கார குழம்பு
தேவையான பொருட்கள்
மல்லி 3spoon
சீரகம் 1spoon
மிளகு 1spoon
வெந்தயம் 1/2spoon
அரிசி 1ஸ்பூன்
வத்தல் 10
தேங்காய் துருவியது 1/2cup
சின்ன வெங்காயம் 7
தக்காளி 2
கருவேப்பிலை
புளி எலுமிச்சை அளவு
உப்பு
நல்ல எண்ணெய் 50ml
செய்முறை
வாணலியில் மல்லி, மிளகு, சீரகம், அரிசி, வத்தல்,வெந்தயம், தேங்காய், தக்காளி, சின்ன வெங்காயம், எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும்
வதக்கிய எல்லா பொருள்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும் .
கரைத்து வைத்த புளியை ஊற்றவும்
உப்பு சேர்க்கவும்
5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும் .
மோர் குழம்பு
தேவையான பொருட்கள்
மோர் - 1 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 1
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு
செய்முறை
தேங்காய் துருவல், பச்சை மிளகாய், மல்லி விதை, சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் மோரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
கொதிக்க வைக்க கூடாது. மிதமான தீயில் இரண்டு நிமிடம் வைத்து இறக்கி வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் சேர்த்து தாளித்து குழம்புடன் சேர்த்து கலக்கி பின் பரிமாறவும்.
வற்ற குழம்பு
தேவையான பொருட்கள்
புளி சிறு உருண்டை
உப்பு
1 கரண்டி எண்ணை
கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
வற்றல் மிளகாய் 2
பெருங்காயம் சின்ன கட்டி
துவரம் பருப்பு 1 டீஸ்பூன்
அரிசிமாவு 1டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி 1 டேபிள் ஸ்பூன்
வேண்டிய கறிகாய்
கறிவேப்பிலை 1 கொத்து
செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரம் வைக்கவும்
எண்ணை ஊற்றவும்
தாளிக்கற சாமான்களை தாளிக்கவும்
புளி கரைத்து ஊற்றவும்
உப்பு, சாம்பார் பொடி போடவும்
கறிகாய்களை போடவும்
நன்றாக கொதித்ததும் அரிசி மாவு தண்ணீரில் கரைத்து ஊ ற்றவும்
கடலை குழம்பு
தேவையான பொருட்கள்
கறுப்பு கொண்ட கடலை ¼ கி
சின்ன வெங்காயம் 100 கிராம்
தக்காளி 2
பூண்டு 2
மல்லி விதை 25 கிராம்
வரமிளகாய் 5
சீரகம் 1 மேசைக்கரண்டி
மிளகு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் சிறிது
கருவேப்பிலை சிறிது
நல்லெண்ணெய் 2 மேசைக்கரண்டி
தேங்காய் 1 துண்டு
உப்பு தேவையான அளவு
மஞ்சள் சிறிது
செய்முறை
முதல்நாள் இரவு கடலையை ஊறவிடவும்.
வாணலியில் 1 கரண்டி நல்லெண்ணெய் விட்டு மல்லி , சீரகம் ,மிளகு, பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து நன்கு வறுக்கவும்..
வரமிளகாய் வறுத்து சேர்க்கவும்.
சின்ன வெங்காயம் ,பூண்டு , தக்காளி வதக்கவும்
கடலையை வேகவிடவும்
அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி விடவும்...
அரைத்த விழுது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்...
மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து வதக்கவும்..
உப்பு தேவையான அளவு சேர்க்கவும்...
தாளிக்க மீதமுள்ள 1 கரண்டி நல்லெண்ணெய் விட்டு கடுகு ,கருவேப்பிலை , சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்...
தாளிப்பை குழம்புடன் சேர்க்கவும்..
இதனை பத்து நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால்.
கடலை குழம்பு தயார்
நாங்கள் இதனை ஆப்பத்திற்கு சுவத்தோம்.
தேவையான பொருட்கள்
மல்லி 3spoon
சீரகம் 1spoon
மிளகு 1spoon
வெந்தயம் 1/2spoon
அரிசி 1ஸ்பூன்
வத்தல் 10
தேங்காய் துருவியது 1/2cup
சின்ன வெங்காயம் 7
தக்காளி 2
கருவேப்பிலை
புளி எலுமிச்சை அளவு
உப்பு
நல்ல எண்ணெய் 50ml
செய்முறை
வாணலியில் மல்லி, மிளகு, சீரகம், அரிசி, வத்தல்,வெந்தயம், தேங்காய், தக்காளி, சின்ன வெங்காயம், எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும்
வதக்கிய எல்லா பொருள்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும் .
கரைத்து வைத்த புளியை ஊற்றவும்
உப்பு சேர்க்கவும்
5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும் .
மோர் குழம்பு
தேவையான பொருட்கள்
மோர் - 1 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 1
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு
செய்முறை
தேங்காய் துருவல், பச்சை மிளகாய், மல்லி விதை, சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் மோரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
கொதிக்க வைக்க கூடாது. மிதமான தீயில் இரண்டு நிமிடம் வைத்து இறக்கி வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் சேர்த்து தாளித்து குழம்புடன் சேர்த்து கலக்கி பின் பரிமாறவும்.
வற்ற குழம்பு
தேவையான பொருட்கள்
புளி சிறு உருண்டை
உப்பு
1 கரண்டி எண்ணை
கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
வற்றல் மிளகாய் 2
பெருங்காயம் சின்ன கட்டி
துவரம் பருப்பு 1 டீஸ்பூன்
அரிசிமாவு 1டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி 1 டேபிள் ஸ்பூன்
வேண்டிய கறிகாய்
கறிவேப்பிலை 1 கொத்து
செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரம் வைக்கவும்
எண்ணை ஊற்றவும்
தாளிக்கற சாமான்களை தாளிக்கவும்
புளி கரைத்து ஊற்றவும்
உப்பு, சாம்பார் பொடி போடவும்
கறிகாய்களை போடவும்
நன்றாக கொதித்ததும் அரிசி மாவு தண்ணீரில் கரைத்து ஊ ற்றவும்
கடலை குழம்பு
தேவையான பொருட்கள்
கறுப்பு கொண்ட கடலை ¼ கி
சின்ன வெங்காயம் 100 கிராம்
தக்காளி 2
பூண்டு 2
மல்லி விதை 25 கிராம்
வரமிளகாய் 5
சீரகம் 1 மேசைக்கரண்டி
மிளகு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் சிறிது
கருவேப்பிலை சிறிது
நல்லெண்ணெய் 2 மேசைக்கரண்டி
தேங்காய் 1 துண்டு
உப்பு தேவையான அளவு
மஞ்சள் சிறிது
செய்முறை
முதல்நாள் இரவு கடலையை ஊறவிடவும்.
வாணலியில் 1 கரண்டி நல்லெண்ணெய் விட்டு மல்லி , சீரகம் ,மிளகு, பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து நன்கு வறுக்கவும்..
வரமிளகாய் வறுத்து சேர்க்கவும்.
சின்ன வெங்காயம் ,பூண்டு , தக்காளி வதக்கவும்
கடலையை வேகவிடவும்
அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி விடவும்...
அரைத்த விழுது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்...
மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து வதக்கவும்..
உப்பு தேவையான அளவு சேர்க்கவும்...
தாளிக்க மீதமுள்ள 1 கரண்டி நல்லெண்ணெய் விட்டு கடுகு ,கருவேப்பிலை , சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்...
தாளிப்பை குழம்புடன் சேர்க்கவும்..
இதனை பத்து நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால்.
கடலை குழம்பு தயார்
நாங்கள் இதனை ஆப்பத்திற்கு சுவத்தோம்.
அவசர குழம்பு
தேவையான பொருட்கள்
வெங்காயம் 1
தக்காளி 2
இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு,ஏலக்காய் தலா 1 அல்லது 2
கடுகு, ஜீரகம் 1 ஸ்பூன்
மிளகாய் வத்தல் 1
பச்சை மிளகாய் 1
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
தேங்காய் சிறிது, சோம்பு சிறிது, பொட்டுக்கடலை சிறுது சேர்த்து அரைத்த விழுது
உப்பு தேவைக்கேற்ப
கொத்தம்மல்லி, புதினா இலைகள்
எண்ணெய்
செய்முறை
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய்,கடுகு, ஜீரகம் , மிளகாய் வற்றல் ஒன்றின் பின் ஒன்று சேர்க்கவும்
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
நறுக்கிய தக்காளி சேர்த்து உப்பு காரம் கலந்து வதக்கவும்
நன்கு வதங்கியதும் சிறுது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
அரைத்த தேங்காய் சோம்பு பொட்டுக்கடலை விழுதை சேர்த்து கொதிக்கவிடவும்
மல்லி புதினா இலைகளை தூவி இறக்கவும்
சுவையான அவசர குழம்பு தயார்
கீரை குழம்பு
தேவையான பொருட்கள்
அரைக்கீரை அல்லது சிறு கீரை 1 கட்டு
சிறு பருப்பு 1 கப்
பச்சை மிளகாய் 1
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் ½ ஸ்பூன்
வெங்காயம் 1
தக்காளி 1
பூண்டு 8 பல்
கருவேப்பிலை ஒரு கொத்து
கடுகு ஒரு ஸ்பூன்
சீரகம் ஒரு ஸ்பூன்
உளுந்து ஒரு ஸ்பூன்
உப்பு ருசிக்கேற்ப
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
சிறுகீரை அல்லது அரை கீரை ஆய்ந்து கழுவி தனியே எடுத்து வைக்கவும். சிறு பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து பின் தண்ணீரில் கழுவி தனியே எடுத்து வைக்கவும்.
குக்கரில் கீரை, சிறுபருப்பு, நறுக்கிய வெங்காயம் (தாளிப்பதற்காக சிறிதளவு வெங்காயத்தை தனியே எடுத்து வைக்கவும்.) நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 3 விசில் விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்து, சிறிதளவு நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளிக்கவும், கூடவே கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு, வேக வைத்த பாசிப்பருப்பு கீரை கலவையை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
புளி குழம்பு
தேவையான பொருட்கள்
வெங்காயம் ஒன்று
தக்காளி ஒன்று
விரும்பிய காய்கறிகள் சிறிதளவு
பச்சை மிளகாய் ஒன்று
கடுகு ஒரு ஸ்பூன்
சீரகம் ஒரு ஸ்பூன்
வெந்தயம் அரை ஸ்பூன்
உளுந்து அரை ஸ்பூன்
கருவேப்பிலை ஒரு கொத்து
உப்பு ருசிக்கேற்ப
எண்ணை தேவையான அளவு
குழம்பு மசாலா தூள் 3 ஸ்பூன்
வெண்டைக்காய் கால் கிலோ
புளி ஒரு எலுமிச்சை பழ அளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் கடுகு, சீரகம், உளுந்து, கருவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு தாளித்து வெங்காயத்தை லேசாக வதக்கி நறுக்கிய வெண்டைக்காயை போட்டு வதக்கவும்.
வெண்டைக்காய் மற்றும் விருப்பமான காய்கறிகளை சேர்த்து லேசாக வதங்கியதும் கூடவே தக்காளியைப் போட்டு நன்கு மசியும் வரை கிளறி, (எலுமிச்சை பழ அளவு புளியை தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.) புளிக்கரைசலை ஊற்றவும்.
இதனுடன் குழம்பு மசாலா பவுடர் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு சிறிது நேரம் வேக விடவும். சுவையான வெண்டைக்காய் புளி குழம்பு தயார். இறுதியாக கொத்துமல்லி இலை போட்டு அலங்கரிக்கவும்.
மிளகு குழம்பு
தேவையான பொருட்கள்
நல்லெண்ணய் - 4 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 + 1 மேசைக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
மிளகு - 1 மேசைக்கரண்டி
சிவப்பு மிளகா - 1
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர் - தேவைக்கேற்ப
செய்முறை
கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் , மிளகு , 2 மேசைக்கரண்டி உளுந்து,கருவேப்பிலை,சிவப்பு மிளகாய் சேர்க்கவும்.
அவை அனைத்தையும் மிதமான சூட்டில் பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த அனைத்தையும் மிக்ஸில் சேர்த்து தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.
அதே கடாயில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் , கடுகு , 1 மேசைக்கரண்டி உளுந்து,கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
உளுந்து சிவந்ததும் அரைத்த விழுது சேர்த்து கலக்கவும்.
2 நிமிடம் கழித்து உப்பு , மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அனைக்கவும.
காளான் குழம்பு
தேவையான பொருட்கள்
காளான் 200கிராம்
பெல்லாரி 1
தக்காளி 2
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
மல்லித்தூள் 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
செய்முறை
காளானை சுத்தம் செய்து வெந்நீரில் அலசவும்,
குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்
சுத்தம் செய்த காளானை சேர்த்து கிளறவும்
மல்லித்தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
மசாலா பொடி பச்சை வாசனை போனவுடன் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.
1 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
குக்கர் ஆறியதும், மல்லித்தழை தூவி பரிமாறவும்
வெந்தய குழம்பு
தேவையான பொருட்கள்
எண்ணெய் தாளிக்க
கடுகு 1/4 ஸ்பூன்
வர மிளகாய் 2
வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
தக்காளி 1 பொடியாக அரிந்தது
புளி கரைசல் 1/2 கப்
சாம்பார் தூள் 1 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
வெந்தய தூள் 1 ஸ்பூன்
பெருங்காய தூள் பின்ச்
செய்முறை
வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் அதில் பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
2 நிமிடம் கழித்து சாம்பார் தூள் மஞ்சள் தூள் கொத்த மல்லி தூள் சேர்த்து வதக்கி 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்
5 நிமிடம் கொதிக்க விட்டு பின் அதனுடன் புளி கரைசல் , வெந்தய பொடி, உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொதிக்க விடவும்.
எண்ணெய் ஓரங்களில் பிரியும் அதில் பெருங்காய தூள் சேர்த்து இறக்கவும்.
எண்ணெயில் கடுகு மிளகாய் தாளித்து பரிமாறவும்.
ஒரு வாரம் கெடாது
Comments
Post a Comment