ஆலு டிக்கி
தேவையான பொருட்கள்
வேகவைத்த உருளைக்கிழங்கு -2
சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
வேகவைத்த பச்சைப் பட்டாணி -கால் கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை -சிறிதளவு
வெங்காயம் - சிறிதளவு
செய்முறை
வேகவைத்த உருளைக்கிழங்கையும். பச்சை பட்டாணியையும் லேசாக மசித்துக் கொள்ளவும்.
அவற்றுடன் மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
இதில் சிறிதளவு எடுத்து.வடை போல் தட்டவும்.
சூடான தவாவில் சிறிது எண்ணெய் விட்டு.தட்டிவைத்ததைச் சேர்த்து பொன்னிறமாக வேகவைத்த எடுக்கவும். சாஸுடன் ஆலு டிக்கி பரிமாறவும்.
சமோசா
தேவையான பொருட்கள்
மைதா மாவு அரைகிலோ
உப்பு சிட்டிகை டால்டா50கி
ஆயில் 1\2லி
பட்டாணி 50கி
கேரட் 50கி நறுக்கியது
பெரிய உள்ளி1நறுக்கியது
உ கிழங்கு தோல் சீவி நறுக்கியது 1
உப்பு கரம் மசாலா 50கி
மல்லி கட் பண்ணியது1பவல்
வறுத்த முந்திரி 10உடைத்து கொள்ளவும்
செய்முறை
மைதாவை டால்டா ஊற்றி பிசையவும் உப்பு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
10நிமிடம் ஊறவைக்கவும்
குக்க ரை அடுப்பில் வைத்துஆயில் ஊற்றி ஆனியன் பட்டாணி கேரட் உருளை கிழங்கு கரம் மசால் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்
நன்றாக வெந்ததும் தண்ணீர் இல்லாமல் வடித்து முந்திரியை சேர்க்கவும்
மசால் ரெடி
சமோசாவிற்குமாவை நன்றாக உருட்டி சப்பாத்தி மாதிரி பரத்தவும்
தோ சை கல்லை அடுப்பில் வைத்த லேசாக சூடு ஆனதும் பரத்திய மைதா ரொட்டி யை இரு புறமும்ஒரு நி மி ஷம் போட்டு எடுத்து விடவும் நடுவில் கட் பண்ணி
ஒரு பக்கத்தின் நடுவில் மசாலா கலவையை வைத்து இரு புறமும் மடித்து தண்ணிர் தொட்டு ஒட்டவும்
கீழ் பக்கத்தையூம் மேல் நோக்கி அழுத்தமாக தண்ணீர் போட்டு ஒட்டவும்
வாணலியில்சமோசா முங்கும் அளவு ஆயில் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
தோசைக்கல்லில் 1நிமிஷம் போட்டு எடுப்பதால் சமோசா கிரிஸ்பியாக வரும்
தந்தூரி சிக்கன்
தேவையான பொருட்கள்
கோழி 1 1/2 கிலோ
தயிர் 1 கப்
எலுமிச்சை 2
இஞ்சிபூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
சிவப்பு கலர் பொடி (தேவைப்பட்டால்)
வத்தல்தூள் 4 தேக்கரண்டி
உப்பு (தேவையான அளவு)
மிளகு தூள் 1 தேக்கரண்டி
சீரகதூள் 1 தேக்கரண்டி
மல்லித்தூள் 1 தேக்கரண்டி
சாட்மசாலா தூள் 1 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
செய்முறை
கோழியை சுத்தம் செய்து தண்ணீரை நன்றாக வடித்துக்கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் கோழியுடன் நன்றாக பிரட்டி 8 மணிநேரம் பிரிட்ஜில் ஊற வைக்கவும்
தந்தூரி அடுப்பில் கோழியை சுட்டு எடுக்கவும்.. தந்தூரி அடுப்பு இல்லையெனில் தவாவில் சிறுது எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கலாம்.
பட்டர் சிக்கன்
தேவையான பொருட்கள்
சிக்கன் 1/2 கிலோ
பெல்லாரி 2
தக்காளி 3
பட்டை சிறு துண்டு
கிராம்பு 2
ஏலக்காய் 1
இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
முந்திரி விழுது 2 தேக்கரண்டி
சீரகத்தூள் 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
கஷ்மீரி சில்லி பொடி 1 தேக்கரண்டி
கசூரி மேத்தி 1 தேக்கரண்டி
தயிர்200 மிலி
பட்டர்50 கிராம்
உப்பு தேவையான அளவு
செய்முறை
சிக்கனை சுத்தம் செய்யவும்
மேற்சொன்ன எல்லா பொடிகளிலும் 1/2 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளவும்.
அத்துடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்க்கவும்.
இந்த கலவையில் சிக்கன் துண்டுகளை புரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும்
பின் சிக்கனை ஒரு விசில் கால அளவிற்கு வேக வைக்கவும்.
வெங்காயத்தை விழுதாக அரைக்கவும்
தக்காளியை கொதி நீரில் போட்டு, தோல் உரித்து விழுதாக அரைக்கவும்
ஒரு கடாயில் பட்டரை சேர்க்கவும்
பட்டை கிராம்பூ ஏலம் போட்டு தாளிக்கவும்
வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுதை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்்
பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
மீதமுள்ள அனைத்து பொடிகளையும் சேர்க்கவும்
முந்திரி விழுது சேர்க்கவும்
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
இடையிடையே மீதமுள்ள பட்டரையும் சேர்த்து மசாலா பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்
மசாலாவில் பட்டர் பிரிந்து வரும் சமயம் வேக வைத்த சிக்கனை சேர்த்து புரட்டவும்.
கசூரி மேத்தி தூவி பரிமாறவும்
விருப்பப்பட்டால் ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கலாம்
ருசியான பட்டர் சிக்கன் ரெடி
நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்
பிளைன் நூடுல்ஸ் 2 பாக்கெட்
கேரட், பீன்ஸ், கோஸ் 1 கப்
முட்டை 2
வெங்காயம் 1
பூண்டு 3 பல்
இஞ்சி சிறு துண்டு
தக்காளி சாஸ் 1ஸ்பூன்
சோயா சாஸ் 1/2ஸ்பூன்
சில்லி சாஸ் 1ஸ்பூன்
வினிகர் 1/2 ஸ்பூன்
சர்க்கரை 1 ஸ்பூன்
செய்முறை
நூடுல்ஸ் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும். ரன்னிங் வாட்டரில் அலசி லேசாக எண்ணெய் தெளித்து ஆற விடவும்
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பூண்டு, இஞ்சி பொடியாக நறுக்கி சேர்த்து, வெங்காயம் வதக்கி, காய்களை சேர்க்கவும்.
சர்க்கரை, சாஸ் வகைகள்,உப்பு, வினிகர் சேர்க்கவும். முட்டையை பொரித்து சேர்க்கவும். வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து கிளறவும். நன்கு கலந்து இறக்கவும்
குழந்தைகளுக்கு பிடித்தமான நூடுல்ஸ் தயார்..
எக் நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்
ஹக்கா நூடுஸ் 1 பாக்கெட்
நறுக்கிய வெங்காயம் பாதி
துருவிய கேரட் -2 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய பீன்ஸ் 2 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய குடை மிளகாய்2 டேபிள் ஸ்பூன்
முட்டை 1
மிளகுத்தூள் 1/4 டீஸ்பூன்
சோயா சாஸ் 1/4 டீஸ்பூன்
க்ரீன் சில்லி சாஸ்-1/4 டீஸ்பூன்
எண்ணெய்2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
கொதிக்கும் நீரில் நூடுல்சை சேர்த்து வேகும் வரை கிளறி வடிகட்டவும்
வடி கட்டிய நூடுல்ஸை டேப் வாட்டரில் காட்டி கிளறி விட்டால் ஒட்டாமல் உதிரியாக வரும்
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணைய் விட்டு வெங்காயம் சேர்க்கவும்
வெங்காயம் கலர் மாறியதும் மற்ற காய்களை சேர்த்து வதக்கவும்
தேவையான அளவு உப்பு சாஸ் வகைகளை சேர்க்கவும்
காய் ஓரளவு வதங்கியதும் கலவையின் நடுவில் பள்ளம் செய்து முட்டையை உடைத்து ஊற்றவும்
முட்டை வெந்ததும் மிளகு தூள் நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
கோபி நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்
நூடுல்ஸ் 250 கிராம்
குடைமிளகாய் ஒன்று
கேரட் ஒன்று
வெங்காயம் ஒன்று
காலிஃப்ளவர் சிறியது 1
சில்லி சாஸ் ஒரு டீஸ்பூன்
தக்காளி சாஸ் ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் ஒரு டீஸ்பூன்
உப்பு 2 ஸ்பூன்
எண்ணை பொரிப்பதற்கு
இஞ்சி ஒரு சிறிய துண்டு
பூண்டு 4 பற்கள்
கான்பிளவர் ஒரு ஸ்பூன்
மைதா மாவு ஒரு ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் முக்கால் ஸ்பூன்
செய்முறை
காலிஃப்ளவரை முதலில் குளிர்ந்த நீரில் நன்றாக கழுவவும்
பிறகு சற்று சூடான நீரில் உப்பு கலந்து பத்து நிமிடம் அதில் போட்டு வைக்கவும்
காலிஃப்ளவரை தண்ணீரை வடித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்
ஒரு ஸ்பூன் கார்ன் ஃபிளவர் ஒரு டீஸ்பூன் மைதா மாவு ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை ஸ்பூன் உப்புத்தூள் அனைத்தையும் சேர்த்து காலிஃப்ளவரில் தண்ணீர் தெளித்து கலக்கவும்
இதை அரை மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்
வெங்காயம் குடைமிளகாய் கேரட் ஆகியவற்றை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்
இஞ்சி பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்
வாணலியில் எண்ணெய் காயவைத்து காலிஃப்ளவரை அரைமணி நேரம் கழித்து பொரித்தெடுக்கவும்
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதித்ததும் நூடுல்ஸை அதில் 5 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்
நூடுல்ஸ் நன்றாக வெந்ததும் தண்ணீரை வடிகட்டி அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் கலந்து விடவும்
வாணலியில் உள்ள எண்ணெயை வடிகட்டி 2 ஸ்பூன் எண்ணை மட்டும் வைக்கவும்.
வாணலியில் உள்ள எண்ணெயில் நன்றாக சூடேறியதும் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டை போட்டு வதக்கவும்
பிறகு வெங்காயம் கேரட் குடை மிளகாய் மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கவும்
காய்கறிகள் 80% நன்றாக வெந்தால் போதும்
பிறகு சில்லி சாஸ் டொமேட்டோ சாஸ் சோயா சாஸ் போட்டு வதக்கவும்
நூடுல்ஸில் அதில் போட்டு நன்றாக கலக்கவும்
வறுத்தெடுத்த காலிஃபிளவரை பரிமாறும் சமயம் அதில் கலந்து தரவும்

மஷ்ரூம் நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்
நூடுல்ஸ் 1 pocket
வெங்காயம் ஒன்று நீளவாக்கில் வெட்டியது
பச்சை சிவப்பு மஞ்சள் குடைமிளகாய் பாதி நீளவாக்கில் வெட்டியது
கேரட் 1 நீளவாக்கில் வெட்டியது
மஷ்ரும் 100 கிராம்
முட்டை கோஸ் அரை கப்
மிளகுத் தூள் 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
வெண்ணெய் சிறிதளவு
செய்முறை
முதலில் நூடுல்சை வெந்நீரில் வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்
பின்னர் மற்றொரு வாணலியில் வெண்ணெய் சேர்த்து விட்டு அனைத்து காய்கறிகளையும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
அதனுடன் மஷ்ரூமை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
பின்னர் மிளகு தூள் டொமேட்டோ சாஸ் மற்றும் சில்லி சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும்
பின்னர் வேகவைத்த நூடுல்ஸ் இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்
5 நிமிடம் சிறு தீயில் வைத்து எடுத்தால் சுவையான மஷ்ரூம் நூடுல்ஸ் ரெடி
சப்பாத்தி நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்
சப்பாத்தி 4
வெங்காயம் ஒன்று
தக்காளி ஒன்று
குடைமிளகாய் ஒன்று
கேரட் ஒன்று
கறி மசாலா பொடி ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 4 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை அலங்கரிக்க
செய்முறை
சப்பாத்தியை நூடுல்ஸ் வடிவில் நீளமாக மெல்லியதாக கட் செய்து கொள்ளவும்
வெங்காயம் தக்காளி குடமிளகாய் வகைகளையும் நீளமாக மெல்லியதாக அரிந்து கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி முதலில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின்பு பொடி வகைகளை சேர்க்கவும்
பச்சை வாடை போனதும் தக்காளியை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்றாக தக்காளி மசியும் வரை வதக்கவும்
அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்
என்னை பிரிய ஆரம்பித்தவுடன் சப்பாத்தியை அதில் சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி நன்றாக பிரட்டி சூடாக பரிமாறவும்
குழந்தைகளுக்கு விருப்பப்பட்டால் கடைசியாக அதில் சிறிது தக்காளி சாஸ் ஊற்றி பிரட்டி கொடுக்கலாம்
எக் ரைஸ்
தேவையான பொருட்கள்
எண்ணெய் 1 ஸ்பூன்
முட்டை 1
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
சாதம் 1/2 கப்
உப்பு தேவையான அளவு
செய்முறை
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
முட்டையை நன்றாக கிளறி விடவும்.
முட்டை வெந்ததும் சாதம் சேர்த்து கிளறவும்
சாதத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
சுவையான எக் ரைஸ் தயார்.
சிக்கன் ப்ரைடு ரைஸ்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி -2 கப்
சிக்கன்-100 கிராம்
முட்டை -2
வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது
கேரட் -1 பொடியாக நறுக்கியது
பீன்ஸ் -10 பொடியாக நறுக்கியது
முட்டை கோஸ் - சிறிதளவு பொடியாக நறுக்கியது
வெங்காயத்தாள் - 1 பொடியாக நறுக்கியது
பச்சை பட்டாணி -2 தேக்கரண்டி
கார்ன் -2 தேக்கரண்டி
பூண்டு -3 பல் பொடியாக நறுக்கியது
இஞ்சி - சிறிய துண்டு பொடியாக நறுக்கியது
சோயா சாஸ் -2 தேக்கரண்டி
சில்லி சாஸ் -2 தேக்கரண்டி
மிளகு தூள் -2 தேக்கரண்டி
கார்ன் பிளார் -1 1/2 தேக்கரண்டி
நெய் -1 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் பொடியாக நறுக்கியசிக்கனை நன்கு கழுவி அதனுடன் கார்ன் பிளார் , 1 தேக்கரண்டி சோயா சாஸ் , 1 தேக்கரண்டி மிளகு தூள் ,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி தண்ணீர் வடித்து வைத்துக்கொள்ளவும் .அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கழுவி வைத்துள்ள அரிசியை சேர்த்து சிறிது 2-3 நிமிடம் கிளறி இறக்கவும் . இப்படி செய்தால்அரிசி உடையாமல் இருக்கும்.
மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசி, தேவையான அளவு உப்பு சேர்த்து 95 % வேகவிடவும்.
அரிசி நன்கு வெந்ததும் தண்ணீரை வடித்து ஆற வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து பொரித்து எடுக்கவும்.
இப்பொழுது பொரித்த சிக்கன் தயார்.
அதே எண்ணெய்யில் 2 முட்டைகள்,உப்பு , சிறிதளவு மிளகு தூள் சேர்த்து கின்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் அகலமான பாத்திரத்தை வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்பு அதனுடன் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் , வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும்.
இப்பொழுது காய்கறி அனைத்தையும் சேர்த்து அதனுடன் உப்பு, மிளகு தாள், 1 தேக்கரண்டி சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறி வேகவடவும்.
காய்கறியை இடை இடையே அடிப்பிடிக்காமல் கிளறவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். இப்பொழுது 1 தேக்கரண்டி சில்லி சாஸ் சேர்க்கவும்.
பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து சிறிது நேரம் நன்கு கிளறி விடவும். இப்பொழுது மீதமுள்ள 1 தேக்கரண்டி சில்லி சாஸ் சேர்த்து கிளறவும்,
இப்பொழுது கின்டி வைத்துள்ள முட்டையை சேர்த்து கிளறவும் .
வேக வைத்த அரிசியை இதனுடன் சேர்த்து லேசாக கிளறி விடவும். அரிசி உடையாமல் இருக்க பாத்திரத்தை குலுக்கி விடவும்.
இப்பொழுது சுவையான வீட்டில் எளிதாக செய்யக்கூடிய சிக்கன் ப்ரைடு ரைஸ் தயார். இறுதியாக வெங்காயத்தாளை மேல் தூவி விடவும்.
தக்காளி கெட்ச்சப் உடன் சூடாக பரிமாறவும்.
Comments
Post a Comment