மட்டன் (mutton)

மட்டன் ப்ரை

தேவையான பொருட்கள்

மட்டன் அரை கிலோ
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் தேவையான அளவு
சோம்பு ஒரு டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் ஒன்று
பட்டை சிறிதளவு
கிராம்பு ஒன்று
மல்லித்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
கரம்மசாலா ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
மட்டன் மசாலா ஒரு டேபிள்ஸ்பூன் (optional)

செய்முறை

மட்டனை சிறிது உப்பு சிறிது மஞ்சள் சேர்த்து வேக விடவும் 4 to 5 விசில் விடவும்

வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

ஒரு கடாயில் என்னை ஊற்றி சீரகம் சோம்பு ஏலக்காய் சேர்க்க வேண்டும்
பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிறகு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
பிறகு அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்
மட்டனில் உப்பு சேர்த்து உள்ளது ஆகையால் அதற்கு ஏற்றாற்போல் உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்
அனைத்தையும் சேர்த்து பச்சை வாசனை போன பிறகு
வேக வைத்த மட்டனை அதனுடன் சேர்க்க வேண்டும்
வேக வைத்த மட்டன் தண்ணீரே போதுமானது தண்ணீர் சேர்க்க வேண்டாம்
தண்ணீர் வற்றி கிரேவி பதத்திற்கு வந்த பிறகு செமி dry பிறகு கொத்தமல்லியை சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம்



மட்டன் ரசம்

தேவையான பொருட்கள்

ஆட்டு எலும்பு 250 கிராம்
பூண்டுப் பல் 4
சாம்பார் வெங்காயம் 50 கிராம்
நல்லெண்ணெய் 1 மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
மிளகுத் தூள் 1 தேக்கரண்டி
இஞ்சி விழுது 1 தேக்கரண்டி
எலுமிச்சை பழம் 1
கொத்துமல்லி சிறிதளவு

செய்முறை

எழும்புத் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கர் பாத்திரத்தில் போடவும். எழும்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.
மஞ்சள் தூள், இஞ்சி விழுது, கொத்துமல்லி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். 3 விசில் வந்ததும் 10 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்கவும்.
கடாயை அடுப்பில் ஏற்றி, எண்ணெய் விட்டு மிளகுத் தூள், சிவப்பு மிளகாய் வற்றல், சீரகத்தூள், பூண்டுப்பல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
எழும்புத் துண்டு வெந்த சாற்றை வடித்து எடுத்து தாளித்ததில் ஊற்றி கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு மூடி ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.
பின்பு அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றை ஊற்றி கலக்கி உபயோகப்படுத்தவும்.


மட்டன் கீமா

தேவையான பொருட்கள்

மட்டன் கீமா ½கிலோ
சின்ன வெங்காயம் ஒரு கை
இஞ்சி பூண்டு ஒரு கை
பட்டை 4
ஏலக்காய் 2
கிராம்பு 2
சீரகம் சிறிது
சோம்பு சிறிது
சிக்கன் மசாலா 2ஸ்பூன்
கரம் மசாலா 1ஸ்பூன்
மிளகாய்த்தூள்
உப்பு
எண்ணெய்

செய்முறை

மட்டன் நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்
அனைத்து மசாலா சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
மட்டன், மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
எண்ணெய் காய்ந்ததும் பொண்ணிறமாக பொறிக்கவும்



மட்டன் சூப்

தேவையான பொருட்கள்

மட்டன் - கால் கிலோ
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
நருக்கிய சின்ன வெங்காயம் - 4
இஞ்சி, பூண்டு - சிறிது தட்டி கொள்ளவும்
கருவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கு

செய்முறை

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். பின்னர் கடுகு சேர்த்து தாலிக்கவும்.
பின் வெங்காயம் இடித்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்னர் சிறிது உப்பு, மஞ்சள் தூள், மட்டன் சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 8 விசில் விட்டு இறக்கவும்.
குக்கர் நன்றாக ஆறியதும் சூப்பை வடித்து சிறிது மிளகு சேர்த்து கலந்து பரிமாறவும்.


மட்டன் ௬க்கா

தேவையான பொருட்கள்

மட்டன் 1/2 கீலோ
வெங்காயம் 1
காய்ந்த மிளகாய் 4
தக்காளி சிறியது ஒன்று
மிளகு துாள் 1/2 ஸ்புன்
மிளகாய் துாள் 1 ஸ்பூன்
மல்லித்துாள் 1/2 ஸ்பூன்
இஞ்சி புண்டு விழுது 2 ஸ்பூன்
உப்பு ( தேவையான அளவு)
எண்ணெய்( தேவையான அளவு)
கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன
கறிவேப்பிலை( சிறிது)
சோம்பு ( சிறிதளவு)

செய்முறை

1.முதலில் மட்டனை கழுவி குக்காில் மஞ்சுநாத் சோ்த்து இஞ்சி புரண்டு விழுது சோ்த்து ஜந்து விசில் வைக்க வேண்டும்.
2.பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு கறிவேப்பிலை சோ்த்து வெங்காயம் வதக்கி வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வேக வைத்த மட்டனை சேர்த்து நன்கு வதக்கவும்.
3.மட்டன் தண்ணீர் வத்தியதும் மிளகு தூள்,மிளகாய் தூள் சேர்த்து,தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
4.நன்கு வதக்கி பத்து நிமிடம் வேக விட்டு கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.



மட்டன் பகோடா

தேவையான பொருட்கள்

மட்டன் கறி 1/2 கி
தயிர் 1 கப்
உப்பு 1tsp
மஞ்சள் தூள் 1/2 tsp
மிளகாய் தூள் 1tsp
கரம் மசாலா 1/2 tsp
இஞ்சி பூண்டு விழுது 1tsp
கான் பாளவர் தூள் 2tsp
கடலை மாவு 1tsp

செய்முறை

கறியை நன்கு அரைத்து கொள்ளவும்.
பிறகு உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கான் பாளவர் தூள், கரம் மசாலா, கடலை மாவு, எல்லாம் வற்றையும் நன்கு பிசைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுடான கறி பகோட ரெடி
கேசப் / புதினா சட்னியுடன் பரிமாறவும்



மட்டன் மசாலா 

தேவையான பொருட்கள்

மட்டன் கால் kg
சின்ன வெங்காயம் 100 கிராம்
தக்காளிப்பழம் 2
இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
பட்டை 1 கிராம் 1 ஏலக்காய் 1
மிளகாய் பொடி 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
சோம்பு சீரகம் பொடி ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து
வெங்காயம் போட்டு வதக்கவும்
வெங்காயம் வதங்கியவுடன் கறியைப் போட்டு கிளறவும்
கரி தண்ணி விடுவதால் அதே தண்ணீரில் வேக விடவும்
பிறகு தக்காளி மஞ்சத்தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
பிறகு மிளகாய் பொடி சோம்பு சீரகம் பொடி உப்புத் தூள் சேர்த்து நன்கு கிளறவும்
தண்ணீர் ஊற்றி 5 அல்லது 6 விசில் விடவும்
கறி நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்
சுவையான மட்டன் மசாலா ரெடி




மட்டன் குருமா

தேவையான பொருட்கள்

மட்டன் - 500 கிராம்
தயிர் - 1/2 கப் அடித்தது
மஞ்சள்தூள்- 1/4 டீக்கரண்டி
காஷ்மீர் சிகப்பு மிளகாய்த்தூள் - 2 டீக்கரண்டி
சுவைக்கேற்ப உப்பு
தக்காளி விழுது 1/2 கப்
உலர்ந்த தேங்காய் தூள் - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3-4 வெட்டியது
எண்ணெய் - 1/4 கப்
வெங்காயம் - 3 முதல் 4 நடுத்தர அளவு ( விழுது செய்வதற்கு )
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
முழு கரம் மசாலா
பச்சை ஏலக்காய் 4
காய்ந்த ஏலக்காய் - 1
இலவங்கம் 4 சிறிய அளவு
கிராம்பு - 4
தண்ணீர்- 2 கப்
கொத்தமல்லித் தூள் - 1 டீக்கரண்டி
சீரகத்தூள் 1 டீக்கரண்டி
அலங்கரித்திற்கு
பிரவுன் வெங்காயம் - ஒரு கையளவு ( நொறுக்கியது )
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
பச்சை கொத்தமல்லி - ஒரு கையளவு நன்றாக நறுக்கியது
கரம் மசாலா தூள் - 1/2 டீக்கரண்டி

செய்முறை

கடாயை எடுத்து, ஒரு டீக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெட்டிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். சில நிமிடங்கள் வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் அதனை ஆறவைத்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
இப்போது ப்ரஷர் குக்கரில் எண்ணெயை சேர்க்கவும், பின்னர் முழு கரம் மசாலாவை சேர்க்கவும்.
அதன் பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும் பின்னர் தக்காளி விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதன் பிறகு மட்டன் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும் மற்றும் உலர்ந்த தேங்காய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி கொண்டு பின்பு தயிர் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
பின்பு உப்பு, சிகப்பு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லித் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து கொழுப்பு பிரிக்கிற வரை வதக்கவும்.
இப்போது தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் 3 விசில் விடவும் அல்லது சாதாரண கடாயில் சமைத்தால் லேசான தீயில் மட்டன் கொழுப்பு கரையும் வரை வேகவிடவும்.
நீங்கள் இப்போது தேவைக்கேற்ப கெட்டி தன்மையை சரி செய்துக் கொள்ளலாம்.
இப்போது அனைத்தையும் அலங்கரித்து 5 நிமிடம் மூடி வைக்கவும். பின்னர் சூடாக பரிமாறவும்.


மட்டன் கிரேவி

தேவையான பொருட்கள்

ஆட்டுக்கறி - அரைக்கிலோ
எண்ணெய் -2-3 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது -2+1 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
நறுக்கிய பெரிய வெங்காயம்-2
பெரிய தக்காளி -1
பச்சை மிளகாய் -2
நறுக்கிய மல்லி இலை - சிறிது
தயிர் - 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒன்னரை தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை அல்லது 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு.

செய்முறை

கறியை நன்கு அலசி தண்ணீர் வடித்து மஞ்சள் தூள்,1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது,தயிர்,உப்பு சேர்த்து ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து சிவற வதக்கவும்.2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்க்கவும்.

அடுத்து தக்காளி,பச்சை மிளகாய் ,மல்லி இலை, உப்பும் சேர்த்து வதக்கவும்.

மிளகாய்த்தூள்,சீரகத்தூள் சேர்த்து பிரட்டவும்.

ஊற வைத்த கறி சேர்க்கவும்.தேவைக்கு அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.உப்பு காரம் சரி பார்த்து மூடவும்.

5 வசில் அல்லது 10 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.

திறந்து கொதிக்க விடவும்.

வெந்த கறியில் சிறிது தண்ணீர் இருந்தால் வற்ற விடலாம். எங்க ஊர் பக்கம் கிரேவி கெட்டியாக ஒரே ஒரு தேக்கரண்டி அரிசி மாவு கரைத்து ஒரு சிலர் சேர்ப்பார்கள் . அடுப்பைக் குறைத்து வைக்கவும்.எண்ணெய் மேலே வந்து கெட்டியாகும்.அடுப்பை அணைக்கவும்.
சூப்பர் சுவையுள்ள மட்டன் கிரேவி தயார்.

சூடான சாதம்,புலாவ்,பிரியாணி ,சப்பாத்திக்கு அருமையாகயிருக்கும்.


மட்டன் தொக்கு

தேவையான பொருட்கள்

மட்டன் கீமா : 250 கிராம்
வெங்காயம் : 4
தக்காளி : 2
பச்சை மிளகாய் : 2
இஞ்சி பூண்டு விழுது : 2 மேசைக்கரண்டி
ரம்ப இலை : 1
மல்லி தழை : ஒரு கைப்பிடி
மிளகாய் தூள் : 1 1/2 தேக்கரண்டி
ஜீரகதூள் : 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : 1/4 தேக்கரண்டி
எண்ணெய் : 3 மேசைக்கரண்டி
உப்பு : ருசிக்கேற்ப
தக்காளி கெட்சப் : 1 மேசைக்கரண்டி (optional)

செய்முறை

ப்ரெஷர் குக்கரில் மட்டன் கீமா, 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கறி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி 4 விசில்களுக்கு வேக விடவும்...
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரம்ப இலை சேர்க்கவும்...
பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்...
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்...
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்...
தக்காளி நன்றாக மசிந்த பின் மிளகாய் தூள் மற்றும் ஜீரக தூள் சேர்க்கவும்...
டொமேடோ கெட்கப்பின் சுவை பிடித்தவர்கள் கெட்சப் சேர்க்கலாம்...
வேக வைத்த கறியில் உப்பு சேர்த்திருப்பதால் தேவையெனில் மட்டும் சிறிது உப்பு சேர்க்கவும்...
கலவை நன்றாக ஒன்று சேர்ந்து எண்ணெய் பிரிந்த பின் அதில் வேக வைத்த தண்ணீருடன் கறியை சேர்க்கவும்...
நன்றாக கிளறி சிம்மில் வைத்து சற்று நேரம் கொதிக்க விடவும்...
தண்ணீர் வற்றி செமி க்ரேவி பதம் வந்ததும் மல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மட்டன் தொக்கு ரெடி!!!!



மட்டன் சால்னா

தேவையான பொருட்கள்

மட்டன் - 1/2 kg
பட்டை, கிராம்பு தூள் - 1/4 தேக்கரண்டி
தயிர் - 1 1/2 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது- 1/2 - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2 (பெரிது)
தக்காளி - 1 (பெரிது)
பச்சை மிளகாய் - 5
மிளகாய் தூள் - 3 - 5 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
புதினா - 1/2 கையளவு
மல்லி இலை - அலங்கரிக்க
அரைக்க:
தேங்காய் - 2துண்டு
முந்திரி - 5-8

செய்முறை

குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் பட்டை, கிராம்பு தூள் சேர்த்து மணம் வந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கும் போது பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கிய பின் தக்காளி , மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி தயிர், சீரக தூள், புதினா சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டவும்.
தண்ணீர் சேர்த்து 15 - 20 நிமிடம் விசில் போட்டு வேக விடவும்.
தேங்காயுடன் முந்திரி சேர்த்து நன்கு மைய அரைக்கவும் .
கறி வெந்ததா என்று பார்த்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து வடை போகும் வரை மிதமான நெருப்பில் கொதிக்க விடவும்
இறுதியில் மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.




மட்டன் கிரேவி

தேவையான பொருட்கள்

மட்டன் : ½ கிலோ
நல்லெண்ணெய் : 4 - 5 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் : 15 - 20
தக்காளி : 1
பட்டை : சிறிதளவு
கிராம்பு : 2
ஏலக்காய் : 2
சோம்பு : ½ மேஜைக்கரண்டி
பிரியாணி இலை : 1
இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
கரம் மசாலா : ½  மேஜைக்கரண்டி
குழம்பு மசாலா அல்லது மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் : ½  மேஜைக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
அரைக்க
தேங்காய் துருவல் : 4 - 5 மேஜைக்கரண்டி
கசகசா : சிறிதளவு
சீரகம் : 1 மேஜைக்கரண்டி

செய்முறை

மட்டனை சுத்தம் செய்து, மஞ்சள் தூள் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை , கிராம்பு , ஏலக்காய் , பிரியாணி இலை சேர்த்து 20 செகண்ட் கழித்து பின் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
பின் குழம்பு மசாலா அல்லது மிளகாய் தூள் , மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும் ( தேவையானால் தண்ணீர் சேர்க்கவும் )

பின் வேக வைத்த மட்டனை அத்தண்ணீருடன்  சேர்த்து  10 -15 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.

பின் தேங்காய் விழுது சேர்த்து 2 - 5 நிமிடம் குறைந்த தீயில் வேக விட்டு கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்



மட்டன் கட்லட்

தேவையான பொருட்கள்

எலும்பில்லா மட்டன் - 150 கிராம்
தேங்காய் - 1/4 மூடி
முந்திரி - 4
பெரிய வெங்காயம் - பாதி (அ) சின்ன வெங்காயம் - 4
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5( அவரவர் காரத்திற்கேற்ப)
மஞ்சள்த்தூள் - 1/4 தேக்கரண்டி
சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - 1 1/2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
முட்டை - 1
கார்ன் ஃப்ளார் மாவு - 1 மேசைக்கரண்டி
மல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் - பொறிப்பதற்கு

செய்முறை

முதலில் மட்டனை நன்கு கழுவி விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு விழுதையும், மஞ்சள்த்தூளையும் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கொதித்து பாதியளவு தண்ணீர் சுண்டி இருக்கும் போது, தேங்காயை சிறு சிறு பல்லாகவோ, துருவியோ சேர்த்து அத்துடன் காய்ந்த மிளகாய்,வெங்காயம் மற்றும் மசாலாத்தூள்களையும் சேர்த்து ஒரு ஸ்பூன் உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி கொதிக்க விடவும்.
தண்ணீர் முழுவதும் சுண்டிய பின் முந்திரி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி வைத்து ஆறவிடவும்.
ஆறிய பின் மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் எல்லாவற்றியும் போட்டு அரைக்கவும். நன்கு அரைய நேரமெடுக்கும். எனவே கொஞ்சம் சுற்றிய பின் திப்பியாகவே இருக்கும். அப்போது முட்டையை உடைத்து அதில் ஊற்றி மிக்ஸியை சுற்ற விட்டால் நன்கு அரைந்து விடும்.அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து போட்டு கார்ன்ஃப்ளார் மாவு, பொடியாக நறுக்கிய மல்லி இழையையும் சேர்த்து நன்கு பிசைந்து விட்டு உப்பு சரிப்பார்த்து விட்டு வேண்டுமானால் சேர்க்கவும்.
வானலியில் எண்ணெய் சூடு படுத்தி மிதமான தீயில் வைத்து கொண்டு சிறு சிறு கட்லட்டாக தட்டி போட்டு குறைந்த தீயிலேயே இருபுறமும் பொன்னிறமாகும் வரும் வரை வைத்து பின் எடுக்கவும்.
சுவையான சூப்பரான கட்லட் ரெடி. எல்லா சாதத்திற்கும் தொட்டுக் கொள்ள ஏற்ற சைட் டிஷ். குழந்தைகளிடம் கொடுத்தால் வெறுமெனவே ரசித்து சாப்பிடுவார்கள்.



மட்டன் தக்கடி

தேவையான பொருட்கள்

கொழுக்கட்டைக்கு
தேவையானவை
வறுத்த பச்சரிசி மாவு இரண்டு கப்
தேங்காய் துருவல் ஒரு கப்
பெ.வெங்காயம் இரண்டு
ப.மிளகாய் இரண்டு
உப்பு தே.அளவு
மட்டன் குழம்புக்கு
தேவையானவை
எலும்பு மட்டன் அரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது இரண்டு டே.ஸ்பூன்
தக்காளி விழுது அரை கப்
வெங்காய விழுது அரை கப்
ப.மிளகாய் இரண்டு
கீழை கறி மசாலா இரண்டு டே.ஸ்பூன்
ஆயில் தே.அளவு
உப்பு தே.அளவு
ம.தூள் அரை ஸ்பூன்
மி.தூள் அரை ஸ்பூன்
தேங்காய் ஒன்று

செய்முறை

மட்டன் குழம்பு.தேங்காயை துருவி முதல் பால் ஒரு கப் இரண்டாம் பால் மூன்று கப் எடுக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காய விழுது தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

அதனுடன் ப.மிளகாம் இ.பூண்டு விழுது ம.தூள்.மி.தூள் உப்பு சேர்த்து கிளறவும்.
அதனுடன் மட்டனை சேர்த்து இரண்டாம் பால்ஒரு கப் சேர்த்து குக்கரை மூடவும்
மூன்று அ நான்கு விசில் வைத்து கறியை வேக விடவும்.
பிறகு அதில் கீழை மசாலா பொடி சேர்த்து மீதி தே.பால் சேர்த்து கொதிக்க விடவும்.

இந்த குழம்பில் அரை கப் எடுத்து கொழுக்கட்டை பிசைய தனியே வைக்கவும்.
சிறு தீயில் கறிக்குழம்பை வைத்து இறக்கவும்.

கொழுக்கட்டை‌ செய்ய.தேங்காய் துருவலை வறுத்த ப.அரிசி மாவுடன் சேர்க்கவும்.

அதனுடன் உப்பு ப.மிளகாய்.வெங்காயம் அரிந்து போடவும்.
அதில் முன்பு எடுத்து வைத்த அரை கப் கறி குழம்பை தெளித்து பிசிறவும்.

அவற்றை ஒன்று சேர்த்து கொழுக்கட்டை உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேக ஸைக்கவும்.

குக்கரில் இருக்கும் குழம்பை அகல சட்டியில் மாற்றி சிறு கொதியிலே வைத்து வெந்த கொழுக்கட்டைகளை குழம்பில் போடவும்.

கொழுக்கட்டைகள் குழம்பில் வெந்து மசாலா உடன் சேர்ந்து வரும் போது அடுப்பை அணைக்கவும்.



மட்டன் சாப்ஸ்

தேவையான பொருட்கள்

மட்டன் சாப்ஸ்- 300gm
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சிபூண்டு விழுது - 2தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2தேக்கரண்டி
சீராகத்தூள் - 11/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
அரைத்த தேங்காய் - 3 தேக்கரண்டி அளவு
மல்லி இலை - கொஞ்சம்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை

மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
குக்கரில் மட்டன், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மல்லி இலை, மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்து வேக வையுங்கள்.
வெந்தபின் தோசை கடாயில் தட்டவும், அதனுடன் அரைத்த தேங்காய் சேர்த்து பிரட்டி கொள்ளுங்கள்.
இடை இடையே எண்ணெய் ஊற்றி தேங்காய் வாடை போகும் வரை பிரட்டுங்கள்.


மட்டன் பால்ஸ்

தேவையான பொருட்கள்

மட்டன் கொத்து கறி1/4கிலோ
பவுடர் செய்ய தேவையான பொருட்கள்
பொட்டு கடலை 1கப்
ஏலக்காய்2
கிராம்பு3
பட்டை சிறிது
சோம்பு1தே.க
சோள மாவு 1தே.க
மஞ்சள் பவுடர்1தே.க
மிளகாய் பவுடர்1தே.க
அரைக்க :தேவையான பொருட்கள்
தேங்காய் சிறிது
இஞ்சி பூண்டு
பச்சை மிளகாய் 6
சின்ன வெங்காயம்6
உப்பு
எண்ணெய்
அலங்கரிக்க :point_down:
கருவேப்பிலை
மல்லி

செய்முறை

முதலில் கறியை கழுவி அதை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ளவும்.

அதில் கொடுத்த பவுடர்,அரைத்த கலவை,கருவேப்பிலை மல்லி தழை மற்றும் உப்புசேர்த்து பிசைய வேண்டும்.

பிறகு அதை உருண்டையாக உருட்டி கொள்ளவும்.

பின் கடாயில் எண்ணெய் விட்டு பொரித்துயெடுக்கவும்.





மட்டன் வருவல்

தேவையான பொருட்கள்

மட்டன் அரைக்கிலோ சதைப்பகுதி
சீரகம் சோம்பு ஒரு ஸ்பூன்
வெங்காயம் 3 பொடியாக நறுக்கியது
கருவேப்பிலை சிறிது
காய்ந்த மிளகாய் ஐந்து
பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
மிளகுத் தூள் 3 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தண்ணீர் கறி வேகவைப்பதற்கு
எண்ணெய்

செய்முறை

குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி கறியை சேர்த்து இஞ்சி பூண்டு விழுது உப்பு மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து ஐந்து விசில் வைக்கவும்
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சோம்பு தாளித்து காய்ந்த மிளகாய் வெங்காயம் கருவேப்பிலை உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
அதனுடன் வேகவைத்த கறியை மிளகுத்தூள் பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்
சுவையான மட்டன் வறுவல் தயார்

பின் கடாயில் எண்ணெய் விட்டு பொரித்துயெடுக்கவும்.




மட்டன் ஊறுகாய்

தேவையான பொருட்கள்

மட்டன் -400கிராம்
தக்காளி -3/4 கி
வினிகர் -150 ml
ப.மிளகாய் -4
வத்தல் தூள்-தேவைக்கு
உப்பு -தேவைக்கு
தாளிக்க
கடுகு -2 ஸ்பூன்
கறிவேப்பிலை -1கொத்து
பூண்டு -10-15பற்கள்
பெருங்காயத் தூள்-1 ஸ்பூன்
வத்தல் -3
நல்லெண்ணெய் -150 ml
வத்தல்-2சீரகம், வெந்தயம், சோம்பு- தலா 1/2 ஸ்பூன் (இவற்றை லேசாக வருத்து பொடி செய்து கொள்ளவும்)

செய்முறை

மட்டனை மிக சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி கறியுடன் வினிகர்,ப.மிளகாய்,உப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும் .
தக்காளியை அரைத்து வைத்து கொள்ளவும்.
கறி வெந்ததும் அரைத்த தக்காளி சேர்த்து கொதிக்க வைத்து நன்கு வற்ற விடவும்.
உப்பு,காரம்,புளிப்பு சரிபார்த்து தேவைக்கு உப்பு,வத்தல் தூள்,வினிகர் சேர்க்கவும்
தக்காளி நன்கு வற்றி கறியுடன் சேர்ந்ததும் மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்ததை சேர்த்து தாளித்து,திரித்த பொடி சேர்த்து தாளித்து கறி ஊறுகாயுடன் சேர்க்கவும்.
கறி ஊறுகாய் தயார்.



மட்டன் பக்கோடா

தேவையான பொருட்கள்

மட்டன் 500 கிராம்
கடலைமாவு 100 கிராம்
எண்ணெய் 500 கிராம்
மஞ்சள்.மிளகாய்த்தூள் சிறிது
வெங்காயம் 500 கிராம்
கருவேப்பில்லை சிறிது மல்லிச்செடிசிறிது
65 மசாலாத்தூள் 50

செய்முறை

வெங்காயம் நறுக்கி மட்டன் கழுவி வைக்கவும்

மட்டனில் கடலைமாவு.மிளகாய்தூள் உப்பு.மஞ்சளதூள்சேர்த்து இரண்டுமணி நேரம் உற வைக்கவும்

உறியபின் அடுப்பில் வானாலியை வைத்து எண்ணெய் உற்றி கறியை போட்டு வறுத்து எடுக்கவும்

பின் மற்றொரு வானாலியை அடுப்பில் வைத்து மட்டன் பொரித்த எண்ணெய் நூறு மில்லி ஊற்றி கருவேப்பில்லை போட்டு வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்

பின் வெங்காயம் சேர்க்கவும்

பின் மசாலா சேர்க்கவும்

பின் வறுத்த மட்டன் சேர்க்கவும்

பத்து நிமிடம் நன்கு வதக்கி அடுப்பை அணைக்கவும்.

மட்டன் பக்கோடா தயார்.. கறி வாங்கும் போது கொழுப்பு .சவ்வு இல்லாத கட்டி கறியாக வாங்க வேண்டும்.



மட்டன் கறி வடை

தேவையான பொருட்கள்

மட்டன் 200 கிராம்
பொட்டுக்கடலை 100
தேங்காய் அரை மூடி
மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் இரண்டு
பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
கரம் மசாலா ஒரு ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கசகசா ஒரு ஸ்பூன்
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி கறியை தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்
வதங்கிய வதங்கிய கழுவி மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் அதை மிக்சியில் பொட்டுக்கடலை தேங்காய் காய்ந்த மிளகாய் போட்டு அரைக்கவும்
அரைத்த விழுதுடன் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலாத்தூள் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று அரைக்கவும்
வைத்த மாவில் ஒரு பவுலில் மாற்றி அதில் அதன்மேல் கசகசாவை மீண்டும் பிசைந்து கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
டேஸ்டான ஈஸியான கறி வடை தயார்








மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி - 1 கப்
மட்டன் - 1/2 கி
நறுக்கிய வெங்காயம் -3
நறுக்கிய தக்காளி -2
இஞ்சிபூண்டு விழுது -1 மேசைக்கரண்டி
தயிர் - 1/2 கப்
எலுமிச்சம்பழம் - அரைமூடி
மஞ்சள்த்தூள் -1 மே.க
காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
பிரியாணி மசாலா - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை -2 ஒரு கைப்பிடி
புதினா -2 ஒரு கைப்பிடி
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
சோம்பு - 1/4 மே.கரண்டி
ஏலக்காய் -1/2 மே.க
பட்டை சிறிதளவு
கிராம்பு சிறிதளவு
அன்னாசிப்பூ சிறிதளவு
பிரியாணி இலை - 2
எண்ணெய் -4 மே.கரண்டி

செய்முறை

முதலில் மட்டனை சுத்தம் செய்து குக்கரில் போட்டு 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து மஞ்சள்த்தூள் சிறிது உப்பு சேர்த்து 2 விசில் விடவும்.
மற்றொரு குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும்.
பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.பின்பு இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
பின்பு இதனுடன் வேகவைத்துள்ள மட்டனையும் சேர்க்கவும்.
இதனுடன் களைந்து வைத்துள்ள பாசுமதி அரிசியையும் சேர்க்கவும்.
பின்பு தயிர் மற்றும் எலுமிச்சை ஜூஸ் மஞ்சள்த்தூள் காஷ்மீர் மிளகாய்த்தூள் மற்றும் பிரியாணி மசாலா தண்ணீர் 2 டம்ளர் கடைசியாக உப்பு சேர்த்து கிளறவும். பின்பு கொத்தமல்லி தழை புதினா தூவி குக்கரை மூடி 2 விசில் விடவும்.
இப்போது சுவையான மட்டன் பிரியாணி ரெடி...




மட்டன் கைமா கறி

தேவையான பொருட்கள்

கொத்துக்கறி (மட்டன் - 1/4 கிலோ
கடலைப்பருப்பு - 100 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
கறிவேப்பிலை - 6 இலைகள்
தேங்காய் விழுது - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை

முதலில் கறியை சுத்தப்படுத்தி அதில் பாதி அளவு தயிர் இஞ்சி பூண்டு விழுது மற்றும் மசாலா பொருட்கள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டி பத்து நிமிடங்கள் வைக்கவும்.
கடலைப்பருப்பை கழுவி ஒரு கப் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பொடிதாக நறுக்கிய வெங்காயம் கொஞ்சம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக ஆனதும் இஞ்சி பூண்டு விழுது தயிர் பட்டை கிராம்பு மற்றும் ஏலம் சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும்.
அதோடு ஊற வைத்த கறிக் கலவையைச் சேர்த்து சுவைக்கேற்ப உப்பு மற்றும் நறுக்கிய தக்காளி போட்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து 3 அல்லது 4 விசில் போட்டு வேக விடவும்.
கறி முக்கால் பதமாக வெந்ததும் நறுக்கிய வெங்காயம் மற்றும் கடலைப்பருப்பை தண்ணீரை விட்டு வடித்து எடுத்து தேங்காய் விழுது சேர்த்து மேலும் 2 விசில் போட்டு வேக விடவும். சுவையான கொத்துக்கறி குழம்பு தயார்...


மட்டன் உப்புகறி

தேவையான பொருட்கள்

1/2 கிலோ மட்டன் சதை பகுதி
இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் 75 கிராம்
வரமிளகாய் 5
கருவேப்பிலை சிறிது
மிளகு 15 கிராம்
சீரகம் 7 கிராம்
உப்பு தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் 10 மில்லி

செய்முறை

மிளகு, சீரகம் வறுத்து பொடி செய்து வைக்கவும்.
தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய கருவேப்பிலை ,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
வேகவைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்....
உப்பு சேர்த்து தண்ணீர் வற்றி வரும் போது இடித்த மிளகு சீரகப்பொடி சேர்த்து நன்கு வறுத்து இரக்கவும்......



மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்

மட்டன்- 1 1/2கி
பாஸ்மதி அரிசி-1 கி
நெய்-150
எண்ணெய்-150
இஞ்சி பூண்டு விழுது- 3 கரண்டி (குழி கரண்டி)
கிராம்பு-5 ஏலம்-7 கருவா-2 துண்டு
வெங்காயம் -1/2கி
தக்காளி -400கி
ப.மிளகாய்-8
தயிர்-400
மிளகாய் தூள்-3 டேபிள் ஸ்பூன் + (காரத்திற்கேற்ப)
மல்லி இலை-1/2 கட்டு புதினா -1/2 கட்டு
எலுமிச்சை பழம்-1
உப்பு- தேவைக்கு

செய்முறை

முதலில் மட்டனை சுத்தம் செய்து, கொஞ்சம் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, 1டேபிள் ஸ்புன் மிளகாய் தூள், பாதி தயிர் சேர்த்து 30 நிமிடம்முதல் 1மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
பின்பு குக்கரில் 2 விசில் வரும்வரை வேக வைத்து வைக்கவும். 2 விசில் போதுமானது.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றவும். பின்பு நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து ஏலம் , கருவா, கிராம்பு இம்மூன்றையும் கொஞ்சம் இடித்து சேர்க்கவும்.
பின்பு வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாசனை அடங்கியதும் தக்காளி மிளகாய் சேர்க்கவும். பாதி அளவு மல்லி, புதினா சேர்க்கவும்.
பின்பு தயிர் சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் வேக வைத்த கறியை சேர்க்கவும். பின்பு மிளகாய் பொடி சேர்க்கவும். உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். கோழியை நன்கு வேக விடவும். 3/4 பதம் வெந்ததும் 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அரிசியை கலைந்து வடிகட்டி சேர்க்கவும்.
அரிசி 3/4 பதம் வெந்ததும் மிகக் குறைந்த தணலில் வைத்து மீதியுள்ள மல்லி, புதினா சேர்த்து, எலுமிச்சை சாறு சேர்த்து மூடி போட்டு மேலே வெயிட் ஏற்றி வைக்கவும். 20 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும் . சூடாக பரிமாறவும்.
தம் போடும் முறை: தோசை கல்லை சூடேற்ற அடுப்பை குறைந்த தணலில் வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை ஏற்றி தம் போடவும்.




மட்டன் தால்ச்சா

தேவையான பொருட்கள்

எலும்புடன் உள்ள மட்டன் ¼ கிலோ
வெங்காயம் 1
இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்புன்
குழம்பு மசாலா தூள் 3 ஸ்புன்
தக்காளி 2 அல்லது 3
துவரம்பருப்பு ¼ கப்
கடலை ப௫ப்பு ¼ கப்
கத்தரிக்காய் 2
மாங்காய் ½ அல்லது புளி கரைசல் சிறிதளவு
பூண்டு 6 பல்
மஞ்சல் துாள் ½ ஸ்புன்
உப்பு ௫சிகேற்ப
பட்டை சிறிதளவு
ஏலக்காய் 2
பச்சை மிளகாய் 1
க௫வேப்பிலை சிறிதளவு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

ஒ௫ குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பட்டை, ஏலக்காய், க௫வேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் போட்டு லேசாக வதக்கி அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, எலும்புடன் உள்ள மட்டன் துண்டுகள் சேர்த்து நன்றாக கிளறி, குழம்பு மசாலா தூள், சிறிதளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 அல்லது 6 விசில் விடவும்.
ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து அதில் கடலை ப௫ப்பு, துவரம்பருப்பு போட்டு, தக்காளி சேர்த்து லேசாக கிளறிவும்
கத்திரிக்காய், மாங்காய், மஞ்சள் தூள் சேர்த்து, உப்பு சரி பாக்கவும். இதனுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, மறுபடியும் குக்கரை மூடி 3 விசில் விட்டு வேக விடவும்.இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.




மட்டன் பிரட்டல்

தேவையான பொருட்கள்

மட்டன் அரை கிலோ
வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்
தனியா ஒரு ஸ்பூன்
சீரகம் அரை ஸ்பூன் மிளகு அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் ஐந்து
சோம்பு கால் ஸ்பூன்
உப்பு எண்ணெய் தேவையான அளவு
சின்ன வெங்காயம் 20
பச்சை மிளகாய் 4

செய்முறை

குக்கரில் மட்டனுடன் உப்பு மஞ்சள்தூள் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அரைத்த பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விட வேண்டும்

சின்ன வெங்காயம் பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் பச்சை மிளகாய் வதக்கி வெந்த மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு சுருள வேக விட வேண்டும்

காரசாரமான சுவையான மட்டன் பிரட்டல் தயார்



மட்டன் நெய் சோறு

தேவையான பொருட்கள்

மட்டன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: .
மட்டன்- 1/2 கி .
பல்லாரி - 2
தக்காளி - 2 .
வத்தல் தூள் - 2 ஸ்பூன் .
மஞ்சள் தூள் -1 ஸ்பூன் .
வீட்டு மசலா பொடி- 2 டேபிள் ஸ்பூன்
மிளகு சீரகத் தூள் - 2ஸ்பூன் .
தயிர் - 2 டேபிள் ஸ்பூன் .
மல்லி இலை -1 கொத்து
எண்ணெய்- தாளிக்க .
இஞ்சி பூண்டு விழுது,
பட்டை கருவா- தாளிக்க
நெய் சோறு செய்ய தேவையான பொருட்கள்: .
அரிசி-1/2 கி ஒரு கப்பில் அளந்து வைக்கவும். .
பல்லாரி - 2 .
மிளகாய்-1 கீறியது .
நெய்-2 டேபிள் ஸ்பூன
தேங்காய் எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் - 2கப்
மல்லி, புதினா -2 கைப்பிடி
வறுத்த கிஸ்மிஸ் முந்திரி-5
இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள் ஸ்பூன்
பட்டை, ஏலம், கருவா- தேவைக்கு
உப்பு- தேவைக்கு

செய்முறை

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடு பண்ணவும் . எண்ணெய் காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது, பட்டை கருவா, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின் பல்லாரி,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் மட்டன் உப்பு, தயிர் சேர்த்து வதக்கவும். 20 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்
பின் தூள் வகைகளை சேர்த்து வதக்கவும். பின் மல்லி இலை சேர்த்து தேவையான உப்பு , தண்ணீர் சேர்த்து4 விசில் வரை வேக விடவும். குறிப்பு: கிரேவி பதத்திர்க்கு வேக விடவும்
நெய் சோறு செய்யும் முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய்,நெய்சேர்த்து சூடு பண்ணவும். பின் இஞ்சி பூண்டு விழுது பட்டை, ஏலம், கருவா, கொஞ்சம் மல்லி,புதினா சேர்த்து வதக்கவும்.
பின் பல்லாரி , மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் தேங்காய் பால் சேர்க்கவும். கொதித்ததும் அரிசி,உப்பு சேர்த்து வேக விடவும்.
முக்கால் பதம் வெந்ததும் மட்டன் கிரேவி மல்லி புதினா சேர்த்து 20 நிமிடம் தம்மில் போடவும்.
வெந்ததும் கிளறி வறுத்த கிஸ்மிஸ் முந்திரி சேர்த்து இறக்கவும் சுவையான மட்டன் நெய் சோறு ரெடி.



பதாமி மட்டன் கறி

தேவையான பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ
பல்லாரி - 4
இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
இலவங்கபத்திரி - 1
பட்டை - 2 இன்ச் துண்டு
கிராம்பு - 2
ஏலம் - 2
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
பாதம் - 1 கப் ( அரைத்தது )
தயிர் - 1 கப்
தேங்காய் விழுது - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
மல்லி இலை - 2 மேசைக்கரண்டி
புதினா - 6 இலைகள்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை

கடாயில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பல்லாரி சேர்த்து பொன்னிறமாக ஆகியதும் எண்ணெய்யை விட்டு எடுக்கவும்.
ஆறியதும் பொறித்த வெங்காயத்தை மிக்ஸியில் மிருதுவாக அரைத்தெடுக்கவும்.
அதே கடாயில் இலவங்கபத்திரி பட்டை கிராம்பு ஏலம் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அது நன்றாக பொறிந்ததும் மசாலா பொருட்கள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
சுத்தப்படுத்திய இறைச்சி துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி மூடி போட்டு 3 நிமிடங்கள் வேக விடவும்.
தேங்காய் விழுது மற்றும் அரைத்த பாதாம் விழுது ஆகியவற்றை சேர்த்து க்ரேவியில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வைக்கவும்.
எண்ணெய் பிரிந்ததும் பொறித்த வெங்காய பேஸ்ட் மற்றும் தயிரை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
கறி நன்றாக வெந்ததும் அடுப்பை அனணத்து பொடிதாய் நறுக்கிய மல்லி புதினா மற்றும் பொடித்த பாதாம் ஆகியவற்றை தூவி பரிமாறவும்.




மட்டன் ப்ளாட்டர் 

தேவையான பொருட்கள்

கறி ரசம் செய்ய :
ஆட்டுக்கறி வேகவைத்த தண்ணீர் - 3கப்
புளி - எலுமிச்சை அளவு
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
அரைத்துக் கொள்ள:
மிளகு - 3 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மல்லி இலை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 8 அல்லது 10 பல்
தாளிக்க:
கடுகு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கைமா உருண்டை :
  மட்டன் கைமா - 500 கிராம்
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
துருவிய தேங்காய் - 3/4 கப்
பச்சை மிளகாய் - 7 (நறுக்கியது)
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
கசகசா - 2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
இஞ்சி - சிறிய துண்டு (நறுக்கியது)
பூண்டு - 10 பற்கள் (நறுக்கியது)
மஞ்சள் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை - சில
மட்டன் வடை :
கைமா உருண்டை கலவை
எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை

கறி ரசம் செய்ய:
அரைக்க கொடுத்த பொருளை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து அதில் கறி தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் போட்டு தக்காளியை அதில் பிசைந்து விட்டு போடவும்.
அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளித்து அரைத்த மசாலாவை போட்டு வதக்கி பின் புளித்தண்ணீர் கரைசலை தாளித்த கலவையில் ஊற்றி நுரை கட்டி வரவும் அடுப்பை அணைத்து விடவும்.
கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இப்பொழுது கறி ரசம் ரெடி.
கைமா உருண்டை :
மிக்ஸியில் தேங்காய், பொட்டுக்கடலை மற்றும் கசகசா சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடம் நன்கு வதக்கி, பின் இறக்கி குளிர வைக்க வேண்டும்
பிறகு மிக்ஸியில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் மட்டன் கைமா, தேங்காய் பேஸ்ட் மற்றும் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்
இவற்றை ஆவியில் வேகவைத்து எடுத்து கடுகு கருவேப்பிலை தாளித்து இறக்கினால் கைமா உருண்டை தயார்.
மட்டன் வடை :
மேலே குறிப்பிட்டுள்ள கைமா உருண்டையை வேக வைக்காமல் வடை போல் கையில் தட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்தால் மட்டன் வடை ரெடி.





மட்டன் ஷமி கபாப்

தேவையான பொருட்கள்

மட்டன் அரை கிலோ
கடலைப்பருப்பு அரை கப்
வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் 3 பொடியாக நறுக்கியது
ஷாஹி சிரகம் ஒரு டீஸ்பூன்
மல்லி இலை ஒரு கப்
புதினா இலை சிறிதளவு
சிவப்பு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
நெய் பொரித்தெடுக்க

செய்முறை

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
வெங்காயம் நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய், உப்பு,புதினா இலை,மட்டன்,இஞ்சி பூண்டு விழுது மற்றும் மல்லி இலை அதனுடன் சேர்த்து வதக்கவும்.
பின் அதில் கரம் மசாலா தூள்,மஞ்சள் தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்

ஊற வைத்து வேக வைத்த கடலைப்பருப்பை அதனுடன் சேர்க்கவும்

சிறிது தண்ணீர் ஊற்றி மட்டனை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்
பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்

அரைத்த கலவையை கட்லட் போல் தட்டி வைத்துக் கொள்ளவும்

பின் அதை தவாவில் சிறிது நெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்





தில்பசந்த் மட்டன்

தேவையான பொருட்கள்

மட்டன் 1/2 கிலோ
வெங்காயம் 1 1/2
இஞ்சி பூண்டு விழுது 1 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் 1 1/4 ஸ்பூன்
கரம் மசாலா 1 ஸ்பூன் நிறைய
உப்பு தேவைக்கு
தண்ணீர் தேவைக்கு
எண்ணெய் தேவைக்கு
தக்காளி 1 1/4
தயிர் 150 கிராம்
துருவிய இஞ்சி 2 ஸ்பூன் அல்லது தேவைக்கு
பாதாம் அலங்கரிக்க
வறுத்து அரைக்க: டேசிக்கேட்டட் தேங்காய் 3 ஸ்பூன்
கறுப்பு எள் 2 ஸ்பூன்
கசகசா 2 ஸ்பூன்

செய்முறை

மட்டனை குக்கரில் மஞ்சள் தூள், வெங்காயம், மல்லி தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தண்ணீர் சேர்த்து 7 விசில் வேக வைக்கவும்.
தக்காளியை மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.
வறுத்து அரைக்க: எள்ளையும் கசகசாவையும் வறுத்து அதனுடன் டேசிக்கேட்டட் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
குக்கரை திறந்து, அரைத்த மசாலா, தக்காளி விழுது, தயிர் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து, இடையிடையே எண்ணெயும் சேர்த்து, ஹை தீயில் கிளறி கொண்டே இருக்கவும்.
செமி கிரேவி பதம் வந்ததும் கரம் மசாலா சேர்த்து கிளறி, இறுதியாக துருவிய இஞ்சியும் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் போது நறுக்கிய பாதாம் துண்டுகளை வைத்து அலங்கரிக்கவும். சூப்பரான தில்பசந்த் மட்டன் தயார்.




மட்டன் ரோகன் ஜோஷ்

தேவையான பொருட்கள்

மட்டன் அரை கிலோ
அதனோடு வேகவைக்க
எண்ணெய் 4 மேசைக்கரண்டி அளவு
ஜாதிபத்திரி ஒன்று
பட்டை சிறிய துண்டு 2
கிராம்பு-2
கருப்பு ஏலக்காய் 3
ஏலக்காய்-2
இஞ்சி பூண்டு விழுது இரண்டு தேக்கரண்டி
தயிர் 2 தேக்கரண்டி
குங்குமப்பூ 3
காஷ்மீரி மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
சட்டியில் வேக வைக்க தேவைப்படும் மசாலா
பிரியாணி இலை இரண்டு
காஷ்மீரி மிளகாய் தூள் இரண்டு தேக்கரண்டி
பட்டை இரண்டு சிறிய துண்டு
கிராம்பு-2
ஏலக்காய்-2
சீரகம் 2 தேக்கரண்டி
சோம்பு 1/8 தேக்கரண்டி
அனசிப்பூ 1
மராத்தி மொக்கு 2
எண்ணெய் ஒரு தேக்கரண்டி

செய்முறை

கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் வடித்துக் கொள்ளுங்கள்
பின்பு குக்கரில் ஒரு மேசைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் ஜாதிபத்திரி சேர்த்து சிறிது வதக்கவும்
மட்டனை அதில் சேர்த்து சிறிது நேரம் திருப்பி போட்டு பொறித்து கொள்ளுங்கள்.
பின்பு அதனுடன் தயிர் இஞ்சி பூண்டு விழுது, உப்பு ,காஷ்மீரி மிளகாய்த்தூள்,குங்குமப்பூ சேர்க்கவும்
தேவையான தண்ணீர் ஊற்றி முக்கால் வேக்காடு வேக வைத்துக் கொள்ளுங்கள்
இரண்டாவது முறை சொல்லப்பட்ட பட்டை ,கிராம்பு ,ஏலக்காய், சீரகம் ,அனசிப்பூ , மராத்தி மொக்கு எல்லாவற்றையும் சேர்த்து சற்று வறுத்து எடுத்து திரித்து வைத்துக் கொள்ளுங்கள்
மற்றொரு வாணலியில் அல்லது நான்ஸ்டிக் பேனில் ஒரு தேக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை சேர்க்கவும்.
அதோடு வெந்த மட்டன் கலவையை சேர்க்கவும்
அதனோடு திரித்து வைத்த மசாலா மற்றும் காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து சிம்மில் வைத்து முழுமையாக வேகும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
சுவையான மட்டன் ரோகன் ஜோஷ் தயார்
இதனை சாதம், இடியாப்பம் ,ரொட்டி நான் ,போன்றவற்றிற்கு வைத்து சைட் டிஷ்ஆக வைத்து சாப்பிடலாம்.


சைனீஸ் மட்டன் கறி

தேவையான பொருட்கள்

மட்டன் அரை கிலோ
பெ.வெங்காயம் 1
தக்காளி 2
ப.மிளகாய் 2
இஞ்சி பூண்டு விழுது3 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் இரண்டு டே.ஸ்பூன்
உப்பு தே.அளவு
ம்.தூள் தே.அளவு
காய்ந்த மிளகாய் 5
எண்ணெய் தே.அளவு
உ.கிழங்கு கால் கிலோ

செய்முறை

மட்டனை கழுவி எடுத்துக் கொள்ளவும்

பெ.வெங்காயம்.. தக்காளி.. ப.மிளகாயை அரிந்து கொள்ளவும்
கா.மிளகாய்.. தக்காளியுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்

குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் ப.மிளகாய்.. ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்
இலேசாக வதங்கி வரும் போது கா.மிளகாய்.. தக்காளி சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரையும் கிளறவும
சிறு தீயில் எல்லா மசாலாவும் சுருண்டு வரும் வரை வதக்கி மட்டன் சேர்த்து உப்ப.மிதூள் சேர்த்து கிளறவும்
அதில் ஒன்றரை கப் நீர் சேர்த்து குக்கரில் 3விசில் விடவும்
குக்கரை திறந்து உ.கிழங்கு சேர்த்து அந்த மீதமுள்ள நீரில் வேக விட்டு நீர் வற்றும் வரை கிளறி சோயா சாஸ் சேர்த்து சிறு தீயில் வைக்கவும்
ஓரங்களில் எண்ணெய் பிரியும் போது இறக்கவும்.



மட்டன் ரோஹன் ஜோஷ்

தேவையான பொருட்கள்

ஆட்டுக்கறி -1/2 கிலோ
எண்ணெய் -3 மேஜைக்கரண்டி
நெய் -1 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் -3
அரைத்த தக்காளி -2
இஞ்சி பூண்டு விழுது -1 +2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
சீரகப்பொடி -1 தேக்கரண்டி
தயிர் -1 மேஜைக்கரண்டி
ஏலம்,பட்டை கிராம்புத்தூள் -1/2 தேக்கரண்டி அல்லது முழுதாக தலா 2 துண்டு.
நறுக்கிய மல்லி இலை - சிறிது.
உப்பு - தேவைக்கு.

செய்முறை

முதலில் ஆட்டுக்கறியை நந்கு சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்து வைக்கவும். கறியுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு,ஒரு மேஜைக்கரண்டி தயிர்,சிறிது உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு ஏலம்,பட்டை கிராம்பு போடவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்முறுகலாக வதக்கவும்.இஞ்சி பூண்டு இரண்டு தேக்கரண்டி சேர்த்து வதக்கவும்.கரம் மசாலா பொடியாக சேர்ப்பதாய் இருந்தால் இஞ்சி பூண்டு சேர்த்து பின்பு சேர்க்கவும்.
மிளகாய்த்தூள்,மல்லி,சீரகத்தூள் சேர்க்கவும்.பிரட்டவும்.2 தக்காளி அரைத்து சேர்க்கவும்.
நன்கு வதக்கவும். ஊற வைத்த கறியைச் சேர்க்கவும்.உப்பு சிறிது சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 5 விசில் வேக வைக்கவும்.
ஆவியடங்கிய பின் திறந்து ஒரு கடாயில் மாற்றி கிரேவி அதிகம் இருந்தால் சிறிது கெட்டியாக விடவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.எண்ணெய் மேலே வரும். நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்
சுவையான மட்டன் ரோஹன் ஜோஷ் தயார்.பவுலில் எடுத்து பரிமாறவும்.

காலை அல்லது இரவு நேர டிபனோடு அல்லது மதியம் பிரியாணியோடும் பரிமாறலாம்




மதுரை மட்டன் சூப்

தேவையான பொருட்கள்

நள்ளியெழும்பு mutton 1/4kg
சின்ன வெங்காயம் 1/2 கப்
தக்காளி 1 பழம்
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
மிளகு தூள் 1 ஸ்பூன்
மிளகு 5
ஜீரகம் 1/4 ஸ்பூன்
நல்லெண்ணனை 4 ஸ்பூன்
2ஆம் தேங்காய் பால் 1 கப்
முதல் தேங்காய் பால் 1 கப்
கறிவேப்பிலை 1 கீத்து
மல்லி இலை சிறிது

செய்முறை

குக்கர் சூடுபடுத்தி, நல்லெண்ணெய் ஊற்றி மிளகு, ஜீரகம் சேர்க்கவும்
நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை செல்லும் வரை வதக்கவும்
நறுக்கிய தக்காளி சேர்த்து, உப்பு , மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மசியும் பக்குவம் வரும் வரை வதக்கவும்
இடை இடையில் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்
இப்போது கறி துண்டுகள் சேர்த்து , பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
இப்போது 2ஆம் தேங்காய் பால் 1 கப் , கறி முங்க தண்ணீர் சேர்த்து குக்கர் மூடவும்
20 நிமிடம் low flame ல் வேக விடவும்
Pressure இறங்கியதும் முதல் தேங்காய் பால் சேர்த்து கலந்து விடவும்
பரிமாறும் பொழுது மல்லி கறிவேப்பிலை சேர்த்து, மிளகு பொடி தூவி கொடுக்கவும்
சிறப்பான மதுரை சூப் தயார்



மட்டன் மிளகு கறி

தேவையான பொருட்கள்

மட்டன்-500க்ராம்ஸ்
உப்பு-தேவையான அளவு
வெங்காயம்-2
பட்டை-1துண்டு
ஏலக்காய்-2
லவங்கம்-3
இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
தேய்ங்காய் பால்-1கப் திக்
மிளகு தூள்-3 டீஸ்பூன்
சோம்பு தூள்-1 டீஸ்பூன்
மல்லி தூள்-2 டீஸ்பூன்
சீரக தூள்-1 டீஸ்பூன்
தயிர்-1/2 கப்
மல்லி இலை-சிறிதளவு

செய்முறை

முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் ஏலக்காய், பட்டை,லவங்கம் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மிளகு தூள், சோம்பு தூள், சீரக தூள்,மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்.
பின் மட்டனில் தயிர்,இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து 30 நிமிடம். முன்பே கிளறி வைத்து கொள்ளவும்.
கிளறி வைத்த மட்டணை அதனுடன் சேர்த்து கிளறி விடவும்.
கடைசியில் தேங்காய் பால் சேர்த்து 8 முதல் 10 whistle வரை போடவும்.
மிளகு கறி ரெடி



மட்டன் ஈரல் மசாலா

தேவையான பொருட்கள்

மட்டன் ஈரல் அரை கிலோ
பெரிய வெங்காயம் ஒன்று
தக்காளி ஒன்று
சோம்பு ஒரு ஸ்பூன்
நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
மிளகுத் தூள் ஒரு ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கரம் மசாலா அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
பச்சைமிளகாய்-2

செய்முறை

மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்

வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

குக்கரில் ஈரல் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்க்கவும்

இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ் 5 விசில் வேகவிடவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு வெங்காயம் பச்சை மிளகாயை வதக்கவும்

வேக வைத்து வைத்துள்ள ஈரலை சேர்க்கவும்

நன்கு சுருள வதங்கியதும் மிளகுத்தூள் சேர்க்கவும்

காரசாரமான மட்டன் ஈரல் தயார்



மட்டன் நெய் ரோஸ்ட்

தேவையான பொருட்கள்

ஆட்டிறைச்சி 1/2 கிலோ
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு (தேவைக்கேற்ப)
நெய் 2 மேஜைக்கரண்டி + 2 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
ரம்பை இலை 1
பட்கல் மிளகாய் 5
காய்ந்த மிளகாய் 3
மிளகு 1/2 மேஜைக்கரண்டி
மல்லி 1/2 மேஜைக்கரண்டி
சோம்பு 1/2 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பட்டை 1 சிறியது
கராம்பு 2
அன்னாசிப்பூ 1
இஞ்சி 1 துண்டு
பூண்டு 2 பல்
எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி
தயிர் 2 மேஜைக்கரண்டி
வெல்லம் 1 மேஜைக்கரண்டி
கருவேப்பிலை 1 கொத்து

செய்முறை

ஒரு குக்கரில் 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி அதில் ரம்பை இலை, இஞ்சிபூண்டு விழுது போட்டு தாளிக்கவும்.
பின் அதில் ஆட்டிறைச்சியுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
ஒரு வாணலியில் காய்ந்த மிளகாய், பட்கல் மிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, மல்லி, பட்டை, கராம்பு, அன்னாசி பூ சேர்த்து நன்றாக வெறுப்பிக் கொள்ளவும்.
வெறுப்பிய பொருட்களுடன் இஞ்சி, பூண்டு, ஊலுமிச்சை சாறு, வெல்லம் சேர்த்து அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 2 மேஜைக்கரண்டி நெய் விட்டு அரைத்த கலவையை போட்டு அதனுடன் தயிர் ஊற்றி வதக்கவும்.
நக்கு வதங்கியதும் வேகவைத்த ஆட்டிரைச்சி மற்றும் கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வைத்து அடுப்பை அனைக்கவும்.
காரம், இனிப்பு சுவை கொண்ட விதியாசமான சைட் டிஷ்.



சுரைக்காய் மட்டன்

தேவையான பொருட்கள்

மட்டன் அரைகிலோ
சின்ன சுரைக்காய் 1
இஞ்சி பூண்டு விழுது மூன்று ஸ்பூன்
பெ.வெங்காயம் 1
தக்காளி2
ப.மிளகாய் 2
கறி மசால் பொடி இரண்டு ஸ்பூன்
தேங்காய் அரை மூடி
பட்டை.கிராம்பு.ஏலம் தலா ஒன்று
கறிவேப்பிலை சிறிது
மி.தூள் ஒரு ஸ்பூன்
எண்ணெய் தே.அளவு

செய்முறை

தேங்காயை அரைத்து திக் பால் ஒரு கப் எடுத்து வைக்கவும்
இரண்டாம் பால் இரு கப் எடுக்கவும்.
குக்கரில் எண்ணேய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலம் தாளிக்கவும்.
அதில் வெங்காயம்.பமிளகாய்.தக்காளி வெட்டி சேர்த்து வதக்கவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது கறிவேப்பிலை மி.தூள் உப்பு சேர்க்கவும்.

டிநன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் மட்டனை சேர்த்து கிளறவும்.

அதனுடன் கறி மசால் பொடி சேர்த்து இரண்டாம் பால் ஊற்றி நான்கு விசில் வேக விடவும்.

குக்கரை திறந்து சுரைக்காயை சற்று பெரிய துண்டுகளாக போட்டு திறந்த நிலையில் வேக வைக்கவும்
காய் வெந்ததும் முதல் தே.பால் சேர்த்து சிம்மில் வைத்து இறக்கவும்.



மட்டன் கறி மக்றொனி

தேவையான பொருட்கள்

மக்றொனி 2 கப்
மட்டன் கறி 1 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
ப.மிளகாய் 1
பூண்டு 5 பல்
தக்காளி சாஸ் 2 தே.க
உப்பு தேவைக்கு
எண்ணை தாளிக்க

செய்முறை

பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்
கொதித்ததும் மக்ரொனி போட்டு கிளறவும்.ஒட்டாமல் இருக்க சிறிது எண்ணை ஊற்றவும்.
வெந்ததும் வடிகட்டி வைக்கவும்
வாணலில் எண்ணை ஊற்றி பூண்டு தாளித்து, வெங்காயம்,ப.மிளகாய்,தக்காளி போட்டு நன்கு வதக்கவும்..
பிறகு மட்டன் குழம்பை ஊற்றவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
தக்காளி சாஸ் சேர்க்கவும்
வேகவைத்த மக்ரொணி யை சேர்த்து நன்கு கிளறி தம்மில் போடவும்
ஆவி வந்ததும் மல்லி இலை போட்டுபரிமிறவும்.
சுவையான மக்ரோணி தயார்...



மட்டன் செமி கிரேவி

தேவையான பொருட்கள்

அரை கிலோ மட்டன்
தக்காளி 1 பெரிய வெங்காயம் 2
புதினா மல்லி தேவைக்கேற்ப
மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மட்டன் மசாலா கறி மசாலா கரம் மசாலா உப்பு தேவைக்கேற்ப
பெப்பர் இஞ்சி பூண்டு விழுது தேவைக்கேற்ப

செய்முறை

குக்கரில் மட்டன் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் பொடி மிளகாய் தூள் பெப்பர் தூள் புதினா ஆகியவற்றை கலந்து கொள்ளவும்

கலந்து வைத்த மட்டனை 15 நிமிடம் marinate செய்யவும்
பின்பு மட்டனை குக்கரில் 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்

பின்பு ஒரு பேனில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் சீரகம் சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்

பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி விடவும்

பின்பு 2 வெங்காயம் மற்றும் நான்கு பச்சைமிளகாயை நறுக்கி நன்றாக வதக்கிக் கொள்ளவும்

வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்துக் கொள்ளவும்

தக்காளி வதங்கியவுடன் மசாலா பொடிகள் அனைத்தையும் தேவைகளுக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்

வேக வைத்த மட்டன் மற்றும் அதன் தண்ணீரை மசாலா நன்கு கலந்தவுடன் சேர்த்துக் கொள்ளவும்

பின்பு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

பின்பு மூடி போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்

பின்பு புதினா மற்றும் மல்லி இலையை சேர்த்து கொள்ளவும்

பின்பு கிரேவியை 5 நிமிடம் வேக வைத்து விட்டு இறக்கிக் கொள்ளவும்



நிஹாரி மட்டன் பாயா

தேவையான பொருட்கள்

மட்டன் பாயா ஒரு கிலோ
வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
இஞ்சித் தூள் ஒரு டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
ஏலக்காய் 4
பட்டை இரண்டு துண்டு
லவங்கம் 6
மல்லி ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் ஒரு டீஸ்பூன்
சோம்பு ஒரு டீஸ்பூன்
மிளகு 2 டீஸ்பூன்
shahi Jeera ஒரு டீஸ்பூன்
நட்சத்திர சோஸ்-2
ஜாதிபத்திரி 1
மல்லி இலை சிறிதளவு
கோதுமை மாவு 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய்

செய்முறை

முதலில் பாயாவை சுடு தண்ணீர் ஊற்றி கழுவி வைத்துக் கொள்ளவும்
பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் வெங்காயம் ,பட்டை,ஏலக்காய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
கழுவி வைத்த மட்டன் பாயாவை அதில் சேர்த்து கிளறவும்
தண்ணீர் ஊற்றி 10 முதல் 15 விசில் வரை போடவும்

நன்கு வேக வைத்து கொள்ளவும்
நிஹரி செய்வதற்கு தேவையான மசாலா பொருட்களை எடுத்து வைக்கவும்

மசாலா பொருள்கள்

பின் இது எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த பாயாவை அதன் தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
பின் அரைத்த மசாலா மற்றும் உப்பு அதில் சேர்த்து கொதிக்க விடவும்

கோதுமை மாவை தண்ணீரில் கரைத்து பாயாவில் ஊற்றி கொதிக்க விடவும்.

10 நிமிடம் கழித்து மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
இஞ்சி துண்டு, எலுமிச்சை பழம் மற்றும் வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.


நெய் மட்டன் கிரேவி

தேவையான பொருட்கள்

மட்டன் அரை கிலோ
உப்பு
நல்லெண்ணெய் 3 ஸ்பூன்
நெய் 3ஸ்பூன்
மல்லி தூள் ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
கரம் மசாலா அரை ஸ்பூன்
பட்டை கிராம்பு ஏலக்காய் 2
சீரகம் சோம்பு அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்
புதினா இலைகள் 10
தக்காளி ஒன்று
சிறிய வெங்காயம் 25
கொத்தமல்லி தழை சிறிதளவு

செய்முறை

கடாயில் நல்லெண்ணெயை மற்றும் 2 ஸ்பூன் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் சீரகம் சோம்பு கருவேப்பிலை சேர்க்கவும்
இஞ்சி பூண்டை இடித்துசேர்க்கவும்
மட்டணை நன்றாக கழுவி தேவையான தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
பின் தக்காளி சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
மிளகாய்த்தூள் மல்லித்தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
பின் வேக வைத்த மட்டன் புதினா இலைகள் சேர்த்து கிளறவும்
பின் வேக வைத்த மட்டனை தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்
மீண்டும் ஒரு ஸ்பூனை சேர்க்கவும்
5 முதல் 10 நிமிடம் வரை வேகவிட்டு கொத்தமல்லித்தழை சேர்க்கவும்


மட்டன் கோலா உருண்டை

தேவையான பொருட்கள்

மட்டன் கொத்துக்கறி - 250 கிராம்
வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது
பொட்டுக்கடலை -1/4 கப் பொடியாக்கியது
தேங்காய் துருவல்- 4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது-1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் -1 தேக்கரண்டி
சீரகம் -1/2 தேக்கரண்டி
மிளகு -1/2 தேக்கரண்டி
வரமிளகாய் -2
பட்டை-1
ஏலக்காய் -2
கிராம்பு -2
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி இலை - சிறிதளவு
புதினா - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை

முதலில் அடுப்பில் கடாயை வைத்து மட்டன் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,இஞ்சி பூண்டு விழுது ,சிறிதளவு உப்பு ,1/4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும் .

மட்டன்தண்ணீர் வற்றி நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.

மட்டன் கொத்துக்கறி நன்கு ஆறியதும் மிக்சியில் அரைத்துக்கொள்ளவும் .தண்ணீர் தேவை இல்லை.

தேங்காய் ,மிளகு ,சீரகம் ,பெருஞ்சீரகம் ,பட்டை,மிளகு ,ஏலக்காய் ,வரமிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும் .

இப்பொழுது அரைத்த மட்டனுடன் அரைத்த தேங்காய் ,மிளகு ,சீரகம் விழுது,பொட்டுக்கடலை பொடி,நறுக்கிய வெங்காயம் ,மல்லி இலை,புதினா,கருவேப்பிலை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .

பின்பு இதனை சிறு சிறு உருண்டை களாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டை போட்டு மிதமான தீயில் பொரிக்கவும்.

இரண்டுபக்கமும் நன்கு வேக வைத்து கோல்டன் ப்ரவுனாக வந்ததும் எண்ணெய்யில் இருந்து எடுக்கவும்.

இப்பொழுது சுவையான மட்டன் கோலா உருண்டை தயார்.



சில்லி மட்டன் மசாலா

தேவையான பொருட்கள்

மட்டன் 500 கிராம்
வெங்காயம் 75 கிராம்
தக்காளி ஒன்று
இஞ்சிபூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
கருவேப்பில்லை சிறிது
சோம்பு ஒருமேஜைக்கரண்டி
மிளகாய்தூள் தேவைக்கு
சிரகத்தூள் 1 1/2 மேஜைக்கரண்டி
கல் உப்பு தேவைக்கு
நல்லெண்ணெய் 100 கிராம்

செய்முறை

மட்டனை கழுவி வைக்கவும்

மிக்ஸியில் வெங்காயம். சோம்பு .கருவேப்பிலை சோ்த்து கரகரப்பாக அரைக்கவும்

குக்கரில் நலலெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காய சோம்பு அரைத்த விழுது சோ்க்கவும்.

பின் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சோ்க்கவும்

பின் மிளகாய்த்தூள் சிரகத்தூள் உப்பு சோ்க்கவும்

பின் மட்டன் சோ்த்து கிளறவும்

முக்கால் டம்ளா் நீர் விட்டு குக்கரை மூடி 7 விசில் விட்டு ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும்.



மட்டன் தம் பிரியாணி

தேவையான பொருட்கள்

மட்டன் - 1.1/4 கிலோ
பாசுமதி அரிசி -1 கிலோ
இஞ்சி பூண்டு விழுது -4 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
கரம் மசாலா -2 தேக்கரண்டி( ஏலம் பட்டை கிராம்புத்தூள்)
தயிர் -200 மில்லி
வெங்காயம் நறுக்கியது -400 கிராம்
தக்காளி நறுக்கியது -400 கிராம்
பச்சை மிளகாய் -8
மல்லி,புதினா தலா ஒரு கட்டு
எலுமிச்சை -1
எண்ணெய் - 150 மில்லி
நெய் -100 -125 மில்லி
ஏலக்காய் 5,கிராம்பு -5,பட்டை -2,பிரியாணி இலை,நட்சத்திர மொக்கு,அன்னாசிப்பூ1.
சாப்ரான் 2 பின்ச் அல்லது லெமன் எல்லோ கலர்
ஆரஞ்சு ரெட் கலர் - ஒரு பின்ச் ( கரைக்க)
உப்பு - தேவைக்கு.

செய்முறை

நறுக்க வேண்டியவைகளை தயார் செய்யவும்.மட்டனுடன் ,பாதி எலுமிச்சை பழம்,மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி,இஞ்சி பூண்டு ஒரு மேஜைக்கரண்டி,அரை தேக்கரண்டி கரம் மசாலா,தேவைக்கு உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.

இஞ்சி பூண்டு அரைத்து,கரம் மசாலா தயாராய் இருக்கட்டும்.சாப்ரான் கலர் பாலில் கரைத்து வைக்கவும்.

அரிசி கழைந்து1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

குக்கரில் ஊற வைத்த கறியை மூன்று விசில் வைத்து இறக்கவும்.
பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் விடவும்.ஏலம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,அன்னாசிப்பூ,நட்சத்திர மொக்கு சேர்த்து பொரிய விடவும்.

நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு 3 மேஜைக்கரண்டி குவியலாகச் சேர்க்கவும்.கரம் மசாலா சேர்க்கவும்.

அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் நறுக்கிய மல்லி புதினா சேர்க்கவும்.நன்றாக வதக்கவும்.

நறுக்கிய தக்காளி,மிளகாய் சேர்த்து வதக்கவும்.

உப்பு தேவைக்கு சேர்த்து வதங்க விடவும்.மிளகாய்த்தூள் சேர்க்கவும்.சிறிது சிம்மில் வைத்து மூடி திறக்கவும்.

வேக வைத்த மட்டன் சேர்க்கவும்.

தயிர் சேர்த்து பிரட்டி விடவும்.

மூடி சிறிது சிம்மில் விடவும்.உப்பு,புளிப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
வேறொரு பெரிய பாத்திரத்தில் தாராளமாக ஒரு கிலோ அரிசி கொதிக்கும் அளவு தண்ணீர் கொதிக்க விடவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.சிறிது மல்லி,புதினா சேர்க்கவும்.உப்பு சரியாக இருக்க வேண்டும்.

முக்கால் பதம் வெந்ததும் ஒரு வடிதட்டில் வடிக்கவும்.கஞ்சியை தனியாக எடுத்து வைக்கவும்.

கறி நன்கு மசாலாவுடன் ஒன்று சேர்ந்து எண்ணெய் மேலே வரும்.வடித்த முக்கால் பதம் வெந்த அரிசியை தட்டவும்.பாதி எலுமிச்சையை பரவலாக பிழியவும். சாப்ரான் கரைசல்,ஆரஞ்சு ரெட் கலர் கரைசல் தெளிக்கவும்.விரும்பினால் சிறிது நெய் சேர்க்கலாம்.

மூடி அலுமினியம் பாயில் கவர் செய்து மூடி போட்டு மூடவும்,கீழே ஒரு பழைய தோசைக்கலத்தை வைக்கவும்.அடி பிடிக்காமல் இருக்கும்..மேலே வெயிட்டிற்கு வடித்த கஞ்சியை வைக்கவும்.

இருபது நிமிடம் அடுப்பை மிகக் குறைத்து தம் போடவும்.
அடுப்பை அணைத்து ,10 நிமிடம் கழித்து திறக்கவும்.

கீழிருந்து மேலாக சோறு உடையாதவாறு பிரட்டவும்.ஒரு போல் பிரட்டி மூடவும்.சாப்பிடும் நேரம் எடுத்து பரிமாறவும்.

சுவையான மட்டன் தம் பிரியாணி தயார்.பக்க உணவுகளுடன் பரிமாறவும்.



மட்டன் எலும்பு ரைஸ்

தேவையான பொருட்கள்

பட்டை 4 பீஸ்
பிரிஞ்ஜி இலை 2 பீஸ்
கிராம்பு 2 பீஸ்
நல்ல எண்ணெய் 4 ஸ்பூன்
வெங்காயம் 2
தக்காளி 2
பச்சை மிளகாய் 2
இஞ்சி பூண்டு விழுது 4 ஸ்பூன்
கொத்தமல்லி 5 ஸ்பூன்
மட்டன் எலும்பு 100 கிராம்
மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மட்டன் மசாலா தூள் 2 ஸ்பூன்
ரைஸ் 200 கிராம்
உப்பு தேவையான அளவு
தண்ணீர் 600 மில்லி
தக்காளி 2

செய்முறை

கடாயில் நல்ல எண்ணெய் விட்டு கிராம்பு பட்டை பிரிஞ்சி இலை சேர்த்து வதக்க வேண்டும்.
வதங்கியதும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
இதனுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து மட்டன் எலும்பு சேர்த்து நன்கு வதக்கவும்
வதங்கியதும் தண்ணீர் 200 மேல் சேர்க்கவும்
இதனுடன் 200 மேல் ரைஸ் சேர்த்து வேக விடவும்
அரிசி 1 கப்பிற்கு 3 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.


மட்டன் ரவை பிரியாணி

தேவையான பொருட்கள்

மட்டன் குழம்பு செய்ய:
மட்டன் 1/2 கி
வெங்காயம் மீடியம் 2
தக்காளி 1
இஞ்சி பூண்டு விழுது 2 தே க
ரம்பை இலை அல்லது கருவேப்பிலை 1 கைப்பிடி
கிராம்பு 2
பட்டை 1 இன்ச்
ஏலக்காய் 2
மல்லி இலை 1/2 கப்
மிளகாய் தூள் 1 1/2 தே க
மல்லி தூள் 1 1/2 தே க
பெருஞ்சீரகம் தூள் 3/4 தே க
மஞ்சள் தூள் 1/4 தே க
உப்பு தேவையான அளவு
கறி மசாலா 1 தே க
எண்ணெய் 3 தே க
பிரியாணி செய்ய:
கோதம்பு ரவை 2 கப்
தண்ணீர் 4 கப்
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 1
கருவேப்பிலை சிறிது
தேங்காய் பால் பொடி 4 தே க
உப்பு தேவையான அளவு
மல்லி இலை சிறிது
அண்டி பருப்பு 10
உலர் திராட்சை 15
நெய் 2 மே க

செய்முறை

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு ஏலக்காய், கருவேப்பிலை அல்லது ரம்பை இலை போட்டு வதக்கவும்
பின்னர் மெலிதாக அரிந்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் கீறி போட்டு வெங்காயம் பொன் நிறமாகும் வரை வதக்கவும்.
பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
பின்னர் மசாலா தூள்கள் ஒவ்வொன்றும் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
பின்னர் அரிந்த தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் மட்டன் குக்கரில் சேர்த்து 3_4 விசில் வரும் வரை விடவும். தேவைப்பட்டால் 1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
மட்டன் வெந்ததும் மல்லி இலை போட்டு இறக்கவும். மட்டன் குழம்பு கெட்டியாக இருப்பது நல்லது.
பிரியாணி செய்ய :
ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் விட்டு கருவேப்பிலை சேர்த்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.

பின்னர் தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்க விடவும். தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

கொதித்ததும் மட்டன் கறி மற்றும் தேங்காய் பால் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். உப்பு பார்த்து கொள்ளவும்.

இக்கலவை கொதித்ததும் கோதம்பு ரவை சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்
தண்ணீர் லேசாக வற்றியதும் களறி விட்டு மூடி வைத்து பின்னர் தண்ணீர் நன்கு வற்றியதும் மீண்டும் கிளறி அடுப்பை அணைக்கவும்.

பின்னர் மல்லி இலை தூவி நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சையை போட்டு கிளறவும். கூடவே அந்த நெய்யையும் சேர்த்து கொள்ளவும்.

ரிச்சான சுவையான காலை உணவு தயார்.



கத்தரிக்காய் மட்டன்

தேவையான பொருட்கள்

மட்டன் அரை கிலோ
கத்தரிக்காய் கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது இரண்டு டே.ஸ்பூன்
கறி மாசாலா தூள் இரண்டு டீ.ஸ்பூன்
மி.தூள் ஒரு ஸ்பூன்
உப்பு தே.அளவு
எண்ணெய் தே.அளவு
பெ.வெங்காயம் இரண்டு
தக்காளி இரண்டு
பட்டை கிராம்பு ஏலம் தலா இரண்டு
கறிவேப்பிலை ரம்ப இலை

செய்முறை

இஞ்சி பூண்டு விழுதுடன் தக்காளி வெங்காயம் சேர்த்து விழுதாய் அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலம் பொரிய விடவும்.
அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து கிளறவும்.
பச்சை வாசனை போனதும் மட்டனைக் கழுவி சேர்க்கவும்.
அதனுடன் மி.தூள்.கறி மசாலா.உப்பு சேர்த்து கிளறவும்.
ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வைத்து வேக விடவும்.
குக்கரை திறந்து கத்தரிக்காயை நீளமான துண்டுகளாக வெட்டி சேர்த்து குக்கரை மூடி விசில் வைக்காமல் வேக விடவும்.

கத்தரிக்காய் உடையாமல் சிறு தீயில் வேக விடவும்.

தண்ணீர் வற்றி எண்ணெய் மேலே வரும் போது அடுப்பை அணைக்கவும்.
இருபதே நிமிடத்தில் கத்தரிக்காய் மட்டன் மசாலா தயார்.



மட்டன் கீமா முர்தபா

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு -1கப்
மைதா -1/4 கப்
வெங்காயம் -2 பொடியாக நறுக்கியது
கேரட்- 2 துருவியது
உருளைக்கிழங்கு- 2 பொடியாக துருவியது
இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
மட்டன் கொத்து கறி 150 கிராம்
மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
சீரகத் தூள் 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
கொத்தமல்லித்தழை ஒரு கொத்து
முட்டை இரண்டு
நெய் கால் கப்
எண்ணெய் தாளிக்க
உப்பு தேவைக்கு

செய்முறை

ஒரு பாத்திரத்தை சூடாக்கி 2 டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்
என்னை நன்றாக காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
உப்பு சேர்த்து வதக்கினால் வெங்காயம் சீக்கிரமாக வெந்து விடும்
வெங்காயம் பாதியளவு வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
இஞ்சி பூண்டின் பச்சை வாசனை அடங்கியதும் கொத்துக்கறியை சேர்த்து வதக்க வேண்டும்
கூறிய அனைத்து தூள் வகைகளையும் சேர்த்து வதக்க வேண்டும்
கொத்துக்கறி பாதியளவு வெந்த உடன் துருவி வைத்த கேரட் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்
தேவைக்கு உப்பு மற்றும் மிளகாய்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
காய்கறிகள் கொத்துக்கறியுடன் நன்றாக சேர்ந்து வதங்கிய பின் இறக்கி வைத்து ஆற வைக்க வேண்டும், stuffing ரெடி.
முட்டையுடன் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்து வைக்க வேண்டும்
கோதுமை மாவு மைதா மாவு உப்பு சிறிது நெய் மற்றும் வெந்நீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்
சப்பாத்தி மாவு 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்
பின்பு சப்பாத்தி மாவில் சம அளவு உருண்டை பிடித்து வைக்கவும்
உருண்டை பிடித்தமாவை சப்பாத்தியை வார்ப்பது போல் வார்த்து அனைத்து மாவையும் இப்படி வார்த்து வைக்கவும்
பின்பு தோசை தவாவை சூடுபடுத்தவும்
சப்பாத்தியை போல் வார்த்த மாவை ஒன்றன்பின் ஒன்றாக லேசாக வாட்டி எடுக்கும் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்தால் போதுமானது
இரண்டு பக்கமும் லேசாக வாட்டி எடுத்தால் போதுமானது
இப்படி அனைத்து சப்பாத்தியை லேசாக வாட்டி எடுக்க வேண்டும்
இப்பொழுது வாட்டிய சப்பாத்தியின் மேல் அடித்து வைத்த முட்டையை ஒரு ஸ்பூன் ஊற்றி சப்பாத்தியின் மேல் முழுவதும் பரவும்படி நன்றாக தேய்க்க வேண்டும்
சப்பாத்தியின் நடுவில் இரண்டு ஸ்பூன் ஸ்டாப்பிங்கை வைத்து நான்கு ஓரங்களை மடித்து Egg washயை வைத்து ஒட்டி வைக்கவும்
பின்பு தோசை தவாவை சூடுபடுத்தவும்
இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து ஒவ்வொரு முர்த்தபாவையும் அதில் போட்டு குறைந்த தணலில் வேக விட்டு முறுவியதும் இறக்கவும்.
இப்படி அணைத்து முர்த்தபாவையும் தயார் செய்யவும்
பின்பு முக்கோணமாக வெட்டி வைக்கவும்
முஸ்தபா தயார் மயோனைஸ் மற்றும் சாஸுடன் பரிமாற சுவையாக இருக்கும்


மட்டன் நோன்பு கஞ்சி

தேவையான பொருட்கள்

மட்டன்-100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது- 1 டேபிள் ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
கரம் மசாலா தூள்-1/4 டீ ஸ்பூன்
சீரகம்-1/4 டீ ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்  – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை அரிசி – 3/4 கப்
பாசிப்பருப்பு – 4 or 5 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம்  – 10
தக்காளி  – 1
காரட்  – 1
பச்சை மிளகாய்  -3 சிறியது
கொத்தமல்லி இலை - 1/4 கப் 
புதினா இலை- 1/4 கப் 
கருலேப்பில்லை- 1 கொத்து
தேங்காய் எண்ணெய்  – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1/2 இன்ச்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2  
வெந்தயம்-1/4 டீ ஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது- 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலா தூள்  – 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயத்தூள்  - ஒரு சிட்டிகை 
தண்ணீர்  – 5 கப்
உப்பு – தேவையான அளவு
துருவிய தேங்காய் - 1/4 கப்
சீரகம் -1/2 டீ ஸ்பூன்

செய்முறை

மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்த மட்டன் (எலும்பு இல்லாதது) போட்டு மட்டன் கைமா போல் அரைத்து கொள்ள வேண்டும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம், மட்டன் கைமா, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, காரட், கொத்தமல்லி இலை, புதினா இலைகளை நன்கு நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீரி வைக்கவும்.
மிக்ஸி ஜாரில் அரிசி, பாசிப்பருப்பு சேர்த்து பொடித்து கொள்ளவும் ( மிக்ஸியை ஒரு சுற்று சுற்றினால் போதும். அரிசி பருப்பு குருனை பததிற்கு கிடைக்க வேண்டும்.)
தேங்காய் மற்றும் சீரகம்(1/4 டீ ஸ்பூன்) சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின், சீரகம், வெந்தயம், பட்டை, கிராம்பு, ஏலக்காய்  சேர்க்கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய், காரட், புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறவும்
பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங் காயத்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
சிறிது வதங்கியதும், அரிசி பருப்பு குருனையை கழுவி சேர்க்கவும். இதனுடன் 5 கப் தண்ணீர் சேர்த்து கிளறவும்.
இதனுடன் வேக வைத்த மட்டன் கைமா மற்றும் மட்டன் வேக வைத்த தண்ணீரை ஊற்றி கிளறவும்
குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
பின்பு விசில் அடங்கியதும், நன்றாக கலக்கி விட்டு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறவும்.
மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
பின்பு கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலாம்.



மட்டன் கைமா பிரியாணி

தேவையான பொருட்கள்

500 கிராம் 30 நிமிடங்கள் ஊறவைத்த பாஸ்மதி அரிசி
500 கிராம் மட்டன் கீமா/ மட்டன் துண்டுகள்
2 பச்சை மிளகாய் பிளக்கப்பட்டது
3 வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
3 தேக்கரண்டி பூண்டு விழுது
2 தக்காளி பொடியாக நறுக்கப்பட்டது
1 1/2 கப் அடித்து வைக்கப்பட்டுள்ள தயிர்
2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
2 தேக்கரண்டி மல்லித்தூள்
2 எலுமிச்சைப் பழத்தின் சாறு
சுவைக்கேற்ற உப்பு
4 தேக்கரண்டி எண்ணெய்
2 தேக்கரண்டி நெய்/ வெளுக்கப்பட்ட வெண்ணெய்
1 பிரிஞ்சி இலை
1 இன்ச் இலவங்கப்பட்டைக் குச்சி
2 ஏலக்காய்
2 கிராம்பு
1 தேக்கரண்டி சாஹி சீரகம்
1 தேக்கரண்டி சீரகம்
4 தேக்கரண்டி கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கப்பட்டது
4 தேக்கரண்டி புதினா இலைகள்

செய்முறை

ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய்/நெய்யை சூடுபடுத்தி பிரிஞ்சி இலை, கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், சாஹி சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து 30 நொடிகள் வறுக்கவும்.
வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வறுக்கவும். இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து மேலும் 30 நிமிடங்கள் வதக்கவும்.
அடுத்து மட்டன் துண்டுகள்/கீமா சேர்த்து எல்லா தண்ணீரும் காய்ந்து கீமா பழுப்பாக மாறும்வரை வேகவைக்கவும்.
சிவப்பு மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, தக்காளி, தயிர் சேர்த்து கலந்துகொள்ளவும். தக்காளி வெந்து எண்ணெய் கடாயின் பக்கங்களில் கசியும்வரை வேகவைக்கவும்.
எலுமிச்சைச் சாறு, கொத்துமல்லி இலைகள், புதினா ஆகியவற்றைச் சேர்க்கவும். அடுப்பை நிறுத்திவிட்டு சாதம் தயாராகும்வரை எடுத்து வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் சாதத்தை வேகவைக்கப் போதுமான தண்ணீரை கொதிக்கவிடவும். உப்பு ஒரு கரண்டி எண்ணெயை தண்ணீரில் சேர்க்கவும். எண்ணெய் அரிசியைத் தனித்தனியாக வைக்க உதவும். கொதிக்கும் நீரில் அரிசியைப் போடவும்.
அரிசியை 70% வேகவைக்கவும் (இது மிகவும் முக்கியமானது. இந்தச் சமையத்தில் அடுப்பங்கரையை விட்டுபோகவேண்டாம். அரிசி எப்படி வெந்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால். கீழே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பைக் காண்க).
அரிசியை கீமா குழம்பில் சேர்க்கவும். கலக்கவேண்டாம். ஒரு தேக்கரண்டி நெய்யை அரிசியின் மீது விடவும்.
ஃபாயிலால் மூடி முடிபோட்டு முடவும். ஃபாயில் ஆவியை வெளியேற்றாது.
பரிமாறுவதற்கு முன் சாதத்தையும் குழம்பையில் கலந்துகொள்ளவும். ரைத்தா அல்லது பாகார் பைன்கானுடன் (கத்தரிக்காய்) சூடாகப் பரிமாறவும்.



மட்டன் பெப்பர் ஃப்ரை

தேவையான பொருட்கள்

மட்டன் அரைக் கிலோ
பெரிய வெங்காயம் 4
பட்டை 1 கிராம்ப 1 ஏலக்காய் 1
இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
வரமிளகாய் 7
கருவேப்பிலை
மிளகு சீரகப் பொடி 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

முதலில் கறியை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம் வர மிளகாய் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்

வெங்காயம் நன்கு வதங்கியவுடன் கறியை போட்டு வதக்கவும்

இஞ்சி பூண்டு உப்பு சேர்த்து நன்கு கிளறவும் பிறகு தண்ணீர் ஊற்றி 5 விசில் விடவும்

கரி நன்கு வெந்தவுடன் மிளகு சீரகப் பொடியைச் சேர்த்துக் கிளறவும்

அடுப்பை சிம்மில் வைத்து தண்ணீர் வற்றும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்

சுவையான மட்டன் பெப்பர் ஃப்ரை ரெடி


மதுரை மட்டன் வதக்கல்

தேவையான பொருட்கள்

கறி கால் கிலோ
அரிந்த சிறிய வெங்காயம் 200 கிராம்
சீரகப் பொடி 2 ஸ்பூன்
மிளகாய் தூள் 3 ஸ்பூன்
மிளகுத்தூள் சிறிதளவு
மஞ்சள் தூள் சிறிதளவு
எண்ணெய் 50 மில்லி
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
பின்பு கறியை சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வதக்கவும்
அதனுடன் மஞ்சள் மிளகு சீரகம் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
தேவையான நீர் சேர்த்து மூடி விடவும்
பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் நன்கு வேக விடவும்
கறி வெந்ததை சரி பார்த்துக்கொள்ளவும்
பின்பு இதனை இரும்பு வடை சட்டிக்கு மாற்றிக் கொள்ளவும்
நீர்ச்சத்து சிறிது வற்றியவுடன் சிம்மில் வைத்து நன்கு வதக்கவும்
நன்கு எண்ணெய் பிரிந்து தெளிந்தவுடன் இறக்கவும்
சுவையான மதுரை மட்டன் வதக்கல் தயார்



மசித்த மட்டன் குழம்பு 

தேவையான பொருட்கள்

மசித்த இறைச்சி - 1/2 கிலோ
தக்காளி - 3, பெரிய அளவு
அரைக்கப்பட்ட மசாலாக்கள் - 1 தேக்கரண்டி (இலவங்கப்பட்டை, ஜாதிக்காய், ஏலக்காய் மற்றும் கிராம்புகள்)
இஞ்சி - பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
நெய்/எண்ணெய் - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
சுவைக்கேற்ற உப்பு
தேங்காய் பால் - 1/2 கப் (விரும்பினால்)

செய்முறை

தக்காளியை ஊறவைத்து வெளுக்கச் செய்யவும், அதன்பின் தோலை நீக்கி மென்மையான சாந்தாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பிரஷர் குக்கரில், நெய்யை சூடுபடுத்தி அதன்பின் கடுகை பொறிக்கவிட்டு கறிவேப்பிலை, நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்க்கவும். அவற்றை நன்றாக வதக்கி இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
பச்சை வாடை போனதும், சுத்தப்படுத்தப்பட்ட அரைத்த மட்டனைச் சேர்த்து நிறம் மாறும்வரை வதக்கவும். சிவப்பு மிளகாய், மல்லித்தூள், மசாலாத் தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடுத்து, தக்காளிச்சாந்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தேவைப்பட்டால் தேங்காய்ப்பாலை அல்லது தண்ணீரைச் சேர்த்து சுவைக்காக உப்பை சேர்க்கவும். மூடிவிட்டு பிரஷர் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவைக்கவும்.
வெந்ததும், பிரஷர் அடங்கியதும், உணவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொத்துமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.


வறுத்தரச்ச மட்டன் கறி

தேவையான பொருட்கள்

மட்டன் 1/2 கிலோ
சின்ன வெங்காயம் 10+
தக்காளி 2 சிறியது
பச்சை மிளகாய் (தேவைப்பட்டால்) 1
இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
மல்லி தூள் 2 தேக்கரண்டி
சீரகத்தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
தண்ணீர் தேவைக்கு
கறிவேப்பிலை 1 கொத்து
தேங்காய் எண்ணெய்/ நல்லெண்ணெய் தேவைக்கு
துருவிய தேங்காய் 4 தேக்கரண்டி
ஏலம் 3
கிராம்பு 3
பட்டை 3 சிறியது
மிளகு 20+
சோம்பு 1 தேக்கரண்டி

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
பின், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
மட்டன், 1 கப் தண்ணீர் சேர்த்து அதிக தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், சேர்த்து கலந்து மூடி மிதமான தீயில் வேக விடவும்.
மற்றொரு கடாயில் தேங்காய், ஏலம், கிராம்பு, பட்டை, மிளகு, சோம்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.
மட்டன் 80% வெந்ததும், அரைத்த தேங்காய் மசாலா, தேவைப்பட்டால் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.
கறி சரியான பதம் வந்ததும் இறக்கிப் பரிமாறவும். சூப்பரான தேங்காய் வறுத்தரச்ச மட்டன் கறி தயார்.


கொங்கு மட்டன் குழம்பு

தேவையான பொருட்கள்

மட்டன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 20
தக்காளி – 2
பூண்டு – 10 பல்
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மசாலா தூள் தயார் செய்ய:
தனியா – 2 மேசைக்கரண்டி
வரமிளகாய் – 8
சீரகம் – 1 தேக்கரண்டி
பட்டை – சிறு துண்டு
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
தேங்காய் விழுது :
தேங்காய் துருவியது – 3 மேசைக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
தாளிக்க :
பட்டை – சிறிது
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
பிரியாணி இலை – சிறிது
கருவேப்பிலை – சிறிது
சோம்பு – 1 தேக்கரண்டி

செய்முறை

மட்டனை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் 2 மேசைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து வதக்கவும்.
பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
பின்னர் மட்டன், மஞ்சள்தூள் சேர்த்து 5  நிமிடங்கள் வதக்கவும்.அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
இதனுடன் 3 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு மிதமான சூட்டில் வேக வைக்கவும்.ஒரு விசில் வந்த பிறகு, சூட்டை குறைத்து மேலும் 12 நிமிடங்கள் வேக வைக்கவும்.
குக்கர் ஆவி அடங்கிய பின்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து மேலும் 5  நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.



மட்டன் கொத்து பரோட்டா

தேவையான பொருட்கள்

பரோட்டா பத்து
வெங்காயம் மூன்று
தக்காளி-3
பச்சை மிளகாய் 2
இஞ்சி பூண்டு விழுது
மல்லி இலை கைப்பிடி அளவு
வேக வைத்த மட்டன் 200 கிராம்
மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் அரை தேக்கரண்டி
மல்லித் தூள் அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகத்தூள் இசைக்கருவி
சீரகத் தூள் கால் தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய்
நெய்
உப்பு தேவைக்கு

செய்முறை

முதலில் பரோட்டாவை சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும்
வாணலியில் எண்ணெய் நெய் ஊற்றி வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்
பிறகு மசாலா தூள் போடவும்
வேக வைத்த இறைச்சியை போட்டு நன்றாக வதக்கவும்.உப்பு சேர்க்கவும்
கொத்திய பரோட்டாவை அதில் சேர்க்கவும்
நன்றாக கிளறி எடுக்கவும்
மல்லி இலை தூவவும்



சேமியா மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்

சேமியா - அரைக்கிலோ
மட்டன் அரைக்கிலோ
வெங்காயம் -150 கிராம்
தக்காளி - 200 கிராம்
பச்சை மிளகாய் - 3
மல்லி புதினா - தலா ஒரு கையளவு
எலுமிச்சை பாதி - சிறியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னரை தேக்கரண்டி
சில்லி பவுடர் - ஒன்னரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தயிர் 2 தேக்கரண்டி
தேங்காய் பால் - அரை காயிலிருந்து
உப்பு - தேவைக்கு
எண்ணெய் -100 மில்லி
நெய் - 50 மில்லி

செய்முறை

முதலில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து வைக்கவும். இது மிக முக்கியமான ஸ்டெப்.
மட்டன் துண்டுகளைச் சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.
மட்டனுடன் மஞ்சள்தூள், அரைடீஸ்பூன் சில்லி பவுடர், தயிர் உப்பு சேர்த்து விரவி ஊற வைக்கவும்.
குக்கரில் எண்ணெய், நெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டேபிள்ஸ்பூன் சேர்க்கவும். கரம் மசாலா (ஏலம் பட்டை கிராம்புத்தூள்) சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும். விரும்பினால் முழுதாகவும் சேர்க்கலாம். நான் வாயில் அகப்படும் என்று பொடித்து போட்டுவிடுவேன்.
அத்துடன் தக்காளி, மிளகாய், மல்லி புதினா சேர்த்து வதக்கவும். உப்பு சிறிது சேர்த்து மசிய விடவும். சில்லி பவுடர் சேர்க்கவும்.
ஊறிய மட்டன் சேர்த்து பிரட்டி அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி 3 - 5 விசில் விட்டு வேக வைத்து அணைக்கவும்.
ஆவியடங்கியவுடன் திறக்கவும்.
பிரியாணி செய்யும் பாத்திரத்தில் வெந்த மட்டன் சேர்த்து தேங்காய்ப்பால் சேர்க்கவும். மொத்தம் தேங்காய்ப் பால் தண்ணீர் அளவு சேமியாவிற்கு ஒன்னரை அளவு இருக்க வேண்டும். எலுமிச்சை ஜூஸ் விடவும்.
உப்பு சரி பார்த்து வறுத்த சேமியாவை தட்டவும். சிம்மில் வைத்து மூடி தம் செய்யவும்.
5 நிமுடம் கழித்து திறந்து பிரட்டி விடவும். தண்ணீர் வற்றி சேமியா வெந்து மேலே வரும். 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவம்.
5 நிமிடம் கழித்து திறந்து பிரட்டி விட்டுப் பரிமாறவும்.
சுவையான சேமியா பிரியாணி தயார். நல்லா சாப்பிடுபவர்கள் என்றால் அரைகிலோ நான்கு பேருக்குத் தான் பரிமாறலாம்.


ஹைதராபாத் மட்டன் ஹலீம்

தேவையான பொருட்கள்

எலும்பில்லாத மட்டன் 500 கிராம்
இஞ்சி பூண்டு விழுது இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
கரம் மசாலா ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
பட்டை இரண்டு சிறிய துண்டுகள்
கிராம்பு-3
ஏலக்காய்-2
எண்ணெய்-3 மேசைக்கரண்டி
நெய் 5 மேசைக்கரண்டி
வெங்காயம் நான்கு
தயிர் ஒரு கப்
பச்சை மிளகாய் 2
மிளகு ஒரு மேஜைக்கரண்டி
சீரகம் ஒரு மேசைக்கரண்டி
மிளகுத் தூள் அரை தேக்கரண்டி
நறுக்கிய புதினா இலை அரை கப்
நறுக்கிய மல்லி இலை அரை கப்
முந்திரி-10
எலுமிச்சை 2
உப்பு சுவைக்கேற்ப
பருப்பை வேக வைக்க :
சம்பா கோதுமை அரை கப்
வெள்ளை உளுந்து ஒரு தேக்கரண்டி
துவரம் பருப்பு ஒரு தேக்கரண்டி
பொட்டுக்கடலை ஒரு தேக்கரண்டி
பாஸ்மதி அரிசி ஒரு தேக்கரண்டி
பாசிப் பருப்பு ஒரு தேக்கரண்டி
எள் ஒரு தேக்கரண்டி
பாதாம்பருப்பு 4
முந்திரி 5

செய்முறை

முதலில் வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
முந்திரி பருப்பையும் பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்
பிறகு இறைச்சியை சுத்தம் செய்து அதில் மசாலாக்கள் தயிர் இஞ்சி பூண்டு விழுது பாதி அளவு நறுக்கிய புதினா பொரித்த வெங்காயம் மல்லி இலை உப்பு எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
பிறகு ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் ஏலம் பட்டை கிராம்பு சீரகம் மிளகு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்
பிறகு அதோடு ஊற வைத்த இறைச்சியைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்
இறைச்சி முழுவதுமாக வெந்ததும் அதனை நன்றாக மசித்து கொள்ளவும்
சம்பா கோதுமையை தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்
ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி அதில் சம்பா கோதுமையையும் பொடித்த தானியங்களையும் நன்றாக வறுத்துக் கொள்ளவும்
பிறகு அதோடு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்
நன்றாக வெந்ததும் அதனை மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்
இனி இறைச்சியை பருப்போடு சேர்த்து அதனோடு 2 மேஜைக்கரண்டி அளவு நெய் நறுக்கிய புதினா கொத்தமல்லி மிளகு கரம் மசாலா சேர்த்து நன்றாக கலக்கவும்
இதனை அடுப்பில் வைத்து கைவிடாமல் 5 நிமிடம் நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்
இறுதியாக பொரித்த வெங்காயம் மற்றும் முந்திரி நறுக்கிய மல்லி புதினா எலுமிச்சை ஆகியவற்றை மேலே தூவி பரிமாறவும்.




மட்டன் பன்னீர் கட்லெட்

தேவையான பொருட்கள்

மட்டன் 200 கிராம்
பன்னீர் 100 கிராம்
உருளைக்கிழங்கு 2
வெங்காயத்தாள் அரை கப்
இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
சாட் மசாலா ஒரு மேசைக்கரண்டி
சீரகப் பொடி அரை மேசைக்கரண்டி
மிளகுத்தூள் சிறிதளவு
உப்பு சிறிதளவு
புதினா மல்லி இலை சிறிதளவு
எண்ணெய் ஒரு கப்
அரிசி மாவு அரை கப்
மைதா மாவு ஒரு டேபிள்ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் மாவு ஒரு டேபிள்ஸ்பூன்
ப்ரெட் க்ரம்ப்ஸ் ஒரு கப்

செய்முறை

முதலில் மட்டனை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
நருக்கிய மட்டனுடன் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக விடவும்
உருளைக்கிழங்கை நன்கு வேக விடவும்
மட்டன் வெந்தவுடன் நன்கு மசிக்கவும்
மட்டனுடன் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசிக்கவும்
பிறகு பன்னீர் சேர்த்து நன்கு கை விட்டு பிசையவும்
பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சீரகப்பொடி சாட் மசாலா தூள் சேர்க்கவும்
இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
கரம் மசாலா சேர்க்கவும்
பிரட் க்ரம்ஸ் சிறிதளவு சேர்க்கவும்
அரிசி மாவை சேர்க்கவும்
வெங்காயத்தாள் மல்லி புதினா இலைகளை சேர்க்கவும்
நான் ஸ்டிகில் பொரிப்பதற்கான எண்ணையை காய விடவும்
ஒரு சிறிய பாத்திரத்தில் மைதா மாவு கார்ன் ஃப்ளார் மாவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக்கி கொள்ளவும்
கார்ன் ஃப்ளார் மாவில் உப்பு மிளகுத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
மட்டன் கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்
ஒவ்வொரு உருண்டையையும் கான்பிளவர் மாவு பேஸ்டில் முக்கி எடுக்கவும்
ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுத்து தனியே வைக்கவும்
எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் ஒவ்வொரு உருண்டையாக பொரித்து எடுக்கவும்
கெட்சப்புடன் பரிமாறி சுவைக்கவும்


மட்டன் கீமா பீஸ் சமோசா

தேவையான பொருட்கள்

மைதா 250 கிராம்
ரவை 2 ஸ்பூன்
மட்டன் கீமா 250 கிராம்
பச்சை பட்டாணி 150 gram
வெங்காயம் 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
தக்காளி 1
கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
சீரகம் தேவையான அளவு
மிளகாய்த் தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரிப்பதற்கு+வதக்குவதற்கு

செய்முறை

மைதா, ரவை உப்பு சேர்த்து கலந்து ,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்.மாவை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

மட்டன் கீமாவை இரண்டு விசில் விட்டு வேக வைக்கவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த வுடன் சீரகம் சேர்த்து பொரிந்த வுடன்,வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.வெங்காயம் வதங்கியவுடன்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.பின் தக்காளி சேர்த்து வதங்கியவுடன்,மட்டன் சேர்த்து வதக்க வேண்டும்.மட்டன் வதங்கியவுடன் ,பட்டாணி சேர்த்து வதக்க வேண்டும்.பின் மிளகாய்த் தூள்,கரம் மசாலா தூள்,மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து மசாலாவை வதக்க வேண்டும்.கொத்தமல்லி சேர்த்து இறக்க வேண்டும்

மைதா மாவை எடுத்து உருண்டை களாக உருட்டி,சப்பாத்தி போல் தேய்க்க வேண்டும்

சப்பாத்தியை இரண்டாக கட் செய்து,மாவை சுற்றி அதில் மசாலா வைத்து, மைதா பேஸ்ட் கொண்டு சமோசாவின் ஓரங்களை மூட வேண்டும்

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் ,சமோசாக்களை பொரித்தெடுக்க வேண்டும்



மட்டன் எலும்பு சாம்பார்

தேவையான பொருட்கள்

மட்டன் எலும்பு 500 கிராம்
வெங்காயம் 1
பூண்டு 15 பல்
மஞ்சள் தூள் 1/3 ஸ்பூன்
துவரம் பருப்பு ஒரு கையளவு
பச்சை மிளகாய் 3 முதல் 6
சாம்பார் பொடி 3 ஸ்பூன்
உப்பு தேவைக்கு
தண்ணீர் தேவைக்கு
எண்ணெய் தாளிக்க
கறிவேப்பிலை ஒரு கொத்து
மல்லித்தழை சிறிது

செய்முறை

மட்டன் எலும்பை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குக்கரில் 8 விசில் வேக வைக்கவும்.
துவரம் பருப்பையும் தனியாக குக்கரில் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 3 விசில் வேக வைத்து, பின்னர் நன்றாக கடைந்து கொள்ளவும்.
துவரம் பருப்புடன் நறுக்கிய பூண்டு, சாம்பார் பொடி, உப்பு, சேர்த்து கொதிக்க வைத்து, பின்னர் மட்டன் எலும்பு, தேவைக்கு தண்ணீர், இவற்றை சேர்க்கவும். மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.
மற்றொரு சிறிய பேனில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, சிறிது நேரம் வதக்கி, இதையும் துவரம் பருப்பு கலவையுடன் கொட்டவும்.
எல்லாம் சேர்ந்து சாம்பார் பதம் வந்ததும், மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
அருமையான தமிழ்நாடு ஸ்டைல் மட்டன் எலும்பு சாம்பார் தயார். இதை இட்லி, தோசை, ஆப்பத்துடன் சாப்பிடலாம்.






செட்டிநாடு மட்டன் கரோடா

தேவையான பொருட்கள்

மட்டன் - 1/2 kg
எண்ணெய் - 5 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பூண்டு. பேஸ்ட் - 1 ஸ்பூன்
கருவேப்பில்லை பேஸ்ட் - 2 ஸ்பூன்
தேங்காய் பால் - 1 கப் கெட்டியாக
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
உப்பு. - தேவையான அளவு
அரைத்து எடுக்கவேண்டிய பொருட்கள்;
காய்ந்த மல்லி - 4 ஸ்பூன் வரமிளகாய். - 10 ( காரத்திற்கு ஏற்றார் போல் குறைத்தோ கூட்டி கொள்ளலாம்)
சோம்பு. - 1 ஸ்பூன் இஞ்சி - சிறுதுண்டு
தேங்காய் பூ - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1/2 தக்காளி - 1/2 இவை அனைத்தையும் நன்றாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்

செய்முறை

முதலில் அனைத்தையும் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு கறியை நன்கு அலசி கழுவி எடுத்து கொள்ளவும் .
தேங்காய் பால் கெட்டியாக எடுத்து வைக்கவும்
பின் ஒரு இருப்பு சட்டியில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி .., வெந்தயம் .., சோம்பு போட்டு பொரிய விட்டு
குண்டு குண்டாக நறுக்கிய வெங்காயம் ... தக்காளி.. உப்பு.., போட்டு வதக்கி அதனுடன் பூண்டு பேஸ்ட் .., கருவேப்பிலை பேஸ்ட் போட்டு .., மஞ்சள்தூள்.., போட்டு நன்றாக வதக்கவும்
வதங்கிய பின் அலசி கழுவி வைத்த கறியை போட்டு நன்றாக வதக்கி ..
அரைத்து எடுத்து வைத்த விழுதை அதில் கொட்டி நன்றாக வதக்கி கொதிக்க விட்டு..
பின் அதில் கெட்டியாக எடுத்து வைத்த தேங்காய்ப் பாலை ஊத்தி கொதிக்க விடவும் 10 நிமிடம்
கடைசியாக கொதிக்க விட்ட கரோடவை கூக்கரில் ஊத்தி 4 சவுண்ட் 10 நிமிடம் நன்கு வேகவிடவும்.
வேகவில்லை என்றால் மறுபடியும் எடுத்து பார்த்து உப்பு பார்த்து குக்கரில் வேக விடவும். இல்லையென்றால் செமிக்காது
கறி நன்றாக வெந்த பின் அதை சுரூட்டி க்ராவியாக அல்லவும்....
சுவையான செட்டிநாடு மட்டன் கரோடா தயார்




சீஸி மட்டன் கைமா ரோல்ஸ்

தேவையான பொருட்கள்

மட்டன் கைமா -  2 கப் (அரைத்தது)
பூண்டு   -  3 பற்கள்
முட்டை - 1
ப்ரட் தூள் - 1 கப்
சீஸ் - 1/2 கப் ( துறுவியது)
உப்பு - சுவைக்கேற்ப
மிளகுத்தூள் - சுவைக்கேற்ப
எண்ணெய் - பொறிக்க
மல்லி இலை - 2 மேசைக்கரண்டி

செய்முறை

1.ஒரு பாத்திரத்தில் அரைத்த இறைச்சி, பூண்டு , அடித்த முட்டை , சீஸ், மிளகுத்தூள், ப்ரட் தூள், மல்லி இலை போட்டு நன்கு பிரட்டி ஒரு மேசைக்கரண்டி அளவிற்கு எடுத்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
2. அதனை உருளைகளாக பிடித்து ப்ரெட் கரம்ஸில் தோய்த்து ப்ரிடாஜில் அரை மணி நேரம் வைக்கவும்.
3.ஒரு பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
4.எண்ணெய் சூடானதும் கவனமாக உருளைகளை போட்டு இரண்டு பக்கங்களும் வேகும் வரை திருப்பிப் போட்டு எடுக்கவும்.




ஆம்பூர் மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்

சீரக சம்பா அரிசி அரை கிலோ
மட்டன் அரை கிலோ
வெங்காயம்-3
தக்காளி-3
பட்டை ஒரு சிறிய துண்டு
கிராம்பு-2
ஏலக்காய் ஒன்று
அன்னாசி பூ 1
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
தனியா தூள் ஒன்றரை ஸ்பூன்
கரம் மசாலா தூள் ஒன்றரை ஸ்பூன்
எண்ணெய் 8 ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
புதினா இலைகள் ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி அளவு
உப்புத்தூள் இரண்டு ஸ்பூன்
கெட்டியான தயிர் 2 ஸ்பூன்
எலுமிச்சம் பழம் பாதி
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து சீரக சம்பா அரிசியை 70% வேக வைத்து தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்

வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
கொத்தமல்லி கருவேப்பிலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலாத்தூள் பட்டை லவங்கம் எலுமிச்சம்பழம் தயிர் ஆகியவற்றை ரெடியாக எடுத்து வைக்கவும்

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் ஊற்றவும்
எண்ணெய் காய்ந்ததும் பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை தாளிக்கவும்
சிறிது வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும்
மீதி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்
தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்
மசாலா பொடிகள் உப்பு சேர்க்கவும்
மட்டனையும் சேர்த்து நன்றாக வதக்கவும்

அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விட்டு குக்கரை மூடவும்
பத்து நிமிடம் மிதமான தீயில் மட்டனை வேக வைத்து குக்கரை ஆப் செய்யவும்
ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து தயிர் எலுமிச்சம்பழ சாறு சேர்க்கவும்
இந்த மட்டன் கிரேவியில் சாதத்தை சேர்த்துக் கொள்ளவும்

எல்லாவற்றையும் நன்றாக கலக்கி பிறகு வெந்த சாதத்தை அதில் கொட்டி தம் கட்ட வேண்டும்.

10 நிமிடம் தம் கட்டிய பிறகு அடுப்பை ஆப் செய்யவும்
கொத்துமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்

வேக வைத்த முட்டை புளி கத்திரிக்காய் வெங்காய பச்சடி சைட் டிஷ் ஆக வைத்து பரிமாறவும்




ஆம்பூர் மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்

பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி அரை கிலோ
வெங்காயம் 8
தக்காளி 3
இஞ்சி பூண்டு விழுது 5ஸ்பூன்
புதினா மல்லி இலை சிறிதளவு
மிளகாய் தூள் 2ஸ்பூன்
மல்லித் தூள் 1 ஸ்பூன்
கரம் மசாலா ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் ஒரு பின்ச்
தயிர் அரை டம்ளர்
பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை
மட்டன் கோஃப்தா உருண்டை செய்வதற்கு தேவையான பொருட்கள்
மட்டன் கால் கிலோ
வெங்காயம்-3
இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
பட்டை ஏலக்காய் கிராம்பு சிறிதளவு
தேங்காய் அரை மூடி
பொட்டுக்கடலை கால் கப்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் ஒரு பின்ச்
மிளகாய்த் தூள் ஒரு ஸ்பூன்
கரம் மசாலா அரை ஸ்பூன்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

1 மட்டன் கோலா உருண்டை செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறி துண்டுகளை தண்ணீர் இல்லாமல் வதக்கி கொள்ளவும்
பொட்டுக்கடலை தேங்காய் இரண்டையும் தண்ணீர் எண்ணெய் இல்லாமல் வறுத்து கொள்ளவும்
மிக்ஸியில் பட்டை ஏலக்காய் கிராம்பு (1) பொட்டுக்கடலை தேங்காய் உப்பு இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் அரைத்த கலவையுடன் கறியையும் சேர்த்து நைசாக அரைக்கவும்
அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும் பிசைந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டிக்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறி உருண்டைகளை பொரித்து எடுத்துக் கொள்ளவும் இந்தக் அறிவுரைகளை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்
2.பிரியாணி செய்வதற்கு பாசுமதி அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும் பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் அதில் பாஸ்மதி அரிசி பட்டை ஏலக்காய் பிரிஞ்சி இலை உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேக விடவும்
அரிசி வெந்தவுடன் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும்
3.பிரியாணி மசாலா செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும் 2 வெங்காயத்தை பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்துக்கொள்ளவும்
பிறகு மீதியுள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளி இஞ்சி பூண்டு விழுது புதினா மல்லி இலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும் பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் மல்லித்தூள் தயிர் சேர்த்து கொதிக்கவிடவும்
மற்றொரு பாத்திரத்தில் வேக வைத்த பாஸ்மதி அரிசி செய்து வைத்துள்ள பொரித்த வெங்காயம் மசாலா கலவை கரி உருண்டைகளை ஒவ்வொரு அடுக்காக மாற்றி மாற்றி சேர்த்து 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து தம்மிழ் வைக்கவும்
மீண்டும் ஒரு முறை கிளறி விட்டு மீதமுள்ள பொரித்த வெங்காயம் சேர்த்து பரிமாறலாம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் லன்ச் பாக்ஸ் ரெசிப்பி ஆக கொடுத்து அனுப்பலாம்


மட்டன் இடியாப்பபிரியாணி

தேவையான பொருட்கள்

இடியாப்பம் 1 கிலோ அளவில்
மட்டன் 3/4 கிலோ
வெங்காயம் 400 கிராம்
தக்காளி 1/4 கிலோ
புதினா மல்லி தலா ஒரு கப்
பச்சை மிளகாய் 10
மஞ்சள்தூள் -1 டீஸ்பூன்
சீரகத்தூள் 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1/4 கப்
பட்டை ஏலம் கிராம்பு சிறிது
தயிர் 2 மேஜைக்கரண்டி
எண்ணெய் 1/4 கப்
நெய 3 டேபிள்ஸ்பூன்
கெட்டியான தேங்காய்ப்பால் 1 கப்
உப்பு சுவைக்கு

செய்முறை

வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை நீள வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்
புதினா மல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
இறைச்சியை சுத்தம் செய்து இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு மேசைக்கரண்டி தயிர் சிறிது தேவையான அளவு உப்பு சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேக வைக்கவும்.தயிரில் இருக்கும் தீரே போதுமானது
அகன்ற அடிக்கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணைய் விடவும்
நன்கு வதங்கி வரும் பொழுது மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் தயிர் புதினா மல்லி மசாலா பொடிகள் உப்பு புதினா மல்லி தயிர் இஞ்சி பூண்டு பேஸ்ட் அனைத்தையும் சேர்த்துக்கிளறவும்
மிதமான தீயில் அடிக்கடி கிளறி விட்டு கிரேவி தொக்கு போல் கெட்டியாகும் வரை வதக்கி வெந்த ஆட்டிறச்சியையும் சேர்க்கவும
இடியாப்பத்தை உதிர்த்து தேங்காய்பாலில் கலந்து தயாராக இருக்கும் கிரேவியில் சேர்த்து கிளறவும்
கடைசியாக சிறிது மல்லி இலை நெய் விட்டு கிளறி பாத்திரத்தை மூடி மேலும் பத்து நிமிடங்கள் தம்மில் வைத்து இறக்கவும்
ஆனியன் ரைத்தாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்



மட்டன் நுரையீரல் கிரேவி

தேவையான பொருட்கள்

நுரையீரல் 1
வெங்காயம் 2 பெரியது விழுதாக அரைத்து
தக்காளி 2 பேஸ்டாக அரைத்து
இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள்ஸபூன்
கொத்தமல்லி இலை 1 கைப்பிடி
தேங்காய் அரை மூடி
மஞ்சள்தூள், குழம்பு மிளகாய் தூள், தனியாதூள், கரம்மசாலா, உப்பு , மிளகுதூள் தேவைக்கேற்ப
சோம்பு 1 டீஸ்பூன்

செய்முறை

குக்கரில் எண்ணைய் காய்ந்ததும் வெங்காய விழுது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி
புன் அதனோடு சுத்தம் செய்த நுரையீரலையும் சேர்த்து அதில் உள்ள நீர் போகும் அளவு வதக்கவும்
பின் அதில் தக்காளி விழுது மிளகுதூள் தவிர மற்ற மசாலா பொருட்களையும் சேர்த்து மீண்டும் நீர் வற்றும் வரை வதக்கவும்
பின் தேங்காயோடு கொத்தமல்லி இலை சேர்த்து மையாக அரைத்து பால் எடுக்கவும்
இந்த பாலை ஊற்றி 5 முதல் 6 விசில் மிதமான தீயில் விட்டு
இறுதியாக மிளகு தூள் சிறிது சேர்த்து இறக்கவும்


மட்டன் கொத்துக்கறி ஹலீம்

தேவையான பொருட்கள்

கறி வேகவைப்பதற்கு::
கறி கைமா-250கிராம்
பச்சைமிளகாய்-4
இஞ்சிபூண்டு விழுது-1ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/2டீஸ்பூன்
பட்டை-3
ஏலக்காய் -3
கிராம்பு-2
சோம்பு-1டீஸ்பூன்
மிளகு -1டீஸ்பூன்
உப்பு -தேவைக்கேற்ப
தண்ணீர் -100மி.லி
பருப்புக் கலவை செய்வதற்கு::
உடைத்த கோதுமை-1/4கப்
உளுந்து -1டீஸ்பூன்
துவரம்பருப்பு-1டீஸ்பூன்
கொண்டைக்கடலை-1டீஸ்பூன்
பாசிப்பருப்பு -1டீஸ்பூன்
அரிசி-1டீஸ்பூன்
உப்பு -தேவைக்கேற்ப
தண்ணீர் -2கப்
வதக்குவதற்கு::
எண்ணெய் -2ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -3
இஞ்சிபூண்டு விழுது-1ஸ்பூன்
கொத்தமல்லித்தழை
புதினா
பச்சைமிளகாய்-2
மிளகு தூள்-1/4டீஸ்பூன்
மஞ்சள் தூள்-1/4டீஸ்பூன்
தயிர் -1கப்
நெய் -4ஸ்பூன்
அலங்கரிக்க ::
கொத்தமல்லி
வெங்காயம்
எலுமிச்சை

செய்முறை

கறிவேகவைப்பதற்கு::
குக்கரில் மட்டன் கொத்துக்கறி பச்சை மிளகாய் ,இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
மிளகு, சோம்பு,கிராம்பு, பட்டை ,ஏலம் , மஞ்சள் தூள்,உப்பு சேர்க்கவும் .
உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 7 அல்லது 8விசில் விட்டு வேகவைக்கவும்.
மற்றொரு குக்கரில் உடைத்த கோதுமை,உளுந்து,கொண்டைக்கடலை,பாசிப்பருப்பு,துவரம்பருப்பு ,மற்றும் ,அரிசி சேர்க்கவும் .
உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
வேகவைத்த மட்டன் கொத்துக்கறியையும்,பருப்புக் கலவையையும் தனிதனியாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் மற்றும் புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள்,மிளகு தூள் சேர்க்கவும்.
தயிர் சேர்க்க வேண்டும்.
உப்பு பார்த்து சேர்த்து கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள மட்டன் மற்றும் பருப்புக் கலவையை சேர்த்து கிளறவும் .
அடுப்பை. சிம்மில் வைத்துக்கொள்ளவும் .
அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும்.
நெய் சேர்த்து கிளறி விட்டு மூடி வைத்து தம்மில் போடவும் .
சிறிது நேரம் சென்று அடுப்பை அமத்தவும்.
மட்டன் கைமா ஹலீம் தயார் .
ஒரு பௌலில் மாற்றி பொரித்த வெங்காயம்,கொத்தமல்லி தூவி எலுமிச்சை வைத்து பரிமாறவும் .



மட்டன் சாப்ஸ் கப்சா ரைஸ்

தேவையான பொருட்கள்

மட்டன் சாப்ஸ் செய்ய:-
ஆட்டுக்கறி சாப்ஸ் துண்டுகள்-400- 500 கிராம்
வெங்காயம் -1
தக்காளி -1
இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
கரம் மசாலா( ஏலம் பட்டை கிராம்பு தூள்)-1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
முட்டை -2
எண்ணெய் நெய் -2 மேஜைக்கரண்டி
நறுக்கிய மல்லி இலை சிறிது.
கப்ஸா ரைஸ் செய்ய :-
பாசுமதி அரிசி - 400 கிராம்
ஆலிவ் ஆயில் அல்லது நெய்-2 மேஜைக்கரண்டி
நறுக்கிய பெரிய வெங்காயம் -1
தண்ணீர் - அரிசி ஒன்னரை அளவு
நார் கப்ஸா மிக்ஸ் -1 பாக்கெட்
அல்லது சூப் கியூப் -1
சாப்ஸ் கறி வேக வைத்த தண்ணீர் - சிறிது
நறுக்கிய மல்லி,புதினா சிறிது.
உப்பு மிக்சில் இருக்கும் பார்த்து சேர்க்கவும்.

செய்முறை

முதலில் கறி சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்து எடுத்து வைக்கவும்.
குக்கரில் கறியுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி,இஞ்சி பூண்டு விழுது,மிளகாய்த்தூள்,மஞ்சள்,கரம் மசாலா,உப்பு தேவைக்கு தண்ணீர் சிறிது சேர்த்து 5 விசில் வேக வைக்கவும்.
ஆவியடங்கியவுடன் தண்ணீர் சிறிது வடித்து எடுத்து விட்டு பிரட்டிக் கொள்ளவும்.அதனை ப்லேடில் எடுத்து ஆற வைக்கவும்.

முட்டையை உப்பு மிளகு சேர்த்து அடித்து வைக்கவும்.
வேகவைத்த சாப்ஸ் கறியை முட்டையில் முக்கி தவாவில் எண்ணெய் நெய் கலந்து விட்டு அடுப்பை சிம்மில் வைத்து இருபுறமும் திருப்பி போடவும்.

எடுத்து ப்லேட்டில் மல்லி இலை தூவி வைக்கவும்.

இனி கப்ஸா ரைஸ் செய்ய அரிசியை அரை மணி நேரம் ஊற விட்டு தண்ணீர் வடித்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

தண்ணீர் அளந்து சேர்க்கவும். கறி வெந்த தண்ணீர் சேர்க்கவும். அதில் கப்ஸா மிக்ஸ் சேர்க்கவும். கப்ஸா மிக்ஸ் இல்லை என்றால் நார் அல்லது மேகி சூப் கியூப் மும் கூட சேர்த்து செய்யலாம்.சாப்ஸ் கறி வெந்த தண்ணீர் சேர்ப்பதால் அருமையாக இருக்கும்.

கலந்து கொதிக்க விடவும்.

ஊற வைத்து வடிகட்டிய அரிசி சேர்க்கவும்.

உப்பு சரி பார்த்து குக்கரை மூடி ஒரு விசில் வரவும் அடுப்பை குறைத்து 5 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.
ஆவியடங்கியவுடன் திறக்கவும்.இப்படி கப்ஸா ரைஸ் சூப்பராக இருக்கு.

பக்குவமாக பிரட்டி விடவும்.

ப்லேட்டில் கப்ஸா ரைஸ், மட்டன் சாப்ஸ் ப்ரை வைத்து மல்லி புதினா அலங்கரித்து வெங்காய பச்சடியுடன் பரிமாறவும்.

சுவையான மட்டன் சாப்ஸ் கப்ஸா தயார்.



செட்டிநாடு மட்டன் கிரேவி

தேவையான பொருட்கள்

500 கிராம் மட்டன்
1 வெங்காயம், நறுக்கியது
2 தக்காளி, நறுக்கியது
1 உருளைக் கிழங்கு, துண்டாக வெட்டியது
1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
1 மேஜை கரண்டி மிளகாய் தூள்
2 மேஜை கரண்டி சீரக சோம்பு தூள்
1 தே கரண்டி மஞ்சள் தூள்
பட்டை, கிராம்பு, ஏலக்காய்
எண்ணெய்
வறுத்து அரைக்க
1 மேஜை கரண்டி மிளகு
1/2 மேஜை கரண்டி சீரகம்
2 கிராம்பு
2 ஏலக்காய்
3 பூண்டு பல்
1 சிறு இஞ்சி
2 காய்ந்த மிளகாய்
2 இடுக்கு கருவேப்பிலை

செய்முறை

குக்கரில் மட்டனுடன் இஞ்சி பூண்டு விழுது, சீரக சோம்பு தூள், மிளகாய் தூள், உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து, 4 விசில்க்கு வேக விடவும்

வறுத்து அரைப்பதற்க்கு கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வறுத்து, கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும்
பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்
பொடித்த மசாலா மற்றும் வேக வைத்த மட்டன் சேர்த்து கிளறவும்

உப்பு மற்றும் உருளைக் கிழங்கு சேர்த்து, மிதமான தீயில், 20 நிமிடம் மூடி வைத்து, இடையிடையே கிளறி, சுறுங்கியதும், அடுப்பை அனைத்து சூடாக பரிமாறவும்


மட்டன் கைமா பால்ஸ் கிரேவி

தேவையான பொருட்கள்

மட்டன் கைமா 1\2 கிலோ
போட்டு கடலை 100 கிரம்
கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
மட்டன் மசாலா 2 ஸ்பூன்
சில்லி பவுடர் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்
உப்பு
எண்ணெய்
வெங்காயம் 500 கிரம்
தக்காளி 200 கிரம்
பச்சை மிளகாய் 2
புதினா இலை
தேங்காய் பால் 1 காய்
இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்

செய்முறை

மிக்ஸில் கைமாவை அரைத்து கொள்ளவும் பின்பு அதில் பொடித்த போட்டு கடலை, பொடியாக நறுக்கி வெங்காயம், பச்சை மிளகாய், மட்டன் மசாலா, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு போட்டு நன்கு கிளறவும்..
பான் இல் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின்பு புதினா, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
பின்பு கரம் மசாலா, சில்லி பவுடர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
இப்போது தேங்காய் பால் ஊற்றி கொதிக்கவிடவும்
இப்போது பிசைந்த கைமாவை உருண்டை களை போடவும்.
கொதித்ததும் சிம்மில் வைக்க வேண்டும்
15 நிமிடம் கழித்து ஆஃ செய்து பரிமாறவும்


ரோட்டுக்கடை மட்டன் சால்னா

தேவையான பொருட்கள்

மட்டன்
வெங்காயம் 1 தக்காளி 1
பட்டை கிராம்பு ஏலக்காய் தாளிக்க
பச்ச மிளகாய் நான்கு
மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
தேங்காய்ப் பால் ஒரு கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்

செய்முறை

மட்டன் துண்டுகளை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்

கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு ஏலக்காய் தாளிக்கவும்
வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
மசாலா பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும்
மட்டனை சேர்க்கவும்
நன்கு கொதித்ததும் தேங்காய்ப்பால் விட்டு இறக்கவும்



செட்டிநாட்டு மட்டன் சுக்கா

தேவையான பொருட்கள்

வேக வைக்க:---
மட்டன்- 1/4கிலோ
தண்ணீர்-1/4 கப்
மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
இ.பூ விழுது-1/4டீஸ்பூன்
உப்பு -சிறிது
தாளிக்க :---
எண்ணெய்-4 டீஸ்பூன்
சோம்பு-1/2. டீஸ்பூன்
முந்திரி-5
வர மிளகாய்- 2
பச்சை மிளகாய்-2
பெரிய வெங்காயம்-1-2
கருவேப்பிலை
இ.பூ விழுது-1டீஸ்பூன்
மல்லித்தூள்-2 டீஸ்பூன்
வரமிளகாய் தூள்-1/2 "
காஸ்மீரீ மிளகாய்தூள்-1/4 "
சோம்பு தூள்-1/2 "
கரம் மசாலா தூள்-1/2 "
உப்பு - தேவைக்கு
மிளகுத்தூள்-2-3டீஸ்பூன்
மல்லித்தழை

செய்முறை

மட்டனை...இளம் ஆட்டுகறி என கேட்டு வாங்கவும்.

குக்கரில் வேக வைக்க மேற்படி உள்ள அனைத்தையும் சேர்ந்து 5-6விசில் விடவும்.அதிகம் தண்ணீர் வேண்டாம்.
ஒரு கடாயில் தாளிக்க மேற்கூறிய அனைத்தையும் சேர்த்து நன்கு ஃப்ரை செய்யவும்.மசாலா நன்கு கறியில் சேர்ந்தவுடன் ....
கடைசியில் மிளகுதூள் சேர்த்து 2 நிமிடம் கழித்து மல்லிதழை தூவி இறக்கவும்.அருமையான மட்டன் சுக்கா ரெடி .



மட்டன்( நெஞ்செலும்பு) சூப்

தேவையான பொருட்கள்

நெஞ்செலும்பு - 1/4 கிலோ
தேங்காய் - 1/2 கப்
ப,மிளகாய் 2
சோம்பு - 1 ஸ்பூன்
கசகசா - சிறிது
பொட்டுகடலை - 2 ஸ்பூன்
மல்லிதலை - கைப்பிடி
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பட்டை,கிராம்பு தலா - 2
எண்ணெய் - தாளிக்க
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 பல்
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

நெஞ்செலும்பை சுத்தம் செய்து 4 தம்ளர் தன்னீர்,சின்ன வெஙகாயம்,பூண்டு இஞ்சியை தட்டி போடவும்.உப்பு ,மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 5 விசில் வைத்து வேகவைக்கவும்.

தேங்காய், சோம்பு,மல்லிதலை, பொ,கடலை,கசகசா,மல்லித்தூள்,மிளகாய் தூள் சேர்த்த்ய் மிக்சியில் அரைக்கவும்.

வேகவைத்த கறியில் அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

வாணலியில் எண்ணெய். விட்டு பட்டை,கிராம்பு தாளித்து வெங்காயம்,பூண்டு ப,மிளகாய்,கறிவேப்பிலை,தக்காளி சேர்த்து வதக்கவும்.

வதக்கிய பொருட்களை கொதிக்கும் சூப்பில் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கவும்.



மட்டன் கறியும் பரோட்டாவும்

தேவையான பொருட்கள்

கறி 1/2 கிலோ
வெங்காயம் 4
தயிர் 50 கிராம்
நெய் 50 கிராம்
தேங்காய் எண்ணெய் 50 கிராம்
ஆயில் 50 கிராம்
முந்திரிப் பருப்பு 25 கிராம்
ஏலம், கருவா ,கிராம்பு தே. அளவு
இஞ்சி பூடு பேஸ்ட் 4 டீஸ்பூன்
சோம்புத்தூள் 2 டீஸ்பூன்
சீரகத்தூள் 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1 1/2 டீஸ்பூன்
மிளகாய்தூள் 2 டீஸ்பூன்
மல்லித்தூள் 2 டீஸ்பூன்
காயல் மசாலாத்தூள் 3
கருவேப்பிலை & உப்பு தே.அளவு
தேங்காய்பால் 1 கப்
வாழைக்காய் 1
பச்சை மிளகாய் 3


செய்முறை

செய்முறை கறியைக் கழுவி விட்டு அதனுடன் காயல் மசாலாத்தூள், சோம்புத்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்தூள் கறியில் போட்டு வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.முந்திரிப் பருப்பை அரைத்து வைக்கவும்.
குக்கர் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும், நெய், ஆயில் இவற்றை ஊற்றி, முதலில் கருவேப்பிலைப் போட்டு வெங்காயம் போட்டு, இஞ்சி பூடு பேஸ்ட் ஏலம், கருவா, கிராம்பு, தயிர் எல்லாவற்றையும் போட்டு பொன்னிறமாக அது ஆனவுடன் கறியைப் போட்டு 4 விசில் வரும் வரை விடவும். (கறியின் தன்மை பார்த்து விசில் விடவும்.)
பிறகு அரைத்த முந்திரிப்பருப்பு, தேங்காய்பால், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்கும் போது, வாழைக்காயை வெட்டிப் போட்டு, பச்சை மிளகாய் போட்டு,15 நிமிடங்கள் தீயைக் குறைத்து வைத்து, சாதா மூடி போட்டு மூடி விடவும். பிறகு திறக்கவும். *மட்டன் கறி ரெடி*



மட்டன் கறிவேப்பிலை பிரியாணி

தேவையான பொருட்கள்

250 கிராம் மட்டன்
1 மற்றும் 1/2 சீரக சம்பா அரிசி (அல்லது) பாஸ்மதி அரிசி - தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறுவைத்தது
1/2 தேக்கரண்டி இஞ்சி - பூண்டு விழுது
2 கப் தேங்காய் பால்
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1/2 தேக்கரண்டி மிளகுத் தூள்
4 தேக்கரண்டி கொங்கு பாணி மல்லித்தூள்
1/2 கப் புதினா இலைகள்
1/2 கப் நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகள்
2 தேக்கரண்டி தயிர்/கட்டித்தயிர்
20-30 கரிவேப்பிலை
2 காய்ந்த சிவப்பு மிளகாய்
2 பச்சை மிளகாய்
1 நடுத்த அளவில் உள்ள வெங்காயம் - நறுக்கப்பட்டது
1 எலுமிச்சையிலிருந்து சாறு
சுவைக்கேற்ற உப்பு
4 தேக்கரண்டி மணிலா எண்ணெய்

செய்முறை

மஞ்சள் தூள் கொண்டு மட்டனை மேரினேட் செய்து எடுத்து வைக்கவும். 1 தேக்கரண்டி எண்ணெயை கடாயில் சூடுபடுத்திக்கொள்க. உடைத்த சிவப்பு மிளகாய்கள், கறிவேப்பலை சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். சிறிதுநேரம் வேகவைத்து அடுப்பிலிருந்து எடுததுவிடவும். ஆறவிடவும். அதன்பிறகு இந்த சேர்வைப்பொருள்களை ஒன்றாக அரைத்துக்கொள்க.
ஒரு பிரஷர் குக்கரில் 3 தேக்கரண்டி எண்ணெயை சூடுபடுத்திக்கொள்க. மேரினேட்செய்யப்பட்ட ஆட்டிரைச்சியை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு சிறு தீயில் வேகவைக்கவும். புதினா, கொத்துமல்லி சேர்த்து நன்றாகக் கலக்கவும். இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்துக் கலக்கவும். அதன்பிறகு அரைத்த சாந்தைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும். தயிர், 2 தேக்கரண்டி கொத்துமல்லித்தூள் சேர்க்கவும்.
10 விசிலுக்கு சிறுதீயில் பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். தீயிலிருந்து எடுத்து ஆறவிடவும். மீண்டும் அடுப்பில் வைத்து தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். தண்ணீர் அளவு சரிசெய்யவும். (சீரிக சம்பா அல்லது பாஸ்மதி அரிசிக்கு 2:1 விகிதம்.
கொதிக்கட்டும். இப்போது அரிசி, எலுமிச்சை சாறு, சுவைக்கு உப்பு சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கி மூடியிட்டு 8 நிமிடங்களுக்கு குறைவான நடுத்தர தீயில் வேகவைக்கவும்.
இப்போது ஒரு இரும்பு தவாவின் மீது இந்தக் குக்கரை வைக்கவும். டிரம்மில் மேலும் 20 நிமிடங்கள் குறைவானத் தீயில் வேகட்டும்.
சிறப்பான சுவைக்குச் சூடாகப் பரிமாறவும்.



தளப்பாகட்டி மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ
சீரக சம்பா அரிசி - 2கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 + 2மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கல் உப்பு - 1/2 + 2 தேக்கரண்டி
தண்ணீர் - 4 கப்
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 5
ஏலக்காய்- 3
ஜாதிக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
ஜாதிபத்ரி - 1/4 பாகம் உடைத்தது
மிளகு - 1/2 தேக்கரண்டி
அன்னாசி பூ - 2 இதழ்கள்
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
மல்லித்தூள் - 1 மேசைக்கரண்டி
நறுக்கிய சின்ன வெங்காயம்- 2 கப்
நறுக்கிய தக்காளி - 1 கப்
நறுக்கிய கொத்தமல்லி இலை - 1 கப்
நறுக்கிய புதினா - 1 கப்
கீறிய பச்சை மிளகாய் - 5
புளிப்பில்லாத கெட்டி தயிர் - 1/4 கப்
பிரிஞ்சி இலை - 2
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
நெய் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - அரை பழத்தில் எடுத்தது

செய்முறை

மட்டனை கழுவி சுத்தம் செய்து , 1/2 தேக்கரண்டி உப்பு, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து குக்கரில் 5 அல்லது 6 விசில் வைத்து இறைச்சி மென்மையாகும்வரை வேக வைக்கவும்.
வேகவைத்த இறைச்சியை அதன் சாறுடன் தனியே எடுத்து வைக்கவும்.
இறைச்சி வேகும் நேரத்தில், கொடுக்கப்பட்ட அளவுகளில் உள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் தூள், மிளகு, ஜாதிபத்ரி, அன்னாசி பூ, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் பொடி செய்து கொள்ள வேண்டும்
அரிசியை நன்கு கழுவி 45 நிமிடங்கள் ஊற வைக்கவும்.(சீரக சம்பா இல்லாததால் நான் பாசுமதி உபயோகித்துள்ளேன், சீரக சம்பா அரிசியே இதற்கு உகந்தது)
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு ஏறியதும், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரிஞ்சி இலை, சீரகம், சோம்பு சேர்க்கவும்.
சீரகம் சோம்பு பொரிந்ததும், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பொன்னிறமாக வதங்கியதும், நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லி புதினா இலைகளை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
இப்போது நறுக்கிய தக்காளி, கெட்டி தயிர் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
வதக்கிய கலவை நன்கு ஒன்றோடு ஒன்று கலந்து மசிந்து எண்ணெய் பிரிந்து வரும்போது அரைத்த மசாலா தூளை சேர்த்து 2நிமிடங்கள் வதக்கவும்.
பின் அவித்த இறைச்சியை நீரை வடித்து, வதக்கிய மசாலாவுடன் சேர்த்து 2 நிமிடம் மூடி வைக்கவும்.
இறைச்சியின் சூப்பினை அரிசியை அளந்த அதே அளவையில் 4கப் அளந்து இறைச்சி மசாலாவில் சேர்த்து மூடி போட்டு கொதிக்க வைக்கவும். சூப் போதவில்லை என்றால் நீர் சேர்த்து கொள்ளலாம்.
ஊற்றிய நீர் அல்லது சூப் நன்றாக கொதித்து வரும்போது உப்பு சரிப்பார்த்து ஊறவைத்த அரிசியை சேர்த்து கொதிக்கவிடவும்.

அரிசி முக்கால் பதம் வெந்ததும், அரை எலுமிச்சை பழ சாறு பிழிந்து, அரிசி உடையாமல் கவனமாக கிளறி காற்று புகாமல் ஒரு மூடி போட்டு மூடவும்.
அந்த மூடியின் மேல் ஒரு கனமான பாத்திரத்தில் 3/4 பாகம் நீர் நிரப்பி வைக்கவும். மிளகு, ரசம் நுணுக்க பயன் படும் சிறிய கல் குழவியை பயன்படுத்தலாம்.
தீயை குறைந்த அளவுக்கு மாற்றி 45 நிமிடங்கள் தம்மில் சமைக்கவும்.
45 நிமிடங்கள் கழித்து, மூடியை நீக்கிவிட்டு கவனமா கிளறி நெய் நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.



பாய் வீட்டு மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்

மட்டன் அரை கிலோ
பாஸ்மதி அரிசி 4 கப்
பெரிய வெங்காயம் 4 பொடிதாக நறுக்கியது
தக்காளி 3 பொடிதாக நறுக்கியது
புதினா ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லி ஒரு கட்டு
பட்டை பெரியது 4
ஏலக்காய் 7
கிராம்பு 7
பச்சை மிளகாய் 5 கீறியது
நெய் 3 மேஜைக்கரண்டி
என்னை 3 மேஜைக்கரண்டி
பிரியாணி இலை ஒன்று
இஞ்சி ஒரு விரல் அளவு
பூண்டு 10 பற்கள்
மிளகாய்த்தூள் 2 மேஜைக்கரண்டி
தனியாத்தூள் மூன்று மேஜைக்கரண்டி
தயிர் அரை கப்

செய்முறை

பிரியாணி மசாலா செய்வதற்கு
கொடுத்துள்ள பட்டை கிராம்பு ஏலக்காய் ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வாணலியில் வறுக்கவும்
அவற்றை மிக்ஸியில் நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளவும்
கொடுத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டை நன்றாக நீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்
ஒரு குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கழுவிய மட்டனைப் போட்டு உப்பு மற்றும் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றவும்
அதில் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து குக்கரை மூடவும்
மட்டன் 6 விசில் விட்டு நன்றாக வேக வைக்கவும்
மட்டன் வெந்தவுடன் மட்டனை தனியாகவும் அந்த வெந்த தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்
ஒரு குக்கரில் எண்ணெய் சிறிதளவு, கொடுத்துள நெய், பிரியாணி இலை போட்டு நன்றாக வதக்கவும்
இதில் நீளமாக மெலிதாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்
இதில் கீறிய பச்சை மிளகாய் களை போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்
வெங்காயம் பொன்னிறமானவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை போட்டு நன்றாக வதக்கவும்
நறுக்கிய தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும்
இதில் மிளகாய்த்தூள் தனியாத்தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பிரியாணி மசாலாவை சேர்க்கவும்
இதில் அரை கப் தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும்
வெந்து தனியாக எடுத்து வைத்துள்ள மட்டன் துண்டுகளை இதில் சேர்க்கவும்
மட்டன் துண்டுகளை நன்றாக வதங்கியவுடன் அதில் மட்டன் வெந்து உள்ள தண்ணியை அதில் சேர்க்கவும்
இதில் தண்ணீரின் அளவு ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர்
4 கப் அரிசிக்கு 6 கப் தண்ணீரை ஊற்ற வேண்டும்
ஆறு கப் தண்ணீர் என்பது அரை கப் தயிர் + மட்டன் வெந்து தண்ணீர் + வெறும் தண்ணீர்
ஊறவைத்த பாஸ்மதி அரிசியை போட்டு நன்றாக கிளறவும் தேவையான உப்பு சேர்க்கவும்
தண்ணீர் நன்றாக கொதித்த உடன் மிதமான தீயில் வைத்து குக்கரை மூடி விசில் போடவும்
மிதமான தீயில் சரியாக 12 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்
குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் திறந்து பிரியாணியை பரிமாறவும்



திருநெல்வேலி மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்

சீரகசம்பா அரிசி - 1 1/2 கப்
மட்டன் -1/2 கி
வெங்காயம் -2 நீளவாக்கில் நறுக்கியது
தக்காளி- 1 பெரியது நீளவாக்கில் நறுக்கியது
பச்சை மிளகாய்-1 நீளவாக்கில் நறுக்கியது
புதினா -1 கப்
கொத்தமல்லி தழை-1கப்
மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது-2ஸ்பூன்
பட்டை, கிராம்பு-சிறிதளவு
ஏலக்காய்-3
பிரியாணி இலை-1
ஜாதி பத்திரி-1
பெருஞ்சீரகம்-1ஸ்பூன்
நெய்-1 ஸ்பூன்
தேங்காய் பால்-1 கப் ( optional)

செய்முறை

சீரகசம்பா அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும்
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை பெருஞ்சீரகம் கிராம்பு ஏலக்காய்,அண்ணாசி பூ ஜாதிபத்திரி பிரியாணி இலை ஆகியவற்றை சேர்க்கவும்
பின்னர் நீளவாக்கில் பெரிய துண்டுகளாக நறுக்கிய‌ வெங்காயத்தை சேர்த்து பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்கவும்
இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
மிளகாய் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
கழுவி சுத்தம் செய்த மட்டனை சேர்த்து நன்றாக வதக்கவும்
இரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 7 விசில் வைக்கவும்
மட்டன் வேகவில்லை என்றால் கூடுதலாக வைத்து கொள்ளலாம்
பின்னர் மட்டனை தனியாக எடுத்து விட்டு தண்ணீரை அளவிடவும்
குக்கரில் ஊற வைத்து கழுவிய அரிசியை சேர்க்கவும்
ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் அளவு
வேகவைத்த மட்டன் தண்ணீர் இரண்டு கப் மற்றும் ஒரு கப் தேங்காய் பால் சேர்க்கவும்
உப்பு காரம் தேவையென்றால் சேர்த்து கொள்ளவும்
கொத்தமல்லி தழை புதினா இலை சேர்த்து மிதமான தீயில் 20 நிமிடங்கள் வைக்கவும்
சுவையான திருநெல்வேலி பிரியாணியை சூடாக பரிமாறவும்




ஹைதராபாத் மட்டன் தம் பிரியாணி

தேவையான பொருட்கள்

250 கிராம் மட்டன்
250 கிராம் அரிசி. நான் கோலம் அரிசியைப் பயன்படுத்தினேன், சற்றுக் கூடுதலான அரிசியைச் சேர்த்துக்கொண்டேன்.
1/2 கப் தயிர்
1/2 கப் புதினா துண்டுகள்
1/2 கப் கொத்துமல்லி நறுக்கியது
2 பிரிஞ்சி இலை
3 நடுத்தர அளவுள்ள வெங்காயம் நறுக்கியது
1 வெங்காயம் நறுக்கியது அலங்காரத்திற்காக
1 தேக்கரண்டி ஷாகி இலைகள்
4-5 கருப்பு மிளகு
3 கிராம்பு
2 பச்சை ஏலக்காய்
ஒரு சிட்டிகை குங்குமப்பூ வெந்நீரில் கலந்தது
2 தேக்கரண்டி வெதுவெதுப்பான பால்
3-4 பச்சை மிளகாய், காரசாரமாக வேண்டுமானால் நீங்கள் கூடுதலாகச் சேர்க்கலாம்.
10-12 பூண்டு பற்கள்
இஞ்சி சிறிய துண்டு

செய்முறை

மட்டன் கழுவப்பட்டுச் சுத்தப்படுத்தப்பட்டது. பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டை பொறபொறப்பாக அரைத்துக்கொள்ளவும்.
மட்டனில் இந்த சாந்தை தயிர், சிவப்பு மிளகாய், வறுத்து நறுக்கிய வெங்காயம், சுவைக்கேற்ற உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். நான் இறைச்சி மசாலா கொஞ்சம் சேர்த்துக்கொண்டேன். 3 தேக்கரண்டி எண்ணெயை இந்த மேரினேட்டில் சேர்த்துக்கொண்டேன்.
மேரினேட் செய்த இறைச்சியை ஒரு மணி நேரத்திற்கு அல்லது கூடுதலாக வைக்கவும். சிறப்பாக வருவதற்கு இரவு முழுவதும் வைப்பது சிறந்தது.
ஏறக்குறைய இரட்டிப்பு அளவு அரிசியை எடுத்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பாஸ்மதிக்குப் பதிலாக வழக்கமாகக் கோலம் அரிசியைப் பயனப்டுத்த விரும்புவேன்.
ஷாகி சீரகம், பிரிஞ்சி இலை, பச்சை ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை இந்தக் கொதிக்கும் நீரில் போடவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், உப்பு சேர்த்து சற்றே எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும், அப்போதுதான் சாம் ஒட்டாது.
அரிசியை 3-4 நிமிடங்கள் கொதிக்கவைத்து, வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
ஒரு கனமானப் பாத்திரத்தில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதன்பின்னர் மட்டனை மேரினேட் செய்யவும். சிறு தீயில் வைத்து மூடிபோட்டி மூடி 5-10 நிமிடங்கள் வேகவைக்கவும். மட்டன் இந்த சமயத்தில் தண்ணீரை வெளியேற்றும்.
இதற்குப் பின் வடிக்கட்டிய சாதத்தை இந்தமட்டன் மீது வைக்கவும். சூடானத் தண்ணீரில் கலந்த குங்குமப்பூவைத் தூவவும்.
நறுக்கிய பழுப்பு வெங்காயத்தை சாதத்தின் மீது தூவவும். தவாவை உயர் தீயில் வைக்கவும்.
பிரியாணிப் பானை ஒரு மூடியால் மூடி மாவால் சீல் வைக்கவும். பானை ஒரு ஃபாயிலால் சீல் வைத்து மூடியால் மூடினேன்.
பானை உயர் தீயில் 4-5 நிமிடங்கள் வைத்து அதன்பின்னர் தவாவை சிறு தீயில் 20-25 நிமிடங்கள்.
ஒரு பக்கத்திலிருந்து கொஞ்சம் அரிசியைக் கைகளால் எடுத்துக்கொள்ளவும். அப்போதுதான் சாதம் உடையாது. ரைத்தா அல்லது வெனிகர் வெங்காயத்தோடு சூடாகப் பரிமாறவும்.




கடாய் மட்டன் கறி மற்றும் பரோட்டா

தேவையான பொருட்கள்

பரோட்டா :
மைதா மாவு-1 1/2கப்
உப்பு -தேவைக்கேற்ப
தண்ணீர் -தேவைக்கேற்ப
எண்ணெய் -தேவைக்கேற்ப
முட்டை -1
காய்ச்சின பால்-1/4கப்
சீனி-1/4டீஸ்பூன்
கடாய் மட்டன் கறி :
மட்டன் -1/2கிலோ
சின்ன வெங்காயம் -பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் -1
சீரகம் -1டீஸ்பூன்
மிளகு -1டீஸ்பூன்
தக்காளி -2
இஞ்சி விழுது
பூண்டு விழுது
மிளகாய் தூள் -1/4டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4டீஸ்பூன்
உப்பு -தேவைக்கேற்ப
எண்ணெய்
கொத்தமல்லித்தழை
மல்லித்தூள்-1/4டீஸ்பூன்
மிளகு தூள்

செய்முறை

பரோட்டா :
மாவில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விடவும்.
பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
கொடுக்கப்பட்டுள்ள சீனி, பாலை சேர்த்து பிசைய வேண்டும்.
பின்னர் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்.
மாவை நன்றாக பிசைந்து 2மணி நேரம் ஊறவிடவும்.
பிறகு சின்ன உருண்டைகளாக எடுத்து தேய்த்து தாவாவில் போட்டு எடுக்கவும்.
சூடான பரோட்டா தயார்.
கடாய் மட்டன் கறி :
மட்டன் -ஐ சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
சின்ன வெங்காயம், இஞ்சி விழுது, பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கிளறி விடவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கிளறி விடவும்.
நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
பிறகு சீரகம், மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
நன்றாக வதங்கியதும் மட்டன் சேர்த்து கிளறி விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
நன்றாக கிரேவி கொதித்து, மட்டன் வெந்ததும் சிறிது மிளகு தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவிவிட்டு இறக்கவும்.
சுவையான கடாய் மட்டன் கறி தயார்.
பரோட்டா உடன் பரிமாறவும்.



 மட்டன் சுவரொட்டி பெப்பர் ஃப்ரை

தேவையான பொருட்கள்

சுவரொட்டி - 2
சின்ன வெங்காயம் - 30
நல்லெண்ணை - 3 டேபிள் ஸ்பூண்
பெப்பர் பொடி - 2 டீஸ்பூண்
உப்பு - தேவைக்கு

செய்முறை

1.சுவரொட்டியை 4 நிமிடம் வெது வெதுப்பான நீரில் போட்டு மேலே உள்ள தோல் உரித்து சுத்தம் பண்ணி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2.சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
3. இரும்பு கடாய் அடுப்பில் வைத்து ( தீ ஸிம்மில் வைத்துக் கொள்ளவும்) நல்லெண்ணை விட்டு சூடானதும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4.வெங்காயம் வதங்கியதும் சுவரொட்டியை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
5. தேவைக்கு உப்பு சேர்த்துக் கொடுக்கவும்.
6.பெப்பர் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.
7.தண்ணீர் சேர்க்கக் கூடாது. அந்த எண்ணையிலேயே வதங்க வேண்டும்.
8.ஒரு மூடி வைத்து மூடி 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
9.சுவரொட்டியை சமைக்கும் போது தீயை கடைசி வரை ஸிம்மில் வைத்து தான் சமைக்க வேண்டும்.



பாய்வீட்டு கறி சால்னா(மட்டன் சால்னா )

தேவையான பொருட்கள்

மட்டன் -1/2 கிலோ
சின்ன வெங்காயம் -50கிராம்
இஞ்சி பூண்டு விழுது -4டீஸ்பூன்
எண்ணெய்-2டீஸ்பூன்
தக்காளி -3
தயிர் -3டீஸ்பூன்
பட்டை-1
ஏலக்காய் -2
கிராம்பு-1
அண்ணாச்சி பூ-சிறிது
மிளகு தூள் -தேவையான அளவு
மிளகாய் தூள் -1டீஸ்பூன்
மல்லி தூள் -1டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/3டீஸ்பூன்
உருளைக் கிழங்கு -2
கத்தரிக்காய்-2
பட்டைஏலக்காய் தூள் -1/2டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
தேங்காய் விழுது -1/2மூடி

செய்முறை

முதலில் கறியை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது அரைத்து வைத்து கொள்ளவும். தக்காளி நறுக்கி வைத்து கொள்ளவும்.
பின் அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை ஏலக்காய் கிராம்பு அண்ணாச்சி பூ சேர்த்து வதக்கவும்.
பிறகு அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து வதக்கவும்.
பட்டைஏலக்காய் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள் ,மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து கிளறி விடவும்.
பிறகு கறி மற்றும் தோல் நீக்கிய உருளைக் கிழங்கு சேர்த்து நன்றாக கிளறவும்.
பின் தயிர் 2கரண்டி சேர்த்து கிளறவும்.மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து குக்கர் -ஐ மூடி விசில் விடவும்.
கறி நன்றாக வெந்ததும் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து கொதிக்க விட்டு காய் வெந்ததும் தேங்காய் விழுது ஊற்றவும்.
பிறகு நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி இழை சேர்த்து இறக்கவும்.
சுவையான கறி சால்னா ரெடி!



நாகர்கோவில் ஸ்பெஷல் மட்டன் சேமியா பிரியாணி

தேவையான பொருட்கள்

வறுத்த சேமியா 1 பாக்
மட்டன் கிலோ
வெங்காயம் 2
தக்காளி 1
இஞ்சி பூண்டு விழுது 3 தே.க
கரம் மசாலா
ப.மளகாய் 3-4
மஞ்சள் பொடி 1 தே.க
கறி பொளடர் 3-4 தே.க காரத்திர்க்கு ஏற்ப கூடுதல் சேர்க்கலாம்
தேங்காய் பால் 1/2 கப்
மல்லி புதினா
நெய்
எண்ணெய்
உப்பு

செய்முறை

வானலியில் நெய் சேரத்து சேமியாவை வறுத்து வைத்துக்கொள்ளவும்
குக்கரில் எண்ணெய் ஊற்றி முழு கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, ப.மிளகாய், மல்லி புதினா இலைகளை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
வதங்கிய கலவையுடன் மட்டன், உப்பு, மஞ்சள் மற்றும் 1 மே க கறி பௌடர் சேர்த்து வேக வைக்கவும்
வெந்த மட்டனை வேறு அகலமான பாத்திரத்தில் மாற்றி, தேங்காய் பாலுடன் 3 மே.க கறி பௌடர் கலந்து மட்டனுடன் கொதிக்க விடவும்
சேமியா அளவும் கொதிக்கும் மட்டன் கறியின் தண்ணீர் அளவும் 1:2 அளவில் இருக்க வேண்டும்
வறுத்த சேமியாவை கொதிக்கும் மட்டன் கறியுடன் கலந்து மல்லி புதினா இலைகளை தூவி நன்கு கொதித்த உடன் ஸ்டவ்வை சிம்மில் ஐந்து நிமிடம் வைத்து சேமியா வெந்த உடன் இறக்கவும்
நெய்யில் வறுத்த முந்திரியால் பிரியாணியை அலங்கரிக்கவும்



செங்கோட்டை பார்டர் கடை மட்டன் மிளகு வதக்கல்

தேவையான பொருட்கள்

மட்டன்
வெங்காயம் ஒன்று
தக்காளி ஒன்று
தயிர் 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் சீரகத் தூள் ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள் 6 ஸ்பூன்
உப்பு எண்ணெய் தேவையான அளவு
இஞ்சி பூண்டு ஒரு ஸ்பூன்
பட்டை கிராம்பு சோம்பு ஏலக்காய் தாளிக்க

செய்முறை

குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு வதக்கி கொள்ளவும்

மட்டன் துண்டுகளை சேர்த்து 6 விசில் விடவும்
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கவும்
வெங்காயம் நன்கு சிவந்து பொன்னிறமானதும் வேக வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து மிளகுத்தூள் சேர்த்து மட்டன் நன்கு வெந்தூ எண்ணெய் பிரிந்ததும் பரிமாறவும்


விருதுநகர் பொரிச்ச புரோட்டா&மட்டன் கோப்தா கிரேவி

தேவையான பொருட்கள்

மட்டன்
வெங்காயம் ஒன்று
தக்காளி ஒன்று
தயிர் 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் சீரகத் தூள் ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள் 6 ஸ்பூன்
உப்பு எண்ணெய் தேவையான அளவு
இஞ்சி பூண்டு ஒரு ஸ்பூன்
பட்டை கிராம்பு சோம்பு ஏலக்காய் தாளிக்க

செய்முறை

மைதா மாவு அரை கிலோ
ஆட்டுக்கறி கொத்து கறி அரைக்கிலோ
என்னை 400 கிராம்
சோடா உப்பு ஒரு சிட்டிகை
பெரிய வெங்காயம் 2 அரைத்து கொள்ளவும்
தக்காளி 3 அரைத்துக் கொள்ளவும்
இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் தேவைக்கு
சீரகத் தூள் ஒன்றரை மேசைக்கரண்டி
மல்லித் தூள் ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் தேவைக்கு
கரம் மசாலா தூள் 2 மேஜைக்கரண்டி
கடலை மாவு 2 மேசைக் கரண்டி
கிரீம் 50 கிராம்
முட்டையின் வெள்ளை கரு ஒன்று
மல்லி செடி தேவைக்கு


பிரஷர் குக்கரில் கடுகு எண்ணெயில் சமைத்த மட்டன் குழம்பு

தேவையான பொருட்கள்

1 கிலோ - மட்டன் (சுத்தப்படுத்திக் கூடுதல் கொழுப்பு நீக்கப்பட்டது)
4 - நடுத்தர அளவுள்ள வெங்காயம்
2 - முழு பூண்டு பற்கள்
1 இன்ச் இஞ்சி
3ல் இருந்து 4 - பச்சை மிளகாய்
1 தேக்கரண்டி - மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி - சிவப்பு மிளகாய்த் தூள்
2 தேக்கரண்டி - கரம் மசாலா தூள்
7 - தக்காளி சாந்து
கொத்துமல்லி இலைகள் அலங்கரிப்பதற்காக
4 தேக்கரண்டி - கடுகு
சுவைக்கேற்ற உப்பு
1 தேக்கரண்டி - சர்க்கரை
1 இலவங்கப்பட்டை குச்சி
3ல் இருந்து 4 - பிரிஞ்சி இலை
2 - நட்சத்திர சோம்பு
கொஞ்சம் பச்சை ஏலக்காய்
1 - கருப்பு ஏலக்காய்
கொஞ்சம் முழு கருமிளகு
உருளைக்கிழங்கு - 2

செய்முறை

வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைத்துக்கொள்க.
தக்காளியை சாந்தாக அரைத்துக்கொள்க.
ஒரு பிரஷர் குக்கரில் உயர் தீயில் கடுகு எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க.
புகையும் நிலைக்கு வந்ததும், தீயை அடக்கிவிட்டு ஒட்டுமொத்த மசாலாக்களையும் சேர்க்கவும்.
வெங்காயச் சாந்து சேர்த்து சிறு தீயிலிருந்து உயர் தீ வரைக்கும் பொன்னிறமாகும்வரை சமைக்கவும்.
அடுத்து தக்காளி சாந்து சேர்த்து 7ல் இருந்து 8 நிமிடங்கள் தக்காளியின் பச்சை வாடை போகும்வரை சமைக்கவும்.
சிவப்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள் சேர்க்கவும்.
நன்றாகக் கலந்துகொள்ளவும். இந்த சமயத்தில் குழம்பு நன்றாக சமைக்கப்பட்டிருக்கவேண்டும்.
மட்டனைச் சேர்ப்பதற்கு இதுதான் சமயம், மட்டன் மசாலாக்களோடு நன்றாக வேகும்வரை வரைக்கும் கலக்கவும்.
2 கப் தண்ணீர், சுவைக்கேற்ற உப்பு சேர்க்கவும் (கிட்டத்தட்ட் 2 தேக்கரண்டி உப்பு போதுமானது).
தோலோடு உருளைக்கிழங்கைப் போடவும். மட்டனோடு உருளைக்கிழங்கு உங்களுக்குப் பிடிக்கும் என்றால்.
பிரஷர் குக்கரில் மூடியைப் போட்டு உயர் தீயில் 20 நிமிடங்கள் வேகவைக்கவும்.
அடுப்பை நிறுத்திவிட்டு பிரஷர் குறையட்டும். மட்டனை சோதிக்கவும். பிரஷர் குக்கரில் பெரும்பாலும் 20 நிமிடம் போது மட்டம் வேகுவதற்கு. ஆட்டுக்குட்டியை நீங்கள் பயன்படுத்தினால், 15 நிமிடங்களில் வெந்துவிடும். சில வயதான ஆடுகளுக்கு 30 நிமிடங்கள் தேவைப்படும், வேகுவதற்கு.
கொத்துமல்லியால் அலங்கரிக்கவும், இதை அதிகம் பயன்படுத்தி சாதத்தோடு பரிமாறவும்.
எலுமிச்சை சாறைப் பிழிந்துவிட்டு ஆவி பறக்கும் மட்டனை குக்கரிலிருந்தே நேரடியாக எடுத்து உண்டு மகிழவும்.



மார்கண்டம் சூப்/ நெஞ்செலும்பு சூப்/மட்டன் மாறெலும்பு சூப்

தேவையான பொருட்கள்

மட்டன் - மாறெலும்புத் துண்டுகள்/நெஞ்செலும்பு - 200 கிராம்
கொத்துமல்லி - 2 தேக்கரண்டி
கருமிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
இஞ்சி - 1/2 இன்சுக்கு சற்றே பெரிய துண்டு
பூண்டு பற்கள் ( பெரிய அளவிலானதை நான் பயன்படுத்தினேன்) - 4ல் இருந்து 5
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகு சுவைக்கேற்ற அளவு (உங்கள் விருப்பம்)
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி +1 தேக்கரண்டி
கொத்துமல்லி - 1 சிறிய கொத்து
தண்ணீர் - 2 கப்

செய்முறை

முதலில் மட்டனை நன்றாக தண்ணீர் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து சுத்தப்படுத்திக்கொள்ளவும். நன்றாகக் கழுவவும்.
எண்ணெய் விடாமல் கொத்துமல்லி, மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சிறுதீயில் இரண்டு நிமிடங்களுக்கு வறுத்துக்கொள்க. மசாலாப்பொருள்கள் கருகக்கூடாது. ஆறுவதற்காக எடுத்துவைக்கவும்.
வெறுமனே வறுத்த மசாலாப் பொருள்களை ஒரு மிக்சியில் 5ல் இருந்து 6 விநாடிகளுக்கு கரடுமுரடான கலவையாக அடித்துக்கொள்ளவும்.
ஒரு பிரஷர் குக்கரில், மட்டர், அரைத்தக் கரடுமுரடான மசாலாக் கலவை, மஞ்சள் தூள், உப்பு, கொத்துமல்லி, தண்ணீர் ஆகியவற்றை சேர்க்கவும். 1 தேக்கரண்டி நல்லெண்யை விடவும். குக்கரை மூடி 1 விசிலுக்கு 15 நிமிடங்களுக்கு எலும்புகள் உண்பதற்கு மிருதுவாகும்வரை சிம்மில் வேகவைக்கவும்.
திறந்து, தேவைப்பட்டால் மட்டும் மிளகுத்தூளை சேர்த்து அதன்மீது 1 தேக்கரண்டி நல்லெண்யை விடவும். சூடாகப் பரிமாறவும்!













Comments