குற்றாலம்

குற்றாலம்  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் ஆகும்.

மாரிக்காலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர்.
இங்குள்ள திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயில் கோவிலும் பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது.

குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது.
சங்ககாலத்தில் இது தேனூர் என்னும் பெயருடன் திகழ்ந்தது. இவ்வூர் சங்கப் பாடல்களில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

இது திருநெல்வேலியிலிருந்து 60 கிமீ தொலைவிலும், தென்காசியிலிருந்து 7 கிமீ தொலவிலும், செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டையிலிருந்து 5 கிமீ தொலவிலும், இலஞ்சியிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது.

8.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 78 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

குற்றாலம் செங்கோட்டையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், தென்காசியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும்,திருநெல்வேலியில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும். செங்கோட்டை மற்றும் தென்காசி தொடர்வண்டி நிலையங்கள் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையங்களாகும்.

தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.

குற்றாலம் அருவிகள்

குற்றால அருவிகள் தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்த மலையானது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன. 1.பேரருவி, 2.ஐந்தருவி, 3.சிற்றருவி, 4.பாலருவி, 5.புலியருவி, 6.பழத்தோட்டஅருவி, 7.சென்பகாதேவியருவி, 8.பழையகுற்றால அருவி, 9.தேனருவி. இந்த அருவிகளில் இருந்து கிளம்பும் சாரல் வெகு தொலைவு வரை தென்படும்.

தென்மேற்கு பருவக்காற்றால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கேரளாவிலும் ஆர்ப்பரித்து கொட்டுகிறது மழை, இந்த மலைச்சாரல் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலத்தையும் நனைத்து வருகிறது.
இதன் காரணமாக த்ற்போது குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவுகிறது. அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.
குற்றாலம் மெயின் அருவியான பேரருவியில் 60 மீ உயரத்தில் இருந்து மண்ணை முத்தமிட்டு செல்கிறது.
மூலிகை அற்புதம் நிறைந்த இந்த அருவியில் நனைவதற்காக மக்கள் தமிழகம் முழுவதும் இருந்து படையெடுக்க தொடங்கிவிட்டார்கள்.
குற்றாலத்தில் உள்ள மற்றொரு முக்கியமான அருவியாக சிற்றருவி உள்ளது. இதேபோல் செண்பகதேவி அருவி மற்றும் தேனருவி ஆகியவையும் உள்ளன.
இத்துடன் ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி என மொத்தம் 9 அருவிகள் குற்றாலத்தில் உள்ளன.
குற்றாலத்தில் பொதுவாக ஜுன் முதல் செப்டம்பர் வரை மக்கள் அதிக அளவு கூடுவார்கள் என்றாலும் ஜுன் இறுதி முதல் ஜுலை வரை தான் மிகப்பெரிய அளவில் தண்ணீர் வரத்தும்,
சில்லென்ற மழையும் அவ்வப்போது பெய்து கொண்டே இருக்கும். குறிப்பாக இப்போது சில்லென்ற சாரல் மழையும், இதமான சூழலும் குற்றாலத்தில் நிலவுகிறது.


Comments