கீரை (Spinach)

கீரை சாதம் 

தேவையான பொருட்கள்

தக்காளி : 1
சின்ன வெங்காயம் : 5
பூண்டு : 5 பல்
கீரை
உப்பு
மஞ்சள் தூள்  : ½ ஸ்பூன்
மிளகு தூள் : ½ ஸ்பூன்
சீராக தூள் : ½ ஸ்பூன்
தேங்காய் துருவல் : 2 ஸ்பூன்
எண்ணெய் : 2 ஸ்பூன்
சாதம்

செய்முறை

கீரை யை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்
பின் பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து 3 - 5 நிமிடம் வதக்கவும்
பின்  உப்பு , மஞ்சள் தூள் , மிளகு தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
பின் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பினை ஆஃப் செய்யவும்
பின் அதனை ஆற வைத்து மையாக அரைத்து கொள்ளவும்
பின் அதனை சாதத்துடன் சேர்த்து கிளறவும்
5 முதல் 7 நிமிடம் வதக்கி பின் அதில் சோயா சாஸ் சில்லி சாஸ் தயாரித்த ரெட் சில்லி சாஸ் கலந்து வதக்கவும்.

2 நிமிடம் கழித்து சாதம் சேர்க்கவும்.

கரண்டியில் கிளறாமல் கடாயை பிரட்டவும் சாதம் உடையாமல் இருக்கும்.
5 நிமிடம் கழித்து இறக்கி ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.


கீரை மசாலா

தேவையான பொருட்கள்

ஏதேனும் ஒரு கீரை 1 கட்டு
வெங்காயம் 1
எண்ணெய் 2 தேக்கரண்டி
கடுகு 1/2 தேக்கரண்டி
உளுந்து 2 தேக்கரண்டி
பச்சரிசி 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி 1 கைப்பிடி
பச்சை மிளகாய் 1
இஞ்சி சிறிய துண்டு
பூண்டு 2 பல்
உப்பு தேவையான அளவு

செய்முறை

கீரையை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்
வெங்காயம் பொடியாக நறுக்கவும்
உளுந்து அரிசியை வெறும் கடாயில் சிவக்க வறுத்து பொடித்து கொள்ளவும்
கொத்தமல்லி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு அரைத்து கொள்ளவும்
எண்ணெயில் கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
வதங்கியதும் அரைத்த மசாலா சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்
பின் நறுக்கிய கீரை உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்
கீரை வெந்ததும் பொடித்து வைத்துள்ள பொருட்கள் சேர்த்து கிளறி இறக்கவும்


கீரை மசியல்

தேவையான பொருட்கள்

பாசி/சிறு பருப்பு - ஒரு கை அளவு
கீரை - 1 கட்டு
பூண்டு -2 பல்
எண்ணெய் -2 ஸ்பூன்
கடுகு -1/2 ஸ்பூன்
உளுந்து -1 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன் (பருப்பு வேக வைக்கும் பொழுது போட) ( 1 ஸ்பூன் தாளிக்கும் பொழுது போட)
பெருங்காயம் - 1 சிட்டிகை
வெங்காயம் -1 குண்டாக நறுக்கியது
உப்பு - தேவையான அளவு
நெய் - 1 ஸ்பூன் (கட்டாயம் இல்லை) வாசத்துக்க தான்
பால் -1/4 கப்
சர்க்கரை - 1/2 ஸ்பூன்

செய்முறை

முதலில் கீரையை நன்கு அலசி எடுத்து அதை பொடிதாக நறுக்கி எடுக்க வேண்டும்

பின் குக்கரில் பாசி/சிறு பருப்பை 2 பல் பூண்டு , சீரகம் சேர்த்து போட்டு வேக வைத்து குழைவாக எடுத்து கொள்ளவும்

பின் ஒரு வாணலியில் 2 ஸ்பூன் என்னை ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம் போட்டு தாளிக்கவும்.

பின் வெங்காயம்.., கீரை.., உப்பு .., சர்க்கரை 1/2 ஸ்பூன் போட்டு வதக்கவும். கீரை அடங்கி ஒடுங்கி வதங்க வேண்டும்.

வதங்கிய பின் வேகவைத்த பருப்பை கொட்டி கொதிக்க விட்டு அதில் கொஞ்சம் 1/4 கப் பால் சேர்த்து கொதிக்கவிட்டு கீரை வெந்த பின் இறக்கவும்.

இறக்கி ஒரு பாத்திரத்தில் மாற்றி வேண்டுமானால் ஒரு துளி நெய் விட்டு பரிமாறலாம்.


கீரை கடைசல்

தேவையான பொருட்கள்

அரக்கீரை - 1கட்டு
பூண்டு - 2
சோடா உப்பு-1பின்ச்
கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
மிளகாய் வத்தல் - 3

செய்முறை

கீரையை கழுவி அதனுடன் பூண்டு சோடா உப்பு சேர்த்துக் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
கீரையை வெந்ததும் அதை இறக்கி மத்தால் கடையவும்.
பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு மிளகாய் வத்தல் கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவும்.
கீரை கடைசல் தயார்.



கீரை கூட்டு

தேவையான பொருட்கள்

தண்டு கீரை 1 கட்டு
பாசி பருப்பு 2 மேஜை கரண்டி
வெங்காயம் 1
தக்காளி 1
பூண்டு 5 பல்
பச்சை மிளகாய் 3
தேங்காய் ஜீரகம் விழுது 1/2 கப்
புளி கரைசல்2 டீஸ்பூன்
கடுகு, காய்ந்த மிளகாய்
எண்ணெய்
உப்பு

செய்முறை

குக்கர் வைத்து அதில் அறிந்து வைத்துள்ள கீரை ,வெங்காயம், பருப்பு,தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து3 சத்தம் வைக்கவும்.

பின்னர் அதில் புளி கரைசல் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க வைத்து, கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும். கீரை கூட்டு தயார்


கீரை புலாவ்

தேவையான பொருட்கள்

அரிசி 1கப்
அரைக்கீரை(அ)சிறு கீரை 1/2 கட்டு
வெங்காயம் 2
தக்காளி 2
உருளைகிழங்கு 2
பச்சைமிளகாய் 2
இஞ்சி சிறுது
பூண்டு 1
மிளகாய்தூள் 1ஸ்பூன்
கரம்மசாலா 1/2ஸ்பூன்
பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தலா 2
எண்ணெய்
உப்பு

செய்முறை

கீரை ஆய்ந்து புளி, உப்பு தண்ணீர் சேர்த்து வேக வைத்து ஆற வைத்து அரைக்கவும்

குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, சோம்பு தாளிக்கவும்

இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து சேர்க்கவும்

தக்காளி அரைத்து சேர்த்து வதக்கி, உருளைக் கிழங்கு சேர்க்கவும்

அரைத்த கீரையை சேர்த்து வதக்கி தூள் வகைகள் சேர்க்கவும்

ஒரு கப் அரிசிக்கு 2கப்தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அரிசியை களைந்து சேர்த்து மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.

கீரை புலாவ் தயார்



கீரை அவியல்

தேவையான பொருட்கள்

பொடியாக நறுக்கிய கீரை ஒரு கப்
உப்பு கால் தேக்கரண்டி
புளி பாதி நெல்லிக்காய் அளவு
தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி
கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
அப்படியே அரைக்க தேவையானவை
தேங்காய் துருவல் 1/3 கப்
சீரகம் அரை தேக்கரண்டி
மிளகாய் வத்தல் பச்சை மிளகாய் தலா ஒன்று

செய்முறை

கீரையை அளவாக தண்ணீர் விட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வேக விடவும்

சூட்டோடு லேசாக மசித்து வைத்துவிட்டு உப்பு மற்றும் புளியை கரைத்து சேர்க்கவும்

புளி பச்ச வாசனை போனவுடன் அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்து சேர்க்கவும்

தேங்காய் எண்ணெய் விட்டு கருவேப்பிலை கிள்ளி போட்டு இறக்கவும்



கீரை மசியல்

தேவையான பொருட்கள்

ஏதேனும் ஒருவகை கீரை ஒரு கட்டு
பாசிப்பருப்பு தேவையான அளவு
வெங்காயம் ஒன்று
தக்காளி பழம் 2
புளி சிறிதளவு
மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் சாம்பார் பொடி ஆப்சன்
நெய் ஒரு ஸ்பூன்
கடுகு கால் ஸ்பூன் சீரகம் அரை ஸ்பூன் வெந்தயம் கால் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை

பாத்திரத்தில் கீரை பருப்பு வெங்காயம் தக்காளி பூண்டு சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு குழைய வேக விட வேண்டும்

தாளிப்பு கரண்டியில் நெய் விட்டு கடுகு சீரகம் வெந்தயம் தாளித்து கொட்டவும்

உருளைக்கிழங்கு வருவல் உடன் சாப்பிட இந்தக் கீரை மசியல் நன்றாக இருக்கும்






கீரை பொரியல்

தேவையான பொருட்கள்

கீரை 1 கப்
சின்ன வெங்காயம் 10
உப்பு
தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 4 டீஸ்பூன்
பச்சை ‌மிளகாய்‌ 1
தண்ணீர் 1/4 கப்
பூண்டு 2

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
பின்னர் கீரை‌ சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.தண்ணீர் சேர்த்து மூடி 15 நிமிடம் குறைந்த தீயில் சமைக்கவும்
கீரை வெந்ததும் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.


பருப்பு கீரை

தேவையான பொருட்கள்

நறுக்கிய கீரை 3 கப்
உப்பு
வெந்த து.பருப்பு 1/2 கப்
மிளகு 1/2 டீஸபூன்
மி.வற்றல் 1
பெருங்காயம் சிறிது
துருவிய தேங்காய் 2 ஸ்பூன்
தாளிக்க தே.எண்ணை,கடுகு,உ.பருப்பு

செய்முறை

கீரையை உப்பு போட்டு வேகவிடவும்
வறுத்த சாமான்களை தேங்காயுடன் அரைக்கவும்
பருப்பு அரைத்த சாமானை சேர்க்கவும்
1 ஸ்பூன் அரிசி மாவு கரைத்து ஊற்றவும்
தாளித்த சாமான்களை சேர்க்கவும்


கீரை பக்கோடா 

தேவையான பொருட்கள்

ஏதாவது ஒரு கீரை 1 கட்டு
கடலைமாவு 1 கப்
பச்சை மிளகாய் இஞ்சி விழுது 2tsp
உப்பு
சீரகம் 1tsp
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

கீரையை பொடியாக நறுக்கி அலசி காய வைத்து கொள்ளவும்

மாவுடன் கீரை உப்பு, சீரகம், பச்சை மிளகாய் விழுது சேர்த்து பிசறுங்கள். தேவையானால் சிறிது தண்ணீர் ஊற்றி கொள்ளலாம்.

சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்

சூடாக பறிமாரவும்



கீரை குழம்பு 

தேவையான பொருட்கள்

அரைக்கீரை அல்லது சிறு கீரை 1 கட்டு
சிறு பருப்பு 1 கப்
பச்சை மிளகாய் 1
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் ½ ஸ்பூன்
வெங்காயம் 1
தக்காளி 1
பூண்டு 8 பல்
கருவேப்பிலை ஒரு கொத்து
கடுகு ஒரு ஸ்பூன்
சீரகம் ஒரு ஸ்பூன்
உளுந்து ஒரு ஸ்பூன்
உப்பு ருசிக்கேற்ப
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

சிறுகீரை அல்லது அரை கீரை ஆய்ந்து கழுவி தனியே எடுத்து வைக்கவும். சிறு பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து பின் தண்ணீரில் கழுவி தனியே எடுத்து வைக்கவும்.
குக்கரில் கீரை, சிறுபருப்பு, நறுக்கிய வெங்காயம் (தாளிப்பதற்காக சிறிதளவு வெங்காயத்தை தனியே எடுத்து வைக்கவும்.) 

நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 3 விசில் விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்து, சிறிதளவு நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளிக்கவும், 

கூடவே கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு, வேக வைத்த பாசிப்பருப்பு கீரை கலவையை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.


கீரை சாம்பார் 

தேவையான பொருட்கள்

சிறிய எலுமிச்சை அளவில் தண்ணீரில் புளி ஊறவைக்கப்பட்டு சாறு பிழிந்தெடுக்கப்பட்டது
பாலக்கீரை, தண்டுக்கீரை, வெந்தயக் கீரை, மணத்தக்காளிக் கீரை இன்னபிற போன்ற எந்தக் கீரையை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம், நன்றாகக் கழுவி நறுக்கப்பட்டது.
ஒரு தக்காளி, சுவையைக் கூட்டுவதற்கு
1 1/2 தேக்கரண்டி சாம்பார் பொடி 3/4 தேக்கரண்டி உப்பு
3/4 கப் பிரஷர் குக்கரில் சமைக்கப்பட்ட பருப்பு, சிறிது மஞ்சள் தூளுடன்.
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கத்திரிக்காய் - 2
முருங்கைக்காய் - 2
நறுக்கப்பட்ட வெங்காயம் - 2
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலைகள்

செய்முறை

ஒரு கடாயை எடுத்துக்கொள்ளவும். 2 தேக்கரண்டி எண்ணெயை ஊற்றிக்கொள்ளவும். சூடுபடுத்தியதும் வெந்தயம், சீரகம் ஒன்றல்லது இரண்டு துண்டாக்கப்பட்ட மிளகாய், பெருங்காயம், கடுகு ஆகியவற்றை போடவும்.
இப்போது தக்காளி உங்களுக்குப் பிடித்த கீரையைச் சேர்க்கவும். ஒரு நொடி கலக்கி புளி கரைசலை ஊற்றிக்கொள்ளவும். சாம்பார் பொடியையும் உப்பையும் சேர்க்கவும்.
மேலும் கத்திரிக்காய் அல்லது முருங்கைக்காய் துண்டுகள் சேர்க்கவும். அவையெல்லாம் வேகட்டும், காய்கறி மிருதுவாகட்டும். பிரஷர் குக்கரில் பருப்பைச் சேர்க்கவும். மேலும் 2ல் இருந்து 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை நிறுத்தவும்.
கடைசியாக கொத்துமல்லி, கறிவேப்பிலை இலைகளைச் சேர்க்கவும். சாதத்தோடு அல்லது தோசை இட்லியுடன் சூடாகப் பரிமாறவும்.



அரைக் கீரை வடை

தேவையான பொருட்கள்

அரைக்கீரை -1 கப் நறுக்கியது
துவரம்பருப்பு-1/2 கப்
கடலைப்பருப்பு-1/2 கப்
வெங்காயம்- 1 பொடியாக நறுக்கியது
மிளகாய்த்தூள் காரத்திற்கேற்ப
உப்பு தேவையான அளவு
பெருங்காயம்-1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை
எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை

கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை 1 மணிநேரம் ஊறவைக்கவும்
பின்பு அதனை தண்ணீர் சேர்க்காமல் பரபரவென்று அரைத்து கொள்ளவும்
கீரையை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவி கொள்ளவும்
அரைத்த பருப்புடன் கீரை, வெங்காயம், பெருங்காயம் கறிவேப்பிலை மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் சிறு சிறு வடைகளாக தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
சுவையான மொறுமொறு கீரை வடையை தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்


கீரை முறுக்கு 

தேவையான பொருட்கள்

அரிசி மாவு 150 கிராம்
உளுத்தம் பருப்பு மாவு 40 கிராம்
எள்ளு சிறிதளவு
பாலக் கீரை ஒரு கப்
மிளகாய்-2
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை

பாலக் கீரையை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
அதை இரண்டு மிளகாய் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் கூழாக அரைத்துக் கொள்ளவும்
பிறகு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு உளுத்தம் பருப்பு மாவு உப்பு எடுத்துக் கொள்ளவும்
அதனுடன் அரைத்த பாலக் கீரையை சேர்த்து எள்ளை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
பிறகு பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு முறுக்கு பிழிந்து கொள்ளவும்
பிறகு முறுக்கு எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்


கீரை பணியாரம்

தேவையான பொருட்கள்

தோசை மாவு - 1கப்
ரவை - 1/2கப்
கீரை( விருப்பமான கீரை) - 1/2கப்
மிளகாய் - 2

செய்முறை

கீரையை கழுவி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு தோசை மாவு, ரவை, கீரை, மிளகாய்சேர்த்து கரைத்துக்
அப்பம் கல்லில் ஊற்றவும்
இருபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்
பிறகு சட்னியுடன் பரிமாரவும்


கீரை தால் ஃப்ரை

தேவையான பொருட்கள்

பாலக் கீரை/ வேறு கீரை- 1 கப்
மசூர் பருப்பு - 1/2 கப்
பாசிப்பருப்பு- 1/2 கப்
உப்பு
பச்சை மிளகாய்-3
வெங்காயம்-3
தக்காளி-2
இஞ்சி- 1 துண்டு
மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

குக்கரில் பருப்பு வகைகள் மற்றும் கீரை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து அதில் வெங்காயம், தக்காளி இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் .உப்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதில் வேக வைத்த கீரை பருப்பு வகைகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

அடுப்பை அணைத்து எலுமிச்சை சாற்றை கலந்து இறக்கவும்.



கீரை தால் பீட்சா

தேவையான பொருட்கள்

பாலக் கீரை/ வேறு கீரை- 1 கப்
கோதுமை மாவு-1கப்
பாலக் கீரை-1 கப்
பாசிப்பருப்பு-1/4 கப்
மிளகாய்-1
ஈஸ்ட்-1 டீஸ்பூன்
உப்பு
சர்க்கரை-1 ஸ்பூன்
குடைமிளகாய் (பச்சை, சிகப்பு, மஞ்சள்)-1
ஓரிகனோ-தூவி கொள்ள
சில்லி ப்லேக்ஸ்-தூவி கொள்ள
பீட்சா சாஸ்-2ஸ்பூன்
சீஸ் -தேவைக்கேற்ப

செய்முறை

கோதுமை மாவு உப்பு ஈஸ்ட் சர்க்கரை தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
4 மணி நேரம் ஈற துணியில் மூடி வைக்கவும்
பாசிப்பருப்பு மிளகாய் உப்பு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்
பேனில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் பிறகு அதில் பாலக் கீரையை போட்டு 2 நிமிடம் கழித்து எடுக்கவும்
பிறகு மிக்ஸியில் பாசிப்பருப்பு, பாலக் கீரையை போட்டு அரைத்து கொள்ளவும்
பிறகு கோதுமை மாவை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து
அதன் மேல் பீட்சா சாஸ் தடவி
அதன் மேல் அரைத்த பாலக் பாசிப்பருப்பை தடவி
குடைமிளகாய் போட்டு சீஸ் தூவி
பீட்சா மேக்கரை 2 இல் இரண்டு நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்து பிறகு
அதில் பீட்சா வை வைத்து 4 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்
சில்லி ப்லேக்ஸ்,ஓரிகனோ தூவி பரிமாறவும்



பசலைக் கீரை பஜ்ஜி

தேவையான பொருட்கள்

பசலை கீரை(Palak) - 10
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்புன்
மைதா - 1 டேபிள் ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு - 1 ஸ்பூன்
சோடா உப்பு - 2 பின்ச்
வத்தல் தூள் - 4 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
பெருங்காய தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை

கீரை மற்றும் எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து தண்ணீர் கலந்து கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்திற்கு தயார் செய்து வைக்கவும்
பின் ஒரு பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் சூடானதும் கீரையை மாவில் முக்கி பஜ்ஜி பொரிக்கவும்.
சுவையான ஆரோக்கியமான கீரை பஜ்ஜி ரெடி.


தண்டு கீரை கூட்டு

தேவையான பொருட்கள்

தண்டு கீரை 2 கப்
பாசி பருப்பு 1/2 கப்
தக்காளி 1
மஞ்சள் தூள் 1ஸ்பூன்
பெருங்காயம் 1 ஸ்பூன்
உப்பு
சீரகம் 1 ஸ்பூன்

செய்முறை

குக்கர் இல் நறுக்கிய கீரை பருப்பு, தக்காளி மஞ்சள் தூள் ஒரு கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்
சீரகம், உப்பு,பெருங்காயம் போட்டு இறக்கவும்





முருங்கை கீரை வடை

தேவையான பொருட்கள்

முருங்கை இலை - 1 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்  - 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
பெருஞ்சீரகம் - 1/2 தே. கரண்டி
கருவேப்பில்லை - 1/4 கப்
வெங்காயம் - 1 - நன்றாக நறுக்கி கொள்ளவும்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
ச்சை மிளகாய் - 1 - நன்றாக நறுக்கி கொள்ளவும்
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - 1/4 தே. கரண்டி
கரம் மசாலா - 1/4 தே. கரண்டி
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/4 தே. கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தே. கரண்டி
அரிசி மாவு - 1 மே. கரண்டி
எண்ணெய் - பொறிப்பதற்கு

செய்முறை

ஊற வைத்த கடலைப் பருப்பை மிக்ஸியில், பெருஞ்சீரகத்துடன் சேர்த்து கர மொரவென அரைக்கவும்.
பின்பு அரைத்த விழுதுடன், அனைத்துப் பொருட்களையும்(எண்ணெயைத் தவிர ) ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கிளறவும்.
கிளறிய கலவையை சிறு சிறு உருண்டைகள் ஆக்கவேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு சூடாக்கவும்.
எண்ணெய் சூடான பின்பு, உருண்டைகளை வடை போல் தட்டி எண்ணெயில் பொன்னிறம் ஆகும் வரை மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்
சுவையான முருங்கை கீரை வடை தயார். தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.



முருங்கை கீரை அடை

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி- 1 கப்
பச்சரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
உளுந்து - 2 டீஸ்பூன்
பாசிப் பருப்பு- 1டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
வெங்காயம் - 1
முருங்கை கீரை - 1 கப்
மிளகாய் - 2
பெருங்காயம் - சிறிதளவு
தேங்காய் - 2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

குறிப்பிட்டுள்ள அரிசிகளை தனியாகவும், பருப்பு வகைகளை தனியாகவும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
அரைத்த அடை மாவில் பெருங்காயம், கறிவேப்பில்லை சேர்க்கவும்.
தேங்காய், வெங்காயம் மிளகாய் சேர்த்து கிளறவும்.
முருங்கை கீரை உப்பு சேர்த்து கிளறவும்.
தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் ஊற்றி சூடானதும், அடை மாவை ஊற்றி இரு புறமும் சுட்டெடுக்கவும்.
ஆரோக்கியமான முருங்கை கீரை அடை தயார்...!!



முருங்கை கீரை சூப்

தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை 1 கப்
மசூர் தால் 1/2 கப்
பூண்டு 10 பல்
ஜீரகம் 2 மேஜைக்கரண்டி
மிளகு 1 மேஜைக்கரண்டி
சோம்பு 1 மேஜைக்கரண்டி
பட்டை 1
கிராம்பு 2
பிரிஞ்சி இலை 1
கல்பாசி 2 மேஜைக்கரண்டி
கொத்துமல்லி இலை காம்பு 1/2 கப்
பச்சைமிளகாய் 4
சோடா உப்பு 1 சிட்டிகை
உப்பு
மிளகு தூள் 1 மேஜைக்கரண்டி
தண்ணீர் 4 கப்

செய்முறை

முதலில் ஒரு குக்கரில் மசூர் தால் 1/2 கப் , 2 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு வேகவைக்கவும்.
பின் வேக வைத்த பருப்பில் ஜீரகம், மிளகு, முருங்கைக்காய், கொத்துமல்லி இலை காம்பு, பச்சைமிளகாய், பூண்டு , இஞ்சி , 2 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு வேக வைக்கவும்.
குக்கர் விசில் போனபின் அதிலிருந்து முருங்கைக்காய் மட்டும் தனியே எடுத்து சூடு ஆறியபின் அதனின் விழுதை மட்டும் எடுத்து வைக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதி நிலை வரும்போது சுத்தம் செய்த முருங்கை கீரை மற்றும் சோடா உப்பு சேர்த்து 10 செகண்ட் கழித்து நீரை வடிகட்டி 3 முறை குளிர்ந்த நீரில் அலசவும்.
அலசிய முருங்கைக்கீரையை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைக்கவும்.
பின் அரைத்த முருங்கைக்கீரை விழுதை வேக வைத்த கலவையில் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.
பின் ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து சோம்பு, பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, கல்பாசி சேர்த்து நன்கு வறுத்து குக்கரில் சேர்க்கவும்.பின் உப்புசேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பின் சூப் கலவை ஆறியபின் நன்கு மசித்து கொள்ளவும். பின் வடிகட்டியில் நன்கு வடிகட்டி கொள்ளவும்.
பின் லேசாக சூடு செய்து சூப் கிண்ணத்தில் ஊற்றி கொத்துமல்லி இலை தூவி, மிளகு தூள் சேர்த்து வேக வைத்த முருங்கைக்காய் விழுதை சேர்த்து பரிமாறவும்.




வெந்தய கீரை கூட்டு

தேவையான பொருட்கள்

வெந்தயகீரை 1 கப்
தேங்காய் 1/4 கப்
சீரகம் 1 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
எண்ணெய் தாளிக்க
கடுகு 1/4 ஸ்பூன்
வர மிளகாய் 2
வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
தக்காளி 1 சிறியது
வேக வைத்த பாசி பருப்பு 1/2 கப்
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

தேங்காய் சீரகம் மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்
பாசி பருப்பை வறுத்து வேக வைத்து மசித்து கொள்ளவும்
கீரையை சுத்தம் செய்து நறுக்கி அலசி வைக்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
அதனுடன் சுத்தம் செய்த கீரையை சேர்த்து 5 நிமிடம் வதக்கி விடவும்
கீரை வதங்கியதும் மசித்த பருப்பை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்
அவற்றுடன் அரைத்த தேங்காய் விழுது சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்
நன்கு கொதித்ததும் பெருங்காயதூள் சேர்த்து இறக்கவும்
அவற்றில் கடுகு வர மிளகாய் தாளித்து கொட்டி பரிமாறவும்




முளைக் கீரை கூட்டு

தேவையான பொருட்கள்

முளைக்கீரை
பாசிப்பருப்பு
கடுகு உளுந்து
வர மிளகாய்
வெங்காயம்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து வரமிளகாய் போட்டு தாளிக்கவும் பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்

வெங்காயம் வதங்கியவுடன் பாசிப் பருப்பை போடவும்

பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கீரையை போட்டு வதக்கவும்

அரிசி களைந்த களனி தண்ணீர் ஊற்றி ஒரு விசில் விடவும்

சுவையான முளைக் கீரை கூட்டு தயார்






கீரை பருப்பு சாதம்

தேவையான பொருட்கள்

கீரை 1கட்டு
பருப்பு 1/2கப்
மிளகாய் 1
உப்பு
தக்காளி 1
எண்ணெய்
கடுகு

செய்முறை

குக்கெரில் கீரை, பருப்பு, தக்காளி, மிளகாய், சேர்த்து வேக விடவும்
2விசில் வரும் வரை வேக வைக்கவும்
கடுகு, சீரகம் தாளிக்கவும்
உப்பு சேர்க்கவும்
சாதம் சேர்த்து கிளறவும்


கீரை உளுந்து போண்டா

தேவையான பொருட்கள்

உருட்டு உளுந்து -1/2 கப்
அரிசி மாவு -2 மேஜைக்கரண்டி
கீரை பொடியாக நறுக்கியது -1/3 கப்
வெங்காயம் பொடியாக நறுக்கியது -1/8 கப்
கேரட் பொடியாக நறுக்கியது -1/16 கப்
தேங்காய் பொடியாக நறுக்கியது -1/16 கப்
பச்ச மிளகாய் - 2 அல்லது 3
இஞ்சி -1 சிறிய துண்டு
கறிவேப்பிலை -2 ஆர்க்கு
உப்பு -1 தேக்கரண்டி
மிளகு சீரகப்பொடி -1/4 தேக்கரண்டி
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

உளுந்தை களைந்து ஒருமணிநேரம் நன்றாக ஊறவைத்து கிரைண்டரில் நாற்பது முதல் அறுபது நிமிடங்கள் வரை தண்ணீர் சிறிது தெளித்து பந்து மாதிரி அரைத்துக்கொள்ளவும்

அதனுடன் கொடுக்கப்பட்ட பொருட்கள் (எண்ணெய் தவிர) அனைத்தும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

கடாயில் எண்ணெய் வைத்து நன்றாக காய்ந்ததும் சிறிய போண்டாக்களாக பொரித்து எடுக்கவும்

சட்னியுடன் பரிமாறலாம்



வல்லாரைக் கீரை சட்னி

தேவையான பொருட்கள்

வல்லாரைக் கீரை -1கட்டு
வரமிளகாய் -3
இஞ்சி -சிறிதளவு
பூண்டு -2பல்
புளி -சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய்
தாளிக்கத் தேவையானபொருட்கள் :
கடுகு உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
மிளகாய் -1

செய்முறை

முதலில் வல்லாரைக் கீரையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வல்லாரைக் கீரையை போட்டு வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
பின் மற்றொரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு,மிளகாய், புளி,உப்பு இவற்றை சிறிதாக வதக்கி வைத்து கொள்ள வேண்டும்.
இவை இரண்டும் நன்றாக ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
பின் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ,மிளகாய் சேர்த்து தாழித்து அரைத்த வல்லாரைக் கீரை சிட்னியில் சேர்த்து கிளறி விடவும்.
சுவையான வல்லாரைக் கீரை சட்னி ரெடி.
இவற்றை இட்லி, தோசை, சப்பாத்தி உடன் சேர்த்து சாப்பிடலாம்.


மொடகத்தான் கீரை தோசை

தேவையான பொருட்கள்

மொடகத்தான் கீரை தேவைக்கேற்ப (அதிகம் சேர்ப்பது நல்லது)
இட்லி தோசை மாவு தேவைக்கேற்ப
உப்பு தேவையான அளவு
பச்சைமிளகாய்
சீரகம்
இஞ்சி (வேண்டுமானால்)

செய்முறை

மொடகத்தான் கீரை ஆய்ந்து, நன்கு அலசி அத்துடன் பச்சைமிளகாய் சீரகம் இஞ்சி சேர்த்து மிக்ஸியில் மை போல அரைக்கவும்
அரைத்ததை புளித்த இட்லி தோசை மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்
தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்
பின்னர் தோசை ஊற்றி பிடித்தமான சட்னியுடன் பரிமாறவும்.




கீரை காய்கறி குழம்பு

தேவையான பொருட்கள்

கீரை மற்றும் காய்கள் சேர்ந்து 2 கப்
துவரம் பருப்பு அரை கப்
உப்பு 1 1/4 தேக்கரண்டி
மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
வறுத்து அரைக்க தேவையானவை
துவரம் பருப்பு 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் அரை கப்
மிளகாய்வற்றல் 2
மிளகு அரை தேக்கரண்டி
கட்டி பெருங்காயம் -1 சிறிய துண்டு
எண்ணெய் அரைத்தேக்கரண்டி
தாளிக்க
தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
கடுகு ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல்-1

செய்முறை

துவரம்பருப்பை குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்
கீரை மற்றும் காய்களை உப்பு மஞ்சள் பொடி தண்ணீர் சேர்த்து வேக விடவும்

வறுக்க கொடுத்தவற்றை வறுத்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
கீரை மற்றும் காய்கள் நன்றாக வெந்ததும் வேக வைத்த பருப்பு அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதி விடவும். குழம்பு பதம் வருவதற்கு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து சேர்க்கவும்





மனத்தக்காளி கீரை கூட்டு

தேவையான பொருட்கள்

மணத்தக்காளி கீரை 1 கட்டு
உப்பு
பாசிபருப்பு 1 கப்
தேங்காய் 1/2 கப்
சீரகம் 1-2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 4

செய்முறை

கீரை மற்றும் பருப்பு குக்கரில் ! விசில் வைத்து கொள்ள வேண்டும்
தேங்காய் சீரகம் வெங்காயம் நன்கு அரைத்து கொள்ளவும்
கீரையுடன் தேங்காய் உப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அதன் மேல் கொட்டி இறக்கவும்





































Comments