முக்கொம்பு

இது திருச்சிக்கு மேற்கே 18 கி.மீ தொலைவில், கரூர் வழியில் உள்ளது. இங்கிருந்துதான் காவிரி ஆறானது காவிரி,கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. கொள்ளிடம் ஆறு காவிரியின் வட புறமாகப் பாய்கிறது. காவிரியின் தென்புறம் முக்கொம்பும் வடபுறம் வாத்தலையும் உள்ளன. காவிரியில் வரும் தண்ணீர் முக்கொம்பில் இருந்து காவிரியைக் காட்டிலும் கொள்ளிடம் ஆறுவழியாக அதிக அளவில் வெளியேறி கடலில் கலந்து வந்தது. இதை முறைப்படுத்தி அதிக அளவு நீரை பாசணத்துக்குப் பயன்படுத்தி முறைப்படுத்த ஆங்கிலேய அரசு முடிவெடுத்தது. இதையடுத்து காவிரிப்பாசணப் பகுதி பொறியாளராக 1829இல் பொறுப்பேற்ற சர் ஆர்தர் மணல் மேடுகளால் நீர் போக்கு தடைப்பட்டிருந்த கல்லணையில் மணல் போக்கிகளை அமைத்தார். கல்லணையின் கட்டுமான உத்தியால் கவரப்பட்ட அவர், கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு, முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 630 மீட்டர் நீளத்தில் 40 அடி அகலத்தில் ஆறு அடி உயர 45 மதகுகள் கொண்ட மேலணையைக் கட்டினார். இந்தப் பணிகள் 1834இல் தொடங்கி 1836இல் முடிக்கப்பட்டது. அதன் பிறகு 1846இல் அணையின்மீது பால உள்ளிட்டவை கட்டப்பட்டன. இவ்வணையிலிருந்து காவிரியின் தென்புறமாக கால்வாய் வெட்டப்பட்டு பாசண வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் சென்று கடலில் கலப்பது தடுக்கப்பட்டது. மேலும் வெள்ளக் காலத்தில் மட்டும் பெருகி வரும் நீரானது இவ்வணை மூலம் கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப் பகுதி பாதுகாக்கப்படுகிறது. இவ்வணைப் பகுதியில் உள்ள பூங்காவும், இவ்வணையும் சுற்றுலா இடங்களாகத் திகழ்கின்றன.

மேட்டூர் அணையில் இருந்து 177 கீலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள இந்த மேலணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 2.70 லட்சம் கன அடி தண்ணீர் திறக்க இயலும்.


பொழுது போக்கு பூங்கா. படகு சவாரி. மீன் பிடித்தல். குழந்தைகள் பூங்கா. குரம்பத் தோட்டம்.

வசதிகள்
சிற்றுண்டிகள். குளிர் பானங்கள். வாகனங்கள் அனுமதி உண்டு.

செல்லும் வழி
திருச்சியில் இருந்து சத்திரம் செல்லும். பேருந்துகள் முக்கொம்பு பெருகமணி ரயில்வே நிலையத்திலிருந்து திருச்சி ஜங்ஷன்.

முக்கொம்பின் சிறப்புகள்
ரம்மியமமான இடம். குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் மகிழ்ச்சிகரமாக பொழுது போக்கக் கூடிய இடம். செலவு மிக குறைவான இடம். வருடம் முழுவதும் தட்பவெப்பம் நன்றாக இருக்கும். போக்குவரத்து வசதி மிகவும் எளிது. இந்த இடத்தை தமிழ்நாடு சுற்றுலாத்தலம் சிறந்த சுற்றுலாத் தலமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த இடத்திற்கு செல்வதன் மூலம் ஸ்ரீரங்கம், தஞ்சாவூர்,திருச்சி, சமயபுரம், திருவானைக்காவல், கல்லனை ஆகிய மிக அருமையான தலங்களை கண்டு களிக்கலாம்.


Comments