போக்குவரத்து
வான்வழி
கோவை பன்னாட்டு வானூர்தி நிலையம்
கோயம்புத்தூர் நகரத்திற்கு இரு வானூர்தி நிலையங்கள் உள்ளன: நகரிலிருந்து 11 கி.மீ.
தொலைவில் பீளமேட்டில் உள்ள கோவை பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் 15 கி.மீ. தொலைவில் உள்ள இந்திய வான்படையின் சூலூர் வான்தளம்.
கோவை பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து இந்தியாவின் முதன்மையான நகரங்களுக்கு உள்நாட்டு சேவைகளும் சார்ஜா, சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கு வெளிநாட்டுச் சேவைகளும் இயக்கப்படுகின்றன.
கோவை வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இதன் நீளம் 9,760 அடிகள் (2,970 m) 747 SP, A 330, 747-300B, 747-300 ER, 747-400 மற்றும் 747-200 போன்ற ""வயிறு அகல" பெரிய ஜெட் இரக விமானங்களை இயக்க வசதி அளிக்கும்.
தொடர் வண்டி
கோயம்புத்தூர் தொடர்வண்டி நிலையத்தின் முன்புறத் தோற்றம்
கோயம்புத்தூருக்குத் தொடர்வண்டி சேவை 1872ஆம் ஆண்டில் தொடங்கியது.
அப்போது போத்தனூர் – சென்னை இருப்புப் பாதை போடப்பட்டது. அகலப்பாதை தொடர்வண்டிகள் கோவையைத் தமிழ்நாட்டின் பல நகரங்கள் மற்றும் இந்தியாவின் முதன்மை நகரங்களுடன் இணைக்கிறது.
போத்தனூருக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையே இருந்த மீட்டர்பாதை இருப்புப் பாதை மே 2009 முதல் மூடப்பட்டு பாட்டை மாற்றப்படுகிறது.
தென்னக இரயில்வேயின் மிகக் கூடுதலான வருவாய் ஈட்டும் தொடர்வண்டி நிலையமாகக் கோயம்புத்தூர் சந்திப்பு உள்ளது. சேலம் கோட்டத்தின் வருவாயில் 42.17% இந்த நிலையம் பங்களிக்கிறது.
கோவை வடக்கு சந்திப்பு மற்றும் இருகூர் பிற முக்கிய தொடர்வண்டிச் சந்திப்புகளாகும்.
சாலை
கோவையின் முதன்மை சாலையொன்று
நகரில் ஆறு பிரதான சாலைகளும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகளும் உள்ளன
NH-47 (சேலம்–கன்னியாகுமரி),
NH-67 (குண்டுலுபேட்டை–நாகப்பட்டிணம்) மற்றும்
NH 209 (பெங்களூரு–திண்டுக்கல்)
லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் 1998ஆம் ஆண்டு கட்டப்பட்ட புதிய புறவழிச்சாலை நகரில் போக்குவரத்தை சீர்செய்யப் பெரிதும் உதவியுள்ளது.
கோவையில் உள்ள முதன்மை பேருந்து நிறுத்தங்கள்:
காந்திபுரம் பேருந்து நிலையம் :
(மேட்டூர் அணை, ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம், திருப்பூர், நாமக்கல் , காமநாயக்கன் பாளையம்,காங்கேயம்,தாராபுரம், மேட்டுப்பாளையம், ஊட்டி, சேலம், பெங்களூரு, சென்னை மற்றும் பிற தொலைதூர இடங்கள் செல்லும் பேருந்துகள்)
சிங்காநல்லூர் பேருந்து நிலையம் :( மதுரை, இராஜபாளையம், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பிற அண்மைய ஊர்கள் செல்லும் பேருந்துகள்)
காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் :
(உள்ளூர்ப் பேருந்துகள்)
திருவள்ளுவர் பேருந்து நிலையம்: காந்திபுரம்(மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் , கேரள மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மற்றும் பாண்டிச்சேரி மாநிலப் பேருந்துகள்)
உக்கடம் பேருந்து நிலையம்:
( பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் பிற அண்மை இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள்)
ஓம்னி பேருந்து நிலையம்:
சத்தியமங்கலம் சாலை, காந்திபுரம்(பெங்களூரு, சென்னை, சேலம் தமிழகம் மற்றும் கேரளாவின் ஓரிரவில் பயணிக்கத்தக்க ஊர்களுக்குச் செல்லும் குளிர்வசதி/ஆடம்பர பேருந்துகள்)
மேட்டுப்பாளையம் சாலை பேருந்துநிலையம்: மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கான நிலையம் இதுவாகும். இதுவே கடைசியாகக் கட்டப்பட்ட பேருந்து நிலையமாகும்.
நகரில் மக்கள்தொகைக்கும் வாகனத்தொகைக்கும் உள்ள வீதம் மிகக் கூடுதலானது. 1921ஆம் ஆண்டு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. நகரின் பெரும்பான்மையான இடங்களுக்கும் புறநகரில் உள்ள கிராமங்களுக்கும் இச்சேவைகள் மிகுந்த பயனளிக்கின்றன. மாநிலப் போக்குவரத்தின் கோவை கோட்டத்தின் உள்ளூர்ப் பேருந்துகள் 500 பேருந்துகளைக் கொண்டு 119 வழித்தடங்களில் சேவை வழங்குகின்றன. 800 நகரப்பேருந்துகள் 228 வழித்தடங்களில் சேவை புரிகின்றன.
கோவையில் மூன்றுசக்கர தானிக்கள்.
கோவை நகரில் மூன்று சக்கர தானிக்கள் சேவை புரிகின்றன. ஆனால் அளவுக்கருவியினை இயக்காது பயணிகளை ஏமாற்றுவதாக இவர்களுக்குக் கெட்டபெயர் உண்டு. புதிதாக இயக்கப்படும் விளி வாடகையுந்துகள் இதனால் பரவலாக விரும்பப்படுகின்றன.
சத்தியமங்கலம், திருச்சிராப்பள்ளி, மேட்டுப்பாளையம் சாலைகளை இணைக்கும் அரைவட்ட சாலை அமைக்கப்படும் என்றும், வண்டிகளுக்காகப் பல்லடுக்கு நிறுத்தும் வசதியைக் காந்திபுரம், டவுன் ஹால் அடங்களான மூன்று இடங்களில் 80 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் என்றும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வெள்ளளூரில் 125 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுமென முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.மேலும் கோவை மாநகராட்சியில் மொத்தம் 12 பேருந்து நிலையங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment