இட்லி சாம்பார்
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 100 கிராம்
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 2
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 5 இலை
கடுகு – தாளிக்க
சீரகம் - அரை தேக்கரண்டி
செய்முறை
தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.
ப்ரஸர் குக்கரில் துவரம் பருப்பு,மஞ்சள் தூள், தனியா தூள், பெருங்காயம், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பூண்டு போட்டு தாளிக்கவும். பின்னர் கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
ப்ரஸர் குக்கரில் வேக வைத்துள்ள கலவையை மத்தால் நன்கு கடைந்து விடவும்.
பி்ன்னர் அந்த கலவையில் தாளித்தவற்றை கொட்டி கிளறவும்.
சுவையான சாம்பார் ரெடி. இதனை இட்லியுடன் பரிமாறவும்.
...................................................................................................................................................................
முருங்கைக்காய் சாம்பார்
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு - ஒரு கப் சிறுபருப்பு - கால் கப் பூண்டு - 6 பல் பெருங்காயம் - சிறு துண்டு வெங்காயம் - 2 தக்காளி - 2 முருங்கைக்காய் - 2 பச்சை மிளகாய் - 2 மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப புளி - நெல்லிகாய் அளவு எண்ணெய் - 2 தேக்கரண்டி கடுகு உளுந்து - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 3 கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
செய்முறை
துவரம்பருப்பு, சிறுபருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து கழுவி அதனுடன் பூண்டு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி போடவும்.
காய்கறிகளுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்.
நன்கு கொதித்து முருங்கை வெந்ததும், அதனுடன் வேக வைத்த பருப்பு கலவையை லேசாக கரண்டியால் மசித்து விட்டு சேர்க்கவும்.
கொதி வந்ததும் புளிக்கரைசலை சேர்த்து ஒரு கொதி வரும் வரை வைத்திருக்கவும்.
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
தாளித்தவற்றை சாம்பாரில் சேர்க்கவும்.
சுவையான முருங்கை சாம்பார் தயார்.

காலிஃப்ளவர் சாம்பார்
ேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் - ஒன்று
துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி - 2 கொத்து
பட்டை - 2
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி கொள்ளவும். பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயை பொடித்து கொள்ளவும். காலிஃப்ளவரை தனித்தனி பூக்களாக பிரித்து எடுத்து ஒரு தேக்கரண்டி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்த சுடுத்தண்ணீரில் போட்டு பத்து நிமிடம் வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடித்த மசாலாவை போட்டு பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கி விட்டு இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். வெங்காயம் வதங்கி பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். அதன் பின்னர் வேக வைத்த பருப்பு மற்றும் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். பருப்பு கலவை கொதித்ததும் காலிஃப்ளவரை தண்ணீரை வடித்து விட்டு கொதிக்கும் குழம்பில் போட்டு ஐந்து நிமிடம் வைத்திருந்து வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான காலிப்ளவர் சாம்பார் தயார்.

சரவணபவன் சாம்பார்
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு - கால் கப்
கத்தரிக்காய் - ஒன்று
முருங்கைக்காய் - ஒன்று
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
புளி - சிறிய எழுமிச்சை அளவு
அரைப்பதற்கு:
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
தக்காளி - ஒன்று (பெரியது)
தேங்காய் - ஒரு தேக்கரண்டி
சாம்பார் பொடி - 4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
வற்றல் மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை,மல்லித் தழை - தேவையான அளவு
செய்முறை
மிக்ஸியில் அரைக்க வேண்டிய பொருட்களை போட்டு நைசாக அரைத்து எடுக்கவும். புளியுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
காய்கறிகளை பொடியாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். குக்கரில் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
வேக வைத்த பருப்புடன் மேலும் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நறுக்கிய காய்கறிகள், பச்சை மிளகாய், தக்காளி, பாதி வெங்காயம் போட்டு உப்பு சேர்த்து வேக விடவும்.
அரைத்த விழுது மற்றும் புளிக்கரைசலை வெந்த பருப்பு காய்க் கலவையில் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து பெருங்காயம், கிள்ளிய வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
சாம்பரை அதில் ஊற்றி மல்லித் தழை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான ஹோட்டல் சாம்பார் தயார். இந்த சாம்பார் இட்லி, தோசை, ஊத்தப்பம் போன்ற சிற்றுண்டிகளுக்கு நன்றாக இருக்கும்.

ஹோட்டல் சாம்பார்
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 4
மஞ்சள் தூள் - சிட்டிகை
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
கட்டிப் பெருங்காயம் - கால் தேக்கரண்டி
காரட் - 2
உப்பு - தேவைக்கு
வெல்லம் - சிறிய துண்டு
தாளிக்க:
கடுகு வெந்தயம் சீரகம்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை
பச்சைமிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கவும். காரட்டை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் துவரம்பருப்பு, சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயம், வெல்லம் ஆகியவற்றை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
வெந்ததும் குழிக்கரண்டியால் நன்கு மசித்து விட்டு மேலும் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி காரட், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து மேலும் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
தாளித்தவற்றை சாம்பாரில் சேர்த்து கொத்தமல்லித் தழை தூவி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான ஹோட்டல் சாம்பார் ரெடி.

குடைமிளகாய் சாம்பார்
தேவையான பொருட்கள்
சாம்பார் பருப்பு - ஒரு கப்
பச்சை குடைமிளகாய் - ஒன்று (பெரியது அல்லது 2 சிறியது)
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
சாம்பார் பொடி - ஒரு மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - கால் தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க :
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு - 5
பூண்டு - ஒரு பல் (நசுக்கி வைக்கவும்)
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை
குக்கரில் சாம்பார் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
குடைமிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் குடைமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் சாம்பார் பொடி, மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி விட்டு வேக வைத்தப் பருப்பை சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.
குடைமிளகாய் வெந்து கொதித்து குழம்பு சற்று கெட்டியானதும் பெருங்காயப்பொடி மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். நல்ல மணமும் சுவையும் நிறைந்த குடைமிளகாய் சாம்பார் தயார்.

சின்னவெங்காயசாம்பார்
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - கால் கிலோ
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
மைசூர் பருப்பு - ஒரு கப்
கல் உப்பு - தேவையான அளவு
வெல்லம் - ஒரு தேக்கரண்டி
தனியா - 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 4 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
புளியுடன் உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து ஊற வைத்துக் கரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மசாலாப் பொருட்களையும்தேங்காய் துருவலையும் தனித்தனியாக வறுத்தெடுத்து ஒன்றாகச் சேர்த்து அரைத்து வைக்கவும்.
மைசூர் பருப்புடன் தேவையான அளவு நீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைத்தெடுத்து மசித்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகைப் போட்டுத் தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் தோலுரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.", வெங்காயம் வதங்கியவுடன் வேக வைத்த மைசூர் பருப்பைக் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவிட்டு
புளிக்கரைசலை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை நன்றாகக் கொதிக்கவிடவும். அதனுடன் தேங்காய் மசாலா விழுதைச் சேர்த்து கிளறவும்.
நன்றாக கொதி வந்தவுடன் கறிவேப்பிலையை கசக்கித் தூவி இறக்கவும். சுவையான சின்ன வெங்காய சாம்பார் தயார்.

வாழைத்தண்டு சாம்பார்
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - ஒரு கப்
வாழைத்தண்டு - ஒரு துண்டு
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று (சிறியது)
புளித்தண்ணீர் - அரை கப்
சாம்பார் பொடி - தேவையான அளவு
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான
அளவு மல்லித் தழை - சிறிது
தாளிக்க:
கடுகு, சீரகம, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை
வரமிளகாய் - ஒன்று
செய்முறை
வெங்காயத்தை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாழைத் தண்டை விரும்பிய அளவில் நறுக்கி வைக்கவும். துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கச் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கி நறுக்கிய வாழைத் தண்டைச் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய வாழைத் தண்டுடன் புளித்தண்ணீர் சாம்பார் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்தவுடன் வேகவைத்த பருப்பைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
கொதித்ததும் மல்லித் தழை தூவி இறக்கவும். மணமணக்கும் வாழைத்தண்டு சாம்பார் தயார்.

வெண்டைக்காய்சாம்பார்
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 250 கிராம்
மசூர் பருப்பு - முக்கால் கப்
புளி - நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சாம்பார் வெங்காயம் - அரை கப்
பூண்டு - 6 பல்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
மல்லித் தழை
கறிவேப்பிலை
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
மசூர் பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட்டு அதனுடன் புளியைக் கரைத்து ஊற்றி சாம்பார் பொடி சேர்த்து கலந்து வைக்கவும்.
வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி நிறம் மாறாமல் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பாதி மல்லித் தழை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் பருப்புக் கலவையை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும்.
கொதித்ததும் பொரித்து வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் மீதியுள்ள மல்லித் தழையைத் தூவி இறக்கவும்.
சுவையான வெண்டைக்காய் சாம்பார் தயார். சூடான சாதத்துடன் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

முருங்கைக்கீரைசாம்பார்
தேவையான பொருட்கள்
முருங்கைக் கீரை - அரை
கப் துவரம் பருப்பு - கால் கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய், பூண்டு - 2
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
சாம்பார் பொடி, ஆல் பர்பஸ் பொடி - ஒரு தேக்கரண்டி
புளி - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய் ,கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை.
செய்முறை
துவரம் பருப்புடன் மஞ்சள் தூள், பூண்டு, பெருங்காயம் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
புளியைக் கரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்பு முருங்கைக்கீரை, தக்காளி சேர்த்து வதக்கவும்.
புளி நீர், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதித்ததும் அதை வேக வைத்த பருப்புடன் சேர்த்து கொதிக்கவிட்டு, நன்கு நுரைத்து வரும் போது ஆல் பர்பஸ் பொடி சேர்க்கவும்.
இறக்கும் போது சிறிது கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
சுவையான முருங்கைக்கீரை சாம்பார் தயார்

தக்காளி சாம்பார்
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - ஒரு கப்
தக்காளி - 2
பூண்டு - ஒன்று
வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
பச்சை மிளகாய் - 3
எண்ணெய்
கடுகு
சீரகம்
உளுந்து
கடலைப்பருப்பு - தாளிக்க
மஞ்சள் தூள் - சிறிது உப்பு
செய்முறை
வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
பருப்பை வேக வைத்து நீரோடு வைக்கவும். பூண்டை தோலுரித்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது உப்பு போட்டு வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கினால் போதுமானது. இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைந்து வந்ததும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்பு வேக வைத்த பருப்பு, உப்பு, மஞ்சள் தூள், தேவையான நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான சுலபமான தக்காளி சாம்பார் தயார்.
இது சாதம், தோசை, இட்லி அனைத்திற்கும் நன்றாக இருக்கும்."

பொங்கல் சாம்பார்
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - ஒன்று
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
துவரம் பருப்பு - கால் கப்
பெருங்காயம் - சிறிய சுண்டைக்காய் அளவு
வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு கொத்து
கடுகு - முக்கால் தேக்கரண்டி
செய்முறை
துவரம் பருப்பு, வெந்தயம் இரண்டிலும் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி தனித்தனியாக 15 நிமிடம் ஊற வைக்கவும்.
கத்தரிக்காயை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை இரண்டிரண்டாக நறுக்கவும்.
புளியுடன் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பெருங்காயம், கத்தரிக்காய் மூன்றையும் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அதில் தக்காளியை போட்டு ஊற வைத்த துவரம் பருப்பு, வெந்தயம் இரண்டையும் ஊற வைத்த தண்ணீருடன் ஊற்றவும்.
மேலும் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி மூடி 10 நிமிடம் வேக வைக்கவும்.
10 நிமிடம் கழித்து குக்கரை இறக்கி மூடியை திறந்து புளிக்கரைசலை ஊற்றி சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும்.
இந்த கலவையுடன் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
கொதித்ததும் இறக்கி வைத்து விடவும். ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதில் கொதிக்க வைத்த சாம்பாரை ஊற்றி கிளறி ஒரு நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.
சுவையான பொங்கல் சாம்பார் தயார்.

உடுப்பி சாம்பார்
தேவையான பொருட்கள்
முருங்கைக்காய், கத்தரிக்காய், சௌசௌ - 1/4 கி
சின்ன வெங்காயம் (முழுதாக) - 10
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
புளிச்சாறு - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 2
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
வெல்லம் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
வறுத்து அரைக்க
உளுந்து - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
மல்லி - 3 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
வர மிளகாய் - 4
துருவிய தேங்காய் - 1 கப்
செய்முறை
காய்களை மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.
புளிகரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை மூடியிட்டு வைக்கவும்.
பின்னர் அரைத்த தேங்காய் விழுது, வெல்லம், உப்பு, தண்ணீர் சேர்க்கவும்.
விழுது வெந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து ஒரு கொதிவிட்டு கடுகு, கறிவேபிலை, வரமிளகாய் தாளிக்கவும்.
கொத்தமல்லி தூவி இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாறவும்

மோர் சாம்பார்
தேவையான பொருட்கள்
வெண்பூசணி - 100 கிராம்,
தயிர் - 100 கிராம்
தக்காளி - 1
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் - 3
தனியா - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2 (சிறிது எண்ணெயில் வறுத்து, தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும்).
செய்முறை
தயிரைக் கடைந்து கொள்ளவும்.
தக்காளி, பூசணியைத் துண்டுகளாக நறுக்கி வேகவிடவும்.
காய் வெந்து வரும்போது உப்பு, வறுத்து அரைத்த விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.
பிறகு, வேக வைத்த பருப்பு, கடைந்த தயிர் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கி, லேசான தீயில் மீண்டும் கொதிக்கவிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, சாம்பாரில் சேர்த்து இறக்கவும்.

பருப்பு சாம்பார்
தேவையான பொருட்கள்
வேகவைத்த துவரம் பருப்பு - இரண்டு கோப்பை
தக்காளி - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை
கொத்தமல்லி - சிறிதளவு
தாளிக்க எண்ணெய் - சிறிது
கடுகு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - கொஞ்சம்
செய்முறை
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சைமிளகாயை கீறி வைக்கவும். பருப்புடன் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து கலக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெடித்ததும் பச்சைமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் உப்பு, பெருங்காயத்தூள், தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் வேக வைத்து வைத்துள்ள பருப்பை இக்கலவையுடன் சேர்க்கவும்.
பருப்பு கலவையை நன்றாக கலந்து விடவும்.
சாம்பாரை நன்றாக கொதிக்க விடவும்.(ஒரு கொதி வந்தால் போதும்.
வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லி தழை தூவி சாதத்துடன் சாப்பிட ஈசியாக செய்ய கூடிய பருப்பு சாம்பார் ரெடி.

மாங்காய் சாம்பார்
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - ஒன்று
கேரட் - ஒன்று
கத்திரிக்காய் - இரண்டு
மாங்காய் - நான்கு துண்டு
மிளகாய்த்தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
தாளிக்க:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிது கறிவேப்பிலை
செய்முறை
தேவையானவற்றை எடுத்து வைக்கவும்.
குக்கரில் பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கேரட், கத்திரிக்காய், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து எண்ணெய் ஒரு சொட்டு விட்டு நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வெந்ததும் அதில் மிளகாய்தூள், உப்பு, புளிக்கரைசலை சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் மாங்காவை சேர்த்து வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
தாளித்தவற்றை கொதிக்கும் சாம்பாரில் கொட்டவும்.
இரண்டு நிமிடத்திற்கு பின் அடுப்பை நிறுத்தி வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான மாங்காய் சாம்பார் ரெடி.

முள்ளங்கி சாம்பார்
தேவையான பொருட்கள்
முள்ளங்கி - இரண்டு
சின்ன வெங்காயம் - 6
கொத்தமல்லி தழை - சிறிதளவு
துவரம் பருப்பு - அரை டம்ளர்
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
பெருங்காயம் கடுகு அரைக்க:
கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
தனியா பொடி
வர மிளகாய் - 2
தேங்காய் - ஒரு கப்
செய்முறை
முள்ளங்கி மற்றும் சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கவும். பருப்பை அரைமணி நேரம் ஊற வைக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
புளியையும் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் போட்டு வறுக்கவும். பருப்பு நிறம் மாறியதும் தேங்காய் சேர்த்து வறுக்கவும்.
வறுத்தவற்றை சூடு ஆறிய பின்பு தனியா தூள் சேர்த்து அரைக்கவும்.
உப்பு கலந்த நீரில் நறுக்கிய முள்ளங்கி ,வெங்காயத்தையும் சேர்த்து வேக வைக்கவும்.
காய் வெந்த பின்பு புளியை கரைத்து வேக வைத்த காயுடன் கலக்கவும்.
பின்பு அரைத்த விழுதையும் காயுடன் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து வரும் போது வேக வைத்த துவரம் பருப்பை நன்கு மசித்து அதில் கலக்கவும்.
பின்பு கடுகு பெருங்காயம் தாளித்து இறக்கவும். கொத்தமல்லி தழை தூவவும் சுவையான முள்ளங்கி சாம்பார் ரெடி.

பொன்னாங்கண்ணி
தேவையான பொருட்கள்
கீரை - ஒரு கட்டு
வடகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - கால் கப்
பெரிய வெங்காயம் - 2
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை கப்
செய்முறை
கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கீரை அலசி விட்டு போட்டு தண்ணீர் சேர்த்து அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு வேக விடவும்.
தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து 1 1/2 கப் அளவு புளிக்கரைச்சல் எடுத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகம் போட்டு வதக்கிய பிறகு கீரையை சேர்க்கவும்.
அதன் பின்னர் வேக வைத்த பருப்பை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுது சேர்க்கவும்.
கடைசியாக புளிக்கரைசல், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்து விடவும்.
சுவையான ஆரோக்கியமான பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் ரெடி.

கொத்தமல்லி சாம்பார்
தேவையான பொருட்கள்
நறுக்கிய கொத்தமல்லி - 2 1/4 கப்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 5
முருங்கைக்காய் - ஒன்று
பூண்டு - 15
பச்சை மிளகாய் - 12
புளி - நெல்லிக்காய் அளவு
பருப்பு - கால் கப்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - 1 1/2 தேக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி
கல் உப்பு - அரை மேசைக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 15 வேக வைக்கவும்.
புளியுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி கடுகு தாளித்து அதில் வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை 2 நிமிடம் வதக்கவும்.
அதனுடன் நறுக்கின பூண்டு பச்சை மிளகாய் போட்டு 30 நொடி வதக்கிய பிறகு நறுக்கின தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
புளிக்கரைசலை ஊற்றி மஞ்சள் தூள் உப்பு முருங்கைக்காய் ஆகியவற்றை போட்டு 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும்.
வேக வைத்த பருப்பை எடுத்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு குழைவாக மசித்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் புளிக்கலவைக் கொதித்ததும் பாதி அளவு கொத்தமல்லி மற்றும் மசித்து வைத்திருக்கும் பருப்பு தண்ணீரை ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.
சாம்பார் ஒரு நிமிடம் கொதித்து நுரைத்து வரும் போது மீதம் உள்ள கொத்தமல்லி தழையை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து விடவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து அதை சாம்பாருடன் சேர்த்து கிளறி விடவும்.
சுவை, மனம் நிறைந்த கொத்தமல்லி சாம்பார் தயார். இதை உருளைக்கிழங்கு வறுவலுடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

கத்திரிக்காய் சாம்பார்
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் - 5
வெங்காயம் - ஒன்று
சாம்பார் பொடி - கால் கப்
தக்காளி - ஒன்று
உப்பு - 1 1/2 ஒன்றரை மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - கால் கப்
புளி - எலுமிச்சை பழ அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை
கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். புளியில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெந்தயம், அரை தேக்கரண்டி துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு 10 நொடி வதக்கவும்.
பிறகு நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
ஒரு நிமிடம் வதக்கிய பிறகு 2 கப் புளித் தண்ணீரை ஊற்றி அதனுடன் உப்பு, சாம்பார் பொடி போட்டு கலக்கி விடவும்.
அதன் பின்னர் கத்திரிக்காயை போட்டு 10 நிமிடம் வேக விடவும்.
கத்திரிக்காய் வெந்ததும் வேக வைத்த பருப்பை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
சுவையான கத்திரிக்காய் சாம்பார் ரெடி.

Comments
Post a Comment