உணவு
உலகிலேயே மிகப் பெரிய உணவுக் கூடங்களில் ஒன்றாகத் திகழ்கின்ற திருமலை திருப்பதி அன்னதானக் கூடத்தின் சார்பில் தினமும் 1 லட்சம் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர் இவர்களுக்கு கடந்த 33 ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தானம் இலவச உணவு வழங்குகிறது.
1985 – ம் ஆண்டு 2000 பேர் சாப்பிடும் அளவில் தொடங்கப்பட்ட இந்த அன்னதானம் இன்று நாளொன்றுக்கு 60 ஆயிரம் பேர் வரை சாப்பிடும் அளவில் விரிவாக்கம் பெற்றுள்ளது.
ஆயிரம் பேர் கொண்ட அலுவலகக் குழு, மூன்று ஷிப்டுகளில் இந்த உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.. உணவு தயாரிப்புக்காக நாள் ஒன்றுக்கு 27 லட்ச ரூபாய் வரை செலவாகின்றது. தற்போது 30 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகிறது
என்வே,திருமலையில் அன்றாடம் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானச் செலவை, 27 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்த்தி உள்ளதாகக் கூறுகிறார்,, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் துணை நிர்வாக அதிகாரி. . அன்னதான பிரசாதத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே திருத்தியமைக்கப்பட்டு உள்ளது என்கிறார்.
Comments
Post a Comment