வழிபாட்டுத்தளங்கள்
தாயுமான சுவாமி கோவில்
இறைவன் தாயுமானவர் கருவுற்றிருந்த ஒரு பெண்ணுக்கு அவளது தாய் உருவில் வந்து உதவியதால் இப்பெயர் வந்தது. மலையுச்சியில் உச்சிப் பிள்ளையார் கோவில் இருக்கிறது. இம்மலைக்கோட்டை 83மீ (273 அடி) உயரமுள்ளது. மலை ஏற 437 படிகட்டுகள் உள்ளன. உச்சியிலிருந்துப் பார்த்தால், திருச்சி நகரம், காவிரி, கொள்ளிடம், திருவானைக்கா, திருவரங்கம் கோயில்கள் முதலியனவற்றைக் காணலாம். அனுமன் இத்தலத்தை பூசித்ததிற்கு அடையாளமாக அனுமக்கொடியும் அனும முத்திரையும் இக்கோயில்களுக்கு உரியனவாக உள்ளன. திருவருட்கவி பாடுவதில் சிறந்தவரான தாயுமானவர் இவ்வூரினராகும்.
பஞ்சவர்ண நாதர் கோவில்
திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 1 1/2 கி.மீ தொலைவில் உள்ள உறையூரில் இக்கோவில் உள்ளது. திருமுக்கீச்சரம் என்றும், கோழியூர் என்றும் இவ்வூரை அழைப்பர். ஐந்து காலங்களில் ஐந்து வர்ணமாக இக்கோயிலில் குடிகொண்ட சிவன் வீற்றிருத்தலால் பஞ்சவர்ணநாதர் என்று பெயர் வந்தது. இது மூவேந்தரும் சேர்ந்து வந்து வணங்கிய சிறப்பு கொண்டது.
உச்சிநாதர் கோவில்
திருச்சிக்குத் தென்மேற்கே 4 கி.மீ தொலைவில் உள்ள திருக்கற்குடியில் இக்கோயில் சிறிய மலையின் மீது உள்ளது. இது நந்திவர்மப் பல்லவன் திருப்பணி செய்த பழங்கோயிலாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் முதலியோரின் பாடல் பெற்றத் தலமாகும். இவ்விறைவனை வேண்டிக் கொண்டு பாகை பூசை நடக்கிறது. இக்கோவில் அமைந்துள்ள மலைக்கு உய்யக் கொண்டான் பெருமலை என்று பெயர்.
சத்தியாவாகீசுவரர் ஆலயம்
இது லால்குடி இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் உள்ள அன்பில் ஆலந்துறை என்னும் ஊரில் இருக்கிறது. இக்கோவிலில் தெற்கு நோக்கி செவி சாய்த்த விநாயகர் திருவுருவம் உள்ளது. சம்பந்தர், அப்பரால் பாடல் பெற்றது.
திருமூலநாதர் கோவில்
திருவானைக்காவுக்குக் கிழக்கில் 8 கி.மீ தொலைவில் உள்ள திருபாற்றுத்துறை என்னும் ஊரில், திருவெறும்பூர் இரயில் நிலையத்திற்கு 6 கி.மீ தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பற்றிச் சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.
சம்புகேசுவரர் ஆலயம்
இவ்வாலயம் திருவானைக்காவில், திருவரங்கம் இரயில் நிலையத்திற்குக் கிழக்கில் ஒரு கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோயில் மிகப் பெரியது. கோயிலின் கருவறையில் நீர் எப்பொழுதும் ஊறிக் கொண்டே இருக்கும். இறைவன் வெள்ளை நாவல் மரத்தடியில் இருப்பதனால் சம்புகேசுரம் என்னும் பெயரும் இவ்வூருக்கு உண்டு. முற்பிறப்பில் இறைவனைப் பூசித்த சிலந்தி மறுபிறப்பில் கோச்சேங்கட் சோழனாகப் பிறந்து கட்டிய கோயில் என்று நம்பப்படுகிறது. இக்கோயில் மதில் திருநீறை கூலியாகக் கொடுத்து கட்டியதால் நீறிட்டான் மதில் என அழைக்கப்படுகிறது. உச்சிக்காலத்தில் அம்மன் கோவில் பூசை புரியும் குருக்கள் பெண்வேடம் தரித்து அர்ச்சனை செய்கிறார். இறைவனை அம்மன் பூசித்த சிறப்பினை விளக்க இப்பொழுதும் இப்படி நடை பெறுகிறது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் முதலியோரால் பாடல் பெற்ற தலம்.
விராலிமலைக் கோயில்
திருச்சி-மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 25 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது. இது இயற்கை எழில் மிக்கதான குன்று. இங்கு மயில்கள் மிகுதியாக வாழ்கின்றன. ஆறுமுருகப் பெருமான் மயிலின் மீது எழுந்தருளியுள்ளார். கோயிலுக்குத் தெற்காக நாகத்தீர்த்தம் என்னும் திருக்குளம் கட்டப்பட்டுள்ளது. பெருமானுக்குத் தங்கச் கவசம் பூணும் நாளில் பக்தர்கள் கூட்டம் மிகுதியாக இருக்கும்.
திருவரங்கம் ஸ்ரீ ரெங்கநாத சுவாமி கோயில்
காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் நடுவில் இக்கோயில் கம்பீரமாக எழுந்துள்ளது. இக்கோயில் பரப்பு இந்தியாவிலேயே பெரியதாக இருக்கலாம். இது ஏழு பிரகாரங்களையும், சுற்று மதில்களையும், இருபத்தியொரு கோபுரங்களையும் கொண்டுள்ளது. தெற்கு வாயிலில் பூர்த்தியாகாமல் விடப்பட்ட கோபுரம் 300 அடி உயரமாகும். ஆயிரங்கால் மண்டபம், கருட மண்டபம் ஆகியவற்றின் உட்புற பிரகாரங்களில் அழகு மிளிரும் சிற்பக்கலை வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. இக்கோயில் 14 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை சேரர்கள், பாண்டியர்கள், சோழர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோரால் நிர்மாணிக்கப்பட்டது. விஷ்ணுக்கு அர்பணிக்கப்பட்ட இக்கோயிலில் பல கடவுளர்களின் கருவறைகள் எழிலார்ந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. வைணவப் பெரியார் இராமனுஜர் இங்கு வந்து பல ஆண்டுகள் தங்கியுள்ளார். இத்தலத்தில்தான் கம்பரின் இராமாயணமும், அருணாசல கவிராயரின் இராமநாடகக் கீர்த்தனையும் அரங்கேறின. வெளிப்புறமுள்ள நான்கு பிரகாரங்களில் கடைகளும், பிராமணர் வீடுகளும் உள்ளன. இங்குள்ள கலைக்கூட்டத்தின் உச்சிக்கு சென்றால் கோயில்தலம் முழுவதையும் பார்க்கலாம். பொன் வேய்ந்த வைணவக் கோயிலுக்குள் மட்டும் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. ஏகாதேசியில் ஒன்பது நாட்களுக்கு பவித்திரோட்சவ விழா எடுக்கப்படுகிறது. ஆழ்வார்கள் பதின்மராலும் பாடப்பெற்ற ஒரே தலம் இதுவாகும். பூலோக வைகுண்டம் என்றும் இது போற்றப்படுகிறது. இங்குத் திருவாய்மொழித் திருநாளும் சித்திரைத் தேர் விழாவும் வெகுசிறப்பானவை. தேர்த்திருவிழாவிற்கு இந்தியா முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். பிற மாவட்டத்தினரும், பிற மாநிலத்தவரும், பிற நாட்டினரும் வியந்து போற்றும் வண்ணம் பழம்பெருமையும் கலையழகும் குன்றாதப் புதுப்பொலிவுடன் இக்கோயில் காட்சியளிக்கிறது. திருச்சிக்கு 5 கி.மீ தொலைவில் உள்ள இத்தலத்திற்கு டவுன்பஸ் வசதி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
செல்லாண்டி அம்மன் கோவில்
திருச்சிக்கு மேற்கே 1 1/2 கி.மீ தொலைவில் உள்ள உறையூரில் வெக்காளி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வழியில் இக்கோயில் உள்ளது. இவ்வம்மனைக் கிராமக் காவல் தெய்வமாக எண்ணி பூசிக்கின்றனர். ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஆறு நாட்கள் அம்பாளுக்கு விழா எடுக்கப்படுகிறது. 1958 இலிருந்து நடைபெறாமல் நின்றிருந்த இக்கோயில் உற்சவம் 1981 முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தான்தோன்றீசுவரம்
திருச்சி-உறையூர் சாலையில் இக்கோயில் உள்ளடங்கி அமைந்துள்ளது. இங்கு பெரிய இராஜகோபுரம் இல்லாத காரணத்தால் பலரும் அறிந்திட வாய்ப்பில்லை என்றாலும், காலத்தாலும், வரலாற்றாலும் சிறப்புப் பெற்றக் கோயிலாகும். இக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் இவற்றுடன் கூடியதாக உள்ளது. இறைவர் இலிங்கத் திருமேனியாகக் காணப்படுகிறார். அம்பாள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். வாயிலின் இருபுறமும் பெரிய பழைய இரு துவார பாலகர் சிலைகள் உள்ளன.
புனித சூசையப்பர் கோயில்
பொன்மலைப் பகுதியில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் ஆதிக்கத்தில் எட்டு பள்ளிகளும், நான்கு துறவற மடங்களும், ஆறு இல்லற நிறுவனங்களும், எட்டு இல்லற திருச்சபைகளும், பன்னிரண்டு கிருத்துவ ஆலயங்களும் உள்ளன.
உலக இரட்சகர் கோயில்
இக்கோவில் காட்டூரில் உள்ளது. ஐந்து பள்ளிகளும், எட்டுக் கோவில்களும், துறவற மடம் ஒன்றும், இல்லற நிறுவனங்கள் மூன்றும், இல்லற சபைகள் பன்னிரண்டும் கொண்டு சிறந்து விளங்குகிறது. கத்லோலிக்க மக்கள் சுமார் 7000 பேர் உள்ளனர்.
புனித பதுவை அந்தோனியார் தேவாலயம்
இத்தேவாலயம் இலுப்பூரில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 2000 கத்தோலிக்கர் உள்ளனர். சுமார் 11 கிராமங்களில் கோவில்கள் உள்ளன. மேலும் இதன் ஆட்சி பொறுப்பில் ஒரு நடுத்தரப்பள்ளியும், துவக்கப்பள்ளியும் நடந்து வருகின்றன.
நத்ஹர்வலி தர்கா
திருச்சி மாநகரத்தின் கோட்டைப் பகுதியில் உள்ள இது தென்னிந்தியாவிலேயே சிறப்பான கட்டடக்கலை வேலைப்பாடுகளுடன் அமைந்தது. இதன் வட்டமான கூரைக்கும்பம் கண்ணைக் கவரும் விதத்தில் காட்சியளிக்கிறது. இந்தக் கூம்பிய தாமரை போன்ற வேலைப்பாடு இந்தோ-சாரசானிய சிற்பக் கலையின் பிரதிபலிப்பாகும். இது ஆற்காடு நவாப் சந்தாகாசிப்பால் கட்டப்பட்டது. ஹோலிகிராஸ் கல்லூரிக்குப் பின் பக்கத்தில் அமைந்துள்ளது. ஆதியில் இந்த தர்கா இருந்த இடத்தில ஒரு சிவன் கோயில் இருந்தது. அதற்குச் சான்றாக இன்றும் தர்காவின் கருவறையில் லிங்கம் ஒன்று இருப்பதைக் காணலாம்.

Comments
Post a Comment