வரலாறு
கோயம்புத்தூர் மாவட்டம் பண்டைய காலம் தொட்டு கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. இதன் வரலாறு சங்ககாலம் முதலே அறியப்படுகிறது. பழங்காலத்தில் இப்பகுதி பழங்குடியின வசிப்பிடமாக இருந்துள்ளது. அவர்களில் மிகுந்த வலிமையான, பெரும்பான்மையான கோசர்கள் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்துர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கபடுகிறது. ஆயினும் இப்பழங்குடிகளின் ஆதிக்கம் நீண்ட காலம் நீடித்து இருக்கவில்லை. இப்பகுதி இராஷ்டிரகுட்டர்களின் படையெடுப்பால் அவர்களின் வசமானது. இராஷ்டிரகுடர்களிடமிருந்து சோழர்களின் பொற்காலம் எனப் போற்றப்படும் இராஜ இராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கைகளிலிருந்து வீழ்ந்தது. சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் கொங்கு மண்டலம் சாளுக்கியர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னால் வந்த பாண்டியர்களாலும், ஹோசைலர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டது. பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட உள்நாட்டு சண்டையினால் இப்பகுதி டில்லி முகலாயர்களிடம் வீழ்ந்தது. பின்னர் மதுரை சுல்தான்களிடமிருந்து விஜய நகர ஆட்சியாளர்கள் 1377 – 78ல் இப்பகுதியை போரிட்டு வென்றனர். சில காலம் இப்பகுதி நாயக்கர்களின் சுதந்திரமான கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளது.
முத்து வீரப்ப நாயக்கரின் ஆட்சிக் காலம் மற்றும் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் ஏற்பட்ட உள் நாட்டு சண்டை, விட்டு விட்டு வந்த போர்களினாலும் விஜய நகர பேரரசு அழிவதற்கு காரணமானது. இதன் விளைவாக திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கொங்கு மண்டலம் மைசூர் ஆட்சியர்களின் கைகளில் விழுந்தது, அவர்களிடமிருந்து ஹைதர்அலி இப்பகுதியை கைப்பற்றினார். ஆயினும் 1799ல் மைசூரில் திப்பு சுல்தானுக்கு ஏற்ப்பட்ட வீழ்ச்சியினால் கொங்கு மண்டலம் மைசூர் மகாராஜாவால் கிழக்கிந்திய கம்பெனிக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. இதற்கு கைம்மாறக திப்பு சுல்தானிடம் இழந்த இராஜ்ஜியத்தை மீண்டும் மைசூர் மகாராஜாவிற்கே பிரிட்டிஷார் வழங்கினர். அதிலிருந்து 1947ல் இந்தியா சுதந்திரம் அடையும் வரை கோவை மண்டல பகுதி பிரிட்டிஷாரின் முறையான வருவாய் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.
கோவை வட பகுதிகளுடன் சேலம் பகுதிகள் சில இணைக்கப்பட்டன. தென் பகுதி தாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு அமைக்கப்பட்டது. 1804 ஆம் ஆண்டு கோவை மாவட்டமாக உருவானது. 1866ஆம் ஆண்டு நகராட்சியானது. அப்போதைய மொத்த மக்கள் தொகை 24,000 ஆகும். அதன் பிறகு வளர்ச்சி பெற்று 01.05.1981 ஆம் ஆண்டு மாநகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டது. தற்போது மொத்த மக்கள் தொகை 34,58,045 (2011ல் கணக்கெடுப்பு), ஆண்கள் – 17,29,297,பெண்கள் – 17,28,748. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது சாலை வசதி, விமானம், இரயில் போக்குவரத்து மற்றும் இங்கு தடையின்றி பெறப்படும் குடிநீரும், மின்சாரமும் ஆகும்.
கோவை மாநகர் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். மேற்கில் பாலக்காட்டு கணவாய்க்கும், வடக்கிலுள்ள சகல்கட்டி கணவாய்க்கும் இடையில் அமைந்திருப்பதால் நீண்டகாலம் தொட்டு, இந்நகர் சரித்திர முக்கியத்துவம் பெற்று திகழ்கிறது. மதுரையை ஆண்டு வந்த நாயக்க மன்னர்கள் கோவையை கைப்பற்றி படைத்தளம் அமைத்தனர். பின்னர் மைசூர் மன்னர்கள் இதை கைப்பற்றிக் கொண்டனர். ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் ஆங்கிலேயருடன் பலமுறை போர் செய்தனர். இதனால் இப்பகுதி அடிக்கடி கைமாறிக் காண்டே இருந்தது. 1768ல் ஆங்கிலேயர்கள் கோவையை கைப்பற்றி இழந்தனர். 1783ல் மீண்டும் இதுவே நிகழ்ந்தது. 1790ல் 5 மாத காலம் இப்பகுதியை முற்றுகையிட்ட திப்பு சுல்தான் ஆங்கிலேயரிடமிருந்து இதை கைப்பற்றிக் கொண்டார். 1799ல் நடந்த மைசூர் போரில் திப்புவை வென்று கோவையை கைப்பற்றிக் கொண்ட ஆங்கிலேயர்கள் அதனை 1947 வரை அரசு புரிந்தனர். திப்பு இறந்ததும் கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்ஹெசி பிரவு உடனடி நடவடிக்கையில் இறங்கினார் . திப்புவின் வாரிசுகளுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு அரசு உரிமை பறிக்கப்பட்டது. பழைய அரச குடும்பத்தினரான கிருஷ்ண ராஜ உடையாரிடம் மைசூரை ஆளும் உரிமையை ஒப்படைத்த ஆங்கிலேயர்கள் கன்னடம், வயநாடு, கோயம்புத்தூர், ஈரோடு,தாராபுரம், ஆகிய பகுதிகளை தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். ஹைதராபாத் நிஜாமுக்கு ஊட்டி ஆகிய பகுதிகள் தரப்பட்டன. இந்த பிரிவினைகளால் கோவை பிரிட்டீஸ் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது மாவட்டத்தின் பரப்பளவு அதிகமாக இருந்த்தால் 1799ம் ஆண்டு கோவை பகுதி இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டது.
தொடக்கத்தில் கோயம்புத்தூர் வருவாய் நிர்வாகத்திற்கு ஏற்ப இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. 1804ல் பிரிக்கப்பட்ட இப்பகுதிகள் ஒரு மாவட்ட ஆட்சியரின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது. அப்போது திரு. ஹேச்.எஸ்.கிரிம் (பொ) 20.10.1803 லிருந்து 20.01.1805 ஆண்டு வரை இம்மாவட்ட ஆட்சியராக பொறுப்பிலிருந்தார். 1868ல் நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்திலிருந்து தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இந்த நுற்றாண்டின் தொடக்கத்தில் கோவை மாவட்டத்தில் 10 வருவாய் வட்டங்கள் இருந்தது. அவைகள் பின்வருமாறு: பவானி, கோயம்புத்தூர், தாராபுரம், ஈரோடு , கரூர் கொள்ளேகால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம்,உடுமலைப்பேட்டை. சத்தியமங்கலம் என்னும் வருவாய் வட்டம் பின்னர் கோபிச்செட்டிபாளையம் என்னும் பெயர் மாற்றப்பட்டது. அவினாசி வருவாய் வட்டம, கரூர் வருவாய் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட போது உருவாக்கப்பட்டது. 1927ல் பவானி வருவாய் வட்டத்தின் சில கிராமங்களும் சேலம் மாவட்டத்தில் சில கிராமங்களும் மேட்டூர் பகுதிகளோடு இணைக்கப்பட்டது. ஆனால் 1929ல் இந்த பகுதிகள் சேலம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. மீண்டும், 1956ல் குறிப்பிடத்தக்க மிகப்பெரிய பகுதியான கொள்ளேகால் வருவாய் வட்டம் முழுவதும் மைசூர் மாநிலத்திற்கு, மாநில சீரமைப்பு திட்டத்தின் போது மாற்றப்பட்டது. 1975ல் சத்திய மங்கலம் துணை வருவாய் வட்டம் நன்கு வளர்ச்சியடைந்த வருவாய் வட்டமாக தரம் உயர்த்தப்பட்டது. மீண்டும் 1979ல் பெருந்துறை துணை வருவாய் வட்டம் ஈரோட்டிலும், அவினாசி துணை வருவாய் வட்டம் மேட்டுப்பாளையத்திலும் சிறப்பு வருவாய் வட்டங்களாக தரம் உயர்த்தப்பட்டது. அதனால் மொத்த வருவாய் வட்டங்கள் இந்த மாவட்டத்தில் 12 ஆக உயர்ந்தது,இது நீண்ட நாட்கள் நீடித்து இருக்கவில்லை. 1979ல் 6 வருவாய் வட்டங்கள் இம்மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக ஈரோடு மாவட்டம் அரசு ஆணை நிலை என் 1917ன் படி வருவாய் துறை தேதி:31.08.1979, பின்வரும் 6 வருவாய் வட்டங்கள் பவானி, கோபிச் செட்டிபாளையம், சத்தியமங்கலம்,ஈரோடு, பெருந்துறை, மற்றும் தாராபுரம் கோவை மாவட்டத்திலிருந்து பிரித்து புதிய ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. அச்சமயம் கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர் தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதற்கு முன்பு 9 வருவாய் வட்டங்களை கொண்டிருந்தது. அவைகள் பின்வருமாறு கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம்,அவிநாசி, பல்லடம், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் வால்பாறை. அரசாணை (நிலை) எண் 617,618ல் வருவாய் துறை தேதி 24.10.2008 கோவை மாவட்டத்தில் உள்ள நான்கு வருவாய் வட்டங்கள் அதாவது (திருப்பூர்,உடுமலைப்பேட்டை,பல்லடம் மற்றும் அவினாசி பகுதி) மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூன்று வருவாய் வட்டங்கள் அதாவது (தாராபுரம், காங்கேயம்,பெருந்துறை பகுதிகள்) ஆகியன பிரிக்கப்பட்டு திருப்பூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அரசாணை (நிலை) எண் 419 வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை, பிரிவு நாள் 25.10.2008 உத்தரவின் படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மிக பெரிய பொள்ளாச்சி வருவாய் வட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிய ஆனைமலை வருவாய் வட்டம் தனி வட்டமாக உருவாக்கப்பட்டது.
தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோயம்புத்தூர் (வடக்கு), கோயம்புத்தூர் (தெற்கு) மற்றும் பொள்ளாச்சி என மூன்று வருவாய் மண்டலங்கள் உள்ளன. வருவாய் வட்டங்கள் பதினோன்று உள்ளன. அவைகள், கோயம்புத்தூர் (வடக்கு), கோயம்புத்தூர் (தெற்கு), மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி, அன்னூர், ஆனைமலை, கிணத்துககடவு, பேரூர், மதுக்௧ரை மற்றும் வால்பாறை உள்ளது.
பொருளாதாரம்
நகரின் முதன்மையான தொழில்துறைகள் பொறியியலும் நெசவும் ஆகும். தமிழ்நாட்டிலேயே மிகக் கூடுதலாக வருவாய் ஈட்டும் மாவட்டமாகக் கோவை உள்ளது. சுற்றுப்புற பருத்தி வேளாண்மையை ஒட்டி இங்கு அமைந்துள்ள நெசவாலைகளின் கூடுதலான எண்ணிக்கை இதற்குத் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற சுட்டுப்பெயரினைப் பெற்றுத் தந்திருக்கிறது. இம்மாவட்டத்தில் பல பின்னலாடைத் தறிகளும் கோழிப்பண்ணைகளும் கூடுதலாக உள்ளன. பெரும்பாலான தொழிற்சாலைகளைக் குடும்ப நிதி அல்லது சமூக ஒருங்கிணைப்பு உதவியுடன் சிறு தொழில்முனைவோர் நடத்துகின்றனர். 1920களில் துவங்கிய தொழில் துறை, இந்திய விடுதலைக்குப் பின்னர் வளர்ச்சி கண்டு அரசு அரவணைப்போ பெரும் வணிகக் குழாம்களின் வரவோ இன்றி தன்னிறைவுடன் ஏற்றம் கண்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னணித் தொழிலதிபர்களின் பட்டியலில் பெரும்பான்மையான முதலிடங்களை கோவைத் தொழில்முனைவோர் பிடித்துள்ளனர். தற்போது தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பிறநாட்டு உள்ளலுவலகப் பணிகளை மேலாண்மையிடும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
துவக்க காலத் தொழில் வளர்ச்சி
சர் ராபர்ட் ஸ்டேன்ஸ்
பிரித்தானியர் கோயம்புத்தூரை ஆண்டபோது இதனை மலபார் கரையிலிருந்தத் துறைமுகங்களுடன் இணைத்தனர். பின்னர் பிரித்தானியர் 1862ஆம் ஆண்டு தொடர்வண்டி இணைப்புகள் ஏற்படுத்தியபோது போத்தனூர் வழியாகக் கொச்சிக்கு இருப்புப் பாதைப் போடப்பட்டது. இது இங்கிலாந்திற்கு கச்சாப்பொருள்களைக் கொண்டுசெல்ல அவர்களுக்கு உதவியது.நங்கூரம் நங்கூரம் நங்கூரம் நங்கூரம் நங்கூரம் நங்கூரம் நங்கூரம்.
1888 ஆம் ஆண்டு, சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் இன்று ஸ்டேன்ஸ் மில் என்று பரவலாக அறியப்படும் கோயம்புத்தூர் நூற்றல் மற்றும் நெய்தல் ஆலையை நகரின் வடக்குப் பகுதியில் துவக்கினார். கூடவே ஓர் குளம்பி சீராக்கப் பட்டறையையும் (coffee curing factory) திருச்சிச் சாலையில் நிறுவினார். இதுவே கோவையில் பெருமளவு நெசவாலைகள் வருவதற்கு அடிக்கோளிட்டது. மேலும் பலர் தங்கள் நிறுவனங்களை நிறுவிட சர் ராபர்ட் மிகவும் உதவி புரிந்தார். கோவைக்கு இவராற்றிய இந்தச் சேவைகளுக்காக கைசர்-இ-இந்த் தங்கப்பதக்கத்தையும் பின்னர் 1920ஆம் ஆண்டு 'சர்' பட்டத்தையும் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டார். 1910ஆம் ஆண்டு காளீசுவரா மில்லும் சோமசுந்தரா மில்லும் நிறுவப்பட்டன. பாப்பநாயக்கன்பாளையத்தில் 1911ஆம் ஆண்டு இலட்சுமி மில் இயங்கத் தொடங்கியது. 1930களில் பைக்காரா மின்னாக்கத் திட்டத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் மின்சக்தி கிடைத்ததையொட்டி மேலும் பல துணியாலைகள் நிறுவப்பட்டன.
1900ஆம் ஆண்டு சாமிக்கண்ணு வின்சென்ட் என்ற இரயில்வே பொறியாளர் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக வெரைட்டி ஹால் (தற்போது டிலைட் திரையரங்கம்) என்னும் திரையரங்கத்தைக் கட்டினார் அவரது மகன் பால் வின்சென்ட் பேசும் திரைப்படங்களைத் தென்னிந்தியாவில் அறிமுகம் செய்தார். 1922ஆம் ஆண்டு நாராயணசாமி நாயுடு கரும்பு நசுக்கும் மற்றும் பருத்தி சுத்தப்படுத்தும் பொறிகளை நிறுவினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தண்டாயுதபாணி தொழிற்சாலையை நிறுவினார். அதே காலகட்டத்தில் ஜி.டி.நாயுடு அவரது தன்னிகரில்லா பேருந்து சேவையைத் துவக்கினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்னோடிக்கான பெருமையும் அவருக்குடையது. 1931ஆம் ஆண்டு பொள்ளாச்சி நாச்சிமுத்துக் கவுண்டர் துவக்கிய பேருந்து சேவையும் பலதுறைகளில் விரிந்து இன்று பலகோடி ரூபாய் மதிப்புள்ள குழுமமாக வளர்ந்துள்ளது. 1940களில் ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த டி.பாலசுந்தரம் நாயுடு செஃப்பீல்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்து நெசவுத் தொழில்நுட்பக் கருவிகளைத் தாமே வடிவமைத்துத் தயாரிக்கும் விதமாக டெக்ஸ்டூல் நிறுவனத்தைத் துவக்கினார்.
கோவை 1930களிலும் 1940களிலும் திரைப்படத் தயாரிப்பிலும் முதன்மை பெற்றிருந்தது; இங்கிருந்த சென்ட்ரல் ஸ்டூடியோஸ் மற்றும் பட்சிராஜா ஸ்டூடியோஸ் அரங்குகளில் பல முன்னணி திரைக்கலைஞர்கள் தங்கள் கலைவாழ்வைத் துவங்கியுள்ளனர்.
தொழில்துறை இன்று
கோவை அருகே உள்ள ஓர் காற்றாலை.
கோவையின் தொழில்வளர்ச்சிக்கு கோவை மாவட்ட சிறுதொழிலதிபர்கள் சங்கம் (Coimbatore District Small Industries Association - CODISSIA) முக்கியப் பங்காற்றி வருகிறது. இச்சங்கத்தின் தொழிற்கண்காட்சிக்கூடம் கொடிசியா வளாகம் பல பன்னாட்டு வணிகக் கண்காட்சிகளை நடத்த வழிவகுத்துக் கோவையின் சிறு தொழிலதிபர்களுக்குப் பன்னாட்டு வணிகம் நடத்த உதவி புரிந்து வருகிறது. இதனை நாட்டின் தூண்கள் இல்லாத மிகப்பெரும் காட்சிக்கூடமாக லிம்கா சாதனைகள் புத்தகம் குறிப்பிடுகிறது.
துணித்துறை
கோவையில் சிறுதும் பெரிதுமாகப் பல துணி தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இவற்றின் மேம்பாட்டினை வழிநடத்த மத்திய பருத்தி ஆய்வு மையம் மற்றும் தென்னிந்திய துணித்துறை தொழில்முனைவோர் சங்க ஆய்வகம் (SITRA) போன்றவை உள்ளன. அண்மை நகரான திருப்பூர் ஆண்டுக்கு ரூ.50,000 மில்லியன் மதிப்பளவு ஏற்றுமதியுடன் ஆசியாவிலேயே மிகப்பரந்த பின்னலாடை ஏற்றுமதி மையமாகப் விளங்குகிறது.
தகவல் தொழில்நுட்பம்
தமிழ்நாட்டில் மென்பொருள் ஏற்றுமதியில் சென்னைக்கு அடுத்தபடியாகக் கோவை உள்ளது. கோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்று கோவை மருத்துவக் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ளது. கோவை வணிகச் செயலாக்க அயலாக்கமையமாகவும் வளர்ந்து வருகிறது. உலகளவில் அயலாக்க நகரங்களில் 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கனரக தயாரிப்பு
பூ.சா.கோ. தொழிலகங்கள், சக்தி குழுமம் ஆகியன கோவையின் தயாரிப்புத் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. தற்போது மூடப்பட்டுள்ள சௌத் இந்தியா விசுகோசு வேலை வாய்ப்புகளைக் கூடுதலாக்குவதில் பங்கு வகித்தது. லார்சன் டூப்ரோ நிறுவனத்திற்கு 300 ஏக்கரா பரப்பளவுள்ள வளாகம் கோவையின் அடுத்துள்ள மலுமிச்சம்பட்டியில் உள்ளது. இங்கு அந்நிறுவனம் 2009ஆம் ஆண்டு வார்ப்படம் தயாரிக்கும் அமைப்பை இயக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது. இலட்சுமி மெசின் வொர்க்ஸ், பிரீமியர் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (PRICOL),எல்ஜி எக்யுப்மென்ட்ஸ், சாந்தி கியர்ஸ், ரூட்ஸ் ஆகியன இங்கு இயங்கும் மேலும் சில தொழிலகங்கள்.
தானி பாகங்கள்
டெக்ஸ்டூல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசின் இராணுவத்திற்கு துப்பாக்கிகளின் முன்வடிவை அளித்திருந்தது. அவர்கள் 1960களில் முதல் உள்நாட்டிலேயே வடிவமைத்த தானுந்தியை தயாரித்தாலும் அப்போது நிலவிய அரசுக் கட்டுப்பாடுகளால் வெளிக்கொணர முடியாது போயிற்று. 1990 வரை பல முன்வரைவுகளை மேம்படுத்தினர். 1972ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக உள்நாட்டுத் தயாரிப்பாகத் தானுந்து தீசல் இயந்திரத்தினை வடிவமைத்தனர். 1982ஆம் ஆண்டு தங்களுக்கான எண்ணிம கட்டுப்பாட்டு இயந்திரங்களையும் லேத்துகளையும் தாங்களே தயாரித்துக் கொண்டனர். அவர்களிடமிருந்து பிரிந்த ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ் இன்று மகிந்திரா, டாட்டா மோட்டார்ஸ், இந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆகிய தானுந்து தொழிலகங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சேவைகளைக் கொடுத்து வருகிறது.
மாருதி சுசூக்கி மற்றும் டாட்டா மோட்டார்ஸ் கோவையிலிருந்தே அவர்களின் தேவைகளில் 30% தானுந்து பாகங்களைப் பெறுகின்றன. நகரத்தில் பல நகை ஏற்றுமதியில் ஈடுபடும் நகை தயாரிப்பாளர்களும் உள்ளனர். காற்றாலை மின் உற்பத்தியில் பெயர்பெற்ற சுசுலான் நிறுவனம் இங்கு தனது வார்ப்பாலை மற்றும் பட்டறையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. கூடவே, காற்றாலைகளுக்கான பற்சக்கர மாற்றியைத் தயாரிக்கும் பெல்ஜிய நிறுவனம் ஹான்சென் டிரான்ஸ்மிசன் ரூ.940 கோடி திட்டச் செலவில் தனது தயாரிப்பு வசதியைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது.
ஈரமாவு அரவைப்பொறிகள்
கோவை நகரில் 700 ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்பாளர்கள் மாதமொன்றிற்கு (மார்ச்,2005 படி) 75,000 பொறிகளைத் தயாரித்து வருகின்றனர். 2006ஆம் ஆண்டு கோவையிலும் அடுத்துள்ள ஈரோட்டிலும் தயாராகும் அரவைப்பொறிகளுக்கு கோயம்புத்தூர் ஈரரவைப்பொறி என்ற புவியியல் அடையாளம் வழங்கப்பட்டது.[30] இங்கு அரவைப்பொறி தயாரிப்பாளர்களுக்கான பொது கட்டமைப்பும் உள்ளது.
நீரேற்றிகள் தயாரிப்பு
இந்தியாவில் தயாரிக்கப்படும் 60 சதவீத நீரேற்றிகள் கோவைப் பகுதியிலேயேத் தயாரிக்கப்படுகின்றன. நகரத்தில் ஏராளமான சிறுதொழில் முனைவோர் முனைப்பில் நீரேற்றிகள் தயாரிக்கப்படுகின்றன. ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்பில் கிட்டத்தட்ட முழுநிறை உரிமை கொண்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளைப் போலவே வேளாண்மை மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொது வணிகம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் பலரை கவர்கிறது.கோவை நகரின் முதன்மை நீரேற்றி தயாரிப்பாளர்கள் சிலர்: ஷார்ப் தொழிலகங்கள், சிஆர்ஐ பம்ப்ஸ், டெக்ஸ்மோ தொழிலகங்கள், டெக்கன் பம்ப்ஸ், கேஎஸ்பி பம்ப்ஸ்.

Comments
Post a Comment