டான ப்ரெட் கபாப் ரெடி


முட்டை பஜ்ஜி

தேவையான பொருட்கள்

அவித்த முட்டை 4
பஜ்ஜி மசாலா ஒரு பாக்கெட்
தண்ணீர் தேவைக்கேற்ப
எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை

பாத்திரத்தில் பஜ்ஜி மாவுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும்
பின் வேக வைத்த முட்டையை இரண்டு பாதியாக கட் செய்து பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் மொறுமொறுப்பான முட்டை பஜ்ஜி ரெடிமுட்டை ரோஸ்ட்

தேவையான பொருட்கள்

முட்டை-4 (வேக வைத்தது)
சின்ன வெங்காயம்-10
பெரிய வெங்காயம்-1
தக்காளி -3
மிளகாய்-2
இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
வத்தல் தூள்-3 ஸ்பூன் ்
சீரகத் தூள்-4 ஸ்பூன்
மிளகுத் தூள்-2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்- தாளிக்க
கறிவேப்பிலை இலை-1 கொத்து
எலுமிச்சை சாறு- 2ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தை சூடு படுத்தி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி பின் இஞ்சிபூண்டு சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின்பு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும்.
வதங்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.நன்கு மசிய வேகவிடவும்.
பின்பு வத்தல் தூள், சீரகத் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.
எண்ணெய் விட்டுகிரேவி பதம் வந்ததும் வேக வைத்து கீறிய முட்டை சேர்த்து எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி இறக்கவும். சுவையான முட்டை ரோஸ்ட் தயார்.



முட்டை புலாவ்

தேவையான பொருட்கள்

முட்டை 6 அல்லது 8
பாஸ்மதி அரிசி 1/2 கி
சின்ன வெங்காயம் 100 கிராம்
பெரிய வெங்காயம் 2
பூண்டு 25 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அண்ணாசி பூ
பச்சை மிளகாய் 7
எண்ணெய் 3 ஸ்பூன்கள்
கரம்மசாலா 1/2 ஸ்பூன்

செய்முறை

முட்டையை வேகவைத்து தனியாக வைக்கவும்...
சின்னா வெங்காயம்+பச்சை மிளகாயை சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.....
சிறிதளவு எண்ணெய்யில் சிறிது உப்பு ,கரம் மசாலா தூள் சேர்த்து முட்டையும் சேர்த்து வதக்கவும்.....
ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை+ கிராம்பு +ஏலக்காய்+ அண்ணாசி பூ சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்..+ கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து வதக்கவும்...
1/2 கிலோ அரிசி 1 கப் என்றால் இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்..
இடையில் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு கொதித்த பின்னர் அரிசி சேர்த்து வேகவிடவும்.
தண்ணீர் வற்றி வரும் போது மசாலா சேர்த்த முட்டையினை அடுக்கி வைத்து மூடி 10 நிமிடங்கள் தம் வைக்கவும். ..

பின்னர் 10 நிமிடங்கள் கழித்து திறந்தால் வித்யாசமான ,சுவையான முட்டை புலாவ் தயார்.... நான் தயிர் வெங்காய பச்சடியுடன் பரிமாறினேன்..........

முட்டை கிரேவி

தேவையான பொருட்கள்

முட்டை 4
பல்லாரி வெங்காயம் 4
தக்காளி 3
எண்ணெய் 200
பச்சை மிளகாய் 2
கருவேப்பிலை தே. அளவு
உப்பு தே. அளவு
மிளகாய் தூள் 2 மேஜை கரண்டி
மல்லி தூள் 1 மேஜை கரண்டி
மஞ்சள் தூள் 1/2 மேஜை கரண்டி
கொத்தமல்லி தே.அளவு

செய்முறை

முட்டையை தண்ணீர் ஊற்றி 20நிமிடம் வேக வைத்து கொள்ளவும்

சட்டியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு கருவேப்பிலை போட்டு தாழிக்கவும்
வெங்காயம் பொன்னிறமாக வதக்கவும்
மிளகாய், மல்லி, மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்
தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
தக்காளி, வெங்காயம் நன்கு வதங்கியதும்
அவித்த முட்டையை கீறி கிரேவி நன்கு முட்டையில் படுமாறு மிக்ஸ் பண்ணவும்
கொத்தமல்லி தூவி இறக்கவும்..


முட்டை தொக்கு

தேவையான பொருட்கள்

முட்டை-6(வேக வைத்தது)
சின்ன வெங்காயம்-10
பெரிய வெங்காயம்-1
தக்காளி -3
மிளகாய்-2
இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
வத்தல் தூள்-3 ஸ்பூன்
சீரகத் தூள்-4 ஸ்பூன்
மிளகுத் தூள்-2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவ
எண்ணெய்- தாளிக்க
கறிவேப்பிலை இலை-1 கொத்து
எலுமிச்சை சாறு- 2ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தை சூடு படுத்தி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி பின் இஞ்சிபூண்டு சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின்பு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும். வதங்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.நன்கு மசிய வேகவிடவும்.
பின்பு வத்தல் தூள், சீரகத் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.
எண்ணெய் விட்டு, கிரேவி பதம் வந்ததும் பாதியாக வெட்டிய முட்டை சேர்த்து எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி இறக்கவும். சுவையான முட்டை தொக்கு தயார்.


முட்டை அவியல்

தேவையான பொருட்கள்

அவித்த முட்டை 3
வெங்காயம் 1
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப
கடுகு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவைக்கு
எண்ணெய் தேவைக்கு
தண்ணீர் தேவைக்கு
அரைக்க: தேங்காய் 1/2 கப்
வெங்காயம் 1/4 அல்லது சின்ன வெங்காயம் 4
வற்றல் மிளகாய் 3
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்

செய்முறை

அரைக்க கொடுத்துள்ளவற்றை கொரகொரப்பாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறி வேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
அரைத்த விழுது, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கி, 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அவித்த முட்டையை நான்காக வெட்டி, மஞ்சள் கரு அடிப்பாகம் இருக்கும்படி கவனமாக அவியலில் போடவும். மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இறுதியாக மீதமுள்ள கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து, முட்டை மஞ்சள் கரு உடைந்து விடாத படி மிக கவனமாக கிளறவும்.
மிக எளிமையான ருசியான முட்டை அவியல் தயார். இதை சாதத்துடன் பரிமாறவும்.



முட்டை குருமா

தேவையான பொருட்கள்

வெங்காயம்- 3
தக்காளி- 2
இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்
கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிது
பச்சை மிளகாய்- 2
மஞ்சள் தூள் -1 ஸ்பூன்
மிளகாய் தூள்- 3 ஸ்பூன்
கறி மசாலா தூள்- 3 ஸ்பூன் (வீட்டில் அரைத்தது)
தேங்காய்- 1/4 மூடி ( கசகச சிறிது சேர்த்து அரைத்தது)
பட்டை கிராம்பு ஏலக்காய் சிறிது
அவித்த முட்டை- 5 (பாதியாக)
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும் பின்னர் அதனுடன் லேசாக அரைத்த வெங்காய விழுதை சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் அதனுடன் நறுக்கிய தக்காளி , பச்சை மிளகாய் கருவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் அதில் அனைத்து மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து அதில் தேங்காய் பால் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
பின் அது நன்றாக கொதி வந்ததும் அதில் அவித்த முட்டை பாதியாக்கி குருமாவில் சேர்த்தால் முட்டை குருமா ரெடி.



முட்டை பைட்ஸ்

தேவையான பொருட்கள்

முட்டை-4
உப்பு-தேவையான அளவு
மிளகு தூள்-1/2 ஸ்பூன்
வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி -1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -1
பாதி கேரட் துருவியது
முட்டைகோஸ் கொஞ்சம் -பொடிசா நறுக்கனும்
கொத்தமல்லி தழை-நறுக்கியது
எண்ணெய்-சிறிது

செய்முறை

கிண்ணத்தில் முட்டைய ஊற்றி அதில் மிளகு தூள்,உப்பு போட்டு அடித்து கொள்ளவும்.அதில் வெங்காயம், தக்காளி, கேரட்,முட்டைகோஸ்,பச்சைமிளகாய்,கொத்தமல்லி தழை போட்டு நன்கு கலக்கவும்..
பணியார சட்டி அடுப்பில் வைத்து சூடு ஆன உடன் அதில் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டை மசாலாவை அதில் ஊற்ற வேண்டும்

ஒரு பக்கம் வெந்த உடன் மறு பக்கம் திருப்பி விடவும்

இரு பக்கமும் வெந்த பிறகு எடுக்கவும் முட்டை ஃபைட்ஸ் ரெடி



முட்டை பீட்சா

தேவையான பொருட்கள்

முட்டை 5
வெங்காயம் ஒன்று
தக்காளி ஒன்று
குடை மிளகாய் பாதி
ஆலிவ் சிறிதளவு
மிளகு தூள் அரை ஸ்பூன்
மிளகாய் ஃபிளேக்ஸ் அரை ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் இரண்டு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
துருவிய சீஸ் 4 ஸ்பூன்
சில்லி சாஸ் 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் முட்டையை சிறிது மிளகுத்தூள் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
பிறகு வைத்துள்ள காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
தவாவை சூடாக்கி அதில் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஊற்றி அடித்து வைத்துள்ள முட்டையை அதில் ஊற்றவும்
பிறகு பின்புறம் திருப்பி போடவும்
இதன் மீது 2 ஸ்பூன் மிளகாய் சாஸ் ஊற்றி நன்கு பரவி விடவும்
பிறகு அதன் மீது கட் செய்து வைத்துள்ள காய்கறிகளை பரப்பவும்

இப்பொழுது இதனுடன் மிளகுத்தூள் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்கவும்
இதன் மீது சீஸை துருவி போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும்

சுவையான முட்டை பீட்ஸா ரெடி




முட்டை குஸ்கா

தேவையான பொருட்கள்

முட்டை 4
அரிசி 1 கப்
வெங்காயம் 6
தக்காளி-3
பச்சை மிளகாய் ஒன்று
மல்லி புதினா இலை 1 கப்
இஞ்சி பூண்டு 4 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 சிட்டிகை
பிரியாணி மசாலா பவுடர் 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 டேபிள்ஸ்பூன்
தயிர் கால் கப்
தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை
உப்பு தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு
தண்ணீர் 2 கப்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
பட்டை ஏலக்காய் பிரிஞ்சி இலை கிராம்பு சேர்த்து பொரிய வேண்டும் பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
நன்கு வதங்கியவுடன் தக்காளி புதினா மல்லி இலை இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து வதக்கவும்
மசாலா நன்கு வதங்கியவுடன் அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் பிரியாணி மசாலாத்தூள் வேக வைத்த முட்டை சேர்த்து கிளறி விடவும்
எலுமிச்சை சாறு தயிர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
கொதிவந்தவுடன் அரிசியை சேர்த்து இரண்டு விசில் வேகவிட்டு பரிமாறலாம்
சுவையான முட்டை குஸ்கா தயார்



அவித்த முட்டை

தேவையான பொருட்கள்

முட்டை 1
தண்ணீர் கொதிக்க வைக்க
மிளகு தூள் 1 தேக்கரண்டி
உப்பு 1 தேக்கரண்டி

செய்முறை

முட்டை கழுவி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
வெந்தவுடன் முட்டை ஓடு லேசாக கீறல் வரும்
தண்ணீர் வடிகட்டி ஆற விடவும்
ஆறியதும் இரண்டாக வெட்டி உப்பு மிளகு சேர்த்து பறிமாரவும்


முட்டை கிரேவி

தேவையான பொருட்கள்

முட்டை - 4
வெங்காயம் - 2
தக்காளி - 2
கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
உப்பு
மஞ்சள் பொடி - 1/2ஸ்பூன்
மல்லி பொடி - 2ஸ்பூன்
எண்ணெய்

செய்முறை

வெங்காயம், தக்காளியை தனத்தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்
பிறகு முட்டையை வேக வைத்து நறுக்கிக் கொள்ளவும்
வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்
பிறகு அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்
பிறகு மல்லி பொடி, கரம் மசாலா பொடி மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய் வற்றல் பொடி சேர்த்து வதக்கவும் புறகு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
பிறகுநன்கு கொதித்தவுடன் முட்டை சேர்த்து கிளறி இறக்கவும்


முட்டை சேமியா

தேவையான பொருட்கள்

சேமியா 1/2 கப்
எண்ணெய் 1 ஸ்பூன்
கடுகு 1/4 ஸ்பூன்
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 1
கருவேப்பிலை சிறிது
மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
முட்டை வறுக்க: எண்ணெய் 1 ஸ்பூன்
முட்டை 1
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை

அடுப்பில் வாணலியை வைத்து சேமியாவை 2 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும்.

சேமியாவிற்கு 2 மடங்கு தண்ணீர் சேர்க்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

மஞ்சள்தூள் சேர்க்கவும்.தண்ணீர் கொதி வந்ததும் வறுத்த சேமியா சேர்க்கவும்.

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.

முட்டை உடைத்து ஊற்றவும்.

முட்டையில் மிளகாய்த்தூள் உப்பு மிளகு சீரகத்தூள் சேர்க்கவும்.

முட்டையை நன்றாக கிளறி கொள்ளவும்.

சேமியா வெந்ததும் முட்டையை அதில் சேர்க்கவும்.

நன்றாக கலந்து கொள்ளவும்.

சுவையான முட்டை சேமியா தயார்



கரண்டி முட்டை

தேவையான பொருட்கள்

முட்டை
வெங்காயம்
மிளகுத்தூள் உப்பு தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு

செய்முறை

பாத்திரத்தில் முட்டை வெங்காயம் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்து கரண்டியில் எண்ணெய் ஊற்றி egg add pananum

ஒரு புறம் நன்கு வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு 5 நிமிடம் வேக விட்டு பரிமாறவும்



முட்டை உப்புமா

தேவையான பொருட்கள்

ரவை - 1 கப்
முட்டை-2
வெங்காயம் - 1 1/2(பெரியது)
கடுகு-1ஸ்பூன்
துருவிய தேங்காய் -1டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் - 2
மல்லி, கறிவேப்பிலை - 1கொத்து
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
நெய் - 2டீஸ்பூன்
மிளகுத்தூள்-1/2ஸ்புன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

ரவையை நெய் சேர்த்து மணம் வருமாறு வறுத்துக்கொள்ளவும்.
வெங்காயம், மல்லிஇலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையை உப்பு மிளகு சேர்த்து பீட் செய்யவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை, மிளகாய், துருவிய தேங்காய் உப்பு போட்டு வதக்கி 1 1/2- இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் அடித்து வைத்த முட்டையை ஊற்றி வேக வைக்கவும் நன்றாக முட்டையை கொத்தி (scramble) விடவும்.
கொதிவந்தவுடன் மல்லி இலை, வறுத்த ரவையை போட்டு கட்டிப்பிடிக்காமல் சிம்மில் வைத்து கிளறவும்.
பின்பு ஸ்க்ரம்பில் முட்டையை ரவையுடன் சேர்த்து கிளறி விடவும்
சூடாக பரிமாறவும்



முட்டை மக்ரூனி

தேவையான பொருட்கள்

மக்ரூனி -1கப்
முட்டை-2
வெங்காயம் -2
தக்காளி -1
தக்காளி பியூரி-2ஸ்பூன்
பச்சை மிளகாய் -3
உப்பு-தேவைக்கேற்ப
மிளகு தூள் -தேவைக்கேற்ப
கறிவேப்பிலை-சிறிது
கொத்தமல்லித்தழை
மஞ்சள் தூள்-1/4டீஸ்பூன்
சோயா சாஸ்-சிறிது
குடை மிளகாய் -1/2
எண்ணெய் அல்லது வெண்ணெய் (பட்டர்)

செய்முறை

முதலில் மக்ரூனியை சுத்தம் செய்து கொள்ளவும் .
பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி,சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
வெந்ததும் தண்ணீர் வடித்து எடுத்துக்கொள்ளவும் .
மற்றொரு பாத்திரம் வைத்து சிறிது வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும் .
அவற்றில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
சிறிது உப்பு ,மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும் .
நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்பு சோயா சீஸ்,தக்காளி பியூரி சேர்த்து கிளறி விடவும்.
பின்பு நன்றாக வெந்ததும் முட்டை சேர்க்கவும் .
மிளகு தூள் சேர்த்து நன்கு சுருள கிண்டவும்.
இப்பொழுது வேகவைத்துள்ள மக்ரூனியை சேர்த்து கிளறவும்.
கடைசியாக கறிவேப்பிலை,கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான முட்டை மக்ரூனி தயார்.



முட்டை பரோட்டா

தேவையான பொருட்கள்

பரோட்டா 4
வெங்காயம் நான்கு
தக்காளி-2
குடைமிளகாய் ஒன்று
இஞ்சி பூண்டு விழுது
கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
முட்டை 2
மஞ்சள் தூள் கால் சிட்டிகை
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

முதலில் வெங்காயம் தக்காளி குடமிளகாயை நறுக்கிக் கொள்ளவும்

பரோட்டாவை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்
பிறகு குடமிளகாய் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்துக் கிளறவும்
இந்த கலவையுடன் முட்டையை அடித்து ஊற்றி நன்கு கிளறவும்
பிறகு பரோட்டா துண்டுகளை அதில் போட்டு நன்கு கிளறவும்
சுவையான முட்டை பரோட்டா ரெடி


முட்டை பிரியாணி

தேவையான பொருட்கள்

முட்டை - 6
வெங்காயம் 2, இஞ்சி பூண்டு விழுது ஒவ்வொன்றும் 1 தேக்கண்டி புதினாவும் கொத்துமல்லி ஒவ்வொன்றும் ஒரு கையளவு
முழு கரம் மசாலா ஷாகி சீரகம் - 1 தேக்கரண்டி
மசாலா: சீரகப்பொடி, மல்லித்தூள், சிவப்பு மிளகாய்த்தூள், கரம் மசாலா பொடி, ஒவ்வொன்றும் ஒரு தேக்கரண்டி உங்கள் சுவைக்கு ஏற்றவாறு. நான் இங்கே 1 தேக்கரண்டி சேர்த்தேன். மேலும் ஒர கப் தயிரும் பிளக்கப்பட்ட பச்சை மிளகாயும்.
சுவைக்கேற்றவாறு உப்பு, வதக்குவதற்கு எண்ணெய் கிட்டத்தட்ட 2ல் இருந்து 3 தேக்கரண்டி, நெய் 2 தேக்கரண்டி
பாஸ்மதி அரிசி 3 கப்

செய்முறை

பாஸ்மதி அரிசியை 1 மணி நேரம் ஊறவைக்கவும். 1 கப் அரிசி 1.5 கப் தண்ணீர் வீதம். 3 கப் அரிசிக்கு 4.5 கப் தண்ணீர்.
நான்-ஸ்டிக் கடாயை வைக்கவும். எண்ணெயைச் சேர்க்கவும், வேண்டுமானால் நெய் அல்லது வெண்ணெய் ... முழு கரம் மசாலாவை அதனுள் போடவும்.. ஷாகி சீரகத்தைச் சேர்க்கவும்.
வெடிக்க ஆரம்பித்ததும் பிளந்த வெங்காயத்தைச் சேர்த்து வெளுக்கும்வரை வதக்கவும். . இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து நன்றாகக் காலக்கவும்.
பிளந்த பச்சை மிளகாய் புதினா, கொத்துமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.. 5 நிமிடங்கள் வைக்கவும்.
இதற்கிடையில் ஒரு பாத்திரத்தை எடுத்து 1 கப் தயிர் அனைத்து மசாலாக்களையும் அதனுள் ஊற்றவும் ( அனைத்து பொடிகளும்) நன்றாக கலக்கவும். கடாயில் பொடியின் பச்சை வாடை போகும்வரை ஊற்றவும்.
இப்போது ஊறவைத்த தண்ணீரிலிருந்து அரிசியை மட்டும் எடுத்து கடாயில் போட்டு நன்றாகக் கலக்கவும். தண்ணீர் தேவையான உப்பு தேவைப்பட்டால் எண்ணெய் சேர்க்கவும். உப்பு காரம் சரிபார்த்து மூடியிடவும். அதிகமானத் தீயில் 5ல் இருந்து 7 நிமிடங்கள் வைக்கவும்.
அதன்பிறகு சிம்மில் 10 நிமிடங்கள் வைக்கவும். இதற்கிடையில் உங்கள் பிரியாணியைத் தயாரிக்க ஆரம்பிப்பதற்கு முன் முட்டைகளை வேகவைத்துக்கொள்ளவும். பாதியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு சிறிய கடாயை வைத்து.. கொஞ்சம் எண்ணெய்யை ஊற்றி முட்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக வைக்கவும். முட்டைகள் உடையாமல் பார்த்துக்கொள்ளவும்.. கொஞ்சம் உப்பு மிளகு முட்டைக்கு மேல் சேர்த்து அவற்றை வறுத்துக்கொள்ளவும்.. மொறுமொறுப்பாகும் வரை..
இப்போது முட்டைகளை பிரியாணியில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்... புதினா கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.. எந்தவித ரைத்தாவுடனும் பரிமாறவும், இப்போது உங்கள் சுவையான முட்டை பிரியாணி உண்பதற்கு தயார்....


தாபா முட்டை கறி

தேவையான பொருட்கள்

வேகவைத்த முட்டை 2
ஒரு வெங்காயம் அரைத்து கொள்ளவும்
இரண்டு தக்காளி அரைத்து கொள்ளவும்
பூண்டு விழுது 2 ஸ்பூன்
அரைக்க:தேங்காய்,முந்திரி 4,ஒரு பட்டை,2 லவங்கம் சேர்த்து அரைக்கவும்.
மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
மல்லித்தூள் 1 ஸ்பூன்
சீரக தூள் கால் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் ஒரு குழி கரண்டி.
செய்முறை

வேகவைத்த முட்டை,வெங்காயம்,பூண்டு,தக்காளி விழுது எடுத்து கொள்ளவும்.

தேங்காய்,முந்திரி,பட்டை,லவங்கம் அரைத்து கொள்ளவும்.

எண்ணெய் காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை தாளிக்கவும்.

வெங்காய விழுது சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

அனைத்து மசாலா உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

எண்ணெய் பிரிந்து வரும் போது வேகவைத்த முட்டையை போடவும்.

அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.

நன்கு கொதித்து வரும் போது சிறிது சீரக தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

பச்சை வாசனை போனதும் ருசிப்பார்த்து இறக்கவும்.



முட்டை பொடிமாஸ்

தேவையான பொருட்கள்

முட்டை : 3
வெங்காயம் : 2
தக்காளி : 1
மிளகாய் : 1
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
உப்பு
இஞ்சி பூண்டு விழுது
எண்ணெய் : 2 ஸ்பூன்
கடுகு : ½ ஸ்பூன்
சீரகம் : ½ ஸ்பூன்
கருவேப்பிலை
கொத்தமல்லி தழை

செய்முறை

ரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளிக்கவும்
பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் , தக்காளி , மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
பின் தேவையான உப்பு , மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
பின் முட்டைகளை உடைத்து ஊற்றி 2 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்
பின் கொத்தமல்லி தழை சேர்க்கவும்


முட்டை பணியாரம்

தேவையான பொருட்கள்

முட்டை 5
பச்சைமிளகாய்-2
கேப்ஸிகம் ஒரு துண்டு
கறிவேப்பிலை சிறிது
சின்ன வெங்காயம் 5
உப்பு தேவையான அளவு
தேங்காய் எண்ணெய்

செய்முறை

முதலில் சாப்பரில் வெங்காயம் பச்சைமிளகாய் கேப்ஸிகம் கறிவேப்பிலை போன்றவற்றை வைத்து நன்றாக சாப் பண்ணிக் கொள்ளவும்
ஷாப்பர் இல்லை என்றால் சிறிய மிக்ஸி ஜார் உபயோகப்படுத்தலாம்
அதில் ஐந்து முட்டைகளை உடைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்
இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
பின்பு இதை பணியாரக் கல்லில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு ஒன்றாக ஊற்றி பணியாரம் போல் எடுத்துக் கொள்ளவும்
சுவையான முட்டை பணியாரம் ரெடி
இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்


சீஸ் முட்டை தோசை 

தேவையான பொருட்கள்

தோசை மாவு ஒரு கப்
கேரட் ஒன்று
குடைமிளகாய் ஒன்று
வெங்காயம் 1
முட்டை 1
சீஸ் துருவல் சிறிதளவு
எண்ணை தேவையான அளவு
மசாலா தூள் ஒரு ஸ்பூன்

செய்முறை

கேரட் குடமிளகாய் வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
மசலாத்தூள் செய்வதற்கு கால் சிட்டிகை மிளகாய்த்தூள் பெப்பர் தூள் கரம் மசாலா தூள் சீரகத்தூள் கலந்து வைத்துக் கொள்ளவும்
அடுப்பில் தோசை தவாவை வைத்து சூடானதும் தோசை ஊற்றவும் அதன் மேலே முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் கேரட் குடைமிளகாய் உப்பு மசாலாத்தூள் சீஸ் துருவல் சேர்த்து எண்ணெய் ஊற்றி மீண்டும் மூடி வைத்து வேக விடவும்
சீஸ் முட்டை தோசை தயார் இதனை ரோல் செய்து டிபன் பாக்சில் கொடுத்து அனுப்பலாம்
காலை நேர டிபன் பாக்ஸ் ரெசிபியாக கொடுத்து அனுப்பலாம்



வரகு முட்டை தோசை

தேவையான பொருட்கள்

வரகு தோசை மாவு 5 கரண்டி
முட்டை: 3
மிளகு தூள் 2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
உப்பு
கருவேப்பிலை
எண்ணெய்

செய்முறை

வரகு தோசை மாவு : வரகு 1 கப் - அரிசி 1 கப் - உளுந்து 1/2 கப் ஊறவைத்து நன்கு ஆட்டி கொள்ளவும்.8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் சூடானவுடன் மாவை ஊற்றி.விரிக்கவும்.
1 முட்டை உடைத்து ஊற்றவும்.
முட்டைக்கு தேவையான உப்பு சீரகம் கருவேப்பில்லை மிளகுத்தூள் சேர்க்கவும்
ஒரு புறம் வெந்த வுடன் மறுபுறம் திருப்பி போட்டு வேக விடவும்
வரகு முட்டை தோசை ரெடி


முட்டை சப்பாத்தி

தேவையான பொருட்கள்

சப்பாத்தி 4
முட்டை-2
பெரிய உள்ளி கட் பண்ணி யது ஒரு கிண்ணம்
கரம் மசாலா ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை சிறிதளவு
மிளகுத்தூள் சிறிதளவு
உப்பு தேவைக்கேற்ப
ஆயில் ரெண்டு ஸ்பூன்

செய்முறை

சப்பாத்திகளை சின்னதாக கட் பண்ணிக் கொள்ளவும்
வாணலியில் ஆயில் ஊற்றவும்
தக்காளி வெங்காயத்தை வதக்கவும்
கருவேப்பிலை போடவும் உப்பு போடவும்
கரம் மசாலா சேர்க்கவும்
முட்டையை உடைத்து ஊற்றி
நன்றாக கிளறி பெப்பர் போடவும்
அதனுடன் சப்பாத்திகளை சேர்க்கவும்
முட்டை சப்பாத்தி ரெடி


பர்மா முட்டை மசல்

தேவையான பொருட்கள்

வெங்காயம் நீல் வாக்காக நறுக்கியது 2
முட்டை 4
பூண்டு 10 பல் நறுக்கி வைக்கவும்
எண்ணெய் 2 தேக்கரண்டி
இடித்த மிளகாய் துகல்கள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

செய்முறை

எண்ணெய் விட்டு பூண்டை வதக்கவும்.
இதனுடன் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.
அடுப்பை அணைத்து மிளகாய் துகல்கள், உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும் .
வேகவைத முட்டையை கீரி உட்புரம் மேலே செய்த மசாலாவை வைத்து பரிமாறவும்.


முட்டை இடியாப்பம்

தேவையான பொருட்கள்

அரிசியை 5 மணிநேரம் ஊறவைத்து கெட்டியான மாவாக அரைத்து வைக்கவும்.
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய்
புதீனா சிறிது
கரம்மசாலா சிறிது
உப்பு
எண்ணெய் 3 தேக்கரண்டியளவு
முட்டை 2
மஞ்சள் தூள்.
மிளகாய்த்தூள் சிறிது
பட்டை சிறிய துண்டு
கிராம்பு 2
ஏலக்காய் 2

செய்முறை

அரிசி மாவினை இட்லியாக ஊற்றி நன்கு வேகவிடவும்.....
அதனை இடியாப்பமாக பிழிந்து வைக்கவும் ....
எண்ணெயில் பட்டை ,கிராம்பு, ஏலக்காய் பொறிய விடவும்.
வெங்காயம் + பச்சைமிளகாய் + புதீனா சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள்+ உப்பு + மிளகாய் பொடி + கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
முட்டையை உடைத்து ஊற்றி நன்கு வதக்கவும் .
பின்னர் இடியாப்பத்தை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.


முட்டை மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்

முட்டை : 4
வெங்காயம் : 2
தக்காளி : 4
மிளகாய் தூள் : 3 மேசைக்கரண்டி
ஜீரகதூள் : 2 தேக்கரண்டி
கரம் மசாலா : 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் : 2 மேசைக்கரண்டி
சோயா சாஸ் : 1 தேக்கரண்டி
மைதா மாவு : 4 மேசைக்கரண்டி
மல்லி தழை : ஒரு கையளவு
எண்ணெய் : 3 மேசைக்கரண்டி
உப்பு : தேவையான அளவு

செய்முறை

தக்காளியை வேக வைத்து தோளுரித்து மிக்சியில் அரைத்து ப்யூரி செய்து கொள்ளவும்...
முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும்... இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்டாண்ட் போட்டு அதில் முட்டை கலக்கி வைத்த பாத்திரத்தை வைத்து வேக வைக்க வேண்டும்...
மைதா மாவில் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்...
வேக வைத்த முட்டையை சிறு துண்டுகளாக வெட்டி மைதா மாவில் தோய்த்து எண்ணெயில் பொறித்து எடுக்க வேண்டும்...
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்...
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், ஜீரக தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்...
பின்னர் அதில் சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்...
கலவை நன்கு கொதித்த பின் தக்காளி ப்யூரி சேர்த்து 2 -3 நிமிடம் கொதிக்க விடவும்...
நன்கு கொதித்த பிறகு பொறித்து வைத்த முட்டையை சேர்த்து 5 நிமிடம் சிம்மில் வைத்து மல்லி தழை தூவி இறக்கவும்...
அசத்தலான முட்டை மஞ்சூரியன் ரெடி!!!!



பூரி முட்டை மசாலா 

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு 2கப்
எண்ணெய்
உப்பு
தண்ணீர்
முட்டை மசாலா:
முட்டை 3
வெங்காயம் 2
தக்காளி 3
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
கரம் மசாலா தூள்
உப்பு
சோம்பு
கறிவேப்பிலை

செய்முறை

கோதுமை மாவில் தண்ணீர் உப்பு எண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்க வும்

பூரி களாக சுட்டு எடுக்க வும்

முட்டை மசாலா: கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து வெங்காயம், தக்காளி வதக்கி எண்ணெய் பிரிந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்

குழம்பு பதம் வந்து வுடன் முட்டை ஊற்றி வோகவைத்து கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்



அப்பம்,முட்டை கறி

தேவையான பொருட்கள்

பச்சரிசி 2 கப்
தேங்காய் ஒரு மூடி
ஈஸ்ட் சிறிதளவு
சீரகம் சிறிதளவு
முட்டைக் கறி தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் 2
இஞ்சி சிறிதளவு
வெள்ளைப் பூண்டு சிறிதளவு
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் சிறிதளவு
மல்லித் தூள் 2 ஸ்பூன்
சிறிதளவு கடுகு
தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
முட்டை 5
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

அப்பம் செய்யும் முறை:
முதலில் பச்சரிசி மாவை ஊற வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைமூடி தேங்காய் அரைத்த பச்சரிசி மாவில் கலக்கவும்.
சிறிதளவு ஈஸ்ட,் சீரகம் அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து அரைக்கவும்.
அதனுடன் சிறிதளவு ஒரு ஸ்பூன் சீனி மற்றும் உப்பு சேர்க்கவும்.
இதனை ஒரு மணி நேரம் கழித்து ஆப்ப சட்டியில் ஊற்றி அதனை நன்கு வட்டமாக அங்குமிங்கும் சுற்றி அப்பம் சுற்றி எடுக்கவும்.
முட்டை கறி செய்யும் முறை:
முதலில் கடாயை அடுப்பில் வைத்து நன்கு சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்.
அறிந்து வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
ஒரு துளி உப்பு சேர்க்கவும் ஏனென்றால் அப்பொழுது அறிந்து வைத்துள்ள வெங்காயம் நன்றாக வழங்கப்படும்.
இதனுடன் வெள்ளைப் பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும்.
இதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
இதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து வெந்த முட்டைகளை இடவும்.
சுவையான முட்டை கறி ரெடி


முட்டை இட்லி ப்ரை

தேவையான பொருட்கள்

முட்டை 3
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
பெப்பர் தூள் 1 டீஸ்பூன்
சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
தயிர் 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது கால் டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மூடி வைக்கவும்
தண்ணீர் கொதி வந்ததும்இட்லி தட்டில் எண்ணெய் தடவி முட்டையை உடைத்து ஊற்றி 10 நிமிடம் வேக வைக்கவும்
வெந்தவுடன் வெளியே எடுத்து ஆற வைக்கவும்
ஒரு பௌலில் தயிர் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சீரகத்தூள் இஞ்சி பூண்டு விழுதுபெப்பர் தூள் உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும் ஒரு பேஸ்ட் போல வரும் ஆற வைத்த முட்டையை மசாலாவில் போட்டு 5 நிமிடம்ஊற வைக்கவும்
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொரித்து எடுக்கவும்



முட்டை வெஜ் சாதம்

தேவையான பொருட்கள்

வேகவைத்த சாதம் 2 கப்
கேரட் 1
பீன்ஸ் 6
குடைமிளகாய் ஒன்று
முட்டை 3
வெங்காயம்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
பெப்பர் தூள் 2 ஸ்பூன்
மிளகாய் தூள் அரை ஸ்பூன்

செய்முறை

ஒரு வெங்காயம் காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் கேரட் குடைமிளகாய் பீன்ஸ் சேர்த் உப்பு போட்டு நன்கு வதக்கவும் பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும் முக்கால் பாகம் வெந்தவுடன் வேக வைத்த சாதத்தை சேர்த்து கடைசியாக மிளகு தூள் மிளகாய் தூள் தூவி மீண்டும் கிளறி பரிமாறலாம்
சுவையான முட்டை வெஜ் சாதம் தயார்



முட்டை கேக் மசாலா

தேவையான பொருட்கள்

முட்டை 2
மிளகு சீரகத்தூள் 2 ஸ்பூன்
எண்ணெய் 5 ஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன்
வெங்காயம் 2
கருவேப்பிலை சிறிது
மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
மல்லித்தூள் 1 ஸ்பூன்
கரம் மசாலா 1 ஸ்பூன்
அரைக்க: தக்காளி 2
பூண்டு 2
இஞ்சி 1 சிறிய துண்டு
உப்பு தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி வைக்கவும்

அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.

உப்பு மற்றும் மிளகு சீரகத்தூள் சேர்க்கவும்

முட்டைய நன்றாக கலந்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி அதில் முட்டை உள்ள பாத்திரத்தை வைத்து மூடி வேக விடவும்.

தண்ணீர் உள்ள பாத்திரத்தை மூடி வைக்கவும்

10 நிமிடங்கள் வேகவிடவும்.

கத்தி வைத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

வெட்டி வைத்த துண்டுகள்

மிக்ஸியில் தக்காளி இஞ்சி பூண்டு சேர்த்து அரைக்கவும்

அரைத்த தக்காளி

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்க்கவும்.வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா சேர்க்கவும்

அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.

வெட்டி வைத்த முட்டை கேக் துண்டுகளை சேர்க்கவும்.

முட்டையில் மசாலா ஏறும் வரை வேகவைக்கவும்.தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.

சுவையான முட்டை கேக் மசாலா தயார்.


முட்டை மிளகு மசாலா

தேவையான பொருட்கள்

அவித்த முட்டை -6
பெரிய வெங்காயம் -1
சிறிய தக்காளி -1
கீறிய பச்சை மிளகாய் -3
மல்லி,கருவேப்பிலை -சிறிது
மல்லித்தூள் -1 தேக்கரண்டி
மிளகுத்தூள் -2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகத்தூள் -1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
நல்ல எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கு.

செய்முறை

முட்டை அவித்து தோல் எடுத்து ஆங்காங்கே கீறி விட்டு வைக்கவும்.கடாயில் எண்ணெய் சூடாக்கி வெங்காயம்,கருவேப்பிலை போட்டு வதக்கி இஞ்சி பூண்டு சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய தக்காளி,கீறிய மிளகாய்,உப்பு சேர்த்து மூடி 2 நிமிடம் வதங்க விடவும்.
மேற்சொன்ன மசாலா வகைகள் சேர்க்கவும்.சிறிது தண்ணீர் தெளித்து மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
5 நிமிடம் கழித்து எண்ணெய் மேலே வரும்.அவித்த முட்டை சேர்த்து மெதுவாக பிரட்டவும்.
நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
சுவையான முட்டை மிளகு மசாலா தயார்.இதனை பக்க உணவாகப் பரிமாறலாம்.


முட்டை கீமா கிரேவி

தேவையான பொருட்கள்

முட்டை -3
வெங்காயம் -2 பொடியாக நறுக்கியது
தக்காளி -1 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் -2 பொடியாக நறுக்கியது
கருவேப்பிலை -சிறிதளவு
மல்லி இலை -சிறிதளவு
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் -1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

முதலில் முட்டையை உப்பு சேர்த்து வேக வைத்து தோல் நீக்கி துருவி வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பின்பு தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி நன்கு வெந்ததும் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

இப்பொழுது 1 1/2 கப் தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்.

நன்கு கெட்டியாக வரும்பொழுது அதனுடன் துருவி வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்கு கிளறி சிறிதளவு மல்லி இலை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

சுவையான முட்டை கீமா கிரேவி தயார். சப்பாத்தி உடன் பரிமாறவும்.






Comments