குருமா (kuruma)

வெஜ் குருமா

தேவையான பொருட்கள்

கேரட் பீன்ஸ் காலிபிளவர் உருளைகிழங்கு 1 கப்
வெங்காயம் 2 பொடியாக அரிந்தது
தக்காளி 2 பொடியாக அரிந்தது
பச்சைமிளகாய் 3
தேங்காய் 1/4 கப்
சோம்பு 1 ஸ்பூன்
முந்திரி 5
எண்ணெய் தாளிக்க
கடுகு 1/4 ஸ்பூன்
லவங்கம் பட்டை பிரியாணி இலை தலா 2
உப்பு தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
கொத்தமல்லிதூள் 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
கரம் மசால் தூள் 1/4 ஸ்பூன்

செய்முறை

வாணலியில் சிறிது எண்ணெயில் வெங்காயம் தக்காளி பட்டை லவங்கம் பிரியாணிஇலை சேர்த்து நன்றாக வதக்கவும்
பின் அவற்றை ஆற வைத்து நன்கு அரைத்து வைக்கவும்
பின் எண்ணெய் ஊற்றி கடுகு மிளகாய் சேர்த்து வதக்கவும்
காய்கறிகள் சேர்த்து வதக்கி 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்
பின் அரைத்த வெங்காய தக்காளி விழுதை சேர்த்து கொத்தமல்லி தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
ஓரளவு கெட்டியானதும் பின் தேங்காய் விழுது சேர்க்க வேண்டும்
காய்கறிகள் வெந்ததும் தேங்காய் விழுதுடன் சேர்ந்து கொதிக்க விடவும்
5 முதல் 7 நிமிடம் கழித்து கரம் மசால் தூள் உப்பு சேர்த்து கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்
சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்

காய்கறிகள் நன்றாக வேக வைத்த பின் உப்பு சேர்க்கவும்



வெள்ளை குருமா

தேவையான பொருட்கள்

கேரட்-1/2
பீன்ஸ்-10
உருளைக்கிழங்கு-1
குடைமிளகாய்-1/2
வெங்காயம் நீளமாக நறுக்கியது-1
பச்சை மிளகாய் நீளமாக நறுக்கியது-1
தேங்காய் சிறிதளவு
சோம்பு - 1 ஸ்பூன்
முந்திரி-4
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
பச்சை மிளகாய்-3
பட்டை சிறிதளவு
கிராம்பு-2
இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
கொத்தமல்லி தழை

செய்முறை

குக்கரில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும்
நறுக்கிய வெங்காயம், நீளமாக நறுக்கிய 1 பச்சைமிளகாய் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
கொடுக்கப்பட்ட காய்கறிகளை கட்ட கட்டமாக நறுக்கி அதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 4 விசில் வந்ததும் இறக்கவும்
தேங்காய்,சோம்பு, முந்திரி, பச்சை மிளகாய் 3 ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்
குக்கரில் உள்ள காய்கறியுடண் தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும்
நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்


ராஜ்மா குருமா

தேவையான பொருட்கள்

ராஜ்மா தேவையான அளவு
வெங்காயம் ஒன்று
தக்காளி-2
பட்டை கிராம்பு சோம்பு தாளிக்க தேவையான அளவு
மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
உப்பு எண்ணெய் தேவையான அளவு
தேங்காய்த்துருவல் 5 ஸ்பூன் பூண்டு 4 பல் அரைப்பதற்கு

செய்முறை

ராஜ்மாவை கழுவி முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும்

குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம் தக்காளி கருவேப்பிலை வதக்கவும்

பதுங்கி தம் கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்கள் மற்றும் தேங்காய் பூண்டு விழுதை சேர்க்கவும்

ஊற வைத்த ராஜ்மா மற்றும் தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

குக்கரை மூடி 4 விசில் வேக வைத்து சூடான சாதம்/ சப்பாத்தியுடன் பரிமாறவும்




மொச்சை குருமா

தேவையான பொருட்கள்

மொச்சை 1 கப்
உருளைகிழங்கு 2
வெங்காயம் 2
தக்காளி 2
இஞ்சிபூண்டு விழுது 1ஸ்பூன்
மிளகாய்தூள் 2ஸ்பூன்
கரம் மசாலா 1ஸ்பூன்
அரைக்க
தேங்காய் 2 துண்டு
கசகசா 1ஸ்பூன்
உடைத்தகடலை 1ஸ்பூன்
சோம்பு 1ஸ்பூன்
தாளிக்க
பட்டை, பிரிஞ்சு இலை, சோம்பு

செய்முறை

மொச்சையை வேக வைத்து எடுக்கவும்

குக்கரில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்கள் சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்

தக்காளி சேர்த்து வதக்கி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதங்கியதும் உருளைகிழங்கு சேர்க்கவும்

தூள் வகைகள் சேர்த்து அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்

வேக வைத்த தண்ணீருடன் மொச்சையை சேர்த்து 2விசில் விடவும்

கொத்தமல்லி தூவி இறக்கவும். மொச்சை குருமா தயார்



காய்கறி குருமா

தேவையான பொருட்கள்

கேரட் 2
பீன்ஸ் 12
உருளை 2
தக்காளி 4
பட்டானி 1 கப்
பெரிய வெங்காயம் 3
மிளகாய் 2
தேங்காய் பூ 1 கப்
கசகசா 1 டீஸ்பூன்
ஏலம் 3
பட்டை சிறியதுண்டு
இஞ்சி சிறிய துண்டு
பூடு 5
தேங்காய்எண்ணெய் 3 டீஸ்பூன்
கடுகு தாளிக்க
உப்பு தேவைக்கு
மல்லி+புதினா சிறிதளவு

செய்முறை

காய்கறிகளை நறுக்கவும்.

பட்டாணியை ஊறவைத்து ரெடிபண்ணவும்.

அனைத்தையும் குக்கரில் 3 விசில் வைக்கவும்.

தேங்காய்,பட்டை,ஏலம்,இஞ்சி, பூண்டு அரைக்கவும்.

காய்கறிகளை மசித்து அரைத்த விழுதை போடவும்.

பின் மசித்து தாளித்து மல்லி, புதினா தூவவும்.

சூடான சப்பாத்தியுடன் பரிமாறவும்.

விட்டமின், நார்ச்சத்து , கால்சியம், முதலான பல சத்துக்களை உள்ளடக்கியது.
காய்கறிகள் அதிகம் உள்ளதால் ஆரோக்கியமானது.



தக்காளி குருமா

தேவையான பொருட்கள்

தக்காளி : 2
வெங்காயம் : 1
சோம்பு : 1 மேஜைக்கரண்டி
பட்டை : 1
கிராம்பு : 2
ஏலக்காய் : 2
மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி
கரம் மசாலா : ½ மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் : ¼ மேஜைக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
எண்ணெய் : 2 - 3 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி தழை : சிறிதளவு
அரைக்க
தேங்காய் துருவல் : 3 மேஜைக்கரண்டி
கசகசா : ½ மேஜைக்கரண்டி
முந்திரி பருப்பு : 5 - 6 மேஜைக்கரண்டி

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு , பட்டை , கிராம்பு , ஏலக்காய் சேர்த்து பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

பின் தக்காளி , இஞ்சி பூண்டு விழுது , மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , கரம் மசாலா , உப்பு சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்

பின் தேவையான தண்ணீர் சேர்த்து தக்காளி நன்றாக மசியும் வரை ( 5 நிமிடம் ) மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும்

பின் அரைத்த தேங்காய் விழுது ( தேங்காய் + முந்திரி + கசகசா ) சேர்த்து 3 நிமிடம் வேக விடவும்

பின் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்



பட்டாணி குருமா

தேவையான பொருட்கள்

பட்டாணி 100 கிராம்
உருளை கிழங்கு 1
பெரிய வெங்காயம் 2
தக்காளி 1
மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
மிளகாய் பொடி 1ஸ்பூன்
மல்லி பொடி 2ஸ்பூன்
கரம் மசாலா பொடி 1ஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை

பட்டாணி ஊற வைக்கவும்
பட்டாணி, உருளை கிழங்கு வேக வைத்து கொள்க
வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும்
வெங்காயம், தக்காளி சோ்க்கவும் நன்கு வதக்கவும்
மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி ,கரம் மசாலா பொடி போட்டு நன்கு வதக்கவும்
வேக வைத்த பட்டாணி, உருளை உப்பு சோ்க்கவும்
எண்ணெய் பிரிய இறக்கவும்


பீட்ரூட் குருமா

தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 4
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது-1தேக்கரண்டி
தேங்காய் துறுவல்-4 மேஜை கரண்டி
மிளகாய்-5
கசகசா-1தேக்கரண்டி
பட்டை-1
கிராம்பு-4
ஏலக்காய்-4
உப்பு
எண்ணெய்

செய்முறை

வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வதக்கவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும்
பிறகு பீட்ரூட் சேர்த்து தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
தேங்காய் துறுவல் மிளகாய் மற்றும்கசகசா அரைத்துக் கொள்ளவும்.
பீட்ரூட் வெந்தும் அதனுடன் அரைத்தை சேர்த்து கொதிக்க விடவும்.
குருமா ரெடி.



கடலை மாவு குருமா

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் 2
தக்காளி 2
சோம்பு 1 மேஜை கரண்டி
மஞ்சள் பொடி , உப்பு
பச்சை மிளகாய்
கடலை மாவு 1 மேஜை கரண்டி

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு சேர்க்கவும்
பிறகு வெங்காயம்
பிறகு தக்காளி
தக்காளி நன்கு வதங்கியதும் உப்பு , மஞ்சள் போட்டு தண்ணீர் விடவும்
பின் நேராக நறுக்கிய பச்சை மிளகாய் 2 போடவும்
பிறகு கடலை மாவை தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கலந்து விடவும்
ஒரு கொதி வந்ததும் மல்லி இலை தூவி இறக்கவும்




பொட்டேட்டோ குருமா

தேவையான பொருட்கள்

வேக வைத்த உருளைகிழங்கு 2
கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
வர கொத்தமல்லி 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் 1/4 கப்
தக்காளி 2
கடுகு சிறிது
எண்ணெய் தாளிக்க
வெங்காயம் 1
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
வர மிளகாய் 3
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

வேக வைத்த உருளைகிழங்கை மசித்து வைக்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு க.பருப்பு உ.பருப்பு கொத்தமல்லி மிளகாய் சேர்த்து வறுக்கவும்
பின் அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்
ஆற வைத்த பின்னர் தேங்காய் சேர்த்து விழுதாக அரைக்கவும்
பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து நீளவாக்கில் மெலிதாக அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்
அதனுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்
தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மஞ்சள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
5 முதல் 7 நிமிடம் கொதித்த பின் மசித்து வைத்த உருளைகிழங்கை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி பரிமாறவும்



கொண்டக்கடலை குருமா

தேவையான பொருட்கள்

கொண்டக்கடலை 1 கப் வேக வைத்தது
வெங்காயம் 2
தக்காளி 2
மல்லி இலை
இஞ்சி பூண்டு விழுது 1 மேஜை கரண்டி
பட்டை , கிராம்பு , சோம்பு ,
தேங்காய் , சோம்பு விழுது 2 மேஜை கரண்டி
உப்பு , மஞ்சள் , மிளகாய் , மல்லி பொடி
எண்ணெய்

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு , சோம்பு போடவும்
வெங்காயம் போடவும்
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது
பின் தக்காளி
நன்கு வதங்கியதும் உப்பு , மஞ்சள் , மிளகாய் , மல்லி பொடி
பின் வேகவைத்த கடலை
தண்ணீர் ஊற்றவும்
தண்ணீர் கொதிக்கும் போது அரைத்த தேங்காய் சோம்பு விழுது போடவும்
ஓரு கொதி வந்ததும் மல்லி தூவி இறக்கவும்




அவரைக்காய் குருமா

தேவையான பொருட்கள்

அவரைக்காய் 1 கப் நறுக்கியது
வெங்காயம் 1
தேங்காய்த்துருவல் 3 ஸ்பூன்
கசகசா 1 ஸ்பூன்
முந்திரி 10
மிளகாய் 2
கடுகு
கறிவேப்பில்லை
சோம்பு 1/2 ஸ்பூன்

செய்முறை

கசகசாவை கடாயில் வறுத்துக் கொள்ளவும்
பின்பு முந்திரி கசகசாவை ஊற வைத்துக் கொள்ளவும்
ஒரு மிக்ஸி ஜாரில் முந்திரி கசகசா தேங்காய் துருவல் மிளகாய் சேர்த்து அரைக்கவும்
சோம்பு சேர்த்துக் கொள்ளவும்
சோம்பு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
வெங்காயம் வதங்கியதும் அவரைக்காயை சேர்த்து வதக்கவும் உப்பு போடவும்
சிறிது வெந்ததும் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்
அரைத்த மசாலாவையும் சேர்த்து வேகவிடவும்
உப்பு சேர்க்கவும்
நன்கு கொதித்த பின் இறக்கினால் அவரைக்காய் குருமா ரெடி



பச்சை பயிறு குருமா

தேவையான பொருட்கள்

பச்சைப்பயறு ஒரு கப்
வெங்காயம்-2
3 தக்காளி ஒன்று
தேங்காய் கால் கப்
சோம்பு அரை டீஸ்பூன்
பட்டை கிராம்பு ஏலக்காய் தலா 2
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 6 பல்
கொத்தமல்லி சிறிதளவு
பச்சை மிளகாய் 3

செய்முறை

பச்சை பயிறு தண்ணீர் விட்டு குக்கரில் தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கவும்
இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்
வெங்காயம் சேர்த்து வதக்கவும்
தக்காளி சேர்த்து வதக்கவும்
வேக வைத்த பயறை சேர்த்து வதக்கவும்
தேங்காய் மற்றும் சோம்பை மையாக அரைத்து அதில் சேர்த்துக் கொள்ளவும்
சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்
கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்



மீல்மேக்கர் குருமா

தேவையான பொருட்கள்

மீல்மேக்கர் 1 கப்
வெங்காயம் 2
தக்காளி 1
மிளகாய்தூள் 1½ஸ்பூன்
கரம்மசாலா 1ஸ்பூன்
மஞ்சள்தூள்
உப்பு, எண்ணெய்
எலுமிச்சை ½பழம்
பச்சைமிளகாய் 1
அரைக்க
தேங்காய் 2 துண்டு
முந்திரி 4
கசகசா 1ஸ்பூன்
சோம்பு 1ஸ்பூன்
தாளிக்க
பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தலா 2

செய்முறை

மீல்மேக்கரை வென்னிரில் போட்டு 5 நிமிடம் வைத்து,தண்ணீர் வடித்து சிறிது மிளகாய்தூள், உப்பு,இஞ்சிபூண்டு விழுது, எலுமிச்சை பிழிந்து வைக்கக்கவும்

குக்கரில் எண்ணெய் விட்டு தாளிப்புகள் சேர்த்து வெங்காயம், மீதி உள்ள இஞ்சிபூண்டு விழுது,புதினா, கொத்தமல்லி வதக்கி தக்காளி சேர்க்கவும்

மீல்மேக்கர் சேர்த்து அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்

ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி 2 விசில் விட்டு இறக்கவும். மீல்மேக்கர் குருமா தயார்




அவசர தக்காளி குருமா

தேவையான பொருட்கள்

பழுத்த தக்காளி 4
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 3
பூண்டு 4 பல்
துருவிய தேங்காய் 1/2 கப்
பொட்டுக்கடலை 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
பட்டை 2 துண்டு
கிராம்பு 3
கடுகு 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி தழை அலங்கரிக்க
கடலை எண்ணெய் 2 டீஸ்பூன்

செய்முறை

வெங்காயத்தை நீட்ட வாக்கில் அரிந்து கொள்ளவும்
ஒரு மிக்ஸியில் தக்காளி, தேங்காய்,பொட்டுக்கடலை, பூண்டு,சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பட்டை, கிராம்பு தாளித்து வெங்காயம் ,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்
300மில்லி தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
குழம்பு தளதளவென கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
சூடான இட்லி தோசைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்



பாதாம் காய்கறி குருமா

தேவையான பொருட்கள்

வெங்காயம் 1
தக்காளி 2
இஞ்சி பூண்டு விழுது
பட்டை , கிராம்பு , லவங்கம் , சோம்பு
கேரட் , பீன்ஸ் , உருளை கிழங்கு , பட்டாணி
மல்லி இலை
தேங்காய் , பாதாம் , ஏலக்காய்

செய்முறை

குக்கர் யில் எண்ணெய் ஊற்றி சோம்பு , கிராம்பு , லவங்கம் போடவும்
வெங்காயம் போடவும்
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போடவும்
தக்காளி போடவும்
தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் பொடி , உப்பு , மிளகாய் பொடி, மல்லி பொடி போடவும்
பிறகு காய்கறிகளை சேர்க்கவும்
5 நிமிடம் வதக்கியதும்
தேங்காய் , 1 ஏலக்காய் , பாதாம் சேர்த்து அரைக்கவும்
அந்த விழுதை போடவும்
குக்கர் மூடி 2 விசில் வைக்கவும்
மூடியை திறந்து மல்லி தூவினால் தயார்



உருளைக்கிழங்கு குருமா

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு கால் கிலோ
பெரிய வெங்காயம் 2
தக்காளி-3
இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி அரை டீஸ்பூன
மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
கரம் மசாலா பொடி ஒரு டீஸ்பூன்
தேங்காய் அரை மூடி
பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு வெங்காயம் பூண்டு தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்
பிறகு அரைத்து வைத்த வெங்காயம் தக்காளி விழுது இஞ்சி-பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி கரம் மசாலாப் பொடி உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
பிறகு உருளைகிழங்கை நான்காக நறுக்கி அதில் போட்டு 3 விசில் விடவும்
இலங்கை நன்கு வெந்த உடன் கடைசியில் தேங்காய் அரைத்து அதன் மேல் ஊற்றவும்
சுவையான உருளைக்கிழங்கு குருமா ரெடி




வெள்ளை கொண்டகடலை குருமா

தேவையான பொருட்கள்

வெள்ளை கொண்டகடலை - 1 கப்
1/4 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
1 இன்ச் பட்டை
2 கிராம்பு
2 ஏலக்காய்
10 பூண்டுபற்கள்
2 துண்டு இஞ்சி
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
சீரகம்-1/4 டீ ஸ்பூன்
சோம்பு-1/4 டீ ஸ்பூன்  
சிறிது கருலேப்பில்லை
நறுக்கிய வெங்காயம்-1
தக்காளி-2
1/4 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
1 1/2 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
சிறிது கொத்தமல்லி
சிறிது புதினா
தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்த வெள்ளை கொண்டகடலை- 1 கப் நன்றாக கழுவி குக்கரில் சிறிது தண்ணீருடன் சேர்க்கவும். இதனுடன் 1/4 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்  
ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்
மிக்ஸி ஜாரில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல், 1 இன்ச் பட்டை, 2 கிராம்பு, 2 ஏலக்காய் சேர்க்கவும்
10 பூண்டுபற்கள், 2 துண்டு இஞ்சி சேர்க்கவும்
சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம்-1/4 டீ ஸ்பூன், சோம்பு-1/4 டீ ஸ்பூன் சேர்க்கவும்
சிறிது கருலேப்பில்லை, நறுக்கிய வெங்காயம்-1, தக்காளி-2 சேர்த்து வதக்கவும்.
பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்
தேங்காய் விழுது நன்றாக வதங்கியதும் 1/4 டீ ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், 1 1/2 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்
மசாலாகளின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி சிறிது கொத்தமல்லி, சிறிது புதினா சேர்க்கவும்
வேக வைத்த வெள்ளை கொண்டகடலையை சேர்த்து கிளறவும்
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மேலும் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்
எளிதான வெள்ளை கொண்டகடலை குருமா தயார்




வேர் கடலை தேங்காய் குருமா

தேவையான பொருட்கள்

வேர்கடலை 1கப்
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
கேரட் 1
பச்சை மிளகாய் 1
காய்ந்த மிளகாய் 1
மிளகாய் பொடி 1ஸ்பூன்
மல்லி பொடி 2ஸ்பூன்
கரம் மசாலா பொடி கால் ஸ்பூன்
மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
அரைக்க
தேங்காய் 1/4 மூடி
சின்ன வெங்காயம் 6
சோம்பு கால் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

தேவையான பொருட்கள் எடுத்து கொள்க

மல்லி பொடி, மிளகாய் பொடி, தேங்காய், இஞ்சி பூண்டு, வெங்காயம் அரைத்து கொள்க

எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும், பெருங்காயம் பொடி போட்டு வதக்கவும், மிளகாய், வெங்காயம், தக்காளி வதக்கி கொள்க

அரைத்த மசாலா போட்டு வதக்கவும்

ஊற வைத்த வேர் கடலை சோ்த்து கொள்க

குக்கரை மூடி 4 விசில் வர இறக்கவும், இது சப்பாத்தி ,தோசை சாப்பிடலாம்




உருளைக்கிழங்கு பால் குருமா

தேவையான பொருட்கள்

பெரிய உருளைக்கிழங்கு -3
வெங்காயம் -1
தக்காளி -1
பச்சை பட்டாணி -ஒரு கைப்பிடி
காய்ச்சிய பால் -1/2 கப்
எண்ணெய்-1டேபிள் ஸ்பூன்
கடுகு சீரகம் -தாளிக்க
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லி தழை -சிறிது
அரைக்க
தேங்காய் துருவல் -1/4 கப்
பொட்டுக்கடலை -1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய்-3 அல்லது4
சோம்பு-1 டீஸ்பூன்
கசகசா-1 டீஸ்பூன்

செய்முறை

உருளைக்கிழங்கை தோல் சீவி சதுரங்களாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் தாளித்து வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து 3 நிமிடம் வரை நன்கு வதக்கவும்

பின்னர் அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வரை வேக விடவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்

குக்கரை திறந்ததும் அரைத்த விழுதை சேர்த்து சில நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து பின்னர் பால் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.




பன்னீர்  சுரைக்காய் குருமா

தேவையான பொருட்கள்

பன்னீர்-100 கிராம்
தக்காளி-2
வெங்காயம்-1
சுரைக்காய் -1/2
பெருஞ்சீரகம்-1/4 டீ ஸ்பூன்
கருலேப்பில்லை- ஒரு கொத்து
மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள்-1 டீ ஸ்பூன்
மல்லித் தூள்- 1 டேபிள் ஸ்பூன்
பெருங் காயத்தூள்-ஒரு சிட்டிகை
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய்- 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி- 1/2 இன்ச்
பூண்டுபற்கள்- 7
பட்டை- 1 இன்ச்
கிராம்பு-2
ஏலக்காய்-2
சீரகம்-1/4 டீ ஸ்பூன்

செய்முறை

பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை பொறித்து எடுக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மசாலா விற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.
சுரைக்காய்  தோல் சீவி விதைகளை நீக்கி  நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின், பெருஞ்சீரகம், வெங்காயம், தக்காளி, கருலேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்.
அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் பெருங் காயத்தூள், உப்பு  சேர்த்து நன்கு கிளறவும்.
பின்பு நறுக்கிய சுரைக்காய், பொறித்து வைத்துள்ள பன்னீர் சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
விசில் அடங்கியதும் சூடான சாதத்துடன் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறலாம்.


புடலங்காய் கொண்டைக்கடலை குருமா

தேவையான பொருட்கள்

கொண்டைக்கடலை-50 கிராம்
புடலங்காய்-1/2
வெங்காயம்-1
தக்காளி-2
கருலேப்பில்லை- ஒரு கொத்து
எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
பெருஞ்சீரகம்-1/4 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள்-1 டீ ஸ்பூன்
மல்லித் தூள்- 1 டேபிள் ஸ்பூன்
பெருங் காயத்தூள்-ஒரு சிட்டிகை
உப்பு- தேவையான அளவு
மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய்- 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி- 1/2 இன்ச்
பூண்டுபற்கள்- 7
பட்டை- 1 இன்ச்
கிராம்பு-2
ஏலக்காய்-2
சீரகம்-1/4 டீ ஸ்பூன்

செய்முறை

கொண்டைக்கடலையை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
பின்பு கொண்டைக்கடலையை சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மசாலா விற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.
குக்கர் விசில் அடங்கியதும், கொண்டைக்கடலையை மட்டும் எடுத்து வைக்கவும்.
புடலங்காயை தோல் சீவி விதைகளை நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின், பெருஞ்சீரகம், வெங்காயம், தக்காளி, கருலேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்.
அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் பெருங் காயத்தூள், உப்பு  சேர்த்து நன்கு கிளறவும்.
பின்பு நறுக்கிய புடலங்காய், வேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மேலும் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
விசில் அடங்கியதும் சூடான சாதத்துடன் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறலாம்.




முளைக்கட்டிய கொள்ளு நூக்கல் குருமா

தேவையான பொருட்கள்

முளைக்கட்டிய கொள்ளு-1 கப்
நூக்கல் -1
வெங்காயம்-1
தக்காளி-1
மிளகாய் தூள்-1/2 டீஸ்பூன்
மல்லித்தூள்-1 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை
உப்பு- தேவையான அளவு
தேங்காய் எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
கடுகு-1/4 டீ ஸ்பூன்
கொத்தமல்லி இலை- 1 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:
பெருஞ்சீரகம்-1/2 டீ ஸ்பூன்
தேங்காய் துருவல்-2 டேபிள் ஸ்பூன்
கசகசா-1 டீஸ்பூன்
இஞ்சி- ஒரு துண்டு
பூண்டுபற்கள்-6

செய்முறை

கொள்ளை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
பின்பு ஒரு ஈரமான துணியில் ஊறிய கொள்ளை பொதிந்து முளைகட்டும் வரை  வைக்கவும்
நூக்கல், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
மசாலாவிற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின், கடுகு சேர்த்து தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், மல்லிதூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
பின்பு முளைக்கட்டிய கொள்ளு மற்றும் நறுக்கிய நூக்கல் காயை சேர்த்து கிளறி 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
விசில் அடங்கியதும் மல்லி இலைகளை தூவி பரிமாறலாம்.



பாசிப்பருப்பு பீட்ரூட் இடியாப்பமும் பச்சைப்பயிறு குருமாவும்

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு 150 கிராம்
கோதுமை மாவு 6 ஸ்பூன்
அரிசி மாவு 6 ஸ்பூன்
பீட்ரூட் ஒன்று
தூள் உப்பு அரை ஸ்பூன்
தண்ணீர் 50ml
குருமா செய்வதற்கு:
முழு பச்சைப்பயிறு 100 கிராம்
வெங்காயம் ஒன்று
தக்காளி-2
பட்டை ஒரு சிறிய துண்டு
கிராம்பு-2
இஞ்சி பூண்டு பேஸ்ட் முக்கால் ஸ்பூன்
சோம்புத்தூள் அரை ஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
கல் உப்பு முக்கால் ஸ்பூன்
தேங்காய் விழுது 50 ml
கறிவேப்பிலை ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை அரை கைப்பிடி அளவு

செய்முறை

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து சலித்துக் கொள்ளவும்
கோதுமை மாவையும் அரிசி மாவையும் தனித்தனியாக வறுத்து சலித்துக் கொள்ளவும்

பீட்ரூட்டை தோல் நீக்கி கழுவி நன்றாக சீவிக் கொள்ளவும்
100 ml தண்ணீர் 1/2 ஸ்பூன் தூள் உப்பு சேர்த்து பீட்ரூட்டை வேக வைக்கவும்
வெந்ததும் ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து ஜூஸ் எடுத்து கொள்ளவும்

பாசிப்பருப்பு மாவு கோதுமை மாவு அரிசி மாவு மூன்றையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி பீட்ரூட் ஜூஸை ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும்

பிழியும் பதத்திற்கு ஏற்றவாறு தண்ணீர் கலந்து சற்று தளர பிசையவும்

இப்பொழுது இடியாப்ப அச்சில் மாவைப் போட்டு இட்லித் தட்டில் பிழிந்து ஆவியில் வேக வைக்கவும்

பத்து நிமிடம் வெந்த பிறகு எடுத்து தட்டில் வைக்கவும்
குருமா செய்வதற்கு:
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் தாளித்து வெங்காயத்தை போடவும்
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் தக்காளி சோம்புத் தூள் கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கவும்

அனைத்தும் நன்றாக வதக்கிய பிறகு குழம்பு மிளகாய் தூள் உப்பு போட்டு சற்று நேரம் வதக்கி தண்ணீர் ஊற்றவும்
6மணி நேரம் ஊற வைத்த பச்சைப்பயிறை அதில் போட்டு தேங்காய் பேஸ்ட் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து குக்கரை மூடி வைக்கவும்

ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்யவும்

ஐந்து நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லி தழை தூவவும்
இடியாப்பத்துடன் சூடாக பரிமாறவும்

Comments