இனிப்பு (sweet)

காஜு ஸ்வீட்

தேவையான பொருட்கள்

முந்திரி பருப்பு - 250 gm(அரை பருப்பு)
சர்க்கரை - 150gm
தண்ணீர் - 2 - 3 மேஜைக்கரண்டி அளவு
நெய் 1 தேக்கரண்டி

செய்முறை

முந்திரி பருப்பை நன்கு மையாக அரைத்து சலித்து கொள்ளுங்கள்.
நான் ஸ்டிக் கடாயில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து நன்கு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடுங்கள்.
கொதி வந்தவுடன் அடுப்பை அனைத்து, சலித்த பருப்பை அதனுடன் சேர்த்து பிரட்டி கொண்டே இருங்கள்.
சிறிது நேரம் கழித்து கடாயில் ஒட்டாமல் வரும். நன்கு இறுகி விடும்.
வந்த பின் பட்டர் பேப்பரில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து சப்பாத்தி மாவு பிணைவது போல் நெய் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.
பின் அதன் மேல் பட்டர் பேப்பர் சேர்த்து பரத்தி கொள்ளுங்கள்.
20 - 30 நிமிடம் செட் ஆனதும் கட் செய்து பரிமாறுங்கள்.
வேண்டும் என்றால் செட் செய்யும் பொழுது சில்வர் பேப்பர் ஒட்டி கொள்ளுங்கள்.
பரிமாறும் பொழுது குங்குமப்பூ, பிஸ்தா வைத்து அலங்கரித்து கொள்ளலாம்.



ஸ்வீட் பூரி

தேவையான பொருட்கள்

மைதா மாவு - 1கப்
சர்க்கரை - 3/4கப்
தண்ணீர்

செய்முறை

மைதா மாவு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
பிறகு சப்பாத்தி இட்டு வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.



இனிப்பு சீடை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு 1 கப்
உளுந்து 2 மேஜைக்கரண்டி
வெள்ளை எள்ளு 2 மேஜைக்கரண்டி
வெல்லம் 1/2 கப்
ஏலக்காய் 1
நெய் 3 மேஜைக்கரண்டி
தண்ணீர் 1/4 கப்

செய்முறை

ஒரு கடாயில் உளுந்து சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து ஆறவிடவும்.
பின் ஒரு கடாயில் அரிசி மாவு சேர்த்து நன்கு வறுக்கவும்.
உளுந்து ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து சல்லித்து கொள்ளவும்.
ஒரு கடாயில் வெல்லம் மாற்று தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
கரைத்த வெல்லத்தை வடிகட்டி அதே கடாயில் ஊற்றி அதில் எள்ளு, ஏலக்காய் தூள், நெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பின் அதில் வறுத்த அரிசி மாவு, அரைத்த உளுந்து மாவு சேர்த்து நன்கு கிளறவும்.
கை சூடு பொறுக்கும் சூட்டில் சிறிய உரண்டைகளாக பிடிக்கவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் உருட்டிய உரண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.



இனிப்பு ரோல்

தேவையான பொருட்கள்

மைதா மாவு - 1கப்
அரிசி மாவு - 1/2கப்
கோவா-1/4கப்
சர்க்கரை - 3/4கப்
ஏலக்காய் தூள்
தண்ணீர்

செய்முறை

மைதா மாவு, அரிசி மாவு, கோவா சேர்த்து பிசைந்து கொள்ளவும்
பிறகு அதை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
பிறகு அதை நீள வாக்கில் உருட்டி சுருட்டி கொள்ளவும்
பிறகு அதை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சர்க்கரை தண்ணீர் சேர்த்து பாகு வைக்கவும்
பிறகு பொரித்ததை சர்க்கரை பாகில் போட்டு எடுத்துக்கொள்ளவும்
பிறகு பரிமாரவும்



இனிப்பு அவல்

தேவையான பொருட்கள்

அவல் - 1கப்
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் - 2
நெய் - 2ஸ்பூன்
முந்தரி பருப்பு - 10

செய்முறை

வானலியில் நெய் ஊற்றி முந்தரி பருப்பு வருத்து எடுத்துக்கொள்ளவும்
பிறகு அவலை தண்ணீர் சேர்த்து கிளறி வைக்கவும்
பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லம், 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
பிறகு அவலை சேர்த்து கிளறவும்
ஏலக்காய் சேர்த்து கொள்ளவும்
கெட்டி பதம் வந்தவுடன் இறக்கவும்
முந்தரி பருப்பு சேர்த்து கிளறி பரிமாரவும்


இனிப்பு சீடை

தேவையான பொருட்கள்

வறுத்த அரிசி மாவு ஒரு கப்
சர்க்கரை முக்கால் கப்
ஏலக்காய் பொடி 1பின்ச்
இதற்கு தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

சர்க்கரையைப் பொடி செய்து கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு பொடித்த சர்க்கரை ஏலக்காய் போட்டு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்

சுவையான சீடை தயார்


இனிப்பு பூரி

தேவையான பொருட்கள்

மைதா மாவு - 2கப்
பொட்டுகடலை மாவு - 1கப்
சர்க்கரை - 1/2கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - 1 பின்ச்

செய்முறை

மைதா மாவு, உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
பொட்டுகடலை, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
பிறகு மைதா மாவை சப்பாத்தி போல் இட்டு நடுவில் அரைத்ததை வைத்து மடித்து கொள்ளவும்
பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.


இனிப்பு தோசை

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு ஒன்றரை கப்
மைதா மாவு 1 1/2கப்
வெல்லம் 150 கிராம்
உப்பு பின்ச்

செய்முறை

வெல்லத்தை தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள்
பின்பு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மைதா மாவு உப்பு ,வெல்லபாகு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கரைத்துக் கொள்ளுங்கள்
பின்பு தோசைக்கலில் சூடேறியதும் தோசை ஊற்றுவது போல ஊற்றி இருபுறமும் நெய் இட்டு சுட்டு எடுங்கள்.


இனிப்பு பூந்தி

தேவையான பொருட்கள்

கடலை மாவு1/2 கப்
சக்கரை 1 கப்
கலர் பவுடர் மஞ்சள்
ஏலக்காய் 3
எண்ணெய் 200 ml
தண்ணீர்

செய்முறை

கடலை மாவு , கலர் பவுடர், 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு மாவு ஊற்றும் பதத்தில் கலக்கவும்

எண்ணெயை காய வைத்து, ஜல்லி கரண்டியில் ஊற்றி பொரிக்கவும்.

அடுப்பை மீடியமில் வைத்து நிதானமாக பொரிக்கவும்.

பொரித்த பூந்தியை டிஷ்யூவில் வடிய வைக்கவும்.

இப்போது சக்கரை பாகை தயாரிக்க வேண்டும்
குக்கரில் 1 கப் சக்கரை, 1/2 கப் தண்ணீர், 3 ஏலக்காய் போட்டு 3 விசில் வைக்கவும்

இப்போது பொரித்த பூந்தி போடவும்.

15 நிமிடம் ஊற வைக்கவும் சுவையான இனிப்பு பூந்தி ரெடி
பாதம் தூவி பரிமாறவும்



இனிப்பு அப்பம்

தேவையான பொருட்கள்

மைதா மாவு - 1கப்
ரவை - 1/2கப்
சர்க்கரை - 1/4கப்
பழம் - 1

செய்முறை

எல்லா பொருட்களையும் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
தோசை மாவு பத்திற்கு கலந்து வைக்கவும்.
பிறகு அப்பம் குழியில் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.


இனிப்பு பொங்கல்

தேவையான பொருட்கள்

புதிய பச்சரிசி 1 டம்ளர்
உடுத்த பாசிபருப்பு ½ டம்ளர்
புதிய மண்ட வெல்லம் 150 கிராம்
முந்திரி பருப்பு 20
உலர்ந்த திராட்சை 20
நெய் 100 மில்லி
ஏலக்காய் 4

செய்முறை

5 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்....
வெல்லத்தை அளவான தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.... ( கரைத்தால் போதும் )
பின்னர் சுத்தம் செய்த பச்சரிசி சேர்க்கவும்.....
அரிசி பாதி வெந்த பின் சுத்தம் செய்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்...
இவை நன்கு வெந்து குழைந்த பின்னர் வடிகட்டிய பாகு சேர்த்து கிளறவும்....
தட்டிய ஏலக்காய் சேர்க்கவும்....
தாளிப்பு கரண்டியில் நெய்விட்டு ....
சூடானதும் ,முந்திரி ,திராட்சை சேர்த்து நன்கு வதக்கவும்......
இதனை பொங்கலுடன் சேர்க்கவும்...
இதனை சிறிய தீயில் நன்கு கலந்து கொள்ளவும்...
பின் 3 நிமிடங்கள் வரை வைத்து இறக்கவும்..... நான் மசால் வடையுடன் பரிமாரினேன் ........



இனிப்பு கச்சோரி

தேவையான பொருட்கள்

மைதா மாவு ஒரு கப்
பாசிப்பருப்பு கால் கப்
தேங்காய் துருவல் கால் கப்
வெல்லம் ஒரு கட்டி
ஏலக்காய்-2
உப்பு ஒரு சிட்டிகை
தண்ணீர் தேவையான அளவு
தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

மைதா மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக சப்பாத்தி பதத்துக்கு பிசைந்து கொள்ளவும் பிசைந்த மாவை 30 நிமிடம் ஊற விடவும்

பாசிப்பருப்பை வேக விடவும்

தேங்காயை துருவிக் கொள்ளவும் வெல்லத்தை பாகு எடுத்துக் கொள்ளவும்
ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் தேங்காயை வதக்கி கொள்ளவும் அதில் வேக வைத்த பாசிப்பருப்பு வெல்லப் பாகு சேர்த்து சுருள கிளறவும்

தேவையானவை தயார்

பிசைந்த மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமாக தேய்க்கவும் தேய்த்த மாவை நடுவில் பாசிப்பருப்பு பூரணத்தை வைக்கவும்

பூரணத்தை வைத்து மாவை மூடி மீண்டும் தேய்க்கவும்

இதேபோல் மற்ற மாவுகளையும் செய்யவும்

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்



இனிப்பு சுன்டல்

தேவையான பொருட்கள்

பச்சைப்பயறு ஒரு கப்
சர்க்கரை அல்லது வெல்லம் - 2 மேஜை கரண்டி
தேங்காய் துருவல் தேவையான அளவு

செய்முறை

பச்சை பயறை குக்கரில் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
அதனுடன் வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்
தேங்காய் துருவல் தூவி பரிமாறவும்


இனிப்பு முறுக்கு

தேவையான பொருட்கள்

மைதா மாவு - 1கப்
வெண்ணெய் - 2மேஜை கரண்டி
சர்க்கரை - 1/2கப்
பால் - 1கப்
எண்ணெய்

செய்முறை

மைதா மாவு, சர்க்கரை, வெண்ணெய், பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
பிறகு ஒரு உருண்டையை எடுத்து அதை நீள வாக்கில் உருட்டி சுருட்டி கொள்ளவும்
பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்



இனிப்பு பணியாரம்

தேவையான பொருட்கள்

இட்லி மாவு 1 கப்
வெல்லம் 1 கப்
ஏலக்காய்தூள் 1/4 ஸ்பூன்
கசகசா 1
நெய் 10 ஸ்பூன்

செய்முறை

வெல்லத்தை திக்காக பால் எடுத்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் இட்லி மாவுடன் வெல்லப்பாகு ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்
பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கசகசா சேர்த்து பொரியவிடவும் பிறகு கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
சுவையான இனிப்பு பனியாரம் தயார்


இனிப்பு தயிர் வடை

தேவையான பொருட்கள்

உளுந்து வடை:
முழு உளுந்து 1 1/2 கப்
அரிசி சாதம் 1/4 கப்
உப்பு தேவைக்கேற்ப
தண்ணீர் தேவைக்கேற்ப
எண்ணெய் பொரிக்க
தயிர் வடை செய்ய:
தயிர் 1 கப்
பால் 1/4 கப்
உப்பு ஒரு சிட்டிகை
சர்க்கரை 1 தேக்கரண்டி
தக்காளி சாஸ் 1 தேக்கரண்டி
பொரித்த நடக்கடலை/ மிச்சர் பூந்தி- அலங்கரிக்க
கொத்துமல்லி இலை - அலங்கரிக்க

செய்முறை

உளுந்தை 30 நிமிடம் ஊற வைத்து , அரிசி சாதத்துடன் சேர்த்து குறைவான தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
இதில் உப்பு சேர்த்து வடை வடிவத்தில் கையில் தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
உடனே இதை லேசான வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் தயிர், பால், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
இதில் ஊறிய வடைகள் போட்டு, மேலே தக்காளி சாஸ் 1 தேக்கரண்டி ஊற்றி, நடக்கடலை, கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.



இனிப்பு உருண்டைகள் 

தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை ஒரு கப்
சோள மாவு ஒரு கப்
வெல்லம் அரை கப்
நெய் தேவையான அளவு

செய்முறை

வாணலியில் சிறிது நெய் விட்டு சோள மாவை வறுத்து கொள்ளவும்
பிறகு மிக்ஸியில் பொட்டுக்கடலை மாவு சோள மாவு வெல்லம் இவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
பிறகு தேவையான அளவு நெய் சேர்த்து உருண்டை பிடித்துக் கொள்ளவும்



இனிப்பு பான் பீட்சா

தேவையான பொருட்கள்

மைதா 1/4 கிலோ
ரவை 1 தேக்கரண்டி
ஈஸ்ட் 1/4 தேக்கரண்டி
ஸ்வீட் கார்ன் வேகவைத்தது 1
நிலக்கடலை வறுத்தது 1 கப்
தேங்காய் துருவல் 1 கப்
சர்க்கரை/ நாட்டுச்சர்க்கரை தேவையானளவு
உப்பு சிறிது
எண்ணெய் தேவையானளவு

செய்முறை

முதலில் ஈஸ்டினை சிறிது வெண்ணீரில் கலந்து கரைத்து வைக்கவும்
பின்பு மைதா, ரவை சிறிதளவு உப்பு , 2 தேக்கரண்டி சர்க்கரை (விரும்பினால்) ஈஸ்ட் கரைசலையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 5 மணி நேரம் மூடி வைக்கவும்.
பான் பீட்சா செய்ய 1/2 மணி நேரத்திற்க்கு முன்பு வறுத்த கடலையை கொரகொரப்பாக பொடி செய்யவும், வேகவைத்த கார்னை உதிர்த்துக் கொள்ளவும்.
மேலே கூறியவற்றுடன் தேங்காய் துருவல், துளியளவு உப்பு சேர்த்து கிளறி வைக்கவும்
இப்பொழுது மாவினை திறந்து நன்கு கரண்டியால் கிளறி கொள்ளவும். அடுப்பில் தோசை கல்லினை வைத்து எண்ணெய் தடவி சூடாக்கவும்
போதுமான சூடு வந்தவுடன் மாவினை தோசை வார்ப்பது போல் சிறிது மொத்தமாக வார்க்கவும். அனலை சிறிதாக வைக்கவும். மூடி போடவும்.
பாதி பதம் வெந்ததும் தோசை மேல் கிளறி வைத்துள்ள கலவையை வேண்டிய அளவு தூவி விட்டு சர்க்கரை/ நாட்டுச்சர்க்கரையையும் விரும்பிய அளவு தூவிக் கொள்ளவும்
மூடி போட்டு மிதமான தீயில் நன்கு வேகவிடவும்.
பீட்சா வெந்தவுடன் திருப்பி போடாமல் அப்படியே மடித்து எடுத்து சூடாக பரிமாறவும்.





இனிப்பு பூரி/சோமாஸ்

தேவையான பொருட்கள்

மைதா மாவு அரை கிலோ
உப்பு தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு
பூரணம் மசால் செய்வதற்கு தேவையான பொருட்கள்::::
தேங்காய் துருவல் ஒரு கப்
சர்க்கரை கால் கப்
பொட்டுக்கடலை கால் கப்
முந்திரி திராட்சை பொடித்தது கால் கப்
கசகசா ஒரு ஸ்பூன்
கருப்பு எள் ஒரு ஸ்பூன்

செய்முறை

பாத்திரத்தில் மைதா மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
பிசைந்த மாவை சிறிது நேரம் ஊற விடவும்
ஒரு கடாயில் தேங்காய் துருவலை சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும்
தேங்காய் துருவலுடன் சர்க்கரை கசகசா கருப்பு எள் பொட்டுக்கடலை திராட்சை முந்திரி சேர்த்து கலந்து பூரணம் எடுத்துக் கொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்
பிசைந்து வைத்த மாவை சப்பாத்தி கட்டையில் பூரி வடிவில் தேய்த்து அதன் நடுவில் பூரணத்தை வைத்து மூடி எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
சுவையான ஸ்வீட் பூரி தயார்




இனிப்பு நெல்லிக்காய்

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய்20
சக்கரை2-1/2 கப்
தண்ணீர்3 கப்
ஏலப்பொடி சிறிது
குங்கும்ப்பூ சிறிதுன

செய்முறை

நெல்லிய்யை போஃர்க்கால் குத்தி ஓட்டை போடவும்
மூழ்கும் அளவு தண்ணீரில் ஹை ப்ஃளேமில் வேக விடவும்
தண்ணீரை வடிக்கவும்
சக்கரை தண்ணீரில் கரைய விட்டு நெல்லியை போட்டு குறைந்த தீயில் 1/2 மணி வேகவிடவும்
2 நாள் மூடி வைக்கவும்
மூன்றாம்நாள் நெல்லியை எடுத்து விட்டு சக்கரையில் ஏலம் குங்கும்ப்பூ போட்டு 2 கம்பி பதம் வேகவிடவும்
நெல்லிக்காயை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்
சாப்டான இனிப்பு நெல்லிக்காய் ரெடி



இனிப்பு, கார பணியாரம்

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி 1கப்
பச்சரிசி 1கப்
வெந்தயம் 1ஸ்பூன்
உளுந்து 1/4 கப்
இனிப்புக்கு
வெல்லம் 1 கப்
ஏலக்காய் 2
தேங்காய் ஒரு துண்டு
காரத்திற்கு
கடுகு 1/2ஸ்பூன்
உளுந்து 2ஸ்பூன்
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 2
சோடா உப்பு(விரும்பினால்)
உப்பு
நெய்

செய்முறை

அனைத்தையும் ஒன்றாக ஊற வைத்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். உப்பு சேர்த்து கரைத்து 5மணிநேரம் புளிக்க விடவும்
இனிப்பு பணியாரம் செய்ய மாவில் வெல்லம் துருவி சேர்த்து ஏலக்காய், தேங்காய் பல் சேர்த்து பணியாரகல்லில் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்
கார பணியாரம் சுட கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கி மாவில் சேர்த்து பணியாரமாக சுட்டு எடுக்கவும்.

இரண்டு வகை பணியாரம் தயார்


இனிப்பு தயிர் புட்டிங் 

தேவையான பொருட்கள்

தயிர் 400 கிராம்
சுண்டிய பால் ( condensed milk) 100 கிராம்
பால் ஆடை 200 கிராம்
ஏலக்காய் 2
முந்திரி சிறிது
வெல்லம் 1/2 கப்

செய்முறை

முதலில் ஒரு வடிகட்டியில் தயிரை தட்டி 1 மணி நேரம் வைக்கவும். தயிரில் உள்ள தண்ணீர் வடிந்து கட்டியாக இருக்கும்.
பின் பாலாடை, சுண்டிய பால்,வெவ்லம்,ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின் அகன்ற பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஓவனில் 170° யில் சூடாக்கவும்.
தயிர் கலவையை சிறிய பாத்திரங்களில் ஊற்றி அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடவும் இதை ஓவனில் வைத்திருக்கும் தண்ணீரின் மேல் வைத்து 30 நிமிடம் பேக் செய்யவும்.
ஆறியதும் முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்...


இனிப்பு மல்லி துவையல்

தேவையான பொருட்கள்

மல்லி 100g
வத்தல் 15
புளி 1நெல்லி அளவு
பூண்டு 10பல்
வெல்லம் 50g
எண்ணெய் 2ஸ்பூன்
உப்பு 1ஸ்பூன்

செய்முறை

வாணலியில் எண்ணெய் இட்டு வெல்லம் தவிர அனைத்து பொருட்களையும் நன்கு வறுக்கவும்
மிக்ஸியில் பவுடர் போல் அரைக்கவும்
பின் பொடித்த வெல்லம் சேர்த்து அரைக்கவும்
சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்
இனிப்பு மல்லி துவையல் தயார்




ஜவ்வரிசி இனிப்பு பொங்கல்

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி - 1 / 8 கப்
வெல்லம் - 1 / 4 கப்
பச்சரிசி - 1 / 2 மேஜைகரண்டி
தேங்காய் துருவல் - 1 / 2 மேஜைகரண்டி
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
முந்திரி பருப்பு கிஸ்மிஸ் - தலா 5
நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை

ஜவ்வரிசியை தண்ணீர் விட்டு ஒருமணி நேரம் ஊறவைக்கவும். தேவைப்பட்டால் வெந்நீரில் ஊறவைக்கவும். பச்சரிசி யை தனியாக ஊறவைக்கவும்

ஜவ்வரிசியை குக்கரில் வேக வைத்து எடுக்கவும்

ஊறவைத்த அரிசியை தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்

கடாயில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளலாம். சிறிது கெட்டியானதும் வேகவைத்த ஜவ்வரிசியை சேர்க்கவும்

ஒரு தேக்கரண்டி நெய் மற்றும் அரைத்த விழுதை சேர்த்து கிளறவும்

ஏலக்காய் பொடி தூவி நெய்யில் முந்திரி பருப்பு கிஸ்மிஸ் வறுத்து சேர்த்தால் அருமையான ஜவ்வரிசி இனிப்பு பொங்கல் தயார்




அரிசி மாவு இனிப்பு அப்பம்

தேவையான பொருட்கள்

அரிசி மாவு 100 கிராம்
வெல்லம் 100 கிராம்
ஏலக்காய் பொடி 2 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் 1/2டேபிள்ஸ்பூன்
பேக்கிங் சோடா அரை டேபிள்ஸ்பூன்
உப்பு 1சிட்டிகை
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பாகு காய்ச்சிக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு உப்பு ஏலக்காய்த்தூள் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும்
உடன் வெல்லப்பாகு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
பிசைந்த மாவை சிறிய வட்டமாக தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
சுவையான அரிசி மாவு இனிப்பு அப்பம் தயார்



கம்பு பணியாரம்

தேவையான பொருட்கள்

கம்பு : 1 கப்
உளுந்து : ½ கப்
பச்சரிசி : 1 கப்
எண்ணெய் : தேவையான அளவு
வெல்லம் அல்லது கருப்பட்டி : தேவையான அளவு
தேங்காய் துருவல் : 4 - 5 ஸ்பூன்

செய்முறை

உளுந்து, கம்பு , பச்சரிசி ஆகியவற்றை 3 மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும்
பின் அதனுடன் தேவையான வெல்லம் அல்லது கருப்பட்டி, தேங்காய் துருவல்  சேர்த்து கலக்கவும்
பின் பணியார கல்லில் எண்ணெய் தேய்த்து மிதமான தீயில் பணியார மாவினை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்
வெல்லத்துருவல் தூவி பரிமாறவும்



உருளைகிழங்கு இனிப்பு மிக்ஸர்

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 3 நடுத்தர அளவு
சர்க்கரை - 3டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைசாறு -1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
நெய்-1டீஸ்பூன்
முந்திரி -8
திராட்சை -8
கிராம்பு -1
ஏலக்காய் -2

செய்முறை

சர்க்கரையை ஏலக்காய் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
உருளையை தோல் சீவி கழுவி துருவி எலுமிச்சைசாறு கலந்த நீரில் போடவும்.

பின் நன்கு அலசி நீரை வடித்து ஈரம் போக 10 நிமிடங்கள் வரை உலர்த்தவும்.

கடாயில் நெய் காயவைத்து முந்திரி திராட்சை வறுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து லேயராக உருளையை போட்டு பொரித்தெடுக்கவும்

எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கவேண்டும்.அதிக சூடு இருந்தால் சிவந்துவிடும்,சுவையும் மாறும்.குறைந்த சூட்டில் இருந்தால் எண்ணெய் குடிக்கும்.
பொரித்த உருளையை கிச்சன் பேப்பரில் எடுத்து வைக்கவும்.

பொரித்த உருளை,பொடித்த சர்க்கரை,வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்




சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு ரொட்டி

தேவையான பொருட்கள்

சக்கரைவள்ளி கிழங்கு 5
அரிசி மாவு 2 கப்
கருப்பு எள் ஒரு ஸ்பூன்
தேங்காய்த்துருவல் 2 ஸ்பூன்
சர்க்கரை 5 ஸ்பூன்
என்னை 5 டேபிள்ஸ்பூன்
சுடு தண்ணீர் ஒரு கப்

செய்முறை

சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்
அரிசி மாவுடன் வேகவைத்த கிழங்கு தேங்காய்த் துருவல் சர்க்கரை எல் உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
பிசைந்த மாவை தோசை தவாவில் எண்ணெய் சேர்த்து இருபுறமும் சுட்டு எடுக்கவும்
சுவையான ஆரோக்கியமான சக்கரைவள்ளி கிழங்கு இனிப்பு ரொட்டி தயார்



வெல்ல சாதம்/ இனிப்பு தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 / 4 கப்
வெல்லம் - 1 / 2 கப்
தேங்காய் துருவல் - 1 / 8 கப் + 1 மேஜைகரண்டி
நெய் - 3 மேஜைகரண்டி
முந்திரி பருப்பு - 10
கிஸ்மிஸ் - 10
ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை

செய்முறை

அரிசியை களைந்து குக்கரில் வேக வைக்கவும்

அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு வெல்லம் சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்

சாதத்தை ஒரு தேக்கரண்டி நெய் விட்டு மசித்து கொள்ளவும்

வெல்லக்கரைசலை விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளலாம்
வெல்லகரைசலுடன் சாதம் சேர்த்து ஏலக்காய் பொடி தூவி நன்றாக கிளறவும்

தேங்காய் துருவலில் ஒரு தேக்கரண்டி தவிர மற்றதை சேர்த்து கிளறவும்

ஒரு தேக்கரண்டி தவிர மற்ற நெய் முழுவதும் விட்டு சேர்த்து கிளறி இறக்கவும்
நெய்யில் முந்திரி பருப்பு கிஸ்மிஸ் தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும்

வறுத்ததை சேர்த்து பறிமாறவும்





Comments