பேருந்து நிலையங்கள்
மத்திய பேருந்து நிலையத்தின் வரைப்படம்
இங்கு இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன.
மத்திய பேருந்து நிலையம்:
இந்த மத்திய பேருந்து நிலையமானது தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.இது நகரின் தென்மேற்கு பகுதியில் இருக்கிறது. முன்பு வெளியூர் பேருந்துகளுக்கு மட்டும் வந்து புறப்படும் இடமாக இருந்தது. இங்கிருந்து தொடருந்து நிலையமும், வானூர்தி நிலையமும் ஒப்பிடும் போது, அருகாமையில் இருக்கிறது.
சத்திரம் பேருந்து நிலையம்: இது நகரின் வடகிழக்குப் பகுதியில் இருக்கிறது. மலைக்கோட்டைக்கு அருகிலுள்ளது. இது முன்பு நகரப்பேருந்து நிலையமாக இருந்தது.
பேருந்து போக்குவரத்து மாற்றம்
திருச்சி தமிழகத்தின் நடுவில் இருப்பதாலும், மக்கள் தொகை நெருக்கத்தாலும், நகரத்துக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் பேருந்து நிறுத்தங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, நகரின் தெற்கிலும்,மேற்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், பெரும்பாலும் மத்திய பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர்.
அதேபோல, வடக்கிலும், கிழக்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், சத்திரம் பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர். இங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு ஏறத்தாழ 7 கி.மி. கள் இடைவெளியுள்ளது. இதனால் மாநகரில், வெளியூர் பேருந்துகளால் ஏற்படும் நெரிசல் குறைகிறது.
பயணிகளும், தங்களது பயணங்களுக்கு ஏற்ப, பேருந்தைத் தேர்ந்தெடுத்து செல்வர். இதனால், நகரில் வாழ்வோருக்கு, இயல்பு வாழ்க்கை எளிதாக்கப்படுகிறது.வெளியூர் பயணிகள் மட்டும், ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி, மற்றொரு நிலையத்திற்கு வர, சில நேரங்களில் சிரமப் படும் வாய்ப்பு இருக்கிறது. நகருக்குள் புகுந்து, மறுபக்கம் பயணிக்கும் பேருந்துகள் புறவழிச்சாலையையும் பயன்படுத்த, நெடுஞ்சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. இப்புறவழிச்சாலையை சுமையுந்துகளும்(lorry), மகிழுந்துகளும் (cars) அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால், தமிழகத்தின் இருகோடியிலிருந்து பயணிக்கும் வண்டிகள், இடரில்லாமல் பயணிக்கின்றன.
தொடருந்துகள்
திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தென்னக இரயில்வேயின் ஆறு கோட்டங்களில் ஒன்றாகும். 1868ம் ஆண்டு திருச்சிராப்பள்ளிக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே தொடருந்து சேவை தொடங்கியது. சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், மதுரை, சிதம்பரம், கொல்லம், இராமேசுவரம், தென்காசி, திருப்பதி, பெங்களூரு, மைசூரு, மங்களூர், கொல்கத்தா, குவஹாத்தி, கொச்சி ஆகிய இடங்களுக்குத் தொடருந்து வசதி உண்டு. தினசரி 16 தொடருந்துகள் திருச்சியில் இருந்து மாநில தலைநகர் சென்னைக்கு செல்கின்றன. சோழன், மலைக்கோட்டை விரைவு வண்டி திருச்சியில் இருந்து கிளம்புகிறது, மற்றவை திருச்சி வழியாகச் சென்னை செல்லுகின்றன.
திருச்சிராப்பள்ளி தொடருந்து நிலைய சந்திப்பு
தினசரி திருச்சிராப்பள்ளி வழியாகச் செல்லும் தொடருந்துகள்
வண்டியின் பெயர் வண்டி எண் புறப்படும் இடம் சேருமிடம்
அனந்தபுரி விரைவு வண்டி 16724 திருவனந்தபுரம் சென்னை
பொதிகை 12662 செங்கோட்டை சென்னை
பல்லவன் 12606 காரைக்குடி சென்னை
வைகை 12636 மதுரை சென்னை
இராமேசுவரம்-சென்னை 16714 இராமேசுவரம் சென்னை
குருவாயூர்- சென்னை 16128 குருவாயூர் சென்னை
சென்னை 06804 செங்கோட்டை சென்னை
மங்களூர்-சென்னை 06108 மங்களூர் சென்னை
மலைக்கோட்டை 16178 திருச்சிராப்பள்ளி சென்னை
திருச்செந்தூர்-சென்னை 16736 திருச்செந்தூர் சென்னை
நெல்லை 12632 திருநெல்வேலி சென்னை
கன்னியாகுமரி 12634 கன்னியாகுமரி சென்னை
முத்து நகர் 12694 தூத்துக்குடி சென்னை
சோழன் விரைவு ரயில் 16854 திருச்சிராப்பள்ளி சென்னை
பாண்டியன் 12638 மதுரை சென்னை
சென்னை 16702 இராமேசுவரம் சென்னை
மைசூர் 16231 மயிலாடுதுறை மைசூர்
மைசூர் விரைவு வண்டி சேலம், ஓசூர், பெங்களூரு வழியாக மைசூரை அடைகிறது.
திருச்சி வானூர்தி நிலையம்
வானூர்தி போக்குவரத்து
திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையம் தேசிய நெடுஞ்சாலை 210ல் அமைந்துள்ளது. இவ்வானூர்தி நிலையம் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து இரண்டாவது பெரியவிமான நிலையமாகும். 1938ல் டாடா ஏர்லைன்சின் கராச்சி-கொழும்பு தடத்தில் செல்லும் வானூர்திகள் இங்கு நின்று சென்றன. இங்கிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு வானூர்திகள் செல்லுகின்றன. சிங்கப்பூர், கொழும்பு, துபாய், அபுதாபி, கோலாலம்பூர் ஆகிய வெளிநாட்டு நகரங்களுக்கும் வானூர்திகள் செல்லுகின்றன.

Comments
Post a Comment