கீரை ஊறுகாய்
தேவையான பொருட்கள்
வெந்தயக்கீரை 1 கட்டு
மல்லி இலை 1 கப்
புதினா இலை 1 கப்
சீஸனுக்கு ஏற்ற மற்றும் ஒர் கீரை 1 கப்
காய்ந்த மிளகாய் 10
இஞ்சி 1 துண்டு
எலுமிச்சை சாறு 1/2 கப்
கடுகு தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு
சீரகம் 1/2 தேக்கரண்டி
காயம் 1/4 தேக்கரண்டி
செய்முறை
கீரைகள் மல்லி புதினா சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் காயவைத்து கொள்ளவும்
இஞ்சி பூண்டு நறுக்கி எலுமிச்சை சாறு ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய் இஞ்சி பூண்டு வதக்கி நைசாக அரைத்து கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி கீரைகள் சேர்த்து நன்கு வதக்கி மசிக்கவும்
வாணலியில் ஊறுகாய் தாளிக்க தேவையான எண்ணெய் ஊற்றி கொள்ளவும்
காய்ந்ததும் கடுகு சீரகம் கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து மசித்து கீரையை சேர்த்து சிறு தீயில் கிளறவும்
எண்ணெய் மிதந்து வரும் சமயம் அடுப்பை அணைத்து கடுகு தூள் சேர்த்து இறக்கவும்
மாவடு ஊறுகாய்
தேவையான பொருட்கள்
வடுமாங்காய் 250 கிராம்
கல் உப்பு இரண்டு மேஜைக்கரண்டி
நல்லெண்ணெய் ஒரு மேஜைக் கரண்டி
கடுகு அரை டீஸ்பூன்
மிளகாய் வத்தல் 15
செய்முறை
வடுமாங்காயை கழுவி துணியால் துடைத்து வைக்கவும்
ஒருநாள் வெயிலில் வைத்து எடுக்கவும்
பின் கல் உப்பு சேர்த்து கலக்கி மூன்று நாள்கள் வைக்கவும்
மூன்று நாள் கழித்து கல்உப்பு கரையாமல் இருந்தால் இரண்டு டீஸ்பூன் தண்ணீர் கொதிக்க வைத்து சேர்க்கவும்
வானலியில் மிளகாய் வத்தல் வறுக்கவும்
அதனுடன் கடுகும் வறுக்கவும்.
மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்
அரைத்த தூளை சேரக்கவும்
பின் நல்லெண்ணெய் சேர்க்கவும்
நன்கு கலக்கி கண்ணாடி அல்லது பீங்கான் குடுவையில் போட்டு ஒருமாதம் ஊறவைத்து எடுத்தால் வடுமாங்காய் ரெடி.

கேரட் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
கேரட் 1 கப்
இஞ்சி 1 சிறிய துண்டு
எண்ணெய் 2 + 3 ஸ்பூன்
கடுகு தூள் 1/4 ஸ்பூன்
வெந்தயதூள் சிறிது
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
பெருங்காயதூள் 1 பின்ச்
கடுகு சிறிது
வினிகர் 2 ஸ்பூன்
லெமன் ஜூஸ் 1 சிறிய பழம்
செய்முறை
கேரட் தோல் நீக்கி குறுக்காக நறுக்கி நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்
இஞ்சியை நறுக்கி வைத்து கொள்ளவும் வெந்தயம் மற்றும் கடுகை அரைத்து கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி கேரட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்
பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும் பெருங்காய,மிளகாய், மஞ்சள், கடுகு மற்றும் வெந்தய தூள் சேர்த்து வதக்கவும்
பிறகு அடுப்பை அணைத்து விட்டு வதக்கிய கேரட் இஞ்சியை சேர்த்து கிளறி உப்பு வினிகர் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்
வினிகர் சேர்ப்பதால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்
பூண்டு ஊறுகாய்
தேவையான பொருட்கள்
உரித்த பூண்டு இதழ்கள்-1 கப்
புளி-1 எலுமிச்சையளவு
உப்பு-தேவைக்கு
காய்ந்த மிளகாய் தூள்-5 டீஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய்-1/2 கப்
கடுகு_1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு-1/2 டீஸ்பூன்
வறுத்து பொடிக்க:
வெந்தயம்-1/2 டீஸ்பூன்
கடுகு-1/4 டீஸ்பூன்
சீரகம்-3/4 டீஸ்பூன்
செய்முறை
புளியை நீரில் ஊறவைத்து கெட்டியாக கரைக்கவும்.வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து பொடிக்கவும்.
1 கப் பூண்டில் 3/4 கப் எடுத்து கொரகொரப்பாக அரைத்து புளி நீரில் கரைத்து வைக்கவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து மீதமுள்ள 1/4 கப் பூண்டு சேர்த்து வதக்கவும்
பூண்டு பொன்னிறமானதும் புளி கரைசலை ஊற்றி சிறுதீயில் நன்கு கொதிக்கவிடவும்.
பச்சைவாசனை அடங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய்தூள்,உப்பு,வறுத்து பொடித்த பொடி சேர்த்து கலக்கி மீண்டும் கொதிக்கவிடவும்.
எண்ணெய் பிரிந்துவரும் போது இறக்கி ஆறியதும் பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்.
காளான் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
200 கிராம் காளான்
2 தேக்கரண்டி கடுகு பொடி
1/2 தேக்கரண்டிவெந்தயப் பொடி
1 தேக்கரண்டி வெள்ளை எள்பொடி
2 தேக்கரண்டி தனி மிளகாய் பொடி
உப்பு தேவைக்கேற்ப
1எலுமிச்சை சாறு
3 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய்
செய்முறை
கழுவிய காளனனை துடைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காளானை போடவும்.
2நிமிடம் மட்டுமே காளானை வதக்கவும் பின் அடுப்பை அணைக்கவும்.
காளானில் கடுகுபொடி, எள்பொடி,வெந்தயப்பொடி,மிளகாய் பொடி,உப்பு சேர்த்து கலக்கவும்.
பின் எலுமிச்சை சாறு ஊற்றவும்(புளிப்பு தன்மைக்காக)
எல்லாவற்றையும் கிளறினால் நொடியில் காளான் ஊறுகாய் தயார்.
பிரண்டை ஊறுகாய்
தேவையான பொருட்கள்
பிரண்டை - 1 கப் (சுத்தப்படுத்தப்பட்டது)
சிவப்பு மிளகாய் - 10 எண்ணிக்கை அல்லது காரத் தேவைக்கு ஏற்றவாறு
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு அல்லது 1 தேக்கரண்டி புளி சாந்து
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 3/4 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு
செய்முறை
பிஞ்சுப் பிரண்டைகளைத் தேர்வு செய்து இலைகளை நீக்கி நன்றாகக் கழுவிக்கொள்க. பிரண்டையின் பக்கத்தைச் சீவி/ நாரை நீக்கவும், ஒரு சிறிய கத்தியைப் பயன்படுத்தி நீக்கவும். சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும், பயன்படுத்துவதற்கு இப்போது தயார்.
அரை தேக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் விட்டு சூடுபடுத்திக்கொள்ளவும், பிரண்டை, சிவப்பு மிளகாய், புளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்க, பிறகு ஆறுவதற்கு எடுத்து வைத்துக்கொள்க.
வெந்தயத்தையும் கடுகையும் எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவைத்து அம்மி குழவியில் கரடுமுரடாக உடைத்துக்கொள்ளவும்.
பிரண்டை, சிவப்பு மிளகாய், புளியை ( புளி சாறு பயன்படுத்தில் இப்போது சேர்த்துக்கொள்ளவும்) கரடுமுரடான சாந்தாக அல்லது உங்களிடம் அம்மிக்கல் இருந்தால் கரடுமுரடானச் சாந்தாக அரைத்துககொள்ளலாம்.
ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்துகொள்ளவும், குறைவான தீயில் தோராயமாக 8 நிமிடங்களக்கு வதக்கிக்கொள்ளவும். அருமையான கலவைக் கொடுக்க, வெந்தயம் கடுகுத் தூள் சேர்த்துக்கொள்ளவும்.
குறைவான தீயில் மேலும் 4 நிமிடங்கள் சமைத்து எடுத்து ஆறவைத்து காற்றுப்புகாதப் பாத்திரத்தில் சேமிக்கவும்.
தக்காளி ஊறுகாய்
தேவையான பொருட்கள்
தக்காளி - 1/2 கிலோ
பாதி நெல்லிக்காய் அளவு புளி
காய்ந்த மிளகாய் - 10
தேவைக்கு ஏற்ப கல் உப்பு
தேவைக்கு ஏற்ப சமையல் எண்ணெய்
உடைத்த மிளகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
செய்முறை
வாணலியில் வெந்தயம் போட்டு இலேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் தக்காளி, புளி, கல் உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும்.
வேறொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி உடைத்த மிளகு போடவும். அரைத்த தக்காளி ஊற்றவும். நன்றாக கிளறவும்.
அரைத்த பவுடர் போட்டு கிளறி வதக்கவும்.
நன்றாக கொதித்து வேக விடவும்.
மூடி போட்டு வேக வைக்கவும். வெந்து கெட்டியாக இருக்கவேண்டும்.
எண்ணெய் ஊற்றி கிளறி விடவும். கெட்டியாக வரனும்.
தக்காளி ஊறுகாய் ரெடி.
காய்கறி ஊறுகாய்
தேவையான பொருட்கள்
மிக்ஸட் காய்கள் - 3/4 கப்
உப்பு -3/4 தேக்கரண்டி(கல்லுப்பு)
மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
காரப்பொடி-1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
தாளிக்க
நல்லெண்ணெய்-3 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வத்தல்- 1
கருவேப்பிலை -2 ஆர்க்கு
பச்ச மிளகாய்-1
பெருங்காயம்-4சிட்டிகை
செய்முறை
பொடியாக நறுக்கிய காய்களை பீங்கான் கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்
அதன்மேல் உப்பு காரப்பொடி மஞ்சள் பொடி தூவவும்
வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும்
மிக்ஸியில் திரிக்கவும்
இந்த பொடியையும் காய்கள் மேல் தூவவும்
கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
தாளித்ததை எண்ணெயோடு அப்படியே காய்கள் மேல் விடவும்
இரண்டு நிமிடங்கள் கழித்து கிளறிக்கொடுக்கவும்
அதிக நேரம் ஊறவேண்டியதில்லை. அரைமணி நேரம்கூட போதுமானது. பிரிட்ஜ் ல் வைத்து ஒரு வாரம் வரை பயன் படுத்தலாம்
ஆப்பிள் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
புளிப்பு ஆப்பிள். 2
மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 3 டீஸ்பூன்
கடுகு கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
செய்முறை
வாணலியில் சிறிது எண்ணெய் சூடாக்கி அதில் நறுக்கிய ஆப்பிள் வதக்கவும்.
பின்னர் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பெருங்காயத்தூள் சேர்த்து மிளகாயைக் தூள் உப்பு சேர்த்து அப்பிள் துண்டுகளையும் சேர்த்து வதக்கவும்.
அடுப்பில் இருந்து இறக்கவும். சுவையான ஆப்பிள் ஊறுகாய் தயார்.
வெங்காய ஊறுகாய்
தேவையான பொருட்கள்
வெங்காயம் 1/4கிலோ
பூண்டு 5
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
உப்பு
புளி
வெல்லம்
செய்முறை
சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கவும்
காய்ந்த வானலியில் சீரகம் மற்றும் வெந்தயம் தனியாக வறுக்கவும். இதை மிக்ஸியில் நன்றாக பொடியாக வேண்டும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்
வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்த பொடியை சேர்த்து கிளறவும்
இதனுடன் புளி கரைசல் ஊற்றி வதக்கவும்
தேவைக்கு ஏற்ற உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து நன்கு வதக்கவும். கடைசியில் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும்
திராட்சை ஊறுகாய்
தேவையான பொருட்கள்
திராட்சை-1 cup
சிவப்பு மிளகாய் தூள் - 1/2 துண்டு
மஞ்சள் தூள்-1/8 tsp
பெருங்காயம்-1 / 8 tsp
வெங்காயம் விதைகள் (வறுக்கப்பட்ட மற்றும் தூள்)
உப்பு - சுவை
எள் எண்ணெய் -2 செ
செய்முறை
துவைத்து வெட்டி திராட்சை மற்றும் தனித்தனியாக வைத்திருங்கள்
கடாயில் எண்ணெய், கடுகு விதைகள், தேங்காய் துருவல், மஞ்சள் பொடி, அஸ்பஃபீடிடா, வெந்தயம்,
நறுக்கப்பட்ட திராட்சைகளில் சேர்க்கவும், 1 நிமிடம் ஊறவைத்து சுடர் அணைக்கவும். சமைக்க வேண்டாம்
பாகற்காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
பாகற்காய் -2 (150 கிராம்)
பூண்டு -12 பல்
இஞ்சி -சிறிய துண்டு
கடுகு -1 தேக்கரண்டி
வெந்தயம் -1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் -1/2 தேக்கரண்டி
வரமிளகாய் -4
கருவேப்பிலை -சிறிதளவு
வினிகர் -2 தேக்கரண்டி
கடுகு உளுந்து -1 தேக்கரண்டி தாளிக்க
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் -1-2 தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
நல்லெண்ணெய் -தேவையான அளவு
செய்முறை
முதலில் பாகற்காயை நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.நடுவில் உள்ள விதை பகுதியை நீக்கி விடவும்.
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் நறுக்கி வைத்துள்ள பாகற்காயை சேர்த்து தண்ணீர் பதம் வற்றும் வரை வதக்கவும்.
பின்பு இதனுடன் 1-2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து கடுகு மற்றும் வெந்தயத்தை எண்ணெய் சேர்க்காமல் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
பொரித்த கடுகு மற்றும் வெந்தயத்தை மிக்சியில் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்.
பூண்டு மற்றும் இஞ்சியையும் மிக்சியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் தேவையான அளவு ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சேர்க்கவும்.
பின்பு வரமிளகாய் ,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு நன்கு வழங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்தூள், பொருங்காயத்தூள் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
பொடியாக்கி வைத்துள்ள கடுகு மற்றும் வெந்தயத்தை சேர்க்கவும்.
இப்பொழுது வதக்கி வைத்துள்ள பாகற்காயை சேர்த்து நன்கு மசாலாவுடன் கிளறி விடவும் .
பின்பு 2 தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்கு கிளறவும்.
பாகற்காய் நன்கு வதங்கி எண்ணைய் பிரிந்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
நன்கு ஊறுகாயை ஆற விட்டு பின்பு ஒரு ஏர் டைட் கண்ணாடி ஜாரில் போட்டு வைத்து உபயோகிக்கவும்.
சுவையான எளிதில் செய்யக்கூடிய பாகற்காய் ஊறுகாய் தயார்.
பாகற்காய் ஊறுகாய்
எலுமிச்சை ஊறுகாய்
எலுமிச்சை 10
மஞ்சப்பொடி சிறிது
1 டேபிள் ஸ்பூன் காரப்பொடி
1 டேபிள் ஸ்பூன் சக்கரை
1 டேபிள் ஸ்பூன் உப்பு & எண்ணைய் 2 ஸ்பூன்
கடுகு சிறிது
பெருங்காய பொடி கொஞ்சம்
செய்முறை
கொதிக்கும் வெந்நீரில் மஞ்சபொடி எலுமிச்சை போடவும்.
ஆறியதும் சிறிய துண்டங்களாக நறுக்கவும்
கொடுத்துள்ள சாமான்களை போட்டு தண்ணீரை மேலாக கொட்டி விடவும்.
அடியில் உள்ள மஞ்சபொடி சேர்க்கவும்
எண்ணையில் கடுகு பெருங்காயம் தாளிக்கவும்
கேப்ஸிகம் ஊறுகாய்
எலுமிச்சை ஊறுகாய்
பச்சை குடைமிளகாய் 2
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் 3/4 ஸ்பூன்
வினிகர் 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
கடுகு 1/4 ஸ்பூன்
சோம்பு 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி 1/2 ஸ்பூன்
வெந்தயம் சிறிது
சீரகம் 1/4 ஸ்பூன்
எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
குடை மிளகாயை கழுவி துடைத்து நீளவாக்கிலோ பொடியாகவோ அரிந்து கொள்ளவும்
உப்பு சேர்த்து 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்கவும்
கடுகு சோம்பு வெந்தயம் சீரகம் வெந்தயம் கொத்தமல்ஸி வறுத்து பொடி செய்து கொள்ளவும்
பிறகு அடிபகுதியில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி மிளகாயை தனியே பிரிக்கவும்
அதனுடன் மஞ்சள் அரைத்த பொடி மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்
எலுமிச்சை சாறு வினிகர் சேர்த்து கலக்கி ஸ்டோர் செய்யவும்
பாவக்காய் ஊறுகாய்
எலுமிச்சை ஊறுகாய்
பாவக்காய் -2
நல்லெண்ணெய் -100 கிராம்
மிளகாய் தூள் -காரத்திற்கு ஏற்ப
வெந்தைய பவுடர் -2 டீ ஸ்பூன்
பெருங்காய பவுடர் -1 டீ ஸ்பூன்
கடுகு -1 ஸ்பூன்
கல் உப்பு -சுவைக்கேற்ப.
வினிகர் -150 ml
செய்முறை
பாவக்காயை நன்றாக கழுவி துடைத்து விட்டு அதை நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட்டு பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும் .அதை ஈரம் இல்லாத ஒரு பாத்திரத்தில் விட்டு அதோடு கல் உப்பை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
ஒரு 10 நிமிடங்கள் கையால் பிசைந்து விட்டு ,அதை அப்படியே ஒரு நாள் மூடி போட்டு வைத்து விட வேண்டும் .கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தல் மிக நல்லது.
மறுநாள் ,ஒரு கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ,அதில் கடுகை போட்டு பொரிய விடவும் .
அடுப்பை சிம்-இல் வைத்து அதில் பெருங்காய தூள் ,வெந்தைய தூள் இவற்றை போட்டு பொரிந்ததும் அதில் மிளகாய் தூள் போட வேண்டும். மறு நிமிடமே ஊற வைத்துள்ள பாவக்காயை போட்டு சில நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.
பாவக்காய் ஒரு அளவு வதங்கியதும் ,அதில் வினிகரை ஊற்றவும்.
அடுப்பை சிம்-இல் வைத்து வினிகர் வற்றும் வரை நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
வினிகர் முழுவதும் வற்றி எண்ணெய் ஊறுகாயில் இருந்து பிரிந்து வர தொடங்கும். நன்கு ஊறுகாய் பதத்திற்கு வந்ததும் ,அடுப்பில் இருந்து இறக்கி ,ஆறவைத்து மீண்டும் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும்.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஊறியதும் எடுத்து உபயோக படுத்தலாம்.
ஜாதிக்காய் ஊறுகாய்
ஜாதிக்காய் 10
வெள்ளைப்பூண்டு 2
இஞ்சி தேவையான அளவு
கறிவேப்பிலை தேவையான அளவு
பெருங்காயம் ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள் 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் 5 ஸ்பூன்
வற்றல் மிளகாய் 5
வினிகர் சிறிதளவு
செய்முறை
முதலில் ஜாதிக்காயை தோலை நன்றாக சுத்தப்படுத்தி சிறிது சிறிதாக வெட்டி வைத்து அதனை சூடு வெள்ளத்தில் கழுவவும்.
நன்றாக ஜாதிக்காயில் தண்ணீர் போகும்படி உலர்த்தி வைத்து எடுக்கவும்.
பின்பு அடுப்பில் கடாயை நன்றாக சூடேறியதும் அதில் எண்ணெய் விடவும்.
பின்பு அதில் வற்றல் மிளகாய் இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை கடுகு இட்டு நன்றாக வதக்கவும்.
பின்பு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு காயம் இதெல்லாம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்பு அதனுடன் ஜாதிக்காய் விட்டு நன்றாக கிளறவும்.
நன்றாக ஜாதிக்காய் வதங்கியவுடன் அதனுடன் தேவையான அளவு சிறிதளவு வினிகர் விடவும்.
பேரிச்சம்பழ ஊறுகாய்
பேரிச்சம்பழம் - 50 கிராம்
இஞ்சி - 1
பூண்டு - 7 பல்
புளி எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 5
கரிவேப்பிலை சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம்- 1/2 தேக்கரண்டி
வெல்லம் - 1 மேஜைக்கரண்டி
தேங்காய் எண்ணெய்- 3 மேஜைக்கரண்டி
செய்முறை
பேரிச்சம்பழத்தை விதை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு , பச்சை மிளகாய் ஆகியவற்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்
புளியை வெந்நீரில் கரைத்து வைக்கவும் . தேவையான பொருட்களை தயாராக வைத்துக்கொள்ளவும்
வானளியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்
அதில் கடுகு சேர்த்து, வெடித்ததும் வெந்தயம் சேர்க்கவும்
இஞ்சி, பூண்டு ,பச்சை மிளகாய், கரிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
பேரிச்சம்பழம் சேர்த்து கிளறி, உப்பு., மஞ்சள்,மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
பச்சை வாசம் நீங்கியதும், புளிக்கரைச்சலை சேர்த்து, குறைவான சூட்டில் 5 நிமிடம் வேகவிடவும்
கடைசியாக, வெல்லம் சேர்த்து, தேவைப்பட்டால் தேங்காய் எண்ணெய் சேர்த்து இரக்கவும்.
சுவையான பேரிச்சம்பழ ஊறுகாய் தயார்
சிறு நெல்லி ஊறுகாய்
சிறு நெல்லி 50எண்ணிக்கை (நடுத்தரம்)
நல்லெண்ணெய் 150 மில்லி
வர மிளகாய் 7 எண்ணிக்கை
உப்பு தேவையான அளவு
பெருங்காயப்பொடி 2டீஸ்பூன்
வெந்தயம் 2 டீஸ்பூன்
கடுகு
கறிவேப்பிலை
செய்முறை
சிறு நெல்லியை சுத்தம் செய்து நீரில் அலசி ஒரு காட்டன் துணியால் நீரைத்துடைத்து வைக்கவும்.
அதனை சிறு மத்து கொண்டு லேசாகத்தட்டி வைக்கவும்.
தட்டிய சிறு நெல்லியை ஒரு மண் சட்டியில் இட்டு தேவையான அளவு கல் உப்பு சேர்த்து இரண்டு நாள்கள் ஊற விடவும்.
இரண்டு நாட்களும் இடையிடையே கைபடாமல் குலுக்கி வைக்கவும்.
இப்பொழுது சிறு நெல்லியுடன் உப்பு ஊறிநீர் வற்றி இருக்கும்.
வர மிளகாயை நன்கு வெயிலில் உலர்த்தி காய்ந்த பின் மிக்சியில் பதபதப்பாக அரைத்து வைக்கவும்.
வெந்தயத்தைப்பதமாக வறுத்து கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்
கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் நல்லெண்ணெயை ஊற்றிக்காயவைத்து கடுகு போட்டு பொரிய விட்டு கறிவேப்பிலை சேர்க்கவும்.
உப்பில் ஊறிய சிறு நெல்லியை எண்ணெயில் சேர்த்து வதக்கவும் .
மிளகாய்த்தூள் வெந்தயத்தூள் சேர்க்கவும்.
மேலும் இருமுறை கலக்கி இறக்கி வைக்கவும்.
நன்கு ஆறிய பின் பீங்கான் ஜாடி அல்லது மண் சட்டியில் எடுத்து வைத்து பயன்படுத்தவும்.
இந்த ஊறுகாய்க்குமேல் நல்லெண்ணெய் இருக்கவேண்டும்.குறைவாக இருந்தால் மேலும் நல்லெண்ணெயை சூடு செய்து ஆற வைத்து ஊற்றி வைக்கலாம்
இந்த ஊறுகாயில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கும்
தயிர் சாதம் புளி சாதம் சாம்பார் சாதத்திற்குத்தொட்டுக்கொள்ளள மிகவும் ஏற்றது.
இந்த ஊறுகாய் சிறியநெல்லி மரம் என் வீட்டுத்தோட்டத்தில் வைத்து வளர்க்கப்பட்டு கிடைத்த சிறிய நெல்லியைக்கொண்டு தயாரிக்கப்பட்டது
கிடாரங்காய் ஊறுகாய்
கிடாரங்காய் - 2
சிவப்பு மிளகாய் - 15
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
உப்புத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 கப்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை
கிடாரங்காயைக் கழுவி, உலர்த்தி, பின்னர் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாயை வாணலியில் வறுத்துப் பொடி செய்யவும்.
நறுக்கிய கிடாரங்காய் துண்டுகளை பாட்டிலில் போட்டு உப்பு, பொடித்த மிளகாய், மஞ்சள்தூள், வெந்தயம் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.
எண்ணெய் சூடாக்கி கடுகு தாளித்து பின்னர் கிடாரங்காயில் சேர்த்து கலந்து பின் பரிமாறவும்.
நரவள்ளிகாய் ஊறுகாய்
நர வள்ளிக்காய் 1கிலோ
கொத்தமல்லி1/2படி
கடுகு1/4 ஆழாக்கு
சீரகம்1/2ஆழாக்கு
வெந்தயம்1/2ஆழாக்கு
மிளகாய்த்தூள்1/2ஆழாக்கு
உப்பு1/2ஆழாக்கு
எண்ணெய் ஒரு லிட்டர்
செய்முறை
முதலில் நர வள்ளி காய் நன்றாக கழுவி கொள்ள வேண்டும்
பின்னர் தண்ணீர் நன்றாக வடிந்தவுடன் ஒரு கட்டன் துணியில் துடைத்து கொள்ள வேண்டும்
பின்னர் அதை பாதி கட் செய்து கொட்டைகளை நிக்கி கொள்ள வேண்டும்
கொத்தமல்லி கடுகு வெந்தயம் சிரகம் அனைத்தையும் வெயிலில் காயவைத்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்
உப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
அரைத்த பொடியில் 1தேக்கரண்டி எண்ணெய் காய்ச்சி ஊற்றவும்
நன்றாக கலந்து கொண்டு சூடு ஆறியதும் ஒவ்வொரு காயிலும் பொடி யை போட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ள வேண்டும்
பின்னர் மிதி பொடி யை மேலே கொட்டி கொண்டு
வாணலியில் எண்ணெய் காய்ச்சி சூடு தணிந்ததும் அந்த எண்ணெயை காய் முழுகும் அளவு ஊற்ற வேண்டும்
இப்போது சுவையான நர வள்ளி ஊறுகாய் ரெடி
கேரட் பூண்டு ஊறுகாய்
கேரட் 3
பூண்டு 150 கிராம்
எலுமிச்சம் பழம் 3
ந. எண்ணெய் 200மிலி
மி.தூள் 1ஸ்பூன்
ம.தூள் 1ஸ்பூன்
பெருங்காயம் அரை ஸ்பூன்
பா.ருப்பு,வெந்தயம் 2ஸ்பூன்
உப்பு தே.அளவு
கா.மிளகாய் 4
கடுகு 1ஸ்பூன்
செய்முறை
கேரட்டை சிறு துண்டுகளாகவம் பூண்டை உரித்தும் வைக்கவும்
இரண்டையும் சேர்த்து அதில் மூன்று எ.பழச்சாறு பிழிந்து உப்பு சேர்த்து 4 நாட்கள் வெயிலில் வைக்கவும்
பாசி பருப்பு. வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்யவும்
கடாயில் ந. எண்ணெய் ஊற்றி கடுகு.கா.மிளகாய்.பெருங்காயம் தாளிக்கவும்
அத்துடன் மி.தூள்.ம.தூள்.வறுத்து அரைத்த பொடி சேர்ககவும்
அத்துடன் எலுமிச்சை சாறில் ஊறிய கேரட் பூண்டை சேர்த்து அடுபஅணைத்து்பை விட்டு கிளறவும்
ஆறியதும் காற்று புகாத கண்ணாடி கிண்ணத்தில் போட்டு மூடவும்
கொண்டைக்கடலை ஊறுகாய்
கொண்டைக்கடலை -1 கப்
மாங்காய் -1
உப்பு -சுவைக்கு
நல்லெண்ணெய்-1/4 கப்
கடுகு பொடி -1/2 டீஸ்பூன்
வறுத்த வெந்தயபொடி -1/2 டீஸ்பூன்
வரமிளகாய்தூள் -2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயபொடி-1/4 டீஸ்பூன்
செய்முறை
கொண்டகடலயை முதல்நாள் இரவு அல்லது 8 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
பின் ஈரம் போக துணியில் நன்றாக உலர்த்தவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.இதுதான் மிக முக்கியமானது.அப்பொழுது தான் கடலை வேகும்.
பின் நறுக்கிய மாங்காய் சேர்த்து மேலும் 5நிமிடங்கள் வதக்கவும்.
பின் உப்பு,பெருங்காயபொடி, கடுகுபொடி,மிளகாய்தூள், வெந்தயபொடி சேர்க்கவும்.
நன்றாக 5நிமிடங்கள் கிளறிய பின் இறக்கி பரிமாறவும்.
பச்சை மிளகாய் ஊறுகாய்
பச்சை மிளகாய் 15 முதல் 20
கடுகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
வெந்தயம் சிறிது
கொத்தமல்லி 1 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
ஓமம் 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
வினிகர் 1 ஸ்பூன்
லெமன் ஜூஸ் 1 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் 1/4 கப்
பெருங்காயதூள் சிறிது
செய்முறை
மிளகாயை காம்பை நீக்கி 2 அல்லது 3 துண்டாக நறுக்கி வைக்கவும்
வெறும் வாணலியில் கடுகு வெந்தயம் ஓமம் சோம்பு கொத்தமல்லி சீரகம் சேர்த்து வாசம் வர வறுத்து கொள்ளவும்
ஆற வைத்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்
அதனை நறுக்கிய மிளகாயில் சேர்த்து அதனுடன் மஞ்சள் உப்பு லெமன் பிழிந்து கலக்கவும்
பிறகு வினிகர் சேர்த்து கலக்கவும்
கடாயில் எண்ணெய் சூடு செய்து பெருங்காயதூள் சேர்த்துஆற விடவும்
பிறகு அதனை மிளகாய் கலவையுடன் சேர்த்து கிளறினால் ரெடி
அதனை பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும்
நார்த்தங்காய் ஊறுகாய்
நார்த்தங்காய் 10 நம்பர்
நல்லெண்ணெய் அரை லிட்டர்
வர மிளகாய் 10நம்பர்
வெந்தயம் 2டீஸ்பூன்
பெருங்காயம். 1டீஸ்பூன்
கறிவேப்பிலை
கடுகு
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
செய்முறை
நார்த்தங்காயின் மேல் பகுதியை நன்கு சுத்தம் செய்து ஒரு துணியால் துடைத்து வைக்கவும்.
சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து வெயிலில் காய வைக்கவும்.
உப்பு நன்கு ஊறி தண்ணீர் வற்றிய பிறகு தோல் நன்கு ஊறி விட்டதா எனப்பார்க்கவும்.
ஊறவில்லை எனில் மேலும் சிறிது கல் உப்பு சேர்த்து ஊற வைத்து வெயிலில் வைத்து எடுக்கவும்.
வர மிளகாயை நன்கு காயவைத்து கொர கொரப்பாக அரைத்து வைக்கவும்.
வெந்தயத்தை வறுத்து பொடி செய்யவும்
பெருங்காயத்தை கடாயில் வறுத்து பொடி செய்யவும்
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணையை ஊற்றி சூடுபடுத்தி கடுகு சேர்த்து பொரிந்தபின் கறிவேப்பிலை சேர்க்கவும்
உப்பில் ஊறிய நார்த்தங்காயை கடாயில் இட்டு வணக்கவும்.
இப்பொழுது மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் வெந்தயத்தூள் மஞ்சள் தூள் சேர்த்து வணக்கவும்.
கடாயை இறக்கி ஆற வைத்து பெரிய பீங்கான் ஜாடியில் இட்டு வைக்கவும்
தேவைப்படும் போது கொஞ்சமாக எடுத்து தனியே பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்.
புளி வெங்காயம் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
வெங்காயம் 1/4kg
மிளகாய் 50g
புளி நெல்லி அளவு
மிளகாய் தூள் 2ஸ்பூன்
பெருங்காயம் 1/4ஸ்பூன்
கடுகு 1/2ஸ்பூன்
வெந்தயம் 1/4ஸ்பூன்
உப்பு
நல்ல எண்ணெய் 100ml
வெல்லம் 50கி
செய்முறை
வாணலியில் கடுகு, வெந்தயம், சேர்த்து வறுத்து பொடிக்கவும்
வாணலியில் எண்ணெய் இட்டு கடுகு தாளித்து பெருங்காயம், வெங்கயம், மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
நன்கு வதங்கிய பின் கரைத்து வைத்த புளி சேர்த்து கொதிக்கவைக்கவும்
புளி வெங்காய கரைசல் பாதி வற்றிய உடன் வெல்லம், உப்பு சேர்க்கவும்
வறுத்த பொடியை சேர்க்கவும்
நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் ்
புளி வெங்காயம் ஊறுகாய் தயார்
அரநெல்லிக்காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
அரிநெல்லிக்காய் - 1/4 கிலோ
உப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கடுகு - 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணை - 2 தேக்கரண்டி
செய்முறை
சூடான நீரில் சுத்தம் செய்த நெல்லிக்காய்களை போட்டு பத்து நிமிடங்கள் வைக்கவும்.
பத்து நிமிடத்தில் வெந்து விடும். அதை தண்ணீரிலிருந்து வடிக்கவும்.
முழுதாகவும் உபயோகிக்கலாம், அல்லது துண்டங்களாகவும் வெட்டி விதைகளை எடுத்து விடலாம்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்க்கவும்.
வெடித்ததும் பெருங்காயம் சேர்க்கவும்.
அதனுடன் நெல்லியை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டவும்.
இரண்டு நிமிடத்தில் இறக்கி விடலாம்.
சுவையான ஊறுகாய் தயார். பத்திரப்படுத்தி ஒரு வாரம் வைத்திருக்கலாம்.
இனிப்பு மாங்காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
மாங்காய் 1
உப்பு (தேவைக்கேர்ப்ப)
பச்சை மிளகாய் 1
மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி
வெல்லம் 50 கிராம்
சர்க்கரை 1/2 மேஜைக்கரண்டி
எண்ணணெய் 1 மேஜைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
கருவேப்பிலை சிறிதளவு
செய்முறை
மாங்காயை கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அதனுடன் பச்சை மிளகாய், உப்பு, மிளகாய் தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து இறக்கவும்.
மற்றொரு சட்டியில் வெல்லம், சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொதிக்க விடவும்.
1 கொதி வந்ததும் வேகவைத்த மாங்காயுடன் ஊற்றி சிறிது வற்றியதும் அடுப்பை அனைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றை மாங்காயில் ஊற்றவும்..
சீனி கிழங்குடன் பரிமாறினால் சுவையோ சுவை.
காயல் ஸ்பெஷல் கறி ஊறுகாய்
தேவையான பொருட்கள்
மட்டன் ½ கிலோ
நல்லெண்ணை 200 மில்லி
கடுகு சிறிது
பூண்டு 100 கிராம்
பச்சை மிளகாய் 2 எண்ணிக்கை
கறிவேப்பிலை 1 பிடி
பெருங்காயத்தூள் 1 மேசை கரண்டி
வத்தல் தூள் 5 மேசை கரண்டி
வெந்தயத்தூள் ¼ தே கரண்டி
தக்காளி ½ கிலோ
உப்பு தேவைக்கேற்ப
வினிகர் 350 மில்லி
செய்முறை
கறியை சுத்தம் செய்து நன்கு தண்ணீரை வடிய விட்ட பின் அத்துடன் இஞ்சி பூண்டு, உப்பு,வத்தல் தூள்,கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் வினிகர் ஊற்றி வரட்டி எடுக்கவும்.
பின் வாணிலியில் நல்லெண்ணை ஊற்றி கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை,கொறு கொறுவென தட்டி வைத்த பூண்டு சேர்த்து பொறிய விடவும்
இத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்ளவும்
தக்காளியை நன்கு அடித்து அதனையும் தாளிப்புடன் சேர்த்துக் கொள்ளவும்
தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் விட ஆரம்பித்ததும் அத்துடன் வரட்டிய கறியை சேர்த்து கொள்ளவும்
பின் வத்தல் தூள்,உப்பு மற்றும் வினிகர் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
எல்லாம் சேர்ந்து எண்ணெய் விட்டதும் சிறிது வெந்தயத் தூள் போட்டு அடுப்பை உடனே அனைத்து விடவும்.
சுவையான கறி ஊறுகாய் ரெடி.
காரசாரமான காய்கறி ஊறுகாய்
தேவையான பொருட்கள்
நறுக்கிய கேரட் 1/2 கப்
நறுக்கிய பீன்ஸ் 1/2 கப்
நறுக்கிய மாங்காய் 1/2 கப்
மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் 1 தேக்கரண்டி
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
பூண்டு 10 பற்கள்
வினிகர் 1 கப்
நல்லெண்ணெய் 1 கப்
உப்பு 2 தேக்கரண்டி
எலுமிச்சை 1
செய்முறை
முதலில் கேரட் மற்றும் பீன்ஸை தோல் நீக்கி சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்
பிறகு மாங்காயையும் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கவும்
கேரட் பீன்ஸ் மற்றும் மாங்காயை அவித்து எடுத்து ஒரு துணியால் ஈரத்தை ஒற்றி எடுக்கவும்
மசாலா வகைகள் வினிகர் மற்றும் உப்போடு வேக வைத்த காய்கறிகளை சேர்த்து பிரட்டவும்
கடாயில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தோல் நீக்கிய நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
இனி மசாலா சேர்த்த காய்கறி கலவையை சேர்த்து எஞ்சிய எண்ணையை ஊற்றவும்
எலுமிச்சையை வெட்டி சாற்றைப் பிழிந்து ஊற்றவும்.
இதனை குறைந்த தணலில் எண்ணெய் ஓரத்தில் பிரிந்து வரும் வரை வேக விடவும்
நன்றாக ஆறியதும் சுத்தமான கண்ணாடி குடுவையில் போட்டு வைத்து தேவைக்கேற்ப சாப்பிடவும்

Comments
Post a Comment