சாதம் (VARIETY RICE) 30Recipe

30 வகையான சாதங்கள்

புளியோதரை

தேவையான பொருட்கள்

அரிசி மசாலாவிற்கு: காய்ந்த மிளகாய் 2
1 1/2 தேக்கரண்டி எள்ளு விதைகள்
1 தேக்கரண்டி கடலைப்பருப்பு
1 தேக்கரண்டி உளுந்து
1 தேக்கரண்டி மல்லி விதைகள்
அரிசிக்கு: 2 தேக்கரண்டி மணிலா பயிர்
2 கப் சமைத்த அரிசி
1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
1/2 தேக்கரண்டி கடலை பருப்பு
1/2 தேக்கரண்டி உளுந்து
1/2 கப் புளி (ஈம்லி) சாறு
10-12 கரிவேப்பிலை இலைகள்
3/4 தேக்கரண்டி உப்பு
1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள்
ஒரு சிட்டிகை பெருங்காயம் (ஹிங்)

செய்முறை

முதலில் நாம் அரிசி மசாலாவைத் தயார் செய்வோம்: ஒரு சிறிய கடாயைச் சூடுபடுத்தி காய்ந்த மிளகாய், சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து, பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
அடுப்பிலிருந்து எடுத்து ஆறவிடவும். மசாலாவை ஒரு கிரைண்டரில் அரைத்துக்கொள்க. மசாலா பவுடர் தயார்.
ஒரு பள்ளமான வானலியை சூடுபடுத்தி தேங்காய் எண்ணெயைச் சேர்க்கவும். மணிலா பயிர், கரிவேப்பிலை, பெருங்காயம், கடலைப்பருப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். 2-3 நிமிங்கள் நடுத்தர தீயில் கலக்கவும்.
இப்போது புளியையும் உப்பையும் சேர்க்கவும். பிறகு மசாலாத் தூளையும் அரிசியையும் சேர்க்கவும். நன்றாகச் சுண்டி சூடாகப் பரிமாறவும்.

................................................................................................................................................................

நெய் ரைஸ்

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 1கப்
வெங்காயம் - 1
நெய் - 3மேஜை கரண்டி
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 1
மிளகாய் - 2
தக்காளி - 1
உப்பு
அன்னாசி பூ - 1

செய்முறை

பாஸ்மதி அரிசியை தனியாக வேக வைத்து கொள்ளவும்
வானலியில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்
பிறகு வெங்காயம், தக்காளி, மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்
பிறகு சாதத்தை சேர்த்து கிளறவும்
நெய் ரைஸ் தயார்

................................................................................................................................................................

வெஜ் ரைஸ்

தேவையான பொருட்கள்

பட்டை-1
கிராம்பு-3
ஏலக்காய்-3
பிரிஞ்சி இலை-1
இஞ்சி பூண்டு விழுது-1ஸ்பூன்
வெங்காயம்-1
தக்காளி-2
கேரட்-1
பீண்ஸ்-10
உருளைக்கிழங்கு-1
மிளகாய் வத்தல் பொடி-1ஸ்பூன்
மஞ்சள் பொடி-1ஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
புதினா-
மல்லி இலை
உப்பு
எண்ணெய்
சாதம்-1கப்

செய்முறை

வெங்காயம், தக்காளி, காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வதக்கவும் பிறகு அதனுடன் அரைத்தை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

வெங்காயம் சேர்க்கவும், பிறகு அதனுடன் காய்கறிகளை சேர்க்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும்
பிதினா, மல்லி இலை சேர்க்கவும்.
மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்.
அதனுடன் சாதத்தை சேர்த்து கிளறவும்.
வெஜ் ரைஸ் தயார்.

................................................................................................................................................................

சோள சாதம்

தேவையான பொருட்கள்

உதிர்த்த வெள்ளை சோளம் 2 கப்
உப்பு தேவையான அளவு

செய்முறை

சோளத்தை மிக்ஸியில் போட்டு விப்பர் பிளேடால் 2 சுற்று சுற்றவும்.
தோல் பிரிந்து வரும். முடிந்த வரையில் தோல் இல்லாமல் புடைத்து கொள்ளவும்
5 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும்
வெந்தவுடன் மத்தால் மசித்து மோர்க்குழம்புடன் பறிமாரவும்
மோர் ஊற்றி கரைத்து குடிக்கலாம்.

................................................................................................................................................................

தால் ரைஸ்

தேவையான பொருட்கள்

அரிசி - 1கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய் - 2
பூண்டு - 4பல்
சீரகம் - 1தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் - 1ஸ்பூன்

செய்முறை

குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம், பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
பிறகு மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு
பிறகு அரிசி, பருப்பு, உப்பு தண்ணீர் சேர்த்து 3 விசில் வைக்கவும்
தால் ரைஸ் தயார்

................................................................................................................................................................

மசாலா ரைஸ் 

தேவையான பொருட்கள்

1 கிண்ணம் சாதம்
1 பெரி யவெங்காயம் பொடியாக நறுக்கியது
2 தக்காளி பொடியாக நறுக்கியது
1 சிறிய குடமிளகாய் பொடியாக நறுக்கியது
2ல் இருந்து 3 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
புதிய கொத்துமல்லி பொடியாக நறுக்கியது
சுவைக்கேற்ற உப்பு
2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
3ல் இருந்து 4 பூண்டு பற்கள் நறுக்கியது
2 தேக்கரண்டி எண்ணெய்
கொஞ்சம் கறிவேப்பிலை
2 தேக்கரண்டி கடுகு
2 தேக்கரண்டி மல்லித்தூள்
1 தேக்கரண்டி கரம் மசாலா
1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
3 தேக்கரண்டி முளை (விருப்பம் சார்ந்தது)
2 தேக்கரண்டி துருவிய வெண்ணெய் (விருப்பம் சார்ந்தது)

செய்முறை

ஒரு கடாயை எடுத்து எண்ணெயைச் சூடுபடுத்துக.
எண்ணெய் சூடானதும் கறிவேப்பிலை, கடுகு, பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்க்கவும்.
கடுகு பொரிய ஆரம்பித்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்கிக்கொள்ளவும்.
அதன்பின்னர் குடமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதன்பின்னர் தக்காளி, முளை, இஞ்சிப்பூண்டு விழுதும் அனைத்து மசாலாக்களையும், கரம் மசாலாவைத் தவிர, சேர்த்து கலக்கிக்கொள்ளவும். கடாயை 1 நிமிடம் மூடி வைக்கவும். அப்போதுதான் தக்காளியும் முளையும் நன்றாக வேகும்.
இப்போது சாதத்தைச் சேர்த்து நன்றாகப் பிரித்துவிடவும். அப்போதுதான் சாதத்தில் மசாலா நன்றாகச் சேரும். இப்போது, கரம் மசாலா சேர்த்து கடாயை ஒரு அரை நிமிடம் மூடிவைக்கவும்.
பச்சை கொத்துமல்லி மற்றும் வெண்ணெய் துருவலால் அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

................................................................................................................................................................

காரட் சாதம்

தேவையான பொருட்கள்

2 மீடியம் சைஸ் – காரட் (துருவினது)
1 பெரிய கிண்ணம் – சாதம்
2 tsp – நெய்
1 tsp – எண்ணெய்
1 tsp – கடுகு
1 tsp – உளுத்தம்பருப்பு
1 tsp – கடலைப்பருப்பு
½ tsp – பெருங்காயப்பொடி
1 – பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் (அல்லது காரத்திற்கேற்ப)
1 ஆர்க்கு – கறிவேப்பிலை
1 tbsp – முந்திரி
1 tbsp – திராக்ஷை
1 tsp – எலுமிச்சை சாறு
அலங்கரிக்க - கொத்துமல்லி தழை
சுவைக்கேற்ற உப்பு

செய்முறை

காரட்டை துருவிக்கொள்ளவும்.
சாதத்தை உதிராக வடிக்கவும்.
சாதத்துக்கு வேண்டிய உப்பையும் சேர்த்தே சாதம் வடித்தால் உப்பு சாதத்தில் உரைத்திருக்கும்.
எலுமிச்சை சாற்றையும் சேர்த்து சாதம் வடித்தால் சாதம் வெளுப்பாக இருப்பதோடு உதிராகவும் இருக்கும்.
ஒரு வாணலியில் நெய் மற்றும் எண்ணையைக் கலந்து ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் பெருங்காயத்தூளை ஒன்றன்பின் ஒன்றாகப் போடவும்.
அடுத்து விதை நீக்கி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்களை சேர்த்து கறிவேப்பிலையையும் சேர்க்கவும்.
கடைசியில் முந்திரி மற்றும் திராக்ஷைகளை சேர்த்துவிடவும்.
அடுத்ததாக துருவின காரட்டை சேர்த்து வதக்கவும்.
காரட் வதங்கும்போது துருவலுக்கு தேவையான உப்பை மட்டும் சேர்க்கவும். (சாதத்தில் அதற்குத் தேவையான உப்பு இருப்பதால் காரட்டுக்கு வேண்டிய உப்பை மட்டும் சேர்க்கலாம். தவிரவும் அதிக உப்பு காரட்டில் தண்ணீர் விட்டுக்கொள்ளவும் கூடும்). காரட் நிறம் மாறாதபடி வதக்கினால் போதும்.
அடுத்து வடித்து வைத்த சாதத்தை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
அடுப்பை அணைத்துவிட்டு நறுக்கிய கொத்தமல்லித் தழைகளால் அலங்கரிக்கவும்.
சுவையான கண்ணைக் கவரக்கூடிய காரட் சாதம் நிமிடத்தில் தயார். இது பிள்ளைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் தரவும் வேலைக்குப் போகும் பெண்களுக்கு எளிதில் செய்யக் கூடியதாகவும் இருக்கும்.

................................................................................................................................................................

பனீர் ரைஸ்

தேவையான பொருட்கள்

வடித்த சாதம் 1கப்
பன்னீர் துண்டுகள்
வெங்காயம் 1
மஞ்சள் தூள் சாறிதளவு
இஞ்சி பூண்டு சறிதளவு
தயிர் 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
பெப்பர் தூள் 1ஸ்பூன்

செய்முறை

பன்னீர் துண்டுகளை தயிர் மற்றும் உப்பு சேர்த்து 10நிமிடம் ஊற விடவும்
வானெலியில் எண்ணெய் ஊற்றி பன்னீர்"துண்டுகளை பொறித்து தனியாக"எடுத்துக் கொள்ளவும்
அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
மஞ்சள் தூள் சேர்க்கவும்
அதில் வடித்த சாதம் பன்னீர் துண்டுகள் உப்பு,பெப்பர் தூள் சேர்த்து கிளறவும்
சுவையான ஈஸியான பன்னீர் ரைஸ் ரெடி

................................................................................................................................................................

லெமன் ரைஸ்

தேவையான பொருட்கள்

அரிசி 1 கப்
எண்ணெய் தாளிக்க
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
பச்சை மிளகாய் 2
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை சிறிது

செய்முறை

அரிசி அளவான தண்ணீர் ஊற்றி பொலபொல வென வேக வைத்து கொள்ள வேண்டும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு கறிவேப்பிலை பச்சை மிளகாய் இஞ்சி தாளித்து கொள்ளவும்
அதன் மேல் சாதம் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்
எலுமிச்சை சாறு பிழிந்து கிளறி இறக்கவும்
சூடாக பரிமாறவும்

................................................................................................................................................................

சீரக சாதம்

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி- 1 1/2 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய்- 1
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
பிரிஞ்சி இலை -1
பட்டை- 1
கிராம்பு- 2
ஏலக்காய்- 2
உப்பு
தண்ணீர்- 3 கப்
நெய்- 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு- சிறிது
கொத்தமல்லி தழை சிறிது

செய்முறை

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி கொள்ளவும்
அரிசியை களைந்து விட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு குக்கரில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பிரிஞ்சி, கிராம்பு, பட்டை,ஏலக்காய் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதனுடன் ஊற வைத்த அரிசியை வடித்து சேர்த்து 2 நிமிடம் வரை வதக்கவும்.

பின் 3 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் (மிதமான தீயில்) வந்ததும் இறக்கவும்.
ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு சிறிது வெங்காயம், முந்திரி பருப்பு வறுத்து அலங்கரிக்கவும்.
சீரக சாதம் தயார்.

................................................................................................................................................................

பனீர் ரைஸ்

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி 1 கப்
உப்பு தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு
பனீர் 200 கிராம்
வறுத்த முந்திரி 10
புதினா சிறிது
நறுக்கிய வெங்காயம் 1 கப்
கீறிய மிளகாய் 2
எண்ணெய் பொரிக்க

செய்முறை

பனீர் சிறு துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்த எடுக்கவும்
அரிசியை தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊறவைத்து வாணலியில் நெய் ஊற்றி லேசாக வறுத்து கொள்ளவும்
குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் மிளகாய் சேர்த்து வதக்கவும்
வதங்கியதும் தண்ணீர் அரிசி உப்பு பனீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து கொள்ள வேண்டும்
வெந்தவுடன் வறுத்த முந்திரி புதினா தூவி இறக்கவும்
குருமாவுடன் பறிமாரவும்

................................................................................................................................................................

புளி சாதம்

தேவையான பொருட்கள்

புளி : நெல்லி அளவு
வெங்காயம் : 1
கடுகு
கருவேப்பிலை
சீரகம் : ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
உப்பு
சிவப்பு மிளகாய் : 2
உளுந்து : 1 ஸ்பூன்
கடலை பருப்பு : 1 ஸ்பூன்
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
சாதம் : 1 கப்
நல்லெண்ணெய் : 4 ஸ்பூன்
பெருங்காயத்தூள்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் , வெங்காயம் ,கருவேப்பிலை , தாளிக்கவும்
பின் உளுந்து , கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும்
பின் மஞ்சள் தூள் , மிளகாய் தூள், புளி தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்
எண்ணெய் பிரிந்துவரும் வேளையில் பெருங்காயதூள் , உப்பு  சாதம் சேர்த்து கிளறவும்

................................................................................................................................................................

தயிர் சாதம்

தேவையான பொருட்கள்

1 கப் அரிசி
1 1/2 கப் தயிர் (சாதாரண இனிப்பு சேர்க்கப்படாத தயிர்)
1/4 கப் பால்
1 காய்ந்த மிளகாய்
1ல் இருந்து 2 கொத்து கறிவேப்பிலை
2ல் இருந்து 3 பச்சை மிளகாய், நன்றாக நறுக்கப்பட்டது
புதிய கொத்துமல்லி அலங்காரம் செய்வதற்கு
1/4 தேக்கரண்டி கடுகு
ஒரு சிட்டிகை பெருங்காயம்
1 தேக்கரண்டி தோலுரித்த, உடைத்த கருப்பு உளுந்து (வெள்ளை உளுந்து)
2ல் இருந்து 3 தேக்கரண்டி மாதுளம்பழ விதைகள் (விரும்பினால்)
1 தேக்கரண்டி எண்ணெய்
சுவைக்கேற்ற உப்பு

செய்முறை

அரிசியை நன்றாகக் கழுவி ஒரு பாத்திரத்தில் அல்லது ஒரு பிரஷர் குக்கரில் 2 1/2 கப் தண்ணீருடன் பூப்போல் வரும்வரை வேகவைக்கவும். நான் பிரஷர் குக்கரில் 3 விசில்களுக்கு வேகவைத்தேன். இந்த சமையலுக்காக அரிசி சற்றே அதிகம் வேகவைக்கப்படவேண்டும்.

ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். சாதம் சூடாக இருக்கும்போதே பாலைச் சேர்த்து சாதத்தை கரண்டியால் மசிக்கவும். தயிர்சாதத்தில் க்ரீம் போன்ற பாத்தம் உங்களுக்குத் தேவையென்றால் இந்த சமயத்தில் கொஞ்சம் வெண்ணெய் அல்லது நெய் சேர்க்கலாம்.

சாதத்தை முழுமையாக ஆறவிடவும். இப்போது தயிரைத் தொடர்ந்து உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். நறுக்கப்பட்டக் கொத்துமல்லி, பச்சை மிளகாயைச் சேர்க்கவும்.

தாளிப்பிற்கு, ஒரு சிறிய வானலியை எடுத்து எண்ணையை சூடுபடுத்தி கடுகை சேர்க்கவும். கடுகு பொரித்ததும், உடைத்த உளுந்தை கரிவேப்பிலை, சிவப்பு மிளகாய், பெருங்காயம் ஆகியவை சேர்த்ததோடு சேர்க்கவும். 30 விநாடிகளில் இருந்து 1 நிமிடம் வரை வறுத்து, தீயை நிறுத்தவும்.

இவற்றை தயிர் சாதத்தின் மீது ஊற்றிக் கலந்துகொள்ளவும். மாதுளை விதைகளால் அலங்கரித்து உங்கள் விருப்பத்திற்கேற்ப ஊறுகாயுடன் பரிமாறி அப்படியே ருசிக்கவும். வறுத்த முந்திரிபருப்பு, உலர் திராட்சை அல்லது திராட்சைப் பழங்களையும் அலங்காரத்திற்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

................................................................................................................................................................

எள்ளு சாதம்

தேவையான பொருட்கள்

அரிசி - 1 கப்
வெள்ளை எள்ளு - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கொண்டைக்கடலை - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு சுவைக்கு

செய்முறை

குறைவான வெப்பத்தில் கடாயை சூடுபடுத்தி, வறுத்த எள்ளை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்க.
2 கப் தண்ணீர் விட்டு அரிசியை வேகவைத்துக்கொள்க. குழைய சமைத்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும். செய்து முடித்ததும் உடனே ஒட்டிக்கொள்ளாமல் இருக்க ஒரு தட்டில் பரவவிடவும்.
அதே கடாயில் 1/4 தேக்கரண்டி எண்ணெயை சூடுபடுத்திக்கொண்டு, உளுந்த, சிவப்பு மிளகாய் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வறுத்துக்கொள்க. ஆறட்டும். ஒரு மிக்சரில் வறுத்த எள்ளுடன் கரடுமுரடாக வறுத்துக்கொள்க.
நெய், கடுகு சேர்த்து ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய்விட்டு சூடுபடுத்தவும். அது வெடிக்க ஆரம்பித்ததும், கொண்டைக்கடலை, பெருங்காயம், பிளந்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை இலைகளைச் சேர்த்துக்கொள்ளவும்.
சமைத்த அரிசியில் சுவைக்கேற்ற உப்புடன் இவற்றையும் சேர்த்துக்கொள்க. இப்போது 1 தேக்கரண்டி அரைத்த கலவையைச் சேர்த்து சுவையை சரிபார்த்துக்கொள்க. தேவையானால் அதிகம் சேர்த்து கலந்துகொள்ளவும்.
விருப்பத்திற்கேற்ப சூடாகப் பரிமாறவும்.

................................................................................................................................................................

மிளகு சாதம்

தேவையான பொருட்கள்

1 கப் கழுவி ஊறவைக்கப்பட்ட பச்சரிசி
2 கப் தண்ணீர்
1 தேக்கரண்டி புதிதாக நசுக்கப்பட்ட மிளகு
1/4 தேக்கரண்டி கடலை பருப்பு
1/4 தேக்கரண்டி தோலுரிக்கப்பட்ட கருப்பு உளுந்து
2 தேக்கரண்டி நெய்/தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய்
சுவைக்கேற்ற உப்பு
கொஞ்சம் கறிவேப்பிலை

செய்முறை

பச்சரிசைக் கழுவி ஊறவைத்து, இரண்டு விசில்களுக்கு பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். (ஏற்கனவே தண்ணீரில் ஊறவைக்கப்பட்டதால், குறைவான வேவதற்குக் குறைவான நேரமே பிடிக்கும்).
இப்போது ஒரு கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்தி உடைத்த கடலைப்பருப்பையும் உடைத்த கருப்பு உளுந்தையும் சேர்த்து பொரிக்கவிடவும். அதன்பிறகு கறிவேப்பிலை சேர்க்கவும், அதுவும் வெடிக்கட்டும்.
இதைச் செய்தபிறகு மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு, தீயை நிறுத்திவிட்டு அரிசியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மிளகு சாதம் தயார்.

................................................................................................................................................................

புதினா ரைஸ்

தேவையான பொருட்கள்

சாதம் - 2கப்
புதினா - 2கட்டு
புளி
இஞ்சி-1துண்டு
சீரகம்-1/4தேக்கரண்டி
மிளகாய் வத்தல் - 2
மிளகாய் - 2

செய்முறை

மிக்ஸியில் புதினா, மிளகாய், இஞ்சி, புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகாய் வத்தல் சேர்த்து வதக்கவும் பிறகு அரைத்ததை சேர்த்து வதக்கவும்

பிறகு சாதம் சேர்த்து உப்பு சேர்த்துக் கிளறி பரிமாரவும்

புதினா ரைஸ் தயார்

................................................................................................................................................................

துளசி சாதம்

தேவையான பொருட்கள்

சீரகச்சம்பா அரிசி சாதம்1கப்
துளசி இலை 20
மிளகு1ஸ்பூன்
சீரகம்1ஸ்பூன்
மல்லி 1/2ஸ்பூன்
காயப்பொடி 1/4ஸ்பூன்
நல்லெண்ணை 4ஸ்பூன்
உப்பு தேவைக்கு

செய்முறை

சாதத்தை உதிரியாக வடிக்கவும்.மிளகு சீரகம் மல்லியை வறத்து தனித்தனியாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்நதும் பொடிசாக நறுக்கிய துளசி இலைகளை சேர்த்து வதக்கவும்.

பின் முந்திரி பருப்பை சேர்க்கவும்
பொடித்த பொடியை சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும்.நன்கு கிளறவும்.அடுப்பை அமர்த்தவும்.
சாதத்தை போட்டு கிளறவும்.
துளசிசாதம் ரெடி.

................................................................................................................................................................

இஞ்சி சாதம்

தேவையான பொருட்கள்

சாப்பாடு அரிசி - 1 / 2 கப்
இஞ்சி - 1 துண்டு
மிளகாய் வத்தல் - 1
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கட்டிப்பெருங்காயம் - 1 சிறிய துண்டு
வெல்லம் - 1 சிறிய துண்டு
உப்பு - 1 / 4 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 மேஜைகரண்டி
புளி கரைசல் - 1 தேக்கரண்டி
தாளிக்க:கடுகு-1/4தேக்கரண்டி கருவேப்பிலை-1ஆர்க்கு நெய் - 1 தேக்கரண்டி
தேங்காய்எண்ணெய்-1தேக்கரண்டி
வெங்காயம் - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 / 2 தேக்கரண்டி

செய்முறை

கடாயில் 1/2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு மிளகாய் வத்தல் பெருங்காயம் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும்

இஞ்சியை தோல் சீவி நறுக்கி அதே கடாயில் வதக்கவும்

எல்லாம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
சாப்பாடு அரிசியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்
தேங்காய் துருவலில் சிறிது தண்ணீர் சேர்த்து பால் எடுத்துக்கொள்ளவும்

கடாயில் நெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து சுருள கிளறவும்

புளி கரைசல் உப்பு வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்

வேகவைத்த சாதம் சேர்த்து கிளறவும்

தேங்காய் பால் சேர்த்து கிளறி இறக்கவும்

1/2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யில் சீரகம் வெங்காயம் தாளித்து சேர்க்கவும்

................................................................................................................................................................

ராஜ்மா ரைஸ்

தேவையான பொருட்கள்

வேகவைத்த சாதம் - 1 கப்
வேகவைத்த ராஜ்மா - 1/2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
துருவிய இஞ்சி - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
கொத்தமல்லி பொடி - 1 ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
பின் வேகவைத்த ராஜ்மா சேர்த்து கலந்து சாதம் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
5 நிமிடம் கடாயை மூடி சமைக்கவும்.
பின் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

................................................................................................................................................................

குஸ்கா ரைஸ்

தேவையான பொருட்கள்

சாப்பாட்டு அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
தயிர் - கால் கப்
தக்காளி - 1
பச்சை மிளகாய் -1
புதினா - கைப்பிடி
மல்லிதலை - கைப்பிடி
எலுமிச்சை சாறு - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
நெய் - 2 தேக்கரண்டி
பட்டை,கிராம்பு, ஏலக்காய் தலா 1
வெந்தயம் - சிறிதளவு

செய்முறை

வெங்காயம் தக்காளி ப.மிளகாயை நீளமாக நறுக்கவும்.மல்லி புதினாவை பொடியாக நறுக்கவும்
குக்கரில் நெய் விட்டு பட்டை கிராம்பு வகைகளை தாளித்து வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும், இஞ்சி பூண்டு விழுது தயிர் சேர்த்து வதக்கி இரண்டு கப் அரிசிக்கு நான்கு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் அரிசி,தக்காளி,மல்லிதலை, புதினா,எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்.
சிக்கன் கிரேவி,தால்ச்சாவுடன் சாப்பிடலாம்

................................................................................................................................................................

பொடேடோ ரைஸ்

தேவையான பொருட்கள்

எண்ணெய் 2 ஸ்பூன்
கடுகு 1/4 ஸ்பூன்
கருவேப்பிலை சிறிது
உருளைக்கிழங்கு 2
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
சாதம் 1 கப்
உப்பு தேவையான அளவு

செய்முறை

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்க்கவும்

கருவேப்பிலை சேர்த்து பின் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்க்கவும்

உருளைக்கிழங்கு வேக தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

தண்ணீர் வற்றியதும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்

நன்றாக கிளறி விடவும்

சாதம் சேர்க்கவும்

நன்றாக கிளறி விட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

சுவையான போடேடோ ரைஸ் தயார்

................................................................................................................................................................

பீன்ஸ் ரைஸ்

தேவையான பொருட்கள்

வேகவைத்த பாசுமதி அரிசி ஒரு கப்
பீன்ஸ் 10
வெங்காயம் ஒன்று
பெப்பர் தூள் ஒரு ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

பீன்ஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பொடியாக பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் பிறகு உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும்
பீன்ஸ் வெந்தவுடன் அதில் வேக வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து பெப்பர் தூள் தூவி ஒரு கிளறு கிளறி விடவும்
சுவையான பீன்ஸ் ரைஸ் ரெடி

................................................................................................................................................................

கொள்ளு ரைஸ்

தேவையான பொருட்கள்

சாதம்-1கப்
கொள்ளு-1/2கப்
மிளகு-1/2 ஸ்பூன்
மிளகாய் வத்தல் - 2
உப்பு
எண்ணெய் - 2ஸ்பூன்
சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை

செய்முறை

வானலியில் கொள்ளை வறுத்து எடுத்துக்கொள்ளவும்
பிறகு அதில் மிளகை வறுத்து எடுத்துக்கொள்ளவும்
பிறகு மிக்ஸியில் கொள்ளு, மிளகு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், மிளகாய் வத்தல் தாளித்து
அதனுடன் அரைத்த கொள்ளு பொடியை சேர்க்கவும்
பிறகு வேக வைத்த சாதத்தை, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

................................................................................................................................................................

ஃப்ரைட் ரைஸ்

தேவையான பொருட்கள்

வேக வைத்த பாஸ்மதி ரைஸ் 1 கப்
இஞ்சி சிறிது
பூண்டு 3 பல்
சோயா சாஸ் 1/2 ஸ்பூன்
சில்லி சாஸ் 1/4 ஸ்பூன்
ரைஸ் சாஸ் 1 ஸ்பூன்
கேரட் பீன்ஸ் குடைமிளகாய் 1 கப்
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் அரிசியை 20 நிமிடம் ஊற வைத்து வடித்து சிறிது எண்ணெய் சேர்த்து ஆற வைக்கவும்.
இந்த சாதத்திற்கான சாஸ் தயாரிக்க வர மிளகாய் 10 சுடு தண்ணீரில் 15 நிமிடம் போட்டு அரைக்கவும்.
அதனை வாணலியில் எண்ணெய் ஊற்றி வதக்கி சிறிது சோயா சாஸ் உப்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.
இந்த சாஸ் சாதத்திற்கு மேலும் ருசி தரும்.
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு வதக்கவும்.
பிறகு அதில் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

5 முதல் 7 நிமிடம் வதக்கி பின் அதில் சோயா சாஸ் சில்லி சாஸ் தயாரித்த ரெட் சில்லி சாஸ் கலந்து வதக்கவும்.

2 நிமிடம் கழித்து சாதம் சேர்க்கவும்.

கரண்டியில் கிளறாமல் கடாயை பிரட்டவும் சாதம் உடையாமல் இருக்கும்.
5 நிமிடம் கழித்து இறக்கி ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

Comments