இறால் (prawn)

இறால் 65

தேவையான பொருட்கள்

இறால் 1/2 கிலோ
சோள மாவு 25 கிராம்
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
கலர் பொடி சிட்டிகை
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

இறால் சுத்தம் செய்து கொள்க.
இறால் உடன் சோள மாவு ,மிளகாய் பொடி ,கலர் பொடி , இஞ்சி பூண்டு விழுது, உப்பு சோ்க்கவும் நன்கு கலக்கவும்.
அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

இறால் வடை

தேவையான பொருட்கள்

இறால் -200 கிராம்
பொரிகடலை மாவு - 5-6 தேக்கரண்டி
தேங்காய் - 1/4 கப்
வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் -3
முட்டை -1
சீரகம் -1/2தேக்கரண்டி
பெருஞ்சீரகம்-1 தேக்கரண்டி
மிளகு -1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை -சிறிதளவு
மல்லி இலை - சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை

முதலில் இறாலை நன்கு கழுவி மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும் .
பின்பு தேங்காய் துருவல்,சீரகம்,பெருஞ்சீரகம் ,மிளகு சேர்த்து பொடியாக்கி அதனை தனியாக எடுத்துக்கொள்ளவும்.
இப்பொழுது வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த இறால்,தேங்காய்,வெங்காயம் ,முட்டை,சிறிதளவு கருவேப்பிலை ,மல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் பொரிகடலை மாவு சேர்த்து நன்கு வடை பதத்திற்கு பிசைந்துக்கொள்ளவும் .
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறு சிறு உருண்டைகளாக தட்டி எண்ணெய்யால் பொரித்து எடுக்கவும்.
இப்பொழுது சுவையான மொரு மொருப்பான இறால் வடை தயார்.


இறால் வாடா

தேவையான பொருட்கள்

அரிசி மாவு -1 கப்
தேங்காய் - 1/4 கப்
இறால்- 6-8(பெரியது பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.)
சாதம்- 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -2
மாசி பொடி ( Dried tuna fish)-2 தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை

முதலில் சாதத்தை சிறிதளவு மஞ்சள் தூள் தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,2 தேக்கரண்டி தேங்காய் துருவல்,அரைத்த சாதம் உப்பு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு இடியாப்பம் மாவு போல் பிசைந்து கொள்ளவும் .

இப்பொழுது வாடா செய்ய மாவு தயார்.மாவை 10 நிமிடங்கள் ப்ரிட்ஜில் வைக்கவும் .

உள் அடக்கம் செய்ய அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் ,பச்சை மிளகாய் ,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கவும் .

பின்பு இதனுடன் தேங்காய் துருவல்,மாசி பொடி சேர்த்து இலேசாக வதக்கி அடுப்பில் இருந்து இறக்கவும் .

இப்பொழுது உள் அடக்கம் தயார்.

ஒரு ஈரமான துணியில் மாவினை கையால் வட்டமாக தட்டிக்கொள்ளவும்.

உள் அடக்கத்தை ஒரு வட்டமான மாவில் வைக்கவும் .

மற்றொரு தட்டிய மாவை வைத்து உஉள் அடக்கம் வைத்த மாவை மூடவும் .பின்பு அதை கையால் லேசாக அமுக்கி விடவும் .

அனைத்து மாவையும் இது போல் செய்து கொள்ளவும் .

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு எண்ணெய்யில் இருந்து எடுக்கவும் .

சுவையான மொருமொருப்பான இறால் வாடா தயார்.



இறால் ப்ரை

தேவையான பொருட்கள்

இறால் அரை கிலோ
வெங்காயம் ஒன்று
தக்காளி ஒன்று சிறியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு கால் டீஸ்பூன்
சோம்பு ஒரு டீஸ்பூன்
சீரகம் அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
என்னை நான்கைந்து செல்போன்கள்
தண்ணீர் ஒரு கப்

செய்முறை

இறால் மஞ்சள் தூள் செய்து நீரில் கழுவ வேண்டும்
ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது, அரைத்த வெங்காயம் தக்காளி சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வதக்க வேண்டும்
அரை மிளகாய்த் தூள் , மஞ்சள் தூள் , சீரகத் தூள் , சோம்பு தூள் போட்டு கிளறவும்
பின்பு இறாலை அதனுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும்
வெந்த பிறகு அதில் எண்ணெய் ஊற்றி மீதமுள்ள அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் சிறிது நேரம் கிளறவும்
சேவை செய்யும் தட்டுக்கு மாற்றி பரிமாறவும்


இறால் மசால்

தேவையான பொருட்கள்

இறால் : 1/2 கிலோ
உப்பு : தேவையான அளவு
கருவேப்பிலை : சிறிதளவு
நல்லெண்ணெய் : 4 மேஜைக்கரண்டி
கடுகு : சிறிதளவு
சின்ன வெங்காயம் : 5
பூண்டு : 5 பல்
தக்காளி : 1
மிளகாய் : 2
மஞ்சள் தூள் : 1 மேஜைக்கரண்டி
குழம்பு மசாலா : 2  மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி + மல்லி தூள் :1/2 மேஜைக்கரண்டி )
அரைக்க :
தேங்காய் துருவல் : 4 மேஜைக்கரண்டி
சோம்பு : 1 மேஜைக்கரண்டி

செய்முறை

இறாலை சுத்தம் செய்து வைக்கவும் . பூண்டினை இடித்து வைத்து கொள்ளவும் . அரைக்க கொடுத்ததை அரைத்து வைத்து கொள்ளவும் .
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , கருவேப்பிலை தாளித்து பின் சின்ன வெங்காயம் ,தக்காளி,மிளகாய் நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்
மிளகாய் தூள், மல்லி தூள் (அல்லது  குழம்பு மசாலா ) மஞ்சள் தூள் , உப்பு  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் ( தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்)
பின் இறால் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
பின் இறால் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்
பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கிளறி கொண்டே ( 5 நிமிடம் ) இருக்கவும் .தேவையான பதத்தில் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்


இறால் ஃப்ரை

தேவையான பொருட்கள்

இறால் 1/4கிலோ
இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள்ஸ்பூன்
கார்ன்ப்ளவர் மாவு 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் ஒரு பின்ச்
மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

இறால் துண்டுகளை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்
பாத்திரத்தில் இறால் துண்டுகள் உப்பு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது கான்பிளவர் மாவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பிறகு சிறிது நேரம் ஊற விடவும்
ஊறிய இறால் துண்டுகள் குச்சியில் குத்தி தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து பரிமாறலாம்
சுவையான இறால் ஃப்ரை தயார்



இறால் தொக்கு

தேவையான பொருட்கள்

இறால் : 100 கிராம்
வெங்காயம் : 3
தக்காளி : 2
பச்சை மிளகாய் : 2
ரம்ப இலை : 1 ( optional)
இஞ்சி பூண்டு விழுது : 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் : 2 தேக்கரண்டி
ஜீரக தூள் : 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : 1/4 தேக்கரண்டி
எண்ணெய் : 2 மேசைக்கரண்டி
உப்பு : தேவைக்கேற்ப

செய்முறை

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரம்ப இலை சேர்க்கவும்..
பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்...
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்...
நன்றாக வதங்கி பச்சை வாசனை போன பின் பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்...
பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், ஜீரகதூள் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாக கிளறிய பின் இறால் சேர்க்கவும்...
இறால் சேர்த்து மெதுவாக கிளறி சிறிது தண்ணீர் சேர்த்து சிம்மில் வேக விடவும்...
இறால் நன்றாக வெந்ததும் இறக்கி சூடாக பறிமாறவும்...
இது சப்பாத்திக்கும் சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்...


இறால் கூட்டு

தேவையான பொருட்கள்

இறால் ஒரு கிலோ வாங்கி உரித்தது
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் -2
பொடியாக நறுக்கிய தக்காளி -2
பச்சை மிளகாய் நறுக்கியது -2
மல்லி,கருவேப்பிலை நறுக்கியது சிறிது
இஞ்சி பூண்டு விழுது -1+1 தேக்கரண்டி
கரம் மசாலா -1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய்த்தூள்-1+1 தேக்கரண்டி
சீரகத்தூள் -1/2 தேக்கரண்டி
சோம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு.

செய்முறை

சுத்தம் செய்து அலசி நீர் வடித்து வைத்த இறாலுடன் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள்,ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, சுவைக்கு உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கருவேப்பிலை, இஞ்சி பூண்ட விழுது சேர்த்து, பிரட்டி வைத்த இறால் சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் வற்றியவுடன் மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய், உப்பு சேர்த்து பிரட்டவும்.
அதன் மீது ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள், சீரகம்,சோம்புத்தூள் தலா அரை தேக்கரண்டி,கால் தேக்கரண்டி கரம் மசாலா சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விடவும்.அடுப்பை மீடியமாக வைக்கவும்.எல்லாம் சேர்ந்து கூட்டு போல் கெட்டியாகி வரும்.எண்ணெய் மேலே வரும்.
நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.
சுவையான இறால் கூட்டு தயார். விரும்பிய உணவுடன், பக்க உணவாகப் பயன்படுத்தவும்.



இறால் மசியல்

தேவையான பொருட்கள்

எண்ணெய் 4 tbsp
ஏலக்காய் பட்டை கிராம்பு சோம்பு 2
பெரிய வெங்காயம் 1
தக்காளி 2
இஞ்சி பூண்டு விழுது
மஞ்சள் தூள் 1tsp
மிளகாய் தூள் 1tsp
குழம்பு மிளகாய் தூள் 1tsp
கரம் மசாலா 1tsp
இறால் 150 கிராம்

செய்முறை

எண்ணெய் ஊற்றி அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சேர்த்து வதக்கவும்

அதில் வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்
அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்

பிறகு 150 கிராம் இறால் சேர்த்து வதக்கவும்
அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்

எடுத்து வைத்த மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்
தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 5நிமிடம் முடி வைத்து சமைக்கவும்

மல்லி இலை தூவி இறக்கவும்




இறால் புலாவ்

தேவையான பொருட்கள்

இறால் 1 கிலோ
வெங்காயம் 2
தக்காளி 2
பச்சை மிளகாய் 4
கிராம்பு, பட்டை, ஏலக்காய் சிறிது
நெய் 2 மேசைக்கரண்டி
தயிர் 1 கப்
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 3 மேசைக்கரண்டி
பெருஞ்சீரகத் தூள் 3 மேசைக்கரண்டி
மல்லி தூள் 3 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது 2 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு சிறிது
உலர் திராட்சை சிறிது
உப்பு

செய்முறை

முதலில் இறாலை மசாலா கலவையில் 1 மணி நேரம் ஊற வைக்கவும் ( மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருஞ்சீரக தூள், உப்பு, தயிர் மற்றும் இஞ்சி பூண்டு விழுது)
பின் பாத்திரத்தில் நெய் விட்டு கிராம்பு, பட்டை ஏலக்காய் பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
பின் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் பின் சிறிது மல்லி இலை சேர்கவும்
பின் 1 1/2 கப் தண்ணீர் வீதம் .. 2கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 மேசைக்கரண்டி பெருஞ்சீரக தூள்,2 தேக்கரண்டி மல்லி தூள் , கரம் மசாலா ,உப்பு சேர்த்து கொதித்ததும் குறைந்த தீயில் அரிசி சேர்த்து வேக விடவும்
அதனிடயில் இறாலை முக்கால் பருவத்தில் பொரித்து எடுக்கவும்
பின் கடாயில் நெய் விட்டு முந்திரி, உலர் திராட்சை மற்றும் வெங்காயம் பொரித்து எடுக்கவும்.
அரிசி வெந்ததும் அதன் மேலே இறால் , முந்திரி பருப்பு, பொரித்த வெங்காயம், உலர் திராட்சை, மல்லி இலை தூவி 5 நிமிடம் தம்மில் போட்டு இறக்கவும்


இறால் சால்னா

தேவையான பொருட்கள்

இறால்- 1/4கி
வெங்காயம்- 2
தக்காளி-2
பச்சை மிளகாய்- 2
கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிது
முருங்கைக்காய்- 3 துண்டுகள்
தேங்காய்- 1/4 மூடி அரைத்தது
பட்டை கிராம்பு ஏலக்காய் சிறிது
இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்
மஞ்சள் தூள், மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
கறி மசாலா தூள்- 4 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தண்ணீர் (வேணுமானால்)
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கிளறவும் பின்னர் அதனுடன் நறுக்கிய வெங்காயம் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளி பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறவும். பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள அணைத்து மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் அதனுடன் இறால் துண்டுகள், முருங்கை காய் சேர்த்து நன்றாக கிளறவும். அதனுடன் அரைத்த தேங்காய் பால் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான இறால் குழம்பு தயார்.



இறால் தொக்கு

தேவையான பொருட்கள்

இறால்- 1/4கி
வெங்காயம் - 4 பொடியாக நறுக்கியது
தக்காளி - 4 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய்- 2 நிளமாக நறுக்கியது
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிது
மிளகாய் தூள்- 3 ஸ்பூன்
கரம் மசாலா தூள்- 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதனுடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், இறால் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்னர் அதை நன்றாக வதங்கியதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் அருமையான இறால் தொக்கு தயார்.


இறால் கிரேவி

தேவையான பொருட்கள்

இறால் அரை கிலோ
வெங்காயம் 6
தக்காளி-2
பூண்டு விழுது 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 சிட்டிகை
மிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன்
பெப்பர் தூள் 2 டேபிள்ஸ்பூன்
தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு தலா ஒன்று
மல்லி இலை 1 பின்ச்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

இறாலை சுத்தம் செய்து கொள்ளவும் வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும் பிறகு
இறால் துண்டுகள் உப்பு சேர்த்து வேகவிடவும் அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்
நன்கு வெந்தவுடன் கொத்துமல்லி இலை தூவி பரிமாறலாம்


இறால் தொக்கு

தேவையான பொருட்கள்

இறால் ஒரு கப்
வெங்காயம் 3
தக்காளி-2
இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
மல்லி தூள் அரை டீஸ்பூன்
கரம் மசாலா தூள் அரை டீஸ்பூன்
பெப்பர் தூள் ஒரு ஸ்பூன்
தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு
எண்ணை தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக

வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து வதக்கவும்

பிறகு இறால் சேர்த்து கிளறவும்

இறால் ஓரளவு வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் தனியா தூள் சேர்த்து வேக வைக்கவும்

கடைசியாக பெப்பர் தூள் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்
சுவையான இறால் தொக்கு தயார் சைட் டிஷ்ஷாக சாப்பிட சுவையாக இருக்கும்


இறால் பாஸ்டா

தேவையான பொருட்கள்

பாஸ்ட 250 grams
இறால் 150
வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
தக்காளி 1 பொடியாக நறுக்கியது
காய்கறிகள் 150 கிராம்( கேரட், பீன்ஸ்,பச்சை பட்டனி ,கான்)
சிவப்பு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
மல்லி தூள் அரை டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தக்காளி பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப் பால் நான்கு கப் தண்ணியாக

செய்முறை

குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்க்கவும்
வெங்காயம் மற்றும் தக்காளி வதங்கியதும் தக்காளி பேஸ்ட் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் அதில் சேர்த்து கிளறவும்

பின் அதில் காய்கறிகள் மற்றும் இறால் சேர்த்து கிளறி விடவும்
பிறகு சிவப்பு மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 முதல் 3 நிமிடம் கிளறவும்

பின்னதில் பாஸ்டா, மல்லி இலை, தேங்காய் பால் சேர்க்கவும்

6 முதல் 8 விசில் வரை போட்டு இறக்கவும்

சுவையான இறால் பாஸ்டா ரெடி



இறால் ஊறுகாய்

தேவையான பொருட்கள்

இறால் - 100 கிராம்
இஞ்சி -சிறிதளவு
பூண்டு -20
கடுகு - 2 தேக்கரண்டி
வெந்தயம் -1/2 தேக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள்-1/2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - தேக்கரண்டி
வரமிளகாய் -5-6 (காரத்திற்கு ஏற்ப )
வினிகர் -சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் இறாலை நன்கு கழுவி அதனுடன் மஞ்சள்தூள்,மிளகாய்தூள்,உப்பு சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .

வரமிளகாயை வினிகர் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .

அடுப்பில் கடாயை வைத்து கடுகு,வெந்தயம் ,சீரகம் சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும் .

இப்போது மிக்சியில் ஊறிய வரமிளகாய் ,இஞ்சி ,பூண்டு ,கடுகு ,வெந்தயம்,சீரகம் போட்டு சிறிதளவு வினிகர் உற்றி மையாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தும் ஊறிய இறால்களை போட்டு பொறித்து எடுத்துக்கொள்ளவும்.

அதே எண்ணெய்யில் கடுகு,கருவேப்பிலை,பூண்டு சேர்த்து வதக்கி ,உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும் .

மசாலா நன்கு வதங்கியதும் அதனுடன் பொறித்த இறாலை சேர்த்து நன்கு வேகவிடவும்.

5-10 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி சூடு ஆறியதும் ஒரு பாட்டிலில் போட்டு வைக்கவுற.

சுவையான இறால் ஊறுகாய் தயார் .இட்லிஊ,தோசை ,சாதத்திற்கு இந்ந ஊறுகாய் அருமையாக இருக்கும் .



இறால் கட்லெட்

தேவையான பொருட்கள்

பெரிய இறால் : 10
உருளைக்கிழங்கு : 2
வெங்காயம் : 1
மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி
உப்பு : தேவைக்கேற்ப
மிளகு தூள் : 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா : 1/2 தேக்கரண்டி
முட்டை : 1
ப்ரெட் க்ரம்ப்ஸ் : 1/2 கப்
எண்ணெய் : பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

கடாயில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் இறாலை சேர்த்து 15 நிமிடம் வதக்கவும்...
இறாலை நன்றாக வேக விடவும்..
உருளைக்கிழங்கையும் நன்றாக வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்...
இறாலை மிக்ஸியில் பேஸ்டாக அரைத்து கொள்ளவும்...
கடாயில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்..
பிறகு அதில் இறால் சேர்த்து வதக்கி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்...
.

அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக பிசைந்து கட்லெட் வடிவத்தில் பிடிக்கவும்...

முட்டையில் சிறிது உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலக்கவும்..
கட்லெட்களை ஒவ்வொன்றாக முட்டையில் தோய்த்து ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
அவ்வளவு தான். மிகவும் சுவையான ஈசியாக செய்ய கூடிய இறால் கட்லெட் ரெடி!!!!


இறால் கோஃப்தா

தேவையான பொருட்கள்

பெரிய இறால் : 10
தேங்காய் : 1 மூடி
இஞ்சி பூண்டு விழுது : 1 தேக்கரண்டி
பொட்டு கடலை : 1 தேக்கரண்டி
முட்டை : 1
வெங்காயம் : 1
பச்சை மிளகாய் : 2
மஞ்சள் தூள் : 1/4 தேக்கரண்டி
ஜீரக தூள் : 1/2 தேக்கரண்டி
உப்பு : 1 தேக்கரண்டி அல்லது ருசிக்கேற்ப

செய்முறை

மேலே கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரில் இட்டு பேஸ்ட்டாக அரைக்கவும்...
தண்ணீர் ஊற்றக்கூடாது...
வடை மாவை விட கொஞ்சம் மிருதுவாக இருக்கவேண்டும்...
ஃப்ரையிங் பானில் எண்ணெய் ஊற்றி வடைகளை போல் சிறிது சிறிதாக தட்டி இடவும்...
நன்றாக பொன்னிறமானபின் எடுக்கவும்...
சுவையான மிகவும் ஈசியான இறால் கோஃப்தா தயார்!!!


இறால் பட்டியா

தேவையான பொருட்கள்

இறால் அரை கிலோ
தேங்காய் அரை மூடி
பூண்டு 10 பற்கள்
மிளகாய் வத்தல் 10
இரண்டு பெரிய வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்
மிளகாய்த் தூள் தேவைக்கு
மஞ்சள் தூள் சிறிது
கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன்
சீனி அரை டீஸ்பூன்
தாளிக்க சிறிது சோம்பு
நல்லெண்ணை அல்லது கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் 100 கிராம்
தக்காளிப்பழம் சிறியதாக 1

செய்முறை

தேங்காய் சீரகம் பூண்டு மிளகாய் வத்தல் நன்கு அரைத்துக் கொள்ளவும்

இறாலை கழுவி வைக்கவும்

அடுப்பில் வாணலியை வைத்து கருவேப்பிலை அரைத்த வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்

பின் மிக்ஸியில் அரைத்த மசாலா மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சீரகத்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்

உப்பு சேர்த்து இறாரை ஐந்து நிமிடம் நன்கு வதக்கவும்

ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சிறிது சீனி சேர்த்து வதக்கவும்

நீர் வற்றி மசால் சுருண்ட உடன் அடுப்பை அணைக்கவும் இறால் பட்டியா ரெடி

நான் புல்கா சப்பாத்தி ரொட்டி சாதம் அனைத்திற்கும் ஏற்ற சைட் டிஷ் ஆக இருக்கும்


இறால் சக்கோலி

தேவையான பொருட்கள்

அரிசி மாவு 2 கப்
இறால் 1/2 kg
தேங்காய் 1 கப்
கிராம்பு, பட்டை ஏலக்காய் சிறிது
வெங்காயம் 2
தக்காளி 2
பச்சைமிளகாய் 4
உப்பு தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 2 மேசைக்கரண்டி
பெருஞ்சீரக தூள் 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் 2 தேக்கரண்டி
தண்ணீர் 6 கப்
எண்ணெய் 2 தேக்கரண்டி

செய்முறை

3 கப் தண்ணரில் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.கொதித்த பின்னர் 2கப் அரிசி மாவை நன்றாக கலந்து கொள்ளவும் கட்டியான சப்பாத்தி மாவு பதத்தில் கிண்டி எடுக்கவும்

அதை சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வைத்து வேக வைத்து எடுக்கவும்
இறால் கறி செய்முறை:
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிராம்பு, பட்டை ஏலக்காய் பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது,உப்பு சேர்க்கவும் பின் இறால் சேர்த்து 3 விசில் வந்ததும் மசாலாக்களையும் போட்டு கொதிக்க விடவும்

மசாலா தயாரிக்கும் முறை:
மிக்ஸியில் தேங்காய் ,கிராம்பு, பட்டை, ஏலக்காய் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் பெருஞ்சீரக தூள் சேர்த்து பர பர என்று அரைத்து எடுக்கவும்  
இது ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவும்இதில் வேகவைத்த அரிசி மாவு உருண்டைகளை போட்டு கொதிக்க வைக்கவும்.பிறகு மட்டன் கறியை இதில் சேர்க்கவும்பாத்திரத்தை மூடி வைத்து கொதிக்க வைக்கவும்
வெந்தயம், கருவேப்பிலை, சின்ன வெங்காயம் போட்டு தாளித்து மேலே ஊற்றவும்.



இறால் குழம்பு 

தேவையான பொருட்கள்

இறால் 1 கப்
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
தனியா தூள் 2 ,ஸ்பூன்
உப்பு
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
வெங்காயம் ,1
தக்காளி 2
கடுகு
கரிவேப்பிலை
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
சோம்பு 1 ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிது

செய்முறை

இறாலை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் உப்பு சேர்த்து ஊர விடவும்.
ஜாரில் வெங்காயம் தக்காளி பட்டை கிராம்பு மிளகு சீரகம் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு மையாக அரைக்கவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
அரைத்த கலவையை அதனுடன் சேர்க்கவும்...நன்குவேக விடவும்.
தேவையானா அளவுநீர் சேர்க்கவும்.இறால் சேர்க்கவும்.எண்ணெய் பிரிந்தால் குழம்பு ரெடி....


இறால் ஊறுகாய் 

தேவையான பொருட்கள்

இறால் தேவையான அளவு
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
சின்ன வெங்காயம் 10
வினிகர் 3ஸ்பூன்
கால் ஸ்பூன் வெந்தயம்
நல்லெண்ணெய் தேவையான அளவு

செய்முறை

இறாலை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்

மெசேஜ் அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் வெந்தயம் தவிர்த்து வினிகர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

கடாயில் நல்லெண்ணெய் விட்டு அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்

இறாலை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வேக விடவும்

ஆறு மாதம் வரை ஆனாலும் கெட்டுப் போகாத இறால் ஊறுகாய் தயார்


வெண்ணெய் இறால்

தேவையான பொருட்கள்

இறால் 500 கிராம்
விருப்பப்பட்டால் முட்டை மஞ்சள் கரு 2
வெண்ணெய் 2 மே. கரண்டி
பால் 1/2 கப்
பூண்டு 5 பற்கள்
ப. மிளகாய் 5
கறிவேப்பிலை 3 இணுக்கு
மிளகுத்தூள் 1 தே. கரண்டி
உப்பு தே. அளவு

செய்முறை

இறால் தலையில் முட்களை வெட்டி, பின்னால் கீறி சுத்தம் செய்து கொள்ளுங்கள். / உங்கள் விருப்பம்போல் தோலை நீக்கி சுத்தம் செய்துகொள்ளலாம்.

முட்டை மஞ்சள் கருவை அடித்துக்கொள்ளவும்
வாணலியில் 1/2 கப் எண்ணெய், 1 மே. கரண்டி வெண்ணெய் போட்டு உருக்கி சூடேறியதும் குழம்பு கரண்டியால் வட்டமாக எண்ணெயை சுற்றவும்

இடது கையால் முட்டையை உயரமாக தூக்கிப் பிடித்து மெதுவாக எண்ணெயில் ஊற்ற, வலது கையில் கரண்டியால் வட்டமாக கிளறி வேக வைக்கவும்

பொன்னிறமாக வந்ததும் எடுத்து எண்ணெயை வடிகட்டிக்கொள்ளவும்

இறாலை உப்பு, 1/2 தே. கரண்டி மிளகுத்தூள் போட்டு எண்ணெயில் லேசாக நிறம் மாறும் வறை வதக்கி எடுக்கவும்

இறால் பொரித்த எண்ணெயை அப்புறப்படுத்தி அதே வாணலியில் 1 மே. கரண்டி வெண்ணெயில் பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதங்கியதும் பாலை சேர்க்கவும்

பால் கொதித்தவுடன் இறால், 1/2 தே. கரண்டி மிளகுத்தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்

பால், வெண்ணெய் நன்றாக இறாலில் ஊறி சுண்டி வந்ததும் முட்டை பொரியை தூவி பறிமாறலாம். அல்லது அப்படியே கூட பறிமாறலாம்.



இறால் பிரியாணி

தேவையான பொருட்கள்

இறால் - 2 கப் ( ஓடு நீக்கியது )
பல்லாரி - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
ஏலம் - 2
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு -2
முந்திரி - 1/4 கப்
தயிர் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மல்லி இலை - 1/4 கப்
புதினா - 1/4 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
பாஸ்மதி அரிசி - 2 கப்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை

முதலில் 6 கப் தண்ணீரில் பட்டை உப்பு கிராம்பு மற்றும் ஏலம் போட்டு அரிசியை சேர்த்து வெந்ததும் எடுத்து வைக்கவும்
நெய்யை சூடாக்கி நறுக்கி பல்லாரியை போட்டு பொறிந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும்
மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்
இப்பொழுது புதினா மல்லி தயிர் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சுத்தப்படுத்திய இராலை சேர்த்து வேக விடவும்.
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி முந்திரியைப் போட்டு வறுத்தெடுக்கவும்.
இரால் வெந்ததும் வேக வைத்த அரிசி யை ஒரு பாத்திரத்தில் ஒரு கப் போட்டு க்ரேவில் அதன் மேல் கொஞ்சம் பரப்பவும்
இவ்வாறாக அனைத்தையும் போட்டு ஒரு கரண்டியை கொண்டு மெதுவாக கலந்து விட்டு மேலே முந்திரியை போட்டு பரிமாறவும்



இறால் 65 பீட்சா

தேவையான பொருட்கள்

இறால் 100 கிராம்
சோள மாவு 2 ஸ்பூன்
கலர் பொடி 1 சிட்டிகை
மிளகாய் பொடி 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1/4ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மைதா 100 கிராம்
ஈஸ்ட் 1tsp
குட மிளகாய் 1/2
தக்காளி 1/2
சீஸ் 50 கிராம்
தக்காளி சாஸ் 4 ஸ்பூன்
சர்க்கரை 1ஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்

செய்முறை

இறால் உடன் சோள மாவு ,இஞ்சி பூண்டு விழுது, கலர் பொடி , மிளகாய் பொடி போட்டு கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
எண்ணெய் சுடு செய்து அதில் இறால் போட்டு மிதமான சுட்டில் பொாித்து எடுக்கவும் .
இறால் 65 தயார்.
ஈஸ்ட்டில் சூடான தண்ணீர் விட்டு 10 நிமிடம் வைக்கவும்.
மைதா மாவு உடன் ஈஸ்ட் தண்ணீர் விட்டு ,சர்க்கரை போட்டு பிசைந்து கொள்க .
மாவில் எண்ணெய் தடவி ஈரமான துணி போட்டு மூடி வைக்கவும்
மாவை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
மாவை எடுத்து 5 இ்ஞ் வட்ட வடிவில் தேய்க்கவும் .
கத்தியால் மாவில் கிரவும் தக்காளி சாஸ் தடவவும் ,
இறால் 65வை சிறிய துண்டு களாக வெட்டவும் .
இறால் துண் டு களை பரப்பவும், அதன் மீது குட மிளகாய் பரப்பவும், தக்காளி பரப்பவும்
சீஸ் து ருவவும்
அவனை 180 டிகிரி 15 நிமிடம் முற்சுடு செய்க
ட்ரேயை வைத்து 2 நிமிடம் செட் செய்க.
பீட்சா தயார்


ட்ரை இறால் ப்ரை

தேவையான பொருட்கள்

இறால் கால் கிலோ
வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
தக்காளி 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரிப்பதற்கு தாளிப்பதற்கு
கருவேப்பிலை கொத்தமல்லி சிறிது

செய்முறை

ஒரு பாத்திரத்தில் இறால் மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும்
பிரட்டி வைத்த இறாலை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
கடாயில் எண்ணெய் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும் பின் அதில் தக்காளி பொரித்த இறால் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்தாள் ட்ரை இறால் ப்ரை ரெடி


Spicy இறால் கறி

தேவையான பொருட்கள்

பிரான் தேவையானளவு
வெங்காயம் ஒன்று தக்காளி மூன்று
தேங்காய் அரை மூடி
புளித்தண்ணீர் சிறிதளவு
பச்சை மிளகாய் 4
வெந்தயம் ஒரு ஸ்பூன,் சீரகம் ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள் 3 டீஸ்பூன,் மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
பூண்டு 4 பல்
உப்பு எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயம் கறிவேப்பிலை தாளிக்கவும்
வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
தக்காளி பழம் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்
தேங்காயுடன் சீரகம் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
மசாலா பொருட்களை சேர்க்கவும்
மசாலா பொருள்கள் பச்சை வாசனை போனதும் புளித் தண்ணீர் மற்றும் தேங்காய் அரைத்த விழுதை சேர்க்கவும்
தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
இறாலை சேர்க்கவும்
இறால் நன்கு வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்




இறால் ஸ்செஸ்வான்

தேவையான பொருட்கள்

சாஸ் செய்ய
காஷ்மீரி மிளகாய் - 1 கப்
இஞ்சி பூண்டு - 5 மேஜை கரண்டி
சர்க்கரை - சிறிது
உப்பு
சோயா சாஸ் - 2 டீஸ் ஸ்பூன்
தக்காளி விழுது - 1/4 cup
இறால் - 1/2 கிலோ
கேப்ஸிகம் - 1/2
வெங்காய தால் - 1
பச்சை மிளகாய் - 1
மிளகு தூள் - 1 டீஸ் ஸ்பூன்

செய்முறை

சாஸ் செய்ய சாஸ் பானில் 1/2 கப் தண்ணீர் விட்டு மிளகாயை சேர்த்து கொதிக்கும் வரை விடவும்
கொதி வந்தவுடன் 5 நிமிடம் சிறு தீயில் வைக்கவும்
பின்பு தண்ணிரை வடித்து விட்டு மைய அரைத்து கொள்ளவும்
கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு போட்டு செவந்ததும் மிளகாய் விழுது, சோயா சாஸ், தக்காளி விழுது, உப்பு, சர்க்கரை சேர்த்து சாஸ் பதம் வரும் வரை சிம்மில் வைக்கவும்
இது தான் ஸ்செஸ்வான் சாஸ்
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தாளில் உள்ள வெங்காயம் குடைமிளகாய் மிளகு சேர்த்து வணக்கவும்
பின்பு அதனுடன் இறால் சேர்த்து வணக்கவும் 2 நிமிடம் கழித்து தயாரித்து வைத்த சாஸ் சேர்த்து வணக்கவும்
பின்பு அதனுடன் 1/2 கப் தண்ணீர் விட்டு வேக விடவும்
தண்ணீர் வற்றியதும் வெங்காய தால் சேர்த்து பரிமாறவும்




இறால் மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்

இறால் 500 கிராம்
வெங்காயம்-2
குடைமிளகாய் ஒன்று
தக்காளி ஒன்று
தக்காளி பேஸ்ட் 2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் 4 டீஸ்பூன்
சில்லி சாஸ் 2 டீஸ்பூன்
சோயா சாஸ் ஒரு டீஸ்பூன்
மைதா மாவு 2 டேபிள்ஸ்பூன்
சோள மாவு 2 டேபிள்ஸ்பூன்
முட்டை ஒன்று
சிவப்பு மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
பூண்டு 3 பல் பொடியாக நறுக்கியது
எண்ணெய்

செய்முறை

முதலில் இறாலை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும்

பின் அதில் சோள மாவு, மைதா மாவு ,சிவப்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் முட்டை சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்

அரை மணி நேரம் ஊறவைக்கவும்

பின் அதை எண்ணெயில் பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்

அதே கடாயில் பூண்டு, வெங்காயம் ,தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்

எல்லாம் நன்கு வதங்கியதும் தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
பின் தக்காளி சாஸ், சில்லி சாஸ் ,உப்பு மற்றும் சோயா சாஸ் சேர்த்து கிளறவும்

கடைசியாக இறாலை அதில் சேர்த்து கிளறவும்

சுவையான ப்ரான் மஞ்சூரியன் ரெடி




இறால் ப்ரைட் ரைஸ்

தேவையான பொருட்கள்

இறால் - 1 கிலோ வாங்கி உரித்து வைக்கவும்.
இறாலுடன் சேர்க்க:-
இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
லெமன் ஜூஸ் பாதி பழம்
உப்பு - தேவைக்கு.
பாசுமதி அரிசி - அரைக்கிலோ
எண்ணெய் - 4 +1 மேஜைக்கரண்டி
பட்டர் - 2 மேஜைக்கரண்டி
வெங்காயம நறுக்கியது - 1
பூண்டு நறுக்கியது - 6 பற்கள்
பொடியாக நறுக்கிய காய்கறி கலவை -2 கப்
(கேரட்,முட்டைகோஸ்,பீன்ஸ்,கொடைமிளகாய்,பச்சைபட்டாணி)
சோயா சாஸ் -1 மேஜைக்கரண்டி
அஜினோமோட்டோ விரும்பினால் கால் தேக்கரண்டி
மிளகு,உப்புத்தூள் - தேவைக்கு
முட்டை - 2
நறுக்கிய வெங்காயத்தாள் - அலங்கரிக்க.

செய்முறை

முதலில் சுத்தம் செய்த இறாலை நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.அத்துடன் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது,1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் ,லெமன் ஜூஸ் பாதி,உப்பு சேர்த்து விரவி வைக்கவும்.
அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும்.தண்ணீரை கொதிக்க வைத்து தேவைக்கு உப்பு போட்டு ஒன்றொன்றாக சோறு இருக்குமாறு வடித்து ஒரு பெரிய தட்டில் ஆற வைக்கவும்.
ஒரு பேனில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு தயார் செய்த இறாலை நன்கு வாட்டி வைக்கவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ,வெண்ணெய் சேர்க்கவும்.சூடானவுடன்,வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.அத்துடன் காய்கறிகள் சேர்க்கவும்.
காய்கள் பாதி வெந்து வரும் பொழுது வேக வைத்த இறால் சேர்க்கவும்.பிரட்டி விடவும். சோயா சாஸ் சேர்க்கவும்.
விரும்பினால் அஜினோமோட்டோ சேர்க்கலாம்.
உப்பு சரி பார்க்கவும்.
முட்டையை உப்பு, மிளகு, சேர்த்து ஆம்லெட் போல் செய்து சிறியதாக துண்டு போட்டு வைக்கவும்.
வடித்த சோறு இறால் காய்கறிகளுடன் சேர்க்கவும்.நன்கு உடையாமல் மெதுவாக பிரட்டவும்.முட்டை துண்டுகள் சேர்க்கவும்.நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் சேர்க்கவும்.

ஒரு சேர பிரட்டவும். சுவையான இறால் ப்ரைட ரைஸ் தயார்.பார்ட்டியில் செய்து பரிமாறினால் அனைவருக்கும் பிடித்தமாய் இருக்கும்.


இறால் கோஃப்தா கறி

தேவையான பொருட்கள்

இறால் : 2கப்
தேங்காய் : 1/2 கப் + 1 கப்
பொட்டு கடலை : 2 மேசை கரண்டி
வெங்காயம் : 3
தக்காளி : 1
பச்சை மிளகாய் : 3
இஞ்சி பூண்டு விழுது : 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் : 2 மேசைக்கரண்டி
ஜீரக தூள் : 2 தேக்கரண்டி
மல்லி தூள் : 2 தேக்கரண்டி
எண்ணெய் : 4 மேசைக்கரண்டி
உப்பு : ருசிக்கேற்ப

செய்முறை

ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நன்றாக சுத்தம் செய்த இறாலை சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு வதக்கி கொள்ளவும்...
அதில் சிறிது உப்பு மற்றும் 1 மேசைக்கரண்டி அளவு மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்...
5 நிமிடம் வெந்ததும் ஆற வைக்கவும்...
மிக்ஸி ஜாரில் வேக வைத்த இறால், 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 1 தேக்கரண்டி ஜீரக தூள் , 1 பச்சை மிளகாய், 1 வெங்காயம், பொட்டு கடலை மற்றும் 1/2 கப் தேங்காய் சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்....

மீதமுள்ள ஒரு கப் தேங்காயை பேஸ்ட்டாக அரைத்து வைத்து கொள்ளவும்...
கடாயில் 2 மேசைக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு சூடானதும் மீதமுள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்...
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்...
2-3 நிமிடங்கள் கழித்து பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து நன்கு மசிய வதக்கவும்...
பின்னர் மீதமுள்ள மிளகாய் தூள், ஜீரக தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்...
ஒரு கப் தேங்காயை சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்து சேர்க்கவும்...
க்ரேவி நன்றாக கலந்து ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்த இறாலை கலவையை சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து க்ரேவியில் போடவும்...

எல்லா உருண்டை களையும் சேர்த்தபின் மூடி சிம்மில் 5-6 நிமிடங்கள் வைக்கவும்...

5 நிமிடம் கழித்து கரண்டியால் உருண்டைகள் உடைந்து விடாமல் மெதுவாக திருப்பி போடவும்...
2-3 நிமிடம் சிம்மில் வெந்ததும் இறக்கவும்...
சுவையான எளிதில் செய்ய கூடிய இறால் கோஃப்தா கறி தயார்!!!!



இறால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு + ½ படி
தேங்காய் துருவல் + ½ கப்
உப்பு தேவைக்கு
தண்ணீர் + ¼ கப்
அடக்கம் செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் + 2
கறிவேப்பிலை சிறிதளவு
பச்சை மிளகாய் + 1
மசாலா தூள் + 1 ½ தே.க
கீரப் பொடி + 2 தே.க
மாசி தூள் + 1 ½ தே.க
மஞ்சள் தூள் + ½ தே.க
இறால் + 200 கிராம்
எண்ணெய் + 3 தே.க

செய்முறை

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
வெங்காயம் நன்றாக கனிந்த பின்பு மசாலா தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
தண்ணீர் எல்லாம் வற்றியதும் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும்.
ஊற வைத்த அரிசி மாவு கலவையில் இந்த அடக்கத்தை சேர்த்து அதில் கீரப் பொடி,இறால் மற்றும் மாசி தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
அதன் பிறகு அடக்கம் சேர்த்த மாவினை எடுத்து மீடியம் அளவு உருண்டை பிடிக்கவும்.
கடைசியாக, இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி அதன்மேல் இட்லி தட்டை வைத்து அதில் ஒவ்வொரு உருண்டை வைத்து மூடி போட்டு வேக வைத்து எடுத்தால்
சுவையான இறால் கொழுக்கட்டை தயார். :yum: :yum:


இறால் கோலா பால்ஸ்

தேவையான பொருட்கள்

இறால் 1/2 kg சுத்தம் செய்தது
உடைச்ச கடலை 100 கிரம்
வெங்காயம் 300 கிரம்
தக்காளி 300 கிரம்
இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
மட்டன் மசாலா 2 ஸ்பூன்
சில்லி பவுடர் 1 ஸ்பூன்
புளி ஒரு எலுமிச்சை பழம் அளவு
கொத்தமல்லி
உப்பு
எண்ணெய்

செய்முறை

இறால் மிக்ஸியில் அரைக்கவும் பின்பு வெங்காயம், மட்டன் மசாலா, உப்பு, உடைச்ச கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசையவும்.
எண்ணெய் காயவைத்து பொறித்து எடுக்கவும்.

இப்போது காடையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் , தக்காளி சேர்த்து வதக்கவும்.
சில்லி பவுடர் , உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்பு அதில் புளி கரைசல் சேர்ந்து வேண்டும்.

பின்பு பொரித்து வைத்த இறால் உருண்டை போட்டு நன்கு வேக வைக்கவும்.
5 நிமிடம் கழித்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான இறால் கோலா பால்ஸ் ரெடி.



இறால்/மீன் ஊறுகாய்

தேவையான பொருட்கள்

மீன் அல்லது இறால் - 1/2 கிலோ
மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி அல்லது 40 கிராம்
சீரகத் தூள் - 2 தேக்கரண்டி அல்லது 25 கிராம்
மிளகு - 1 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை - 2 குச்சி அல்லது 10 கிராம்
கடுகு - 1தேக்கரண்டி
பூண்டு - 100 கிராம்
வெனிகர் - 300 மிலி
இஞ்சி - 1
நல்லெண்ணெய் - 300 மிலி

செய்முறை

இஞ்சி-பூண்டை வெனிகரோடுக் கலந்து அரைத்துக்கொள்ளவும்.
கரடுமுரடாக இருக்கும் போது உலர் மசாலா பொருள்களன் மிளகாய்த்தூள், சீரகத் தூள், மிளகு, இலவங்கப்பட்டை, கடுகு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
மஞ்சளையும் உப்பையும் மீன் அல்லது இறால் மீறால் தடவ நல்லெண்ணெயில் பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
மீதமுள்ள அதே எண்ணெயில் அரைத்த மசாலாக்களை எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.
வறுத்த மீன் அல்லது இறாலைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
கொஞ்சம் சர்க்கரை சேர்த்து சிம்மில் வைத்து அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
ஆறவிட்டு பாட்டில் அடைத்துக்கொள்ளவும்.


இறால் மிளகு வறுவல்

தேவையான பொருட்கள்

சற்று பெரிய இறால் மீன் 1/2 கிலோ
சின்ன வெங்காயம் 50கிராம்
கருவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது 1/4 ஸ்பூன்
மிளகு 15 கிராம்
சீரக தூள் 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1/4 ஸ்பூன்
கரம் மசாலா தூள் ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் சிறிது

செய்முறை

சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் சின்னவெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள்,சீரக தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
சுத்தம் செய்த இறால் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
தேவையான அளவு உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்....
தண்ணீர் வற்றி வரும் போது இறக்கவும்.....,.......

சுவையான இறால் மிளகு வறுவல் தயார்..


இறால் கோல்டன் பிரை

தேவையான பொருட்கள்

இறால் - 1/2 கிலோ
பூண்டு தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
உப்பு
மிளகு தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
முட்டை - 1
மைதா - 2 மேஜை கரண்டி
ரொட்டி தூள் - 4 மேஜை கரண்டி

செய்முறை

இறாலை கத்தியால் கீறி நரம்பை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்
அதனுடன் மிளகாய் தூள், பூண்டு தூள் சேர்த்து அரைமணி நேரம் ஊற விடவும்
முட்டையை உப்பு மிளகு தூள் சேர்த்து அடித்து வைத்து கொள்ளவும்
மைதா மற்றும் ரொட்டி தூளை தனி தனியாக வைத்து கொள்ளவும்
பின்பு இறாலை மைதாவில் டஸ்ட் செய்து முட்டையில் முக்கி பிரட் கிரும்பஸ் மேல போட்டு சூடான எண்ணையில் பொரித்து எடுக்கவும்
மயனோஸ் உடன் பரிமாறவும்

இறால் தம் பிரியாணி

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி அரை கிலோ
இறால் சுத்தம் செய்தது 400 கிராம்
வெங்காயம் 200 கிராம்
தக்காளி 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது 50 கிராம்
தயிர் 50 கிராம்
பச்சை மிளகாய் 4
மல்லி புதினா இலை சிறிதளவு
சிவப்பு மிளகாய் தூள் அரை மேசைக்கரண்டி அளவு
உப்பு தேவைக்கு
கடலை எண்ணெய் 100 கிராம்
நெய் 25 கிராம்
சிவப்பு நிறமூட்டி
பட்டை கிராம்பு இரண்டு அல்லது மூன்று வீதம் சேர்த்துக் கொள்ளுங்கள்
ஏலக்காய் 4

செய்முறை

இறாலுடன் கொடுக்கப்பட்டுள்ள சிவப்பு மிளகாய் தூளில் பாதி சேர்த்து சிறிதளவு உப்பு சிவப்பு நிற மூட்டி தயிர் சிறிதளவு சேர்த்து 25 நிமிடம் குழிற்பெட்டியில்*பிரிட்ஜ்) ஊற வைத்து கொள்ளுங்கள்.
அரிசியை 25 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும் மணம் வந்தவுடன் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
இறால் சீக்கிரம் வெந்து விடும் என்பதால் மற்றொரு பாத்திரத்தில் சாதம் வேக வைப்பதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்
வெங்காயம் நன்கு சிவந்து வரும்போது இஞ்சி பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கிக் கொள்ளுங்கள்
பின் அதனுடன் தக்காளி உப்பு, மீதமுள்ள சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
ஏற்கெனவே இராளில் உப்பு சேர்த்து உள்ளதால் தக்காளியுடன் சேர்க்கும்போது பார்த்து சேர்த்துக் கொள்ளவும்
மற்றொருபுறம் தண்ணீர் கொதி வந்தவுடன் ஊற வைத்த அரிசியை அதில் சேருங்கள்
அந்த அரிசிக்கு தேவையான உப்பை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்
மற்றொருபுறம் தக்காளி நன்கு வதங்கிய பின் ஊற வைத்த இறால் மற்றும் மீதமுள்ள தயிரை சேருங்கள்.
மற்றொருபுறம் அரிசி வெந்து விட்டதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்
அரிசி அதிகம் வெந்த விடவும் கூடாது முல்லாவும் இருக்கக் கூடாது
அரிசி சரியான பதத்துக்கு வெந்ததும் அதனை வடித்துக்கொள்ளுங்கள்
இறால் முக்கால் வேக்காடு வெந்திருக்கும்
இப்பொழுது தம் கல் சேர்த்து அதன் மேல் இந்த பாத்திரத்தை வையுங்கள்
வெந்த அரிசியை இந்த இறால் கிரேவி உடன் சேர்த்து மற்றும் நெய் சேர்த்து கொள்ளுங்கள்
இதை மூடி வைத்து ஒரு 20 நிமிடம் அப்படியே தம் போட்டுக் கொள்ளுங்கள்
20 நிமிடம் கழித்து ஒரு பத்து நிமிடம் மூடியை திறக்காமல் அப்படியே மூடி வைத்துக் கொள்ளுங்கள்
சுவையான இறால் பிரியாணி தயார்


இறால் ரொட்டி தக்கடி

தேவையான பொருட்கள்

ரவை - 1/2 கிலோ
துருவிய தேங்காய் - 1 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
இறால் - 300 கிராம்
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
ரம்ப இலை - 1
கருவேப்பில்லை - தேவைக்கு
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
தண்ணீர் - தேவைக்கு
உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை

முதலில் ரவையை மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ரவையுடன் உப்பு மற்றும் 500 மில்லி அல்லது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்

1 மணி நேரம் ஊற வைக்கவும்.
துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து ரொட்டி பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.

சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
உள்ளங்கையில் சிறிது எண்ணெய் வைத்து 1/2 இன்ச் அளவுக்கு ரொட்டி தட்டிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விடவு‌ம்.
தட்டிய ரொட்டிகளை சுட்டு எடுக்கவும்.
ரொட்டிகளை டைமண்ட் வடிவத்தில் வெட்டி வைத்துக் கொள்ளவும்

மற்றொரு கடாயில் தே‌ங்கா‌ய் எண்ணெய் விட்டு காய்ந்ததும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய், ரம்ப இலை பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மசாலா தூள், கருவேப்பிலை, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தண்ணீர் மற்றும் இறால் சேர்த்து வேகவிடவும்.

இறுதியாக தேங்காய்ப்பால் சேர்த்து 5 நிமிடம் கழித்ததும்.
தனியே எடுத்து வைத்திருந்த டைமண்ட் ரொட்டிகளை சேர்க்கவும்.

சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
சுவையான மற்றும் வித்தியாசமான இரவு நேர உணவு "இறால் ரொட்டி தக்கடி" தயார்.




இறால் மிளகுக் குழம்பு

தேவையான பொருட்கள்

இறால் - 200 கிராம்
வெங்காயம் - 3 பொடியாக நறுக்கப்பட்டது
தக்காளி - 3 பொடியாக நறுக்கப்பட்டது
இஞ்சிப் பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி (சேர்ப்பதற்கு முன் புடைத்துக்கொள்ளவும்)
மிளகு - 1/2 தேக்கரண்டி
முத்து வெங்காயம் - 10
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை - 1 இன்ச்
எண்ணெய் - 5 தேக்கரண்டி
சுவைக்கேற்ற உப்பு

செய்முறை

ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தவும். முத்து வெங்காயம், மிளகு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும். அதன்பிறகு இஞ்சிப் பூண்டு விழுது 1 தேக்கரண்டி சேர்த்து மீண்டும் வதக்கவும். அதன்பின்னர் அதை ஆறவிட்டு மென்மையானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
இப்போது மீண்டும் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடுபடுத்தியபிறகு சோம்பு சேர்த்து பொரிக்கவிடவும். அதன்பின் வெங்காயம் சேர்த்து பளபளப்பாகும்வரை வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும். அவை கூழாக ஆனதும் இஞ்சிப்பூண்டு விழுது 2 தேக்கரண்டி சேர்த்து மீண்டும் வதக்கவும். மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும், மசாலாக்கள் நன்றாக வேகட்டும்.
பச்சை வாடை போவதைப் பார்த்தால், தயாரித்த மென்மையானச் சாந்தைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இப்போது இறலைச் சேர்த்து சற்றே 7 நிமிடங்களுக்கு மட்டும் அதற்கு மேல் வேண்டாம், வேகவைக்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கி கொத்துமல்லி சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.



இறால் முந்திரி வறுவல் 

தேவையான பொருட்கள்

இறால் 500 கிராம்
முந்திரி 100 கிராம்
கெட்டியான தேங்காய் பால் 50 மிலி
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2
பொடியாக நறுக்கிய தக்காளி 1
சோம்பு தூள் 1 ஸ்பூன்
மிளகாய் தூள் 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 6 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி

செய்முறை

முந்திரியை ஒரு முறை கழுவி கொதித்த நீரில் ஊற வைக்கவும்
எறாலை சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்த வெதுவெதுப்பான நீரில் 4 முறை நன்றாக கழுவிக் கொள்ளவும்.
அடுப்பில் வைத்த வாணலி சூடானவுடன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
முதலில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின் தக்காளியையும் தேவையான உப்பையும் போட்டு நன்றாக வதக்கவும். மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
இறாலைப் போட்டு நன்றாக வதக்கவும்.
அதில் மிளகாய் தூள், சோம்பு தூள் சேர்த்துக் கொள்ளவும் .
தேவையான அளவு கொதித்த தண்ணீரை ஊற்றி ஊறிய முந்திரியையும் போட்டு 4 நிமிடம் பெரிய தீயில் வைக்கவும்.
மூடி போட்டு சிறிய தீயில் 3 நிமிடம் வைக்கவும் .
தேங்காய் பாலை ஊற்றி கொதித்தவுடன் அடுப்பை அணைக்கவும்



இறால் சேமியா பிரியாணி

தேவையான பொருட்கள்

சேமியா-1கப்
இறால்-50g
தண்ணீர்-2கப்
வெங்காயம்-1
தக்காளி-2
இஞ்சி பூண்டு விழுது-1tbsp
பச்சை மிளகாய்-2
கொத்தமல்லி இலை-1/4கப்
புதினா-1/4 கப்
மிளகாய் தூள்-1tsp
உப்பு-தேவையான அளவு
நெய்-1tbsp

செய்முறை

ஒரு பத்திரத்தில் சேமியவை நெய் சேர்த்து வானொலியில் பொன்னிறமாக வறுக்கவும்
ஒரு பத்திரத்தில் எண்ணை ஊற்றி அதில் பட்டை, கிராம்பு,ஏலம் சேர்த்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி நறுக்கிய தக்காளி,பச்சை மிளகாய்,கொத்தமல்லி,புதினா இலை, மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
தண்ணீர் கொதித்த பின்பு வறுத்த சேமியவை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு வைக்கவும்
சேமியா வெந்ததும்.நெய் ஊற்றி 2 நிமிடம் சீமில் வைத்து அடுப்பை அணைத்து சூடாக பரிமாறவும்
ஊறுகாய் அல்லது தயிர் வெங்காயதுடன் பரிமாறவும்


சில்லி கார்லிக் இறால்

தேவையான பொருட்கள்

500 கிராம் இறால்,
2 மேஜை கரண்டி பூண்டு, பொடியாக நறுக்கியது
2 மேஜை கரண்டி இஞ்சி, பொடியாக நறுக்கியது
2 மேஜை கரண்டி பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
1 தே கரண்டி காய்ந்த மிளகாய் பொடி
1 வெங்காயம், பொடியாக நறுக்கியது
2 தே கரண்டி சோயா சாஸ்
2 தே கரண்டி தக்காளி சாஸ்
1 கப் தண்ணீர்
சிறிது மல்லி இலை
2 தே கரண்டி சோள மாவு, 2 கரண்டி நீரில் கரைத்து
2 மேஜை கரண்டி எண்ணெய்
உப்பு
ஊற வைத்து பொரிக்க
1 முட்டை
4 மேஜை கரண்டி சோள மாவு
2 தே கரண்டி சோயா சாஸ்
உப்பு
எண்ணெய், பொரிக்க

செய்முறை

ஊற வைக்க வேண்டிய பொருள்களுடன் இறாலை கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி, ஊற இறாலை பொரித்தெடுக்கவும்
வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து, வேகமாக வதக்கவும்
பின் அதனுடன் காய்ந்த மிளகாய் பொடி, சோயா சாஸ், தக்காளி சாஸ், மல்லி இலை, உப்பு சேர்த்து வதக்கி, 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்
அதில் பொரித்த இறால், சோள மாவு கரைசல் ஊற்றி, அதிக தீயில் 3 நிமிடம் வதக்கவும்
இறக்கி வெங்காய தால் தூவி பரிமாறவும்


இறால் தேங்காய் சம்பல்

தேவையான பொருட்கள்

இறால் தேவையான அளவு
தேங்காய் அரை கப் துருவியது
பட்டை ஒரு துண்டு
சோம்பு அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம் 15
காய்ந்த மிளகாய் 10
மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
உப்பு எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

துருவிய தேங்காயுடன் பட்டை சோம்பு காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும் தண்ணீர் சேர்க்க தேவையில்லை
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கவும்
சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்க்கவும்
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
இறால் வெந்ததும் கரகரப்பாக அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்
'


இறால் வெண்ணெய் பூண்டு

தேவையான பொருட்கள்

600 கிராம் குறுக்காக வெட்டப்பட்ட நடுத்தர இறால்
100 கிராம் வெண்ணெய்
1 டீக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
எலுமிச்சை தோல் மற்றும் எலுமிச்சை சாறு
5 பூண்டு பல்
சுவைக்கேற்ப உப்பு
1 டீக்கரண்டி வெட்டப்பட்ட கொத்தமல்லி

செய்முறை

பாத்திரத்தை அதிக தீயில் வெப்பபடுத்தி கொள்ளவும். அதில் பாதி வெண்ணெய் மற்றும் அனைத்து எண்ணெயையும் இட்டு பூண்டு, உப்பு, எலுமிச்சை தோல் சேர்த்துக் கொள்ளவும். குழம்பை 2 நிமிடம் அதிக தீயில் வறுக்கவும்.
இறால்களை சேர்த்து மேலும் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வேகவிடவும் அல்லது இறால் நன்றாக வேகும் வரை விடவும். பின் தீயை அணைத்து விட்டு மிதமுள்ள வெண்ணையையும் மற்றும் எலுமிச்சைச் சாரையும் சேர்க்கவும்.
சிறிது நேரத்திற்கு பிறகு சுவைப்பார்த்து கொத்தமல்லியை சேர்த்து உடனடியாக பரிமாறவும்.


முந்திரி இறால் வறுவல் 

தேவையான பொருட்கள்

இறால் 300கிராம்
நல்லெண்ணெய் 75 கிராம்
முந்திரிபருப்பு 75 கிராம்
மிளகுத்தூள் ஒருமேஜைக்கரண்டி
சிரகத்தூள் ஒரு மேஜைக்கரண்டி
பச்சைமிளகாய் தேவைக்கு
கருவேப்பில்லை சிறிது
இஞ்சிபூண்டு விழுது ஒருமேஜைக்கரண்டி
மல்லிச்செடி சிறிது
வெங்காயம் ஒரு கப்

செய்முறை

இறாலை சுத்தம் செய்து கொள்ளவும்

அடுப்பில் வானாலியை வைத்து எண்ணெய் ஊற்றவும் பின் கருவேப்பில்லை சேர்க்கவும் பின் முந்திரி சேர்க்கவும்

பின் இறாலை சேர்க்கவும்

பின் இஞ்சிபூண்டு சேர்க்கவும்

உப்பு சேர்த்து இரண்டுநிமிடம் வதக்கிய பச்சைமிளகாய் பின் மிளகு சிரகத்தூள் சேர்க்கவும்

நன்கு வதக்கவும்

பின் வெங்காயம் சேர்க்கவும்

வெங்காயம் நன்கு வேகும் வரை வதக்கவும்

குறைந்த தீயில் வைத்து வதக்கவும்

பின் மல்லிச்செடி சேர்க்கவும்.அடுப்பை அணைக்கவும். முந்திரி மிளகு வறுவல் ரெடி


பொரித்த இறால் பிரியாணி

தேவையான பொருட்கள்

இறால் அரை கிலோ
பாஸ்மதி அரிசி அரை கிலோ
வெங்காயம் கால் கிலோ
தக்காளி ஆறு
இஞ்சி 3 ஸ்பூன்
பூண்டு 2 ஸ்பூன்
புதினா மல்லி இலை சிறிதளவு
மிளகாய்த்தூள்-3ஸ்பூன்
மல்லித் தூள் ஒரு ஸ்பூன்
கரம் மசாலா ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
தயிர் கால் கப்
எண்ணை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு

செய்முறை

முதலில் இறாலை சுத்தம் செய்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் இறால் மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசைந்து கொள்ளவும்
பிசைந்து இறால்களை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
பாஸ்மதி அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது தக்காளி புதினா மல்லி இலை மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா தூள் தயிர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும் பிறகு ஊற வைத்துள்ள அரிசியை அதில் சேர்த்து தண்ணீர் ஊற்றி முக்கால் பாகம் வேக விடவும்
பிறகு வேக வைத்த அரிசியில் பொரித்து வைத்துள்ள இறால் துண்டுகளை சேர்த்து கிளறி விடவும் கிளறி பிரியாணியை தம்மில் 10நிமிடம் வைக்கவும்
பொரித்த இறால் பிரியாணி தயார்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி



கொத்தமல்லி இறால் தொக்கு

தேவையான பொருட்கள்

வறுத்து அரைக்க: கிராம்பு 4
பட்டை சிறு துண்டு
மிளகு 2 ஸ்பூன்
சீரகம் 2 ஸ்பூன்
சோம்பு 2 ஸ்பூன்
இஞ்சி சிறு துண்டு
பூண்டு 7 பல்
மல்லித்தழை அரை கையளவு
வெங்காயம் 1/2
மற்ற பொருட்கள்: வெங்காயம் 1
இறால் 1 கப்
உப்பு தேவைக்கு
எண்ணெய் தேவைக்கு
தக்காளி அலங்கரிக்க

செய்முறை

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் சேர்த்து வதக்கி, இறால், அரைத்த கலவை, உப்பு சேர்த்து இறால் வேகும் வரை வதக்கி எடுக்கவும்.
இறுதியாக, பரிமாறும் போது தக்காளியை நறுக்கி அலங்கரிக்கவும்.
சுவையான கொத்தமல்லி இறால் தொக்கு தயார். இது சாதம், டிபன்களுக்கு ஏற்றது.



இறால் தேங்காய் பிரட்டல்

தேவையான பொருட்கள்

இறால் 1/2 கப்
தேங்காய் 1 1/2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் 1
தக்காளி 1/2
இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
கரம் மசாலா 1 தேக்கரண்டி
மிளகு தூள் 2 தேக்கரண்டி
மல்லி தழை சிறிது
எண்ணெய் தேவைக்கு
உப்பு தேவைக்கு
கடுகு 1 டேபிள் தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
காய்ந்த மிளகாய் 1

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறி வேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, உப்பு ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
மிளகாய் தூள், இறால் சேர்த்து லேசாக வதக்கவும்.
பின்னர் கரம் மசாலா, மல்லி தழை சேர்த்து கலந்து, மூடி வைத்து 7 நிமிடம் சிம்மில் வேக வைக்கவும்.
மிளகு தூள் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வேக வைக்கவும். அடுப்பை அணைத்து சாதம், குழம்புடன் பரிமாறவும். மிகவும் சுவையான இறால் தேங்காய் பிரட்டல் தயார்.


கறிவேப்பிலை இறால் வறுவல்

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்த இறால் 250 கிராம்
கறிவேப்பிலை இரண்டு கைப்பிடி
பூண்டு 3 பல்
இஞ்சி ஒரு சிறிய துண்டு
மிளகு ஒரு தேக்கரண்டி
சோம்பு ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் 3
எலுமிச்சை பழம் ஒன்று
மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் இரண்டு மேசைக்கரண்டி

செய்முறை

ஒரு மிக்ஸியில் கறிவேப்பிலை பச்சை மிளகாய்,சோம்பு மிளகு இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்

அரைத்த விழுதை சுத்தம் செய்த இறாலில் சேர்த்து , எலுமிச்சை சாறு, உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசறி வைக்கவும்

ஒரு மணி நேரம் ஊற விடவும்
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்த கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்

மசாலா நன்கு சுண்டி எண்ணெய் தெளியும் வரை வதக்கவும்
இறுதியாக பொரித்த கருவேப்பிலை இலைகளை தூவி அலங்கரித்து பரிமாறவும்




ப்ளாச்சப்பம் (இறால் அடை )

தேவையான பொருட்கள்

1+1/2 கப் அரிசி மாவு
250 gms இறால்
2 கப் கெட்டி தேங்காய் பால்
1 கப் நீர் தேங்காய் பால்
250gms ,சின்ன வெங்காயம்
3 மேஜை கரண்டி கறி மசாலா தூள்
1 தே கரண்டி மஞ்சள் தூள்
உப்பு
1 இடுக்கு கருவேப்பிலை
3 பச்சை மிளகாய்
2 முட்டை
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாயில் நீர் தேங்காய் பாலுடன் சின்ன வெங்காயம், இறால், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கறி மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, இறால் வேகும் வரை கொதிக்க விடவும்
பின் அடுப்பிலிருந்து இறக்கி, அதனுடன் கெட்டி தேங்காய் பால் சேர்க்கவும்
அது ஆறியதும், முட்டை மற்றும் அரிசி மாவு சேர்த்து கிளறி அடை பதத்தில் வைக்கவும்
தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி 2 கரண்டி மாவு ஊற்றி, இரு பக்கமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுத்து பரிமாறவும்




தேங்காய் பால் இறால் தொக்கு

தேவையான பொருட்கள்

இறால் 1 கப்
வெங்காயம் 1 மற்றும் 1/2
தக்காளி 1
இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
உருளைக்கிழங்கு 1
எண்ணெய் தேவையான அளவு
மிளகு சீரகம் 2-3 டீஸ்பூன்
தேங்காய் பால் 1/4 கப்
மல்லி தழை சிறிது

செய்முறை

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.5 நிமிடம் பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இப்பொழுது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
பின்னர் இறால் சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்.
தேங்காய் பால் ஊற்றி வாணலியில் மூடி வைத்து 15-20 நிமிடம் காத்திருக்கவும் ‌
இப்பொழுது மிளகு சீரகம் சேர்த்து 5-7 நிமிடம் கழித்து மல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான தேங்காய் பால் இறால் தொக்கு தயார்


Comments