தமிழர் வட்டார சமையல்
செட்டிநாடு சிக்கன்
தேவையான பொருட்கள்
1/2 கிலோ தோலுரிக்கப்பட்ட சிக்கன்
1 பெரிய வெங்காயம் + 1 நடுத்தர அளவுள்ள வெங்காயம்
1 பெரிய தக்காளி
1/2 தேக்கரண்டி மஞ்சள்
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
5 தேக்கரண்டி எண்ணெய்
2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
1/2 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி
சுவைக்கேற்ற உப்பு
நறுக்கப்பட்ட கொத்துமல்லி அலங்கரிப்பதற்காக
1/2 தேக்கரண்டி சீரகம்
1/2 தேக்கரண்டி மல்லி
1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
1 தேக்கரண்டி கசகசா
2 சிவப்பு மிளகாய்
1 தேக்கரண்டி மிளகு
1/2 இன்ச் இலவங்கப்பட்டை
2 கிராம்பு
1 பச்சை ஏலக்காய்
1 இதழ் நட்சத்திர சோம்பு
1 இதழ் ஜாதிக்காயின் மேல்தோடு
1 சிட்டிகை ஜாதிக்காய்
3 தேக்கரண்டி புதிதாக துருவப்பட்டத் தேங்காய்
செய்முறை
உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறுடன் சேர்த்து சிக்கனை பதப்படுத்தவும்.1-2 மணி நேரம் எடுத்து வைக்கவும்.
வெங்காயம் மெல்லியத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
நட்சத்திர சோம்பு, ஜாதிக்காயின் மேல்தோடு, ஜாதிக்காள், தேங்காய் அனைத்தையும் வெறுமனே வறுத்துக்கொள்ளவும்., (ஒவ்வொரு மசாலாவையும் தனித்தனியே தனித்தனி நறுமணத்தைத் தரும்வரை வறுப்பது நல்லது, ஆனால் ஒன்றுக்கு நேரம் குறைவாக இருந்தால், கருகவிடாமல் ஒன்றாக வறுக்கவும்).
தேங்காயைத் தனியாக வெறுமனே வறுத்துக்கொள்ளவும். வறுத்த மசாலாவையும் தேங்காயையும் ஆறவிடவும். அதன்பிறகு சேர்த்து கரடுமுரடான பவுடராக அரைத்துக்கொள்க. இந்த பவுடரோடு இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்துக்கொள்ளவும்.
ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க. கறிவேப்பிலையையும் நறுக்கப்பட்ட வெங்காயத்தையும் சேர்க்கவும். சிறு தீயில் வெங்காயம் வெளுக்கும்வரை வறுக்கவும்.
ஜாதிக்காய், ஜாதிக்காயின் மேல்தோடு, நட்சத்திர சோம்புடன் மசாலா சாந்தைச் சேர்க்கவும். 3 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
மிளகாய்த் தூள், கொஞ்சம் உப்புடன் தக்காளித் துண்டுகளைச் சேர்க்கவும். தக்காளி மிருதுவாகி எண்ணெய் பிரியும்வரை வேகவைக்கவும்.
சிக்கன் துண்டுகளைச் சேர்க்கவும். நடுத்தர தீயில் 5-6 நிமிடங்களுக்கு வேகவைத்து ஒன்றல்லது இரண்டு முறை இடையிடையே கலக்கவும்.
1ல் இருந்து 1/2 கப் கொதி்க்கும் தண்ணீரை சிக்கனோடு சேர்த்து சிம்மில் 5-6 நிமிடங்கள் அல்லது சிக்கன் துண்டுகள் மென்மையாகும்வரை வைக்கவும். தீயை நிறுத்திவிட்டு கொத்துமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
பரோட்டா/ஆப்பம் அல்லது சாதத்துடனும் சூடாகப் பரிமாறவும்.
செட்டிநாடு கோழி கரோடா
தேவையான பொருட்கள்
நாட்டு கோழி - 1 kg
பட்டை, கிராம்பு - 2
சோம்புத்தூள் - 2 spoon
ஏலக்காய் - 2
மஞ்சள்தூள் - 1/2 spoon
மிளகாய்த் தூள்- 1 1/2 spoon
தேங்காய் - 1 மூடி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி/பூண்டு விழுது - 3 spoon
காய்ந்த மிளகாய் - 4
தக்காளி - 250 gm
சிறிய வெங்காயம் - 250 gm
எண்ணெய்
செய்முறை
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். நாட்டுக்கோழியை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
மிக்சியில் மஞ்சள் தூள் அரை ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன், சோம்புத்தூள் ஒரு ஸ்பூன், மல்லித்தூள் இரண்டு ஸ்பூன், மிளகாய்த் தூள் ஒன்றரை ஸ்பூன், தேங்காய், கசகசா, சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, ஏலக்காய், மிளகாய் முதலியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அத்துடன் சிறிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும். தக்காளி சிறிதளவு வதங்கியதும் சுத்தம் செய்த கோழியை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும். கறி நன்றாக வெந்து கெட்டியாக வரும் நிலையில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும். இப்போது சுவையான செட்டிநாடு கோழி கரோடா தயார்,
செட்டிநாடு நண்டு மசாலா
தேவையான பொருட்கள்
நண்டு-750 கிராம்
சின்ன வெங்காயம் -100 கிராம்
தக்காளி -2
பச்சைமிளகாய் -2
வரமிளகாய்-4
தேங்காய் - தேவையான அளவு
மல்லி-1 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
சோம்பு -1 தேக்கரண்டி
மிளகு -1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
மல்லித்தூள் -1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை
முதலில் நண்டை சுத்தம் செய்து கழுவி வைத்துக்கொள்ள வேண்டும் .
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ததும் சோம்பு ,சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் .
பிறகு இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும் .
மிக்சியில் தேங்காய் ,மல்லி,சீரகம் ,மிளகு ,சோம்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
இப்பொழுது அரைத்த விழுது,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லித்தூள்,மிளகுத்தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு நண்டை சேர்த்து நன்றாக வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும் .
நண்டு நன்றாக வெந்து கிரேவி பதம் வந்த தும் சிறிதளவு மல்லி இலை மற்றும் மிளகுத்தூள் தூவி அடுப்பில் இருந்து இறக்கி சூடான சாதம் உடன் பறிமாறவும்.
சுவையான செட்டிநாடு நண்டு மசாலா தயார்
செட்டிநாடு மீன் வறுவல்
தேவையான பொருட்கள்
சுத்தம் செய்த மீன் -1 கிலோ
வரமிளகாய்தூள் -2 1/2 டேபிள்ஸ்பூன்
தனியாதூள் -2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
நறுக்கிய இஞ்சி -1 டீஸ்பூன்
பூண்டுப்பல் -5
கறிவேப்பிலை -1 ஈர்க்கு
புளிபேஸ்ட் -2 டீஸ்பூன்
கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
உப்பு -தேவைக்கு
மசாலா செய்ய:
கிராம்பு -4
பட்டை - 1" அளவு
ஏலக்காய் -3
மிளகு -10
சீரகம் -1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் -1/2 டீஸ்பூன்
அன்னாசிப்பூ -2 இதழ்
ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் மசாலா செய்ய கொடுக்கபட்டுள்ள பொருட்களை பொடி செய்யவும்.பின் மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
பின் இஞ்சி, பூண்டுப்பல், கறிவேப்பிலை, சேர்த்து அரைக்கவும்
ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலா,மீன்,புளிபேஸ்ட், உப்பு சேர்த்து கலந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
பொரிப்பதற்கு முன் கடலைமாவு சேர்க்கவும்.கடாயில் எண்ணெய் காயவைத்து மீனை சேர்த்து இருபக்கமும் பொன்னிறமாக பொரிக்கவும்.
செட்டிநாடு மிளகு சிக்கன்
தேவையான பொருட்கள்
கோழி - 1 கிலோ
வெங்காயம் - 5 நன்றாக நறுக்கப்பட்டது
தக்காளி - 3 நன்றாக நறுக்கப்பட்டது
இஞ்சி- பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3 நீளவாக்கில் பிளக்கப்பட்டது
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
காஷ்மீர் மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 1/2 தேக்கரண்டி
மிளகு நொறுக்கப்பட்டது - 1 தேக்கரண்டி
தேங்காய் துண்டுகள் - 1தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு தண்டு
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
மிளகாய்த் தூள் பாதியளவு, மிளகுத்துள் பாதியளவு, உப்பு, எலுமிச்சை சாறு பாதியளவு, மஞ்சள் தூளுடன் சிக்கன் துண்டுகளையும் மேரினேட் செய்து எடுத்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது, மிளகாய், மஞ்சள் தூள், கொத்துமல்லி, கரம் மசாலா மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
தக்காளி சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வேகவைத்து உப்பு சேர்க்கவும். தக்காளியை மசித்து மேரினேட் செய்து சிக்கன் துண்டுகளைச் சேர்க்கவும். மூடியிட்டு குறைவான தீயில் சிக்கனை வேகவைக்கவும்.
சிக்கன் வேகவைக்கப்பட்டதும், சிக்கனில் இருந்து தண்ணீர் வெளிவரும். மிளகு சேர்த்து 2 நிமிடங்களுக்கு சமைக்கவும். எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை நிறுத்திவிடவும்.
இன்னொரு பாத்திரத்தில், தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி கறிவேப்பிலையையும் காய்ந்த தேங்காய்த் துண்டுகளையும் சேர்க்கவும். அவற்றை வறுத்து சிக்கனைச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.
மஸ்ரூம் செட்டிநாடு மசாலா
தேவையான பொருட்கள்
மஷ்ரூம் 10
ஆனியன் 2
டோமடோ 1
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
மிளகாய் பொடி 1 டீ கரண்டி
தனியா 1 டீ கரண்டி
சோம்பு 1 டீ கரண்டி
ஜீரகம் 1 டீ கரண்டி
மிளகு1/2 டீ கரண்டி
காஞ்ச மிளகாய் 3
தேங்காய் 1 பத்தை
என்னை தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் கடாயில் சிறிது என்னை ஊற்றி தனியா காஞ்ச மிளகாய் மிளகு ஜீரகம் சோம்பு தேங்காய் வதக்கி அரைத்து வைத்து கொள்ள வேண்டும்
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ஜீரகம் போட்டு ஆனியன் வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்
புன்பு அறிந்து வைத்துள்ள மஷ்ரூம்ஐ அதில் சேர்த்து நன்கு வதக்கி வேண்டும்
இப்பொழுது சில்லி பொடி உப்பு சேர்த்து அரைத்து விழுதை சேர்த்து நன்கு வதக்கி பத்து நிமிடம் வதக்கி கறிவேப்பிலை சேர்த்து படிமாரவேண்டும்
செட்டிநாடு சிக்கன்
தேவையான பொருட்கள்
1/2 கிலோ தோலுரிக்கப்பட்ட சிக்கன்
1 பெரிய வெங்காயம் + 1 நடுத்தர அளவுள்ள வெங்காயம்
1 பெரிய தக்காளி
1/2 தேக்கரண்டி மஞ்சள்
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
5 தேக்கரண்டி எண்ணெய்
2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
1/2 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி
சுவைக்கேற்ற உப்பு
நறுக்கப்பட்ட கொத்துமல்லி அலங்கரிப்பதற்காக
1/2 தேக்கரண்டி சீரகம்
1/2 தேக்கரண்டி மல்லி
1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
1 தேக்கரண்டி கசகசா
2 சிவப்பு மிளகாய்
1 தேக்கரண்டி மிளகு
1/2 இன்ச் இலவங்கப்பட்டை
2 கிராம்பு
1 பச்சை ஏலக்காய்
1 இதழ் நட்சத்திர சோம்பு
1 இதழ் ஜாதிக்காயின் மேல்தோடு
1 சிட்டிகை ஜாதிக்காய்
3 தேக்கரண்டி புதிதாக துருவப்பட்டத் தேங்காய்
செய்முறை
உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறுடன் சேர்த்து சிக்கனை பதப்படுத்தவும்.1-2 மணி நேரம் எடுத்து வைக்கவும்.
வெங்காயம் மெல்லியத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
நட்சத்திர சோம்பு, ஜாதிக்காயின் மேல்தோடு, ஜாதிக்காள், தேங்காய் அனைத்தையும் வெறுமனே வறுத்துக்கொள்ளவும்., (ஒவ்வொரு மசாலாவையும் தனித்தனியே தனித்தனி நறுமணத்தைத் தரும்வரை வறுப்பது நல்லது, ஆனால் ஒன்றுக்கு நேரம் குறைவாக இருந்தால், கருகவிடாமல் ஒன்றாக வறுக்கவும்).
தேங்காயைத் தனியாக வெறுமனே வறுத்துக்கொள்ளவும். வறுத்த மசாலாவையும் தேங்காயையும் ஆறவிடவும். அதன்பிறகு சேர்த்து கரடுமுரடான பவுடராக அரைத்துக்கொள்க. இந்த பவுடரோடு இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்துக்கொள்ளவும்.
ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க. கறிவேப்பிலையையும் நறுக்கப்பட்ட வெங்காயத்தையும் சேர்க்கவும். சிறு தீயில் வெங்காயம் வெளுக்கும்வரை வறுக்கவும்.
ஜாதிக்காய், ஜாதிக்காயின் மேல்தோடு, நட்சத்திர சோம்புடன் மசாலா சாந்தைச் சேர்க்கவும். 3 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
மிளகாய்த் தூள், கொஞ்சம் உப்புடன் தக்காளித் துண்டுகளைச் சேர்க்கவும். தக்காளி மிருதுவாகி எண்ணெய் பிரியும்வரை வேகவைக்கவும்.
சிக்கன் துண்டுகளைச் சேர்க்கவும். நடுத்தர தீயில் 5-6 நிமிடங்களுக்கு வேகவைத்து ஒன்றல்லது இரண்டு முறை இடையிடையே கலக்கவும்.
1ல் இருந்து 1/2 கப் கொதி்க்கும் தண்ணீரை சிக்கனோடு சேர்த்து சிம்மில் 5-6 நிமிடங்கள் அல்லது சிக்கன் துண்டுகள் மென்மையாகும்வரை வைக்கவும். தீயை நிறுத்திவிட்டு கொத்துமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
பரோட்டா/ஆப்பம் அல்லது சாதத்துடனும் சூடாகப் பரிமாறவும்.
செட்டிநாடு கோழி கரோடா
தேவையான பொருட்கள்
நாட்டு கோழி - 1 kg
பட்டை, கிராம்பு - 2
சோம்புத்தூள் - 2 spoon
ஏலக்காய் - 2
மஞ்சள்தூள் - 1/2 spoon
மிளகாய்த் தூள்- 1 1/2 spoon
தேங்காய் - 1 மூடி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி/பூண்டு விழுது - 3 spoon
காய்ந்த மிளகாய் - 4
தக்காளி - 250 gm
சிறிய வெங்காயம் - 250 gm
எண்ணெய்
செய்முறை
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். நாட்டுக்கோழியை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
மிக்சியில் மஞ்சள் தூள் அரை ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன், சோம்புத்தூள் ஒரு ஸ்பூன், மல்லித்தூள் இரண்டு ஸ்பூன், மிளகாய்த் தூள் ஒன்றரை ஸ்பூன், தேங்காய், கசகசா, சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, ஏலக்காய், மிளகாய் முதலியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அத்துடன் சிறிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும். தக்காளி சிறிதளவு வதங்கியதும் சுத்தம் செய்த கோழியை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும். கறி நன்றாக வெந்து கெட்டியாக வரும் நிலையில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும். இப்போது சுவையான செட்டிநாடு கோழி கரோடா தயார்,
செட்டிநாடு நண்டு மசாலா
தேவையான பொருட்கள்
நண்டு-750 கிராம்
சின்ன வெங்காயம் -100 கிராம்
தக்காளி -2
பச்சைமிளகாய் -2
வரமிளகாய்-4
தேங்காய் - தேவையான அளவு
மல்லி-1 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
சோம்பு -1 தேக்கரண்டி
மிளகு -1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
மல்லித்தூள் -1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை
முதலில் நண்டை சுத்தம் செய்து கழுவி வைத்துக்கொள்ள வேண்டும் .
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ததும் சோம்பு ,சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் .
பிறகு இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும் .
மிக்சியில் தேங்காய் ,மல்லி,சீரகம் ,மிளகு ,சோம்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
இப்பொழுது அரைத்த விழுது,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லித்தூள்,மிளகுத்தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு நண்டை சேர்த்து நன்றாக வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும் .
நண்டு நன்றாக வெந்து கிரேவி பதம் வந்த தும் சிறிதளவு மல்லி இலை மற்றும் மிளகுத்தூள் தூவி அடுப்பில் இருந்து இறக்கி சூடான சாதம் உடன் பறிமாறவும்.
சுவையான செட்டிநாடு நண்டு மசாலா தயார்
செட்டிநாடு மீன் வறுவல்
தேவையான பொருட்கள்
சுத்தம் செய்த மீன் -1 கிலோ
வரமிளகாய்தூள் -2 1/2 டேபிள்ஸ்பூன்
தனியாதூள் -2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
நறுக்கிய இஞ்சி -1 டீஸ்பூன்
பூண்டுப்பல் -5
கறிவேப்பிலை -1 ஈர்க்கு
புளிபேஸ்ட் -2 டீஸ்பூன்
கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
உப்பு -தேவைக்கு
மசாலா செய்ய:
கிராம்பு -4
பட்டை - 1" அளவு
ஏலக்காய் -3
மிளகு -10
சீரகம் -1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் -1/2 டீஸ்பூன்
அன்னாசிப்பூ -2 இதழ்
ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் மசாலா செய்ய கொடுக்கபட்டுள்ள பொருட்களை பொடி செய்யவும்.பின் மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
பின் இஞ்சி, பூண்டுப்பல், கறிவேப்பிலை, சேர்த்து அரைக்கவும்
ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலா,மீன்,புளிபேஸ்ட், உப்பு சேர்த்து கலந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
பொரிப்பதற்கு முன் கடலைமாவு சேர்க்கவும்.கடாயில் எண்ணெய் காயவைத்து மீனை சேர்த்து இருபக்கமும் பொன்னிறமாக பொரிக்கவும்.
செட்டிநாடு மிளகு சிக்கன்
தேவையான பொருட்கள்
கோழி - 1 கிலோ
வெங்காயம் - 5 நன்றாக நறுக்கப்பட்டது
தக்காளி - 3 நன்றாக நறுக்கப்பட்டது
இஞ்சி- பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3 நீளவாக்கில் பிளக்கப்பட்டது
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
காஷ்மீர் மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 1/2 தேக்கரண்டி
மிளகு நொறுக்கப்பட்டது - 1 தேக்கரண்டி
தேங்காய் துண்டுகள் - 1தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு தண்டு
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
மிளகாய்த் தூள் பாதியளவு, மிளகுத்துள் பாதியளவு, உப்பு, எலுமிச்சை சாறு பாதியளவு, மஞ்சள் தூளுடன் சிக்கன் துண்டுகளையும் மேரினேட் செய்து எடுத்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது, மிளகாய், மஞ்சள் தூள், கொத்துமல்லி, கரம் மசாலா மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
தக்காளி சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வேகவைத்து உப்பு சேர்க்கவும். தக்காளியை மசித்து மேரினேட் செய்து சிக்கன் துண்டுகளைச் சேர்க்கவும். மூடியிட்டு குறைவான தீயில் சிக்கனை வேகவைக்கவும்.
சிக்கன் வேகவைக்கப்பட்டதும், சிக்கனில் இருந்து தண்ணீர் வெளிவரும். மிளகு சேர்த்து 2 நிமிடங்களுக்கு சமைக்கவும். எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை நிறுத்திவிடவும்.
இன்னொரு பாத்திரத்தில், தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி கறிவேப்பிலையையும் காய்ந்த தேங்காய்த் துண்டுகளையும் சேர்க்கவும். அவற்றை வறுத்து சிக்கனைச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.
மஸ்ரூம் செட்டிநாடு மசாலா
தேவையான பொருட்கள்
மஷ்ரூம் 10
ஆனியன் 2
டோமடோ 1
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
மிளகாய் பொடி 1 டீ கரண்டி
தனியா 1 டீ கரண்டி
சோம்பு 1 டீ கரண்டி
ஜீரகம் 1 டீ கரண்டி
மிளகு1/2 டீ கரண்டி
காஞ்ச மிளகாய் 3
தேங்காய் 1 பத்தை
என்னை தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் கடாயில் சிறிது என்னை ஊற்றி தனியா காஞ்ச மிளகாய் மிளகு ஜீரகம் சோம்பு தேங்காய் வதக்கி அரைத்து வைத்து கொள்ள வேண்டும்
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ஜீரகம் போட்டு ஆனியன் வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்
புன்பு அறிந்து வைத்துள்ள மஷ்ரூம்ஐ அதில் சேர்த்து நன்கு வதக்கி வேண்டும்
இப்பொழுது சில்லி பொடி உப்பு சேர்த்து அரைத்து விழுதை சேர்த்து நன்கு வதக்கி பத்து நிமிடம் வதக்கி கறிவேப்பிலை சேர்த்து படிமாரவேண்டும்
செட்டிநாடு வத்தக்குழம்பு
தேவையான பொருட்கள்
சுண்டைக்காய் வத்தல் 2 மேஜைக்கரண்டி
புளி ஒரு எலுமிச்சை அளவு
பெரிய வெங்காயம் 1
தக்காளி-3
உப்பு தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் 4 மேஜைக்கரண்டி
பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை இரண்டு கொத்து
வத்த குழம்பு பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் 6
கொத்துமல்லி விதைகள் 1 மேசைக்கரண்டி
துவரம் பருப்பு 1 தேக்கரண்டி
மிளகு 1/4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
சீரகம் 1/4 தேக்கரண்டி
வெந்தயம் 1/4 தேக்கரண்டி
எண்ணெய் வறுக்க 1 தேக்கரண்டி
செய்முறை
ஒரு வாணலியில் வத்தக் குழம்பு பொடி செய்வதற்கான அனைத்து பொருட்களையும் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்
அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சுண்டைக்காயை வறுத்து தனியே வைத்து கொள்ள வேண்டும்.
பின் நல்லெண்ணெய்யை ஊற்றி வெங்காயத்தை வதக்கிக் கொள்ள வேண்டும்
பெருங்காயத் தூளை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்
தக்காளியை சேர்த்து நன்கு குழையும் வரை வதக்க வேண்டும்
வறுத்த வத்தக் குழம்பு மசாலாவை பொடி செய்து கொள்ள வேண்டும்
மஞ்சள்பொடி வத்தக் குழம்பு பொடி உப்பு தேவைக்கேற்ப சேர்க்க வேண்டும்
எலுமிச்சை அளவு புளியை நன்கு 1 கப் தண்ணீரில் கரைத்து கெட்டியாக கலவையில் சேர்கவும்
குறைந்த தணலில் நன்கு வேக வைக்க வேண்டும்
வறுத்து சுண்டைக்காயை அதனுள் சேர்க்க வேண்டும்
எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை குறைந்த தணலில் இருத்தல் வேண்டும்
எண்ணெய் பிரிந்து மேலே வந்தபின் கருவேப்பிலை சேர்க்க வேண்டும்
இதுவே செட்டிநாடு ஸ்பெஷல் வத்தக்குழம்பு ஆகும்.
செட்டிநாடு மட்டன் குழம்பு
தேவையான பொருட்கள்
மட்டன் : ½ கிலோ
நல்லெண்ணெய் : 4 - 5 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் : 15 - 20
தக்காளி : 1
பச்சை மிளகாய் : 2
பட்டை : சிறிதளவு
கிராம்பு : 2
ஏலக்காய் : 2
சோம்பு : ½ மேஜைக்கரண்டி
பிரியாணி இலை : 1
இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
கருவேப்பிலை : சிறிதளவு
கொத்தமல்லி தழை : சிறிதளவு
வறுத்து அரைக்க
தேங்காய் துருவல் : 3 மேஜைக்கரண்டி
சீரகம் : 1 மேஜைக்கரண்டி
மிளகு : ½ மேஜைக்கரண்டி
சிவப்பு மிளகாய் : 5
மல்லி : 1 மேஜைக்கரண்டி
செய்முறை
மட்டன் யை சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்து தனியே வைக்கவும்
ஒரு கடாயில் 1 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு சீரகம் , மிளகு , சிவப்பு மிளகாய் , தேங்காய் துருவல் ஆகியவற்றை 1நிமிடம் மிதமான தீயில் வறுத்து , சூடு தணிந்த பின் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து தனியே வைக்கவும்
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை , கிராம்பு , ஏலக்காய் , பிரியாணி இலை சேர்த்து 10 செகண்ட் கழித்து பின் சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் . பின் தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும்
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
பின் வறுத்து அரைத்த விழுது , உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் மட்டன் யை சேர்த்து 1 நிமிடம் கிளறி மிதமான தீயில் வேக வைக்கவும்.
பின் அவற்றை ஒரு குக்கருக்கு மாற்றி மட்டன் முழ்கும் அளவு தண்ணீர் விட்டு 3 - 4 விசில் ( 15 - 20 ) நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்
பின் கொத்தமல்லி தழை சேர்க்கவும்
செட்டிநாடு சிக்கன் கிரேவி
தேவையான பொருட்கள்
பட்டை 1
கிராம்பு 2
ஏலக்காய் 2
அன்னாசி பூ 1
மிளகு 1 ஸ்பூன்
கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்
சீரகம் 2 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 3
தேங்காய் துருவல் 1/4 கப்
பிரியாணி இலை 1
சின்ன வெங்காயம் 15
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
தக்காளி 2
சிக்கன் 500 கிராம்
மஞ்சள்தூள் 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
அடுப்பில் வாணலியை வைத்து பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ சோம்பு மிளகு சீரகம் மிளகாய் வற்றல் சேர்த்து வறுக்கவும்
தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுக்கவும்
நன்றாக வறுபட்டதும் அடுப்பை அணைத்து விடவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சிக்கனை சேர்க்கவும்.
சிக்கன் வெந்ததும் கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.ச
செட்டிநாடு சிக்கன் கிரேவி.
சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி தயார்
செட்டிநாடு மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி/சீரகசம்பா அரிசி 3 கப்
மட்டன் 1/2கிலோ
தேங்காய் 1/2 மூடி
இஞ்சி 150கிராம்
பூண்டு 100 கிராம்
பெரிய வெங்காயம் 3
சின்ன வெங்காயம் 100
தக்காளி 3
பச்சைமிளகாய் 5
மிளகாய்தூள் 1ஸ்பூன்
கரம்மசாலா 1ஸ்பூன்
பிரியாணி மசாலா 1ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி அரைகட்டு
எலுமிச்சை 1/2 பழம்
தயிர் 1கப்
எண்ணெய்
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு தலா 2
செய்முறை
மட்டனுடன் தயிர், கரம்மசாலா, இஞ்சிபூண்டு விழுது 1ஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக விடவும். சின்ன வெங்காயத்தை ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ளவும்.(உரலில் தட்டிக் கொள்ளலாம்). தேங்காயுடன் இஞ்சியை சேர்த்து அரைத்து பால் எடுத்து வைக்கவும். பூண்டு தனியாக அரைத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்கள் சேர்த்து வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தூள் வகைகளை சேர்க்கவும்
புதினா, கொத்தமல்லி பாதி அளவு சேர்த்து வதக்கி, பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசம் போக வதக்கவும். தக்காளி வதக்கி, தயிர் சேர்த்து வதக்கி வேக வைத்த மட்டனை வடித்து சேர்க்கவும்
தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் ஒன்றாக கலந்து 5 கப் ஊற்றவும். உப்பு தேவையான அளவு பார்த்து சேர்க்கவும்
அரிசியை சேர்க்கவும். 5 நிமிடம் முழு தீயில் மூடி வேக விட்டு, பின் திறந்து மீதி புதினா கொத்தமல்லி, எலுமிச்சை பிழிந்து, கேசரிகலர் ( விரும்பினால்) சேர்த்து மூடி பத்து நிமிடம் சிம்மில் வேக வைக்கவும்
தம் அடங்கியதும் இறக்கி நெய்யில் முந்திரி தாளித்து சேர்க்கவும். சுவையான செட்டிநாடு மட்டன் பிரியாணி தயார்.
ஆம்பூர் மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்
சீரக சம்பா அரிசி அரை கிலோ
மட்டன் அரை கிலோ
வெங்காயம்-3
தக்காளி-3
பட்டை ஒரு சிறிய துண்டு
கிராம்பு-2
ஏலக்காய் ஒன்று
அன்னாசி பூ 1
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
தனியா தூள் ஒன்றரை ஸ்பூன்
கரம் மசாலா தூள் ஒன்றரை ஸ்பூன்
எண்ணெய் 8 ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
புதினா இலைகள் ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி அளவு
உப்புத்தூள் இரண்டு ஸ்பூன்
கெட்டியான தயிர் 2 ஸ்பூன்
எலுமிச்சம் பழம் பாதி
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து சீரக சம்பா அரிசியை 70% வேக வைத்து தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
கொத்தமல்லி கருவேப்பிலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலாத்தூள் பட்டை லவங்கம் எலுமிச்சம்பழம் தயிர் ஆகியவற்றை ரெடியாக எடுத்து வைக்கவும்
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் ஊற்றவும்
எண்ணெய் காய்ந்ததும் பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை தாளிக்கவும்
சிறிது வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும்
மீதி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்
தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்
மசாலா பொடிகள் உப்பு சேர்க்கவும்
மட்டனையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விட்டு குக்கரை மூடவும்
பத்து நிமிடம் மிதமான தீயில் மட்டனை வேக வைத்து குக்கரை ஆப் செய்யவும்
ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து தயிர் எலுமிச்சம்பழ சாறு சேர்க்கவும்
இந்த மட்டன் கிரேவியில் சாதத்தை சேர்த்துக் கொள்ளவும்
எல்லாவற்றையும் நன்றாக கலக்கி பிறகு வெந்த சாதத்தை அதில் கொட்டி தம் கட்ட வேண்டும்.
10 நிமிடம் தம் கட்டிய பிறகு அடுப்பை ஆப் செய்யவும்
கொத்துமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்
வேக வைத்த முட்டை புளி கத்திரிக்காய் வெங்காய பச்சடி சைட் டிஷ் ஆக வைத்து பரிமாறவும்
ஆம்பூர் சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள்
கோழி 500 கிராம்
வெங்காயம் 2 நடுத்தர அளவில் (மெலிதாக வெட்டப்பட்டது)
தக்காளி 2 பெரியது (மெலிதாக வெட்டப்பட்டது)
இஞ்சி - பூண்டு விழுது 1 & 1/2 தேக்கரண்டி
தயிர் 1/4 கப் (கட்டியானது)
கொத்துமல்லி, புதினா இலைகள் 2 தேக்கரண்டி (நன்றாக நறுக்கப்பட்டது)
கிராம்பு 4
இலவங்கப்பட்டைக் குச்சிகள் 2 இன்ச்
பே இலைகள் 1 சிறிய இலை
ஏலக்காய் 3
எண்ணெய் 1/4 கப்
உப்பு சுவைக்கு
சீரக சம்பா அரிசி 2 கப்
தரையில் உலர்த்திய சிவப்பு மிளகாய் 15
செய்முறை
குறைந்தது 30 நிமிடங்களுக்கு முதலில் சிவப்பு மிளகாயை தண்ணீரில் ஊறவைத்து காயவைக்கவும். அதன்பிறகு மிகக்குறைவாக தண்ணீர் விட்டு அதை கெட்டியான சாந்தாக அரைத்துக்கொள்ளவும். எடுத்து வைத்துக்கொள்ளவும்
கோழியை நன்றாகச் சுத்தப்படுத்திக் கழுவிக்கொள்ளவும்.
சீரகச் சம்பா அரிசையைக் கழுவி குறைந்தது 30 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊறவைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் 3 லிட்டர் தண்ணீரை கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிவிட்டதும், 1 தேக்கரண்டி உப்பு, 1 தேக்கரண்டி எண்ணெய்விடவும், அதன்பிறகு ஊறவைத்த சீரக அரிசியை சேர்த்துக்கொள்ளவும். 3/4 அளவு வேக வைத்துக்கொள்ளவும்.
சீரக அரிசை அதிகமாகவோ முழுமையாகவே வேகவைக்கவேண்டாம், இது மிகவும் அவசியம். பிரியாணியை டிரம்மில் சமைக்கப்போவதால் அரிசியை நீங்கள் 3/4 அளவு வேக வைக்கவேண்டும். 3/4 அளவு வெந்ததும், தண்ணீரை வடிகட்டிவிட்டு சமைத்த அரிசியை எடுத்து வைத்துக்கொள்க.
பள்ளமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் எண்ணெயை சூடுபடுத்திக்கொள்ளவும் (நான் பிரஷர் குக்கர் பயன்படுத்தினேன்). ஒரு தேக்கரண்டி தயிரைச்சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். கிராம்பு, இலவங்கப்பட்டை, பே இலை, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துகொள்ளவும்.
2 தேக்கரண்டி நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்த்து கலந்துகொள்க. இஞ்சிபூண்டு விழுது சேர்த்து சாந்தின் பச்சை போகும்வரை வதக்கவும்.
கோழியைச் சேர்த்து கோழியின் நிறும் வெள்ளையாகும்வரை சமைக்கவும்.
அதன்பின் 1 தேக்கரண்டி நறுக்கப்பட்ட கொத்துமல்லி, புதினா இலைகளைச்சேர்த்து கலந்துகொள்க.
நறுக்கப்பட்ட வெங்காயம், தக்காளியைச்சேர்த்து தக்காளி மிருதுவாகும்வரை சமைக்கவும்.
அரைத்த சிவப்பு மிளகாய்ச் சாந்து, சுவைக்கேற்ற உப்பைச் சேர்த்து கலக்கி நடுத்தர தீயில் மேலும் 5 நிமிடங்களுக்குச் சமைக்கவும்.
மீதமுள்ள தயிரையும் சேர்த்து கலந்துகொள்ளவும். அதை மேலும் 2 நிமிடங்கள் வேகட்டும்.
இதற்குள் கோழி 3/4 பங்கு வெந்திருக்கவேண்டும். இப்போது அடிப்பாகத்திற்குச்சென்றிருக்கும், பிரியாணியை டிரம்மில் போடவும்.
பல அடுக்குகள் எனக்கு வேண்டும் என்பதால் அரிசியைச்சேர்ப்பதற்கு முன் சிக்கன் மசாலாக் கலவையில் பாதியை எடுத்துக்கொண்டேன். உங்கள் வேண்டுமென்றால் 1 அடுக்கு மட்டும் செய்துகொள்ளவும்.
சிக்கன் அடுக்கின் மீது சாதத்தில் பாதியைச் சேர்த்து கொத்துமல்லி புதினா இலைகளைத் தூவவும்.
இப்போது நாம் எடுத்து வைத்த சிக்கன் மசாலாவைக் கலந்து இரண்டாவது அடுக்கைச் சேர்க்கவும். முடிந்தளவிற்குச் சமப்படுத்தவும், அதன்பிறகு மீதமுள்ள சாதத்தையும் சேர்த்து கொத்துமல்லி- புதினா இலைகளைத் தூவவும்.
குறைவான வெப்பத்தில் உணவை வைத்து, மூடி ஆவியை உள்ளேயே வைத்துக்கொள்ள கனமானப்பொருள் ஒன்றை தட்டின் மீது வைக்கவும் (இது உத்திரவாதமுள்ள டிரம் இல்லை என்பது எனக்குத் தெரியும், இருந்தாலும் வீட்டில் இது தான் சௌகரியமானது)
பிரியாணி குறைவான வெப்பத்தில் 20 நிமிடங்களுக்கு வேகட்டும்.
அவ்வளவுதான். ஆம்பூர் பிரியாணி ரெடி. சீரக சம்பா அரிசியினால் இது வேறுவிதமான சுவையைக்கொண்டிருக்கும். இந்த பிரியாணியின் தோற்றமும் சுவையும் சப்புக்கொட்டவைக்கும்.
வெங்காய ரைத்தா அவித்த முட்டையுடன் சூடாகப் பரிமாறவும்.
மதுரை கலக்கி
தேவையான பொருட்கள்
முட்டை 1
உப்பு தேவையான அளவு
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
மிளகு சீரகத்தூள் 1 ஸ்பூன்
சால்னா 3 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் முட்டை உடைத்து ஊற்றவும்.மிளகாய்த்தூள் மிளகு சீரகத்தூள் உப்பு சேர்க்கவும்.
சால்னா சேர்க்கவும்.
நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
முட்டையை அதில் ஊற்றவும்.
ஊற்றிய உடனே அனைத்து பக்கங்களிலும் மடித்து விட்டு உடனே எடுத்து விடவும்.
சுவையான மதுரை கலக்கி தயார்.
மதுரை கறி வடை
தேவையான பொருட்கள்
மட்டன் கொத்தியது கால் கிலோ
பூண்டு 2
ஒரு துண்டு இஞ்சி
சாம்பார் வெங்காயம் 100 கிராம்
பட்டை ஏலக்காய் கிராம்பு ஒன்று
கசகசா ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 4
பொட்டு கடலை 50 கிராம்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 200 மில்லி
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி கறி துண்டுகளை வதக்கி கொள்ளவும் அதே கடாயில் பொட்டுக்கடலை வெங்காயம் காய்ந்த மிளகாய் இஞ்சி பூண்டு பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து வதக்கவும்
மிக்சியில் கரித்துண்டுகள் பொட்டுக்கடலை பட்டை ஏலக்காய் இஞ்சி பூண்டு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிய வடைகளாக தட்டி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
சுவையான கறி வடை தயார்
மதுரை கலக்கி
தேவையான பொருட்கள்
முட்டை 1
உப்பு தேவையான அளவு
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
மிளகு சீரகத்தூள் 1 ஸ்பூன்
சால்னா 3 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் முட்டை உடைத்து ஊற்றவும்.மிளகாய்த்தூள் மிளகு சீரகத்தூள் உப்பு சேர்க்கவும்.
சால்னா சேர்க்கவும்.
நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
முட்டையை அதில் ஊற்றவும்.
ஊற்றிய உடனே அனைத்து பக்கங்களிலும் மடித்து விட்டு உடனே எடுத்து விடவும்.
சுவையான மதுரை கலக்கி தயார்.
மதுரை கறி வடை
தேவையான பொருட்கள்
மட்டன் கொத்தியது கால் கிலோ
பூண்டு 2
ஒரு துண்டு இஞ்சி
சாம்பார் வெங்காயம் 100 கிராம்
பட்டை ஏலக்காய் கிராம்பு ஒன்று
கசகசா ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 4
பொட்டு கடலை 50 கிராம்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 200 மில்லி
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி கறி துண்டுகளை வதக்கி கொள்ளவும் அதே கடாயில் பொட்டுக்கடலை வெங்காயம் காய்ந்த மிளகாய் இஞ்சி பூண்டு பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து வதக்கவும்
மிக்சியில் கரித்துண்டுகள் பொட்டுக்கடலை பட்டை ஏலக்காய் இஞ்சி பூண்டு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிய வடைகளாக தட்டி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
சுவையான கறி வடை தயார்
மதுரை கறி தோசை
தேவையான பொருட்கள்
தோசை மாவு 4 மேசைக்கரண்டி
கொத்துக்கறி கிரேவி 2 குழிக்கரண்டி
முட்டை இரண்டு
மஞ்சள் தூள் ஒரு பின்ச்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
முதலில் ஊத்தாப்பம் போல் ஒரு தோசை ஊற்றவும்
அதன்மேல் முட்டை உப்பு மஞ்சள்தூள் சேர்த்து அடித்து வைத்த கலவையை ஊற்றவும்
பிறகு கொத்துக்கறி கிரேவி எடுத்து அதன் மேல் வைத்து சுற்றி தேய்க்கவும்
ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி போடவும்
இரு புறம் வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்
சுவையான கொத்து கறி தோசை ரெடி
மதுரை பொடிமாஸ்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு மீடியம் சைஸ் 3
எண்ணெய் தேவையான அளவு
கடுகு ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
சீரகம் ஒரு டீஸ்பூன்
வரமிளகாய்-2
கருவேப்பிலை சிறிதளவு
பூண்டு 6 பல்
பெரிய வெங்காயம் ஒன்று
வர மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
கரம் மசாலா ஒரு ஸ்பூன்
கடலை மாவு 2 டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி தழை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் நன்கு வேக வைத்துக் கொள்ளவும்
தோல் உரித்து தனியாக ஒரு ஒன்றிரண்டாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்
வாசனை வந்த பிறகு பூண்டு சேர்த்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்
மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளற வேண்டும்
அதன் பிறகு வர மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்
தேவையான அளவு உப்பு சேர்த்து கடலை மாவு 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வதக்க வேண்டும்
கடைசியாக கொத்துமல்லி தழை தூவி இறக்கி விட வேண்டும்
மதுரை கொத்து கறி
தேவையான பொருட்கள்
ஆட்டுக்கறி கொத்தியது(மட்டன் கொத்துக் கறி) 300 கிராம்
எண்ணெய் 3 ஸ்பூன்
பட்டை 1
கிராம்பு 1
ஏலக்காய் 1
அன்னாசி பூ 1
சோம்பு 1/2 ஸ்பூன்
சிறிய வெங்காயம் 15-20
கருவேப்பிலை சிறிது
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
பெரிய தக்காளி 1
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1-2 ஸ்பூன்
மல்லி தூள் 1 ஸ்பூன்
கரம் மசாலா 1 ஸ்பூன்
சீரகத்தூள் 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
மட்டன் கொத்துக் கறியை கழுவி மஞ்சள்தூள் போட்டு கிளறி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ சேர்க்கவும்.
சோம்பு சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.த
தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
கொத்துக் கறியை சேர்க்கவும்.
நன்றாக வதக்கவும்.
கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்
எண்ணெயில் மட்டனை சில நிமிடங்கள் வதக்கவும்.
மட்டன் வேக தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.மட்டன் நன்றாக வேகும் வரை மூடி வைத்து வேக விடவும்.
மட்டன் வெந்ததும் சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.
எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
தண்ணீர் வற்றி மட்டன் வேகும் வரை காத்திருக்கவும். கொத்துக் கறி என்பதால் 15 நிமிடங்களில் வெந்து விடும்.
சுவையான மதுரை கொத்துக் கறி தயார்.
மதுரை பன் பரோட்டா
தேவையான பொருட்கள்
மைதா 2 கப்
முட்டை 1
பால் 1/4 கப்
உப்பு தேவையான அளவு
சர்க்கரை 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு முட்டை பால் சர்க்கரை உப்பு சேர்த்து கொள்ளவும்.
நன்றாக கலந்து கொள்ளவும்.
நன்றாக பிசைந்து கொள்ளவும்.
குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் பிசைந்து கொள்ளவும்.
எண்ணெய் தடவி2 மணி நேரம் மூடி வைக்கவும்.
சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
நன்றாக மெல்லியதாக தேய்த்துக் கொள்ளவும்.
அனைத்து பக்கங்களிலும் உள்ளே மடித்துக் கொள்ளவும்.
அதை சுருட்டி கொள்ளவும்.
அப்படி யே கையை வைத்து அழுத்தி கொள்ளவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி பரோட்டாவை பொரித்து எடுக்கவும்.இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான மதுரை பன் பரோட்டா தயார்.
மதுரை மட்டன் சூப்
தேவையான பொருட்கள்
நள்ளியெழும்பு mutton 1/4kg
சின்ன வெங்காயம் 1/2 கப்
தக்காளி 1 பழம்
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
மிளகு தூள் 1 ஸ்பூன்
மிளகு 5
ஜீரகம் 1/4 ஸ்பூன்
நல்லெண்ணனை 4 ஸ்பூன்
2ஆம் தேங்காய் பால் 1 கப்
முதல் தேங்காய் பால் 1 கப்
கறிவேப்பிலை 1 கீத்து
மல்லி இலை சிறிது
செய்முறை
குக்கர் சூடுபடுத்தி, நல்லெண்ணெய் ஊற்றி மிளகு, ஜீரகம் சேர்க்கவும்
நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை செல்லும் வரை வதக்கவும்
நறுக்கிய தக்காளி சேர்த்து, உப்பு , மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மசியும் பக்குவம் வரும் வரை வதக்கவும்
இடை இடையில் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்
இப்போது கறி துண்டுகள் சேர்த்து , பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
இப்போது 2ஆம் தேங்காய் பால் 1 கப் , கறி முங்க தண்ணீர் சேர்த்து குக்கர் மூடவும்
20 நிமிடம் low flame ல் வேக விடவும்
Pressure இறங்கியதும் முதல் தேங்காய் பால் சேர்த்து கலந்து விடவும்
பரிமாறும் பொழுது மல்லி கறிவேப்பிலை சேர்த்து, மிளகு பொடி தூவி கொடுக்கவும்
சிறப்பான மதுரை சூப் தயார்
மதுரை கோலா உருண்டை
தேவையான பொருட்கள்
250 கிராம் கொத்துக்கறி
ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
நான்கு துண்டு சின்ன வெங்காயம்
1/4' தேக்கரண்டி கரம் மசாலாத்தூள்
1/4 தேக்கரண்டி சோம்பு
ஒரு தேக்கரண்டி பொட்டுக்கடலை
இரண்டு பச்சை மிளகாய்
சிறிதளவு கொத்தமல்லி இலைகள்
பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
கொத்துக்கறியை நன்றாக கழுவிக் கொள்ளவும்
பின் அதனை ஒரு மின் கலவையில் போடவும்
அதனுடன் வெள்ளை பூண்டு வெங்காய கலவை வெங்காயம் கரம் மசாலா பச்சை மிளகாய் பொட்டுக்கடலை உப்ப, சோம்பு,தேங்காய் போன்றவற்றை போடவும்.
நன்றாக அரைத்துக் கொண்டு பின் வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேற்றவும்
எண் காயம் இடைவேளையில் கறி உருண்டைகளை உருட்டி வைக்கவும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
எண்ணை காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
மதுரை கோலா உருண்டை தயார்
மதுரை ஸ்டைல் மட்டன் சுக்கா
தேவையான பொருட்கள்
மட்டன்
பெரிய வெங்காயம் ஒன்று
தக்காளி ஒன்று
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு மட்டன் குழம்பில் உள்ள மட்டன் துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து நன்கு வதக்கவும்
மட்டன் குழம்பில் உள்ள இரண்டு ஸ்பூன் குழம்பு மற்றும் வெங்காயம், tomato சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்
தேவைப்பட்டால் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கி சப்பாத்தியுடன் பரிமாறவும்
மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகர்தண்டா
தேவையான பொருட்கள்
பால் 1 கப்
பாதாம் பிசின் 3 ஸ்பூன்
பிரவுன் சுகர் 3 ஸ்பூன்
வெண்ணிலா ஐஸ்கிரீம் ஒன்று அல்லது இரண்டு ஸ்கூப்
செய்முறை
பாதாம் பிசின் இரண்டு கட்டிகள் எடுத்து முதல் நாள் இரவே ஒரு கிண்ணத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும்
பிரவுன் சுகர் 3 போனை கடாயில் மிதமான தீயில் தண்ணீர் சேர்க்காமல் கிளறிக்கொண்டே இருந்தால் சர்க்கரை கரைந்துவிடும். சிறிது நேரத்தில் அடுப்பை அணைக்கவும்
பாலை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கொதிக்கவிட வேண்டும். பால் சிறிதளவு கெட்டியாகும் வரை நன்றாக கொதிக்க வேண்டும்
ஃப்ரிட்ஜில் வைத்து நன்றாக குளிர வைக்கவும்
ஒரு டம்ளரில் முதலில் பாதாம் பிசின் 3 ஸ்பூன் சேர்க்கவும்
நன்னாரி சர்பத் 2ஸ்பூன் சேர்க்கவும்
குளிர்ந்த பால் ஒரு கப் சேர்க்கவும்
காய்ச்சி வைத்திருக்கும் பிரவுன் சுகர் ஐ சேர்க்கவும்
நன்றாக கிளறி விட்டு வெண்ணிலா 1 to 2 ஸ்கூப் தேவைக்கு ஏற்றார்போல் சேர்க்கவும்
ஜில் ஜில் ஜிகர்தண்டா ரெடி
சென்னை வடகறி
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு அரை கப்
பச்சை மிளகாய் ஒன்று
இஞ்சி சிறு துண்டு
பூண்டு 5 பல்
சோம்பு அரை டீஸ்பூன்
தேங்காய் 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி 2 டேபிள்ஸ்பூன்
பட்டை ஒன்று
பிரிஞ்சி இலை ஒன்று
எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
பொடியாக அரிந்த வெங்காயம் 3
பொடியாக அரிந்த தக்காளி மூன்று
இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் காரத்திற்கு ஏற்ப
கரம் மசாலா தூள் கால் டீஸ்பூன்
தனியா தூள் 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
கடலைப் பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
மிக்ஸியில் ஊறிய பருப்பு பூண்டு இஞ்சி சோம்பு பச்சை மிளகாய் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
அரைத்த மாவை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்
வடை ரெடி
கடாயில் எண்ணெய் விட்டு பட்டை பிரிஞ்சி இலை சோம்பு தாளிக்கவும்
பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து வதக்கவும்
நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்
உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் 10 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்
இதனுடன் அரைத்த முந்திரி தேங்காய் கலவை பொரித்து வைத்துள்ள வடை சேர்த்து வதக்கவும்
சிறிது தண்ணீர் கலந்து 5 நிமிடம் குறைந்த தீயில் நன்றாக வேக விடவும்
சென்னை வடைகறி ரெடி
சென்னை பொடி இட்லி
தேவையான பொருட்கள்
இட்லிமாவு-1கப்
இட்லி பொடி 1 /2கப்
நல்லெண்ணெய் 6 டேபிள்ஸ்பூன்
தக்காளி சட்னி 1 கப்
செய்முறை
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு செய்யவும் இட்லி தட்டில் சிறிது மாவை எடுத்து ஊற்றி வேகவிடவும் இட்லி வெந்ததும் எடுத்து ஆறவிடவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இட்லி பொடி வேக வைத்த இட்லி சேர்த்து கிளறி பரிமாறலாம்
சென்னை ரோட்டு கடை பொடி இட்லி தயார்
நல்லெண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம்
தக்காளி சட்னி தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்
சென்னை பட்டர் நாண்
தேவையான பொருட்கள்
மைதா மாவு 1கப்
பேக்கிங் சோடா 1பின்ச்
உப்பு 1பின்ச்
தண்ணீர் 1கப்
வெண்ணெயை 4ஸ்பூன்
பூண்டு 5 பல்
மல்லி இலை சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு உப்பு தண்ணீர் பேக்கிங் சோடா சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும் பிசைந்த மாவை 60 நிமிடம் ஊற வைக்கவும்
பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் பூண்டுடன் கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கிக் கொள்ளவும்
பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து நான் ரொட்டி வடிவில் தேய்த்துக் கொள்ளவும்
தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நாண் ரொட்டிகளை இருபுறமும் பொன்னிறமானதும் கலக்கி வைத்துள்ள பெண்ணை பூண்டு மல்லி இலை கலவையை அதன் மேல் தடவி சுட்டு எடுக்கவும்
சுவையான பட்டர் நான் தயார்
சென்னை பேமஸ் வடகறி
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு 1 கப்
என்னை 100 மில்லி
பட்டை ஏலக்காய் பிரிஞ்சி இலை சோம்பு தாளிப்பதற்கு
வெங்காயம்-3
தக்காளி-2
இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் 1
மிளகாயத்தூள் 1டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா கால் டேபிள்ஸ்பூன்
உப்பு-1 ஸ்பூன்
பச்சை மிளகாய் ஒன்று
மல்லி புதினா இலை 1 பின்ச்
செய்முறை
கடலைப்பருப்பை ஊற வைத்துக் கொள்ளவும்
கடலைப்பருப்பை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் கடலைப் பருப்புடன் சிறிது உப்பு சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
தோசை தவாவில் கடலைபருப்பு சிறிய அடைகளாக சுட்டு எடுக்கவும்
இருபுறமும் பொன்னிறமானதும் அதை எடுத்து பொடியாக்கிக் கொள்ளவும்
எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை போட்டு பொரியவிடவும் பிறகு வெங்காயம் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுது தக்காளி உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறவும்
மசாலா பச்சை வாசனை போனவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் தண்ணீர் கொதி வந்தவுடன் கடலைப் பருப்பை சேர்த்து நன்கு வேக விடவும்
பிறகு மல்லி இலை புதினா சேர்த்து பரிமாறலாம் சுவையான வட கறி தயார்
சென்னை பீச் சுண்டல்
தேவையான பொருட்கள்
காய்ந்த வெள்ளை பட்டாணி 100கிராம் - கழுவி இரவு முழுதும் அல்லது 8-10 மணிநேரம் ஊறவைத்து, குக்கரில் 5 விசில் வரும்வரை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கவும்
தக்காளி 1, சிறியதாக இருந்தால் 2 பொடியாக நறுக்கவும்
பூண்டு 4 பற்கள் பொடியாக நறுக்கவும்
மஞ்சள் தூள் 2 சிட்டிகை
மிளகாய் தூள் ¾ தேக்கரண்டி
தனியா தூள் 1½ தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை 5
எண்ணெய் 3 தேக்கரண்டி
கடுகு ¼ தேக்கரண்டி
சோம்பு ¼ தேக்கரண்டி
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் பூண்டு, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறம் ஆகும்வரை வதக்கவும்.
பின்னர் தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
லேசாக எண்ணெய் விட ஆரம்பித்ததும், வேகவைத்துள்ள பட்டாணியை நீருடன் வெங்காயம் தக்காளி கலவையில் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
உப்பு சற்றே நீர்க்க இருக்க வேண்டும். தேவைக்கு தக்கபடி நீரூற்றி நன்கு கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சென்னை மசாலா நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்
நூடுல்ஸ் 250
பீன்ஸ் 1/2 கப்
ப்ரோகலி 1/2 கப்
வெங்காயம் 1
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு
ரசம் பொடி 2 தேக்கரண்டி
செய்முறை
காய்களி சிறிதாக நறுக்கி கொள்ளவும்
நூடுல்ஸ் தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வேகவைத்து வடித்து கொள்ள வேண்டும்
தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் அதன் மேல் போட்டு லேசாக சிவக்க வைத்து கொள்ள வேண்டும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்கறி வதக்கவும்
அதனுடன் உப்பு வறுத்த நூடுல்ஸ் சேர்த்து கிளறி ரசப்பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
சூடாக பரிமாறவும்
சென்னை வாழைக்காய் மசாலா
தேவையான பொருட்கள்
வாழைக்காய் ஒன்று
வெங்காயம்-2
தக்காளி ஒன்று
கறிவேப்பிலை 1 பின்ச்
சீரகம் 1ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 2
பூண்டு-10 பல்
மஞ்சள் தூள் ஒரு பின்ச்
உப்பும் 1 டேபிள் ஸ்பூன்
என்னை 50 மில்லி
மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
வாழைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிய பூண்டை தோல் உரித்து நசுக்கிக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் காய்ந்த மிளகாய் வெங்காயம் பூண்டு சேர்த்து பொரியவிடவும் பிறகு தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும் பிறகு பொடியாக நறுக்கிய வாழைக்காய் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வேக விடவும் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளவும்
இதை சாம்பார் சாதம் தயிர் சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்
வாழைக்காய் மசாலா தயார்
சென்னை ஸ்பெஷல் தயிர் வடை
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு ஒரு கப்
பச்சரிசி 2 மேசைக்கரண்டி
மிளகு தூள் சிறிதளவு
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவையான அளவு
துருவிய கேரட்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
காராபூந்தி 4 மேஜைக்கரண்டி
கெட்டி தயிர் 2 கப்
கடுகு கறிவேப்பிலை தாளிப்பதற்கு
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
செய்முறை
உளுந்துடன் சிறிதளவு பச்சரிசி சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்
இப்பொழுது இதனை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு உப்பு மிளகு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
இப்பொழுது தவாவில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் வடைகளை பொரித்து எடுக்கவும்
இப்பொழுது கெட்டித் தயிருடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்
தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளவும்
இதனை தயிருடன் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்
இப்பொழுது வடைகளை தயிரில் போடவும்
வடைகள் தயிரில் மூழ்கி இருக்குமாறு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
பிறகு இதனுடன் துருவிய கேரட் கொத்தமல்லி மற்றும் காராபூந்தி சேர்த்து பரிமாறவும்
இப்பொழுது சுவையான சென்னை ஸ்பெஷல் தயிர் வடை ரெடி
சென்னை ஸ்பெஷல் கோன் தோசை
தேவையான பொருட்கள்
தோசை மாவு செய்ய தேவையான பொருட்கள்
இட்லி அரிசி 4 கப்
உளுந்து ஒரு கப்
உப்பு 1 டேபிள்ஸ்பூன்
நெய் 10 டேபிள்ஸ்பூன்
செய்முறை
தோசை மாவு செய்ய அரிசி உளுந்து ஆகியவற்றை 3 மணி நேரம் ஊற வைத்து 8 மணி நேரம் புளிக்க வைத்து கொள்ளவும் புளித்த மாவுடன் உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்
தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிய தோசைகளாக ஊற்றி நெய் ஊற்றி மூடி வைத்து வேக விடவும் பிறகு கோன் வடிவில் சுற்றி பரிமாறலாம்
கோன் தோசை தயார் இதை தேங்காய் தக்காளி சட்னி ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
சென்னை பேமஸ் சில்லி பரோட்டா
தேவையான பொருட்கள்
பரோட்டா துண்டுகல் ஆறு
பெரிய வெங்காயம் 4
தக்காளி-2
பச்சை குடமிளகாய் 3
சிவப்பு குடைமிளகாய் ஒன்று
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா 1 டேபிள் ஸ்பூன்
உப்பு 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் 100 மில்லி
செய்முறை
பரோட்டாவை எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ளவும் பொரித்த பரோட்டா துண்டுகளை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
வெங்காயம் தக்காளி குடமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் தக்காளி குடை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி கொள்ளவும் பிறகு மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி மசாலா நன்கு கிடைத்தவுடன் அதில் பொரித்து வைத்துள்ள பரோட்டா துண்டுகளை சேர்த்து சுருளக் கிளறி பரிமாறலாம்
சுவையான சில்லி பரோட்டா தயார்
சென்னை முட்டை கொத்து பரோட்டா
தேவையான பொருட்கள்
பரோட்டா துண்டுகள் 5
வெங்காயம் 4
தக்காளி 2
இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
முட்டை 2
மஞ்சள் தூள் 1 பின்ச்
மிளகாய்த்தூள் 2ஸ்பூன்
கரம் மசாலா தூள் 1ஸ்பூன்
உப்பு 1 ஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
மல்லி இலை 1பின்ச்
செய்முறை
வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் பரோட்டா வை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் தக்காளி இஞ்சி-பூண்டு விழுது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
தக்காளி நன்கு வதங்கியதும் அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் முட்டை சேர்த்து வதக்கவும்
பிறகு பரோட்டா துண்டுகளை சேர்த்து கிளறி விடவும்
இறுதியில் மல்லி இலை தூவி இறக்கவும்
சுவையான முட்டை கொத்து பரோட்டா தயார்
சென்னை மெரினா வஞ்சிரம் மீன் வறுவல்
தேவையான பொருட்கள்
வஞ்சிரம் மீன் 1/2 கிலோ
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
எலிமிச்சை 1
எண்ணெய் தேவையான அளவு
மைதா 2 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
புளி கரைசல் 2 மேஜைக்கரண்டி
செய்முறை
மீனை நன்கு சுத்தம் செய்து உப்பு , மஞ்சள் தூள், மிளகாய் தூள், எலிமிச்சை சாறு, புளி கரைசல், மைதா ஆகியவற்றை சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவச்சுடுங்க
தோசை கல்லில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு காய்ந்ததும் மீன் துண்டுகளை இட்டு வறுத்து எடுக்கவும்
சுவையான சென்னை மெரினா வஞ்சிரமீன் வறுவல் தயார்
சென்னை ஸ்டைல் பிரான் ஸ்டார்ட்டர்ஸ்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
இறால் அரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
வெறும் மிளகாய் தூள் தனியா தூள் கரம் மசாலா தலா ஒரு தேக்கரண்டி
கான்பிளவர் மாவு மற்றும் அரிசி மாவு தலா ஒரு மேஜைக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு 1 டீ கரண்டி
செய்முறை
முதலில் இறாலை நன்றாக நரம்பெடுத்து சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்
இப்பொழுது கழுவி வைத்துள்ள இறாலை இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா உப்பு கார்ன் மாவு அரிசி மாவு சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்க
இப்பொழுது ஊற வைத்துள்ள இறாலை சிறிது எண்ணெய் சேர்த்து 5லிருந்து 8 நிமிடங்கள் முன்னும் பின்னுமாக பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும்
வறுத்து வைத்துள்ள இறாலை கறிவேப்பிலையை வறுத்து எடுத்து பரிமாறலாம்
சென்னை பேமஸ் ரோட்டுக்கடை மீன் வருவல்
தேவையான பொருட்கள்
மீன் அரை கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
மிளகுத் தூள் 2 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் 3 ஸ்பூன்
சீரகத்தூள் 3ஸ்பூன்
மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
கேசரி பவுடர் சிறிதளவு
பொரித்த இருப்பதற்கு எண்ணெய் தேவையான அளவு
எலுமிச்சம்பழம் 2
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
மஞ்சள் தூள் மிளகாய் தூள் மிளகு தூள் சீரகத் தூள் தனி மிளகாய் தூள் அனைத்தையும் மீனில் போட்டு நன்றாக ஊற வைக்கவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு ஊறிய மீன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்
பொரித்து எடுத்த உடன் எலுமிச்சம் பழம் பிழிந்து விடவும்
கருவேப்பிலை தாளித்து மீன் பொரியல் உடன் கொட்டவும்
காரமான சுவையான மீன் பொரித்தது ரெடி
வௌவால் மீன் மசாலா வறுவல்
தேவையான பொருட்கள்
வௌவால் மீன் - 8ல் இருந்து 10 துண்டுகள்
மசாலா அரைப்பதற்கு: மிளகு - 1 தேக்கரண்டி
பூண்டு - 6 எண்ணிக்கை
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
மஞ்கள்தூள் - 1/4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
எலுமிச்சை - 1/2 பிழிந்துகொண்டது
அடர்த்தியான புளிக்கரைசல் - 2 தேக்கரண்டி
பொறிப்பதற்கு எண்ணெய்
உப்பு - சுவைக்கு
செய்முறை
மீன் துண்டுகளை சுத்தப்படுத்தி நன்றாகக் கழுவிக்கொள்ளவும். எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்க. இப்போது மேரினேட் செய்வதற்கு முன் மசாலாவை அரைக்கவேண்டும்.
ஒரு மிக்சி ஜாரை எடுத்து மேலே குறிப்பிடப்பட்ட அனைத்துச் சேர்வைப்பொருள்களையும் ஒன்றன்பின் ஒன்றாக படத்தில் காண்பித்தபடி சேர்க்கவும். ஒரு அடர்த்தியான மசாலாவைப் பெறுவதற்கு சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
சமமாக மீன் மீது சாந்தை பூசி 1/2 மணி நேரத்திற்கு மேரினேட் செய்யவும். இப்போது தவா அல்லது கடாயை எண்ணெயுடன் எடுத்து நடுத்தர சூட்டில் சூடுபடுத்தவும்.
சூடானது, மேரினேட் செய்த மீனைச் சேர்த்து மீன் நன்றாக வேகும்வரை பொறிக்கவும்.
சாம்பார் சாதம், ரசம் மற்றும் அனைத்து வகையாக சாதங்கள், பிரியாணி, இன்னபிறவற்றோடு சூடாகப் பரிமாறவும்.
Comments
Post a Comment