வடை
தேவையான பொருட்கள்
உளுந்து 250 கிராம்
இட்லி அரிசி 100 கிராம்
சோம்பு 1 ஷ்பூன்
சின்ன வெங்காயம் 1 கப்
உப்பு தேவைக்கு
ப.மிளகாய் 5 ( காரத்திற்கேற்ப)
கறிவேப்பிலை ஒரு ஆர்க்
மல்லி தலை
எண்ணெய் தேவைக்கு
செய்முறை
உளுந்தையும் அரிசியையும் தனி தனியே ஊறவைக்கவும்.
மிக்சியில் உளுந்தை கெட்டியாக அரைக்கவும்.
அரிசியோடு ப.மிளகாய், சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,மல்லி,கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வடைகளை தட்டி சுட்டு எடுக்கவும்.
பழ வடை
தேவையான பொருட்கள்
வடை மாவிற்கு-
ஊளுத்தம்பருப்பு 1 கப்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரிப்பதற்கு
பழ வகைகள் -(விழுதாக அரைக்கவும்)
ஆப்பிள் 1 நறுக்கியது
வாழைப்பழம் 1 நறுக்கியது
சப்போட்டா பழம் 2 நறுக்கியது
கொய்யா பழம் 1 நறுக்கியது
செய்முறை
ஊளுத்தம்பருப்பை அரை மணிநேரம் ஊறவைத்து வடை மாவு பதத்திற்கு உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
பழங்களை நன்கு கழுவிதோல் நீக்கி சுத்தம் செய்து துண்டு துண்டாக வெட்டி கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு விழுதாக அரைக்கவும்.
இந்த பழ விழுதை வடை மாவுடன் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
வடைகளாக தட்டி எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
உளுந்து 250 கிராம்
இட்லி அரிசி 100 கிராம்
சோம்பு 1 ஷ்பூன்
சின்ன வெங்காயம் 1 கப்
உப்பு தேவைக்கு
ப.மிளகாய் 5 ( காரத்திற்கேற்ப)
கறிவேப்பிலை ஒரு ஆர்க்
மல்லி தலை
எண்ணெய் தேவைக்கு
செய்முறை
உளுந்தையும் அரிசியையும் தனி தனியே ஊறவைக்கவும்.
மிக்சியில் உளுந்தை கெட்டியாக அரைக்கவும்.
அரிசியோடு ப.மிளகாய், சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,மல்லி,கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வடைகளை தட்டி சுட்டு எடுக்கவும்.
பழ வடை
தேவையான பொருட்கள்
வடை மாவிற்கு-
ஊளுத்தம்பருப்பு 1 கப்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரிப்பதற்கு
பழ வகைகள் -(விழுதாக அரைக்கவும்)
ஆப்பிள் 1 நறுக்கியது
வாழைப்பழம் 1 நறுக்கியது
சப்போட்டா பழம் 2 நறுக்கியது
கொய்யா பழம் 1 நறுக்கியது
செய்முறை
ஊளுத்தம்பருப்பை அரை மணிநேரம் ஊறவைத்து வடை மாவு பதத்திற்கு உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
பழங்களை நன்கு கழுவிதோல் நீக்கி சுத்தம் செய்து துண்டு துண்டாக வெட்டி கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு விழுதாக அரைக்கவும்.
இந்த பழ விழுதை வடை மாவுடன் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
வடைகளாக தட்டி எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
'
ரச வடை
தேவையான பொருட்கள்
வடை பருப்பு 200 கிராம்
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 1
பெருஞ்சீரகம் 1 சிற்றிகை
கறிவேப்பிலை 15 இலைளே
இஞ்சி 1 சிறிய துண்டு
ரச பொடி 2 சிற்றிகை
புளி கரைசல் தேவைக்கு
வத்தல் மிளகு 1
உப்பு தேவைக்கு
கடுகு 1சிற்றிகை
எண்ணெய் தேவைக்கு
செய்முறை
முதலில் வடை பருப்பை 1 மணி நேரத்திற்கு முன்பு ஊற வைக்கவும்
ஊறிய வடை பருப்புடன் பெருஞ்சீரகம் வத்தல் சேர்த்து பரபரவென மிக்சியில் அரைக்கவும் அரைத்த பருப்புடன் வெங்காயம் உப்பு பச்சை மிளகாய் இஞ்சி 6 கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி கையில் பிடிக்கும் தயார் செய்து வைக்கவும். பின்பு வாணலில் எண்ணெயை ஊற்றி சிறிது சிறிதாக பொரித்து எடுக்கவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். ரச பொடி புளி கரைசல் சேர்த்து கலக்கி தேவையா உப்பு போட்டு இறக்கவும். ரசம் சிறிது ஆறிய பின் பொரித்த வடைகளை அதனுள் போட்டு நான்கு மணி நேரத்திற்கு பின் பரிமாறவும். சுவையான ரச வடை தயார்
தவல வடை
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 மேஜைகரண்டி
புழுங்கல் அரிசி - 1 மேஜைகரண்டி
கடலைப்பருப்பு - 1 மேஜைகரண்டி
துவரம்பருப்பு - 1 மேஜைகரண்டி
பாசிப்பருப்பு - 1 மேஜைகரண்டி
உருட்டு உளுந்து - 1 மேஜைகரண்டி
பச்ச மிளகாய் - 1
மிளகாய் வத்தல் - 2
வெங்காயம் - பொடியாக நறுக்கியது - 1 மேஜைகரண்டி
தேங்காய் துருவல் - 1 மேஜைகரண்டி
கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 2 சிட்டிகை
இஞ்சி - 1 சிறிய துண்டு
உப்பு - 1 தேக்கரண்டி
வடை பொரிப்பதற்குதேவையானஅளவுஎண்ணெய்
தாளிக்ககடுகு-1/2தேக்கரண்டி
கருவேப்பிலை - 2 ஆர்க்கு
எண்ணெய்-1/2தேக்கரண்டி
செய்முறை
அரிசி பருப்பை தண்ணீர் விட்டு அரைமணி நேரம் முதல் நாற்பது நிமிடங்கள் வரை ஊறவைக்கவும்
மிக்ஸியில் தண்ணீரை வடித்து விட்டுஉப்பு பெருங்காயம் பச்ச மிளகாய் மிளகாய் வத்தல் இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
மாவை கரண்டியால் எடுத்து விடும் பதத்திற்கு வைக்கவும்
தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து சேர்க்கவும். வெங்காயம் கொத்தமல்லி இலை தேங்காய் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும்
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கரண்டியால் மாவை எண்ணெய்யில் விடவும்
பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்
தகி வடை
தேவையான பொருட்கள்
வடை - 4
மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
தயிர் - 1கப்
சாட்மசாலா பொடி - 1தேக்கரண்டி
செய்முறை
தட்டில் வடையை வைத்து அதனுடன்
தயிர் சேர்த்து மிளகு தூள், சாட்மசாலா பொடி, மிளகாய் வத்தல் பொடி தூவி பரிமாரவும்
ரவை வடை
தேவையான பொருட்கள்
வெள்ளைரவை-1கப்
உளுந்து மாவு-1 டேபிள்ஸ்பூன்
புதியதயிர்-1கப்
அரிந்த -சி.வெங்காயம் ,இஞ்சி ,
மாஇஞ்சி,ஜீரகம் ,மிளகு,
மிளகாய்,கறிவேப்பிலை ,மல்லி ,
உப்பு-ஆகியவை தேவைக்கு
சுடுவதற்கு எண்ணெய்
செய்முறை
1-ரவை,தயிர்,உ.மாவு மற்றும் அனைத்தும் கலந்து வைக்கவும் . 2-20நிமிடங்கள் ஊறவும். 3-எண்ணெய் காய்ந்ததும் வடைகள் பொறிக்கவும். கரகரவென,சுவையோசுவை ரவைவடைரெடி.
மெது வடை
தேவையான பொருட்கள்
உளுந்து - 200 கிராம்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு ஒன்று
கறிவேப்பிலை - கொஞ்சம் (பொடியாக நறுக்கப்பட்டது)
சுவைக்கேற்ற உப்பு
பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை
உளுந்தைக் கழுவி 1ல் இருந்து 2 மணி நேரங்களுக்கு ஊறவைக்கவும். தண்ணீரை வடிக்கட்டிவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கிரைண்டரில் ஊறவைத்த பருப்புடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்க்கவும்.
தண்ணீர் தெளித்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் ஊற்றவேண்டாம், வடை அதிக எண்ணெயை இழுத்துக்கொள்ளும். மாவு அடர்த்தியாக இருக்கவேண்டும். தண்ணீராக இருக்கக்கூடாது.
அப்படிச் செய்ததும், கிரைண்டரில் இருந்து மாவை எடுத்துவிடவும்.
இப்போது நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு சேர்க்கவும்.
மாவைக் கைகளால் நன்றாகக் கலந்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை விட்டு கைகளை நனைத்துக்கொள்ளவும்.
ஒரு சிப் லாக் கவரை அல்லது வாழையிலையை எடுத்து எண்ணெய் தடவிக்கொள்ளவும்.
கொஞ்சமாக மாவை எடுத்து ஒரு கவரில் வைக்கவும் மையத்தில் ஒரு ஓட்டையைப் போடவும்.
போதுமான எண்ணெயுடன் வானலியைச் சூடுபடுத்தி எடுத்து மெதுவாக வடையைப் போட்டு பொரித்துக்கொள்ளவும்.
மிதமானத் தீயில் வடை பொன்னிறமாகும்வரை பொரித்து எடுக்கவும்.
வெந்ததும் எடுத்து ஒரு டிஸ்யூ பேப்பரில் வடிக்கட்டவும்.
மொறுமொறுப்பான மிருதுவான வடையின் சுவையை உண்டு மகிழவும்.
கீரை வடை
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு 1 கப்
வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
வர மிளகாய் 3
சோம்பு 1 ஸ்பூன்
மல்லி இழை சிறிது
எண்ணெய் பொரிக்க
உப்பு தேவைக்கேற்ப
வெந்தய கீரை 1/4 கப்
செய்முறை
கடலை பருப்பு சோம்பு மிளகாய் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
விரும்பினால் 1 பச்சை மிளகாய் பொடியாக அரிந்து சேர்க்கலாம்
2 மணி நேரம் ஊறிய பின் சிறிது பருப்பை எடுத்து வைத்து கொள்ளவும்
மீதமுள்ள பருப்பை சிறிது கொரொரப்பாக அரைத்து வைக்கவும்
அதனுடன் உப்பு மல்லி இலை எடுத்து வைத்த பருப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
எண்ணெய் காய வைத்து சிறிய வடையாக தட்டி 2 பக்கமும் சிவக்க வேக வைத்து எடுத்து பரிமாறவும்
வடை சாட்
தேவையான பொருட்கள்
வடை 5
தயிர் 4 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் 1/2 மேஜைக்கரண்டி
ஜீரக தூள் 1/2 மேஜைக்கரண்டி
சாட் மசாலா 1/2 மேஜைக்கரண்டி
ஆம்சுர் பொடி 1/2 மேஜைக்கரண்டி
ஓம பொடி 1/2 கப்
ஒட்டு பக்கோடா 1/4 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
கொத்துமல்லி இலை 1/4 கப்
உப்பு
செய்முறை
முதலில் வடையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம் , தக்காளி , கொத்துமல்லி இலை அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் தயிர் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் பீட் செய்து கொள்ளவும்.
பீட் செய்த தயிரில் மிளகாய்த்தூள், ஜீரக தூள், ஆம்சுர் பொடி, சாட் மசாலா, உப்பு அனைத்தும் கலந்து கொள்ளவும்.
பின் ஒரு தட்டில் நறுக்கிய வடை, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்துமல்லி இலை தூவவும்.
பி்ன் மசாலா கலந்த தயிர் கலவையை வடை மேல் ஊற்றவும்.
பின் அதன் மேல் ஓம பொடி, ஒட்டு பக்கோடா, சாட் மசாலா தூவி பரிமாறவும்.
தால் வடை
தேவையான பொருட்கள்
ராஜ்மா - 1/2கப்
கடலை பருப்பு - 1/2கப்
வெங்காயம் - 1
மிளகாய் - 4
கொத்தமல்லி இலை
உப்பு
எண்ணெய்
செய்முறை
ராஜ்மா, கடலை பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
பிறகு அதை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
உப்பு சேர்த்துக் கொள்ளவும்
பிறகு அதனுடன் வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
வானலியில் எண்ணெய் ஊற்றி மாவை வடை போல் தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
அவல் வடை
தேவையான பொருட்கள்
அவல் 2 கப்
உருளைக்கிழங்கு 2
பச்சை மிளகாய் 6
கறிவேப்பிலை கொத்தமல்லி 1 கைப்பிடி
இஞ்சி சிறிது
எண்ணெய் பொரிக்க
செய்முறை
உருளைக்கிழங்கு வேகவைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்
அவலை நனைத்து தண்ணீர் வடித்து1 நிமிடம் ஊற வைக்கவும்
ஊறிய அவலை உதிர்த்து கிழங்கு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
இதனுடன் பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து வடை போல் தட்டி பொரித்து எடுக்கவும்
சூடாக பரிமாறவும்
மினி வடை
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு 250 கிராம்
பெரிய வெங்காயம் 2
பச்சைமிளகாய்-2
மல்லி இலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு
செய்முறை
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
ஒரு பவுலில் அரைத்த கடலை மாவு பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் மல்லி இலைகள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
மாவை எடுத்து சிறிது சிறிதாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
சுவையான மினி வடை ரெடி
ராகி வடை
தேவையான பொருட்கள்
ராகி மாவு ஒரு கப்
பட்டாணி மாவு கால் கப்
பச்சரிசி மாவு கால் கப்
சின்ன வெங்காயம் ஒரு கப்
இஞ்சி ஒரு சிறிய துண்டு
பூண்டு 4 பல்
பெருங்காயத்தூள் சிறிது
கள்ளிச்செடி கருவேப்பிலை பொடியாக நறுக்கியது ஒரு கப்
சீரகம் ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் சிறிது
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
செய்முறை
இஞ்சி பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
வெங்காயம் கருவேப்பிலை மல்லித்தழை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
பச்சைமிளகாயை நறுக்கிக் கொள்ளவும்
ராகி மாவு பச்சரிசி மாவு பட்டாணி மாவை சிறிது எண்ணெய் உப்பு சேர்த்து முதலில் பிசையவும்
பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை மல்லித்தழை இஞ்சி பூண்டு மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் சீரகம் சேர்த்து நன்கு பிசையவும்
சிறிது தண்ணீர் சேர்த்து வடை பக்குவத்தில் பிசையவும்
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்
மொறுமொறுப்பான ராகி வடை தயார்
மசால் வடை
தேவையான பொருட்கள்
1 கப் கடலைப்பருப்பு (ஊறவைத்து வடிக்கட்டப்பட்டது)
2-3 பச்சை மிளகாய்
2-3 சிவப்பு மிளகாய்
1 தேக்கரண்டி சீரகம்
1/4 கப் புதிய கொத்துமல்லி நறுக்கப்பட்டது
1/4 கப் புதிய புதினா இலை நறுக்கப்பட்டது
1/2 கப் புதிய தேங்காய் துருவப்பட்டது
1/2 கப் மெலிதாக வெட்டப்பட்ட வெங்காயம்
சுவைக்கேற்ற உப்பு
1/2 தேக்கரண்டி பெருங்காயம்
வறுப்பதற்கு எண்ணெய்
செய்முறை
கடலைப்பருப்பை கழுவி 4-5 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும். ஊறவைத்த கடலைப்பருப்பை நன்றாக வடிகட்டிக்கொள்ளவும். ஒரு மிக்சர் ஜாரில் பருப்பு, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், சீரகம் ஆகியவற்றை கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கலக்கும் பாத்திரத்தில் அரைத்த பருப்பை எடுத்துக்கொள்ளவும். இப்போது கொத்துமல்லி, உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். நன்றாகக் கலந்துகொள்ளவும்.
ஒரு சிறிய பகுதியை உங்கள் உள்ளங்கயில் எடுத்து வடை வடிவம் கொடுக்கவும். இந்த வடைகளை சூடான எண்ணெயில் பென்னிறமாக மொறுமொறுப்பாக ஆகும்வரை பொரிக்கவும்.
உங்களுக்குப் பிடித்த சாம்பார் சாதம் அல்லது சட்னி அல்லது தக்காளி கெட்சப் அல்லது சூடான ஒரு கப் டீ அல்லது காபியுடன் பரிமாறவும்.
தயிர் வடை
தேவையான பொருட்கள்
வடைகளுக்கு:
உளுத்தம்பருப்பு : 1/2 கப்
சுவைக்கேற்ற உப்பு
பெருங்காயம் : ஒரு சிட்டிகை
இஞ்சி : 1’’ துண்டு
பச்சை மிளகாய் : 2-3
தயிருக்கு:
கெட்டித் தயிர்: 750 மிலி
பால்: ½ கப்
கிரீம்: 1/4 கப்
சர்க்கரை: 1 தேக்கரண்டி, பொடி செய்யப்பட்டது
உப்பு – சுவைக்கேற்றபடி
2 தேக்கரண்டி துருவப்பட்ட தேங்காய் (விருப்பம் சார்ந்தது)
அலங்கரிக்:
சிவப்பு மிளகாய்த்தூள் தூவுவதற்கு
இஞ்சி சிறு துண்டுகள்
கொத்துமல்லி (விருப்பம் சார்ந்தது)
வடைகளுக்கு தாளிப்பதற்கு:
கடுகு: 1/4 தேக்கரண்டி
தாளிப்புக்கு 1 தேக்கரண்டி எண்ணெய்
காதி பட்டை:6-7 இலைகள் கைகளால் கிள்ளிப்போடப்பட்டது
செய்முறை
1. வடைகளுக்கு எவ்வாறு மாவு தயாரிப்ப: உளுத்தம்பருப்பை 2 மணி நேரங்களுக்கு ஊறவைக்கவும். அதன் பிறகு அவற்றைக் கொஞ்சம் தண்ணீர் பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து அரைத்துக்கொள்ளவும். கரடுமுரடாக அடர்த்தியாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவை ஒரு எலக்ட்ரிக் பீட்டரைக் கொண்டு 10 நிமிடங்களுக்கு இலகுவாக உப்பும்படிக்கு அடித்துக்கொள்ளவும்.
இங்கே உங்களுக்கு அதிக நேரமிருந்தால், மாவை ஒரு அரை மணி நேரம் மூடி வைக்கலாம். அதன்பிறகு வறுப்பதற்கு முன் அடித்துக்கொள்ளலாம். உடனடியாக அவற்றை வறுக்க ஆரம்பிக்காவிட்டால் (தாளிப்பு முன்).
தயிரை தயிர் வடைக்குத் தயார் செய்வதற்கு முன் இந்த மாவு அப்படியே இருக்கட்டும்.
2. எவ்வாறு தயிர் தயாரிப்ப: கெட்டித் தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். சர்க்கரை, தேங்காய் (விருப்பம் சார்ந்தது), கிரீம் ஆகியவற்றைச் சேர்த்து கை மத்தால் அடித்துக்கொள்ளவும். கட்டிகளை நீக்கவும். இப்போது ½ தேக்கரண்டி உப்பைச் சேர்க்கவும். தேவையான பதத்திற்கு பாலைச் சேர்க்கவும்.
3. வடை மாவைத் தாளித்தல்: எண்ணெயைச் சூடுபடுத்தவும். கடுகைச் சேர்த்து அவற்றை பொறிக்கவிடவும். கடை பட்டைச் சேர்த்து இதை நேராக வடைமாவில் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.
4. வடையை பொறித்தல்: இப்போது வடையைத் சுட ஆரம்பிக்கவும். ஒரு வானலியில் எண்ணெயைச் சூடாக்கவும். ஒரு கரண்டி மாவை கையில் எடுத்து கட்டைவிரலால் ஒரு ஓட்டை போடவும்.
மிதமானச் சூட்டில் எண்ணெய் சில்லென்றும் கொதிக்கும் நிலையில் இருக்கக்கூடாது. வடைகளை எண்ணெயில் கவனமாகத் தள்ளி இரண்டு பக்கங்களையும் பொறிக்கவும். பொன்னிறமா வரும் வரை பொறித்து எடுக்கவும்.
5. வடைகளை அடுக்குதல்: வடையை வெந்நீரில் 5 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். அடுக்குவதற்காக வடையை பிரிட்ஜில் வைத்திருந்தால் அதிக நேரம் பிடிக்கும்.
மிருதுவாகும்வரை தண்ணீரில் ஊறவைக்கவும். உங்கள் உள்ளங்களில் வைத்து அழுத்தி தண்ணீரை வடிக்கட்டி பரிமாறும் தட்டில்வைக்கவும்.
6. தயிரை வடையின் மீது ஊற்றி சிவப்பு மிளகாய் இஞ்சித் துண்டுகளைக் கொண்டு அலங்கரிக்கவும். இதை 15-20 நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.
தட்டு வடை
தேவையான பொருட்கள்
தட்டு வடக (சக்லி வகையில் ஒன்று) 1 பாக்கெட்
எலுமிச்சை சாறு
பூண்டு 5ல் இருந்து 6 பற்கள்
தக்காளி
சாட் மசாலா
கேரட் 1
பீட்ரூட் 1
சிவப்பு மிளகாய் 5ல் இருந்து 6
பச்சை மிளகாய் 3ல் இருந்து 4
வெங்காயம் 1
எண்ணெய் 2 தேக்கரண்டி
கொத்துமல்லி
புளி 1 சிறிய துண்டு
புதினா இலைகள்
சுவைக்கேற்ற உப்பு
செய்முறை
பச்சை சட்னிக்கு புதினா இலைகள், பச்சை மிளகாய், உப்பு எடுத்துக்கொள்ளஙும்.
எண்ணெயில் வதக்கி எலுமிச்சை சாறுடன் அரைத்துக்கொள்ளவும்.
சிவப்பு சட்னிக்கு தக்காளி, சிவப்பு மிளகாய், பூண்டு, பிளி, வெங்காயம் எடுத்துக்கொள்ளவும்.
எண்ணெயில் வதக்கி எலுமிச்சை சாறு உப்புடன் அரைத்துக்கொள்ளவும்.
பீட்ரூட்டையும் கேரட்டையும் அரைத்து பொடியாக நறுக்கப்பட்ட கொத்துமல்லியுடன் கலந்துகொள்ளவும்.
ஒரு தட்டு வடையை எடுத்து ஒரு பக்கம் சிவப்பு சட்னியுடன் நனைத்து துருவப்பட்டக் கலவையை அதன் மீது வைக்கவும்.
எலுமிச்சை சாறையும் சாட் மசாலாவையும் அதன் மீது தூவி இன்னொரு தட்டு வடையை பச்சை சட்னியில் தோய்த்து சண்ட்விச் செய்யவும்.
சுவைக்கேற்றவாறு காரம் மாற்றப்படலாம். உண்மையில் காரமாக இருந்தால் அருமையாக இருக்கும்.
பிரட் வடை
தேவையான பொருட்கள்
பிரட் 5 துண்டுகள்
அரிசி மாவு 1/2 கப்
சோடா மாவு 1 பின்ச்
பொடியாக நறுக்கிய வெங்காயம் 2
பச்சை மிளகாய் 2 பொடியாக நறுக்கி கொள்ளவும்
கருவேப்பிலை, கொத்தமல்லி தழை சிறிது பொடியாக நறுக்கவும்
இஞ்சி 1/4 துண்டு பொடியாக நறுக்கவும்
உப்பு தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு
எண்ணெய் பொரிப்பதற்கு
மிளகு 5
செய்முறை
பிரட்டில் நான்கு ஓரத்தை கட் செய்து பின்னர் அந்த பிரட் துண்டுகளை நன்றாக மசித்து அதில் அரிசி மாவு உப்பு மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி-பொடியாக நறுக்கிய வெங்காயம் மிளகு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் தெளித்து நன்றாக கிளறவும்.
வடை மாவு பதத்திற்கு பிசையவும். பின் மெதுவடை போன்று வடிவம் செய்து எண்ணெய் காய்ந்தவுடன் பொறித்து எடுக்கவும்.
கதம்ப வடை
தேவையான பொருட்கள்
கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல் - 1/4 கப்
பச்சை பயிறு - 1/4 கப்
பச்சை பட்டாணி - 1/3 கப்
தட்டைப்பயறு- 1/4 கப்
நறுக்கிய வெங்காயம் - 2
இஞ்சி -பூண்டு விழுது -1 தேக்கரண்டி
கரம் மசாலா 1/4 தேக்கரண்டி
3- 4 பச்சை மிளகாய்
1தேக்கரண்டி - சோம்பு
தேவையான அளவு உப்பு
சிறிது கொதௌதுமல்லி, புதினா,கறிவேப்பிலை
பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
5 வகை பயிர்களையும் நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் 6-8 மணிநேரம் ஊறவைக்கவும்.
பின் மின்கலவையில் சோம்பு,பச்சைமிளகாய்,இஞ்சி -பூண்டு விழுது,கரம் மசலா சேர்த்து ஓரிரண்டாக அரைக்கவும்
பின் ஊற வைத்த பயிர்களை தண்ணீரை வடித்து அதே மின் கலவையில் போட்டு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்
இரு பகுதியாக பிரித்தும் அரைத்துக் கொள்ளலாம்.
பின் அரைத்தற்றை ஒரு பாத்திரத்திற்க்கு மாற்றவும்
அதில் நறுக்கிய வெங்காயம், புதினா கொத்துமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடேற்றவும்.
எண்ணெய் காய்ந்தததும் வடைகளைவிருப்பம் போல தட்டி போடவும்.
மிதமான தீயில் இருபுமுமம் நன்றாக பொன்னிறத்தில் வேந்ததும் தட்டிற்க்கு மாற்றவும்.
சூடான சுவையான புரதசத்து ,நார் சத்து நிறைந்த கதம்ப வடை தயார்.
உள்ளி வடை
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூண்
பெரிய வெங்காயம் - 3
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகு - 3
கறிவேப்பிலை - 2 தண்டு
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூண்
மிளகு பொடி - 1 டீஸ்பூண்
காயப்பொடி - 1/2 டீஸ்பூண்
பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய்
உப்பு தேவைக்கு
செய்முறை
வெங்காயத்தை நீளத்தில் நைஸாக வெட்டிக் கொள்ளவும்.
இஞ்சியை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
வெட்டி வைத்த வெங்காயத்தில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து 8 நிமிடம் அப்படியே வைக்கவும்.
8 நிமிடம் கழித்து பார்க்கும் போது வெங்காயத்தில் தண்ணீர் ஊறி நிற்கும். அந்த தண்ணீரிலேயே மாவை குழைத்துக் கொள்ளலாம்.
இந்த வெங்காயத்துடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகு, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
இதனுடன் கடலைமாவு, அரிசி மாவு, மஞ்சள் பொடி, மிளகு பொடி, காயப்பொடி எல்லாம் சேர்த்து கை கொண்டு நன்றாக குழைத்துக் கொள்ளவும்.
உப்பு பார்த்துக்கொள்ளவும்.தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு வாணலி அடுப்பில் வைத்து டீப் ஃப்ரை செய்வதற்கு தேவையான எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
எண்ணெய் சூடானதும் குழைத்து வைத்த வெங்காயக் கலவையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து எண்ணெயில் போடவும்.
மிதமான தீயில் பொரிக்கவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் மறித்து போட்டு டீப் ஃப்ரை செய்து கோல்டன் ப்ரவுன் கலர் ஆனதும் எண்ணெயில் இருந்து கோரி எடுக்கவும். டீ உடன் பரிமாறவும்.
பிரட் வடை
தேவையான பொருட்கள்
பிரெட் துண்டு 6
அரிசி மாவு அரை கப்
ரவை கால் கப்
தயிர் முக்கால் கப்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு கப்
துருவிய இஞ்சி ஒரு ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று
சீரகம் ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி கருவேப்பிலை சிறிது
உப்பு ருசிக்கேற்ப
செய்முறை
பிரட் துண்டுகளை பொடித்துக் கொள்ளவும்
அதனுடன் மற்ற பொருட்களை சேர்த்து மாவு போல் பிசையவும்
அதில் ஒரு உருண்டையை எடுத்து வட்டமாக தட்டிக் கொள்ளவும்
நடுவில் ஒரு ஓட்டை போட்டுக் கொள்ளவும்
பார்ப்பதற்கு உளுந்த வடை போல் இருக்கும்
இதை சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
ராஜ்மா வடை
தேவையான பொருட்கள்
ராஜ்மா - 1கப்
கடலை பருப்பு - கப்
வெங்காயம் - 1
பெருங்காயப் பொடி - 1தேக்கரண்டி
மிளகாய் வத்தல் - 5
உப்பு
கொத்தமல்லி இலை
எண்ணெய்
செய்முறை
ராஜ்மா, கடலை பருப்பு இரண்டயும் 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
பிறகு அதை மிக்ஸியில் மிளகாய் வத்தல், பெருங்காயப் பொடி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
பிறகு அதனுடன் வெங்காயம், உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
பிறகு வடை தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
அவித்த வடை
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - 1கப்
உளுத்தம் பருப்பு - 1/4கப்
வெந்தயம் - 1தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துறுவல் - 1/2 மூடி
செய்முறை
அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம், இவற்றை தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும
பிறகு க்ரைன்டரில் கெட்டியாக அரைக்கவும்.
பிறகு அதனுடன் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
பிறகு ஒரு சிறு உருண்டை மாவு எடுத்து அதை வடை போல் தட்டி
அதை தேங்காய் துறுவலில் பிரட்டி
இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.
அவித்த வடை தயார்
இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது மீன் குழம்பு, சட்னி, கார குழம்பு சேர்த்து சாப்பிடலாம்.
சென்னா வடை
தேவையான பொருட்கள்
சுண்டக் கடலை 1/4 கப்
கொத்தமல்லி தழை சிறிது
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 1
இஞ்சி சிறிய துண்டு 1
அரிசி மாவு 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
சுண்டக் கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.மிக்ஸியில் சுண்டக் கடலை உப்பு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுது
அரைத்த விழுதுடன் அரிசி மாவு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி சேர்க்கவும்.
நன்றாக கலந்து கொள்ளவும்
சிறிய உருண்டைகளாக உருட்டி வடையாக தட்டி வைக்கவும்
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான சென்னா வடை தயார்.
சேமியா வடை
தேவையான பொருட்கள்
சேமியா 1/2 கப்
வெங்காயம் 1
கருவேப்பிலை சிறிது
பச்சை மிளகாய் 1
சோள மாவு 3 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரிக்க
செய்முறை
அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
சேமியா போட்டு வேகவிடவும்
உப்பு சேர்த்து வேக விடவும்
3 நிமிடங்களில் சேமியா வெந்ததும் வடிகட்டி கொள்ளவும்.
வேகவைத்த சேமியாவுடன் நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்க்கவும்.
சோளமாவு பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும்.
சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
உள்ளங்கையில் எண்ணெய் தடவி வடைகளை தட்டி போடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான சேமியா வடை தயார்.
கொள்ளு வடை
தேவையான பொருட்கள்
கொள்ளு 200 கிராம்
வெங்காயம் 2
பச்சை மிளகாய் 2
கொத்தமல்லி சிறிதளவு
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் கால் டீஸ்பூன்
அரிசி மாவு அரை ஸ்பூன்
எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை
கொள்ளை முதல் நாள் இரவே தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
ஊறவைத்த கொள்ளை குக்கரில் 4 விசில் வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
அதன் பின் மிக்ஸியில் தண்ணீரை நன்றாக வடித்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கி ,அரிசி மாவு,உப்பு , பெருங்காயம் சேர்த்து அரைத்து வைத்த மாவுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்
கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு நன்றாக வெந்ததும் எடுக்க வேண்டும்
காய்கறி வடை
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு 250கிராம்
துவரம் பருப்பு 4ஸ்பூன்
பச்சரிசி 4ஸ்பூன்
பச்சை மிளகாய் 3அல்லது4
வெங்காயம் 1 பொடியாக அரியவும்
கோஸ் துருவியது 1கப்
கேரட் துருவியது 1கப்
இஞ்சி 1 துண்டு
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை
உளுத்தம் பருப்பு 3மணி நேரம் ஊற வைக்கவும்,
உப்பு,மிளகாய் இஞ்சி முதலில் மைய அரைக்கவும்.
உளுத்தம் பருப்பு நீர் வடித்து சிறிது சிறிது ஆக மைய அரைக்கவும்.
துருவிய காய் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
போண்டா
தேவையான பொருட்கள்
போண்டா மாவு 100
வெங்காயம் 2
கருவேப்பிலை
கொத்தமல்லி சிறிதளவு
மிளகாய்த்தூள் 2ஸ்பூன்
உப்பு
பெருங்காயத்தூள் ¼ஸ்பூன்
சோடா உப்பு
எண்ணெய்
செய்முறை
போண்டா மாவுடன் மற்ற பொருட்களை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
எண்ணெய் காய்ந்ததும் பொறித்து எடுக்கவும்
ஆலு போண்டா
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 4
கேரட் - 1
முட்டைகோஸ்
நூல்கோல்
உப்பு
கரம் மசாலா பொடி-1/2ஸ்பூன்
மிளகாய் வத்தல் பொடி-1ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
எண்ணெய்
கடலை மாவு - 4மேஜை கரண்டி
கார்ன் ப்ளார் மாவு - 1மேஜை கரண்டி
அரிசி மாவு - 1மேஜை கரண்டி
செய்முறை
காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். பிறகு அனைத்தயும் சேர்த்துக் கொள்ளவும்
பிறகு உப்பு கரம் மசாலா பொடி மஞ்சள் பொடி மிளகாய் வத்தல் பொடி சேர்த்து உருண்டைகள் பிடித்து கொள்ளவும்
பிறகு கடலை மாவுடண் உப்பு தண்ணீர் அரிசி மாவு கார்ன் ப்ளார் மாவு மிளகாய் வத்தல் பொடி மஞ்சள் சேர்த்து கலந்து வைக்கவும்
பிறகு உருண்டைகளை அதில் முக்கி ப்ரெட் தூள் பிரட்டவும்
எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்துக்கொள்ளவும்
தகி போண்டா
தேவையான பொருட்கள்
மைதா 1கப்
தயிர்1கப்
உப்பு தேவையான அளவு
மிளகாய் தூள்1ஸ்பூன்
எண்ணெய் பொரிக்க மற்றும் தாளிக்க
கடுகு1ஸ்பூன்
உளுந்து1ஸ்பூன்
கடலை பருப்பு1ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பவுலில் மைதா மாவு போட்டு கொண்டு தயிர் சேர்த்து கொள்ள வேண்டும்
உப்பு மிளகாய் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்
தாளிக்க கடுகு, உளுந்து, கடலை பருப்பு, பெருங்காயம் தூள் சேர்த்து தாளித்து கொட்டி கொள்ள வேண்டும்
அனைத்தையும் நன்றாக கலந்து கொண்டு
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு எடுக்க வேண்டும்
நன்கு மொறுப்பாக வந்ததும் எடுத்து கொள்ள வேண்டும்
இப்போது சுவையான தகி போண்டா ரெடி
போண்டா
தேவையான பொருட்கள்
போண்டா மாவு 100
வெங்காயம் 2
கருவேப்பிலை
கொத்தமல்லி சிறிதளவு
மிளகாய்த்தூள் 2ஸ்பூன்
உப்பு
பெருங்காயத்தூள் ¼ஸ்பூன்
சோடா உப்பு
எண்ணெய்
செய்முறை
போண்டா மாவுடன் மற்ற பொருட்களை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
எண்ணெய் காய்ந்ததும் பொறித்து எடுக்கவும்
ஆலு போண்டா
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 4
கேரட் - 1
முட்டைகோஸ்
நூல்கோல்
உப்பு
கரம் மசாலா பொடி-1/2ஸ்பூன்
மிளகாய் வத்தல் பொடி-1ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
எண்ணெய்
கடலை மாவு - 4மேஜை கரண்டி
கார்ன் ப்ளார் மாவு - 1மேஜை கரண்டி
அரிசி மாவு - 1மேஜை கரண்டி
செய்முறை
காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். பிறகு அனைத்தயும் சேர்த்துக் கொள்ளவும்
பிறகு உப்பு கரம் மசாலா பொடி மஞ்சள் பொடி மிளகாய் வத்தல் பொடி சேர்த்து உருண்டைகள் பிடித்து கொள்ளவும்
பிறகு கடலை மாவுடண் உப்பு தண்ணீர் அரிசி மாவு கார்ன் ப்ளார் மாவு மிளகாய் வத்தல் பொடி மஞ்சள் சேர்த்து கலந்து வைக்கவும்
பிறகு உருண்டைகளை அதில் முக்கி ப்ரெட் தூள் பிரட்டவும்
எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்துக்கொள்ளவும்
தகி போண்டா
தேவையான பொருட்கள்
மைதா 1கப்
தயிர்1கப்
உப்பு தேவையான அளவு
மிளகாய் தூள்1ஸ்பூன்
எண்ணெய் பொரிக்க மற்றும் தாளிக்க
கடுகு1ஸ்பூன்
உளுந்து1ஸ்பூன்
கடலை பருப்பு1ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பவுலில் மைதா மாவு போட்டு கொண்டு தயிர் சேர்த்து கொள்ள வேண்டும்
உப்பு மிளகாய் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்
தாளிக்க கடுகு, உளுந்து, கடலை பருப்பு, பெருங்காயம் தூள் சேர்த்து தாளித்து கொட்டி கொள்ள வேண்டும்
அனைத்தையும் நன்றாக கலந்து கொண்டு
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு எடுக்க வேண்டும்
நன்கு மொறுப்பாக வந்ததும் எடுத்து கொள்ள வேண்டும்
இப்போது சுவையான தகி போண்டா ரெடி
மைதா போண்டா
தேவையான பொருட்கள்
மைதா 2கப் (1கப் 200 கிராம்
தயிர் 1/2 கப்
உப்பு தேவையான அளவு
பச்சை மிளகாய் 4
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு கொள்ளவும்
தயிர் விட்டு நன்கு பிசையவும்
உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்
பச்சைமிளகாய் நறுக்கி சேர்த்துகொள்ளவும்
சிறிது நேரம் ஊற வைக்கவும்
வாணலியில் எண்ணெயை ஊற்றி அதில் போண்ட போன்று பொரித்து எடுக்கவும்
சட்ணியுடன் பரிமாறவும்
கீரை போண்டா
தேவையான பொருட்கள்
சுக்கிட்டி கீரை 1 கப்
வெங்காயம் 1
கேரட் 1
ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
கொத்துமல்லி இலை 1/4 கப்
தயிர் 1/4 கப்
உப்பு
எண்ணெய்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய கீரை, வெங்காயம், துருவிய கேரட் , கொத்துமல்லி இலை, ஜீரகம், மிளகாய் தூள், இஞ்சி துருவல், தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் கடலை மாவு , உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பிறகு போண்டா வாக போட்டு நன்கு பொன்னிறமாக பொறித்து தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.
சாதம் போண்டா
தேவையான பொருட்கள்
சாதம் 1/2 கப்
கேரட் 1 துருவிக்கொள்ளவும்
பச்ச மிளகாய் 1 அல்லது 2 பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
கொத்தமல்லி இலை சிறிது பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
உப்பு 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் 1/8 தேக்கரண்டி
அரிசி மாவு /கடலைமாவு 1 மேஜைக்கரண்டி
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
எண்ணெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகள் உருட்டிக்கொள்ளவும்
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
சட்னி அல்லது சாஸ் உடன் பரிமாறவும்
மைசூர் போண்டா
தேவையான பொருட்கள்
மைதா மாவு ஒரு கப்
அரிசி மாவு கால் கப்
ரவை 2 ஸ்பூன்
ஆப்ப சோடா கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் 4 பொடியாக நறுக்கியது
கருவேப்பில்லை கொத்தமல்லி சிறிது பொடியாக நறுக்கியது
தண்ணீர் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை
மைதா மாவு அரிசி மாவு ரவை அப்பச்சோடா வெங்காயம் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து தண்ணீர் ஊற்றி கலக்கவும்
பின் அதனை எண்ணெயில் ஊற்றி பொரித்து எடுத்தால் மைசூர் போண்டா ரெடி
கம்பம் போண்டா
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு ஒன்று
கேரட் ஒன்று
பச்சைப்பட்டாணி சிறிய கப் ஒன்னு
பெரிய புள்ளி நறுக்கியது சிறிய கப் ஒன்று
தனி மிளகாய் தூள் கால் ஸ்பூன்
உப்பு அளவாக
ஆயில் பொரிப்பதற்கு
கடலை மாவு 50 கிராம்
செய்முறை
கிழங்கை தோல் சீவி உரித்துக் கொள்ளவும்
கேரட்டை தோல் சீவி கட் பண்ணவும்
கேரட் பட்டாணி உருளைக்கிழங்கை குக்கரில் வேக விடவும்
வெந்தவுடன் தண்ணீரை வடித்து விடவும்
கடலை மாவை உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக கலக்கவும்
பெரிய உள்ளியும் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்
வாணலியில் ஆயில் ஊற்றி காயவிடவும்
உருளைக்கிழங்கு கலவையை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
உருண்டைகளை மாவில் முக்கி எடுக்கவும்
காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்
சாஸுடன் சூடாகப் பரிமாறவும்
மைசூர் போண்டா
தேவையான பொருட்கள்
உருட்டு உளுந்து கால் கப்
உப்பு கால் தேக்கரண்டி
அரிசி மாவு ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
இஞ்சி ஒரு சிறிய துண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
பெருங்காயம் நான்கு சிட்டிகை
மிளகு சீரகம் தலா கால் தேக்கரண்டி ஒன்று இரண்டாக தட்டி சேரக்கவும்
தேங்காய்ப்பல் கீறியது 2 மேஜைக்கரண்டி
கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
உருட்டு உளுந்தை அரைமணி நேரம் ஊறவைத்து பின்னர் நன்றாக தண்ணீர் விடாமல் அரைக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக்கொள்ளவும்
அதோடு எண்ணெய் தவிர கொடுக்கப்பட்ட எல்லா பொருள்களும் சேர்த்து கலந்து கொள்ளவும்
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
சட்னியுடன் பரிமாறவும்
எனது டிப்:
அதிக அளவில் செய்வதானால் கிரைண்டரில் அரைக்கவும். வெங்காயம் விருப்பப்பட்டால் சேர்க்கவும்
சேமியா போண்டா
தேவையான பொருட்கள்
சேமியா 1/2 கப்
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 1
சீரகம் 1/2 ஸ்பூன்
தயிர் 3 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரிக்க
செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுட வைக்கவும்
அதில் சேமியாவை சேர்க்கவும்
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
சேமியா வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்
வேக வைத்த சேமியா உடன் தயிர் அரிசி மாவு சீரகம் மஞ்சள்தூள் சேர்க்கவும்
நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்க்கவும்
அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்
சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் உருட்டிய உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
சுவையான சேமியா போண்டா தயார்
வெங்காய போண்டா
தேவையான பொருட்கள்
வெங்காயம் : 1
கடலை மாவு : 6 ஸ்பூன்
உப்பு
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
அரிசி மாவு : 1 ஸ்பூன்
கருவேப்பிலை
எண்ணெய் : பொரிப்பதற்கு
செய்முறை
வெங்காயத்தினை நீள வாக்கில் வெட்டி கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், கடலை மாவு , உப்பு , அரிசி மாவு , மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்
பின் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறவும்
எண்ணெய் சூடாக்கி பொரித்து எடுக்கவும்
உளுந்து போண்டா
தேவையான பொருட்கள்
உளுந்து 1 கப்
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
கருவேப்பிளை
உப்பு
மிளகு 1 மேஜைக்கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் உளுந்தை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் உளுந்தை நன்கு மைய அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்து , பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிளை, மிளகு , பச்சைமிளகாய் , உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நன்கு காய்ந்த பிறகு போண்டா வாக போட்டு பொறித்து எடுக்கவும்.
வெங்காய போண்டா
தேவையான பொருட்கள்
மைதா 1/2 கப்
வெங்காயம் 3
பச்சைமிளகாய் 1
தனி மிளகாய்தூள் 1/2ஸ்பூன்
உப்பு
எண்ணெய் பொரிக்க
செய்முறை
வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்
கைகளால் நன்கு பிசைந்து உதிர்த்து கொள்ளவும். உப்பு சேர்த்து பிசிறவும்
வெங்காயத்தில் பச்சைமிளகாய், கருவேப்பிலை, இஞ்சி சிறிது, மிளயாய்தூள் சேர்த்து பிசிறவும். இரண்டு இரண்டு ஸ்பூனாக மைதா சேர்த்து தண்ணீர் இல்லாமல் பிசையவும். உருட்டும் பதம் வந்ததும் மைதா சேர்க்க தேவை இல்லை.
கைகளில் தண்ணீர் லேசாக தொட்டு உருண்டையாக பிடித்து மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்.
வெங்காய போண்டா தயார்.
ஜவ்வரிசி போண்டா
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி ஒரு கப்
மைதா மாவு கால் கப்
தயிர் அரை கப்
கொத்த மல்லி இலை
கேரட் ஒன்று
பீன்ஸ் 6
உப்பு ஒன் ஸ்பூன்
வெங்காயம் ஒன்று
பச்சை மிளகாய் ஒன்று
செய்முறை
ஜவ்வரிசியில் தயிர் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்
ஜவ்வரிசி ஊறியதும் அதில் நறுக்கிய வெங்காயம் கேரட் பீன்ஸ் உப்பு கொத்தமல்லி இலை வ்மைதா மாவு சேர்த்து கிளறவும் போண்டா மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் போண்டாக்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
ஈஸியான ஜவ்வரிசி போண்டா தயார்
மங்களூர் போண்டா
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 1/4 கிலோ
புளித்த தயிர் - 200 கிராம்
பச்சை மிளகாய் -2 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி - சிறு துண்டு ( பொடியாக நறுக்கியது)
மிளகு - 1 டீஸ்பூண்
கறிவேப்பிலை - சிறிதளவு ( பொடியாக நறுக்கியது)
பெருங்காயம் -1/2 டீஸ்பூண்
உப்பு - தேவைக்கேற்ப
சோடாப் பொடி - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்க்கு தேவையான அளவு
செய்முறை
ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, ஜீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு, சோடாப்பொடி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
அதில் தயிர் சேர்த்து நன்றாக ஐந்து நிமிடம் கை விடாமல் பிசைந்துக் கொள்ளவும்.
பின், அந்த மாவை பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.
பிறகு,கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான போண்டா ரெடி.
வெஜிடபிள் போண்டா
தேவையான பொருட்கள்
கேரட் 1/2 கப்
பீன்ஸ் 1/2 கப்
பீட்ரூட் 1/2 கப்
பட்டானி 1/2 கப்
காலிபிளவர் 1/2 இப்
பச்சை மிளகாய் 3
தேங்காய் துருவல் 1/2 கப்
உருளைக்கிழங்கு 3
செய்முறை
உருளைக்கிழங்கு தவிர அனைத்து காய்கறிகள் நறுக்கி கொள்ளவும்
உருளைக்கிழங்கு குக்கரில் நன்கு வேகவைத்து மசித்து கொள்ளவும்
காய்கறிகள் 1 விசில் வைத்து எடுத்து கொள்ள வேண்டும்
தேங்காய் பச்சை மிளகாய் நன்கு அரைத்து கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்
அதன் பின் காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
பஜ்ஜி போண்டா மிக்ஸை சிறிது கட்டியாக கரைத்து கொள்ளவும். உருண்டைகளை முக்கி கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்
சூடாக பரிமாறவும்
ஆலு பிரட் போண்டா
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு -4
பிரட் துண்டு -12
வெங்காயம் -1
சீரகம் -1 டீஸ்பூன்
மிளகாய் தூள்-1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள்-1டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் -1/2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரிக்க
கொத்தமல்லி தழை சிறிது
செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்
கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் எல்லா பொடி வகைகள் சேர்த்து வதக்கி பின் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி மல்லி தழை தூவி இறக்கவும்
ஆறியதும் நீளமாக உருட்டி கொள்ளவும்
பிரட் துண்டின் ஓரங்களை நீக்கி விட்டு அதை தண்ணீரில் நனைத்து பிழிந்து விட்டு ஒரு உருளைக்கிழங்கு உருண்டையை உள்ளே பொதிந்து நன்றாக உருட்டி கொள்ளவும்
இதே போல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
இட்லி மாவு போண்டா
தேவையான பொருட்கள்
இட்லி மாவு 1கப்
அரிசி மாவு 1/4கப்
மைதா 1கப்
மிளகாய் தூள் 3ஸ்பூன்
உப்பு சிறிது
சோடா உப்பு 1சிட்டிகை
எண்ணெய் 500ml
செய்முறை
ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, அரிசி மாவு, மைதா, உப்பு, சோடா உப்பு,சீரகம் மிளகாய் தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறவும்
எண்ணெய் நன்கு காய்ந்ததும் சிறு சிறு போண்டாகளாக பொரித்து எடுக்கவும்
தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்
பூசணிக்காய் போண்டா
தேவையான பொருட்கள்
பூசணிக்காய்- 1 cup
கடலை மாவு - 1 cup
வெள்ளம்- 3/4 cup
உப்பு- தேவையான அளவு
தண்ணீர்- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
பூசணிக்காயை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து எடுக்கவும்
அதை மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, வெள்ளத்தையும் சேர்த்து வதக்கவும்.
தண்ணீர் வற்றிய பின் கடலை மாவு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
உருண்டையாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சத்து மாவு போண்டா
தேவையான பொருட்கள்
சத்து மாவு 1கப்
தோசை மாவு 2கரண்டி
கடலை மாவு 3தேக்கரண்டி
எண்ணெய் பொரித்தெடுக்க
கடுகு
உளுந்து
கடலை பருப்பு
மிளகாய் தூள்1ஸ்பூன்
சோடா உப்பு1பிஞ்சு (விருப்பம்)
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி தழை
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தோசை மாவு, சத்து மாவு, கடலை மாவு சேர்த்து கொள்ள வேண்டும்
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கடலை பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி கொள்ள வேண்டும்
தேவையான அளவு உப்பு பெருங்காயம் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்
அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு கொள்ள வேண்டும்
நன்றாக பொரித்தெடுத்து பரிமாறவும்
இப்போது கிரிஸ்பியான சத்து மாவு போண்டா ரெடி
வரகு கோதுமை போண்டா
தேவையான பொருட்கள்
வரகு அரிசி 1 கப்
உளுந்து 3 மேஜைக்கரண்டி
கோதுமை மாவு 1/2 கப்
வேக வைத்த சாதம் 1/2 கப்
வெங்காயம் 1
கடலைப்பருப்பு 2 மேஜைக்கரண்டி
கருவேப்பிலை
பச்சைமிளகாய் 3
இஞ்சி 1 துண்டு
உப்பு
எண்ணெய்
செய்முறை
வரகு அரிசி மற்றும் உளுந்து சேர்த்து 2 மணி நேரம் உறவைகவும்.
பின் ஒரு மிக்ஸில் ஊற வைத்த அரிசி உளுந்து மற்றும் சாதம் 1/2 கப் சேர்த்து மிருதுவாக அரைத்து கொள்ளவும்.
பின் அரைத்த மாவில் உப்பு சேர்த்து நன்கு புளிக்க வைக்கவும்.
நன்கு புளித்த மாவில் வெங்காயம் நறுக்கியது, பச்சை மிளகாய் இஞ்சி விழுது , உப்பு , கோதுமை மாவு, சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் போண்டாவாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
கீரை உளுந்து போண்டா
தேவையான பொருட்கள்
உருட்டு உளுந்து -1/2 கப்
அரிசி மாவு -2 மேஜைக்கரண்டி
கீரை பொடியாக நறுக்கியது -1/3 கப்
வெங்காயம் பொடியாக நறுக்கியது -1/8 கப்
கேரட் பொடியாக நறுக்கியது -1/16 கப்
தேங்காய் பொடியாக நறுக்கியது -1/16 கப்
பச்ச மிளகாய் - 2 அல்லது 3
இஞ்சி -1 சிறிய துண்டு
கறிவேப்பிலை -2 ஆர்க்கு
உப்பு -1 தேக்கரண்டி
மிளகு சீரகப்பொடி -1/4 தேக்கரண்டி
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
உளுந்தை களைந்து ஒருமணிநேரம் நன்றாக ஊறவைத்து கிரைண்டரில் நாற்பது முதல் அறுபது நிமிடங்கள் வரை தண்ணீர் சிறிது தெளித்து பந்து மாதிரி அரைத்துக்கொள்ளவும்
அதனுடன் கொடுக்கப்பட்ட பொருட்கள் (எண்ணெய் தவிர) அனைத்தும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
கடாயில் எண்ணெய் வைத்து நன்றாக காய்ந்ததும் சிறிய போண்டாக்களாக பொரித்து எடுக்கவும்
சட்னியுடன் பரிமாறலாம்
உளுந்து மினி போண்டா
தேவையான பொருட்கள்
உளுந்தம் பருப்பு 200 கிராம்
பச்சரிசி 50 கிராம்
வெங்காயம் 2
கருவேப்பிலை மல்லிகைகள்
உப்பு
பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை
அரிசியையும் உளுந்தையும் அரைமணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்
அரைத்த மாவுடன் வெங்காயம் கருவேப்பிலை இலைகளை போட்டு உப்பு சேர்த்து கொள்ளவும்
எண்ணெய் காய்ந்ததும் மாவைக் கையில் எடுத்து மினி மினி போண்டா வாக போடவும்
மொரு மொரு மினி போண்டா தயார்
கொண்டைக்கடலை போண்டா
தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை 1கப்
உருளைக்கிழங்கு பெரியது 1
வெங்காயம் 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
மல்லி தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கடலை மாவு 2/3 கப்
எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை
கொண்டைக்கடலையை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்
உருளைக்கிழங்கு மற்றும் கொண்டைக்கடலையை குக்கரில் 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்
வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் கொண்டைக்கடலையை மசித்து கொள்ளவும்.
அதனுடன் வெங்காயம், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
இந்த கலவையை உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்
போண்டா போட கடலை மாவில் உப்பு மிளகாய் தூள் சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி, போண்டா மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்
போண்டா மாவில் கொண்டைக்கடலை உருண்டைகளை புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
பச்சை பயிறு போண்டா
தேவையான பொருட்கள்
பச்சை பயிறு - 1 டம்ளர்
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
பெரிய வெங்காயம் - 1
கருவேப்பிலை - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
இஞ்சி - சிறிய துண்டு
செய்முறை
1. பச்சை பயிறு ஐ முதலில் மிக்ஸியில் ஒன்று இரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும்.
2. உடைத்த பச்சை பயிறு ஐ 5 மணி நேரம் நன்றாக ஊற வைத்து எடுத்து வடித்து கொள்ள வேண்டும்.
3. சிறிது கூட தண்ணீர் இல்லாமல் பச்சை பயிறு ஐ வடித்து எடுத்துக் கொண்டு அதில் பச்சை மிளகாய், இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக கொள்ளவும்.
4. போண்டாக்கு தேவையான பதம்.
5. பின்பு அதில் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது, கருவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை கலந்து கொள்ளவும்.
6. பிறகு வானொலியில் எண்ணெய் காய வைத்து போண்டாவை பொரித்து எடுக்கவும்..
7. இப்பொழுது சூடான, சுவையான, மொரு மொரு பச்சை பயிறு போண்டா தயார்..
காய்கறி மினி போண்டா
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு 2
கேரட் ஒன்று
பீன்ஸ் 5
குடைமிளகாய் ஒன்று
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் 1கப்
வெங்காயம் 4
மல்லி இலை 1 பின்ச்
மஞ்சள் தூள் ஒரு பின்ச்
மிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா அரை டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கான்பிளவர் மாவு 2 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு 1 டேபிள்ஸ்பூன்
கடலைமாவு 1 டீஸ்பூன்
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
கேரட் உருளைக்கிழங்கு இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
குடைமிளகாய் வெங்காயம் பீன்ஸ் கோஸ் மல்லி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த காய்கறிகளை மசித்துச் அதில் நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு கான்பிளவர் மாவு மைதா மாவு கடலை மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
பிசைந்து வைத்துள்ள மாவை ஐந்து நிமிடம் ஊறவிடவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய போண்டாக்களாக எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
சுவையான காய்கறி மினி போண்டா தயார்
கடலை பருப்பு போண்டா
தேவையான பொருட்கள்
மைதா மாவு 100 கிராம்
அரிசி மாவு 50 கிராம்
உப்பு தேவையான அளவு
கடலை பருப்பு இனிப்பு உருண்டைகள் 5
எண்ணை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை
ஒரு பௌலில் மைதா மாவு அரிசி மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்
கடலை பருப்பு இனிப்பு உருண்டை களை எடுத்துக் கொள்ளவும்
உருண்டைகளை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
சுவையான கடலைப்பருப்பு போண்டா ரெடி
உருளைகிழங்கு போண்டா
தேவையான பொருட்கள்
உருளைகிழங்கு 3
கடலைமாவு 1கப்
அரிசிமாவு 1/2 கப்
சோள மாவு 1கைப்பிடி
கேசரி பவுடர்
ஆப்ப சோடா 1சிட்டிகை
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
சோம்பு 1ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
உருளைகிழங்கு வேக வைக்கவும். கடாயில் சோம்பு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கி மசித்த உருளைகிழங்கு, உப்பு சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
மாவு வகைகள் அனைத்தும் சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கரைத்து ஆறவைத்த உருளைகிழங்கை உருட்டி மாவில் தோய்த்து எண்ணெயில் பொரிக்கவும்.
உருளைகிழங்கு போண்டா தயார் .
மல்லியிலை கார போண்டா
தேவையான பொருட்கள்
மல்லியிலை ஒரு கப்
மிளகாய் தூள் 4spoon
இட்லி மாவு 2 கப்
உப்பு தே அளவு
எண்ணெய் 500ml
சோடா உப்பு ஒரு சிட்டிகை
மைதா 1 கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, உப்பு , சோடா உப்பு, மிளகாய் தூள், நறுக்கிய மல்லியிலை மைதா இவை அனைத்தையும் ஒன்றாக பிசையவும்
பின் சூடான எண்ணெய் இல் சிறிய போண்டாவாக இட்டு பொரித்து எடுக்கவும்
சூடான போண்டா தயார்
தேங்காய் பூரண போண்டா
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் - 1 cup
வெல்லம் - 1/2 cup
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
நெய் - 3 தேக்கரண்டி
உருட்டு உளுந்து - 3/4 cup
அரிசி - 2 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
பச்ச மிளகாய் - 2
பெருங்காயம் - 1 சிட்டிகை
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
உருட்டு உளுந்து மற்றும் அரிசியை சேர்த்து ஊற வைக்கவும்
உப்பு, பச்ச மிளகாய், பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும்
கடாயில் நெய் விட்டு தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
மற்றொரு கடாயில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும், விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளலாம்
நன்கு கிளறிய தேங்காய் துருவலில் வெல்லகரைசலை சேர்த்து சுருள கிளறவும்
அதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
இந்த உருண்டைகளை முதலில் அரைத்த மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான இனிப்பு கார போண்டா தயார்
வெந்தியக்கீரை போண்டா
தேவையான பொருட்கள்
வெந்தயக்கீரை ஒரு கட்டு
கடலை மாவு கால் கிலோ
அரிசி மாவு 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
சோம்புத்தூள் அரை ஸ்பூன்
வெங்காயம் ஒன்று
கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு
தூள் உப்பு ஒரு ஸ்பூன்
சமையல் எண்ணெய் பொரிப்பதற்கு
ஆப்ப சோடா ஒரு சிட்டிகை
செய்முறை
கடலைமாவை வாணலியில் போட்டு சிறிய தீயில் வைத்து சூடாகும் வரை வறுத்துக் கொள்ளவும்
வெந்தயக் கீரையின் வேரை நீக்கி நன்றாக அலசிக் கொள்ளவும்
வெங்காயம் வெந்தயக்கீரை கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
கடலை மாவுடன் அரிசி மாவையும் பொடியாக நறுக்கிய வெங்காயம் வெந்தயக்கீரை கொத்தமல்லித் தழையையும் கலந்து கொள்ளவும்
மிளகாய்த் தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் சோம்புத் தூள் உப்பு தூள், ஆப்ப சோடா சேர்த்துக் கொள்ளவும்
தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் ஸ்பூனால் இந்த மாவை எடுத்து ஊற்றி போண்டாக்கள் செய்யவும்
சூடாக பரிமாறவும்
உருளை கிழங்கு போண்டா
தேவையான பொருட்கள்
ஊட்டி உருளை கிழங்கு -2
கடலை மாவு -1/2 கப்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
பெருங்காயத்தூள் -1 சிட்டிகை
இஞ்சி - 1 துண்டு
பெரிய வெங்காயம் -1
பச்சைமிளகாய் -2
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை
உருளை கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகை பொறிய விடவும்
அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் , பொடியாக நறுக்கிய இஞ்சி ,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
மஞ்சள் தூள் உப்பு சேர்த்து அதனுடன் மசித்த உருளை கிழங்கு சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை ,மல்லித்தளை சேர்த்து பிரட்டி ஆற விடவும்
ஒரு கிண்ணத்தில் சலித்த கடலை மாவு ,மிளகாய் தூள் ,உப்பு ,பெருங்காயத்தூள் சேர்த்து நீர் விட்டு இட்லி மாவு பதத்தில் கட்டியில்லாமல் கலக்கி வைக்கவும்
அதில் செய்து வைத்துள்ள உருளை கிழங்கு மசாலாவை உருண்டைகளாக உருட்டி காய்ந்த எண்ணெய்யில் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்
மாலை தேனீர் அல்லது காப்பியுடன் சுவைக்க பிரமாதமாய் இருக்கும்
வெள்ளைப்பூசணி போண்டா
தேவையான பொருட்கள்
வெள்ளை பூசணி துருவல் அரை கப்
கடலை மாவு 2 மேஜைக்கரண்டி
அரிசி மாவு ஒரு மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஒரு மேஜைக்கரண்டி
உப்பு அரை தேக்கரண்டி
காரப் பொடி அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி தனியா பொடி சீரகப் பொடி தலா கால் தேக்கரண்டி
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
கொடுக்கப்பட்ட எல்லா பொருள்களையும் எண்ணெய்த்தவிர சேர்ந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
சட்னியுடன் பரிமாறவும்
Comments
Post a Comment