கீரை ஊறுகாய்
தேவையான பொருட்கள்
வெந்தயக்கீரை 1 கட்டு
மல்லி இலை 1 கப்
புதினா இலை 1 கப்
சீஸனுக்கு ஏற்ற மற்றும் ஒர் கீரை 1 கப்
காய்ந்த மிளகாய் 10
இஞ்சி 1 துண்டு
எலுமிச்சை சாறு 1/2 கப்
கடுகு தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு
சீரகம் 1/2 தேக்கரண்டி
காயம் 1/4 தேக்கரண்டி
செய்முறை
கீரைகள் மல்லி புதினா சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் காயவைத்து கொள்ளவும்
இஞ்சி பூண்டு நறுக்கி எலுமிச்சை சாறு ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய் இஞ்சி பூண்டு வதக்கி நைசாக அரைத்து கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி கீரைகள் சேர்த்து நன்கு வதக்கி மசிக்கவும்
வாணலியில் ஊறுகாய் தாளிக்க தேவையான எண்ணெய் ஊற்றி கொள்ளவும்
காய்ந்ததும் கடுகு சீரகம் கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து மசித்து கீரையை சேர்த்து சிறு தீயில் கிளறவும்
எண்ணெய் மிதந்து வரும் சமயம் அடுப்பை அணைத்து கடுகு தூள் சேர்த்து இறக்கவும்
மாவடு ஊறுகாய்
தேவையான பொருட்கள்
வடுமாங்காய் 250 கிராம்
கல் உப்பு இரண்டு மேஜைக்கரண்டி
நல்லெண்ணெய் ஒரு மேஜைக் கரண்டி
கடுகு அரை டீஸ்பூன்
மிளகாய் வத்தல் 15
செய்முறை
வடுமாங்காயை கழுவி துணியால் துடைத்து வைக்கவும்
ஒருநாள் வெயிலில் வைத்து எடுக்கவும்
பின் கல் உப்பு சேர்த்து கலக்கி மூன்று நாள்கள் வைக்கவும்
மூன்று நாள் கழித்து கல்உப்பு கரையாமல் இருந்தால் இரண்டு டீஸ்பூன் தண்ணீர் கொதிக்க வைத்து சேர்க்கவும்
வானலியில் மிளகாய் வத்தல் வறுக்கவும்
அதனுடன் கடுகும் வறுக்கவும்.
மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்
அரைத்த தூளை சேரக்கவும்
பின் நல்லெண்ணெய் சேர்க்கவும்
நன்கு கலக்கி கண்ணாடி அல்லது பீங்கான் குடுவையில் போட்டு ஒருமாதம் ஊறவைத்து எடுத்தால் வடுமாங்காய் ரெடி.
தேவையான பொருட்கள்
வெந்தயக்கீரை 1 கட்டு
மல்லி இலை 1 கப்
புதினா இலை 1 கப்
சீஸனுக்கு ஏற்ற மற்றும் ஒர் கீரை 1 கப்
காய்ந்த மிளகாய் 10
இஞ்சி 1 துண்டு
எலுமிச்சை சாறு 1/2 கப்
கடுகு தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு
சீரகம் 1/2 தேக்கரண்டி
காயம் 1/4 தேக்கரண்டி
செய்முறை
கீரைகள் மல்லி புதினா சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் காயவைத்து கொள்ளவும்
இஞ்சி பூண்டு நறுக்கி எலுமிச்சை சாறு ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய் இஞ்சி பூண்டு வதக்கி நைசாக அரைத்து கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி கீரைகள் சேர்த்து நன்கு வதக்கி மசிக்கவும்
வாணலியில் ஊறுகாய் தாளிக்க தேவையான எண்ணெய் ஊற்றி கொள்ளவும்
காய்ந்ததும் கடுகு சீரகம் கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து மசித்து கீரையை சேர்த்து சிறு தீயில் கிளறவும்
எண்ணெய் மிதந்து வரும் சமயம் அடுப்பை அணைத்து கடுகு தூள் சேர்த்து இறக்கவும்
மாவடு ஊறுகாய்
தேவையான பொருட்கள்
வடுமாங்காய் 250 கிராம்
கல் உப்பு இரண்டு மேஜைக்கரண்டி
நல்லெண்ணெய் ஒரு மேஜைக் கரண்டி
கடுகு அரை டீஸ்பூன்
மிளகாய் வத்தல் 15
செய்முறை
வடுமாங்காயை கழுவி துணியால் துடைத்து வைக்கவும்
ஒருநாள் வெயிலில் வைத்து எடுக்கவும்
பின் கல் உப்பு சேர்த்து கலக்கி மூன்று நாள்கள் வைக்கவும்
மூன்று நாள் கழித்து கல்உப்பு கரையாமல் இருந்தால் இரண்டு டீஸ்பூன் தண்ணீர் கொதிக்க வைத்து சேர்க்கவும்
வானலியில் மிளகாய் வத்தல் வறுக்கவும்
அதனுடன் கடுகும் வறுக்கவும்.
மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்
அரைத்த தூளை சேரக்கவும்
பின் நல்லெண்ணெய் சேர்க்கவும்
நன்கு கலக்கி கண்ணாடி அல்லது பீங்கான் குடுவையில் போட்டு ஒருமாதம் ஊறவைத்து எடுத்தால் வடுமாங்காய் ரெடி.
கேரட் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
கேரட் 1 கப்
இஞ்சி 1 சிறிய துண்டு
எண்ணெய் 2 + 3 ஸ்பூன்
கடுகு தூள் 1/4 ஸ்பூன்
வெந்தயதூள் சிறிது
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
பெருங்காயதூள் 1 பின்ச்
கடுகு சிறிது
வினிகர் 2 ஸ்பூன்
லெமன் ஜூஸ் 1 சிறிய பழம்
செய்முறை
கேரட் தோல் நீக்கி குறுக்காக நறுக்கி நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்
இஞ்சியை நறுக்கி வைத்து கொள்ளவும் வெந்தயம் மற்றும் கடுகை அரைத்து கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி கேரட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்
பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும் பெருங்காய,மிளகாய், மஞ்சள், கடுகு மற்றும் வெந்தய தூள் சேர்த்து வதக்கவும்
பிறகு அடுப்பை அணைத்து விட்டு வதக்கிய கேரட் இஞ்சியை சேர்த்து கிளறி உப்பு வினிகர் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்
வினிகர் சேர்ப்பதால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்
பூண்டு ஊறுகாய்
தேவையான பொருட்கள்
உரித்த பூண்டு இதழ்கள்-1 கப்
புளி-1 எலுமிச்சையளவு
உப்பு-தேவைக்கு
காய்ந்த மிளகாய் தூள்-5 டீஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய்-1/2 கப்
கடுகு_1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு-1/2 டீஸ்பூன்
வறுத்து பொடிக்க:
வெந்தயம்-1/2 டீஸ்பூன்
கடுகு-1/4 டீஸ்பூன்
சீரகம்-3/4 டீஸ்பூன்
செய்முறை
புளியை நீரில் ஊறவைத்து கெட்டியாக கரைக்கவும்.வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து பொடிக்கவும்.
1 கப் பூண்டில் 3/4 கப் எடுத்து கொரகொரப்பாக அரைத்து புளி நீரில் கரைத்து வைக்கவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து மீதமுள்ள 1/4 கப் பூண்டு சேர்த்து வதக்கவும்
பூண்டு பொன்னிறமானதும் புளி கரைசலை ஊற்றி சிறுதீயில் நன்கு கொதிக்கவிடவும்.
பச்சைவாசனை அடங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய்தூள்,உப்பு,வறுத்து பொடித்த பொடி சேர்த்து கலக்கி மீண்டும் கொதிக்கவிடவும்.
எண்ணெய் பிரிந்துவரும் போது இறக்கி ஆறியதும் பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்.
வினிகர் சேர்ப்பதால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்
தக்காளி தொக்கு
தேவையான பொருட்கள்
நறுக்கிய தக்காளி 1/4 கிலோ
காரப்பொடி4 டீ ஸ்பூன்
ப.மிளகாய்2
புளி கரைசல் 1/4 கப்
பெருங்காய தூள் 1/2 டீ ஸ்பூன்
நல்ல எண்ணை 1 கரண்டி
வெந்தய தூள் 1/4 டீ ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
வற்றல் மிளகாய். 2
செய்முறை
வாணலியில் எண்ணை ஊற்றி காய விடவும்.
காய்ந்த்தும் கடுகு, 2 காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை தாளிக்கவும்
பச்சை மிளகாய் ,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் புளி கரைசல்,மி.தூள்,பெருங்காய பொடி,உப்பு சேர்த்து எண்ணை பிரியும் வரை வதக்கஙும்
இறக்கும்போது வெந்தய பொடி சேர்க்கவும்
காளான் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
200 கிராம் காளான்
2 தேக்கரண்டி கடுகு பொடி
1/2 தேக்கரண்டிவெந்தயப் பொடி
1 தேக்கரண்டி வெள்ளை எள்பொடி
2 தேக்கரண்டி தனி மிளகாய் பொடி
உப்பு தேவைக்கேற்ப
1எலுமிச்சை சாறு
3 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய்
செய்முறை
கழுவிய காளனனை துடைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காளானை போடவும்.
2நிமிடம் மட்டுமே காளானை வதக்கவும் பின் அடுப்பை அணைக்கவும்.
காளானில் கடுகுபொடி, எள்பொடி,வெந்தயப்பொடி,மிளகாய் பொடி,உப்பு சேர்த்து கலக்கவும்.
பின் எலுமிச்சை சாறு ஊற்றவும்(புளிப்பு தன்மைக்காக)
எல்லாவற்றையும் கிளறினால் நொடியில் காளான் ஊறுகாய் தயார்.
தக்காளி ஊறுகாய்
தேவையான பொருட்கள்
தக்காளி - 1/2 கிலோ
பாதி நெல்லிக்காய் அளவு புளி
காய்ந்த மிளகாய் - 10
தேவைக்கு ஏற்ப கல் உப்பு
தேவைக்கு ஏற்ப சமையல் எண்ணெய்
உடைத்த மிளகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
செய்முறை
வாணலியில் வெந்தயம் போட்டு இலேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் தக்காளி, புளி, கல் உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும்.
வேறொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி உடைத்த மிளகு போடவும். அரைத்த தக்காளி ஊற்றவும். நன்றாக கிளறவும்.
அரைத்த பவுடர் போட்டு கிளறி வதக்கவும்.
நன்றாக கொதித்து வேக விடவும்.
மூடி போட்டு வேக வைக்கவும். வெந்து கெட்டியாக இருக்கவேண்டும்.
எண்ணெய் ஊற்றி கிளறி விடவும். கெட்டியாக வரனும்.
தக்காளி ஊறுகாய் ரெடி.
உப்பு எலுமிச்சை
தேவையான பொருட்கள்
எலமிச்சம் பழம் 25
கல் உப்பு தே.அளவு
செய்முறை
15 எ.பழங்களை இரண்டாக பிளக்கவும்
பிளந்த பகுதியில் கல் உப்பு வைத்து அடைக்கவும்
அவற்றை ஒரு பீங்கான் ஜாடியில் போடவும்
மீதி பத்து பழங்களின் சாற்றை பிழிந்து உப்பு அடைத்த பழங்களின் மேல் ஊற்றவும்
ஜாடியின் வாயை ஒரு துணியால் கட்டி ஒரு வாரம் வெயிலில் வைக்கவும்
அவ்வப்போது குலுக்கி விடவும்
நன்றாக பழம் ஊறி சாறு வற்றியதும் இப்படி ஜாடியில் போட்டு வைக்கலாம்
பிரண்டை ஊறுகாய்
தேவையான பொருட்கள்
பிரண்டை - 1 கப்
புளி -1 எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் - 10
நல்லெண்ணய் - 100 மில்லி
வடகம் - தேவைக்கேற்ப
தண்ணீர் - புளி ஊற வைக்க
செய்முறை
பிரண்டை தோல் சீவி, கழுவி எடுத்ததுக்கொள்ளவும்.
புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி பிரண்டையை நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்
பின்னர் மிளகாய் வதக்கி கொள்ளவும்
மிக்ஸியில் அனைத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றீ காய்ந்ததும் வடகம் சேர்த்து பொறிந்ததும் அரைத்த கலவையை சேர்த்து 20 நிமிடம் சிறுத்தீயில் கிளரவும்
இதனை சுட சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.
Comments
Post a Comment