பயணம்

பயணம்
சாலை வழி

தென்னிந்தியா முழுவதும் செல்ல மற்றும் அருகில் இருக்கும் ஊர்களுக்கும் பெரிய நகரங்களுக்கும் செல்ல திருப்பதியில் பேருந்து வசதி இருக்கின்றது. தனியார் நிறுவனத்தினர் சென்னை,மதுரை,கோயம்புத்தூர், திருப்பூர் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களுக்கும் பேருந்துகளை விடுகின்றனர்.

தொடருந்து வழி

திருப்பதியின் தொடர்வண்டிநிலையம் எல்லா வசதிகளும் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. சென்னை மும்பை ரயில் வழியின் மத்தியில் இருக்கும் ரேணிகுண்டா சந்திப்பு திருப்பதி நகரத்தில் இருந்து வெறும் 20 நிமிட தொலைவில் தான் உள்ளது. திருப்பதியில் இருந்து நாட்டின் பல பகுதிகளுக்கு புறப்பட்டு செல்லும் ரயில்கள் பல உள்ளன. திருப்பதியில் இருந்து நாட்டின் பல இடங்களுக்கும் செல்ல வசதிகள் உள்ளன.

வான் வழி

திருப்பதி விமான நிலையம் உள்நாட்டு விமான நிலையமாகும். இங்கிருந்து ஹைதராபாத்,மதுரை, விசாகப்பட்டினம், தில்லி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நேரடி விமானங்கள் உள்ளன. நகரத்தின் மையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது இந்த விமான நிலையம். மிக அருகாமையில் அமைந்திருக்கும் பன்னாட்டு விமான நிலையம் சென்னையில் உள்ளது. இது திருப்பதியில் இருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ளது. திருப்பதி விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றுவதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன

Comments