வரலாறு
உறையூர் திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதி, சோழர்களின் தலைநகரமாக 300 பி.சி. முதல் இருந்துவருகிறது.
இது தொல்பொருள் சான்றுகள் மற்றும் பண்டைய இலக்கியங்கள் மூலம் ஆதரிக்கப்படுகிறது. சோழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உறையூர் தொடர்ந்து இருந்தமைக்கான இலக்கிய ஆதாரங்கள் உள்ளன.பின்னர், உறையூர் இன்றும் திருச்சிராப்பள்ளி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள், கி.பி. 590 இல் மகேந்திர வர்மா பல்லவரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கி.பி. 880 வரை, கல்வெட்டுகளின் படி, இந்த பகுதி பல்லவர்களின் மற்ரும் பாண்டியர்கள்மேலாதிக்கத்தின் கீழ் இருந்தது . AD 880 பிறகு திருச்சிராப்பள்ளி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள் அனைத்தும் சோழப்பேரரசின் பகுதியாக மாறியது. 1225 வில் ஹொய்சாளர்களால் அந்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது. அதன் பின்னர், முகலாய ஆட்சியின் வருகைக்கு பின்னர் அது பாண்டியர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. திருச்சிராப்பள்ளி சில காலம் முகலாய ஆட்சியின் கீழ் இருந்தது, பின்பு விஜயநகர ஆட்சியாளர்களின் கீழ் வந்தது.
விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆளுநர்களான நாயக்கர்கள் 1736 ஆம் ஆண்டு வரை இந்த பகுதியை ஆட்சி செய்தார். தெப்பக்குளம் மற்றும் மலைக்கோட்டையை கட்டியவர் விஸ்வநாத நாயக்கர் ஆவார். மீனாட்சியாரின் அரசு ஆட்சிக்கு பிறகு நாயக்கர்கள் வம்சம் முடிவடைந்தது. முஸ்லிம்கள் இந்த பிராந்தியத்தை பிரெஞ்சு அல்லது ஆங்கிலேய இராணுவங்களின் உதவியுடன் மீண்டும் ஆட்சி செய்தனர். சில ஆண்டுகளுக்கு, திருச்சிராப்பள்ளி சாந்தா சாஹிப்பின் மற்றும் முகமது அலி ஆட்சியின்கீழ் இருந்தது. இறுதியாக ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் திருச்சிராப்பள்ளி மற்றும் பிற பகுதிகளை கொண்டு வந்தனர். ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்தின் கீழ் இந்த மாவட்டமானது 150 ஆண்டுகளாக இந்தியாவின் சுதந்திரத்திறகு முன் வரை இருந்தது.
காவேரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் திருச்சிராப்பள்ளி, மாநிலத்தின் நான்காவது பெரிய நகரமாக இருந்தது, ஆரம்பகால சோழர்களின் கோட்டையாக இருந்தது, பின்னர் பல்லவர்களிடம் விழுந்தது. ஆனால் பல்லவர்கள் உண்மையில் இந்த நகரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை, பல முறை பாண்டியர்களிடம் அதை இழந்தனர். 10 ஆம் நூற்றாண்டில் மீண்டும் சோழப்பேரரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. சோழப்பேரரசின் சரிவிற்கு பின் விஜயநகர கோட்டையாக ஆனது.
1565 ஆம் ஆண்டில் இந்த பேரரசு வீழ்ச்சியுற்றபோது, மதுரை நாயக்கர்கள், மராட்டியர்கள், நவாப்கள், பிரெஞ்சு மற்றும் இறுதியாக பிரிட்டிஷ் ஆகியோர் திருச்சியை ஆக்கிரமித்தனர். 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் மேலாதிக்கத்திற்கான பிரிட்டிஷ்-பிரஞ்சு போராட்டத்தின் போது கர்நாடகத்தின் போர்களை எதிர்த்துப் போராடிய முக்கிய மையங்களில் இதுவும் ஒன்றாகும். மதுரை நாயக்கர்கள் கீழ் இருந்ததபோது திருச்சி அதன் முழுமையான செழிப்புடன் வளர்ந்ததோடு இன்றும் அது செழித்தோங்கிய நகரமாக உள்ளது. கோட்டையைத் தவிர 1760 முற்பட்ட பல திருக்கோவில்கள் உள்ளன
சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் திருச்சி தமிழ்நாட்டின் மையப்பகுதியாக உள்ளது.
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை (Tiruchirapalli Rock Fort) ஒரு தொல்பழங்கால மலைப்பாறை ஒன்றன்மீது
கட்டப்பட்ட கோட்டை, கோயில்கள் என்பவற்றைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது. திருச்சி மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது இந்த மலைக்கோட்டையாகும்.
இது அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது. நிலவியல் அடிப்படையில், இப்பாறை ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையானது.
இம்மலைக் கோட்டையுள் அமைந்துள்ள கோயில்கள் உச்சிப் பிள்ளையார் கோயில், சிவன் கோயில்கள் ஆகும். இக்கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளின் களமாக இருந்துள்ளது.
இதற்குள் பல்லவர் காலக் குடைவரைக் கோயில் ஒன்றும், நாயக்கர் காலக் கோட்டை ஒன்றும் உள்ளன.
இக்கோட்டை, நாயக்கர்களுக்கும் பிஜாப்பூர், கர்நாடகம், மராட்டா ஆகிய அரசுகளுக்கும் இடையே இடம்பெற்ற பல போர்களைக் கண்டுள்ளது.
இந்தியாவில் பிரித்தானியப் பேரரசு காலூன்றுவதற்கு அடிப்படையாக அமைந்த கர்நாடகப் போர்களில் இக்கோட்டை முக்கிய பங்கு வகித்துள்ளது.
பின்புலம்
இம்மலையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோயில், மேலே உச்சிப்பிள்ளையார் கோயில், மற்றும் இடையே தாயுமானவர் கோவில் ஆகியவை உள்ளன. இதைத் தவிர பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன.
பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.
உச்சிப் பிள்ளையார் புராணம்
இராமாயணப் போருக்குப் பின்னர், இராமேஸ்வரம் துவங்கி இந்தியாவின் பல கோயில்களையும் தரிசித்த விபீஷணர், பள்ளி கொண்ட பெருமானை இலங்கைக்கு எடுத்து செல்ல விரும்பினாராம். அவ்வாறு அவர் செல்கையில், வழியில் காவிரியாறும் கொள்ளிடமும் குறுக்கிட்டன. அப்போது அங்கு வந்த சிறுவன் ஒருவனிடம் பள்ளி கொண்ட நாதர் சிலையைக் கொடுத்து, தமது காலைக் கடன்களைக் கழிக்கச் சென்றார் விபீஷணர். சிறுவனாக வந்தவனோ விநாயகன். அவன், பள்ளி கொண்ட நாதர் அங்கிருந்து செல்வதை விரும்பாதவனாகச் சிலையை கீழே வைத்து விட, அச்சிலை அங்கேயே நிலை பெற்று விட்டது. திரும்பி வந்த விபீஷணர் அதனைப் பெயர்க்க இயலாது கோபமுற்று சிறுவனின் தலையில் குட்டியதாகவும், அவ்வாறு குட்டியதன் வடு இன்றும் உச்சிப் பிள்ளையாரின் பின் தலையில் காணலாம் என்றும் கூறுவர். அவ்வாறு பள்ளி கொண்ட நாதர் நிலைபெற்று விட்ட இடமே திருவரங்கமாகப் போற்றப்படுகிறது. பள்ளி கொண்ட நாதர் அரங்க நாதராகத் திகழ்கிறார்.
வரலாற்றுச் சிறப்புகள்
பல்லவர்களால் சிறு குகைக் கோயிலாக எழுப்பப்பட்ட மலைக்கோட்டைக் கோயிலைப், பின்னர், இதன் இயற்கையாகவே அமைந்த அரண்களைச் சாதகமாக்கிக் கொண்ட நாயக்க மன்னர்கள் பெருமளவில் மேம்படுத்தினர். இக்கோயில் தற்சமயம் கொண்டிருக்கும் அமைப்பிற்கு விஜய நகர அரசர்களும் மற்றும் மதுரை நாயக்கர்களும் அளித்த பங்கு குறிப்பிடத்தக்கது.
நாயக்கர்கள் காலம்
மதுரை நாயக்க வம்ச அரசர்களின் தலைநகரமாக இந்த மலை இருந்தமையால், இது பல பெரும்போர்களைக் கண்ணுற்றது. விஜய நகரப் பேரரசர்களுக்கும் மதுரை நாயக்கர்களுக்கும் இடையில் நிகழ்ந்த போர் அவற்றில் ஒன்றாகும். நாயக்கர்களின் வடமேற்கு அரணாக இக்கோட்டை விளங்கியது. அவர்களது அரசாட்சியின் இறுதி நூற்றாண்டுகளில் தஞ்சை மாயக்கர்கள், பின்னாளில் தஞ்சை மராட்டியர்கள் மற்றும் படையெடுத்து வந்த பிஜாப்புர், மைசூர் மற்றும் மராத்திய அரசர்களிடமிருந்து இக்கோட்டை அரணாகக் காத்து வந்தது.
கர்நாடக நவாப் காலம்
திருச்சி மலைக்கோட்டை சந்தா சாஹிப் மற்றும் ஆற்காட்டு அலி ஆகியோரிடையே நிகழ்ந்ததான போருக்காக மிகவும் நினைவு கூறப்படுகிறது. ஆங்கிலப் படைகளிடமிருந்து தப்பி இக்கோட்டையில் ஒரு குகையினுள் சந்தா சாஹிப் ஒளிந்து கொண்டதாகக் கூறுவர்.
ஆங்கிலேயர் ஆளுகையின் கீழ்
இப்போருக்குப் பிறகு, 18ஆம் நூற்றாண்டில், திருச்சி அநேகமாக ஆங்கிலேயரின் ஆளுமையின் கீழ் வந்து விட்டது. மலைக்கோட்டையின் கதவு முதன்மை அரண் கதவு (Main Guard Gate) எனப்படலானது. இன்றும் அது அப்பெயரிலேயே வழங்கப்படுகிறது. இதனருகிலேயே ராபர்ட் கிளைவ் வாழ்ந்ததாகக் கூறப்படும் இடமும் உள்ளது. மலைக் கோயிலை ஒட்டிய மேற்கு வீதியில் உள்ள தெப்பக்குளத்தின் அருகில் இது உள்ளது.
பொருளாதாரம்
பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் திருச்சிராப்பள்ளி எண்ணெய் செக்குகள், தோல் பதனிடும் தொழில் மற்றும் சுருட்டு தயாரிப்பிற்கு புகழ் பெற்றிருந்தது. உச்சத்தில் இருந்த நேரத்தில் ஆண்டுக்கு12 மில்லியன் சுருட்டுக்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாயின.பதனிடப்பட்ட தோல்கள் இங்கிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்றுமதி ஆயிற்று.
திருச்சி நகரில் ஏராளமான சில்லறை மற்றும் மொத்த வணிகக் கூடங்கள் அமைந்துள்ளன; இவற்றில் மகாத்மா காந்தி சந்தை எனப்படும் காய்கறி சந்தை மிகவும் அறியப்பட்டதாகும் திருவரங்கத்தில் உள்ள பூக்கடைத் தெருவும் மாம்பழச்சாலையின் மாம்பழச் சந்தையும் குறிப்பிடத்தக்கன. சுற்றுப்புற நகரான மணச்சநல்லூரில் அரிசி ஆலைகளில் மெருகேற்றப்பட்ட பொன்னி அரிசி தயாராகிறது.
இங்குள்ள நடுவண் அரசின் துப்பாக்கித் தொழிற்சாலையில் இந்திய படைத்துறைக்காக எறி குண்டுகள் உந்துகருவிகள், பல குண்டுகளை உந்து கருவிகள், துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. இதே வளாகத்தில் கனத்த கலவைமாழை ஊடுருவு திட்ட (HAPP) வசதியும் நடுவண் அரசின் துப்பாக்கி தொழிற்சாலைகள் வாரியத்தால் நடத்தப்படுகிறது. 1980களில் நிறுவப்பட்ட இந்த வசதியில் இந்தியாவிலேயே முதன்முறையாக நெகிழ்வுறு தயாரிப்பு அமைப்பு (FMS), பயன்படுத்தப்பட்டுள்ளது
திருச்சி தமிழ்நாட்டின் பொறியியல் சாதனங்கள் தயாரிக்கும் முனையமாக விளங்குகிறது. 1928ஆம் ஆண்டில் தொடர்வண்டி பணிப்பட்டறை நாகப்பட்டினத்திலிருந்து திருச்சிராப்பள்ளியின் கோல்டன் ராக்கிற்கு மாற்றப்பட்டது. தமிழ்நாட்டின் மூன்று பட்டறைகளில் இது ஒன்றாகத் திகழ்கிறது. இந்தப் பட்டறையிலிருந்து 2007-08 ஆண்டில் 650 வழமையான மற்றும் குறைந்த மட்ட சரக்கு வண்டிகள் தயாரிக்கப்பட்டன.
இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை பொறியியல் நிறுவனமாக மே 1965இல் உயரழுத்த கொதிகலன்கள் தயாரிக்கும் பாரத மிகு மின் நிறுவனம் (BHEL), நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து Indian Rupee symbol.svg58 கோடி (US$13 மில்லியன்) செலவில் ஒட்டற்ற எஃகு ஆலையும் கொதிகலன் துணைஉதிரிகள் தொழிற்சாலையும் நிறுவப்பட்டன. இவை மூன்றும் இணைந்து 22,927.4 சதுர மீட்டர்கள் (246,788 sq ft) பரப்பளவில் பிஎச்ஈஎல் தொழிற்சாலை வளாகமாக அறியப்படுகிறது. இங்கு நிலக்கரியைப் பயன்படுத்தி 6.2 MW மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் 1961இல் திருச்சி எஃகு உருட்டல் ஆலைகள் (Trichy Steel Rolling Mills) துவங்கப்பட்டது.மற்ற முகனையான தொழிற்சாலைகளில் ஒன்றாகத் திருச்சி வடிமனை மற்றும் வேதிப்பொருள் வரையறுக்கப்பட்டது (TDCL) 1966ஆம் ஆண்டில் செந்தண்ணீர்புரத்தில் நிறுவப்பட்டது.[73] இங்கு தெளிந்த சாராவி, அசிடால்டெஹைடு, அசிட்டிக் காடி, அசிடிக் அன்ஹைடிரைடுமற்றும் இதைல் அசிடேட்டு தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரும் தனியார்துறை வடிமனைகளில் மிகப் பெரியதான ஒன்றாக விளங்குகிறது; திசம்பர் 2005இலிருந்து நவம்பர் 2006க்கு இடையில் 13.5 மில்லியன் லிட்டர்கள் சாராயம் தயாரிக்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி இந்தியாவின் "ஆற்றல் திறன் மற்றும் கட்டுருவாக்கத் தொழில் தலைநகரம்" (Energy Equipment & Fabrication Capital of India) என்று அழைக்கப்படுகிறது.
இந்த மண்டலத்திலிருந்து ஏற்றுமதியாகும் மென்பொருட்களின் ஆண்டு வருமானம் Indian Rupee symbol.svg26.21 கோடிகளாக (US$5.8 மில்லியன்) உள்ளது.[76][77] திசம்பர் 9, 2010இல் Indian Rupee symbol.svg60 கோடிகள் (US$13.5 மில்லியன்) செலவில் எல்காட் தகவல்தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்டது. தமிழ்நாடு மின்னனுக்கழகம் வரையறையால் 59.74 எக்டேர்கள் (147.6 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம் சிறப்பு பொருளாதார மண்டலமாக விளங்குகிறது. இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், திருச்சிராப்பள்ளியில் தனது செயற்பாட்டைத் துவக்கத் திட்டமிட்டுள்ளது.திருச்சி மண்டல ஜி.எஸ்.டி. ஆணையர் ஜே.எம்.கென்னடி.
Comments
Post a Comment