மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
அரைக்க (தேங்காய் விழுது )
தேங்காய் : 1 கையளவு
சின்ன வெங்காயம் : 10
தாளிக்க :
கடுகு : 1 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் : 2
கருவேப்பிலை : சிறிதளவு
வெந்தயம் : ¼ மேஜைக்கரண்டி
மீன் ( சால்மன் / சங்கரா அல்லது உங்களுக்கு விருப்பமான மீன் )
நல்லெண்ணெய் : 5-6 மேஜைக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
சின்ன வெங்காயம் : 5
தக்காளி : 1
பூண்டு : 5 - 6 பல்
மிளகாய் : 2
மஞ்சள் தூள் : 1 மேஜைக்கரண்டி
குழம்பு மசாலா : 2 மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி + மல்லி தூள் :1 மேஜைக்கரண்டி )
புளி : நெல்லி அளவு
செய்முறை
மீன் ஐ சுத்தம் செய்து மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து தனியே வைக்கவும்
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து, பூண்டு (5 பல்), வெங்காயம் (5 ) , தக்காளி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
மிளகாய் தூள், மல்லி தூள் (அல்லது குழம்பு மசாலா ) மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் ( தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்)
தேவையான தண்ணீர் மற்றும் புளி தண்ணீர் ஊற்றி 10 - 15 நிமிடம் மசாலா வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்
பின் மீன் துண்டுகள் , உப்பு சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் குழம்பை கொதிக்க வைக்க வேண்டும் .
அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் சின்ன வெங்காய விழுது சேர்த்து 5 - 10 நிமிடம் மிதமான தீயில் குழம்பினை கொதிக்க விடவும் .
மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் , சின்ன வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும் .
மேற்சொன்ன தாளிப்பினை குழம்பில் சேர்த்து 2 நிமிடம் கழித்து அடுப்பினை அனைக்கவும் .
மீன் பிரியாணி
தேவையான பொருட்கள்
1 1/2 கப் பாஸ்மதி அரிசி
2 பிரிஞ்சி இலை
2 பச்சை ஏலக்காய்
2 கிராம்பு
1 தேக்கரண்டி ஷாகி சீரகம்
1 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
200 கிராம் இறால்
2 வெள்ளை மீன் துண்டு ஏதாவது
1 தேக்கரண்டி ரவை
1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
அரை எலுமிச்சை பழத்தின் சாறு
மீனை பொரிப்பதற்கு சமையல் எண்ணெய்
2 பெரிய பழுத்த தக்காளி நறுக்கப்பட்டது
1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
2-3 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கப்பட்டது
1 தேக்கரண்டி புதிதாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி
1 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்
1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
1 தேக்கரண்டி சீரகத்தூள்
1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி இஞ்சி விழுது
1 பிரிஞ்சி இலை
1/3 கப் பால்
கொஞ்சம் குங்கும்ப்பூத் தாள்
1 எலுமிச்சை பழத்தின் சாறு
புதிதாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி
சுவைக்கேற்ற உப்பு
செய்முறை
அரிசியைத் தண்ணீர் விட்டுக் கழுவி அனைத்துச் சேர்வைப்பொருள்களோடும் 2 கப் தண்ணீரோடும் வேகவைக்கவும். அரிசி அரைவேக்காட்டில் வேகவைக்கப்படவேண்டும்.
மீனோடு பின்னர் சமைக்க இருப்பதால் அதை எடுத்து வைக்கவும்.
கடிக்கும் அளவில் மீன் துண்டுகளை வெட்டிக்கொள்ளவும். மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள், உப்பு, எலுமிச்சை ஆகியவற்றை மீனின் மீது தடவி 15 நிமிடங்கள் மேரினேட் ஆக விட்டுவைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தவும். ரவையை ஒரு தட்டில் அல்லது சமையல் துண்டில் ஊற்றி மேரினேட் செய்த மீனின் அனைத்துப் பக்கங்களிலும் தடவவும்.
பொன்னிறமாகி அனைத்துப் பக்கங்களும் வேகும்வரை மீனை பொரிக்கவும், வழக்கமாக ஒரு பக்கத்திற்கு 3-4 நிமிடங்கள்
சமையல் துண்டில் வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
பிரியாணியை வைக்கப்போகும் கனமான அடிப்பாகமுள்ள ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.
சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து சில நொடிகள் வேகவைக்கவும்.
வெங்காயம் சேர்த்து பளபளப்பாகும்வரை வதக்கவும். இப்போது தக்காளி, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கூழாகும்வரை வேகவைத்து புத்தம் புதிய கொத்துமல்லியைச் சேர்க்கவும்.
1 கப் சூடானத் தண்ணீர் சேர்த்து கொதி நிலைக்குக் கொண்டுவரவும். தீயை அடக்கி கலவையில் மெதுவாக மீன் துண்டுகளை வைக்கவும். அரைவேக்காட்டு அரிசியை மெதுவாக அதன் மீது வைக்கவும்.
பாலைச் சூடுபடுத்தி குங்குமப்பூவை அதனோடு சேர்த்து 10 நிமிடங்களுக்கு விட்டுவைக்கவும்.
மீன் மீது சாதத்தை அடுக்கியபின், சாதத்தை குங்குமப்பூபாலால் அலங்கரிக்கவும்.
இடைப்பட்ட இடைவெளியில் எலுமிச்சைச் சாறைச் சேர்த்து, மூடி, சிறு தீயில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும்.
புத்தம்புதிய கொத்துமல்லி எலுமிச்சைத் துண்டுகளால் அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும்.
இலை மீன்
தேவையான பொருட்கள்
கறிமீன் பெரியதாக 2
கிளீன் பண்ணிவாழை கட் பண்ணி விடவும்
தலையுடன் முழு மினாக வைத்து
கழுத்து பக்கம் லேசாக கீறி சின்ன ஸ்பூனில் கிறல்
வழியாக வயிற்றிலுள்ள கழிவுகளை சுத்தப் படுத்தவும்
வாழை இலை 1
த பழம் 2
மி தூள்1ஸ்பூன்
சி உள்ளி 5
மிளகு தூள் 1ஸ்பூன்
உப்பு எண்ணை 2ஸ்பூன்
ம ஞ்சள் தூள் 1\2 டீ ஸ்பூன்
லெமன் 1
கருவேப்பிலை மல்லி கட் பண்ணியது
2 ஸபூன் வாழை நார் 1\2 முளம்
செய்முறை
மினை கழுவி தண்ணீரை வடித்து விடவும்
தக்காளி வெங்காயத்தை நறுக்கி வாண லியில் எண்ணை ஊற்றி வதக்கவும்
உப்பு பொடிகளை போட்டு நன்றாக கிரே வி பதத்திற்கு
வந்தும் ஆற விட்டு சின்ன ஸ்பூனால் மசாலை எடுத்து மீன் வயிற்றுல் நன்றாக வைக்கவும் மீதம் மசால் இருந்தால் வௌயில் தடவவும்
வழை இலையை, நடு பகுதியில் கிறி விட்டு இரண்டு மீனையும் இரண்டு
பக்கத்தில் வைத்து நன்றாக மடித்து வாழை
நாரினால் கட்டி, இட்லி பானையில் வைத்து
20நிமிடம் வேக விட்டு எடுத்து வாழை இலையை
பிரித்தால் சூப்பராக வெந்து வாழையிலை மணத்துடன் ரெடியாகி இருக்கும்
மீன் சொதி
தேவையான பொருட்கள்
துண்டுமீன் 500 கிராம்
வெங்காயம் 200 கிராம்
தக்காளி 250 கிராம்
நல்லெண்ணெய் 100 கிராம்
அரைமூடி தேங்காயில்எடுத்த பால் 300 மில்லி
மல்லிதூள் 2 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் தேவைக்கு
வெள்ளைபூண்டு மூண்று
வெந்தயம் சிறிது
சோம்பு சிறிது
ஒரு மிளகாய் வத்தல்
கருவேப்பில்லை மல்லி சிறிது
கடுகு சிறிது
தேங்காய்எண்ணெய் இரண்டு மேஜைக்கரண்டி
செய்முறை
மீனை சுத்தம் செய்து வைக்கவும்
வெஙகாயம் தக்காளி நறுக்கவும்
பின் அரைத்து னவக்கவும்
தேங்காய் பால் எடுக்கவும்
வானலியை அடுப்பில்வைத்து எண்ணெய் சுடானதும் தாளிக்க
தாளிக்க சோ்க்கவும்
பின் வெங்காயம் சோ்க்கவும்
பின் தக்காளி சோ்க்கவும்
வெங்காயம் தக்காளி நன்கு வதங்க உப்பு சோ்க்கவும் இருபது நிமிடம் வதக்கவும். பின் மல்லி,மிளகாய்த்தூள் சோ்க்கவும்
பின் இரண்டு டம்ளா் நீர் விட்டு கிளறவும்.பின் மீன் சோ்க்கவும்
பத்து நிமிடம் கழித்து மல்லிச்செடி தேங்காய்ப்பால் இரண்டு மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்
தேங்காய்பால் சோ்த்து ஒரு கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.பின் அரைபழம் எலுமிச்சை சாறு சோ்க்கவும். சுவையான மீன் சொதி தயாா்..
பிரித்தால் சூப்பராக வெந்து வாழையிலை மணத்துடன் ரெடியாகி இருக்கும்
மீன் ப்ரை
தேவையான பொருட்கள்
மீன் துண்டுகள்
மீன் மசாலா ஒரு பாக்கெட்
இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு
லெமன் ஜூஸ் 3 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
சோள மாவு 2 ஸ்பூன்
எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை
பாத்திரத்தில் மீன் துண்டுகளை போட்டு அதில் மீன் மசாலா இஞ்சி பூண்டு பேஸ்ட் லெமன் ஜூஸ் சோள மாவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும்
பின் அதனை ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து எடுத்து பொரித்து எடுத்தால் சுவையான மீன் மசாலா ப்ரை ரெடி
மீன் பஜ்ஜி
தேவையான பொருட்கள்
மீன் துண்டுகள் - 500 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 3ல் இருந்து 4 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
ஓமம் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1-2 தேக்கரண்டி
1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள் (நிறத்திற்காகத்தான் தவிர்க்கலாம்)
1 எலுமிச்சையின் சாறு
கடலை மாவு - 1 1/2 - 2 கப்
சுவைக்கேற்ற உப்பு
பொரிப்பதற்கு எண்ணெய்
கொஞ்சம் முட்டைக்கோஸ் மணி மிளகு அலங்கரிப்பதற்காக
செய்முறை
மீன் துண்கள் கழுவி சுத்தப்படுத்தப்பட்டதை உறுதிசெய்யவும். தண்டுகள் பெரியதாக இருந்தால் கடிப்பதற்குத் தோதாக வெட்டிககொள்ளவும். தட்டி உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத் தூள், சிவப்பு மிளகாய்த் தூள், உப்பு, 1 எலுமிச்சையின் சாறு சேர்க்கவும். கடலை மாவு சேர்த்து அடர்த்தியான மாவாகக் கலந்துகொள்ளவும்.
மீன் துண்டுகளை இந்த மாவோடு சேர்த்து குறைந்தது 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி, துண்டுகளைப் பொரிப்பதற்குப் போதுமான எண்ணெயைச் சேர்த்துக்கொள்க.
மெதுவாக நன்றாக சாந்து பூசிய மீனை சூடான எண்ணெயில் விட்டு, பொன்னிறமாக மாறும்வரை வரை பொரிக்கவும்.
பொரிப்பதற்கு 2ல் இருந்து 3 துண்டுகள் மட்டும் அதிக நெறுக்கத்தைத் தவிர்ப்பதற்காகச் சூடான எண்ணெயில் போடவும்.
மீன் சட்டே
தேவையான பொருட்கள்
400 கிராம் மீன் துண்டுகள், எலும்பில்லாதது
200 கிராம் இறால், தோல் உரிக்கப்பட்டது
2 பிரிஞ்சி இலை
6 காஃபிர் எலுமிச்சை இலை
½ தேக்கரண்டி கருமிளகு, அரைத்தது
1 தேக்கரண்டி புளி, வெந்நீரில் ஊறவைத்தது
1 தேக்கரண்டி பழுப்பு சர்க்கரை
1 தேக்கரண்டி உப்பு
2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
16 துண்டுகள் லெமென் கிராஸ் (ஸ்க்யூவராகப் பயன்படுத்துவதற்கு)
அரைப்பதற்குரிய பொருள்கள்:
4 பூண்டு பல்
1 நடுத்தர அளவுள்ள வெங்காயம், பொடியாக நறுக்கியது
1 செமீ துண்டு இஞ்சி
1 சிறிய அளவிலான தக்காளி, பொடியாக நறுக்கியது
4 உலர் சிவப்பு மிளகாய்
செய்முறை
இறாலையும் மீனையும் கழுவி நன்றாக நறுக்கிக்கொள்ளவும் அல்லது ஒன்றாக அரைத்துக்கொள்ளவும். எடுத்து வைத்துக்கொள்ளவும். 'அரைப்பதற்குரிய பொருள்களின்' கீழ் பட்டியலிடப்பட்ட பொருள்கைள அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்து எண்ணெயை ஊற்றி, அரைத்தக் கலவையைச் சேர்த்து கலக்கிக்கொள்ளவும். அதன்பின்னர், எலுமிச்சை இலைகள், பிரிஞ்சி இலைகள், புளித்தண்ணீர் சேர்த்து அழகிய நறுமணம் வரும்வரை சமைக்கவும்.
அடுத்து, உப்பு, கருமிளக, பழுப்பு சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும். கலக்கி 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கவும். சிறிது நேரம் ஆறட்டும், அதன்பின்னர் மீனையும் இறாலையும் இந்த மசாலாக் கலவையில் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.
2 தேக்கரண்டி சட்டே இறைச்சையினை உங்கள் கைகளில் எடுத்து, லெமென்கிராசை மையத்தில் வைத்து மெதுவாக இறைச்சியை உங்கள் கைகளால் மூடவும். இதே செயல்முறையை அனைத்து மற்ற லெமன் கிராஸ் ஸ்க்யூவர்களுக்கும் மேற்கொண்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு கிரில்லை அல்லது நான் ஸ்டிக் கிரில்லிங் பாத்திரத்தை மிதமானதில் இருந்து உயர் தீக்குச் சூடுபடுத்திக்கொள்ளவும். கொாஞ்சம் எண்ணெயை அதன் மீது தூவி மீன் சட்டேயை வைத்து ஒவ்வொரு பக்கத்தையும் 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
சட்டேக்கள் வெந்ததும் கொஞ்சம் டிப்பிங் சாசை பக்கத்தில் வைத்து சூடாகப் பரிமாறவும்.
மசாலா மீன்
தேவையான பொருட்கள்
மீன் துண்டுகள் 1/2 கிலோ
இஞ்சி சிறிது
பூண்டு 4 பல்
பட்டை ஏலக்காய் தலா 2
மிளகாய்தூள் 2ஸ்பூன்
உப்பு
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
செய்முறை
இஞ்சி, பூண்டு, பட்டை, ஏலக்காய் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். மீன் துண்டுகளை கழுவி எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மிளகாய்தூள், உப்பு,அரைத்த மசாலா சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல வைக்கவும்
மீன்துண்டுகளில் நன்கு தடவி ஃபிரிட்ஜில் 30 நிமிடம் வைத்து ஊறவிடவும்.
ஊறிய மீன்களை மிதமான சூடில் எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். மணமான மசாலா மீன் தயார்.
மீன் புட்டு
தேவையான பொருட்கள்
சதை பற்றுள்ள மீன் 1/2 கிலோ
சின்ன வெங்காயம் 100 கிராம்
கருவேப்பிலை சிறிது
தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
கடுகு 1/4 சிறிது
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் சிறிது
செய்முறை
சுத்தம் செய்த மீன் துண்டுகளை தண்ணீர் மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்....
ஆறியதும் முள் நீங்க உதிர்த்து வைக்கவும்....
தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரிய விடவும்...
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்..,.
இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்....
நன்கு வதங்கியதும் மிளகாய் தூள் , மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.....
உதிர்த்து வைத்துள்ள மீனை சேர்த்து நன்கு வதக்கவும்......
மீன் நன்கு சுருண்டு வந்ததும் இறக்கவும்........
ஆனியன் மீன்
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம்-1 கப்
வத்தல்-4
பச்சை மிளகாய்-2
கருவேப்பிலை-1கொத்து
மஞ்சள் தூள்-1/2ஸ்பூன்
மீன்-1/2கி
உப்பு-தேவைக்கு
எண்ணெய்-தேவைக்கு
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்க்கவும்
வத்தல் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
மீன் சேர்த்து வதக்கவும்
மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
மீன் வறுவல்
தேவையான பொருட்கள்
மீன் துண்டுகள் : 4
இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
மிளகாய் தூள் : 1 - 2 ஸ்பூன்
லெமன் ஜூஸ் : 1 ஸ்பூன்
சோள மாவு : 2 ஸ்பூன்
செய்முறை
மீன் துண்டுகளை கழுவி எடுத்து கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் சோள மாவு , மிளகாய் தூள் , உப்பு , இன்ஜி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
பின் மீன் துண்டுகள் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்
பின் எண்ணெய் சூடு செய்து 2 நிமிடம் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்
மீன் மொய்லி
தேவையான பொருட்கள்
மீனை ஊறவைக்க (மேரினேட்):
நடுத்தரமான மீன்: 3 (துண்டுகளாக்கியது)
எலுமிச்சைச் சாறு: 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்: 1/4 தேக்கரண்டி
மிளகுத்தூள்: 1 தேக்கரண்டி
உப்பு: தேவைக்கு
குழம்பு செய்ய:
தேங்காய் எண்ணெய் : 2 மேசைக்கரண்டி
கடுகு: 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை: 1 கொத்து
இஞ்சி & பூண்டு (நறுக்கியது/விழுது) : தலா 1 தேக்கரண்டி
கீறிய பச்சை மிளகாய்: 3
நறுக்கிய வெங்காயம் : 2 (நடுத்தர அளவுள்ளது)
தக்காளி: 2-3 (நறுக்கியது)
முதல் & இரண்டாம் தேங்காய்ப்பால் : 1 கப்
மூன்றாம் தேங்காய்ப்பால் : 1 கப்
மஞ்சள் தூள்: 1/4 தேக்கரண்டி
மிளகுத்தூள்: 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் மீன் துண்டுகளில் எலுமிச்சைச்சாறு,மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி ஊற வைக்கவும்
தவாவில் எண்ணெய் ஊற்றி மீன் துண்டுகளை போட்டு பொரிக்கவும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பாதி வெந்தவுடன் எடுத்து விடவும்
மண்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொறிந்ததும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்
வெங்காயம் வெந்ததும் (பொன்னிறமாக தேவையில்லை) தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும் (தக்காளி குழைய கூடாது)
அடுத்து மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்
பின்னர் இரண்டாம் மற்றும் மூன்றாம் தேங்காய்ப்பால் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்
பிறகு அதில் பொரித்த மீன் சேர்த்து குறைந்த தீயில் 8-10 நிமிடங்கள் வேக வைக்கவும். இடையில் கரண்டி பயன்படுத்தாமல் இலேசாக சட்டியை அசைத்து கலக்கி விடவும்
இறுதியாக மண்சட்டியை அடுப்பிலிருந்து இறக்கி முதல் தேங்காய்ப்பால் சேர்த்து சிறிது கறிவேப்பிலைகள் தூவி பிறகு அடுப்பில் ஏற்றி 1 நிமிடம் மட்டும் குறைந்த தீயில் வைத்து இறுதியாக ஒரு முறை கலக்கி விட்டு அடுப்பை அணைக்கவும்
சுவையான அதிக காரம் இல்லாத மணமான மீன் மொய்லி தயார்
ஆப்பம், இடியாப்பம், சோறு என அனைத்திற்கும் ஏற்ற குழம்பு இது!!
தந்தூரி மீன்
தேவையான பொருட்கள்
முழு அயிலை மீன் 3
எண்ணெய் தேவைக்கு
ஊற வைக்க: மிளகாய் தூள் 1 1/2 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மல்லி தூள் 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
சோம்பு பொடி 1 ஸ்பூன்
மிளகு தூள் 1/2 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
தண்ணீர் தேவைக்கு
செய்முறை
அயிலை மீனை வால் மற்றும் வாய் ஓரம் பகுதியில் மட்டும் வெட்டி கழிவகற்றி சுத்தப்படுத்தவும். தேவைப்பட்டால் தலையும் நீக்கி விடலாம். பின்னர் மசாலா ஏற்க மீனில் நீளமாக கீறல்கள் ஏற்படுத்தவும்.
அதன் பின்னர் ஊற வைக்க கொடுத்துள்ள மசாலாவில் மீனை நன்றாக புரட்டி குறைந்தது 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி மீனின் இரு பக்கமும் லேசாக பொரித்து எடுக்கவும். நன்றாக வேக தேவையில்லை. இரு பக்கமும் திருப்ப முடிந்த அளவு வெந்தால் போதும்.
பின்னர், ஒரு இடுக்கி அல்லது 2 கரண்டிகளின் உதவியால் மீனைப் பிடித்து நேரடியாக கேஸ் தீயில் காட்டவும். எல்லா பக்கமும் நன்றாக வேக வைக்கவும். அருமையான ஸ்மோக்கி மணம் வரும்.
மீனின் உள்பக்கம் உட்பட அனைத்து பாகமும் வெந்ததும் தட்டில் வைத்து சூடாகப் பரிமாறவும்.
அட்டகாசமான தந்தூரி மீன் தயார். இது பார்ட்டிக்கு பரிமாற ஒரு சிறந்த டிஷ்.
மீன் வறுவல் மசாலா
தேவையான பொருட்கள்
கல் பாசி - 2 துண்டுகள்
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை - 1/2 தேக்கரண்டி
கிராம்பு - 4 எண்ணிக்கை 's
முத்து வெங்காயம் - 8 எண்ணிககை 's
காய்ந்த சிவப்பு மிளகாய் - 4 எண்ணிக்கை 's
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
மீன் (எந்த வகையாக இருந்தாலும்) - 600 கிராம் ( நான் சீலா மீனைப் பயன்படுத்தினேன்)
சுவைக்கேற்ற உப்பு
மீனை பொரிப்பதற்கு - 200 மிலி (எண்ணெயும் மீதமுள்ள மசாலாவும்)
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி மசாலாக்களை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும், முதலில் கல் பாசியைச் சேர்க்கவும். அதன்பின் சோம்பு, சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கி அதன்பின் முத்து வெங்காயத்தைச் சேர்க்கவும். முத்து வெங்காயம் பெரியதாக இருந்தால் நான்கு துண்டுகளாக நறுக்கி நன்றாக வதக்கிக்கொள்ளவும். அப்போதுதான் சீக்கரம் வேகும், அதன்பின் காய்ந்த சிவப்பு மிளகாயைச் சேர்க்கவும்.
ஆறவைக்க எடுத்து வைத்து உப்பு சேர்க்கவும்.
இப்போது உணவு பிராசசரில் மென்மையானச் சாந்தாக அரைத்து 1/4 டம்பளர் தண்ணீர் சேர்க்கவும்.
இப்போது உங்கள் மீன் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மசாலாக்களுடன் மேரினேட் செய்து பிரிட்ஜில் 5 மணி நேரம் வைக்கவும்.
அதன்பிறகு நீங்கள் வறுப்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் பிரிட்ஜில் இருந்து எடுக்கவும். வெங்காயத் துண்டுகளோடும் 1/4 எலுமிச்சைப் பழத்தோடு வறுத்துப் பரிமாறவும்.
சுறா மீன் கட்லெட்
தேவையான பொருட்கள்
சுறா மீன் - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி + 3/4 தேக்கரண்டி
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 பெரிய அளவு (தோலுரித்து மசிக்கப்பட்டது)
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கப்பட்டது
பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கப்பட்டது
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி - 2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கப்பட்டது)
சிவப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகத் தூள் - 3/4 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
முட்டை - 2
பிரெட் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு + 1 தேக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும். சுத்தப்படுத்தப்பட்டுக் கழுவப்பட்ட மீன் துண்டுகளைப் போடவும். மூடியால் மூடி 5 நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை நிறுத்தவும்.
சூடாக இருக்கும்போதே தோலை உரித்து எலும்புகளை நீக்கவும். கட்டிகள் ஏதுமில்லாமல் மீனை உங்கள் கைகளால் மசித்துக்கொள்ளவும்.
1 தேக்கரண்டி எண்ணெயை வானலியில் சூடுபடுத்தி இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து 2-3 நிமிடங்கள் சிறு தீயில் வறுக்கவும். நறுக்கப்பட்ட வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் சேர்த்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
இப்போது மசித்த உருளைக்கிழங்கு, மசித்த மீன், உப்பு, 3/4 தேக்கரண்டி மஞ்கள் தூள், சிவப்பு மிளகாய்த் தூள், பெருஞ்சீரகம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து ஈரப்பதம் போகும்வரை வறுக்கவும். முட்டையை உப்புடன் சேர்த்து அடித்துக்கொள்ளவும்.
மீன் கலவை ஆறியதும் எலுமிச்சை பந்து அளவு உருண்டை பிடித்து தட்டி 1/4 இன்ச் மொத்தத்தில் செய்துகொள்ளவும்.
தட்டையான உருண்டைகளை அடித்த முட்டையில் முக்கி பிறகு பிரட் தூளில் பிரட்டிக்கொள்ளவும். எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி அவற்றின் இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை பொரித்துக்கொள்ளவும்.
மீன் கோலா உருண்டை
தேவையான பொருட்கள்
வஞ்சரம் மீன் - 250 கிராம்
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -2
இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் -1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு -1 வேக வைத்தது
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
கரம் மசாலா -1/2 தேக்கரண்டி
தேங்காய் - சிறிய துண்டு 1
பொரிகடலை-2 தேக்கரண்டி
முந்திரி -7
கார்ன் பிளார் -2 தேக்கரண்டி
மல்லி இலை - சிறிதளவு
கருவேப்பிலை -சிறிதளவு
வாழை இலை - 1 சிறியது
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
முதலில் மீனை நன்கு கழுவி அதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள் ,கரம் மசாலா தூள்,உப்பு சேர்த்து மிக்ஸ் செய்யவும் .
பின்பு மீனை வாழை இலையில் வைத்து மடித்து இட்லி பாத்திரத்தில் 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
இப்பொழுது மீனை இலையில் இருந்து எடுத்து தோல்,முள்ளை நீக்கி எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பெருஞ்சீரகம் ,பொரிகடலை,நறுக்கிய வெங்காயம் ,முந்திரி ,பச்சை மிளகாய் ,இஞ்சி பூண்டு விழுது தேங்காய் துண்டு ,கருவேப்பிலை ,மல்லி இலை,இவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இறுதியாக மிளகாய் தூள்,உப்பு சேர்த்து வதக்கி ஆறவிடவும் .
ஆறிய பின்பு மிக்சியில் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும் .
வேகவைத்த மீனையும் மிக்சியில் ஒரு முறை இலேசாக அரைத்துக்கொள்ளவும் .
இப்பொழுது அரைத்த மசாலாவுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின்பு இதனுடன் அரைத்த மீன்,கார்ன் பிளார், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
மீன் கோலா உருண்டை செய்வதற்கு மாவு தயார்.
மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும் .
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை போட்டு பொரிக்கவும்
இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து கோல்டன் ப்ரவுனாக மாறியதும் எண்ணெய்யில் இருந்து எடுக்கவும்
இப்பொழுது சுவையான மொரு மொருப்பான மீன் கோலா உருண்டை தயார்.
சாளை மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
சாளை மீன் - கால் கிலோ (8-10 மீன்கள்)
பெரிய வெங்காயம் - 1 அல்லது சின்ன வெங்காயம் 15
பூண்டு - 5 பற்கள்
தக்காளி -1
பச்சை மிளகாய் -2
நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
மீன் மசாலா - 1 டேபிள்ஸ்பூன் (குவியலாக)
அல்லது மல்லித்தூள் -1-2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் 1 -2 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்,மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
நறுக்கிய மல்லி இலை சிறிது.
உப்பு - தேவைக்கு.
செய்முறை
மீனின் தலை, வயிற்றை கத்திரிக்கோல் கொண்டு வெட்டி வயிற்றை சுத்தம் செய்து, செதில் எடுத்து நன்கு அலசி வைக்கவும்.
புளியைக்கரைத்து வைக்கவும். வெங்காயம், பூண்டு மிகப்பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி கையால் பிணைந்து வைக்கவும். மிளகாய் கீறி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை வெடிக்க விடவும், வெங்காயம் பூண்டு பொன்னிறமாக வதக்கவும். தக்காளி, பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து மூடி சிம்மில் வைத்து கூட்டு போல் ஆக வேண்டும்.
மசாலா தூள்கள் சேர்க்கவும். பிரட்டி விட்டு புளிக்கரைசல் விடவும். நன்கு கொதித்து பச்சை வாடை போக வேண்டும். உப்பு சரி பார்க்கவும்.
மீனைப் போடவும். வெந்து மேலே வந்தவுடன் அடுப்பை சிம்மில் சிறிது வைத்து அணைக்கவும்.
சுவையான சுலபமாகச் செய்யக் கூடிய மீன் குழம்பு தயார். இதற்கு தேங்காய் சேர்க்கவில்லை.
இதனை வெறுஞ்சோறு, இட்லி, தோசையுடன் பரிமாறலாம். நறுக்கிய மல்லி இலை தூவி அலங்கரிக்கலாம்.
வஞ்சர மீன் ரோஸ்ட்
தேவையான பொருட்கள்
மீன்-5 துண்டுகள்
மிளகாய் தூள்-3ஸ்பூன்
மிளகு பொடி-2 ஸ்பூன்
சீரகத் தூள்-2ஸ்பூன்
தக்காளி சாஸ்-1 1/2 ஸ்பூன
கடலை மாவு-2 ஸ்பூன
கார்ன் ஃப்ளார்- 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு-2 ஸ்பூன்
முட்டை -1 வெள்ளைக் கரு
இஞ்சி பூண்டு விழுது-1 1/2 ஸ்பூன்
எண்ணெய்- பொரிப்பதற்கு
செய்முறை
முதலில் மீனை சுத்தம் செய்து உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 15 நிமிடம் ஊற விடவும்.
பின்பு ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து 30 நிமிடம் வைத்து விடவும்.
பின்பு தவாவை சூடு படுத்தி எண்ணெய் காய வைத்து பொறித்து எடுக்கவும்.
சுவையான மீன் ரோஸ்ட் தயார். மிகவும் சுவையாக இருக்கும்.
நெத்திலி மீன் கறி
தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் -1/4 கிலோ
நறுக்கிய வெங்காயம் -100 கிராம்
நறுக்கிய தக்காளி -100 கிராம்
பச்சை மிளகாய் -2
புளி - பெரிய நெல்லியளவு
தேங்காய்ப்பால் -1/2 கப்
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
கடுகு,வெந்தயம் - தலா 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது அல்லது பூண்டு தட்டியது -1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -1- 1 . 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2- 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
நறுக்கிய மல்லி இலை
உப்பு - தேவைக்கு.
செய்முறை
நெத்திலி மீனை வயிற்றை பிளந்து முள்ளை அப்படியே எடுத்து விடலாம்.தலைலையையும் எடுக்கவும்.பின்பு நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடானவுடன் கடுகு வெந்தயம்,கருவேப்பிலை தாளிக்கவும்.வெங்காயம் சிவற வதக்கி இஞ்சி பூண்டு சேர்க்கவும்
நன்கு சிம்மில் வைத்து வதக்கவும்.
அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளி,மிளகாய் சேர்க்கவும் உப்பு சேர்த்து மூடினால் கூட்டு போல் ஆகும்.
மசாலாத்தூள் வகைகள் சேர்க்கவும்.நன்கு வதக்கி புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.உப்பு புளி சரி பார்க்கவும்.
வாடை மடங்கியதும் மீனைச் சேர்க்கவும்.ஐந்து நிமிடம் கொதிக்கட்டும்.கெட்டியாகும்.
நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.அடுப்பை அணைக்கவும்.
சுவையான நெத்திலி மீன் கறி தயார்.
சாதம்,சப்பாத்தி,இட்லி,தோசை,ஆப்பம் உடன் பரிமாறலாம்.
கேரளத்து மீன் கறி
தேவையான பொருட்கள்
மோத மீன் அரை கிலோ
மிளகாய்த் தூள் 2 சிட்டிகை
மல்லித் தூள் 2 சிட்டிகை
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
காஷ்மீரி மிளகாய்த்தூள் 1 சிட்டிகை
வெந்தயம் ஒரு ஸ்பூன்
பூண்டு 2 பல்
இஞ்சி சிறிதளவு
தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
கொடம்புளி 6
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை
முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து துண்டு துண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
பின்பு இஞ்சியையும் பூண்டையும் சிறிது சிறிதாக அரிந்து வைத்து கொள்ளவும்
இப்பொழுது அடுப்பை சூடேற்றி அதில் மண் மண்சட்டியை வைக்கவும்.
அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு பின்பு சூடேறியதும் வெந்தயம் இடவும்.
வெந்தயம் பொன்னிறமாக வதங்கியதும் அரிந்துவைத்துள்ள இஞ்சியையும் பூண்டையும் இடவும்.
நன்றாக வதங்கியதும் மல்லித்தூள் ,மிளகாய் தூள் காஷ்மீரி மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்இவை மூன்றையும் இடவும்.
பின்பு நமக்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு அதனுடன் புளி, உப்பு இரண்டையும் சேர்க்கவும்,
நன்றாக கொதி வந்த உடன் வெட்டி வைத்துள்ள மீன் இடவும்.
மீன் நன்றாக வெந்தவுடன் அதனுடன் கறிவேப்பிலை தூவி குழம்பை இறக்கி பரிமாறவும்.
சூடான சுவையான சத்துமிக்க மீன் குழம்பு ரெடி!!!
சீலா மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
சீலா மீன் ஒரு கிலோ
தேங்காய் ஒரு மூடி
மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
மல்லி தூள் 3 டீஸ்பூன்
தக்காளி-2
புளி -எலுமிச்சம் பழ அளவு
பச்சை மிளகாய் இரண்டு நீளவாக்கில் நறுக்கியது
பூண்டு 5 பல்
எண்ணெய் 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு கொத்தமல்லி கருவேப்பிலை
செய்முறை
புளியைக் கரைத்து எடுத்துக் கொள்ளவும்
கழுவிய மீனில் சிறிதளவு உப்பு புளி தண்ணீர் சேர்க்கவும்
மிக்ஸியில் தேங்காய் கொத்த மல்லி பொடி மிளகாய் பொடி மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும்
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக லேசாக வதக்கிக் கொள்ளவும்
இதனை கழுவிய மீனுடன் சேர்த்து கொள்ளவும்
அரைத்த மசாலாவையும் மீனுடன் சேர்த்து கொள்ளவும்
இப்போது இந்தக் கலவையை அடுப்பில் வைக்கவும்
மீன் வேகம் வரை நன்றாக கொதிக்க விடவும்
மற்றொரு வாணலியில் எண்ணெய் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து இதனுடன் சேர்க்கவும்
மீன் வெந்தவுடன் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்
சுவையான சீலா மீன் குழம்பு ரெடி
மீன் பிங்கர் பிரை
தேவையான பொருட்கள்
முள் இல்லாத மீன் 250 கிராம்
பிரட் தூள் 200 கிராம்
மைதா 3 ஸ்பூன்
கோன் பிளவர் 2ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மிளகாய் தூள் 1ஸ்பூன்
மிளகு தூள் 1/2 ஸ்பூன்
ஒரு சிட்டிகை ஜீரா தூள்
ஒரு சிட்டிகை மல்லி தூள்
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
எண்ணெய் 200 கிராம்
முட்டை 1
செய்முறை
முதலில் முள் நீக்கிய மீனை விரல் அளவிற்கு கட் பண்ணவும்
அப்புறமாக ஒரு தனி பாத்திரத்தில் கட் பண்ணின மீன், மஞ்சள் தூள், மசாலா தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட், ஜீரா தூள், மல்லி தூள் முட்டை, கோன் பிளவர்,மைதா ஒட்டு நன்காக விரவவும்.
தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விரவலாம்.இனி மீனை பிரட் பொடியில் ஒவ்வரு மீன் துண்டுகளையும் தனி தனியாக முக்கி வைக்கவும்.
அதன்பின் எண்ணெய் விட்டு காயவைக்க வேண்டும். காய்ந்ததும் மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்
இப்போது சுவையான மீன் விரல் ரெடி
முட்டை உங்கள் விருப்பம். முட்டை சேர்க்காமலும் இந்த மீன் விரல் பண்ணலாம்.
அயிரை மீன் குழம்பு'
தேவையான பொருட்கள்
அயிரை மீன் - கால் கிலோ
நீள் வாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் - கால் கிலோ
தக்காளி -2
பச்சை மிளகாய் கீறியது -2
நறுக்கிய பூண்டு பற்கள் - 6
மல்லி,கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு,வெந்தயம் - தலா அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
வீட்டு குழம்பு/ அல்லது மீன் மசாலா -2 மேஜைக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு.
அரைக்க:-
தேங்காய்த்துருவல் 2-3 மேஜைக்கரண்டி
முந்திரிக்குருணை -1 மேஜைக்கரண்டி
செய்முறை
அயிரை மீனை முதலில் உப்பு போட்டு மூடி வைக்கவும்.அதன் துடிப்பு அடங்கியவுடன் நன்கு உலசி, அலசி கழுவவும்.தண்ணீர் வடித்து வைக்கவும்.
மீன் மசாலா ஒரு மேஜைக்கரண்டி,உப்பு சேர்க்கவும்.
புளித்தண்ணீரும் சேர்த்து, கலந்து சிறிது இருக்கட்டும்.
நறுக்க வேண்டியவைகளை நறுக்கி தயார் செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடானவுடன் கடுக்ய்,வெந்தயம்,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அத்துடன் நறுக்கிய வெங்காயம்,பூண்டு,மிளகாய்,தக்காளி சேர்க்கவும்.
மிளகாய்த்தூள் உப்பு போட்டு மூடி வதங்க விடவும்.
வதங்கியதும் ,மீன் மசாலா ஒரு மேஜைக்கரண்டி சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் சேர்க்கவும்.உங்கள் மசாலா காரமாக இருந்தால் அளவு குறைக்கவும்.ஏற்கனவே மீனில் ஊற வைத்துள்ளோம்.
புளி,மசாலாவுடன் உள்ள மீனைச் சேர்க்கவும்.
கொதி வரட்டும்.மீன் வெந்து வரட்டும்.உப்பு சரி பார்க்கவும்.
தேங்காய்த்துருவல் முந்திரி குருணை சேர்த்து அரைக்கவும்.
அரைத்து மீன் குழம்பில் விடவும்.தேங்காய் விடாமலும் செய்யலாம்.உங்கள் விருப்பம்.
சிம்மில் வைத்து எண்ணெய் மேலே வரவும் அடுப்பை அணைக்கவும்.
சுவையான அயிரை மீன் குழம்பு தயார். சூடான சோறு,அப்பளம்,பொரியலுடன் பரிமாறவும்.
மத்தி மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
மத்தி மீன்- 1/2 கிலோ
சின்ன வெங்காயம்- ஒரு கை
தக்காளி-5-6
கருவேப்பிலை
வரமிளகாய்-6-7
உப்பு
மஞ்சள் தூள்-சிறிது
தேங்காய் எண்ணெய்-2டீஸ்பூன்
வெந்தயம்-1டீஸ்பூன்
செய்முறை
மத்தி மீனை சுத்தம் செய்தல்
வறுத்து அரைக்க வேண்டியவை சின்ன வெங்காயம், தக்காளி,வ.மி, கருவேப்பிலை.அரைத்த விழுதுடன்,புளியை கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.மஞ்சள்த்தூள், உப்பு சிறிது குறைவாகவே சேர்க்கவும்.ஏன் என்றால் மீன்னில் ஏற்கனவே உரைப்பு உள்ளது.நன்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.பிறகு சுண்டியவுடன் மீனைச் சேர்க்கவும்.5 நிமிடம் கழித்து சிம்மில் வேக விடவும்.
பின்னர் கடைசியாக ஒரு தேக்கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் வெந்தயம் சேர்த்து பொன்னிறம் ஆனவுடன் கருவேப்பிலையை சேர்த்து மீன்குழம்பில் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

மீன் கிரேவி
தேவையான பொருட்கள்
மீன்-6 துண்டுகள்
நறுக்கிய வெங்காயம் -1 கப்
தக்காளி -1 கப்
பச்சை மிளகாய் -1
உரித்த பூண்டு-10 பல்
மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
சீரகம் தூள்-1/2 ஸ்பூன்
மல்லி தூள்-1ஸ்பூன்
வெந்தயம் -1/2 ஸ்பூன்
முழு மிளகு -1/2 ஸ்பூன்
கருவேப்பிலை -1 கொத்து
எண்ணெய் -3 ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் மிளகு,வெந்தயம் சேர்க்கவும்
பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்,வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு பூண்டு கறிவேப்பிலை சேர்த்து இதனுடன் உப்பு,சேர்க்க வேண்டிய பொடிகளையும் சேர்த்து சிறிது நீர் சேர்க்கவும்
இது கொதி வந்ததும் மீன் துண்டுகள் சேர்த்து அடுப்பை 10 நிமிடம் குறைவான தணலில் வைக்கவும்...எண்ணெய் பிரிந்ததும் இறக்கி பரிமாறவும்.... சுவையான மீன் கிரேவி தயார்....
மீன் ஷவர்மா
தேவையான பொருட்கள்
வஞ்சரம் மீன் அரை கிலோ
மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் கால் டீஸ்பூன்
கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
சாட் மசாலா ஒரு டீஸ்பூன்
ஆயில் 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் ஒன்று
கொத்தமல்லி இலை சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு
மைதா 300 கிராம்
ஈஸ்ட் ஒரு டீஸ்பூன்
உப்பு ஒரு டீஸ்பூன்
சர்க்கரை ஒரு டீஸ்பூன்
தண்ணீர் ஒரு கப்
முட்டை கோஸ் ஒரு கப்
தக்காளி ஒரு கப்
துருவிய கேரட் ஒரு கப்
நீளமாக கட் பண்ணினா குடைமிளகாய் ஒரு கப்
வினிகர் ஒரு மூடி
செய்முறை
சவர்மா பிரட் செய்ய தேவையான பொருட்கள்
மைதா 300 கிராம்
ட்ரை ஈஸ்ட் ஒரு டீஸ்பூன்
சர்க்கரை ஒரு டீஸ்பூன்
சால்ட் ஆப் டீஸ்பூன்
வெதுவெதுப்பான தண்ணீர் ஒரு கப்
ஆயில் 2 டேபிள்ஸ்பூன்
பிரட் செய்முறை
முதலில் வெதுவெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட் ,சர்க்கரை, உப்பு போட்டு மிக்ஸ் பண்ணி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்
பிறகு அதை மைதா மாவுடன் கலந்து சப்பாத்தி மாவு பிசையும் பதம் பிசைந்து எடுத்து வைக்க வேண்டும்
அதை ஒரு மணி நேரம் ஈரத்துணியால் மூடி வைக்க வேண்டும்
பிறகு அந்த மாவை எடுத்து நன்கு பிசைந்து மறுபடியும் மூடி வைக்க வேண்டும்
அரை மணி நேரம் கழித்து அதை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி மாவு விடுவது போல் விட்டு அதை தவ்வாவில் சுட்டு எடுக்க வேண்டும்
இப்போது சவர்மா பிரட் ரெடி
ஃபிஷ் பில்லிங் செய்முறை
மீனுடன் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து அதை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
அதை உதிரி உதிரியாக உதிர்த்து விட்டு அதனுடன் மிளகாய்த்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள்
கரம் மசாலா சாட் மசாலா உப்பு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கிய இஞ்சி கறிவேப்பிலை போட்டு நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக தட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தட்டி வைத்த மீன் கட்லெட்டை சேலவ் ஃப்ரை பண்ணி எடுக்க வேண்டும்
மற்றொரு பாத்திரத்தில் நீளமாக கட் பண்ணின கோஸ் கேரட் குடைமிளகாய் வினிகர் உப்பு தக்காளி சேர்த்து மிக்ஸ் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும்
இந்தக் கலவையுடன் மயோனைஸ் அல்லது பூண்டு சாஸ் வினிகர் உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணி வைக்க வேண்டும்
இப்போது பிரெட்டின் மேல் டொமேடோ கெட்சப், மயோனைஸ், சேலட், மீன் கட்லட் வைத்து ரோல் பண்ணி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
இப்போது சுவையான மீன் சவர்மா ரெடி
மீன் கட்லட்
தேவையான பொருட்கள்
மீன் (முள் இல்லாத வஞ்சிரம் மீன்)- 400 கிராம்
உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 5
சீரகத்தூள், மிளகுத்தூள், மிளகாய்தூள் - தலா1/2 ஸ்பூன் ,
இஞ்சி,பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி, புதினா - 1 தேவையான அளவு
ரஸ்க் - 4 (தேவைக்கு ஏற்ப) -
முட்டை - 2 (தேவைக்கு ஏற்ப
எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன் ,
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு,- தேவையான அளவ
செய்முறை
முதலில் மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
இதன் பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா இலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனை மீன் கலவையில் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இந்த கலவையில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து அகன்ற பாத்திரத்தை உடைத்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக தட்டி முட்டையில் பிரட்டி பின், ரஸ்க் தூளில் புரட்டி எடுத்து பொரித்தால் சுவையான மீன் கட்லெட் தயார்.
மீன் தொக்கு
தேவையான பொருட்கள்
மீன் ஒரு கப்
சின்ன வெங்காயம் ஒரு கப்
தக்காளி-2
மிளகாய் தூள் ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் அரை மேசைக்கரண்டி
உப்பு சிறிதளவு
மல்லி இலை சிறிதளவு
நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி
வெந்தயம் அரை மேசைக்கரண்டி
தேங்காய் ஒரு சில்
பெருஞ்சீரகம் அரை மேசைக்கரண்டி
செய்முறை
கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து முழுதாக சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்
நன்கு வதக்கிக் கொள்ளவும்
தக்காளி வதங்கியவுடன் அடுப்பை அணைக்கவும்
சிறிது ஆற விடவும்
ஆறிய உடன் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்
பிறகு அதே கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து வெந்தயத்தை சேர்க்கவும்
அரைத்து வைத்த கலவையை எண்ணெயில் போட்டு நன்கு வதக்கவும்
பச்சை வாசனை போனவுடன் மசாலாத்தூள் சேர்க்கவும்
சிறிது தண்ணீர் சேர்த்து மீன் துண்டுகளை போட்டு கொதிக்கவிடவும்
ஒரு சில் தேங்காயுடன் சிறிது பெருஞ்சீரகத்தை சேர்த்து மிக்சியில் நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்
மீன் வெந்து தண்ணீர் சிறிது வற்றியவுடன் தேங்காயை சேர்க்கவும்
தேங்காய் கொதித்தவுடன் 2 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்
மல்லி இலை சேர்த்து பரிமாறவும்
மீன் கூட்டு
தேவையான பொருட்கள்
விருப்பமான மீன் - 4 துண்டு
வெங்காயம் -2
தக்காளி - 1
புலி - சிறிய நெல்லி அளவு
உப்பு- தேவைக்கு
மஞ்சள் தூள் - 1/8 ஸ்பூன்
மல்லி தூள் - 1/4 ஸ்பூன்
சீரக தூள் - 1/8 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/8 ஸ்பூன்
மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கருவேப்பிலை சிறிது
மல்லி இலை சிறிது
எண்ணெய் தேவைக்கு
தாளிக்க
கடுகு சிறிதளவு
கருவேப்பிலை சிறிதளவு
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை சேர்க்கவும்
அதனுடன் அரைத்த வெங்காய விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு சேர்த்து சிறிது வதக்கவும்
வதக்கிய பின் அரைத்த தக்காளி விழுது உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மிளகு தூள் மல்லித்தூள் சீரகத்தூள் சேர்க்கவும்
இதனுடன் புளி கரைசல் மற்றும் மீன் துண்டுகளை சேர்த்து வேக விடவும்
வெந்தபின் மல்லி இலை தூவி பரிமாறவும்
மீன் சால்னா
தேவையான பொருட்கள்
துண்டு மீன் முக்கால் கிலோ
நல்லெண்ணெய் 100 கிராம்
வெங்காயம் ஒரு கப்
தக்காளி நான்கு
இஞ்சி ஐம்பது கிராம் பூண்டை 50 கிராம்
சோம்பு ஒரு மேசைக்கரண்டி
சீரகம் ஒன்றரை மேசைக்கரண்டி
மிளகு ஒரு மேஜைக்கரண்டி
முந்திரிப்பருப்பு 2 மேஜைக்கரண்டி
கசகசா ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் தேவைக்கு
மிளகாய் வத்தல் 3
மல்லி செடி பொடியாக நறுக்கியது சிறிது
செய்முறை
இஞ்சி பூண்டு தேங்காய் முந்திரி கசகசா மிளகு சோம்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ளவும்
மீனை கழுவி அதில் இஞ்சிபூண்டு விழுது சிறிது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து அரைமணி நேரம் ஊற வைத்து தவாவில் அரைவேக்காடு வேக வைத்து எடுக்கவும்
அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் சேர்த்து மிளகாய்வத்தல் சோம்பு கருவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும்.பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கிய பின் தக்காளி சேர்க்கவும்.பின் உப்பு சேர்க்கவும் பின் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
மிக்ஸியில் அரைத்த மசாலாவை சேர்த்து மசாலா வாசம் போகும் வரை ஐந்து நிமிடம் வதக்கவும்
பின் சிறிது தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்
பின் பொரித்த மீனை சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் வைத்து மீனை வேக வைக்கவும்
கிரேவியில் எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைத்து மல்லிச் செடி தூவவும்
மீன் சால்னா ரெடி
மீன் சம்பல்
தேவையான பொருட்கள்
மீன் கால் கிலோ
மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
பெரிய தக்காளி 4
புளி பெரிய நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம் 10 to 15
வத்தல் மிளகாய் இருபது
உப்பு தேவைக்கேற்ப
என்னை 6 ஸ்பூன்
செய்முறை
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்தபின் உப்பு மஞ்சள்தூள் மிளகுத்தூள் சேர்த்து கடாயில் சிறிது எண்ணெய் விட்டு லேசாக ஒரு நிமிடம் ப்ரை பண்ணி எடுத்து வைக்கவும்
வத்தல் மிளகாய் வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து பின்பு தண்ணீர் வடிகட்டி மிக்ஸியில் நைசாக அரைத்து வைக்கவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்
அரைத்துவைத்துள்ள தக்காளிப் பழத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
இப்பொழுது உப்பு அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்ட் சேர்க்கவும்
புளியை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி சேர்க்கவும்
இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்
புளி வாசனை போனவுடன் லேசாக பொரித்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை சேர்க்கவும்
கிரேவி கெட்டியாக வந்ததும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்
காரசாரமான மீன் சம்பல் ரெடி
தந்தூரி மீன்
தேவையான பொருட்கள்
முழு அயிலை மீன் 3
எண்ணெய் தேவைக்கு
ஊற வைக்க: மிளகாய் தூள் 1 1/2 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மல்லி தூள் 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
சோம்பு பொடி 1 ஸ்பூன்
மிளகு தூள் 1/2 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
தண்ணீர் தேவைக்கு
செய்முறை
அயிலை மீனை வால் மற்றும் வாய் ஓரம் பகுதியில் மட்டும் வெட்டி கழிவகற்றி சுத்தப்படுத்தவும். தேவைப்பட்டால் தலையும் நீக்கி விடலாம். பின்னர் மசாலா ஏற்க மீனில் நீளமாக கீறல்கள் ஏற்படுத்தவும்.
அதன் பின்னர் ஊற வைக்க கொடுத்துள்ள மசாலாவில் மீனை நன்றாக புரட்டி குறைந்தது 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி மீனின் இரு பக்கமும் லேசாக பொரித்து எடுக்கவும். நன்றாக வேக தேவையில்லை. இரு பக்கமும் திருப்ப முடிந்த அளவு வெந்தால் போதும்.
பின்னர், ஒரு இடுக்கி அல்லது 2 கரண்டிகளின் உதவியால் மீனைப் பிடித்து நேரடியாக கேஸ் தீயில் காட்டவும். எல்லா பக்கமும் நன்றாக வேக வைக்கவும். அருமையான ஸ்மோக்கி மணம் வரும்.
மீனின் உள்பக்கம் உட்பட அனைத்து பாகமும் வெந்ததும் தட்டில் வைத்து சூடாகப் பரிமாறவும்.
அட்டகாசமான தந்தூரி மீன் தயார். இது பார்ட்டிக்கு பரிமாற ஒரு சிறந்த டிஷ்.
மீன் வறுவல் மசாலா
தேவையான பொருட்கள்
கல் பாசி - 2 துண்டுகள்
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை - 1/2 தேக்கரண்டி
கிராம்பு - 4 எண்ணிக்கை 's
முத்து வெங்காயம் - 8 எண்ணிககை 's
காய்ந்த சிவப்பு மிளகாய் - 4 எண்ணிக்கை 's
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
மீன் (எந்த வகையாக இருந்தாலும்) - 600 கிராம் ( நான் சீலா மீனைப் பயன்படுத்தினேன்)
சுவைக்கேற்ற உப்பு
மீனை பொரிப்பதற்கு - 200 மிலி (எண்ணெயும் மீதமுள்ள மசாலாவும்)
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி மசாலாக்களை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும், முதலில் கல் பாசியைச் சேர்க்கவும். அதன்பின் சோம்பு, சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கி அதன்பின் முத்து வெங்காயத்தைச் சேர்க்கவும். முத்து வெங்காயம் பெரியதாக இருந்தால் நான்கு துண்டுகளாக நறுக்கி நன்றாக வதக்கிக்கொள்ளவும். அப்போதுதான் சீக்கரம் வேகும், அதன்பின் காய்ந்த சிவப்பு மிளகாயைச் சேர்க்கவும்.
ஆறவைக்க எடுத்து வைத்து உப்பு சேர்க்கவும்.
இப்போது உணவு பிராசசரில் மென்மையானச் சாந்தாக அரைத்து 1/4 டம்பளர் தண்ணீர் சேர்க்கவும்.
இப்போது உங்கள் மீன் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மசாலாக்களுடன் மேரினேட் செய்து பிரிட்ஜில் 5 மணி நேரம் வைக்கவும்.
அதன்பிறகு நீங்கள் வறுப்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் பிரிட்ஜில் இருந்து எடுக்கவும். வெங்காயத் துண்டுகளோடும் 1/4 எலுமிச்சைப் பழத்தோடு வறுத்துப் பரிமாறவும்.
சுறா மீன் கட்லெட்
தேவையான பொருட்கள்
சுறா மீன் - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி + 3/4 தேக்கரண்டி
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 பெரிய அளவு (தோலுரித்து மசிக்கப்பட்டது)
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கப்பட்டது
பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கப்பட்டது
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி - 2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கப்பட்டது)
சிவப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகத் தூள் - 3/4 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
முட்டை - 2
பிரெட் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு + 1 தேக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும். சுத்தப்படுத்தப்பட்டுக் கழுவப்பட்ட மீன் துண்டுகளைப் போடவும். மூடியால் மூடி 5 நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை நிறுத்தவும்.
சூடாக இருக்கும்போதே தோலை உரித்து எலும்புகளை நீக்கவும். கட்டிகள் ஏதுமில்லாமல் மீனை உங்கள் கைகளால் மசித்துக்கொள்ளவும்.
1 தேக்கரண்டி எண்ணெயை வானலியில் சூடுபடுத்தி இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து 2-3 நிமிடங்கள் சிறு தீயில் வறுக்கவும். நறுக்கப்பட்ட வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் சேர்த்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
இப்போது மசித்த உருளைக்கிழங்கு, மசித்த மீன், உப்பு, 3/4 தேக்கரண்டி மஞ்கள் தூள், சிவப்பு மிளகாய்த் தூள், பெருஞ்சீரகம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து ஈரப்பதம் போகும்வரை வறுக்கவும். முட்டையை உப்புடன் சேர்த்து அடித்துக்கொள்ளவும்.
மீன் கலவை ஆறியதும் எலுமிச்சை பந்து அளவு உருண்டை பிடித்து தட்டி 1/4 இன்ச் மொத்தத்தில் செய்துகொள்ளவும்.
தட்டையான உருண்டைகளை அடித்த முட்டையில் முக்கி பிறகு பிரட் தூளில் பிரட்டிக்கொள்ளவும். எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி அவற்றின் இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை பொரித்துக்கொள்ளவும்.
மீன் கோலா உருண்டை
தேவையான பொருட்கள்
வஞ்சரம் மீன் - 250 கிராம்
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -2
இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் -1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு -1 வேக வைத்தது
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
கரம் மசாலா -1/2 தேக்கரண்டி
தேங்காய் - சிறிய துண்டு 1
பொரிகடலை-2 தேக்கரண்டி
முந்திரி -7
கார்ன் பிளார் -2 தேக்கரண்டி
மல்லி இலை - சிறிதளவு
கருவேப்பிலை -சிறிதளவு
வாழை இலை - 1 சிறியது
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
முதலில் மீனை நன்கு கழுவி அதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள் ,கரம் மசாலா தூள்,உப்பு சேர்த்து மிக்ஸ் செய்யவும் .
பின்பு மீனை வாழை இலையில் வைத்து மடித்து இட்லி பாத்திரத்தில் 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
இப்பொழுது மீனை இலையில் இருந்து எடுத்து தோல்,முள்ளை நீக்கி எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பெருஞ்சீரகம் ,பொரிகடலை,நறுக்கிய வெங்காயம் ,முந்திரி ,பச்சை மிளகாய் ,இஞ்சி பூண்டு விழுது தேங்காய் துண்டு ,கருவேப்பிலை ,மல்லி இலை,இவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இறுதியாக மிளகாய் தூள்,உப்பு சேர்த்து வதக்கி ஆறவிடவும் .
ஆறிய பின்பு மிக்சியில் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும் .
வேகவைத்த மீனையும் மிக்சியில் ஒரு முறை இலேசாக அரைத்துக்கொள்ளவும் .
இப்பொழுது அரைத்த மசாலாவுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின்பு இதனுடன் அரைத்த மீன்,கார்ன் பிளார், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
மீன் கோலா உருண்டை செய்வதற்கு மாவு தயார்.
மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும் .
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை போட்டு பொரிக்கவும்
இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து கோல்டன் ப்ரவுனாக மாறியதும் எண்ணெய்யில் இருந்து எடுக்கவும்
இப்பொழுது சுவையான மொரு மொருப்பான மீன் கோலா உருண்டை தயார்.
சாளை மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
சாளை மீன் - கால் கிலோ (8-10 மீன்கள்)
பெரிய வெங்காயம் - 1 அல்லது சின்ன வெங்காயம் 15
பூண்டு - 5 பற்கள்
தக்காளி -1
பச்சை மிளகாய் -2
நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
மீன் மசாலா - 1 டேபிள்ஸ்பூன் (குவியலாக)
அல்லது மல்லித்தூள் -1-2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் 1 -2 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்,மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
நறுக்கிய மல்லி இலை சிறிது.
உப்பு - தேவைக்கு.
செய்முறை
மீனின் தலை, வயிற்றை கத்திரிக்கோல் கொண்டு வெட்டி வயிற்றை சுத்தம் செய்து, செதில் எடுத்து நன்கு அலசி வைக்கவும்.
புளியைக்கரைத்து வைக்கவும். வெங்காயம், பூண்டு மிகப்பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி கையால் பிணைந்து வைக்கவும். மிளகாய் கீறி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை வெடிக்க விடவும், வெங்காயம் பூண்டு பொன்னிறமாக வதக்கவும். தக்காளி, பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து மூடி சிம்மில் வைத்து கூட்டு போல் ஆக வேண்டும்.
மசாலா தூள்கள் சேர்க்கவும். பிரட்டி விட்டு புளிக்கரைசல் விடவும். நன்கு கொதித்து பச்சை வாடை போக வேண்டும். உப்பு சரி பார்க்கவும்.
மீனைப் போடவும். வெந்து மேலே வந்தவுடன் அடுப்பை சிம்மில் சிறிது வைத்து அணைக்கவும்.
சுவையான சுலபமாகச் செய்யக் கூடிய மீன் குழம்பு தயார். இதற்கு தேங்காய் சேர்க்கவில்லை.
இதனை வெறுஞ்சோறு, இட்லி, தோசையுடன் பரிமாறலாம். நறுக்கிய மல்லி இலை தூவி அலங்கரிக்கலாம்.
வஞ்சர மீன் ரோஸ்ட்
தேவையான பொருட்கள்
மீன்-5 துண்டுகள்
மிளகாய் தூள்-3ஸ்பூன்
மிளகு பொடி-2 ஸ்பூன்
சீரகத் தூள்-2ஸ்பூன்
தக்காளி சாஸ்-1 1/2 ஸ்பூன
கடலை மாவு-2 ஸ்பூன
கார்ன் ஃப்ளார்- 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு-2 ஸ்பூன்
முட்டை -1 வெள்ளைக் கரு
இஞ்சி பூண்டு விழுது-1 1/2 ஸ்பூன்
எண்ணெய்- பொரிப்பதற்கு
செய்முறை
முதலில் மீனை சுத்தம் செய்து உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 15 நிமிடம் ஊற விடவும்.
பின்பு ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து 30 நிமிடம் வைத்து விடவும்.
பின்பு தவாவை சூடு படுத்தி எண்ணெய் காய வைத்து பொறித்து எடுக்கவும்.
சுவையான மீன் ரோஸ்ட் தயார். மிகவும் சுவையாக இருக்கும்.
நெத்திலி மீன் கறி
தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் -1/4 கிலோ
நறுக்கிய வெங்காயம் -100 கிராம்
நறுக்கிய தக்காளி -100 கிராம்
பச்சை மிளகாய் -2
புளி - பெரிய நெல்லியளவு
தேங்காய்ப்பால் -1/2 கப்
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
கடுகு,வெந்தயம் - தலா 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது அல்லது பூண்டு தட்டியது -1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -1- 1 . 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2- 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
நறுக்கிய மல்லி இலை
உப்பு - தேவைக்கு.
செய்முறை
நெத்திலி மீனை வயிற்றை பிளந்து முள்ளை அப்படியே எடுத்து விடலாம்.தலைலையையும் எடுக்கவும்.பின்பு நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடானவுடன் கடுகு வெந்தயம்,கருவேப்பிலை தாளிக்கவும்.வெங்காயம் சிவற வதக்கி இஞ்சி பூண்டு சேர்க்கவும்
நன்கு சிம்மில் வைத்து வதக்கவும்.
அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளி,மிளகாய் சேர்க்கவும் உப்பு சேர்த்து மூடினால் கூட்டு போல் ஆகும்.
மசாலாத்தூள் வகைகள் சேர்க்கவும்.நன்கு வதக்கி புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.உப்பு புளி சரி பார்க்கவும்.
வாடை மடங்கியதும் மீனைச் சேர்க்கவும்.ஐந்து நிமிடம் கொதிக்கட்டும்.கெட்டியாகும்.
நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.அடுப்பை அணைக்கவும்.
சுவையான நெத்திலி மீன் கறி தயார்.
சாதம்,சப்பாத்தி,இட்லி,தோசை,ஆப்பம் உடன் பரிமாறலாம்.
கேரளத்து மீன் கறி
தேவையான பொருட்கள்
மோத மீன் அரை கிலோ
மிளகாய்த் தூள் 2 சிட்டிகை
மல்லித் தூள் 2 சிட்டிகை
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
காஷ்மீரி மிளகாய்த்தூள் 1 சிட்டிகை
வெந்தயம் ஒரு ஸ்பூன்
பூண்டு 2 பல்
இஞ்சி சிறிதளவு
தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
கொடம்புளி 6
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை
முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து துண்டு துண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
பின்பு இஞ்சியையும் பூண்டையும் சிறிது சிறிதாக அரிந்து வைத்து கொள்ளவும்
இப்பொழுது அடுப்பை சூடேற்றி அதில் மண் மண்சட்டியை வைக்கவும்.
அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு பின்பு சூடேறியதும் வெந்தயம் இடவும்.
வெந்தயம் பொன்னிறமாக வதங்கியதும் அரிந்துவைத்துள்ள இஞ்சியையும் பூண்டையும் இடவும்.
நன்றாக வதங்கியதும் மல்லித்தூள் ,மிளகாய் தூள் காஷ்மீரி மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்இவை மூன்றையும் இடவும்.
பின்பு நமக்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு அதனுடன் புளி, உப்பு இரண்டையும் சேர்க்கவும்,
நன்றாக கொதி வந்த உடன் வெட்டி வைத்துள்ள மீன் இடவும்.
மீன் நன்றாக வெந்தவுடன் அதனுடன் கறிவேப்பிலை தூவி குழம்பை இறக்கி பரிமாறவும்.
சூடான சுவையான சத்துமிக்க மீன் குழம்பு ரெடி!!!
சீலா மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
சீலா மீன் ஒரு கிலோ
தேங்காய் ஒரு மூடி
மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
மல்லி தூள் 3 டீஸ்பூன்
தக்காளி-2
புளி -எலுமிச்சம் பழ அளவு
பச்சை மிளகாய் இரண்டு நீளவாக்கில் நறுக்கியது
பூண்டு 5 பல்
எண்ணெய் 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு கொத்தமல்லி கருவேப்பிலை
செய்முறை
புளியைக் கரைத்து எடுத்துக் கொள்ளவும்
கழுவிய மீனில் சிறிதளவு உப்பு புளி தண்ணீர் சேர்க்கவும்
மிக்ஸியில் தேங்காய் கொத்த மல்லி பொடி மிளகாய் பொடி மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும்
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக லேசாக வதக்கிக் கொள்ளவும்
இதனை கழுவிய மீனுடன் சேர்த்து கொள்ளவும்
அரைத்த மசாலாவையும் மீனுடன் சேர்த்து கொள்ளவும்
இப்போது இந்தக் கலவையை அடுப்பில் வைக்கவும்
மீன் வேகம் வரை நன்றாக கொதிக்க விடவும்
மற்றொரு வாணலியில் எண்ணெய் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து இதனுடன் சேர்க்கவும்
மீன் வெந்தவுடன் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்
சுவையான சீலா மீன் குழம்பு ரெடி
மீன் பிங்கர் பிரை
தேவையான பொருட்கள்
முள் இல்லாத மீன் 250 கிராம்
பிரட் தூள் 200 கிராம்
மைதா 3 ஸ்பூன்
கோன் பிளவர் 2ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மிளகாய் தூள் 1ஸ்பூன்
மிளகு தூள் 1/2 ஸ்பூன்
ஒரு சிட்டிகை ஜீரா தூள்
ஒரு சிட்டிகை மல்லி தூள்
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
எண்ணெய் 200 கிராம்
முட்டை 1
செய்முறை
முதலில் முள் நீக்கிய மீனை விரல் அளவிற்கு கட் பண்ணவும்
அப்புறமாக ஒரு தனி பாத்திரத்தில் கட் பண்ணின மீன், மஞ்சள் தூள், மசாலா தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட், ஜீரா தூள், மல்லி தூள் முட்டை, கோன் பிளவர்,மைதா ஒட்டு நன்காக விரவவும்.
தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விரவலாம்.இனி மீனை பிரட் பொடியில் ஒவ்வரு மீன் துண்டுகளையும் தனி தனியாக முக்கி வைக்கவும்.
அதன்பின் எண்ணெய் விட்டு காயவைக்க வேண்டும். காய்ந்ததும் மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்
இப்போது சுவையான மீன் விரல் ரெடி
முட்டை உங்கள் விருப்பம். முட்டை சேர்க்காமலும் இந்த மீன் விரல் பண்ணலாம்.
அயிரை மீன் குழம்பு'
தேவையான பொருட்கள்
அயிரை மீன் - கால் கிலோ
நீள் வாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் - கால் கிலோ
தக்காளி -2
பச்சை மிளகாய் கீறியது -2
நறுக்கிய பூண்டு பற்கள் - 6
மல்லி,கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு,வெந்தயம் - தலா அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
வீட்டு குழம்பு/ அல்லது மீன் மசாலா -2 மேஜைக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு.
அரைக்க:-
தேங்காய்த்துருவல் 2-3 மேஜைக்கரண்டி
முந்திரிக்குருணை -1 மேஜைக்கரண்டி
செய்முறை
அயிரை மீனை முதலில் உப்பு போட்டு மூடி வைக்கவும்.அதன் துடிப்பு அடங்கியவுடன் நன்கு உலசி, அலசி கழுவவும்.தண்ணீர் வடித்து வைக்கவும்.
மீன் மசாலா ஒரு மேஜைக்கரண்டி,உப்பு சேர்க்கவும்.
புளித்தண்ணீரும் சேர்த்து, கலந்து சிறிது இருக்கட்டும்.
நறுக்க வேண்டியவைகளை நறுக்கி தயார் செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடானவுடன் கடுக்ய்,வெந்தயம்,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அத்துடன் நறுக்கிய வெங்காயம்,பூண்டு,மிளகாய்,தக்காளி சேர்க்கவும்.
மிளகாய்த்தூள் உப்பு போட்டு மூடி வதங்க விடவும்.
வதங்கியதும் ,மீன் மசாலா ஒரு மேஜைக்கரண்டி சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் சேர்க்கவும்.உங்கள் மசாலா காரமாக இருந்தால் அளவு குறைக்கவும்.ஏற்கனவே மீனில் ஊற வைத்துள்ளோம்.
புளி,மசாலாவுடன் உள்ள மீனைச் சேர்க்கவும்.
கொதி வரட்டும்.மீன் வெந்து வரட்டும்.உப்பு சரி பார்க்கவும்.
தேங்காய்த்துருவல் முந்திரி குருணை சேர்த்து அரைக்கவும்.
அரைத்து மீன் குழம்பில் விடவும்.தேங்காய் விடாமலும் செய்யலாம்.உங்கள் விருப்பம்.
சிம்மில் வைத்து எண்ணெய் மேலே வரவும் அடுப்பை அணைக்கவும்.
சுவையான அயிரை மீன் குழம்பு தயார். சூடான சோறு,அப்பளம்,பொரியலுடன் பரிமாறவும்.
மத்தி மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
மத்தி மீன்- 1/2 கிலோ
சின்ன வெங்காயம்- ஒரு கை
தக்காளி-5-6
கருவேப்பிலை
வரமிளகாய்-6-7
உப்பு
மஞ்சள் தூள்-சிறிது
தேங்காய் எண்ணெய்-2டீஸ்பூன்
வெந்தயம்-1டீஸ்பூன்
செய்முறை
மத்தி மீனை சுத்தம் செய்தல்
வறுத்து அரைக்க வேண்டியவை சின்ன வெங்காயம், தக்காளி,வ.மி, கருவேப்பிலை.அரைத்த விழுதுடன்,புளியை கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.மஞ்சள்த்தூள், உப்பு சிறிது குறைவாகவே சேர்க்கவும்.ஏன் என்றால் மீன்னில் ஏற்கனவே உரைப்பு உள்ளது.நன்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.பிறகு சுண்டியவுடன் மீனைச் சேர்க்கவும்.5 நிமிடம் கழித்து சிம்மில் வேக விடவும்.
பின்னர் கடைசியாக ஒரு தேக்கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் வெந்தயம் சேர்த்து பொன்னிறம் ஆனவுடன் கருவேப்பிலையை சேர்த்து மீன்குழம்பில் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
வஞ்சிர மீன் வறுவல்
தேவையான பொருட்கள்
வஞ்சிர மீன் 500கிராம்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மிளகு தூள் 1 ஸ்பூன்
தூள் உப்பு 1 ஸ்பூன்
எண்ணெய் 250 மிலி
செய்முறை
மீனை தண்ணீர் ஊற்றி அலம்பி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
தண்ணீரை வடித்து வைக்கவும்.
ஒரு காய்ந்த கிண்ணத்தில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த பொடி கலவையை மீன் மேல் தூவி நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்படி தயார் செய்து வைத்துள்ள மீனை குளிர் சாதன பெட்டியில் 45 நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது நன்றாக சூடேற்றவும்.
அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும்.
மீன்களை பொரித்து எடுக்கவும்.
சீலோன் மீன் கிரேவி
தேவையான பொருட்கள்
நெய்மீன் 250கிராம்
தேங்காய்எண்ணெய் 50கிராம்
வெங்காயம் ஒன்று
தக்காளி இரண்டு
மிளகாய்த்தூள் தேவைக்கு
சிரகத்தூள் ஒருடீஸ்பூன்
மஞ்சள்தூள் சிறிது
கருவேப்பில்லை.சோம்பு சிறிது
மல்லி தழை சிறிது
செய்முறை
வெங்காயம் தக்காளியை மிக பொடியாக நறுக்கி கொள்ளவும் பூண்டை தட்டி கொள்ளவும் அடுப்பில் வானலியை வைத்து சூடனாதும் எண்ணெய் ஊற்றவும் பின் கருவேப்பில்லை சோம்பு சேர்த்து தாளிக்கவும். பின் பூண்டு சேர்க்கவும்.பின் வெங்காயம் சேர்க்கவும் பின் தக்காளி சேர்க்கவும் பின் மிளகாய்த்தூள் சேர்க்கவும் பின் ஒரு டம்ளர் நீர் சேர்க்கவும்.பின் மஞ்சள்தூள் சீரகத்தூள் சேர்க்கவும்.பின் மீனை சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்.குறைந்த தீயீல் பத்து நிமிடம் வேக வைத்து பின் அடுப்பை அணைக்கவும்.பின் மல்லிச்செடி தூவவும். சீலோன் மீன் கிரேவி ரெடி.
பூண்டு மீன் கிரேவி
தேவையான பொருட்கள்
மீன் அரை கிலோ
தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 75 கிராம்
பூண்டு 12 பல்
வெங்காயம் 100 கிராம்
தக்காளி-3
கருவேப்பிலை ஐந்து ஆர்க்
சீரகம் ஒரு மேசைக்கரண்டி
முந்திரிப் பருப்பு 10 கிராம்
ரெட் சில்லி பேஸ்ட் அல்லது ரெட் சில்லி பவுடர் தேவைக்கு
பொடியாக நறுக்கிய இஞ்சி சிறிது சிறிது கருவேப்பிலை
சோம்பு சிறிது
செய்முறை
மீனை கழுவி எடுத்து வைக்கவும்
வெங்காயத்தை ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்
அரைக்க தேவையான பொருட்கள்
மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி கருவேப்பிலை சோம்பு போட்டு தாளிக்கவும்
பின் தக்காளி சேர்த்து வதக்கவும்
தக்காளி வதங்கியபின் அரைத்த வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் உப்பு சேர்க்கவும்
பின் மிளகாய் விழுது அல்லது காஷ்மீரி சில்லி பவுடர் தேவைக்கு சேர்த்து வதக்கவும்
பின் மிக்ஸியில் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்
பின் அரிசி கழுவிய நீர் சேர்த்து 10 நிமிடங்கள் உயர்ந்த தீயில் வைத்து கொதிக்க விடவும்
மசால் வடை சென்றபின் நீரை சேர்க்கவும்
மீனை 10 நிமிடங்கள் வேக வைத்து அடுப்பை அணைக்கவும்
பின் மல்லித்தழை தூவவும்.சுவையானபூண்டு மின் கிரேவி ரெடி
சங்கரா மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
1/2 கிலோ சங்கரா மீன், சுத்தப்படுத்தப்பட்டு கழுவப்பட்டது
2 பெரிய வெங்காயம், நன்றாக நறுக்கப்பட்டது
2 நடுத்தர அளவுள்ள தக்காளி, பொடியாக நறுக்கப்பட்டது
3 பச்சை மிளகாய், நறுக்கப்பட்டது
8 பூண்டு பற்கள், நசுக்கப்பட்டது
ஆரஞ்சு அளவுள்ள புளி, தண்ணீரி்ல் ஊறவைத்தது
3 தேக்கரண்டி மிளகாய் - மல்லித்தூள்/ குழம்பு மிளகாய்த் தூள்
சுவைக்கேற்ற உப்பு
1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
கொஞ்சம் கறிவேப்பிலை
3 தேக்கரண்டி நல்லெண்ணெய்
1 தேக்கரண்டி வெந்தயம்
1 தேக்கரண்டி சீரகம்
2 தேக்கரண்டி வடகம் வெந்தயம் சீரகத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்
செய்முறை
ஒரு மண் பானையில் அல்லது கடாயில் எண்ணெய் சூடுபடுத்தி வெந்தயம், சீரகம் சேர்க்கவும். (வெந்தயம், சீரகத்திற்குப் பதிலாக வடகம் கூட சேர்க்கலாம்).
பூண்டு பற்கள், பச்சை மிளகாய்களைத் தொடர்ந்து கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
ஒரு சில விநாடிகள் வதக்கி நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்க்கவும்.
வெளுக்கும் வரை வறுத்து நறுக்கப்பட்டத் தக்காளியைச் சேர்க்கவும்.
நன்றாகக் கலந்து தக்காளி மென்மையாகும்வரை வேகவைக்கவும்.
இப்போது மிளகாய் - மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
ஊறவைத்த புளியில் இருந்து புளிக்கரைசலைப் பிழித்து வெங்காயத்தோடு சேர்க்கவும் - தக்காளிச் சாறு.
கூடுதல் தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்க்கவும், தேவைப்பட்டால்.
மூடி 10 நிமிடங்களுககு மிதமானச் சூட்டில் வேகவைக்கவும்.
இப்போது மீனை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து பானையை மூடவும்.
5-6 நிமிடங்களுக்கு சிறு தீயி்ல் அல்லது மீன் வேகும்வரை வேகவைத்து அடுப்பிலிருந்து இறக்கிவைக்கவும்.
கறிவேப்பிலையால் அலங்கரித்து சூடான சாதத்தோடு பரிமாறவும்.
வஞ்சர மீன் பிரியானி
தேவையான பொருட்கள்
வஞ்சரமீன் 1 கிலோ
பிரியாணி அரிசி 2கப்
வெங்காயம் 2
தக்காளி 2
பச்சைமிளகாய் 4
கிராம்பு, பட்டை, ஏலக்காய் சிறிது
நெய் 2 மேசைக்கரண்டி
மல்லி , புதினா இலைகள் 1 கை அளவு
இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 3 மேசைக்கரண்டி
பெருஞ்சீரக தூள் 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
மல்லி தூள் 2 தேக்கரண்டி
தயிர் 2 தேக்கரண்டி
உலர் திராட்சை & முந்திரி பருப்பு சிறிது
உப்பு
தண்ணீர் 2 கப்
பால் 1 கப்
ரோஸ் வாட்டர் 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் மீனை மசாலாக்கள் ( மிளகாய் தூள் 1 மேசைக்கரண்டி மஞ்சள் 1/2 தேக்கரண்டி, பெருஞ்சீரக தூள் 1 மேசைக்கரண்டி உப்பு, இஞ்சி பூண்டு விழுது) தடவி அரை மணிநேரம் ஊற வைக்கவும். அதேசமயம் அரிசியும் ஊற வைக்கவும்....
பாத்திரத்தில் நெய் விட்டு கிராம்பு, பட்டை ஏலக்காய் பொரிந்ததும் சிறிது வெங்காயம் சேர்த்து வதக்கவும்
பின் தக்காளி சிறிது, பச்சைமிளகாய் 1 சேர்த்து வதக்கவும், மல்லி இலை, பதினா மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்..
நன்கு வதங்கியதும் 1 கப் பால் மற்றும் 2 கப் தண்ணீர்,உப்பு,ரோஸ் வாட்டர் சேர்த்து கொதித்ததும் அரிசி சேர்த்து வேக விடவும்.
சிறிது வெங்காயத்தை நைசாக வெட்டி நெய்யில் பொரித்து எடுக்கவும்,
மீனை பொரித்து எடுக்கவும்
பிரியாணி கிரேவிக்கு குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிராம்பு, பட்டை ஏலக்காய் பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் தக்காளி பச்சைமிளகாய் ,மல்லி,புதினா சேர்த்து வதக்கவும்
நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் பின் மசாலா சேர்த்து கொதித்ததும் 2 தேக்கரண்டி தயிர் மற்றும் உப்பு சேர்க்கவும். 2 துண்டு பொரித்த மீனை அதனுடன் சேர்த்து கொள்ளவும்.
பின் கிரேவி மற்றும் மீன் துண்டுகளை வெந்த அரிசி சாதத்தின் மேல் பரத்தி மல்லி இலை புதினா மற்றும் பொரித்த வெங்காயம், உலர் திராட்சை மற்றும் முந்திரி பருப்பை சேர்த்து 5 நிமிடம் தம்மில் போடவும்
மீன் முட்டை பொறியல்
தேவையான பொருட்கள்
மீன் முட்டை: 200கி
பல்லாரி: 2
மிளகாய்: 3
சீரகம்: சிறுது
கறிவேப்பிலை: சிறுது
கடுகு: தேவையான அளவு
எண்ணெய்: தேவையான அளவு
உப்பு: தேவையான அளவு
செய்முறை
மீன் முட்டையை நன்கு கழுவி எடுத்து கொள்ளவும்
தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு வேக வைக்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பல்லாரி சேர்த்து வதக்கவும்
தேவயான உப்பு சேர்த்து பல்லாரி நன்கு வதங்கியதும் வேக வைத்த மீன் முட்டை சேர்த்து கிளறி இறக்கவும்
Comments
Post a Comment