கூட்டு (kootu)

சௌசௌ கூட்டு

தேவையான பொருட்கள்

சௌசௌ பாதி
பாசிபருப்பு 2 ஸ்பூன்
உப்பு
துருவிய தேங்காய் 2 ஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 1
தேங்காய் எண்ணை 1 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
உ.பருப்பு 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
எண்ணெய் தாளிக்க

செய்முறை

சௌசௌ, பாசி பருப்பு, உப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும்
தேங்காய்,சீரகம், மிளகா வற்றல் கொஞ்சம் தண்ணி விட்டு மிக்ஸியில் அரைக்கவும்
அரைத்த விழுதை குக்கரில் வெந்த சாமான்களுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
1 ஸ்பூன் அரிசி மாவு தண்ணீரில் கரைத்து விடவும்
எண்ணையில் கடுகு உ.பருப்பு தாளித்து சேர்க்கவும்
கறிவேப்பிலை சேர்க்கவும்



கீரை கூட்டு

தேவையான பொருட்கள்

தண்டு கீரை 1 கட்டு
பாசி பருப்பு 2 மேஜை கரண்டி
வெங்காயம் 1
தக்காளி 1
பூண்டு 5 பல்
பச்சை மிளகாய் 3
தேங்காய் ஜீரகம் விழுது 1/2 கப்
புளி கரைசல்2 டீஸ்பூன்
கடுகு, காய்ந்த மிளகாய்
எண்ணெய்
உப்பு

செய்முறை

குக்கர் வைத்து அதில் அறிந்து வைத்துள்ள கீரை ,வெங்காயம், பருப்பு,தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து3 சத்தம் வைக்கவும்.

பின்னர் அதில் புளி கரைசல் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க வைத்து, கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும். கீரை கூட்டு தயார்




கேரட் கூட்டு

தேவையான பொருட்கள்

கேரட் 1
தேங்காய் 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் 1/4 ஸ்பூன்
பச்சைமிளகாய் 2
எண்ணெய் தாளிக்க
கடுகு 1/4 ஸ்பூன்
உளுந்து 1/4 ஸ்பூன்
வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
தக்காளி 1 பொடியாக அரிந்தது
பாசி பருப்பு 3 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

செய்முறை

முதலில் பாசிபருப்பை வறுத்து அதனுடன் துவரம் பருப்பு மஞ்சள் சேர்த்து வேகவைத்து மசித்து வைக்கவும்
தேங்காய் சீரகம் மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளித்து வெங்காயம் சேர்க்கவும்
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
அதனுடன் பொடியாக அரிந்த கேரட் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்
கேரட் வெந்ததும் மசித்து வைத்த பருப்பு சேர்க்கவும்
2 நிமிடம் கழித்து அரைத்த தேங்காய் விழுது உப்பு சேர்க்கவும்
3 முதல் 5 நிமிடம் கழித்து இறக்கவும்



அப்பள கூட்டு

தேவையான பொருட்கள்

பொறித்த அப்பளம் - 4
சாம்பார் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடலை பருப்பு - கால் கப்
தேங்காய்த் துருவல் - கால் கப்
கடுகு - சிறிது
கருவேப்பிலை
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை

கடலை பருப்பை பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் குக்கரில் பருப்பு சேர்த்து மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும்.
பின் அப்பளத்தை இரண்டாக உடைத்து குக்கரில் சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாலித்து அப்பளம் பருப்பு கலவையில் சேர்க்கவும்.
10 நிமிடம் மூடி போட்டு வேகவைத்து பின்னர் பரிமாறவும்.


பருப்பு கூட்டு

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு : 1 கப்
தக்காளி : 1
கத்தரிக்காய் : 1
சின்ன வெங்காயம் : 10
பூண்டு : 5 - 6 பல்
மிளகாய் : 2
மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
தாளிக்க               
சீரகம் : ½ மேஜைக்கரண்டி
கடுகு : ½ மேஜைக்கரண்டி  
கருவேப்பிலை : சிறிதளவு
பெருங்காயம் : சிறிதளவு
தேங்காய் எண்ணெய் : 2 - 3 மேஜைக்கரண்டி

செய்முறை

குக்கரில் துவரம் பருப்பு , கத்தரிக்காய் , தக்காளி , பூண்டு , சின்ன வெங்காயம் , மிளகாய் , மஞ்சள் தூள் , தேவையான தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து கொள்ளவும்

ஒரு பாத்திரத்திற்கு பருப்பு கலவையினை மாற்றி மிதமான தீயில் 3 -5 நிமிடம் தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக விடவும்

மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் , கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து அதனை பருப்புடன் சேர்க்கவும் .


தக்காளி கூட்டு

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு : 1 கப்
பழுத்த தக்காளி : 3
உப்பு : தேவையான அளவு
முதல் தேங்காய் பால்  : 100 ml
மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
தாளிக்க
கடுகு : ½ மேஜைக்கரண்டி
சீரகம் : ½ மேஜைக்கரண்டி
தேங்காய் எண்ணெய் : 2 - 3 மேஜைக்கரண்டி
கருவேப்பிலை : சிறிதளவு
கொத்தமல்லி தழை : சிறிதளவு

செய்முறை

தக்காளி யை பொடியாக நறுக்கி கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , சீரகம் ,கருவேப்பிலை தாளித்து பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் .
பின் உப்பு , மஞ்சள் தூள் , தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும் .
தக்காளி நன்றாக மசியும் வரை வெந்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்


பீட்ரூட் கூட்டு

தேவையான பொருட்கள்

பீட்ரூட் 2
பாசிப்பருப்பு 2 கரண்டி
தேங்காய்த்துருவல் 2 கரண்டி
சீரகம் ஒரு ஸ்பூன்
மிளகாய் வற்றல் இரண்டு அல்லது மூன்று
எண்ணெய் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் கால் டீஸ்பூன்

செய்முறை

பீட்ரூட்டை பொடிப்பொடியாக நறுக்கி பாசிப்பருப்பையும் பீட்ரூட்டையும் தனித் தனியாக வேக வைத்துக் கொள்ளவும்

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்க்கவும்r

அதன்பின் பீட்ரூட் மற்றும் பாசிப் பருப்பை அதில் சேர்க்கவும்

தேங்காய் சீரகம் மிளகாய் வற்றலைத் அரைத்து வைத்துக் கொள்ளவும்
அதை வாணலியில் சேர்த்து பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்

நன்றாக கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்


வாழைப்பூ கூட்டு

தேவையான பொருட்கள்

வாழைப்பூ சிறியது
சிறு பருப்பு அரை கப்
பெரிய வெங்காயம் ஒன்று
தக்காளி ஒன்று
பச்சை மிளகாய் 3
கடுகு காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் கறிவேப்பிலை தாளிக்க
தேங்காய் துருவல் ஒரு மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு

செய்முறை

சிறு பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து 8 நிமிடம் வேக வைக்கவும்

வாழைப்பூவை சிறிதாக நறுக்கி மோரில் போடவும்
வாணலியில் கடுகு காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் கறிவேப்பிலை தாளிக்கவும்

வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து வதக்கவும்
வாழைப்பூ சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும்
வெந்த சிறுபருப்பு சேர்த்து கிளறி இறுதியில் தேங்காய்ப்பூ சேர்த்து இறக்கவும்


பாவக்காய் கூட்டு

தேவையான பொருட்கள்

பாவக்காய் பெரியது  : 1
உப்பு
கடுகு : ½ ஸ்பூன்
கருவேப்பிலை  
தேங்காய் எண்ணெய் : 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் : 4 ஸ்பூன்
வெங்காயம் : 1

செய்முறை

பாவக்காயினை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
பின் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு , கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்  
பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
பின் பாவக்காய், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 - 8 நிமிடம் மிதமான  தீயில் வேக வைக்கவும்  ( தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்க்கவும்)
பின் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பினை ஆஃப் செய்யவும்.

அரைக்கீரை கூட்டு

தேவையான பொருட்கள்

அரைக்கீரை ஒரு கட்டு
சிறு பருப்பு 1/2 கப்
தேங்காய் ஒரு துண்டு
சீரகம் ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் 4
சின்ன வெங்காயம் 4
பூண்டு 2 பல்
மஞ்சள் தூள் சிறிது
உப்பு தேவையான அளவு

செய்முறை

வாணலியில் சிறுபருப்பை வேக வைக்கவும்
பருப்பு வெந்த பின் கழுவிய அரைக்கீரையை சேர்க்கவும்
தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் வெங்காயம் பூண்டு ஆகியவற்றை அரைத்து இதில் சேர்க்கவும்
நன்கு வெந்ததும் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து தாளித்து இறக்கவும்

சுரக்காய் கூட்டு

தேவையான பொருட்கள்

சுரக்காய் - 250 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
தேங்காய் துறுவல் - 2மேஜை கரண்டி
சீரகம் - 1தேக்கரண்டி
பூண்டு - 3பல்
மிளகாய் - 3
எண்ணெய் - 2மேஜை கரண்டி
உப்பு
கடுகு - 1தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1தேக்கரண்டி
கறிவேப்பிலை

செய்முறை

சுரக்காய், பாசிப் பருப்பு, உப்பு இரண்டயும் தண்ணீர் சேர்த்து வேக விடவும்
மிக்ஸியில் தேங்காய் துறுவல் மிளகாய் பூண்டு சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
காய் வெந்ததும் அதனுடன் அரைத்ததை சேர்த்து கொதிக்க விடவும்
வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவும்.


Comments